Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளுடன் ஒரு நிமிடம்

Featured Replies

களிப்பூட்டும் செய்திகளால் தான் தேசியம் மறக்கடிக்கப்படும் என்றால் அப்பிடி ஒரு தேசிய பற்றாளர்கள் எமக்கு தேவையே இல்லை தேசியம் என்பதும் உணர்வு என்பதும் இரத்தத்தில் ஊறிய ஓன்று அது செய்திகளால் மாற்றப்படும் என்பது வெறும் சப்பைக்கட்டு ........ எத்தனயோ தேச உணர்வாளர்கள் வார விசுமுறை நாட்களில் BBQ பார்ட்டி birthday பார்ட்டி அது இது என்று அப்புறம் திரைப்படம் என்று போகின்றார்கள் ஆனால் தேசியம் என்று வந்தால் தீவிரமாக செயல்படுவார்கள் உங்கள் கடுத்தை ஏற்க முடியாமைக்கு மனம்வருந்துகின்றோம்

இது தவறான கருத்து. தேசியத்தை உணர்வுடன் ஆதரிப்பவர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் களிப்பாட்ட நிகழ்வுகள், செய்திகளை பார்த்து தேசியத்தை மறக்கும் மக்களும் உள்ளார்கள்.

நீங்கள் இலகுவில் அப்படிப்பட்ட தேசிய பற்றாளர்கள் தேவையில்லை என்று சொல்லி விட்டு போய் விடுவீர்கள். ஆனால் அவர்களை புறக்கணித்தால் நாளைக்கு தேசிய பற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து சென்று இறுதியில் தேசியம் பற்றிய கதையே இல்லாமல் போய் விடும்.

இன்று தேசிய பற்று இல்லாதவர்களையும் தேசிய பற்றுள்ளவர்களாக மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர இப்படி எடுத்தெறிந்து நடக்க கூடாது.

  • Replies 58
  • Views 4.6k
  • Created
  • Last Reply

வணக்கம் உறவுகளே,

அண்மைக்காலத்தில் அவதானித்த வரை யாழ் களத்தில் இந்திய செய்திகளுக்கு பாரிய வரவேற்ப்பு இருப்பதை அதனை பார்வையிடும் எண்ணிக்கைகளை வைத்து அறியக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ் உறவுகளும் யாழ் களத்தை பார்க்க தொடங்கி இருப்பதையே இது காட்டுகின்றது...... அந்த வகையில் இந்த களத்தை இன்னும் மாபெரும் களமாக மாற்ற எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்......

யாழின் வளர்ச்சிப்பாதையில் அனைவரும் இணைந்து பயணிப்போம்

வாழ்க யாழ்

என்றும் உங்களில்

ஒருவன்

சுண்டல்

"இந்திய தமிழ் உறவுகளும்" இதற்கு பதிலாக "தமிழக தமிழ் உறவுகள்" என்ற சொறொடர் பாவிக்கப்பட்டிருந்தால் ஈழத்தமிழர் விவகாரங்களில் அக்கறை காட்டும் பல தமிழக உறவுகளின் உள்ளங்கள் குளிர்ந்திருந்திருக்கும். இந்தியாவில் எங்கு தமிழன் இருந்தாலும் அது தமிழக அடிதொடியே. காமராஜருடன் கிந்தியமும், கருணாநிதியுடன் திராவிடமும் போக வேண்டியது உலகத்தமிழரின் அத்தியவசிய தேவை. இனித்தன்னும் தமிழன் தமிழனாகட்டும்.

இந்திய செய்திகளில் யாழ் இப்போதைக்கு ஆர்வம் காடவேண்டியதில்லை. யாழ் ஆர்வம் காட்டவேண்டியது, ராஜவன்னியன் குறிப்பிட்டது போல், தமிழீழ போராட்ட செய்திகளிலேயே. அதே நேரம் தமிழக தமிழரின் போராடங்களை, அவர்கள் அவற்றை முன்னெடுக்கும் போது, முக்கியத்துவம் கொடுப்பதும், ஊக்கமூட்டுவதும் செய்யப்படவேண்டியதே.

 தமிழ்நாட்டு பொருளாதார, அரசியல் பிரச்சனைகளைப் பற்றி யாழில் கட்டுரைகள் வருவது குறைவு. ஓரளவுக்கு தமிழ்நாட்டு தமிழ் ஆர்வம் சம்பந்தமான கட்டுரைகள் இடை இடை வருவதுண்டு.

