Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நகைச்சுவை – அறிவாயுத்தால் போராடுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20130108-115239.jpg

அறிவாயுதத்தை பெற்றுக்கொண்டு படிப்பதற்காக போராடுங்கள். அரசியல் உரிமை முதற்கொண்டு, கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடி பெற்று தர தயாராக இருக்கின்றேன் என

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டால்இ தடுத்து வைக்கப்பட்டுள்ள சக மாணவர்களின் விடுதலை தொடர்பில் ஐனாதிபதியுடன் பேசி முவெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதம் பின்வருமாறு

நான் உங்களிடமிருந்து எதுவித சொந்த தேவைகளையோ அன்றி அரசியல் தேவைகளையோ எதிர்பார்க்கவில்லை. உங்கள் தாய் தந்தையர்கள் உங்களுக்கு வழங்கும் அறிவுரைகள் போலவே எனது கருத்துக்களையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன். கற்றவர்களாகிய உங்களுக்கு அறிவுரைகள் தேவையில்லை. உங்கள் நலன் கருதி சில வழிமுறைகளையே நான் கூற விரும்புகிறேன். இறந்து போன உறவுகளுக்கு உங்கள் இல்லங்கள் தோறும் அச்சலி செலுத்துவதை நான் தவறு என்று கூறவில்லை.

ஆனாலும், பல்கலைக்கழகத்தினுள் நீங்கள் அஞ்சலி செலுத்துவதையும், அதனால் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் வைத்து சுயலாப அரசியல் நடத்துவதற்கு சிலர் காத்திருக்கிறார்கள். இதை வைத்து எமது வாழ்விடங்கள் தோறும் மறுபடியும் வன்முறைகளை தூண்டி விடுவதே அவர்களது கபட நோக்கம். மறுபடியும் ஒரு வன்முறை சூழலுக்குள் உங்களை இழுத்து வர நினைப்பவர்களின் பிள்ளைகளும்இ குடும்பத்தவர்களும் உலக நாடுகளில் உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள்.

வன்முறைகளை எமது மண்ணில் தூண்டிவிட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள். வன்முறைகளின் வலிகளையும்இ வதைகளையும் தாங்கி நிற்கவேண்டியவர்கள் நீங்களும் அப்பாவி மக்களுமே. இதுதான் கடந்த காலங்களிலும் இங்கு நடந்து முடிந்திருக்கிறது.

வன்முறைகளை தூண்டுவோரும், அவர்களது குடும்பத்தவர்களும் வன்முறைகளின் வலிகளை ஒருபோதும் அனுபவித்தவர்கள் அல்ல. இன்று அமைதி தரும் சூழல் ஒன்று உருவாகியிருக்கிறது. இதற்காக எமது தமிழ் பேசும் சமூகமும் அதிக விலை கொடுத்திருக்கிறது. இந்த சூழலை பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கும் உரியது. அழிவாயுதங்கள் எமது உறவுகளை வதைத்தது போதும். நான் சொல்லும் அறிவாயுதத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். படிப்பதற்காக போராடுங்கள். அரசியல் உரிமை முதற்கொண்டு நீங்கள் கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடி பெற்று தர நான் தயாராக இருக்கின்றேன். அதற்காக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டும் என்றோ மறுபடியும் இங்கு இரத்தம் சிந்த வேண்டும் என்றோ நான் விரும்பவில்லை.

வியர்வை சிந்த விரும்பினால் மட்டும் வாருங்கள் வரவேற்போம். உங்களை பெற்று வளர்த்து அழிவு யுத்தத்தின் மத்தியிலும் பல்கலைகழகம் அனுப்பிய உங்கள் தாய் தந்தையரின் கனவுகளை நிறைவேற்றுங்கள். படியுங்கள்… பட்டம் பெறுங்கள்,.. கல்விமான்களாக நிமிருங்கள்.

