Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4

Featured Replies

புது உலகைப் படைக்க, சகல தரப்பையும் இணைக்க மத்தியஸ்தம் செய்யப் புறப்பட்டவர்கள் என பிரகடனம்!  "பேனை" கிடக்குது எண்டதுக்காக இப்படியா எழுதுவது ?

 

 

நியானி: திரிக்கு சம்பந்தமற்றவை தணிக்கை

Edited by நியானி

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையின் ஆசிரியருக்கு வணக்கம் ............உங்களை பற்றி ,உங்கள் எழுத்துகளை பற்றி அறிந்தவன் என்ற வகையில் சிலதுகளை எழுத வேண்டிய தேவை .இவ்வளவு பொறுமையாக ,புலன் விசாரணை செய்து ,இவ்வளவு நேரத்தை விரயமாக்கி எழுதியிருக்கிறீர்கள் எண்டால் உங்களுக்கு எதோ ஒரு தேவை உள்ளது என்பது மட்டும் புலனாகிறது .

ஆனால் அந்த தேவை என்ன என்பது நீங்கள் கூறிய விளக்கத்தில் இருந்து அறியமுடியாமல் உள்ளது .அதனால் மீண்டும் ஒருமுறை புரியவைக்க முடியுமா?அதாவது நீங்கள் கூறியது போல் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் நோக்கம் ,உண்மையில் ,இதயசுத்தியாக உங்கட மனசில் இருந்தால் இந்த கட்டுரையை இங்கே பிரசுரிக்கமாட்டீர்கள் .உங்கள் செயற்பாடு வேறுமாதிரி இருந்திருக்கும் .அந்த வகையில் ,அந்த சந்தேகத்தை தீர்க்கும் முகமாகவே ,சில கேள்விகளும் எழுந்துள்ளது.

அதாவது ஏன் நீங்கள் அனைத்துல செயலகத்துடன் [பருதி அவர்களுடன் ]சேர்ந்து இயங்க முடியாமல் போனது ? .அனைத்துலக செயலகத்தில் ஓர் துறையில் பொறுப்பாக இருந்துகொண்டு யாரோ ஒருவரை கூட்டி வந்து அந்த துறை சார்ந்த அத்தனை விடயங்களையும் குழப்ப நினைத்து ஏன் ?.சரி தலைமைச்செயலகத்துடனாவது இன்றுவரை சேர்ந்து ஏன் உங்களால் செயற்படமுடியாமல் உள்ளது ? இன்னும் பல கேள்விகள் ஆனால் ,நாளை முன்னெடுக்கப்படும் தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தில் உங்கள் பங்களிப்பும் உங்கள் இனத்திற்கு தேவை என்ற ஓர் முன் நோக்கிய பார்வை அவற்றை தடுக்கிறது ,உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் .

வணக்கம் என்னை அறிந்திருக்கிறீர்கள்  என்னைப் பற்றியும்  அறிந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியே.  நான் இந்த கட்டுரையை எழுத புலனாய்வு எல்லாம் செய்ய வேண்டிய தேவை இல்லை அனைத்து  தரப்பும் நண்பர்கள் உள்ளனர்.  இதற்காகவெல்லாம் மண்டையை போட்டு குளப்ப  தேவையில்லை  நீங்கள் நாலாவது பாகத்தை மட்டும் படித்து விட்டு கருத்து எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் முன்னர் 3 பாகம் வெளியாகி இருக்கின்னறது அதனையும் படித்து விட்டு உங்கள் கேள்விகளை  முன் வையுங்கள் அல்லது தனியகவும் தொடர்பு கொள்ளலாம். என்னை அறிந்தவர்  என்னுடைய கட்டுரையை  பற்றி அறியாதது  துரதிஸ்ரம்.

