Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஷ்பு கழுத்தில் பிளாஸ்டிக் தாலி! எழுந்தது புதிய சர்ச்சை!!

Featured Replies

184416_352769211497051_1277667890_n.jpg

 

 

இப்படி ஒரு தாலியைப் பார்த்திருக்கிறீர்களா விஸ்வப்பிரம்ம குலத்தவரே, ராமாயணத்தில் வரும் அரக்ககுலத்தவர் அணியும் தாலி இப்படி நீளமும் அகலமும் எந்தக் கணக்கின் கீழ் வருகிறது? தாலி செய்பவர்களை மட்டுமல்ல தாலியணியும்,பெண்களையும் நமது கலாச்சாரத்தையும்,சீரழிக்கும் இவரது செயலை,வன்மையாகக் கண்டிக்கிறோம்,

தாலியின் பெருமை தாலி அணிந்தவர்களுக்குத்தான் தெரியும்.தாலியையும் சினிமாவாக மாற்றி தாலியின் மகத்துவத்தைக் கேலிக் கூத்தாக்கி புது இலக்கணம் வகுத்த நடிகை தாலி, அணியும் பெண்களின் பெருமையை ஒரு அபசகுனமாகக் கருதி தாலியை ருத்திராட்சத்தில் இணைத்து முழு இந்துக்கழும் இந்துக்களின் சமயக் கோட்பாட்டையும் சிதைப்பதற்கு எடுத்துள்ள முடிவை முழு இந்துக்களும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும்,

இது வெறும் விளையாட்டு இல்லை இவரைவைத்து கோமாளிகாட்டும் தொலைக் காட்ச்சிகள் இதை ஏன் அனுமதித்தார்கள் அவர்களும் இதை அனுமதித்தார்களா.சில நேரங்களில் இவர் பேசன் எனும் பேரில் அம்மணமாகக் கூட வரலாம் அதையும் நீங்கள் அனுமதிப்பீர்களா. இப்படிச் சமூகத்தின் ஒழுக்க நெறியை சிதைக்கும் இப்படிப்பட்ட சமூக விரோதிகளை மக்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும்,

குஷ்பு கழுத்தில் பிளாஸ்டிக் தாலி! எழுந்தது புதிய சர்ச்சை!!

Kushboo in new controversyபேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து நடிகை குஷ்பு அணிந்திருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவரும், டைரக்டர் கம் நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம். குஷ்புவின் அவ்னி சி‌னிமேக்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ‌நடந்தது. இந்த‌ விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின், கனி‌மொழி எம்.பி., அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தாலும்... அனைவரையும் கவர்ந்திழுத்தது நடிகை குஷ்புவும் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும்தான்.

ருத்திராட்ச மா‌லையில் பிளாஸ்டிக் தாலியை ‌கோர்த்து அணிந்திருந்தார் குஷ்பு. பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது. இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.

இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்றதும் நினைவிருக்கலாம்.

 

நன்றி முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன இவ்வளவு பெரிய தாலி.

மாட்டுக்கு கட்டுவது மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
இது என்ன இவ்வளவு பெரிய தாலி.

மாட்டுக்கு கட்டுவது மாதிரி

 

 

யாரும் ஆட்கள் கட்டவில்லைதானே ??
உங்களுடைய கேள்வி புரியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

அவவின் பிரச்சினை அவவுக்கு.. :rolleyes: உங்களுக்கு இப்ப பெரிய தாலிதானே தெரியுது? :D

அவவின் பிரச்சினை அவவுக்கு.. :rolleyes: உங்களுக்கு இப்ப பெரிய தாலிதானே தெரியுது? :D

 

எனக்கும் அதே கவலைதான் :(

  • கருத்துக்கள உறவுகள்

,இது வெறும் விளையாட்டு இல்லை இவரைவைத்து கோமாளிகாட்டும் தொலைக் காட்ச்சிகள் இதை ஏன் அனுமதித்தார்கள் அவர்களும் இதை அனுமதித்தார்களா.சில நேரங்களில் இவர் பேசன் எனும் பேரில் அம்மணமாகக் கூட வரலாம் அதையும் நீங்கள் அனுமதிப்பீர்களா. இப்படிச் சமூகத்தின் ஒழுக்க நெறியை சிதைக்கும் இப்படிப்பட்ட சமூக விரோதிகளை மக்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும்,

 

நன்றி முகநூல்

 

குஸ்புவின் மீதான காழ்ப்புணர்வினால்  இது எழுதப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

நாகரிக உலகில் எல்லாமே மாறும்போது தாலி மாறுவதில் என்ன பிரச்சினை?

 

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு தனிமனிதனின் சுயஉரிமையில் தலையிடுவது

தமிழர்களுக்கே உரித்தான பண்பாடு

இது என்ன இவ்வளவு பெரிய தாலி.

மாட்டுக்கு கட்டுவது மாதிரி

 

திமுக காரன்களுக்கு வடிவாக கண்ணில் தெரிவதற்க்காக கட்டி இருப்பா?

 முதல்முறை போல இந்த முறையும் கைவிட்டு போகாமல் இருக்கட்டும் என்று மொத்த்மாக போட்டு இருப்பா?

