Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம்: ஜெ. யோசனை

Featured Replies

பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
 

மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.
பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்கவும், அவர்கள் முன் ஜாமீன் பெறாமல் இருக்கவும், கைது செய்யப்படுவோர் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்படாமல் இருக்கவும் சட்டத்திருத்தங்கள் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

 

தமிழகத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவச் சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்வதுடன், அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளையும் அரசே செய்யும் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
 

இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் புதுடில்லி சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தனது வேதனையைத் தெரிவித்திருக்கும் அவர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே இருந்தாலும், அறவே அவற்றைக் களைவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்.
 

 

குண்டர் சட்டம் திருத்தப்படும்
அதன்படி பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால், சம்பந்தப்பட்டவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு வழி செய்யும் வகையில் குண்டர் தடுப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்படும்.


அண்மையில் அவர், முதற் குற்றமே சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்குமானால் அத்தகைய சம்பவங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தவென தகுந்த சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனக்கூறியிருந்தார்.
 

பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்படும், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வணிக மையங்கள், பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடியவர்களின் நடமாட்டத்தைச் சீருடை அணியாத காவல்துறையினர் கண்காணித்து, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பர்.
 

மேலும் பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவிருப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
 

இந் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞர்களாக பெண்களே நியமிக்கப்படுவார்கள். அந்நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி, விரைவில் தீர்ப்பு பெற சம்பந்தப்பட்டவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.

 

 

 

காவல்துறைக்கு பயிற்சி

பாலியல் வன்முறை வழக்குக்கள் கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டு, துணைக் கண்காணிப்பாளர்களின் நேரடி மேற்பார்வையில் ஆய்வாளர்கள் புலன் விசாரணை மேற்கொள்வது, இயன்றவரை இவ்வழக்குவிசாரணைகளில் பெண் காவல் ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவது, மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள் ஆகியோரும் இவ்வழக்கு விசாரணைகளை ஆய்வு செய்வது, தற்போது புலன் விசாரணையிலும், நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருக்கும் அனைத்து பாலியல் வன்முறை வழக்குகளையும் மண்டல காவல்துறைத் தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து சட்டம், ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்புவது உள்ளிட்டவையும் புதிய அணுகுமுறையில் அடங்கும்.
 

குழந்தைகளுக்கென 24 மணி நேரமும் உதவி செய்யும் வகையில் இலவச தொலைபேசி அழைப்பு சேவை இயங்கி வருவது போல், ஆங்காங்கு தனித்தனியே இயங்கும் பெண்கள் உதவித் தொலைபேசி சேவையினை ஒருங்கிணைத்து ஆதரவற்ற மகளிருக்கு ஆலோசனை அளிக்கும் பயிற்சி பெற்றவர்களையும் உள்ளடக்கிய புதிய அமைப்பொன்றும் நிறுவப்படும்.
 

பாலியல் வன்முறை வழக்குகள், பெண்கள் இன்னல் தடுத்தல் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் சட்டம் 2012 குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அப் பயிற்சி வகுப்புகளில், பாலியல் வழக்குகளில் சரியான விசாரணை நடத்துவது பற்றி மட்டுமின்றி, இக்குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை கனிவுடனும், கண்ணியத்துடனும் நடத்துவது குறித்தும் போதிக்கப்படும் என்று கூறும் முதல்வர் பெண்களிடம் அச்ச உணர்வு நிலவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் எனவும் உறுதியளித்திருக்கிறார்.
 

புதுடில்லி சம்பவம் குறித்து இப்போதுதான் முதல்முறையாக ஜெயலலிதா கருத்து தெரிவித்திருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/01/130101_jayaonrape.shtml

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வரின் யோசனையை, வரவேற்கின்றேன்.
இப்ப‌டி, நாலைந்து பேருக்கு, ந‌ல‌ம் எடுத்துவிட்டால்.... பாலிய‌ல் கொடுமைக‌ள் நாட்டில் இட‌ம் பெற‌ மாட்டாது.
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வர் சரியான தெளிவான தண்டனையை தெரிவித்திருக்கிறார். பெண்களுக்கெதிரான பலாத்காரம் , பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு அதன் நிமித்தம் கிடைக்கும் தண்டனை வாழ்நாள் முமழுவதும் மறக்க முடியாமல் இருக்க இத்தகைய தண்டனைதான் சரி...... இத்தகைய குற்றம் செய்தால் இத்தகைய தண்டனைதான் கிடைக்கும் என்றால் இந்தக்குற்றம் அறவே அழிக்கப்பட்டுவிடும். முதல்வருடைய யோசனை நன்று. வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஜேர்மனியிலும் இப்படி இருப்பதாக கேள்விப்பட்டேன் ஆனால் சரியாக தெரியாது.