அதற்காக அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று நான் கூறவில்லை. உங்கள் மதிநுட்ப சிந்தனையில் மட்டும் விரும்பினால் அரசியலிலும் ஈடுபடுங்கள். எனது அனுபவங்களை அடிப்படையாக கொண்டே இதை உங்களிடம் கூறுகின்றேன். நீங்கள் நல்லதொரு சமிஞ்ஞை தந்தால் உங்களது சக மாணவர்களின் விடுதலைக்காக நான் ஐனாதிபதியுடன் பேசி முவெடுக்கவும் தயாராக இருக்கிறேன். கல்வியை தொடர முன்வாருங்கள்.

http://tamil24news.com/news/?p=38639

  • Replies 66
  • Views 3.8k
  • Created
  • Last Reply
வன்முறைகளை எமது மண்ணில் தூண்டிவிட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள்.

ஈழத்து M.G.R. அதை சென்னையில் செய்துவிட்டு இலங்கைக்கு போய்விடுங்கள் என்கிறார்.

நாலுவயது குழந்தைக்கு என்னாச்சு என்று சொல்லட்டும் முதலில்.  இது மட்டும்தான் முதலும் அல்ல.

வியர்வை சிந்த விரும்பினால் மட்டும் வாருங்கள் வரவேற்போம். உங்களை பெற்று வளர்த்து அழிவு யுத்தத்தின் மத்தியிலும் பல்கலைகழகம் அனுப்பிய உங்கள் தாய் தந்தையரின் கனவுகளை நிறைவேற்றுங்கள். படியுங்கள்… பட்டம் பெறுங்கள்,.. கல்விமான்களாக நிமிருங்கள்.

பின்னர் எனக்கு கீழே வேலைக்கு அமருங்கள் இல்லை

தொழிசெய்து எனக்கு கப்பம் தாருங்கள் இல்லை

நாட்டை விட்டு வெளியேறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
வன்முறைகளை எமது மண்ணில் தூண்டிவிட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள். வன்முறைகளின் வலிகளையும்இ வதைகளையும் தாங்கி நிற்கவேண்டியவர்கள் நீங்களும் அப்பாவி மக்களுமே. இதுதான் கடந்த காலங்களிலும் இங்கு நடந்து முடிந்திருக்கிறது.

வன்முறைகளை தூண்டுவோரும், அவர்களது குடும்பத்தவர்களும் வன்முறைகளின் வலிகளை ஒருபோதும் அனுபவித்தவர்கள் அல்ல.

நிதர்சனமான உண்மை.

போரைச் சுமந்தவர்களும் செத்துமடிந்தவர்களும் அப்பாவி ஏழை எழிய மக்களே.

நாம் வெளிநாடுகளில் பாதுகாப்புடனும் பொருளாதரா வசதியுடனும் இருந்துகொண்டு ஏவல் வேலை செய்து அம் மக்களை கொலைக்களத்தில் தள்ளினோம் என்பதே உண்மை.

கூப்பிடு தூரத்தில் இத்தனையாயிரம் மக்கள் செத்துமடிந்தபோது ஏன் என்று கேட்காத யுனிவர்சிட்டி இத்தனை ஆயிரம் மக்கள் வதைமுகாமில் வதைபட்டபோது ஏன் என்று கேட்காத யுனிவர்சிட்டி திடீர் என்று விளக்கு கொழுத்த வெளிக்கிடுவது யாருக்கான போராட்டம்?

மக்களை விடுதலை செய் என்றொரு அடயாள உண்ணாவிரதம் அமைதிப்போராட்டம் அறவளிப்போராட்டம் என்று எத்தனையோ வழிகள் உரிமைகளை பெறுவதற்கான தார்மீக முனைவுகளாக இருக்கும்போது ஒழிந்து நின்று விளக்கு கொளுத்தவது முன்பின் முரண்பாடானது.

