Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏக்கங்களை தந்து போனவள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கருத்தில் சுய முரண்பாடு உள்ளது. நானும் அவதானித்தேன். ஆனால் தனிப்பட்ட விடயமாதலால் இங்கு எமது கருத்துகள் ஏதும் அவருக்கு அல்லது அந்த பெண்ணுக்கு பாதிப்பை உருவாக்கும் என்று நினைத்து சமாளித்து எழுதினாரோ தெரியவில்லை. எனவே கிளறுவது நல்லதல்ல.

யோசிக்கும் தன்மை ஜீவா அண்ணாவுக்கு இருக்கும். களத்தில் பதியாவிட்டாலும் யோசித்து பிரச்சினைகள் வராத முறையில் நட்பை தொடர்வார் அல்லது தொடர்வது சிக்கலென நினைத்தால் அதை இடையில் துண்டித்து நடப்பார் என்று நம்புவோம்.

ஏன்டா   கதையை எழுதினோம்  எழுதியதை இங்கு ஏன்டா போட்டோம் என்ற மனநிலையில் இருக்கும் ஜீவாவுக்கு 

எனது அனுதாபங்கள் 

  • Replies 66
  • Views 7.2k
  • Created
  • Last Reply

ஏன்டா   கதையை எழுதினோம்  எழுதியதை இங்கு ஏன்டா போட்டோம் என்ற மனநிலையில் இருக்கும் ஜீவாவுக்கு 

எனது அனுதாபங்கள் 

நீங்கள் தவறாக எடுப்பதற்கு இதில் ஒன்றும் இல்லை. என் கருத்துகள் ஒருவிதத்தில் ஆலோசனை. அதை கவனத்தில் எடுப்பதும் எடுக்காததும் ஜீவா அண்ணாவை பொறுத்தது.

அந்த பெண்ணை நேரில் தெரியாமல் அவர் மேல் குற்றச்சாட்டு வைப்பதோ அவர் சரியானவர் என்று வாதிடவோ எமக்கு உரிமை இல்லை. ஒரு கருத்தை எழுதியவுடன் அந்த பெண்ணை குற்றம் சாட்டுகிறோம் என்று நினைக்காமல் பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கு ஓர் முன் ஆலோசனை என்றே கருத வேண்டும்.

இதில் ஜீவா அண்ணா கவலைப்பட எதுவுமில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்தின் பின் சாதாரணமாக அதை கதைத்து விட்டு நட்புடன் இருப்பவர்களும் உள்ளார்கள். ஆனால் இப்படியான விடயங்களை கதைத்ததன் பின் மீண்டும் பழைய காதலை நோக்கி சென்றவர்களும் உள்ளார்கள். அதனால் குடும்பங்களில் சர்ச்சைகளும் வந்துள்ளன.

துளசியின் இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். பழைய காதலியுடன் மீண்டும் புனிதமான நட்பு எனத் தொடங்கி தாம் கட்டின துணைகளுக்குத் துரோகம் செய்யும் சிலரை நான் அறிவேன். அந்த வகையில் துளசியின் சமுதாய நலன் கொண்ட பார்வை ஏற்புடையது.

இந்தக் கதையில் அவனுக்கும் அவளுக்கும் இருந்த அந்தப் பாசப்பிணைப்பு உண்மையானது. இருவராலும் என்றும் மறக்க முடியாதது. இந்தப் பிரிவு, முரண்பாடுகள் வாயிலாக ஏற்பட்டது அன்று. தங்கள் காதலைச் சொல்லாததால் உருவானது. அதைச் சொல்லுமட்டும் அந்த ஏக்கம் இருந்துகொண்டேயிருக்கும். தற்போது இருவருக்கும் மனதில் உள்ள பாரம் இறங்கி இருக்கும். இதை இப்படியே விட்டுவிடுவதே இருவருக்கும் நல்லது.

ஜீவா,

ஒரு புதிய எழுத்தாளர் எழுதியது போல தென்படவில்லை. ஒரு தேர்ச்சி பெற்ற எழுத்தாளரின் மொழி உங்களிடம் இருக்கு. பேச்சு வழுக்களைத் தவிர (அது தான் கதையின் இடத்தை சொல்லுவது) எழுத்துப் பிழைகள் எதுவும் இல்லை.இன்று கவிஞர்கள் எழுத்தாளர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்த முனைபவர்கள் எழுத்துப் பிழைகளைக் கவனிப்பதில்லை. மொழிநடை சம்பவங்களின் தொடர்ச்சித்தன்மை அருமை. அந்த இடத்துக்கே என்னை அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.

