Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழஞ்சோத்துக்கஞ்சி

Featured Replies

397448_527548813951312_1915849213_n.jpg

 

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.


2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.


3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.


4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.


5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.


6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

**
பழைய சாதத்தை எப்படி செய்வது:


பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

 

நன்றி முகநூல்

நன்றி கோமகன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி.

 

இதனுடன் கொஞ்சம் ஊறுகாயும் தொட்டு குடித்தால் பிரமாதம்.

நான் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிப்பாக ஒரு நாளாவது பழஞ்சோறு சாப்பிடுகின்றேன். கொஞ்சம் ஊறுகாயும் கலந்தால் அருமையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளிர்நாடுகளுக்கு பழஞ்சோறும்,பழஞ்சோத்துக்கஞ்சியும் சரிவராது.......ஒருசில அயிட்டங்கள் அந்தந்த காலநிலை சூழ்நிலைகளுக்குத்தான் சரிவரும்......நினைவலைகளுக்கு நன்றி கோமகன். :)



நான் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிப்பாக ஒரு நாளாவது பழஞ்சோறு சாப்பிடுகின்றேன். கொஞ்சம் ஊறுகாயும் கலந்தால் அருமையாக இருக்கும்.

 

தம்பி! புளுகுறதுக்கும் ஒரு அளவு வேணும் :(

தம்பி! புளுகுறதுக்கும் ஒரு அளவு வேணும் :(

 

ஏன் அண்ணை.... ? உண்மையாகவே ஒவ்வொரு வார இறுதியிலும் சாப்பிடுவது வழக்கம். சாப்பிட்டு போட்டு Facebook இல் வந்து அது பற்றி புகழ்வதும் வழக்கம்.

நான் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிப்பாக ஒரு நாளாவது பழஞ்சோறு சாப்பிடுகின்றேன். கொஞ்சம் ஊறுகாயும் கலந்தால் அருமையாக இருக்கும்.

 

 

நல்ல பதிவு. 

 

பிரெளன் ரைஸ் - இதை எப்படி பழச்சோற்றுக்கு பாவிக்கலாம் நிழலி?  

 

புலுங்கல் அரிசி சோறுதான் பாவிக்கிறனாங்கள்  ஊரில், நல்ல சுவையாக இருக்கும், பச்சை மிளகாய், வெங்காயம், மோர் & ஊறுகாய் கலந்து குடிக்க. 

 

நீங்க என்ன அரிசி பாவிக்கின்றனீர்கள், சிவத்த பச்சை, தீட்டிய சிவத்த பச்சை, செட்டிநாட்டு அரிசி, பொன்னி, சம்பா, Boiled rice, Mortar (Malaya Rice)....

 

Brown rice (or "hulled rice"), unmilled or partly milled rice, is a kind of whole, natural grain. It has a mild nutty flavor, and is chewier and more nutritious than white rice, but goes rancid more quickly because the germ—which is removed to make white rice—contains fats that can spoil.[1] Any rice, including long-grain, short-grain, or sticky rice, may be eaten as brown rice.

In much of Asia, brown rice is associated with poverty and wartime shortages, and in the past was rarely eaten except by the sick, the elderly and as a cure for constipation.[citation needed] This traditionally denigrated kind of rice is often now more expensive than common white rice, partly due to its relatively low supply and difficulty of storage and transport

 

 

நமது நாட்டில் முக்கிய உணவாக அரிசியால் ஆன சோறு, அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவையே இருக்கிறது. இப்படி அதிகம் பயன்படுத்தப்படும் அரிசியின் வகைகளையும், அதன் குணங்களையும் பார்ப்போம்.

கார் அரிசுயை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.

குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.

குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.

சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும்.

செஞ்சம்பா சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.

கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த சிலேட்டும நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.

ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.

பச்சரியைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.

புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.

சாமை அரிசியும் புன்செய் தானியங்களில் ஒன்றுதான். இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். உடலை நல்ல வலிமையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

தினை அரிசியும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும். ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.

