Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பங்குபிரிப்பும் படுகொலையும்  பாகம் 4

சாத்திரி

தலைமைச் செயலகம் நாடு கடந்த அரசு அனைத்துலகச் செயலகம் ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில்  அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக  பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டு அது  அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில்  பேச்சு வார்த்தை  நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை  பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும்  இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது  பேச்சுவார்த்தை பாரிஸ் 18 Marcadet Poissonnier என்னமிடத்தில் குமார் என்பவரது உணவகத்திலேயே நடந்தது,குமார் என்பவர் மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல கடந்த காலங்களில்  பிரான்சில் மாவீரர் குடும்பங்களின் விபரங்களை திரட்டி அவர்களை கெளரவிக்கும் பொறுப்பிலும் இருப்பபவர் அனைத்து தரப்பும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என பாடு படுவதோடு அதற்கான பேச்சு வார்த்தை முன்னெடுப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஒருவர், இவரது கடையிலேயே அனைத்துலகம் சார்பில் பரிதியும் தலைமை செயலகம் சார்பில் தமிழரசனும் பேசத் தெடங்கினாரகள்,,

இங்கு பேச்சு வார்த்தை தொடக்கத்தில் தமிழரன் முன்று கோரிக்கைகளை  அடிப்படை கோரிக்கைகளாக முன்வைக்கிறார் அவை

1  புலம்பெயர் தேசங்களில் இயங்குகின்ற ஏனைய அமைப்புக்கள் உதாரணத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு ,உகத்தமிழர் பேரவை போன்றனவற்றின் செயற்பாடுகளை குழப்பபாமல் அவர்களிற்கும் ஆதரவு அளித்து அவர்களோடு பயணித்தல்,அல்லது ஆதரவு அளிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் குழப்பாமல் விடுதல்.அதே நேரம் வெறுமனே  மாவீரர் தினத்தையும் விழையாட்டு போட்டிகளையும் மட்டும் நடத்திக்கொண்டிராமல்  இலங்கையரசின் போர்க்குற்றம் மீதான விசாரணைகள்  மற்றும் தாயக மக்களின் சுதந்திர வாழ்விற்காவும் தொடர்ந்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தல்,

2 தற்போது உள்ள சூழலில் தாயகத்தோடு தொடர்பு இல்லாமல் வெளிநாடுகளில் மட்டுமே பரப்புரைகளை மேற்கொள்வது எமது போராட்டங்களிற்கு பலம் சேர்க்காது, எனவே தாயகத்தில்  பல குழப்பங்களோடு இயங்கிக் கொண்டு இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து அவர்களையும் சீரமப்பதற்கான அழுத்தங்களை கொடுத்து  அவர்களோடு தொடர்புகளை பேணியபடி அரசியல் ரீதியாக புலம்பெயர் மக்களையும் இணைத்து சரியான பாதையில் பயணிப்பது

3போரால் பாதிக்கப்பட்ட  போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களிற்கு முன்னுரிமைகொடுத்து பராமரிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு அவற்றை நடை முறைப்படுத்துதல்

இந்த மூன்று கோரிக்கைக்கும் அனைத்துலகச் செயலகம் இணங்கும் பட்சத்தில் தலைமைச்செயலகத்துடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை தயாரித்து ஊடகங்களிற்கு அறிவித்துவிட்டு சேர்ந்து இயங்லாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது,

இந்த கோரிக்கைகளிற்கு பரிதி அளித்த பதில்கள் என பார்ப்போம்,முதலாவது கோரிக்கைகான பதில் நாடுகடந்த அரசை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் காரணம் அவர்கள் கே.பி யால் தொடக்கப்பட்டவர்கள்.இலங்கையரசுடன் வேலை செய்கிறார்கள் துரோகிகள்,துரோகிகளுடன் இணையமாட்டோம், உலகத் தமிழர் பேரவையானது செயற்பாட்டில் இல்லை அவர்கள் செயற்படும்போது யோசிக்கலாம் என்பது

இரண்டாவது கோரிக்கைக்கான பதில்,தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்ப முடியாது அவர்களும் துரோகிகள்,அதனால் நாங்கள்  ---- புதிதாக ஒரு ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதோடு  வெறுமனே அரசியலோடு மட்டும் நிற்காமல் அடுத்த கட்ட ஆயுதப்போரை தொடங்குவதற்கான  ஆயத்த வேலைகளிலும் இருக்கிறோம் விரைவில் ஆயுதப்போர் தெடங்கும்,