வாழ்த்துக்களுடன் பராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா நல்லதொரு அருமையான ஆக்கம் வாழ்த்துகள்

 

காதல் என்பது என்றும் அழிவதில்லை என்பதற்கு உங்கள் ஆக்கம் சான்றாக நிற்கின்றது.

 

ஆனாலும் இது ஒரு சிக்கலான காதல்கதையாக.... :lol:  தொடராமல் இருப்பது நல்லது :) 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா! உங்களுக்கு இருவருக்கும் இடையில் அன்றைக்கு இருந்த அன்பும் அது சார்ந்த உணர்வுகளும் ஏக்கங்களும் நல்லவையே. "புனிதம்" என்கின்ற கற்பிதத்துக்குள் அடக்கப்படக் கூடியவையே. இதை "நட்பு" என்கின்ற பொய்யான போர்வையை கொண்ட மூடத் தேவையில்லை.

உங்கள் அன்புக்கு உரியவளை வாசகர்களின் ஏளனத்தில் இருந்து காக்கும் முயற்சியை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்காக உங்களின் எழுத்தோடு நீங்கள் முரண்பட வேண்டாம். முரண்பட்டு இந்த கதையின் அழகியலை சிதைக்கவும் வேண்டாம்.

 

ஜீவா நான் இதை மதியம் வாசித்து விட்டு எழுத நினைத்த கருத்து இருபக்கமும் எந்த பாதகமும் இல்லாமல் உங்கள் நட்டபை தொடரலாம் என்பதே.இப்ப உங்கள் பொழப்புரையை பாத்த பின் மேல் உள்ள சபேசனின் கருத்துதான் எனதும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். கதையில் வந்த சம்பவங்கள் கற்பனையல்ல என்றே நினைக்கின்றேன், ஏனென்றால் இது உங்களுக்கு மாத்திரமானது மட்டுமல்ல!

 

வாழ்க்கையில் சுமைகள், பிரச்சினைகள் என்று பல இருக்கும்போது அவற்றில் இருந்து விடுபட எதுவித சிக்கல்களும் இல்லாத இளமைப் பிராய வாழ்வின் சந்தோஷங்களை இரை மீட்டுவது ஒரு சுகானுபவம்தான். அது ஒரு தற்காலிகப் போதை. ஆனால் யதார்த்தம் வேறானது என்பதைக் கடைசி வரிகளில் சரியாகக் காட்டியிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் பொண்டாட்டிய நினைக்கிறதே.. தப்புன்னு.. நான் சொல்லேல்ல.. வள்ளுவர் சொல்லி இருக்கிறார். ஏதேனும்.. நவீனத்துவம் பேசனுன்னா அவரைக் கூப்பிட்டு வைச்சுப் பேசுங்கோ. நானும் வாறன்.  :)  :D

 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
 

ஒரு வீடு இரு வாசல் - சிறுகதை

 

கைத்தொலைபேசியில் அழைப்பு, கடவுளே!! இது ஜெனியின் எண்ணாச்சே!!, மொபைலில் பதிந்து வச்சிருந்ததை அழித்திருந்தாலும், மனதில் பதிந்து வைத்திருந்ததை அழிக்க முடியவில்லையே!!!

எதற்கு இந்த நேரத்தில் கூப்பிடுகிறாள். முடிந்து போன விசயங்கள் முடிந்து போனதாகவே இருக்கட்டுமே!! , எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே அந்த அழைப்பு முடிந்து போனது. நான் திரும்ப அழைக்கவில்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் ஜெனியிடம் இருந்து அழைப்பு.

“ஹலோ ஜெனி சொல்லு"

“கார்த்தி,...” அழுகையினால் ஏற்படும் செருமலுடன்

“ஜெனி, என்ன ஆச்சு?”