திப்பிலி அரிசி விந்தினை வளர்க்கும், மேக நோயைக் குணமாக்கும், வாதக் கோளாறுகளைப் போக்கும்

 

http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/1103/02/1110302044_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் மனைவி இல்லாத நாட்களில் அவசரத்திற்கு இந்த பழஞ்சோறுதான் சிலநேரம் கை கொடுக்கும். ஆனாலும் குளிர்காலங்களில், நீற்றுத்தண்ணீரில் கை வைத்து, சோற்றை பிசைய பயமாக இருக்கும். :rolleyes:

ஊரிலை இருக்கும் பொழுது சாப்பிட்டது. தயிருடன் சாப்பிட்டால் உடல் நல்ல குளிர்மையாகவும்  புத்துணர்வாகவும் இருக்கும்.

நல்ல பதிவு. 

 

பிரெளன் ரைஸ் - இதை எப்படி பழச்சோற்றுக்கு பாவிக்கலாம் நிழலி?  

 

 நான்  இலங்கையில் இருந்து வெளியேறிய பின் பிரெளன் அரிசி சாப்பிடுவதில்லை. பாசுமதி அரிசி மட்டும்தான் சாப்பிடுவது. தனிய இருக்கும் காலங்களில் பாசுமதி அரிசியை உவித்து சோறாக்குவது இலகுவாக இருந்ததால் அதே பழக்கமாகி விட்டது.

 

பாசுமதி அரிசியிலும் பழம்சோறு சுவையாகத் தான் இருக்குது. இங்கு Tilda Brand இல் வரும் அரிசி சுவையாக இருக்கும்.

 

பழஞ்சோறும் முதல் நாள் வைத்த கருவாட்டுக் குழம்பும் சாப்பிட்டவர்கள் வாழ்க்கையில் உயிருடன் இருக்கும் போதே சொர்க்கம் அனுபவித்தவர்கள் ஆவர்.

Quote: "பழஞ்சோறும் முதல் நாள் வைத்த கருவாட்டுக் குழம்பும் சாப்பிட்டவர்கள் வாழ்க்கையில் உயிருடன் இருக்கும் போதே சொர்க்கம் அனுபவித்தவர்கள் ஆவர்."

 

நன்றி நிழலி. ஆகா ஆகா பாரைக் கருவாட்டுடன், சொல்லி வேலையில்லை. இங்கு தரமான கருவாடுகள் கிடைப்பதில்லை, உப்புதான் கூட.  ஆசையை கிளறிவிட்டுவிட்டீர்கள்


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமட்ட ஏழைகளின் உணவுக்கு இவ்வளவு மரியாதையா? அடக்கடவுளே!!!!!! :o

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பதிந்த அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் ; குமாரசாமி அன்ணை சொல்வது போல் பழஞ்சோற்றுக் கஞ்சி ஏழைகளின் தோழன் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை . அதேவேளையில் இந்த உணவ நாகரீகம் என்கின்ற போர்வையில் அருகிவருதைப் பார்க்கின்றோம் . அதனாலேயே இணைத்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி சின்ன வகுப்பிலை பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒவொரு வெள்ளிக்கிழமையும் பிரேயரில தேவாரத்தோட திருவாசகமும் படிப்பார்கள்...அதைக்கேட்டு கேட்டு எனக்கு அப்ப முழுதிருவாசகம் பாடம்...ஆனால் இப்ப எல்லாம் மறந்து போய் அதில வாற ஒரே ஒரு வசனம் "பழஞ்சோருமென்பது வாயில் குடிலை" எண்ட வசனம் மட்டும் நாபகம் இருக்கு...இதுக்கு என்ன அர்த்தம் எண்டு இன்னும் தெரியாது..அது நிக்க..நீங்கள் இணைச்ச சாப்பாட்டு அயிற்றம் செய்து பச்சை மிளகாயுடன் வெள்ளைக்காரருக்கு கொடுக்கவேணும் என்று ஆசை...

Edited by சுபேஸ்

முந்தி சின்ன வகுப்பிலை பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒவொரு வெள்ளிக்கிழமையும் பிரேயரில தேவாரத்தோட திருவாசகமும் படிப்பார்கள்...அதைக்கேட்டு கேட்டு எனக்கு அப்ப முழுதிருவாசகம் பாடம்...ஆனால் இப்ப எல்லாம் மறந்து போய் அதில வாற ஒரே ஒரு வசனம் "பழஞ்சோருமென்பது வாயில் குடிலை" எண்ட வசனம் மட்டும் நாபகம் இருக்கு...இதுக்கு என்ன அர்த்தம் எண்டு இன்னும் தெரியாது..அது நிக்க..நீங்கள் இணைச்ச சாப்பாட்டு அயிற்றம் செய்து பச்சை மிளகாயுடன் வெள்ளைக்காரருக்கு கொடுக்கவேணும் என்று ஆசை...