இரண்டு,மூன்று தடைவைகள் பாலியல்பலாத்கார குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மற்றும் பயங்கரமான பாலியல்குற்றச்செயள்களில் ஈடுபடுபவர்களுக்கு ஊசி மூலம் இப்படி செய்வதாக கேள்விப்பட்டேன்.

not a good idea in a country where misuse of power the politicians and the rich and powerful is very common.

 

இந்த சட்டத்தின் மூலம் உண்மையான குற்றவாளிகள் மட்டும் தண்டிக்கப்பட்டால் வரவேற்கக்கூடியதுதான். பழிவாங்குவதற்காக கஞ்சா கேஸ் போடுவது போல், இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைத்தால், என்ன ஆகும்?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் என்ன தண்டனை கொடுப்பது?

குற்ற தண்டனை 
என்று ஒன்றை உருவாக்கும்போது  சட்டத்தின் கீழ் எல்லோரும் சமம் என்ற ரீதியிலேயே உருவாக்காம் வேண்டும்.
இவைகள்தான் இப்போ ரொம்ப மோசம்.
வெட்க பிரச்சனையால் ஆண்கள் பொலிசை  நாடுவதில்லை.


இந்த சட்டத்தின் மூலம் உண்மையான குற்றவாளிகள் மட்டும் தண்டிக்கப்பட்டால் வரவேற்கக்கூடியதுதான். பழிவாங்குவதற்காக கஞ்சா கேஸ் போடுவது போல், இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைத்தால், என்ன ஆகும்?

 

என்ன பெருசா ஆகபோகுது.............?

 
ஒரு சின்ன கட்டிங் அவளவுதான்.
  • தொடங்கியவர்
not a good idea in a country where misuse of power the politicians and the rich and powerful is very common.

 

இந்தியா முதலில் விடுதலை பெறவேண்டும் :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சினிமா எல்லாம் ரொம்ப தடவை பார்த்தாகி போட்டுது...

  • கருத்துக்கள உறவுகள்

வன்கொடுமையில் ஈடுபடும் ஆண்களை தனிமைச் சிறையில் அடைக்கலாம். மனித உரிமைகள் விடயத்தில் இது கொஞ்சம் சர்ச்சைக்குரிய யோசனை... மிக மோசமான ஆண்களின் மீது இதனைப் பிரயோகிக்கலாம். அதேபோல் பாலியல் தொடர்பான குற்றங்களுக்குத் தூண்டும் அல்லது ஈடுபடும்.. பெண்கள்.. மற்றும் சினிமா.. அரசியல்வாதிகள்.. பிரமுகர் மீதும் கடும் நடவடிக்கைகள் அவசியம்.

 

ஆண்களுக்கு நிகராக பெண்களும் பாலியல் வன்முறைகள் நிகழ காரணமாக உள்ளனர் என்ற உண்மைகள் மீண்டும் மறைக்கப்படுகின்றன. இது சட்டரீதியில் பெண்கள் ஆண்கள் பாதிப்படைவதில் இருந்தும் அவர்களுக்கு தீர்வை வழங்காது செய்துவிடுறது. இதுவும். அவர்கள் பெண்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வகை செய்கின்றன. :icon_idea:

  • தொடங்கியவர்

ஆண்மை நீக்கம் என்ன? ஒரு மருத்துவ விளக்கம்



பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களுக்கு வேதியில் ரீதியில் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழக முதலவர் ஜெயலலிதா கூறியுள்ளது பலவிதமான மாற்றுக் கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.


ஆண்மை நீக்கம் என்றால் என்ன என்பது குறித்து பாலியல் மருத்துவர் டாக்டர் நாராயண் ரெட்டி பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கு கேட்கலாம்.



http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130101_narayanreddy_audio.shtml

ஆண்மை நீக்கம் என்ன? ஒரு மருத்துவ விளக்கம்

பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களுக்கு வேதியில் ரீதியில் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழக முதலவர் ஜெயலலிதா கூறியுள்ளது பலவிதமான மாற்றுக் கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்மை நீக்கம் என்றால் என்ன என்பது குறித்து பாலியல் மருத்துவர் டாக்டர் நாராயண் ரெட்டி பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கு கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130101_narayanreddy_audio.shtml

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114034

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மை நீக்கம் என்பது ஒரு அவசரப் பட்ட முடிவு!

 

ஆண்மை நீக்கத்தால், அவர்களது பாலியல் உந்துதல்கள் மாறப்போவதில்லை! 

ஒருவேளை, மேலும் குற்றம் செய்ய அவர்கள் ஊக்குவிக்கப் படலாம்.

பழிவாங்குதல் என்ற கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு மந்தைக்கூட்டம், மேலும் மேலும், குற்றச் செயல்களையே செய்யப் போகின்றது!