“கார்த்தி, நான் உன் கூட வந்துடுறேன், பிளீஸ் நாம எங்கயாவது போயிடலாம்"

“முதல்ல என்ன ஆச்சு சொல்லு, உன் ஹஸ்பெண்ட் எதாவது சொல்லிட்டாரா, என்ன பிரச்சினை, உன் கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகல"

“பிளீஸ்டா, என்னைப் புரிஞ்சுக்கோ, என்னால முடியாது, உன் நினைப்பு என்னைக் கொல்லுது, உன்னை ஏமாத்திட்டேண்டா, என்னால அந்த கில்டி ஃபீலிங்கை தாங்க முடியல"

“ஜெனி, எல்லாம் சில நாள்ல சரி ஆயிடும்"

"இல்லைடா என்னால முடியாது, வெட்கத்தை விட்டு சொல்றேன், என் ஹஸ்பெண்ட் தொடுறப்ப எல்லாம் உன்னை தான் நினைச்சுக்கிறேன், நரக வேதனையா இருக்கு" அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது குரல் உடைந்து மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“ஜெனி, பிளீஸ் அழதே, “ எனக்கும் கண்கலங்க ஆரம்பித்தது.

“கார்த்தி, அடுத்த மாசம் எனக்கு விசா வந்துடும், அவர்கூட போயாகனும், அதுக்கு முன்ன உன்கூட வந்துடுறேண்டா, என்னை ஏத்துக்குவியா, பிளீஸ்"

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“சரி ஜெனி நாளைக்கு நான் உன்னை நேரில் பார்க்கிறேன், அப்போ இதைப் பத்தி பேசலாம்"

“கார்த்தி, நாளைக்கு ஈஞ்சம்பாக்கம் பாபா கோயிலுக்கு வந்துடு, நீ வரலன்னே அப்படியே கடல்ல குதிச்சுடுவேன்"

“சரி வந்துடுவேன், தயவு செய்து எதுவும் தப்பு தப்பா யோசிக்காம தூங்குடா குட்டிமா!!” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

ஜெனி என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்த்தவள். கல்லூரிக்காலங்களில் என்னுடன் படித்த எனக்குப் பிடித்த பெண்ணின் முகச்சாடையில் இருந்ததால், பழக்கத்தை வலிய ஏற்படுத்திக் கொண்டு, திட்டமிட்ட படி காதலை சொல்லி அடுத்த பத்து நாட்களில் அவளின் சம்மதத்தை வாங்கியபோது என்னிடம் இருந்த அதிர்ஷ்டம், அவள் தந்தையிடம் எங்களின் விருப்பத்தை சொல்லிய போது இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத நான், அவளுக்காக மதம் மாறக்கூட தயாராயிருந்தேன். ஆனால் ஜெனியின் தந்தை தனது பொருளாதார அந்தஸ்தைக் காட்டி மறுத்துவிட்டார். ஆமாம், மாதத் தவணையில் மாருதி கார் வாங்கி ஓட்டும் நான் எங்கே!! ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்தையில் வரும் புதிய காரில் வலம் வரும் அவர்களின் நிலை எங்கே!!!

ஜெனியவே நேரே வரவழைத்து தனது வாழ்க்கையில் என்னைக் குறுக்கிடவேண்டாமென்று சொல்ல வைத்தார். இருந்தும் ஒரு குருட்டு நம்பிக்கையில் இருந்தேன் திருமணத்திற்கு முன்னர் என்னைத் தேடி வருவாள் என்று. இதற்காக பெங்களூரில் இருக்கும் என் நண்பர்களிடம் வீடு பார்க்க எல்லாம் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் இப்படி திடீரென்று திருமணத்திற்குப் பின் இவ்வளவு பெரிய குண்டைத் தூக்கிப் போடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

“பிறர் மனை நோக்காமை பேராண்மை" படித்த குறளும், “எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே" பார்த்த வசனமும் ஞாபகத்திற்கு வந்தது.

இவள் ஏதாவது பைத்தியக்காரத்தனமாக செய்து கொண்டால், நானும் அல்லவா இதில் இழுக்கப்படுவேன். அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்ற எண்ணத்திலேயே தூங்கிப் போனேன்.

மறுநாள் ஜெனியை சந்திக்கப் போனபோது, என்னமோ மனதில் அந்தப் பழையக் காதல் இல்லை. கடைசியா இந்த பாபாக் கோவிலுக்கு வந்தபோது
“ஜெனி எனக்கு எப்படியாவது கிடைக்கவேண்டும்" என்று வேண்டிய வேண்டுதல் இப்படியா இரு இக்கட்டான சூழலுக்கு கொண்டு வந்து சேர்க்கவேண்டும்.