எம்மவர்களுக்கு எந்த நேர்வழியும் காட்டப்படுவதில்லை. மறைத்துவைத்திருந்த புலிக்கொடியை தடால் என்று தூக்கிப்பிடிப்பது கிரிக்கட் மைதானத்தில் தடால் என்று புலிக்கொடியை தூக்கிக்கொண்டு ஓடுவது மறைந்து இருந்து மாணவிகள் விடுதியில் விளக்கு கொழுத்துவது என்று பயங்கரவாதம் என்று முட்டுச் சந்தில் முடியும் குறுக்கு வழிகளே காட்டப்படுகின்றது. ஒடுக்குமுறை போர்குற்றங்கள் மனித உரிமை புனர்வாழ்வு அரசியல் கைதிகள் விடுதலை  மீள் குடியேற்றம் என்று எத்தனையோ முனைவுகள் இருந்தும் அவைகளில் இருந்து திட்டமிட்டு கவனம் குறுக்கு வழிகளில் திசை திருப்பப் படுகின்றது.

நான் உங்களிடமிருந்து எதுவித சொந்த தேவைகளையோ அன்றி அரசியல் தேவைகளையோ எதிர்பார்க்கவில்லை. உங்கள் தாய் தந்தையர்கள் உங்களுக்கு வழங்கும் அறிவுரைகள் போலவே எனது கருத்துக்களையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன். கற்றவர்களாகிய உங்களுக்கு அறிவுரைகள் தேவையில்லை. உங்கள் நலன் கருதி சில வழிமுறைகளையே நான் கூற விரும்புகிறேன். இறந்து போன உறவுகளுக்கு உங்கள் இல்லங்கள் தோறும் அச்சலி செலுத்துவதை நான் தவறு என்று கூறவில்லை.

முதலில் அண்மைக்காலங்களில் கொல்லப்பட்ட சிறுமியர்களின் பெற்றோருடன் கதைத்து சம்பந்தப்பட்ட தனது குண்டர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும். பின்னர் அறிவுரைகளை கூறலாம்.

இன்று டக்ளசிற்கு பயந்து ஓடி வந்து கனடாவில் இருக்கும் இரட்ணஜீவன் கூல் வாழ்கின்றாரே.

சிறீதர் தியேட்டரை சண்டித்தனம் விட்டு வைத்திருப்பதால் நாடு திரும்ப முடியாமல் உரிமையாளர் உள்ளாரே.

தாயகம் வரும் பலரிடம் கப்பம் கேட்கிறீர்களே.

கொலைக்குற்றம் சம்பந்தமாக உங்களை இந்தியாவில் தேடுகின்றார்களே.

வன்முறைகளை எமது மண்ணில் தூண்டிவிட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள். வன்முறைகளின் வலிகளையும்இ வதைகளையும் தாங்கி நிற்கவேண்டியவர்கள் நீங்களும் அப்பாவி மக்களுமே. இதுதான் கடந்த காலங்களிலும் இங்கு நடந்து முடிந்திருக்கிறது.

செயலாளர் நாயகம் நாட்டை விட்டு போனால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உண்மைப்புறம்பான வார்த்தை  யாலங்கள்.

மனித உரிமைகளுக்கோ

தனி மனித சுதந்திரங்களுக்கோ

ஏன் ஒரு மனிதராகவோ இருக்கக்கூடாது

சாப்பிட  வாய் திறக்கவும்

நாம்  சொல்லித்தருவதை கேட்கவும் தயாராக இரு.

என்பதை தான் சேவகம் செய்யும் எயமானனுக்கு விசுவாசமாக  சொல்லியுள்ளார்.

அவரது   எயமானனுக்கு விசுவாசமாக  அவர் சொல்வதை வரவேற்பவர்கள்

எனது எயமான மக்களுக்கு நான் இங்கிருந்து எதுவும  சொல்லக்கூடாதாம்

அங்கு தான் ஏதோ உதைக்குது...............???

நிதர்சனமான உண்மை.