சாத்திரியின் தொடரை நானும் வாசித்து வருகின்றேன். இதுபற்றி விமர்சனம் ஏதும் கூறுவதற்கு விரும்பவில்லை. தாயகமாயினும் சரி, வெளிநாடாயினும் சரி தமிழ்மக்கள் அனைவருக்கும் நல்லதொரு நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இதுவரைபட்ட துன்பங்களும், இழப்புக்களும், அல்லல்களும் போதும். ஓர் கெட்டகனவாக நாம் பட்ட அவலங்கள் எமது தலைமுறையுடன் நீங்கட்டும். நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வில் சாதிக்கவேண்டிய ஏராளம் விடயங்கள் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வில் தன்னிறைவுபெற்று பிரகாசிக்கும்போது எம்சார்ந்த சமூகமும் பிரகாசம் பெறும்.

 

ஓர் தமிழ்ப்படத்தில் வந்த அர்த்தம் உள்ள பாடல் வரிகள். அர்த்தங்கள் நிறைந்தது:

 

விதியை நினைப்பவன் ஏமாளி  - அதை

வென்று முடிப்பவன் அறிவாளி!

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு?

பூப்பறிக்க கோடரி எதற்கு?

பொன்னோ, பொருளோ போர்க்களம் எதற்கு?

ஆசை துறந்தால் அகிலம் உனக்கு!

 

மேலுள்ள வரிகளே இப்போது நினைவில் வந்து செல்கின்றன. நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ...... அப்போ இந்த பாடலை பாடிய இந்தியாவில் எதுக்கு இராணுவம் ஆயுத்தப்படை எல்லாத்தையும் கலைச்சிடுவமா?

  • கருத்துக்கள உறவுகள்

அவளவும் உணர்ச்சி சார் உணர்ச்சி புரிஞ்சுகோங்க அடி மனசில இன்னமும் வலி இருக்கு சார் 60 ஆயிரம் இளஞர்களா கொடுத்திருக்கம் 100 ஆயிரத்துக்கு மேல மக்கள் 1000 கணக்கான கோடி பெறுமதியான சொத்துகள் எப்பிடி சார் எப்பிடி உங்களால மட்டும் இப்பிடி

சொல்ல மனசு வருது கெட்ட கனவா மறந்திட சொல்லி?

இந்த தொடரில் சம்மந்தப்படும் தனிநபர்கள் பிரிவுகள் அமைப்புகளூடாக தாயகத்தில் உள்ள மக்களுக்கு எவ்வித பயனும் எக்காலத்திலும் ஏற்பட மாட்டாது. இவர்கள் ஒன்றுபடுவது இல்லை என்னும் நாலாய் பிரிவது என்பவற்றுக்கான முக்கியத்துவம் இனி இல்லை. இனிமேல் கணக்கு கேட்பது காசு எங்கே என்று கேட்பது இருக்கும் காசை தாயக மக்களுக்கு கொடு என்று சொல்வது போன்றவற்றில் அர்த்தமில்லை. இவர்களை ஒட்டுமொத்தமாக தலைமுழுகி புதியதொரு வழியை தேடவேண்டியதுதான். தாயகத்தின் மீது பற்றுள்ள மக்கள் அந்த பற்றை இவ்வாறான பிரிவுகளூடாக விணாக்குவதை இந்த தொடர் தடுக்க உதவுகின்றது. இத்தொடரல் ஏற்படும் புரிந்துணர்வானது ஒரு ஆரோக்கியமான பாதைக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இவற்றை எல்லாம் எழுதக் கூடாது என்று சிலர் குத்திமுறிவதற்கு பின்னால் எந்த நேர்மையும் இல்லை. வியாபார லாப நோக்கங்களை கொண்டிராத அதன் பின்னணியை கொண்டிராத தேசீயத்தை தமது சுய அடயாளத்தை நிலைநாட்ட பாவிக்காமல் உண்மையாக தாயகத்தையும் மக்களையும் மாவீர்களையும் நேசிக்கும் ஒவ்வொரு சாதராண மனிதனும் இந்த உண்மைகளை அறிந்திருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக தமிழனுக்கு நடந்தத எல்லாம் மறந்திட முடியுமா? கனவா நினைச்சு? மனுஷன் எண்டா கொஞ்சமாச்சும் உணர்ச்சி இருக்கணும் சாரே