இந்தியாவை பற்றி அண்மையில் தேவை இல்லாமல் யாழில் அதிகம் அடிபட்டது டெல்கி பாலியல் வன்முறை வழக்கு. இப்படி செய்திகளை வைத்து யாழை வளர்ப்பதிலும் பார்க்க யாழை மூடிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல கொள்கை ,கேட்கவே புல்லரிக்குது .

தேனி செய்தியை யாழில் இணைக்கலாமா என கேட்டபோது பதில் மற்ற மாதிரி இருந்ததாக ஞாபகம் .

இவர்கள் இப்படித் தான் தங்களுக்கு தேவை என்றவுடன் எல்லாத்தையும் தங்களுக்கு ஏத்த மாதிரி மாற்றி விடுவினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேனீ செய்திகள் என்ன களிப்பூட்டும் செய்திகளா? போடுகின்றார்கள் அவர்கள் கக்குவது விஷம் அதை அடையாளம் கண்டோம் புறக்கணித்தோம்......

மீண்டும் சொல்கின்றேன் ஒருவருடைய தேசிய பற்று களிப்பூட்டும் நிகழ்வுகளால் மாறும் என்றால் அந்த தேசிய வாதி எமக்கு தேவையே இல்லை ஒரு 100 பேர் கொண்ட கொள்கையும் லட்சிய உறுதியுடனும் இருந்தாலே போதுமானது

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள் கொடி உறவை  சொறி அவரை கொடி உறவை (தமிழர் நாடு) ஆசா பிளெடு மற்றும் ரம்பம் போட்டு அறுக்க முயல்கிறார்கள் சில சிங்கள கைபிடிகள் ...உசாராக இருகக்ணும் இங்க நீங்க.. பிரித்து விடுவது மட்டுந்தான் அவர்கள் வேலை .. அவர்கள் எங்கிட்டு எந்த நாட்டில் அகதி அந்தஸ்து வாங்கிட்டு  சொகுசாக ஏசி ரூமில் உங்கார்ந்து பொழுது போகவில்லை என்றால் ரைப்படிப்பது ஈசியாகத்தான் இருக்கம்.. ஆனால் இங்க வந்து வாழ்கை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் (கஞ்சிக்கு லாட்டரி அடிச்சா தான் தெரியும்)

டிஸ்கி:

உங்களுக்காக செய்கிறார்களோ இல்லையோ உங்களுக்காக குறைந்த பட்சம் கண்ணீர் விட ஆட்கள் இருக்கிறார்கள்.. அதையும் கெடுத்து வைக்க சிலது கிளம்பி இருக்குப்பா.. வாழ்க வையகம்... ஜப்பான் காரன் கண்ணீர் விடுவான் வாங்கி குடம் குடமா ரொப்பிங்குங்க..

இந்திய செய்திகளை அதுவும் முக்கிய செய்திகளை இணைக்கலாம். தேவையில்லாத செய்திகளையும் களிப்பாட்ட செய்திகளையும் இணைக்காமல் விட்டால் சரி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள் கொடி உறவை சொறி அவரை கொடி உறவை (தமிழர் நாடு) ஆசா பிளெடு மற்றும் ரம்பம் போட்டு அறுக்க முயல்கிறார்கள் சில சிங்கள கைபிடிகள் ...உசாராக இருகக்ணும் இங்க நீங்க.. பிரித்து விடுவது மட்டுந்தான் அவர்கள் வேலை .. அவர்கள் எங்கிட்டு எந்த நாட்டில் அகதி அந்தஸ்து வாங்கிட்டு சொகுசாக ஏசி ரூமில் உங்கார்ந்து பொழுது போகவில்லை என்றால் ரைப்படிப்பது ஈசியாகத்தான் இருக்கம்.. ஆனால் இங்க வந்து வாழ்கை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் (கஞ்சிக்கு லாட்டரி அடிச்சா தான் தெரியும்)

டிஸ்கி:

உங்களுக்காக செய்கிறார்களோ இல்லையோ உங்களுக்காக குறைந்த பட்சம் கண்ணீர் விட ஆட்கள் இருக்கிறார்கள்.. அதையும் கெடுத்து வைக்க சிலது கிளம்பி இருக்குப்பா.. வாழ்க வையகம்... ஜப்பான் காரன் கண்ணீர் விடுவான் வாங்கி குடம் குடமா ரொப்பிங்குங்க..

சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்
" தேசியம் என்பதும் உணர்வு என்பதும் இரத்தத்தில் ஊறிய ஓன்று அது செய்திகளால் மாற்றப்படும் என்பது வெறும் சப்பைக்கட்டு"

இப்படி வீர வசனம் பேசிய எத்தனை பெயரை பார்த்துவிட்டம் .

ஒரு பெட்டையை கண்டதும் கோட்டை விட்டவர்களும் உண்டு .

அவர் தன்னால் முடிந்ததை   இதுவரை செய்தார்

தற்பொழுது பெட்டையைக்கண்டதும் போய் விட்டார்

இனி  இலக்கு நோக்கிய  எமது பயணத்துக்கு என்ன வேண்டும்  என்று பார்க்கணுமே தவிர...

போனவரைத்துரத்தி  துரத்தி  கடிப்பதோ

போனவர் போலத்தான் இருப்பவர்களும் போவார்கள் என்று சோர்வதோ இலக்கை அறிந்தவனின் நோக்காக இருக்காது.

இலக்கு இல்லாதவனுக்குத்தான் இவர்கள் இலக்காக இருக்கக்கூடும்...

தேனீ செய்திகள் என்ன களிப்பூட்டும் செய்திகளா? போடுகின்றார்கள் அவர்கள் கக்குவது விஷம் அதை அடையாளம் கண்டோம் புறக்கணித்தோம்......

மீண்டும் சொல்கின்றேன் ஒருவருடைய தேசிய பற்று களிப்பூட்டும் நிகழ்வுகளால் மாறும் என்றால் அந்த தேசிய வாதி எமக்கு தேவையே இல்லை ஒரு 100 பேர் கொண்ட கொள்கையும் லட்சிய உறுதியுடனும் இருந்தாலே போதுமானது

 அது அது ...........பாஸ்

 அது அது ...........பாஸ்

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? தேசியம் சம்பந்தமான தேவைகளின் போது இப்படிப்பட்டவர்களின் உதவி தேவையில்லை என்று சொல்கிறீர்களா? தனியே தேசிய உணர்வுள்ளவர்கள் என்றால் எத்தனை வீதமானோர்? அவர்களை மட்டும் வைத்து அனைத்தையும் சாதிக்க முடியுமா? அது எவ்வாறு சாத்தியம்?

தவிர உங்கள் சந்ததி முடியும் பொழுது அடுத்த சந்ததியினர் எத்தனை வீதமானோர் தேசியப்பற்று ஊட்டி வளர்க்கப்பட்ட நிலையில் இருப்பார்கள்? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தமிழீழ விடயங்களை ஊட்டி வளர்க்கலாம். அடுத்தவனும் அப்படி வளர்ப்பான் என்று இல்லை. சில நேரங்களில் இணைய தளங்கள் தான் அவர்களை தேசியம் சார்ந்து செயற்பட வைக்கின்றன.

ரதி அக்கா கூறியது,

"இந்தியா செய்திகளை முதலில் கொஞ்சம்,கொஞ்சமாய் இணைக்கத் தொடங்கி பிறகு முற்று முழுதாக இந்திய களிப்பூட்டும் செய்திகளை போட்டு தேசியத்தை மறப்பதற்கு உதவி செய்வோம்" என்பது.

அதற்கு சுண்டல் அண்ணா, நாங்கள் சாதாரண இந்திய செய்திகளை தான் கூறுகிறோம், களிப்பாட்ட செய்திகளை அல்ல என்று கூறியிருந்திருக்கலாம். இப்படி மற்றவர்களை புறக்கணித்து கூறியிருக்க வேண்டியதில்லை.

Edited by துளசி

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? தேசியம் சம்பந்தமான தேவைகளின் போது இப்படிப்பட்டவர்களின் உதவி தேவையில்லை என்று சொல்கிறீர்களா? தனியே தேசிய உணர்வுள்ளவர்கள் என்றால் எத்தனை வீதமானோர்? அவர்களை மட்டும் வைத்து அனைத்தையும் சாதிக்க முடியுமா? அது எவ்வாறு சாத்தியம்?

தவிர உங்கள் சந்ததி முடியும் பொழுது அடுத்த சந்ததியினர் எத்தனை வீதமானோர் தேசியப்பற்று ஊட்டி வளர்க்கப்பட்ட நிலையில் இருப்பார்கள்? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தமிழீழ விடயங்களை ஊட்டி வளர்க்கலாம். அடுத்தவனும் அப்படி வளர்ப்பான் என்று இல்லை. சில நேரங்களில் இணைய தளங்கள் தான் அவர்களை தேசியம் சார்ந்து செயற்பட வைக்கின்றன.