போரைச் சுமந்தவர்களும் செத்துமடிந்தவர்களும் அப்பாவி ஏழை எழிய மக்களே.

நாம் வெளிநாடுகளில் பாதுகாப்புடனும் பொருளாதரா வசதியுடனும் இருந்துகொண்டு ஏவல் வேலை செய்து அம் மக்களை கொலைக்களத்தில் தள்ளினோம் என்பதே உண்மை.

கூப்பிடு தூரத்தில் இத்தனையாயிரம் மக்கள் செத்துமடிந்தபோது ஏன் என்று கேட்காத யுனிவர்சிட்டி இத்தனை ஆயிரம் மக்கள் வதைமுகாமில் வதைபட்டபோது ஏன் என்று கேட்காத யுனிவர்சிட்டி திடீர் என்று விளக்கு கொழுத்த வெளிக்கிடுவது யாருக்கான போராட்டம்?

மக்களை விடுதலை செய் என்றொரு அடயாள உண்ணாவிரதம் அமைதிப்போராட்டம் அறவளிப்போராட்டம் என்று எத்தனையோ வழிகள் உரிமைகளை பெறுவதற்கான தார்மீக முனைவுகளாக இருக்கும்போது ஒழிந்து நின்று விளக்கு கொளுத்தவது முன்பின் முரண்பாடானது.

எம்மவர்களுக்கு எந்த நேர்வழியும் காட்டப்படுவதில்லை. மறைத்துவைத்திருந்த புலிக்கொடியை தடால் என்று தூக்கிப்பிடிப்பது கிரிக்கட் மைதானத்தில் தடால் என்று புலிக்கொடியை தூக்கிக்கொண்டு ஓடுவது மறைந்து இருந்து மாணவிகள் விடுதியில் விளக்கு கொழுத்துவது என்று பயங்கரவாதம் என்று முட்டுச் சந்தில் முடியும் குறுக்கு வழிகளே காட்டப்படுகின்றது. ஒடுக்குமுறை போர்குற்றங்கள் மனித உரிமை புனர்வாழ்வு அரசியல் கைதிகள் விடுதலை  மீள் குடியேற்றம் என்று எத்தனையோ முனைவுகள் இருந்தும் அவைகளில் இருந்து திட்டமிட்டு கவனம் குறுக்கு வழிகளில் திசை திருப்பப் படுகின்றது.

விளக்கு கொழுத்துவது இந்து சமயத்தில் மட்டும் அல்ல மேற்கு நாடுகளும் தர்மீக போராட்டம்.

செயலாளர் நாயகம் சுதந்திரக்கட்சி கீதாஞ்சலி விட்ட அறிக்கையை விழுத்தி தான் ஒரு அறிக்கை விட்டு எஜமானர்களை தாயாபடுத்தி அவர்கள் தன்னைக் கழித்துவைப்பதை நிறுத்த தவிக்கிறார்.

ஆனால் யாழில் நடப்பது, வெளியே போனவர்கள் வந்துவிடாமல் தடுக்க கோத்தா போட்ட புதிய திட்டம் செயல்ப்படவேண்டுமாயின் புலம் பெயர் மக்களுக்கும் தாயகமக்களுக்கும் இடையில் ஆப்பு இறுக்க வேண்டும். இதுதான் புதிய முயற்சி.

செயலாளர் நாயகத்தை பொறுத்தளவில் நிதர்சனமான உண்மை. ஒரு வழியில் அல்ல புலம் பெயர் மக்களின் சொத்தை செயலாளர் நாயகம் சூறையாடுகிறார்.  இது மணல் கிண்டும் உத்தியோகம், நீச்சல் தடாகம் கட்டுவதால் வரும் வருமானம், பல்கலைகழகத்தில் தலையிடுவதால் வரும் வருமானம், போரால் வதைப்பட்டு வெளியே போன மக்களின் உடமைகளை திருடுவதால் வரும் வருமானம்.... மற்றவைகள் எல்லவற்றிலும் இருந்து வேறுபட்டது.

