Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏன் தான் இப்படி நடக்குதோ தெரியேல்லை.

Featured Replies

இப்ப கொஞ்ச நாளா எனக்கு ஒரு பிரச்சினை. நான் வடிவால் பந்தி பிரிஞ்சு எழுதிப் போட்டு இங்கை கொண்டு வந்து போட்டால் எல்லாம் ஒரே குண்டக்க மண்டக்கவா அரியண்டமா வந்து நிக்குது. கீழை திருத்திற அழுத்தியையோ பச்சைகளைப் பாக்கிற இடத்தையோ காணேல்லை. ஆராவது ச+னியம் கீனியம் வைச்சிட்டினமோ. அல்லது ஆரின்ரையாவது கண்ணூறு பட்டிட்டுதோ தெரியேல்லை. ஆராவது விசயம் தெரிஞ:ச ஆக்கள் வந்து சொல்லுங்கோ பிள்ளையள்....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரே குண்டக்க மண்டக்கவா அரியண்டமா வந்து நிக்குது.

சொன்னால் கோபிக்கக்கூடாது

இப்ப நீங்க எழுதுகின்ற எல்லாவிடயமுமே அப்படித்தானே இருக்கு........ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் முடிவதில்லை – 12

அப்பணிப்பெண் என் கண்களில் தடுமாற்றத்தையும் கலவரத்தையும் கவனித்திருப்பாள்போல்… ஒரு வில்லத்தனமான தந்திரம் மிக்கச் சிரிப்புடன் ஒரு கிளாசில் அவள் ஏதோ தேன் கலந்த ஒரு மதுபானத்தை ஊற்றி வெறுமனே தந்தாள்… எடுத்த காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும்….. அவளிடம் தோல்வியைத் தழுவ மனம் இடங்கொடுக்கவில்லை. அவள் தந்ததை அப்படியே வாங்கி ஏற்கனவே மதுவில் பரிச்சயம் உள்ளவள்போல் காட்டிக் கொண்டு ஒரே கவிழ்ப்பில் வாய்க்குள் நிறைத்துக் கொண்டேன். வாய்க்குள் நிறைந்த மது தனது வேலையை உடனேயே காட்ட ஆரம்பித்தது. வாய்க்குள் நிறைந்த மதுவின் ஒரு வித காரமான நெடி நாசியூடாக மண்டைப்பரப்பை வேகமாக ஆக்கிரமித்து புகைச்சலை உருவாக்கியது. அடிவயிற்றிலிருந்து குமட்டல் எழுந்து அவதிப்படுத்திக் கொண்டிருக்க பணிப்பெண் என்னை மிகவும் இரசிப்பது தெரிந்தது. சே வீம்புக்கு தேவையில்லா சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு ஒரே மடக்கில் கச்சல் வேப்பெண்ணெயை விழுங்குவதுபோல் விழுங்கித் தள்ள மண்டைப் புகைச்சலும், வயிற்றிலிருந்து எழுந்த குமட்டலும் உள்ளே போன மதுவை அதைவிட வேகமாக வெளியே அனுப்பி வைத்தது.

சிதறி விழுந்த மதுவை மொப் தடியை எடுத்து சுத்தஞ்செய்து கொண்டே உனக்குப் பழக்கமில்லையா என்று கேட்டாள் பணிப்பெண்……. இப்போது தன்னும் உண்மையை ஒத்துக் கொள்ளலாம்தானே.. ஊகூம் இவளிடம் எப்படி?... அப்போதுதான் ஞாபகம் வந்தது எல்லோருமே மதுபானத்தில் சோடா அல்லது பனிக்கட்டி இல்லது தண்ணீர் கலந்தல்லவா அருந்துவார்கள். நான் அப்படியே வாயில் கொட்டியதால்தான் இப்படியாகி இருக்கவேண்டும்…… கைகொடுத்த ஞாபகத்தை உபயோகித்து நீ எனக்கு சோடா கலக்காமல் தந்துவிட்டாய் அதனால்தான் இப்படி என்று விட்டு இப்போது எனக்கு சுவை பார்க்கத் தந்ததை எனக்கு விட்டுத் தா நான் அறைக்குச் செல்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன்.