அதுக்காக தமிழனுக்கு நடந்தத எல்லாம் மறந்திட முடியுமா? கனவா நினைச்சு? மனுஷன் எண்டா கொஞ்சமாச்சும் உணர்ச்சி இருக்கணும் சாரே

 

ஒன்றுபட முடியாத இந்த சென்மங்களுக்கு மனுசத்தனமும் உணர்சியும் ஒரு கேடா? இவங்கள் இப்படி நாலா பிரிஞ்சு தேசியத்தை குத்தகைக்கு எடுத்து யாவாரப்போட்டி அடயாளப்போட்டி செய்றதாலதான் எல்லாத்தையும் சனங்கள் மறக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். நூற்றுக்கு தொண்ணுற்றெட்டு வீதம் எங்களுக்குள் நடக்கும் கோமாளித்தனங்களை பற்றியே கதைத்து வாக்குவாதப்பட்டுகிடக்கின்றம் எங்க சிங்களவனுக்கு எதிரா கதைக்கிறது. முதல்ல இந்த அருவருப்பான நிலை மாறவேணுமென்றால் இந்த கூட்டத்துக்கு ஒரு முழுக்கு போடுவது அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூட்டத்துக்கு முழுக்கு போட்டா அடுத்து யார் என்று வருகின்றதல்லவா? அது இன்னும் வெற்றிடமாவே இருக்கே?

யாரையும் வர விடாமல் இன்றைக்கு தடுத்துக் கொண்டிருப்பது அனைத்துலகச் செயலகமே. இவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படும் வரை புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகராது. இன்றைக்கு ஒட்டுக் குழுக்கள், துரோகக் குழுக்கள் என்று வர்ணிக்கப்படும் அனைவரையும் விட அதிகமான பாதிப்பை உருவாக்கியவர்கள் இந்த அனைத்துலகச் செயலகத்தினர். காற்று என்றாலும் வந்து இடத்தை நிரப்பட்டும். இவர்கள் வேண்டாம்.

தமிழரசன் போன்றோர்கள் ஒருத்தருடனும்  கதைக்க வேண்டிய தேவை இல்லை. எமது பொது எதிரிக்கெதிராக நாம் போராடிக்  கொண்டே இருப்போமாக இருந்தால் சுதந்திர விடுதலைப் போராளியாகவே மக்கள் உங்களைப் பார்ப்பார்கள்.  அனைத்துலகத் தொடர்பகத்துடன்  கதைக்க வேண்டிய தேவை இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ பண்ணி முடிங்க எனக்கென்ன.....

பிள்ளையள் எண்டா சொல்வழி கேக்கணும் இப்பிடியே அடம்பிடிச்சிட்டு இருந்தா எப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்

தொடரின் போக்கு பரிதியின் படுகொலை ஒரு உள்வீட்டு சம்பவம் என்பதுபோலப் போகின்றது. பிரான்சில் இப்படுகொலை நடந்ததால் பிரான்ஸ் பொலிஸ் உள்வீட்டு விவகாரங்களைக் கிளறும் கோணத்தில் இவ்விவகாரத்தைக் கையாள்கின்றதா அல்லது முன்னர் நடந்த கொலைகளில் கொலையாளிகளத் தேடாமல் விட்டதுபோன்று சில சம்பிரதாயமான விசாரணைகளுடன் வழக்கை முடிக்கப்போகின்றதா?

 

 

சாத்திரியின் இந்த தொடரை வெறுமன புலம் பெயர் புலிகளின் அமைப்புகளிற்கிடையிலான குத்து வெட்டு பற்றிய கட்டுரையாக மட்டும் பார்க்காமல் எமது சமூகத்தில் இயங்கும் எந்த சமூக அமைப்பென்றாலும் அது தொடங்கிய நோக்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் போது அதை வெளிக்கொண்டு வரவேண்டியது அந்த சமூகத்தில் அக்கறைபடும் ஒவ்வொருவரினதும் கடமையாகும் .