கோத்தா அடிச்சு பிடிக்கிறதுகளிடம் விடுதலை வேண்டி தருவதாக பணம் அறவிடுவது போகுது, நாமலுக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப ஆள் பிடிச்சு கொடுக்கிறது போகுது, அந்தரிச்சு கொண்டு விட்டு ஓடினதுகளின் சொத்து பத்தை திருடினால் போகுது(அடபாவி ஸ்ரீதர் தியேட்டரை கூட கொடுக்க மாட்டானாம்), கனடாவில் இருந்து அழைத்து அப்பாவி இளம் பெண்ணை கொலை செய்து சொத்தை திருடும் ஈனக்கூட்டம் இது. தான் இனி உறவுகள் என்று கூறும் நடிகர்களுடன் இருந்து இடிபடத்தேவையில்லை, தனக்கு என்று வாழ ஒரு வழி வருகிறது என்று போனதின் கதை இது. தர்மீகம் பற்றி கதைத்துக்கொண்டு மனித குலம் இதுவரையில் செய்யாத கேவலக்கெட்ட வேலை எல்லம் செய்து உழைகிற்றார்கள்.

தெரிவுக்குழுவுக்கு போனதற்கு சம்பந்தர் சிறைக்கு போக போகிறார். இவர்கள் இங்கே சுத்துமாத்து தர்மீகம் கதைக்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

"--------------அதற்காக அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று நான் கூறவில்லை. உங்கள் மதிநுட்ப சிந்தனையில் மட்டும் விரும்பினால் அரசியலிலும் ஈடுபடுங்கள். எனது அனுபவங்களை அடிப்படையாக கொண்டே இதை உங்களிடம் கூறுகின்றேன். நீங்கள் நல்லதொரு சமிஞ்ஞை தந்தால் உங்களது சக மாணவர்களின் விடுதலைக்காக நான் ஐனாதிபதியுடன் பேசி முவெடுக்கவும் தயாராக இருக்கிறேன். கல்வியை தொடர முன்வாருங்கள்.-------------------------------" சிங்களச் சிறையிலுள்ள தமிழ் மாணவர்களை முதலில் உன் சொந்த முயற்சியால் விடுதலை செய்ய வைத்தபின் மாணவர்களுக்கு நீ இந்த வேண்டுகோளை விட்டிருந்தால் ஒருவேளை பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் மாணவர்களை பகிஸ்கரிப்பு போராட்டத்தை நிறுத்துங்கள் நான் சிறையிலுள்ளவர்களுக்கு (வாதாடி??) விடுதலை பெற்றுத்தருகிறேன் என்று பேரம் பேசுவது கப்பம் கேட்கும் ஒரு மெண்டாலிட்டியாகவே எனக்குப் படுகிறது. இவரும் ஒரு நாளைக்கு புற்றுக்குள் இருந்து வெளியில் வரத்தான் வேண்டும். நாங்களும் உங்களை மறக்க மாட்டோம்.

Edited by vanangaamudi

எங்கட செயலாளர் நாயகம் வாழ்க. 2015 இல் அவர் ஐநா ஆலோசகரா நியமிக்கப் படுவார் வாழ்க அவர் புகழ் வாழ்க அவர் தோழரெல்லாம் 

  • கருத்துக்கள உறவுகள்

இவரே ஆயுதத்தை நம்பித்தான் இன்னும் நடமாடிக்கிட்டு இருக்கிறார்.. வெளிநாடுகளில் தான் முதலீடுகளை செய்துக்கிட்டு இருக்கிறார்.. மக்களின் வாழ்விடங்களை பலாத்காரமாக எடுத்து வைச்சிருக்கிறார்.. தனது வால்பிடிகளை விட்டு சமூகச் சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.. உள்ளூரிலும் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்.. அப்படியாப்பட்டவர்.. பல்கலைக்கழக மாணவர்களை பிடிக்கும் வரை காத்திருந்துவிட்டு.. இப்போ.. சாத்தான் வேதம் ஓதுவது.. சுத்த சந்தர்ப்பவாதம். இது அவருக்கு ஒன்றும் புதிதல்ல.