காதல் சுண்டல் கூறியதன் கருத்தில் உண்மை உள்ளது ...........இன்றைய சூழலில் தமிழனின் பிரச்சனையை ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வுகாண உண்மையுடன் செயற்படுபவரை பற்றியே இங்கு பேசப்படுகிறது .......இவர்கள் தனி வட்டம் போட்டு சமூகத்தில் அல்லது உலகத்தில் வாழ முடியாது இவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்களல்ல.......மனிதருக்குரிய சகல ஆசாபாசங்களுடனும் இந்த உலகில் வாழ வந்தவர்கள் ஆனால் மனசாட்சியுடன் வாழ முயற்சிப்பவர்கள் . இன்றைய இயந்திர உலகத்தில் வாழும் மனிதனுக்கு    இந்த களிப்பூட்டும் செய்திகளும் ,செயல்களும் தேவை என்பது மறக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை .....ஆனால் இவை  ஒரு மனிதனின்  மனதில் உள்ள இலட்சியத்தை ,அல்லது தனது கடமையை செய்ய விடாமல் .அல்லது அதுவே தஞ்சம் என்று கிடக்கும் மானிட ஜென்மங்களை பற்றியதே அந்த கருத்தின் கருப்பொருள் .ஆனால் இவர்களும் மாறவேண்டும் , தாய்த்தமிழுக்கும், தாய்மண்ணிற்கும் தமது பங்கு என்ன என்பதை உணரவேண்டும் ..அப்போதே உண்மையான ஓர் செயல்வடிவம் ஏற்படும் .......அனைவரும் இணைந்தே செயற்படவேண்டும் நன்றி ,,,,,,,,,,,,

அதே கருத்தை தான் நான் மறுக்கிறேன்.

தமிழனின் பிரச்சினை பிரச்சினை என்று சொல்கிறீர்கள். அதனை எத்தனை வீதமானோர் அறிந்து வைத்திருக்கிறார்கள்? உண்மையில் வன்னியில் நடந்த சண்டை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அதில் இடம்பெற்ற அழிவுகள் எவ்வளவு என்பது பற்றி இன்னும் தெரியாத பல மக்கள் ஈழத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ளார்கள்.

தமிழகத்தில் கூட 99% ஆன தமிழ் மக்களுக்கு வன்னியில் சண்டை நடந்ததே தெரியாது என்று ஏற்கனவே இந்திய உறவுகள் சிலர் கூறியிருந்தார்கள். channel 4 காணொளியை கூட நாமெல்லாம் பார்த்தது போல் பெரும்பாலான ஈழ, தமிழக, புலம்பெயர் மக்கள் பார்க்கவில்லை. இப்படியானவர்கள் ஈழம் தொடர்பான செய்திகளை விட ஏனைய செய்திகளில் தான் ஆர்வம் காட்டுவார்கள்.

நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் வன்னியுடன் தொடர்பை கொண்டிருந்தவர். இங்குள்ள பல ஈழ ஆதரவாளர்களும் அதே போல் தான். பலர் மாவீரர் குடும்பம். அப்படிப்பட்டவர்கள் களிப்பாட்ட செய்திகளை வாசித்து விட்டும் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஏனையோரும் உங்களை போல் இருப்பார்கள் என்று நினைக்க முடியாது. அப்படி இல்லாதவர்கள் எல்லாம் தேவையில்லை என்று ஒதுக்கவும் முடியாது. ஏனென்றால் சில நேரத்தில் ஈழம் தொடர்பான விடயங்களில் ஈழம் தொடர்பாக ஆர்வமில்லாதவர்கள் கூட பங்களிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இப்பொழுது ஈழத்தின் மேல் ஆர்வம் இல்லாவிட்டாலும் கடமைக்கு தன்னும் பங்களிப்பவர்கள் நாளைக்கு அதையும் தவிர்க்கும் நிலைக்கு அவர்களை நாம் தள்ளி விட கூடாது.

இங்கு நான் பார்த்த வரையில் மாவீரர் குடும்பங்கள் பலவே இன்று ஈழ விடயங்களில் பங்குபற்றுவதை கைவிட்டுள்ளன. அதற்கு ஈழ விடயங்களை இணைய தளங்கள் முக்கியப்படுத்த தவறி ஏனைய விடயங்களை முக்கியப்படுத்தியமையே காரணம்.