வாயில் ஏற்கனவே கொப்பளித்த மதுவின் நெடி அந்தரத்தில் நடப்பதுபோன்ற பிரமையை உண்டாக்கியது. தங்கியிருக்கும் அறைக்கு வருவதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டது. கொண்டு வந்த பானத்தை துணைவர் கையில் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். நான் சொன்னதை விட்டுட்டு நீ எதை எடுத்து வந்தாய் என்று வீட்டுக்காரன் கேட்டது காதில் விழுந்தது.. இவரைப் படிப்பிக்க வேண்டும் என்று கருவிக் கொண்டு அது மிகவும் உசத்தியானது என்று ஆண்களுக்கு நல்லது என்று பணிப்பெண் சொன்னாள் அதுதான் இதனை வாங்கி வந்தேன் என்று  விட்டு காத்திருந்தேன். ஐயா அருந்தும் வரை அவ்விடத்தை விட்டகலாமல் சாய்ந்திருந்தேன். ஒரு வாய் அருந்தியவர் உடனேயே துப்பிவிட்டார் என்னடி தேனை வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்டு விட்டு அப்படியே கொண்டுபோய் சிங்கிற்குள் ஊற்றிவிட்டு வந்தார். அட தேனையா நான் சுவைபார்த்துவிட்டு இப்படி கிறங்கிப்போய் இருக்கிறேன்??????

வணக்கம் மணிவாசகன் அய்யா எனக்கு சரியாகத்தானே பதிவிடுகிறது :lol::rolleyes::icon_mrgreen:

  • தொடங்கியவர்

வணக்கம் அண்ணா!

நீங்கள் எழுதிற விசயத்தைச் சொன்னனீங்களோ இல்லாட்டி அதன் தோற்றத்தைச் சொன்னனீங்களோ தெரியேல்லை. 

எழுதிற விசயம் எண்டால் பயப்படாமல் உங்கடை எதிர்க்கருத்தைச் சொல்லுங்கோ! திருத்திக் கொள்ளும் பக்குவம்  கொஞ:சம் எண்டாலும் எனக்கு இருக்கு.....

பயணங்கள் முடிவதில்லை – 12

அப்பணிப்பெண் என் கண்களில் தடுமாற்றத்தையும் கலவரத்தையும் கவனித்திருப்பாள்போல்… ஒரு வில்லத்தனமான தந்திரம் மிக்கச் சிரிப்புடன் ஒரு கிளாசில் அவள் ஏதோ தேன் கலந்த ஒரு மதுபானத்தை ஊற்றி வெறுமனே தந்தாள்… எடுத்த காவடியை ஆடித்தானே இறக்கவேண்டும்….. அவளிடம் தோல்வியைத் தழுவ மனம் இடங்கொடுக்கவில்லை. அவள் தந்ததை அப்படியே வாங்கி ஏற்கனவே மதுவில் பரிச்சயம் உள்ளவள்போல் காட்டிக் கொண்டு ஒரே கவிழ்ப்பில் வாய்க்குள் நிறைத்துக் கொண்டேன். வாய்க்குள் நிறைந்த மது தனது வேலையை உடனேயே காட்ட ஆரம்பித்தது. வாய்க்குள் நிறைந்த மதுவின் ஒரு வித காரமான நெடி நாசியூடாக மண்டைப்பரப்பை வேகமாக ஆக்கிரமித்து புகைச்சலை உருவாக்கியது. அடிவயிற்றிலிருந்து குமட்டல் எழுந்து அவதிப்படுத்திக் கொண்டிருக்க பணிப்பெண் என்னை மிகவும் இரசிப்பது தெரிந்தது. சே வீம்புக்கு தேவையில்லா சிக்கலில் மாட்டிக் கொண்டேனே என்று என்னை நானே நொந்து கொண்டு ஒரே மடக்கில் கச்சல் வேப்பெண்ணெயை விழுங்குவதுபோல் விழுங்கித் தள்ள மண்டைப் புகைச்சலும், வயிற்றிலிருந்து எழுந்த குமட்டலும் உள்ளே போன மதுவை அதைவிட வேகமாக வெளியே அனுப்பி வைத்தது.