ஆனால் புதிது என்னென்றால்..அவரின் வெற்றுக் கூச்சலுக்கு நியாயம் கற்பிக்க.. யாழில் அவரின் உரைக்கு விளக்கம் கொடுக்க ஆக்கள் இருக்கிறது தான். ம்ம்.. எங்கட யாழ் களம் அதன் சனநாயக உச்சியை தொட்டு நிற்குது.  ஈபிடிபி ஆயுத சன நாயக ஒட்டுக்குழு கூட இங்கு காட்டிக்கொடுப்பு அரசியல் செய்ய முடியுது. நல்ல முன்னேற்றம். யாழ் வரைக்கும் அதன் சிறீலங்கா சிங்கள பயங்கரவாத அரசு சார்ப்பான.. பிரச்சாரத்தை முன்னெடுக்குது. :icon_idea:

Edited by nedukkalapoovan

எல்லோரையும் நாம் அறிந்து கொள்ள இப்பிடியான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. நாம் யாரையும் நம்ப கூடாது என்று படிப்பதற்கும் எங்கும் துரோகியலும் எதிரிகளும் இருப்பார்கள் என்பதற்கும் இப்பிடியான கருத்துப் பகிர்வே சான்று 

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரின் அறிக்கையை வாசித்த யாழ் கள தோழர்கள் சிலர் செம சந்தோஷத்தில இருப்பினம்

அமைச்சரின் அறிக்கையை வாசித்த யாழ் கள தோழர்கள் சிலர் செம சந்தோஷத்தில இருப்பினம்

உண்மைதான் சுண்டல் முந்தித்தான் சிலர் இப்ப பலர் சந்தோசப் படுவினம் 

அமைச்சரின் அறிக்கையை வாசித்த யாழ் கள தோழர்கள் சிலர் செம சந்தோஷத்தில இருப்பினம்

இருக்காதா பின்ன? இந்தாளே அறிவாயுதம் பற்றிப் பேசியதால் நம்மிடந்தானே அது நிரம்ப இருக்கு. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவாயுத்தால் அவர் போராடித்தான் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுகிறார் ........ அதேபோல் நீங்களும் இருந்தால் அதாவது சூடு சொரணை இன்றி எத்தனை தரம் விறகுகட்டையால் தாக்கினாலும் சிங்களவன் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினாலும் அதையும் எல்லாம் தாங்கிக்கொண்டு இருந்து மக்களுக்கு மத்தியில் கூட்டுஆட்சி மாநிலத்தில் சுய ஆட்சி பெற்று கொடுக்கப்போகின்றராக்கும். 

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் அப்போ நீங்களும் வாழ்ந்தீர்கள் இப்போ இவரும் வாழ்கின்றார் .

டடங்கு டடங்.(பின்னணி இசை )

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் அப்போ நீங்களும் வாழ்ந்தீர்கள் இப்போ இவரும் வாழ்கின்றார் .

டடங்கு டடங்.(பின்னணி இசை )

ஒருவன் தனது இனத்தின் நியாயமான உரிமைகளுக்கு போராடுவது கனவு அல்ல, இறைமையான உரிமை.

வாழ வேறு வழிகள் இருந்தும் தனது இனம் அழிய எதிரிகளுடன் கூட்டு சேர்பவன் - துரோகி.

ஒன்று நல்ல கனவு. மற்றையது கெட்ட கனவு.

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் அப்போ நீங்களும் வாழ்ந்தீர்கள் இப்போ இவரும் வாழ்கின்றார் .