ஈழம் தொடர்பான இலட்சியம் இல்லாதவர்கள் மாற வேண்டும், தாய்த்தமிழுக்கும் தாய்மண்ணிற்கும் தமது பங்கு என்ன என்பதை உணரவேண்டும் என்று சொல்வதை விடுத்து அவர்கள் மாறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது தான் சிறந்தது.

களிப்பாட்ட செய்திகளை பார்க்க பல இணைய தளங்கள் உள்ளன. ஈழம் தொடர்பான செய்திகளுக்கு ஒருசில இணைய தளங்கள் தான் உள்ளன. அதை குழப்ப வேண்டியதில்லை.

இப்பொழுதும் நான் முக்கிய இந்திய செய்திகளை இணைப்பதை எதிர்க்கவில்லை.

Edited by துளசி

ஈழம் தொடர்பான இலட்சியம் இல்லாதவர்கள் மாற வேண்டும், தாய்த்தமிழுக்கும் தாய்மண்ணிற்கும் தமது பங்கு என்ன என்பதை உணரவேண்டும் என்று சொல்வதை விடுத்து அவர்கள் மாறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது தான் சிறந்தது.

களிப்பாட்ட செய்திகளை பார்க்க பல இணைய தளங்கள் உள்ளன. ஈழம் தொடர்பான செய்திகளுக்கு ஒருசில இணைய தளங்கள் தான் உள்ளன. அதை குழப்ப வேண்டியதில்லை.

 உண்மை ......உடன்படுகிறேன்...... இவை அனைத்தையும் செய்தோம் ,செய்கிறோம் .செய்வோம்  செய்து கொண்டே உள்ளோம் .............ஆனால் ஒரு மனிதன் தன்  உணர்வுற உள்ளார்ந்தமாய் எப்போ தானாகவே மாற நினைக்கிறானோ அப்போதே பரப்புரைகளும் ,செய்திகளும் ,தகவல்களும் அவன் மனதில் போய்சேரும். அதுவே நாம் கண்ட உண்மை...........

களிப்பூட்டும் செய்திகள் என்பதை நீங்கள் எவ்வாறு புரிந்து கொண்டீர்கள்  என்று எனக்கு தெரியவில்லை ...........ஆனால் மீண்டும் சொல்கிறேன் இயந்திர உலகில் உள்ளத்தாலும் ,உடலாலும் சோர்ந்துபோய் இருக்கும் மனிதனை உற்சாகப்படுத்தும் களிப்பூட்டும் செய்திகள் தேவை...........   அதை நீங்கள் மறுக்கிறீர்களா ?

நீங்கள் செய்கிறீர்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் மக்களை தமிழீழ இலட்சியத்தை நோக்கி கொண்டு செல்லும் திறமை உங்களை விட பல மடங்கு அதிகமாக யாழுக்கு உள்ளது. அவ்வாறான ஓர் களத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடிய வகையில் இணைக்கக்கூடிய செய்திகளை எதிர்க்காமல் ஆதரிக்கிறீர்கள். காரணம் உங்களுக்கு களிப்பூட்டும் செய்திகள் பிடிக்கும் என்பதால் யாழில் இருப்பதில் தவறில்லை என்பது உங்கள் கருத்து.

இந்திய செய்திகளை இணைக்கிறோம் என்று கொஞ்ச நாள் நித்தியானந்தாவின் செய்திகளை தொடர்ச்சியாக இணைத்துக்கொண்டிருந்தார்கள். அது கூட சக்கை போடு போட்டது. சிரிப்போம் சிறப்போம் பகுதியை கூட ஆக்கிரமித்திருந்தது. அன்றைய நாட்களில் பல முக்கிய திரிகள் பலர் கண்ணில் படவில்லை. எனவே இப்படியான செய்திகளால் என்ன பிரயோசனம்?

ஒரு மனிதன் நிச்சயம் உள்ளத்தால் தானாக மாற வேண்டும். ஆனால் மாறுவதற்கான சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.

களிப்பூட்டும் செய்திகளால் ஒருத்தனின் தேசியப்பற்று மாறும் என்றால் அவன் எமக்கு தேவையில்லை என்ற சுண்டல் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். நான் கூட ஈழம் தொடர்பான லட்சியம் இல்லாத மானிட ஜென்மன்மாக தான் முன்னர் இருந்தேன். எனவே நானும் தேவையில்லை. என்னைபோன்று இன்று உள்ளவர்கள் பலரும் தேவையில்லை என்றே நீங்கள் கருதுவதாக நான் உணர்கிறேன்.