அது விடுதலை இயக்கம் ,அரசியல் கட்சி ,அகதிகள் அமைப்பு ,பழைய மாணவர் அமைப்பு ,ஊர் அமைப்புகள் எதுவாகவும் இருக்கலாம் .பொது அமைப்பு என்று ஆரம்பித்து மக்களிடம் பணத்தை சேர்த்து ஓரிருவர் அதை தமது நலனுக்கு பயன்படுத்த  அனுமதிக்க முடியாது .

இந்த நிலைப்பாட்டில் தான் இந்த கட்டுரையும் பார்க்க படவேண்டுமே அல்லாது சிலர் மீது வேண்டுமென்றே பூசப்படும் சேறாகவோ வெறும் காழ்ப்புணர்வு என்றோ பார்க்க முடியாது .இப்படியாக துணிந்து கருத்துக்கள் எழுதுபவர்கள் எம்மத்தியில் உருவானால் மட்டுமே பல துஸ்பிரயோகங்கள் தடுக்கப்படும் .

மிகவும் உண்மை அர்ஜுன்.  இப்போது இயங்கும் அமைப்புகளாக இருக்கட்டும்.  எதிர்காலத்தில் உருவாக்கம் பெறவிருக்கும் அமைப்புகளாக இருக்கட்டும்.  அவை அனைத்தும் வெளிப்படைத் தன்மையோடு இயங்க வேண்டும்.  அதுமட்டுமின்றிப் பொதுமக்களையும் உள்வாங்கி பொது அமைப்பாக இயங்கினால் மட்டுமே அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்.  மக்களின் ஆதரவின்றி இனி எந்தவொரு அமைப்பும் இயங்க முடியாது.  மக்கள் இப்போது கொஞ்சம் தெளிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்தான்.  இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவு பெறவேண்டுமென்றும் நினைக்கிறேன்.  அதற்கு இவ்வாறான கட்டுரைகள் இன்னும் கொஞ்சக் காலத்திற்கு வந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின், மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் எவ்வகையிலும் மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய அனுமதிக்க கூடாது.

மிகவும் உண்மை அர்ஜுன்.  இப்போது இயங்கும் அமைப்புகளாக இருக்கட்டும்.  எதிர்காலத்தில் உருவாக்கம் பெறவிருக்கும் அமைப்புகளாக இருக்கட்டும்.  அவை அனைத்தும் வெளிப்படைத் தன்மையோடு இயங்க வேண்டும்.  அதுமட்டுமின்றிப் பொதுமக்களையும் உள்வாங்கி பொது அமைப்பாக இயங்கினால் மட்டுமே அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்.  மக்களின் ஆதரவின்றி இனி எந்தவொரு அமைப்பும் இயங்க முடியாது.  மக்கள் இப்போது கொஞ்சம் தெளிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்தான்.  இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவு பெறவேண்டுமென்றும் நினைக்கிறேன்.  அதற்கு இவ்வாறான கட்டுரைகள் இன்னும் கொஞ்சக் காலத்திற்கு வந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

 

 

தமிழச்சிக்கு சனி வக்கிரிக்குது . நீங்கள் உள்ளதை சொல்லிறியள் . உங்களை துரோகி எண்டு சொல்லப்போகினம் .