மூன்றவதான  மாவீரர் குடும்பங்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கோரிக்கைக்கு பரிதியின்பதில் அதைப்பற்றி எங்களிற்கு தெரியும், முதலில் மக்களின் விடுதலை பிறகு மற்றவற்றை பாக்கலாம் என்றதுதான்,

 நடைமுறைக்கு சாத்தியமற்ற  வில்லங்கமான பரிதியின் பதில்களால் மத்தியஸ்த்தம் வகித்தவர்கள் ஆத்திரமடைந்து  வில்லங்கமான பதில்தராமல் தற்காலத்திற்கேற்றவாறு  யோசித்து பதில் தருமாறு கூறிவிடுகிறார்கள் பரிதி கோபமாக அங்கிருந்து வெளியேறிவிடுகிறார், ஆனலும் பேச்சு வார்த்தை முயற்சியில் ஈடுபட்டவர்கள் விடுவதாயில்லை இந்த வருடம் எப்படியாவது அனைவரையும் இணைத்து மாவீரர் தினத்தை கொண்டாடுவதோடு ஒற்றுமைபப்படுத்தி விடவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தவர்கள் பரிதியோடு தொடர்ந்து பேசினார்கள், கடந்த முறையைப்போல  எவ்வித நிபந்தனைகளும் விதிக்காவிட்டால்  ஒற்றுமையை பற்றி பேசலாம் என்று விட்டார், அதற்கு மத்தியஸ்த்தம் வகித்தவர்களும் தலைமை செலகத்தை சேர்ந்தவர்களும் சம்மதித்தனர்.

சரியாக ஒரு வாரம் கழித்து  மீண்டும் அதே கடையில் பலர் முன்னிலையில் இருதரப்பும் பேசியது , நிபந்தனைகள் இன்றி இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்படவும் ஒன்றாக மாவீரர் தினத்தை கொண்டாடுவது எனவும் தொடர்ந்தும் அடுத்த நடிவடிக்கைகள் போராட்டங்களை இணைந்தே முன்னெடுப்பது என்பதற்கு பரிதி சம்மதம் தெரிவித்தார், பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்தவர்களிற்கும் மகிழ்ச்சி பேச்சுவார்த்தை வெற்றி என்கிற செய்தி தொலைபேசி முலமாக அனைவரிற்கும் பரிமாறப்படுகின்றது,எனது கைத்தொலைபேசியும் உதறியது, இரு தரப்பும்  தனித்தனியாக அறிக்கை தயாரிப்பது என்றும் அதனை பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தவர்களோடும் இணைந்து சரிபார்த்து விட்டு கூட்டறிக்கையாக்கி ஊடகங்களிற்கு அனுப்புவது என்றும் முடிவுசெய்யப்பட்டது, பரிதியும் குறித்துவிட்டு கைகுலுக்கி  மகிழ்ச்சியோடு விடை பெற்றார்கள்,

ஆனாலும் பேச்சு வார்த்தையை ஒழுங்கு செய்தவர்களிற்கு எல்லாமே திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்தது காரணம் 2009 ம் ஆண்டு புலிகள் அமைப்பின் ஆயுதப்போர் முடிவிற்கு வந்த பின்னர்  நாடு கடந்த அரசு தொடங்கப் பட்டதிலிருந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு என்று தொடங்கி 2010 ம் ஆண்டு மாவீரர்  தினத்தன்று தலைவர் பிரபாகரனின் மரணத்தை அறிவித்து அவரிற்குரிய மரியாதையை செலுத்தவேண்டும் என மேற்கொண்ட முயற்சிகள் வரை அனைத்திலுமே அனைத்துலகச் செயலகம் ஆரம்பத்தில் ஒத்துவருவது போல போக்கு காட்டிவிட்டு கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவது அவர்களது வழக்கமாக இருந்தது,அதைப்போலவே  இந்தத்தடைவையும் கடைசிநேரத்தில் காலை வாரிவிடுவார்களா என்கிற சந்தேகத்தில் இரு தரப்பையும் தொர்பு கொண்டு அறிக்கையின் முன்னேற்றம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்: ஆனால் அவர்கள் பயந்தது போல் நடந்தே விட்டிருந்தது, இரண்டு நாள் கழித்து தமிழரசனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பரிதி , ஊடக அறிக்கை  ஒண்டும் வேண்டாம் மற்றைய நாட்டு பொறுப்பாளர்களும் இரும்பொறையும்  அதற்கு  ஒத்து வருகிறார்கள் இல்லை நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இணைந்து செயற்படுவோம் என்கிறார், மீண்டும் தேவாங்கு தென்னை ஏறப்போவதை (எத்தனை நாளைக்குத்தான் வேதாளம்  மட்டும் முருங்கையில் ஏறுவது) பேச்சு வார்த்தை ஏற்பாட்டாளர்களிற்கு அறிவிக்கிறார்,