ஜெனி அந்த சோகத்திலும் அழகாக இருந்தாள். கோவிலுக்கு வெளியேவே நின்று கொண்டிருந்தாள்.

“ஜெனி, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, சாமி கும்பிட்டு வந்துடுறேன்"

கஷ்டகாலத்துலதான் கடவுள் என்கிற ஒரு விசயம் நிஜமாகவே இருந்து எல்லா பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றமாட்டாரா நம்மை அறியாமல் ஒரு உணர்வு/உந்துதல் வரும். எனக்கு இப்போவெல்லாம் அடிக்கடி வருகிறது.

வேகமாக வேகமாக சாமி கும்பிட்டுவிட்டு காருக்கு வந்தபொழுது என் காரிலே உட்கார்ந்திருந்தாள்.

காரை மிதமான வேகத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் செலுத்தினேன்.

“ஜெனி, நம்மை மீறி சில விசயங்கள் நடந்து முடிஞ்சுடும், அதை சகித்துக் கொண்டு தான் வாழ்க்கையை வாழ பழகிக்கனும், உன் கல்யாணத்திற்கு முன்னமே நீ என்னோட உங்க அப்பாவை எதிர்த்து வந்திருந்தீன்னா, எந்த சஞ்சலமும் இல்லாம உன்னை ஏத்திக்கிட்டிருந்திருப்பேன். “

“இல்லைடா, அப்பா, அம்மா எல்லாம் என்னை மிரட்டி ஒரு சூழ்நிலைக் கைதியா வச்சிருந்தாங்க, என்னால ஒன்னும் பண்ண முடியல"

“ம்ம்ம், ஜெனி என்னை மறந்து வாழ்ந்தின்னா, அது உன் மனசிலே மட்டும் தான் காயமா கொஞ்ச காலம் இருக்கும், அதுவும் காலப் போக்கில மறைஞ்சுப் போயிடும், ஆனால் நீ சொல்ற மாதிரி நாம முட்டாள்தனமா நடந்துகிட்டோம்னா எல்லோருடைய மனசிலேயும் தீராத காயமா ஆகிடும். தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய குற்ற உணர்வு காலம்பூர நம்மளை உறுத்திக்கிட்டே இருக்கும், இந்த உலகத்திலே இருக்கிற பெண்களும் ஆண்களும் உன்னை மாதிரி நினைச்சாங்கான்னா குடும்ப உறவு முறைகளே இருக்காது, உன் ஹஸ்பெண்டுக்கு வாழ்க்கையைப் பத்தி எவ்வளவு கனவுகள் இருக்கும், அந்தக் கனவுகளை எல்லாம் சின்னாபின்னமாக்கி விடாதே!! முழுக்க முழுக்க தவற்றை உன் பக்கம் வைத்துக் கொண்டு அவரை ஏன் பலிகடா ஆக்க வேண்டும், அவருடன் ஆஸ்திரேலியா போ, அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட், ஒரு சின்னக் கனவு மாதிரி என் நினைவுகள் தானாகவே மறந்துவிடும், எப்படி உன் நினைவிலே என் காலேஜ் ஜூனியர் நினைவுகள் மறந்துப் போனது அது மாதிரி, எனக்கும் உன் நினைவுகள் மறக்கும், ஜெனியோட இடத்தை ஒரு ஜென்சி பிடிக்கலாம். நீ படிச்சவ, உட்கார்ந்து யோசி... உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்கும்.. மற்றவர்களின் உணர்வுகளைக் கொன்று புதைத்து அதன் மேல் நம் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டாம். நானும் நைஜீரியா போறேன். இரண்டு வருஷம் காண்டிராக்ட். சில சமயங்களில் தோல்விகள் கூட இனிமையாக இருக்கும், லெட் அஸ் பி குட் பிரெண்ட்ஸ் ஃபார் எவர்,"

முடிவு 1:

நான் சொல்லிக்கொண்டு இருக்க அவள் கண்களில் தாரைத்தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“சாரிடா, யூ ஆர் கரெக்ட், உன்னை ரொம்ப டிரபிள் பண்ணிட்டேன். என் ஹஸ்பெண்டும் உன்னை மாதிரி ஜெண்டில்மேன் தான், என் வாழ்க்கை நல்லாதான் இருக்கும்... ஆமாம் இவ்வளவு தூரம் நான் வந்த பிறகும் என்னைக் கழட்டி விடுறீயே, இந்த கேப்பிலே யாரையாவது கரெக்ட் பண்ணிட்டீயா " என்று சொல்லிக் கொண்டிருந்த போது அவளுக்கு அழைப்பு வந்தது,

“ஹலோ ஹனி, ஐ யம் வித் மை பிரெண்ட், வில் பி பேக் இன் ஃபியூ மினிட்ஸ்" அழைப்பைத் துண்டித்தாள்.

அவளின் பேச்சிலும் பார்வையிலும் ஒரு நல்ல மாற்றம் தெரிந்தது.

நான் வேண்டிய வேண்டுதல் நிறைவேற்றிய சீரடி பாபாவுக்கு நன்றி தெரிவிக்க வண்டியைத் திருப்பினேன்.

முடிவு 2 :


“கார்த்தி,, இட்ஸ் டூ லேட் நௌ. ஒரு வேளை நேத்தே இந்த அட்வைஸ் பண்ணி இருந்தீன்னா நான் மாறினாலும் மாறி இருந்திருப்பேன் . நானும் நீயும் அன்-லக்கி, உன்கிட்ட பேசி முடிச்ச பிறகு நான் ஸ்லீப்பிங் டேப்லட்ஸ் போட்டு சூசைட் பண்ணிக்கிட்டேன்,. உன்கிட்ட மீட் பண்றேன்னு சொல்லிட்டேனேன்னு தான் இப்போ வந்தேன்.” என்று சொல்லி காரின் சீட்டிலிருந்து நொடியில் மறைந்தாள்., அதிர்ச்சியில் காரின் கட்டுப்பாட்டை நான் தவறவிட எதிரே !!! அய்யோ ஒரு கண்டெயினர் லாரி!!!!!!

 

எழுத்தாக்கம் வினையூக்கி at 8:17 AM

 

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டதால் அதனுடன் சம்பந்தப்பட்ட வரி ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

ம்ம்ம்ம்ம்... ஜீவா. கதை அருமை.

பல ஞாபகங்களை மீட்டிச் சென்றது தங்களின் கதை.  நன்றி... பாராட்டுக்கள்.

எல்லோரின் வாழ்விலும் இப்படி ஒரு சம்பவமாவது இருக்கும் ,
தொடருங்கள் ஜீவா வாழ்த்துக்கள்  
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு ரமணிசந்திரன்ரை கதை வாசிச்சமாதிரி எனக்கு இருந்திது .

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவின் இக்கதைக்கு பல்வேறு விமர்சனங்கள் ஆலோசனைகள் அறிவுறுத்தல் கொஞ்சம் அதிகப்படியான கருத்துக்களும் வந்திருந்தன. எனினும் இக்கதையில் வருகிற நாயகனும் நாயகியும் தங்களுக்குள் இருந்த ஒருகாலத்து உணர்வை அல்லது காதலை இப்போது மீள நினைப்பதில் அல்லது சொல்லுவதில் எவ்வித புனிதத்தையும் இழக்கத் தேவையில்லையெ நினைக்கிறேன்.
 

யாராவது ஒருவர் தனது பதின்மவயதில் இத்தகையதொரு உணர்வுக்கு தான் ஆட்படவில்லையென்று சொன்னால் அது பொய்யே. தங்களை சுத்தமாக அல்லது புனிதமாக காட்டவதற்கான ஒப்பனையாகவே அது இருக்கும்.

எனத கணவர் தனது முதல்காதலை என்னிடம் தெரிவித்த போது எனக்குள் எவ்வித கோபமோ குரூரமோ எழவில்லை. அதனை ஒரு பொருட்டாக எனக்கு எடுக்கவும் தோன்றவில்லை.


2002 ஊர் போன போது எனது கணவரின் முதல் காதலியை 2குழந்தைகளோடும் கணவனோடும் சந்தித்தேன். எனத கணவர் தனது காதலியின் அப்போதைய நிலமையை அறிய விரும்பினார்.