கோமகன், நான் 2009 - 2011 களிலேயே இவர்களைப் பற்றி யாழ்களத்தில் நிறைய எழுதியிருக்கிறேன்.  அப்போது என் போன்றவர்களைத் துரோகி என்று அழைத்த தேசியவாதிகள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டார்கள் அல்லது தங்கள் கஜானாவை நிரப்பும் வேலைகளில் தீவிரமாகக் கவனம் செலுத்துகிறார்கள்.  2009இல் விளங்காதது இப்போதாவது பலருக்குத் தெளிவடைந்ததையிட்டு மகிழ்ச்சியே.  ஆனாலும், முதலில் குறிப்பிட்டது போல தெளிவடைவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

 

நுணாவிலான், நீங்கள் கூறுவது உண்மையே.  ஆனாலும், இன்னும் அவர்கள்தானே களத்தில் நிற்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள்தானே வேறு வடிவில் வந்து கொண்டிருக்கிறார்கள்.  இதைக் களைவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று கூறமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர், மற்றும் அமைப்பின் பின்னால் ஒருங்கிணைந்து இயங்கிய ஒரு சமூகம், தலைமையின் தொடர்பு இல்லாது போன பிற்பாடு, அந்தக் காலப்பகுதியின் பின்னால் ஏற்பட்ட அழிவுகளாலும் மற்றவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்ற சூழலே இருக்கின்றது. எந்த அமைப்பாயினும், மற்றய புதிதாகத் தொடங்கி வருகின்ற அமைப்பினைச் சிங்கள அரசு இயக்குமா என்ற அச்சம் இருக்கத் தான் செய்யும். இதற்கு அனைத்துலக செயலகம் மட்டுமல்லாமல் அனைத்து அமைப்புக்களுக்கும் பொருந்தவே செய்யும். சாத்திரி போன்ற விளம்பரப் பிரியர்கள் அந்தச் சந்தேகங்களை மேலும், மேலும் ஊதிப் பெரிதாக்கி, குழப்பத்தை உண்டு பண்ணுகின்றார்களோ என அஞ்ச வேண்டியுள்ளது. சாத்திரி மீதான என் எண்ணமும் அந்தச் சந்தேகத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் அதை உருவாக்கியதும் அவரது செயல்களே! மற்றும்படி இந்தக் கட்டுரையாளரும் சரி, கட்டுரையும் சரி நம்பக்கூடிய தன்மையா என்று கேட்டால் அது பூச்சியமே. எனது புரிவின்படி 4 பேரின் பெயரைத் தெரிந்தால் அதை வைத்து எப்படி வார்த்தைகளால் விளையாட முடியும் என்பது தெரியாத ஒன்றல்ல. நண்பர்கள் மூலம் தகவல் அறிந்ததாகச் சொல்பவர் அதை ஆதரப்படுத்தவில்லை. குறித்த சிலரின் படங்களை இணைக்க முடிந்த அவருக்கு, நண்பர்களிடம் இருந்து ஆதாரங்களைப் பதிவு செய்யவா முடியாது போகும்? உலகத்தில் எந்த ஊகமும் ஒரு சம்பவத்தைப் பதிவு செய்யும்போது, கட்டாயம் அச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், செயற்படுத்தியவர்கள் போன்றவர்களின் குறைந்தபட்ச ஆதாரங்களையாவது பதிவு செய்யுது கொள்ளும். ஆனால் கட்டுரையாளர் தான் நேரே அருகில் நின்று பதிவு செய்து போடுவது போலக் கட்டுரை. என்னத்தைச் சொல்ல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கள உறவுகளே இந்தத் திரியை படிக்கும்போது புலம் பெயர்ந்து வாழும் இன்றைய ஈழத் தமிழினத்தின் உண்மை நிலை திரைப்படமாய் கண்களில் விரிகிறது. எது எப்படி இருப்பினும் நுணாவிலான் கூறிய விடயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதை, இப்போது தெளிவடைந்து வரும் எம்மக்களே நடைமுறைப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

 

தமிழச்சி நீங்கள் நுணாவிலானுக்குக் கூறியது போல் மீண்டும் மீண்டும் எழுந்து வருவது அவர்களது வாடிக்கையாகி இருந்தாலும் இவா்களது மாறு வேடங்களையும் மக்கள் அறிவார்கள். அன்று இவர்களால் துரோகிப் பட்டம் சூட்டப் பட்டவர்களைத் தான் “ஏதாவது செய்யமாட்டார்களா? ” என்ற ஏக்கத்துடன் மக்கள் இன்று நோக்குகிறார்கள். 