குமார் உட்பட மேலும் பலர் பரிதியை தொடர்பு கொண்டு கூட்டறிக்கை விடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்கள், காரணம் கூட்டறிக்கை ஒன்று வந்தால்தான்  பிரான்சை முன்னுதாரணமாக எடுத்து மற்றைய நாடுகளிலும் இணைப்புக்களை ஏற்படுத்தலாம், அல்லது மற்றைய நாடுகளில் தொடர்ந்தும் மாறி  மாறி துரோகி பட்டங்கள் வழங்குவது தொடரும், அடுத்ததாக எம்மவர்களிற்குள் உள்ள சிறிய பிழவுகளை வைத்துக்கொண்டு எதிரியானவன் அதற்குள் புகுந்து பிழவுகளை வலுப்படுத்தி மோதல்களை ஊக்கிவித்து எம்மைகொண்டே எம்மை அழிக்கும் வேலையை செய்து முடிப்பான், எனவே இந்த கூட்டறிக்கையானது நிச்சயம் எதிரிக்கு ஏமாற்றத்தை கொடுக்கும், எனவே கூட்டறிக்கை அவசியம் என்று வலியுறுத்தியதோடு மீண்டும் நவம்பர் மாதம் 11 ந்திகதி சந்திப்பு ஒன்றை நடத்துவதோடு அறிக்கையயும் வெளியிடுவதென உறுதியாக சொல்லி விட்டார்கள்,

அதற்கிடையில் பிரான்சில் தான் மற்றைய அமைப்புக்களோடு இணைந்து இயங்கப்போவதாக  மற்றைய நாட்டு அனைத்துலகப் பொறுப்பாளர்களிற்கும் அறிவித்து விடுகிறார், உடனடியாகவே  இலண்டன் பொறுப்பாளர் தனத்திடம் இருந்தும், சுவிஸ் பொறுப்பாளர் ரகுபதியிடம் இருந்தும் எதிர்ப்பு கிழம்புகின்றது, அதுமட்டுமல்ல அவர்கள் உடனடியாக இரும்பொறை( அரவிந்தன் இவர்தான் நெடியவன் மற்றும் வாகீசன் ஆகியோர் கைதான பின்னர் அனைத்துலகத்தை வழி நடத்தும் முக்கியமானவர், ) என்பவரை தொர்பு கெண்டு  பிரான்சில் பரிதியின் இணைவை எப்படியாவது தடுத்து நிறுத்தும்படியும் அப்படி அங்கு இணைந்தால் அதே முன்னுதாரணமாகி அனைத்து நாடுகளிலும்  அனைவரோடும் இணையவேண்டி வரும், பின்னர் கணக்கு வழக்கு எல்லாம் காட்டவேண் வரும்   இணைப்பை நிறுத்தி விடுமாறு  கூறிவிடுகிறார்கள், பரிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இணையவேண்டாம்  அறிக்கையும்  விடவேண்டாம் என கோரிக்கை வைக்கிறார்,  ஆனால் தான் இக்கட்டான நிலையில் இருப்பதாக பரிதி தெரிவிக்கிறார், இணைப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும் என்கிற நோக்கோடு யேர்மனியில் இருந்த இரும்பொறை பாரிசிற்கு விரைகிறார், அன்று இரவு பரிதி சுட்டுக்கொல்லப் படுகின்றார்,,   

B870BB00BC10BAE0BCD0BAA0BC60BBE0BB10BC80

இரும்பொறை

BB00B950BC10BAA0BA40BBF0B9A0BC10BB50BBF0

ரகுபதி சுவிஸ்

BB20BA30BCD0B9F0BA90BCD0BA40BA90BAE0BCD0

தனம் இலண்டன்

அடுத்தபாகத்துடன் முடிவடையும்....

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply
அடுத்தபாகத்துடன் முடிவடையும்....

  நல்லது  :D

தலைப்பில் உள்ள விடயங்களுக்கு ஆரோக்கியமான முறையில் விமர்சனங்களை/மறுப்புக்களை வைக்குமாறு கள உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

சீண்டும் கருத்துக்கள் தொடர்ச்சியாக வைக்கப்படும்போது நிர்வாகம் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளால போட்டு தள்ளி;

வெளியால கேணல் பட்டம் கொடுத்து

வீரவணக்கம் செய்திட்டாங்கள்.....

மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் தொடங்கினால் இதுதான் நடக்கும் என்பதை இப்படியான எழுத்து மூலம் மக்களுக்கு புரியவைக்க வேண்டும்....சாத்திரியார் அதுசரி நீங்கள் எந்த அமைப்பு ....தலமைசெயலகமா?அனைத்துலகசெயலகமா?:D

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளால போட்டு தள்ளி;

வெளியால கேணல் பட்டம் கொடுத்து

வீரவணக்கம் செய்திட்டாங்கள்.....

மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் தொடங்கினால் இதுதான் நடக்கும் என்பதை இப்படியான எழுத்து மூலம் மக்களுக்கு புரியவைக்க வேண்டும்....சாத்திரியார் அதுசரி நீங்கள் எந்த அமைப்பு ....தலமைசெயலகமா?அனைத்துலகசெயலகமா? :D

புத்தன் கடந்தகால என்னுடைய கட்டுரைகளை தொடந்து படிந்திருந்தால்  இந்த கேள்வியே வந்திருக்காது  காரணம் நான் அனைத்துலகம் . தலைமை செயலகம்.  நா.கடந்த அரசு  என்று அனைவருமே  விட்ட தவறுகளை  சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன்.  அவ்வளவுதான்.  இவர்கள் திருந்தவேண்டும்  என்கிறதொரு நப்பாசைதான். அனைத்து தரப்பிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்  அவர்களிற்கு தங்கள் தவறுகளும்  புரிகின்றது அதனால்தான் இதுவரை சம்பந்தப் பட்டவர்கள் யாருமே  எனக்கு எதிராக எந்த நடவாக்கையிலும்  இறங்கவில்லை. இடையில் நிற்கும் எதுவுமே புரியாதவர்கள்  குதிக்கிறார்கள்.  குதிப்பதில் ஒரு சுகம்தானே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகளில், தமிழனின் தலை விதி, தங்கியிருக்கும் வரை, எதுவுமே மாறப்போவதில்லை என்பது தான், காலம் நமக்குக் கற்றுத்தந்த பாடம்!

அமைப்புக்கள் தங்கள் தனித்துவங்களைப் பேணுவது, தவறென்று நான் கருதவில்லை.

ஆனால் அந்தத் தனித்துவங்கள், அந்த அமைப்புக்களின் முக்கிய நோக்கங்களுக்கு எதிராகப் போகுமெனில், அந்தத் தனித்துவங்களால் பலனெதுவும் இல்லை.

அந்த அமைப்புக்களின் உன்னதமான நோக்கங்களே, இறுதியில் மரணித்துப் போகும் நிலையே ஏற்பட்டு விடும்!

நன்றிகள், சாத்திரி!

தலைப்பில் உள்ள விடயங்களுக்கு ஆரோக்கியமான முறையில் விமர்சனங்களை/மறுப்புக்களை வைக்குமாறு கள உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

சீண்டும் கருத்துக்கள் தொடர்ச்சியாக வைக்கப்படும்போது நிர்வாகம் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சில நாட்களுக்கு முன்னால் இருவரால் இணைக்கப்பட்ட ஒரே செய்தியை அகற்றி இருந்தீர்கள் [ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்:இறுதி எச்சரிக்கை!எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114051

அது கொழுக்கட்டையாயும் இந்த தொடர் மோதகமுமாயுமே தெரிகின்றது  :D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் கடந்தகால என்னுடைய கட்டுரைகளை தொடந்து படிந்திருந்தால்  இந்த கேள்வியே வந்திருக்காது  காரணம் நான் அனைத்துலகம் . தலைமை செயலகம்.  நா.கடந்த அரசு  என்று அனைவருமே  விட்ட தவறுகளை  சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன்.  அவ்வளவுதான்.  இவர்கள் திருந்தவேண்டும்  என்கிறதொரு நப்பாசைதான். அனைத்து தரப்பிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்  அவர்களிற்கு தங்கள் தவறுகளும்  புரிகின்றது அதனால்தான் இதுவரை சம்பந்தப் பட்டவர்கள் யாருமே  எனக்கு எதிராக எந்த நடவாக்கையிலும்  இறங்கவில்லை. இடையில் நிற்கும் எதுவுமே புரியாதவர்கள்  குதிக்கிறார்கள்.  குதிப்பதில் ஒரு சுகம்தானே :lol:

தவறுகளை புரியவைப்பதும் ஒரு போராட்டம்தான். சம்பந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி.உங்கள் எழுத்து பணி தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு தெளிவான பார்வை உங்களுக்கு  அகூ 