 

இதெல்லாம் செய்து வெள்ளைக்காரிகளுக்கு குடுத்த அப்பனுகளையே இங்க கண்டிருக்கன்.

 

இதெல்லாம் ஜுஜுபி தலைவா :D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் செய்து வெள்ளைக்காரிகளுக்கு குடுத்த அப்பனுகளையே இங்க கண்டிருக்கன்.

 

இதெல்லாம் ஜுஜுபி தலைவா :D

 

நீங்கள் பழைய காயள்..நாங்கள் பால்குடியல் தப்பிலி அண்ணை...இனித்தான நடைபழகவேணும்... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணை.... ? உண்மையாகவே ஒவ்வொரு வார இறுதியிலும் சாப்பிடுவது வழக்கம். சாப்பிட்டு போட்டு Facebook இல் வந்து அது பற்றி புகழ்வதும் வழக்கம்.

அதுமட்டுமே..பிள்ளையள் போடுதுகள் எண்டா தானும் அதைப்போடோணும் எண்டு கலர்கலரா சின்னப்பிள்ளையள் போடுற கண்ணாடியளைப்போட்டு படம் எடுத்து பில்லா றேஞ்சில பேஸ்புக்கிலபோடுறது எண்டு..சப்பா பண்ணுற அலப்பறை தாங்க முடியலை... :lol:

  • தொடங்கியவர்

நீங்கள் பழைய காயள்..நாங்கள் பால்குடியல் தப்பிலி அண்ணை...இனித்தான நடைபழகவேணும்... :D

 

பால்குடியள் நடக்கேக்கை தடுக்கி விழாமல் பாக்கிறதும் பழைய காயளின்ரை வேலையல்லோ :D :D .

 

  • 1 month later...

நான் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிப்பாக ஒரு நாளாவது பழஞ்சோறு சாப்பிடுகின்றேன். கொஞ்சம் ஊறுகாயும் கலந்தால் அருமையாக இருக்கும்.

 

பழைய சோற்றுடன் தயிர், ஊறுகாய் & வெங்காயத்துடன் ஆபிஸிலிருந்து கொண்டு சாப்பிடுகின்றேன், என்ன சுவை....

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்தில் நினைக்கவே நடுங்குது. சமரில் பார்ப்போம். நன்றி கோ நினைவூட்டலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி சின்ன வகுப்பிலை பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒவொரு வெள்ளிக்கிழமையும் பிரேயரில தேவாரத்தோட திருவாசகமும் படிப்பார்கள்...அதைக்கேட்டு கேட்டு எனக்கு அப்ப முழுதிருவாசகம் பாடம்...ஆனால் இப்ப எல்லாம் மறந்து போய் அதில வாற ஒரே ஒரு வசனம் "பழஞ்சோருமென்பது வாயில் குடிலை" எண்ட வசனம் மட்டும் நாபகம் இருக்கு...இதுக்கு என்ன அர்த்தம் எண்டு இன்னும் தெரியாது..அது நிக்க..நீங்கள் இணைச்ச சாப்பாட்டு அயிற்றம் செய்து பச்சை மிளகாயுடன் வெள்ளைக்காரருக்கு கொடுக்கவேணும் என்று ஆசை...

அது பழஞ்சோறு இல்லை சுபேஸ்  :D:lol:  :D  

 

மலஞ்சோருமொன்பது வயிற் குடிலை 

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 

 

என்றுதான் வரும்  

panaikkul irrukum onion paluthakivittuthu

 

  • கருத்துக்கள உறவுகள்

அது பழஞ்சோறு இல்லை சுபேஸ்  :D:lol:  :D  

 

மலஞ்சோருமொன்பது வயிற் குடிலை 

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 

 

என்றுதான் வரும்  

அடடா..தப்புதப்பாதான் அம்புட்டுநாளும் பள்ளிக்குடத்தில கும்பலோட சேர்ந்து கோவிந்தா போட்டிருக்கனா..வாத்தியாருன்னா வாத்தியாருதான்.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.