 

எனது கணவரின் முதல்காதலி என்னை வரவேற்றது  அன்று எனக்கு இரவுணவு தயாரித்துத் தந்து அவன் எப்பிடியிருக்கிறான் என்ன செய்யிறான் உங்களுக்கு எத்தினை பிள்ளையள் என்றெல்லாம் கேட்ட போது அவளுக்குள் எவ்வித துயரமோ அல்லது தான் வெற்றியடையாத காதலின் வலியையோ காணவில்லை.  எனினும் என்முன் வெளிப்படுத்தாவிடினும் நிச்சயம் அவளுக்குள் எங்கோ ஒரு மூலையில் நினைவில் இருக்கும் அவளது முதல் காதல். அது வலியாக அல்லது மகிழ்வாக.

 

இன்று வரை அதாவது புத்தாண்டு பிறந்தநாள்  திருமண நாட்களிலாவது ஆளாளுக்கு யாராவது தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பரிமாறுவோம். வீடு குடும்பம் குழந்தைகள் என எல்லாம் பேசுவோம். இப்போது எங்களது மகனுக்கு 16வயது , மகளுக்கு14வயது ஆனாலும் அந்தக் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்குமான உறவில் எவ்வித விரிசலோ  இல்லை.குறைந்தது மாதத்தில் ஒருமுறையேனும் தொலைபேசுவோம்.

 

புரிதல் இருந்தால் இதுவெல்லாம் பெரிய விடயமே இல்லை. ஜீவா உண்மைக்கதையை உணர்வோடு தந்தமைக்க வாழ்த்துக்கள்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி என்ன செய்யவடா எல்லாம் உந்த பிரச்சனையால வந்தது..இல்லை என்ரா நீங்கள் காலப் போக்கில் ஒன்றாய் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ்ந்து இருப்பிங்கள்...நீங்கள் இனி நல்ல தோழன் தோழி போல் இருக்கிறதில ஒரு தப்பும் இல்லைடா , என்ன பழைய கதைகளை கதைச்சு உங்க மனம் பாதிக்காமல் இருந்தால் நல்லது..அவாக்கு வேர மூன்று பிள்ளைகள் இப்ப....பழைய கதைகள் கதைச்சா யாருக்கு தான்டா அழுகை வராது

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா அந்த London அவாவிட்ட இருந்து உங்களுக்கு போன் வந்திச்சா? :D

வர வர இந்த கொசுத் தொல்லை தாங்க முடிய வில்லை :P

ஆனாலும் திருமணம் ஆகிவிட்டதால் இருவர் குடும்பங்களிலும் பிரச்சினை வராத முறையில் இனி பழகுங்கள் ஜீவா அண்ணா.

 

இதுவே எனது கருத்தும் ......

வர வர இந்த கொசுத் தொல்லை தாங்க முடிய வில்லை :P

 

எவ்வளவு நாளைக்குதான் இப்படியே ... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பில உயிர் உள்ள வரை :D

உங்களிற்கு ஏக்கங்களைத் தந்த நிகழ்வு , உங்களின் எதிர்காலத்தைப் பாதிக்காமல் மிக கவனமாக நட்புக் கொள்வது தான் இருவருக்கும் நல்லது . 

உங்களுக்குள் பருவ வயதில் அரும்பிய மெல்லிய  காதலின் நினைவுகள் மிக அழகானவை... ஜீவா..
  • கருத்துக்கள உறவுகள்