சில நாட்களுக்கு முன்னால் இருவரால் இணைக்கப்பட்ட ஒரே செய்தியை அகற்றி இருந்தீர்கள் [ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்:இறுதி எச்சரிக்கை!எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114051

அது கொழுக்கட்டையாயும் இந்த தொடர் மோதகமுமாயுமே தெரிகின்றது  :D

வர வர ஒருதலைப் பட்சமா போகுது யாழ் 

எந்தவொரு அடிப்படையும் ஆதாரமும் இல்லாமலும் உயிரோடு எம்மோடு இப்போது இல்லாதவர்கள் தொடர்பாகவும் எழுதப்படும் குழப்பகரமான கருத்துக்கள் ஒருபோதும் ஆரோக்கியமானதாக ஒருவருக்கும் அமையப்போவதில்லை. இப்படியான போக்கை யாழ் களம் அனுமதிப்பது கவலையளிக்கின்றது. 

"akootha, on 03 Jan 2013 - 23:07, said:

சில நாட்களுக்கு முன்னால் இருவரால் இணைக்கப்பட்ட ஒரே செய்தியை அகற்றி இருந்தீர்கள் [ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்:இறுதி எச்சரிக்கை!எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.]

http://www.yarl.com/...howtopic=114051

அது கொழுக்கட்டையாயும் இந்த தொடர் மோதகமுமாயுமே தெரிகின்றது "

அகூதா அந்த செய்தி லெட்டபாட்டில் வந்தது. அதனால் தூக்கப்பட்டது, இந்த செய்தி லெட்டபாட் இல்லாமல் வந்தது அதனால் தூக்கவில்லை. அதில் செயற்படுவர்களை ஒதுங்க சொல்லி இருக்கு இதில் செயற்படுபவர்கள் பாங்குதராவிட்டால் ஒதுங்க சொல்லிஉள்ளது ஆக செய்தி இரண்டும் ஒன்றுதான் சொல்லப்பட்ட விதம்வேறு.

அண்ணை நல்லாய் பகிடி விடகிறியள் போலை கிடக்கு . நானும் இங்கை கிட்டமுட்ட 23 வரியமாய் இருக்கிறன் . எல்லா கூத்துகளையையும் பாத்துக்கொண்டிருக்கிறன் . இந்த கூட்டத்திலை எல்லாருமே " பருதியை " தவித்து உயிரோடைதான் இருக்கினம் . இந்த கூட்டத்தை நடத்தினவை , நடத்த இடம் குடுத்த குமார் , பருதியோடை போன பார்த்தீபன் எண்டு எல்லாருமே உயிரோடைதான் இருக்கினம் . இல்லாத கோல்மாலுகளை இதை எழுதினவர் எழுதேலை . இப்ப ஒரு கதைக்கு இந்த  உயிரோடை இருக்கிற ஆக்களுக்கு இப்பிடி சாத்திரி நோண்டிறது பிடிக்கேலை எண்டால் இம்மட்டைக்கு சாத்திரி இதிலை எழுதேலாது அண்ணை . ஆக இதிலை விசையம் இருக்கிறதாலை தான் எல்லாரும் பொத்திக் கொண்டு இருக்கினம் . இனியாவது எல்லாரும் மாறி சனத்துக்கு செய்யட்டும் .இதை தான் ஐயன் இப்பிடி சொல்லிறார் ,

பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும். 186

நீ என்ன செய்தனி ?? எண்டு கேளாதையுங்கோ . எனக்கு இந்த கோல்மாலுக்கை கலந்து வேசம் கட்ட தெரியாது .

Edited by கோமகன்

அண்ணை நல்லாய் பகிடி விடகிறியள் போலை கிடக்கு . நானும் இங்கை கிட்டமுட்ட 23 வரியமாய் இருக்கிறன் . எல்லா கூத்துகளையையும் பாத்துக்கொண்டிருக்கிறன் . இந்த கூட்டத்திலை எல்லாருமே " பருதியை " தவித்து உயிரோடைதான் இருக்கினம் . இந்த கூட்டத்தை நடத்தினவை , நடத்த இடம் குடுத்த குமார் , பருதியோடை போன பார்த்தீபன் எண்டு எல்லாருமே உயிரோடைதான் இருக்கினம் . இல்லாத கோல்மாலுகளை இதை எழுதினவர் எழுதேலை . இப்ப ஒரு கதைக்கு இந்த  உயிரோடை இருக்கிற ஆக்களுக்கு இப்பிடி சாத்திரி நோண்டிறது பிடிக்கேலை எண்டால் இம்மட்டைக்கு சாத்திரி இதிலை எழுதேலாது அண்ணை . ஆக இதிலை விசையம் இருக்கிறதாலை தான் எல்லாரும் பொத்திக் கொண்டு இருக்கினம் . இனியாவது எல்லாரும் மாறி சனத்துக்கு செய்யட்டும் .இதை தான் ஐயன் இப்பிடி சொல்லிறார் ,