சிதறி விழுந்த மதுவை மொப் தடியை எடுத்து சுத்தஞ்செய்து கொண்டே உனக்குப் பழக்கமில்லையா என்று கேட்டாள் பணிப்பெண்……. இப்போது தன்னும் உண்மையை ஒத்துக் கொள்ளலாம்தானே.. ஊகூம் இவளிடம் எப்படி?... அப்போதுதான் ஞாபகம் வந்தது எல்லோருமே மதுபானத்தில் சோடா அல்லது பனிக்கட்டி இல்லது தண்ணீர் கலந்தல்லவா அருந்துவார்கள். நான் அப்படியே வாயில் கொட்டியதால்தான் இப்படியாகி இருக்கவேண்டும்…… கைகொடுத்த ஞாபகத்தை உபயோகித்து நீ எனக்கு சோடா கலக்காமல் தந்துவிட்டாய் அதனால்தான் இப்படி என்று விட்டு இப்போது எனக்கு சுவை பார்க்கத் தந்ததை எனக்கு விட்டுத் தா நான் அறைக்குச் செல்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன்.

வாயில் ஏற்கனவே கொப்பளித்த மதுவின் நெடி அந்தரத்தில் நடப்பதுபோன்ற பிரமையை உண்டாக்கியது. தங்கியிருக்கும் அறைக்கு வருவதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டது. கொண்டு வந்த பானத்தை துணைவர் கையில் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டேன். நான் சொன்னதை விட்டுட்டு நீ எதை எடுத்து வந்தாய் என்று வீட்டுக்காரன் கேட்டது காதில் விழுந்தது.. இவரைப் படிப்பிக்க வேண்டும் என்று கருவிக் கொண்டு அது மிகவும் உசத்தியானது என்று ஆண்களுக்கு நல்லது என்று பணிப்பெண் சொன்னாள் அதுதான் இதனை வாங்கி வந்தேன் என்று  விட்டு காத்திருந்தேன். ஐயா அருந்தும் வரை அவ்விடத்தை விட்டகலாமல் சாய்ந்திருந்தேன். ஒரு வாய் அருந்தியவர் உடனேயே துப்பிவிட்டார் என்னடி தேனை வாங்கி வந்திருக்கிறாய் என்று கேட்டு விட்டு அப்படியே கொண்டுபோய் சிங்கிற்குள் ஊற்றிவிட்டு வந்தார். அட தேனையா நான் சுவைபார்த்துவிட்டு இப்படி கிறங்கிப்போய் இருக்கிறேன்??????

வணக்கம் மணிவாசகன் அய்யா எனக்கு சரியாகத்தானே பதிவிடுகிறது :lol::rolleyes::icon_mrgreen:

வணக்கம் அக்கா! இப்ப தம்பி கிருபன் வந்து சிகிச்சைக்கு வழி சொல்லி விட்டுப் போனார். வருத்தம் சுகமாகீட்டுது. அந்தப் பிள்ளை நல்லா இருக்கோணும்.

  • 6 months later...

Google தமிலில் எலுதினால் english வருகிரது. வெலை / வேடு / மடிக் கனனி எல்லாவர்ரிலும் இதெ பிரச்ஹ்ச்ஹனை. காரனம் யாருக்காவது தெரியுமா?

(இதை kandupidi editor இல் எலுதினென்..)

  • கருத்துக்கள உறவுகள்

Google தமிலில் எலுதினால் english வருகிரது. வெலை / வேடு / மடிக் கனனி எல்லாவர்ரிலும் இதெ பிரச்ஹ்ச்ஹனை. காரனம் யாருக்காவது தெரியுமா? (இதை kandupidi editor இல் எலுதினென்..)

ஏனுங்கோ தப்ஸ்,

உங்கள் நாட்டுக்காரர் ஒரு செயலியை தயாரித்து இணையத்தில் உலாவவிட்டுள்ளாரே? இதன் மூலம் சிறிதே பழகிப்பாருங்கள்..தமிழை பருகிப்பாருங்களேன்..!

http://www.suratha.com/reader.htm

ஊக்கம் கொடுக்கலாமில்லையா? :)

  • கருத்துக்கள உறவுகள்

Google தமிலில் எலுதினால் english வருகிரது. வெலை / வேடு / மடிக் கனனி எல்லாவர்ரிலும் இதெ பிரச்ஹ்ச்ஹனை. காரனம் யாருக்காவது தெரியுமா?

(இதை kandupidi editor இல் எலுதினென்..)

கண்டு பிடியிலும் கனக்க இருக்கு. Tamil Rich Text Unicode Editor

இல்  எழுதினால் கூகிள் இண்டிக் இல் எழுதுவதுபோல் இலகுவாக எழுதலாம்.