 

நாம் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தால் மக்கள் நிச்சயம் கைகொடுப்பார்கள் 

புலிகளின், மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் எவ்வகையிலும் மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய அனுமதிக்க கூடாது.

 

 

நுணாவிடம் ஒரு கேள்வி . இந்தப்பதிவில் உங்கள் பார்வை ஒருவிதமாகவும் வேறு ஒருபதிவில் வேறுவிதமாகவும் இருக்கும் மர்மம் என்ன ?? தயவுசெய்து விளக்கமுடியுமா ??

  • கருத்துக்கள உறவுகள்
நுணாவிடம் ஒரு கேள்வி . இந்தப்பதிவில் உங்கள் பார்வை ஒருவிதமாகவும் வேறு ஒருபதிவில் வேறுவிதமாகவும் இருக்கும் மர்மம் என்ன ?? தயவுசெய்து விளக்கமுடியுமா ??

 

 

 
என்ன பார்வை எங்கு வேறு விதமாக எங்குள்ளது என கூறமுடியுமா??
 
மேலுள்ள சாத்திரியாரின் 4 கட்டுரைகளில்  தொடர்புள்ளவர்கள் மக்களின், புலிகளின் பணத்தை சூறையாடியவர்களும் இருக்கிறார்கள். அவர்களை குறித்தே சொன்னேன்.

 
என்ன பார்வை எங்கு வேறு விதமாக எங்குள்ளது என கூறமுடியுமா??
 
மேலுள்ள சாத்திரியாரின் 4 கட்டுரைகளில்  தொடர்புள்ளவர்கள் மக்களின், புலிகளின் பணத்தை சூறையாடியவர்களும் இருக்கிறார்கள். அவர்களை குறித்தே சொன்னேன்.

 

 

வணக்கம் நுணா . உங்களில் நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் . ஆம்.............  என்னால் ஆதாரம் தரமுடியும் .  நீங்கள் " கள்ள ஆடும் பங்கு இறைச்சியும் " கவிதைக்கு விருப்ப வாக்கு இட்டு , அதில் கருத்து இலக்கம் 12 ல் பின்வருமாறு கூறுகின்றீர்கள் <  பல புற்றீசல்கள் வெளிவந்துள்ளன என்பது மட்டும் தெரிகிறது. பார்க்கலாம் > . அந்த கவிதை யாரை குறிவைத்து என்ன காரணத்துக்காக எழுதப்பட்டிருக்கின்றது என்பது யாழில் பார்க்கும் சிறுபிள்ளைக்கும் தெரிந்தவிடையம் . இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக இதற்கு பதில் அளிக்கமுடியாதவர்கள் அல்லது நேர்மையான விமர்சனம் வைக்க முடியாதவர்களின் வசைபாடல்களுக்கு , ஏன் யாருக்கு எதற்கு எழுதப்பட்டிருக்கு என்று தெரிந்துகொன்டே அங்கு ஆதரித்து எழுதிவிட்டு இங்கு அப்படியே வந்து இந்த கட்டுரை ஆசிரியரைத் திருப்திப்படுத்த  அப்படியே பிளேட்டை மாற்றி போட்டிருக்கிறீர்கள். ஏன் இங்கு ஒரு முகம் ?? அங்கு ஒரு முகம்??  எது எப்படியோ பொதுவாக இங்கு நீங்கள் மட்டுமல்ல உங்கள் வரிசையில்  இன்னும் பலர் இருக்கின்றார்கள் .  இந்தக்கட்டுரை ஆசிரியருக்கு ஒரு முகமும் அதே கருத்துக்களை காவிவரும் மாற்றுக் கருத்தாளர்களுக்கு இன்னொருமுகமும் உங்களைப் போன்றோர் ஏன் காட்டுகின்றீர்கள்  ??  நான் எப்பொழுதும் ஒரே கருத்திலேயே இருக்கிறேன். இருப்பேன்.