டடங்கு டடங்.(பின்னணி இசை )

சரி உங்களின் சாத்திரத்தை மகிந்தாவுக்கும் சொல்ல முடியுமா? அவரின் எதிர்காலம் எப்படி இருக்கபோகிறது?

அறிவாயுதத்தை பெற்றுக்கொண்டு படிப்பதற்காக போராடுங்கள். அரசியல் உரிமை முதற்கொண்டு, கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடி பெற்று தர தயாராக இருக்கின்றேன் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டால்இ தடுத்து வைக்கப்பட்டுள்ள சக மாணவர்களின் விடுதலை தொடர்பில் ஐனாதிபதியுடன் பேசி முவெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

534658_443663782334956_1411721991_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து  பணம் அணுப்புறம் என்று சொன்னால் காசு வாங்காமால் இது இருக்க போகுதா இதெல்லாம்  ஒரு பைனாஸ் கம்பனிதான்.. அப்படியே வாங்கினாலும் அரிசந்திரன் மாறி அப்படியே ராஜபக்சேவிடம் கொடுக்கபொவது கிடையாது..  அவன் பிழைப்புக்கு அவன் ஆடுகிறான்.. அத்துடன் விடணும்.. நீங்க காசு கொடுத்தால் உங்களுக்காண்டியும் ஆடுவான்.. கிளைமெட்டு செஞ்சி ஆகிறதிற்கு கொஞ்சம் ரைமிங்க் தேவை படும்.. ஆனால் இந்த இது ஒன்சு மாறி போட்டு என்றால்.. மறுபடியும் சிங்களம் சப்போர்ட் பண்ண போவது கிடையா..

டிஸ்கி:

நமக்குள்ள ஆயிரம் துரோகிகளை உருவாக்க அவர்களால் முடியுதப்பா.. இருக்கட்டும்...

துரோகிக்ளையும் .. டக்க்ளசுகளையும் .. எட்டப்பர்களையும் சிங்களத்தால் மட்டுந்தான் உருவாக்க முடியுமா.. ?

"துரோகிளை உருவாக்குதுதல் எப்படி?" ஸ்பெசல் கோர்ஸ் படித்து வந்து போட்டார்களா..? உள்ளாற விட்டு குழப்பினால் சிங்களத்தை  நம்மாளும் நாறடிகக முடியும்.. அந்த விடயத்தை மட்டும் யாரும் ஏனோ சிந்திப்பதே கிடையாது..

  • கருத்துக்கள உறவுகள்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் அப்போ நீங்களும் வாழ்ந்தீர்கள் இப்போ இவரும் வாழ்கின்றார் .

டடங்கு டடங்.(பின்னணி இசை )

நீங்களும் நாளைக்கு ஒருநாள் சாக போரவர்தானே...............

இன்றைக்கே போய்  ஆத்தில விழலாமே ?
 
மக்களின் விடிவு பற்றி விண்ணாணம் எழுதுற நேரங்களில். எதை ஏன் எழுதுவதில்லை?
இதை எழுதிபோட்டு பேசாமல் போகலாமே?
தனக்கு தானே சேறு பூசுறது என்று இதுவரைக்கும்  கேள்வி பட்டிருக்கிறேன்.....

துரோகி எண்டாலும் களத்தில ஆனால் போல் த்மிழ்த்தேசியம் புலத்தில போராடுவோம் :D:lol:

துரோகி எண்டாலும் களத்தில ஆனால் போல் த்மிழ்த்தேசியம் புலத்தில போராடுவோம் :D:lol:

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நல்லது :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

தேசியவாதிகளை  தாக்குகின்றோம் என  வெளிக்கிட்டு மாமாவுக்கு வக்காலத்து வாங்கும் நிலையில் வந்து நிற்கிறார்கள்.

இது தான் நிஐம்.

இது தான் நிலை.

வேறு ஒரு அடியேனும் இலட்சியப்பாதையில் முன்னேற முடியாது இவர்களால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.