யாழில் கொண்டுவந்து கட்டுரையை போட்டிருக்கிறார். விஷயம் இருக்கிறதாலை தான் உயிரோட இருக்கிறவை இதுக்கு பதில் போடாமல் இருக்கினம் என்ற மாதிரி நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

இன்று ஆங்காங்கே முளைத்திருக்கும் பல இணையங்களும் பல தனிநபர் வலைத்தளங்களும் தங்கள் பிஸ்னஸ் நல்லபடி நடக்க வேண்டும் என்று பல புனைகதைகளை எழுதுவார்கள். எல்லாவற்றையும் எல்லா நபர்களும் வாசிப்பார்கள் என்றும் எல்லாவற்றுக்கும் அவர்கள் பதில் போட வேண்டும் என்றும் யோசிப்பது நகைப்புக்கிடமானது.

உண்மையில் உயிருடன் இருப்பவர்களிடம் கேள்வி கேட்க வேண்டுமென்றால் இப்படி கதை எழுதி யாழில் போட வேண்டியதில்லை. அவர்களிடம் நேரடியாக பேட்டி கண்டு அதை யாழில் வீடியோவாக போடலாம்.

நியானி: நிர்வாகம் பற்றிய வரிகள் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

இப்ப ஒரு கதைக்கு இந்த  உயிரோடை இருக்கிற ஆக்களுக்கு இப்பிடி சாத்திரி நோண்டிறது பிடிக்கேலை எண்டால் இம்மட்டைக்கு சாத்திரி இதிலை எழுதேலாது அண்ணை . ஆக இதிலை விசையம் இருக்கிறதாலை தான் எல்லாரும் பொத்திக் கொண்டு இருக்கினம் .

மேலை இருக்கிறது நான் எழுதினது . உங்கடை வியாக்கியானம் பச்சையிலை கிடக்கு . நான் எழுதின தமிழின்ரை விளக்கம் என்னவெண்டால் , அட சாத்திரியார் உயிரோடை இருந்தால்தானே இதிலை எழுதலாம் எண்டு . உங்கடை விளப்பம் இப்பிடியாக் கிடக்கு . இப்பிடியான விளப்பங்களாலைதான் பதிவுகள் திசைமாறி போகிது .

நியானி: மேற்கோள் தணிக்கை

Edited by நியானி

இப்ப ஒரு கதைக்கு இந்த  உயிரோடை இருக்கிற ஆக்களுக்கு இப்பிடி சாத்திரி நோண்டிறது பிடிக்கேலை எண்டால் இம்மட்டைக்கு சாத்திரி இதிலை எழுதேலாது அண்ணை . ஆக இதிலை விசையம் இருக்கிறதாலை தான் எல்லாரும் பொத்திக் கொண்டு இருக்கினம் .

மேலை இருக்கிறது நான் எழுதினது . உங்கடை வியாக்கியானம் பச்சையிலை கிடக்கு. நான் எழுதின தமிழின்ரை விளக்கம் என்னவெண்டால் , அட சாத்திரியார் உயிரோடை இருந்தால்தானே இதிலை எழுதலாம் எண்டு . உங்கடை விளப்பம் இப்பிடியாக் கிடக்கு . இப்பிடியான விளப்பங்களாலைதான் பதிவுகள் திசைமாறி போகிது .

நீங்கள் எழுதிய தமிழின் விளக்கத்தை நான் சரியாக புரிந்து தான் பதில் போட்டிருக்கிறேன். நீங்கள் தான் எனக்கு மறுப்பு பதில் போட நினைச்சு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் புதுசா ஒரு கருத்தை போட்டிருக்கிறீர்கள். :lol:

திரும்ப நீங்கள் எழுதிய இரு கருத்துகளையும் வாசித்து பாருங்கள். :lol:

உனது நண்பர்களை வைத்து உன்னை எடை போடாலாம் எண்ட தத்துவம் இப்ப சிலருக்கு பொருந்துது. புதிய நல்ல கூட்டணிகள் இப்பிடியே வாழ்க வளர்க 