நன்றி ராஜவன்னியன், மெசோ. இரண்டிலும் தட்டச்சு செய்யக் கூடியதாக இருக்கிறது. :)

கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதில் பிரச்சினைகள் இருந்தால் நேரடியாக தமிழில் எழுத இ-கலப்பை உதவும்.

கீழ்வரும் இணைப்பில் சென்று இ-கலப்பையைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இது ஒரு விசைப்பலகையைக் கட்டுப்படுத்தும் கருவியாகும்.

http://thamizha.com/project/ekalappai

பாமினி அல்லது phonetic முறையை தங்கள் பரிச்சயத்திற்கு ஏற்றதுபோல் தெரிவு செய்யலாம் . F12 ஐ குறுக்கு வழியாகப் பாவித்தால் தமிழ் விசைப்பலகைக்கும் ஆங்கில விசைப்பலகைக்கும் இலகுவாக மாற்றலாம்.

மேலதிகமாக அறிய பின்வரும் இணைப்பிலுள்ள காணொளி உதவும்.
http://www.yarl.com/...e=4#entry833759

உதவிக்கு நன்றி நியானி.

http://transliteration.yahoo.com/tamil/

http://tamil.indiatyping.com/

எனக்கும் கூகில் கையை விரிச்சு விட்டார் .........மேலுள்ள இரண்டும் ஓகே ........இதில் http://tamil.indiatyping.com/ சிறந்தது 

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஈ-கலப்பையில்தான் பல ஆண்டுகளாக உழுது வருகிறேன்.. :D

நானும் தான்

ஹ்

ஸ்,

இப்படியான  எழுத்துக்களுக்கு  என்ன  செய்கிறீர்கள்  இசை???

  • கருத்துக்கள உறவுகள்

Shift + h = ஹ்

Shift + h & a = ஹ

Shift + s = ஸ்

http://transliteration.yahoo.com/tamil/

http://tamil.indiatyping.com/

எனக்கும் கூகில் கையை விரிச்சு விட்டார் .........மேலுள்ள இரண்டும் ஓகே ........இதில் http://tamil.indiatyping.com/ சிறந்தது 

நன்றி தமிழ்சசூரியன். மிக இலகுவாக உள்ளது.

நான் ஈ-கலப்பையில்தான் பல ஆண்டுகளாக உழுது வருகிறேன்.. :D

நன்றி இசை. இதற்கு தரவிறக்கச் சொல்லுவதால் வேலையில் பாவிப்பதைத் தவிர்க்கிறேன்.

நானும் தான்

ஹ்

ஸ்,

இப்படியான  எழுத்துக்களுக்கு  என்ன  செய்கிறீர்கள்  இசை???

அதுசரி இதெல்லாம் வேறு சமாச்சாரத்த்திற்கு ஓலி எழுப்ப பாவிக்கும் எழுத்துக்கள். இங்கு எதற்கு பாவிக்கிறீர்கள்?  :unsure:

:D

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இதெல்லாம் வேறு சமாச்சாரத்த்திற்கு ஓலி எழுப்ப பாவிக்கும் எழுத்துக்கள். இங்கு எதற்கு பாவிக்கிறீர்கள்?  :unsure:

:D

பாகிஸ்தான்

நெடுக்ஸ்

இதை  எவ்வாறு எழுதுவது தப்பிலி??? :D 

அதுசரி இதெல்லாம் வேறு சமாச்சாரத்த்திற்கு ஓலி எழுப்ப பாவிக்கும் எழுத்துக்கள். இங்கு எதற்கு பாவிக்கிறீர்கள்?  :unsure:

:D

ஆ.... முடியல ... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இதெல்லாம் வேறு சமாச்சாரத்த்திற்கு ஓலி எழுப்ப பாவிக்கும் எழுத்துக்கள். இங்கு எதற்கு பாவிக்கிறீர்கள்?  :unsure:

:D

கதை எழுதப் போறாராம்.. :D சரோஜாதேவி சரியில்லையாம்.. :icon_mrgreen:

Google தமிலில் எலுதினால் english வருகிரது. வெலை / வேடு / மடிக் கனனி எல்லாவர்ரிலும் இதெ பிரச்ஹ்ச்ஹனை. காரனம் யாருக்காவது தெரியுமா?

(இதை kandupidi editor இல் எலுதினென்..)

பின்வரும் இணைய இணைப்பில், தமிழை தெரிவு செய்து எழுதிப் பாருங்கள்!

http://www.google.co.in/inputtools/cloud/try/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.