அவசரப் பட்டு, முடிவுகள் எடுப்பதை விட்டுக், அறிவூட்டல் மூலமும், அடிப்படைகளை மாற்றுவதின் மூலமுமே, நலமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முனைவதே, நீண்ட கால நோக்கில், நன்மை பயக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
ஆண்மை நீக்கம் என்பது ஒரு அவசரப் பட்ட முடிவு!

 

ஆண்மை நீக்கத்தால், அவர்களது பாலியல் உந்துதல்கள் மாறப்போவதில்லை! 

ஒருவேளை, மேலும் குற்றம் செய்ய அவர்கள் ஊக்குவிக்கப் படலாம்.

பழிவாங்குதல் என்ற கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு மந்தைக்கூட்டம், மேலும் மேலும், குற்றச் செயல்களையே செய்யப் போகின்றது!

அவசரப் பட்டு, முடிவுகள் எடுப்பதை விட்டுக், அறிவூட்டல் மூலமும், அடிப்படைகளை மாற்றுவதின் மூலமுமே, நலமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முனைவதே, நீண்ட கால நோக்கில், நன்மை பயக்கும்!

 

புங்கையூரான்.. இது முடிவல்ல. யோசனை.

 

ஒரு முதலமைச்சர் அதுவும் பெண் முதலைமைச்சர்.. பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் ஒரு மாநில முதலமைச்சர் என்ற வகையில் தன் மீது நெருக்கடிகள் வராதிருக்க.. அவர் இப்படிப் பேசியுள்ளார் அல்லது யோசனை செய்துள்ளார். ஆனால்.. இவை தொடர்பில் நீண்ட ஆராய்வுகளும் மக்கள் கருத்துக்களும் பெறப்படுவது அவசியம்.

 

திருமணம் ஆன ஆண்கள் கூட இளைஞர்களை விட பாலியல் வல்லுறவில் ஈடுபடும் நிலையும் காணப்படுகிறது. மேலும் சில பெண்களின் நடத்தைகளும் இதற்குத் துணை போகின்றன. எல்லாக் காரணிகளையும் ஆராய்ந்து முடிவுகள் எடுக்கப்படனுமே தவிர.. ஒரு உணர்ச்சி வேகத்தில் மனித இனத்தின் ஒரு பால் பிரிவின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி இவர்கள் சொன்னால்.. எல்லாப் பெண்களையும் ஊசி போட்டு கொல்லச் சொல்லி நாங்களும் யோசனை சொல்லலாம். இதெல்லாம் வேலைக்காகிற விடயங்கள் அல்ல..!

 

மருத்துவ ரீதியில்.. சமூக ரீதியில்.. ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள். பெண்களைப் போகப் பொருளாக சித்தரிக்கும் சமூக அமைப்பை மாற்றாமல்.. மாற்றங்கள் எழிதில் நடக்காது. மேலும் பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணக் கருவை.. சட்ட ரீதியில் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலம் தகர்க்க வேண்டும். அப்போது ஆணின் அடிப்படை மனித உரிமைகள் பாதிப்படையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

மேற்கு நாடுகளிலும் நிறைய பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் நடக்கின்றன. வசதி கல்வி சட்டப் பாதுகாப்புள்ள அந்த நாடுகளிலேயே நிலைமை இப்படி என்றால்... இந்தியாவில் சிறீலங்காவில்..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம்: ஜெ. யோசனை

 

 உந்த வெளிப்படையான ஆலோசனைகள் இன்னும் வன்முறையை கூட்டும் எண்டு நான் நினைக்கிறன்....அதுவும் இந்தியாவில்?????? அரச அதிகாரிகளே ஒழுங்கில்லை....அரசியலும் ஒழுங்கில்லை......இந்த திறத்திலை நலமெடுப்பு ஆலோசனை!!!! சுத்தம்......கருணாநிதியாரே! கவனமுங்கோ :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இங்கு ஜேர்மனியிலும் இப்படி இருப்பதாக கேள்விப்பட்டேன் ஆனால் சரியாக தெரியாது.

இரண்டு,மூன்று தடைவைகள் பாலியல்பலாத்கார குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மற்றும் பயங்கரமான பாலியல்குற்றச்செயள்களில் ஈடுபடுபவர்களுக்கு ஊசி மூலம் இப்படி செய்வதாக கேள்விப்பட்டேன்.

 

உண்மைதான் ஜீவா! இவங்கள் நேச்சரை நல்லவடிவாய் கவனிச்சு பாப்பாங்கள்.....சரிவரேல்லையோ......குப்புறபடுக்க வைச்சு இரண்டு ஊசி.......அங்காலை சிங்கன் நடைப்பிணந்தான். ஆயுட்கால தண்டனையுமில்லை......மரணதண்டனையுமில்லை....பண்ணியில் பண்ணிப்பாருமன் :D  :icon_idea:

இது நிச்சயமாகச் செய்யப்பட வேண்டியதொண்டு.

இவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக, மனித உரிமையை காரணம் காட்டி மற்றவர்களின் வாழ்வை பறிக்கக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.