நீங்கள் எழுதிய தமிழின் விளக்கத்தை நான் சரியாக புரிந்து தான் பதில் போட்டிருக்கிறேன். நீங்கள் தான் எனக்கு மறுப்பு பதில் போட நினைச்சு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் புதுசா ஒரு கருத்தை போட்டிருக்கிறீர்கள். :lol:

திரும்ப நீங்கள் எழுதிய இரு கருத்துகளையும் வாசித்து பாருங்கள். :lol:

வணக்கம் நான் எழுதிய கருத்துக்களை நான் நன்றாகச் சிந்தித்துத் தான் எழுதினேன் . எனவே நான்  மீண்டும் வாசிகவேண்டிய அவசியம் இல்லை . ஆனால் எனது கருத்துக்களை புரிந்துகொள்வதில் உங்களுக்கு இருந்த கஸ்ரத்தைக் சுட்டிகாட்டி மீண்டும் படித்துதெளிவு பெறும் வகையில் எனது கருத்துக்கு மீண்டும் இலகுதமிழில் விளக்கம் கொடுத்திருந்தேன் .

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

"akootha, on 03 Jan 2013 - 23:07, said:

சில நாட்களுக்கு முன்னால் இருவரால் இணைக்கப்பட்ட ஒரே செய்தியை அகற்றி இருந்தீர்கள் [ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்:இறுதி எச்சரிக்கை!எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.]

http://www.yarl.com/...howtopic=114051

அது கொழுக்கட்டையாயும் இந்த தொடர் மோதகமுமாயுமே தெரிகின்றது "

அகூதா அந்த செய்தி லெட்டபாட்டில் வந்தது. அதனால் தூக்கப்பட்டது, இந்த செய்தி லெட்டபாட் இல்லாமல் வந்தது அதனால் தூக்கவில்லை. அதில் செயற்படுவர்களை ஒதுங்க சொல்லி இருக்கு இதில் செயற்படுபவர்கள் பாங்குதராவிட்டால் ஒதுங்க சொல்லிஉள்ளது ஆக செய்தி இரண்டும் ஒன்றுதான் சொல்லப்பட்ட விதம்வேறு.

அண்மைக்காலத்தில்  புதிதாக யாழில் இணைபவர்கள் அதிகரித்துள்ளது என்ற நல்ல செய்தியை நாம் எல்லோரும் கேட்டு மகிழ்ந்தோம்.

அந்த வளர்ச்சிக்கு 'சுய ஆக்கங்கள்'  உதவுகின்றன. 

யாழ் அமைத்து தரும் அந்த பாதையில் கல்லுகளும் முள்ளுகளும் இருக்கத்தான் செய்யும்.

எந்தவொரு அடிப்படையும் ஆதாரமும் இல்லாமலும் உயிரோடு எம்மோடு இப்போது இல்லாதவர்கள் தொடர்பாகவும் எழுதப்படும் குழப்பகரமான கருத்துக்கள் ஒருபோதும் ஆரோக்கியமானதாக ஒருவருக்கும் அமையப்போவதில்லை. இப்படியான போக்கை யாழ் களம் அனுமதிப்பது கவலையளிக்கின்றது. 

இறந்தவர்கள் விட்ட தவறுகளை அலசுவதன் மூலம் தவறுகளை வருங்காலத்தில் தவிர்க்க முடிந்தால் அது நல்லதே.

ஆனால் இறந்தவர்களை சுய விளம்பரத்திற்காக விமர்சிப்பதும் அதை எந்த ஒரு ஊடகம் பிரசுரிப்பதும் அநாகரீகமே.

சுயநலம் இல்லாமல் இனத்திற்கு சேவை செய்து தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை நினைவு கூர்ந்து தம்மை முன்னேற்றும் மேற்குலக நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் நாம் வாழுகின்றோம். அதிலிருந்து நாம் கற்க தவறுவது என்பது எம்மை நாமே அழிக்கும் செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் பழையவற்றை மறந்து தங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களை தீர்த்து அமைப்பை மீண்டும் வலிமையாக கட்டியமைக்க வேண்டிய பணி உங்கள் அனைவரின் முன் இருக்கின்றது என்பதனை உணர்ந்து இரண்டு பக்கமும் பல திறமை மிக்கவர்கள் இருகின்றிகள் உங்கள் தேவை நினைச்யமாக தமிழ் இனத்திற்கு தேவை என்பதனை உணர்ந்து மீண்டும் பலம் கொண்ட அமைப்பாக இனம் ஒன்றாக பகை வென்றாக இணைந்து பயணிப்போம் வாரீர் வாரீர்