வேலை வெட்டி இல்லாம பிரசாந்த் வேற பக்கத்தில நடுவராக இருக்கார் ரம்யா கிஷ்னன்னின் ஆசை குஷ்ப்புக்கும் வராது என்று என்ன நிச்சையம்? அதை மறைக்கவும் போட்டு இருக்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வாழ்வில் தாலி முன்பு இருந்ததில்லை. அதற்கு சிலப்பதிகாரமே சாட்சி. கோமகன் உப்பிடியான விடயத்தை எடுத்துப் போடாமல் விட்டாலே பல பேருக்குப் பரவாது உந்த விடயம். :D

  • கருத்துக்கள உறவுகள்
ரொமéப முகéகியம

 

 

 

குஸ்பு  தான் தற்பொழுதைய தமிழ் கலாச்சாரத்தின் வழிகாட்டி என்று ஆனபின் இப்படி ஆயிரம் வரும்.  அவர் என்ன  போட்டாலும் என்ன  சொன்னாலும் வேதவாக்கு சிலருக்கு.  நடக்கட்டும் நடக்கட்டும்.

  • தொடங்கியவர்
தமிழர்கள் வாழ்வில் தாலி முன்பு இருந்ததில்லை. அதற்கு சிலப்பதிகாரமே சாட்சி. கோமகன் உப்பிடியான விடயத்தை எடுத்துப் போடாமல் விட்டாலே பல பேருக்குப் பரவாது உந்த விடயம். :D

 

இப்ப என்ன சொல்லுறியள்  :o  ?? குஸ்பு என்ன குஸ்புவின்ர இடத்திலை ஆரும் இருந்து உந்த கோமளிவேலையள் செய்தால் அது சூப்பர் மொக்கையாப் போய் மீடியா சூடேறும்  :lol:  :D:icon_idea: . மற்றது குஸ்பு என்ன 70 எண்பது பவுனிலையே தாலி போட்டவா :icon_mrgreen: :icon_mrgreen: ?

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இந்த சப்பை மாற்றர் வெளிவந்து வருசக் கணக்காகுது. இப்ப ஏன் இதனை யாழுக்க போட்டு யாழைக் குழப்பி அடிக்கிறாங்க. குஷ்புட சைசுகளைப் பற்றி அவ புருசனே  கவலைப்படாத போது... யாழுக்கு நேரம் சரியில்ல..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தமிழக முதல்வர் திருமதி மன்னிக்கவும் செல்வி குஸ்பு வாழ்க! வருங்கால அம்மா வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்கள் வாழ்வில் தாலி முன்பு இருந்ததில்லை. அதற்கு சிலப்பதிகாரமே சாட்சி. கோமகன் உப்பிடியான விடயத்தை எடுத்துப் போடாமல் விட்டாலே பல பேருக்குப் பரவாது உந்த விடயம். :D

 

முன்பு இருக்கவில்லை என்று பார்த்தால்.........................

 
ஆடையும்தான் இருக்கவில்லை.
அதற்காக இப்போ ஆடைகளை கழட்டி  எறியலாமா?
 
அந்த பிள்ளைக்கு என்ன கஷ்டமோ? பிளாஸ்டிக்கில் என்றாலும் கட்டியிருக்குதே.
 என்று இவர்கள் வேண்டுமானால் அதை அப்படியே அவரது கழுத்திலேயே விட்டு விடலாம்.
  • தொடங்கியவர்
அடப்பாவிகளா இந்த சப்பை மாற்றர் வெளிவந்து வருசக் கணக்காகுது. இப்ப ஏன் இதனை யாழுக்க போட்டு யாழைக் குழப்பி அடிக்கிறாங்க. குஷ்புட சைசுகளைப் பற்றி அவ புருசனே  கவலைப்படாத போது... யாழுக்கு நேரம் சரியில்ல..! :lol::D

 

இதாலை யாழ் குழம்பாது . இதைவிட பெரிய குழப்பங்களுக்கே யாழ் குழம்பேலை . குஸ்புவின்ரை அவருக்கு எங்கை நேரம் இதுகளை பத்தி கவலைப்பட ?  அவாவின்ரை அடியாருகள் தான் கவலைப்படவேணும் :icon_mrgreen:  :lol: .

  • தொடங்கியவர்

முன்பு இருக்கவில்லை என்று பார்த்தால்.........................

 
ஆடையும்தான் இருக்கவில்லை.
அதற்காக இப்போ ஆடைகளை கழட்டி  எறியலாமா?
 
அந்த பிள்ளைக்கு என்ன கஷ்டமோ? பிளாஸ்டிக்கில் என்றாலும் கட்டியிருக்குதே.
 என்று இவர்கள் வேண்டுமானால் அதை அப்படியே அவரது கழுத்திலேயே விட்டு விடலாம்.

 

அதுதானே.............  உதென்ன கதை சுமே :lol: :lol: ???

  • தொடங்கியவர்
வருங்கால தமிழக முதல்வர் திருமதி மன்னிக்கவும் செல்வி குஸ்பு வாழ்க! வருங்கால அம்மா வாழ்க!

 

ஏன் முடியாது  ?? நடக்காது என்று இருந்தால் அன்றைய செல்வி இன்றைய முதல்வர் ஆகியிருப்பாரா ??

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் முடியாது  ?? நடக்காது என்று இருந்தால் அன்றைய செல்வி இன்றைய முதல்வர் ஆகியிருப்பாரா ??

 

இலட்சியங்கள் ஆசைகள் எந்த வயதிலும் வரலாம்.. ஆனால் முப்பதுக்குள் அதற்கான அடித்தளத்தைப் போட்டுச் செயற்படுத்தாவிட்டால் அநேகமாக நிறைவேற மாட்டா..

 

அதற்காக நீங்கள் ஆசைகளையும் கனவு காண்பதையும் விட்டுவிடாதீர்கள்.. <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.