பி கு இது களவிதிகளுக்கு மீறிய கருத்தானால் நீக்கிவிடப் பரிந்துரை செய்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ பண்ணி முடிங்க எனக்கென்ன.....

பிள்ளையள் எண்டா சொல்வழி கேக்கணும் இப்பிடியே அடம்பிடிச்சிட்டு இருந்தா எப்பிடி

அதற்காக பிள்ளையை நடுத்தெருவில விட முடியாது.அடம் பிடிக்கிற பிள்ளையை நல்வழிப்படுத்துவதுதான் ஒரு அப்பனுக்கு அழகு :D ஒரு கருத்தாளனுக்கு கிடைக்கும் வெற்றியும் கூட...:D

அதற்காக பிள்ளையை நடுத்தெருவில விட முடியாது.அடம் பிடிக்கிற பிள்ளையை நல்வழிப்படுத்துவதுதான் ஒரு அப்பனுக்கு அழகு :D ஒரு கருத்தாளனுக்கு கிடைக்கும் வெற்றியும் கூட... :D

தேனகம் ,மீனகம் ,அது இது என்று பலதரப்பட்ட இணையங்களும் ,கருத்துக்களும் .கட்டுரைகளும் தாண்டவக்கூத்தடியது ,ஆடுகிறது .அன்றுதொட்டு இன்றுவரை , ஆனால் மக்கள் மட்டும் ஒரே பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் அசைக்க முடியாத பாதையில். அன்றுதொட்டு இன்றுவரை ,அந்த வகையில் இந்தக்கட்டுரை கூட யாரையும் ஒன்றும் செய்யமுடியாமல் உள்ளது .குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர .அதாவது 2000 ஆண்டிலிருந்து புலி வாந்தி எடுத்தவர்களைத்தவிர ,ஆனால் இந்தக்கட்டுரையின் ஆசிரியர் விதி விலக்கு .ஏனனில் இந்த கட்டுரை ஆசிரியர் யார் எவர் ஏன் என்ற கேள்விக்கப்பால் உங்களை அவர் தேடுகிறார் .அவரை எனக்கு நன்றாய் தெரியும் என்றபடியால் இதை எழுத எனக்கு உரிமை உள்ளது .அவரது நண்பர்கள் யாருமல்ல விடுதலையை தேடுபவர்கள் .இன்றுவரை செயல்பட்டிகொண்டிருப்பவர்கள் .தமிழீழ விடுதலை இலட்சியத்தின் இரகசியத்தை விற்காதவர்கள் .அவர்களே இவரது நண்பராய் இருக்கும்போது ,அன்று மதிப்புக்குரிய எனது மாண்புமிகு பொட்டம்மான் அவர்கள் கூறியது இன்று நாம் நினைவு செய்யும் மாண்புமிகு சாள்ஸ் அவர்கள் தமிழீழத்திற்கு வெளியே நின்று தமிழீழ போராட்டத்தை வளர்த்த ,உறுதுணையாய் நின்ற ஒரு புலனாய்வு போராளி .இன்று விநாயகம் என்னும் பெயரில் உலாவரும் இந்த நபரை பற்றி என்ன பார்வை இருந்தது என்று இந்த ஆசிரியருக்கு தெரியும் .அதையும் இவர் இங்கு தெளிவுபட கூற முன்வந்தால் உண்மைகள் வெளிப்படும் .ஆனால் அதை உண்மையாய் கூற இந்த கட்டுரை ஆசிரியரால் முடியும் .கூறுவாரா? கூறினால் ,செயல்பட்டால் .அது இவர் எந்த நோக்கத்திற்காய் இந்த கட்டுரையை எழுத நினைத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறும் என்பெது எனது நம்பிக்கை .ஏனனில் .சாள்ஸ் அண்ணாவினால் """"""""""""""""

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.