யீவா பாராட்டுகள்

நேர்த்தியான எழுத்து

இயல்பாக ஒருவரை ஒருவர் அறியும் ஆர்வம்

கடந்தகாலத்தில் மௌனித்துப்போன வெற்றிடங்களை அடையாளங்காண முற்பட்ட தருணங்கள். தேடல் என்பது ஒவ்வொரு உயிர்களுக்கும் உண்டு. நேற்றைகளைப் போல் இதுதான் இப்படித்தான் என்று விலங்குகளைச் சுமந்து ஊமையான கேள்விகளோடு வாழ்ந்து முடிக்காமல் இயல்பாக சராசரி மனிதர்களாக நேற்றைய எண்ணங்களைத் தெரிந்து கொள்வதில் எத்தவறும் இல்லை. வாழ்க்கையில் திருப்புமுனைகள் பலவற்றைக்கடந்து நான்கு பிள்ளைகளின் தாயாக இருக்கும் என்னிடம் இன்றுகூட கடந்த காலங்களில் காதலித்தோம் என்று துணிவாகச் சொல்லும் ஆட்கள் இருக்கிறார்கள். கடந்த காலங்களை மனதில் வரித்து இப்போதும் கண்களால் உருகும் உள்ளங்களைக் காணமுடிகிறது. தம்முடைய மனைவிக்கு முன்பாகவே..... என்னுடைய கணவருக்கு முன்பாகவே இப்போதும் காதலிக்கிறோம் என்று சொல்லும் தன்மை இருக்கிறது. ஒரு கதை தவறாவது அதை நாம் ஏற்கும் விதத்திலேயே தங்கி இருக்கிறது. கடந்த காலத்தை நிகழ்காலத்தில் பேசுவது தவறாகாது. நாகரீகமாக அறிந்து கொள்வதில் என்ன பிழை இருக்கப்போகிறது? கண்ணீர் உகுத்துவிட்டால் உடனே அப்பெண்ணுக்கு கணவருடன் வாழ்க்கை சரியில்லை என்று முடிவெடுக்கும் முட்டாள்த்தனத்தை என்ன சொல்வது? மனதில் நீண்டகாலமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஒரு நேசத்திற்குரியவரை, பாசத்திற்குரியவரை பல வருடங்களுக்குப் பிறகு பேசக்கிடைக்கும்போது கண்கள் கசிவது இயற்கையே.. பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், இவற்றுக்கு மேலாக மனதிற்குள்ளாகவே நம்மை ஆக்கிரமித்திருக்கக்கூடியவர்கள், மானசீக ஆசான்கள் இப்படி பற்பல வடிவங்களில் சந்திக்கும் தருணங்களில் கண்கள் கசியும். ஏன் சில சமயங்களில் சிலரை நினைக்கும்போதே கண்கள் கசியும்... இருமம் விரும்பியும் வெளிப்படாமல் இருந்து ஒரு நீண்ட காலத்திற்குப் பின் அதனை இருவரும் அறியும்போது இருவரும் கண்கள் கசிவது என்பது ஒரு மானுட உணர்வு அந்த உணர்வை மறுத்து சமூகக் கோட்பாடுகள் என்ற விலங்குகளைப் பூட்டி பூசை செய்வதை முதலில் தவிர்க்கவேண்டும். எப்போதும் எவை மறுக்கப்படுகிறதோ அவை இரகசியமாக விரும்பத்தகாத முறையில் வெளிப்படும். ஒரு நீண்ட காலத்திற்குப் பின்னர் இயல்பான நேசிப்பை இருவரால் அடையாளம் காணும் சந்தர்ப்பத்தை வழங்கும் நாகரீகம் பலரை நாகரீகமாகவே வைத்திருக்கிறது. பிழையான கண்ணோட்டத்தில் நாம் தோய்ந்து கொண்டிருந்தால் மன உளைச்சல்களை அதிகம் தேக்கி நாளடைவில் நோயுறையும் கூட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமைக்குரியவர்களாக மாறிவிடுவோம். யீவா பதின்ம வயதில் முதன் முதல் தோன்றும் காதல் கட்டையில் போகும்வரை மாறாது அப்படி ஒரு சக்தி அதற்கு இருக்கிறது. பேசும்போது மறுபக்கத்தில் அவள் கண்ணீர் விட்டாள் என்பதும் உங்கள் விழிகள் நனைந்தன என்பதும் மனதின் ஆழத்தில் குடியிருந்த ஆழ்ந்த நேசிப்பால் ஏற்பட்டது. அதை நீங்களோ அவளோ எக்காரணம் கொண்டும்  கட்டிய கணவன்/ மனைவி சரியில்லாததால் என்று எண்ணிவிடலாகாது. நல்ல பதிவு அனுபவப்பகிர்வும் கூட... வாழ்க்கையின் சின்னச் சின்னத்தருணங்கள் சில வாழ்வு முழுவதும் உச்சாணி ஞாபகங்களில் ஏறி உட்கார்ந்து விடும் அத்தகைய ஒரு தருணந்தான் இது என்பதில் சந்தேகம் இல்லை.

 

தம்பி டேய்..... பிரியாவுக்கு தாக்கத் தெரியுமா? அல்லது தாங்கத் தெரியுமா? :icon_mrgreen:

Edited by வல்வை சகாறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.