எல்லாரும் பிரபாகரன் ஆகினால் தமிழ் ஈழம் மிக விரைவில் வந்துவிடும் காரணம் சிங்கள எதிரி ஒரு பிரபாகரனுக்கு எதிராக மட்டும்தான் போராடினான் இப்போது ஆயிரம் பிரபாகரன் உருவாகினால் சிங்கள எதிரியை அளிப்பது இலகுவானது ஆனால் பிரபாகரன் ஒருபோதும் யாரையும் பேச்சுக்கு வருமாறு கேக்கவில்லை. தனது நடவடிக்கைகள் ஊடாக மக்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டார். அவர் எப்போது சிந்தித்தது சிங்கள எதிரிக்கு எதிராக செய்யும் சாதனைகள் தனது தமிழ் மக்களின் பலத்தை உறுதிபடுத்தும் என்பதே. ஆனால் இண்று 2009ம் அண்டுக்கு பிறகு எவனாவது ஒரு கை குண்டு தனும் சிங்கள இராணுவத்திற்கு எறிய துணிந்தானா? ஒரு சீனா வெடி தனும் கொழுத்த துணிந்தானா? அல்லது ஒரு சிங்கள எதிரியை சட்ட சிக்கலில் தனும் அகப்பட வைத்தானா,? இல்லை. கடந்த 4 வருடமாக வாங்கோ பேசுவம் வாங்வோ கதைப்பம் வாங்கோ சேருவம் என்டே காலத்தை கடத்தியதுதான் மிச்சம். ஒற்றுமையாகிற வழியை பாருங்கோ ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த இலங்கை தமிழினமும் சூடு சுரணை அற்று தூங்கி போய் இருகின்றது பிரியன் என்ன செய்ய நானும் நீங்களும் மற்றும் அனைவரும் விழித்தால் தான் உண்டு இல்லையேல் இது தான் எம் வாழ்வு

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் செல்ல செல்ல தமிழனின் இழப்புகளும் மறக்கடிக்கப்பட்டு விடும் உணர்வுகள் மங்கி விடும் அதை புரிந்து அனைவரும் செயல்ப்பட்டால் நல்லம்

இந்த கட்டுரையின் ஆசிரியருக்கு வணக்கம் ............உங்களை பற்றி ,உங்கள் எழுத்துகளை பற்றி அறிந்தவன் என்ற வகையில் சிலதுகளை எழுத வேண்டிய தேவை .இவ்வளவு பொறுமையாக ,புலன் விசாரணை செய்து ,இவ்வளவு நேரத்தை விரயமாக்கி எழுதியிருக்கிறீர்கள் எண்டால் உங்களுக்கு எதோ ஒரு தேவை உள்ளது என்பது மட்டும் புலனாகிறது .

ஆனால் அந்த தேவை என்ன என்பது நீங்கள் கூறிய விளக்கத்தில் இருந்து அறியமுடியாமல் உள்ளது .அதனால் மீண்டும் ஒருமுறை புரியவைக்க முடியுமா?அதாவது நீங்கள் கூறியது போல் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் நோக்கம் ,உண்மையில் ,இதயசுத்தியாக உங்கட மனசில் இருந்தால் இந்த கட்டுரையை இங்கே பிரசுரிக்கமாட்டீர்கள் .உங்கள் செயற்பாடு வேறுமாதிரி இருந்திருக்கும் .அந்த வகையில் ,அந்த சந்தேகத்தை தீர்க்கும் முகமாகவே ,சில கேள்விகளும் எழுந்துள்ளது.

அதாவது ஏன் நீங்கள் அனைத்துல செயலகத்துடன் [பருதி அவர்களுடன் ]சேர்ந்து இயங்க முடியாமல் போனது ? .அனைத்துலக செயலகத்தில் ஓர் துறையில் பொறுப்பாக இருந்துகொண்டு யாரோ ஒருவரை கூட்டி வந்து அந்த துறை சார்ந்த அத்தனை விடயங்களையும் குழப்ப நினைத்து ஏன் ?.சரி தலைமைச்செயலகத்துடனாவது இன்றுவரை சேர்ந்து ஏன் உங்களால் செயற்படமுடியாமல் உள்ளது ? இன்னும் பல கேள்விகள் ஆனால் ,நாளை முன்னெடுக்கப்படும் தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தில் உங்கள் பங்களிப்பும் உங்கள் இனத்திற்கு தேவை என்ற ஓர் முன் நோக்கிய பார்வை அவற்றை தடுக்கிறது ,உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.