உங்களிடம் ஒரு கேள்வி.

தமிழக தமிழர்களின் தேசியம் ஈழம் இல்லை. அப்படியிருந்தும் சில தமிழக தமிழர்கள் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். ஈழம் தொடர்பான செய்திகளை வாசித்ததால் அவர்களிடம் இந்த மாற்றம் வந்தது. ஏனைய தமிழக உறவுகள் ஈழ செய்திகளை விட களிப்பாட்ட நிகழ்வுகளை நாடி சென்றால் அவர்களுக்கு ஈழபற்று இல்லை, எனவே அவர்கள் உதவி தேவையில்லை என்று சொல்லி விட்டு இருப்பீர்களா? அல்லது அவர்கள் உதவி தேவை என்று கருதி அவர்களை மாற்ற நினைப்பீர்களா? மாற்ற நினைத்தால் யாழ் இணைய தளத்தால் அவர்களை எவ்வாறு மாற்ற முடியும் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

இயந்திர உலகில் வாழ்வது நீங்கள் மட்டுமல்ல. பலர் வாழ்கிறார்கள். இயந்திர உலகில் வாழ்வதை காரணம் காட்டி நாம் விரும்பும் அனைத்தையும் கொண்டுவந்து ஓர் இணைய தளத்தில் இணைப்பது சரியா அல்லது பொதுநலம் சார்ந்து நல்ல விடயங்களை மட்டும் இணைப்பது சரியா?

கண்ட கண்ட செய்திகளை விடுத்து நல்ல செய்திகளை மட்டும் இணைத்தால் வரவேற்கலாம்.

 காதல் ஒரு உதாரணம் சொல்கிறேன்..... சில காலங்களுக்குமுன் [திருமணமாகமுன்] கிறிஸ்தவ மதப்பிரிவினர் ஒரு குழுவினர் என் கதவைத்தட்டினார்கள்  .உள்ளே வரவேற்றேன்.......பைபிளை பற்றி சில விவாதம் நடந்தது நானும் ஒரு கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவன்  என்பதால் பைபிளைப்பற்றி கொஞ்சம் தெரிந்ததால் அவர்களுடன் வாதிட்டேன் ....இறுதியில் அந்த குழுவில் பாஸ்டர் கூறினார் நான் முன்பு அது செய்தேன் இது செய்தேன் ,கொலை செய்தேன் கொள்ளை அடித்தேன் சிறைக்கு சென்றேன் ..ஆனால் இன்று நான் மனம் மாறி கடவுளை துதிக்கிறேன் என்றார் .......நான் கூறிய பதில் .......

ஐயா நீங்கள் கொலை செய்தீர்கள்,கொள்ளை அடித்தீர்கள் ,அதனால் சிறைக்குச்சென்றீர்கள் ஆகவே நீங்கள் மனம் மாறியே ஆக வேண்டும்

நான் இவை ஒன்றையும் செய்யவில்லை ஆகவே மனம் மாறவேண்டிய அவசியமில்லை ............அனைவரும் என் வீட்டின் வாயிற்கதவை நோக்கி நகர்ந்தனர் .

சரி வேலை முடிகிறது ...வீட்டிற்கு செல்லப்போகிறேன் ....இனி இப்படி பந்தியை எழுத நேரம் கிடைக்காது .தலைக்குமேல் வேலை .வீக்கென்ட் நேரமிருந்தால் எழுதுகிறேன் .....நன்றி விடைபெறுகிறேன் காதல் bye ..bye ................ :)

Edited by தமிழ்சூரியன்

இங்கு சிறிதே மாறுபடுகிறேன்.

நீங்கள் இந்திய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பதிந்தால் ஈழத்தின் அவலங்கள், செய்திகள் அனைத்தும் தமிழகத்திற்கு சரிவர சென்றடையாத சூழல் உருவாகும். தமிழக தமிழர்களுக்கு செய்திகளை அறிய, ஆயிரம் வழிமுறைகள் உண்டு. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு...?

பதியுங்கள்..ஆனால் தேனில் குழைத்துத் தரும் மருந்தாக ஈழத்தின் செய்திகளை அவசியம் புகுத்திப் பரப்புங்கள்.

இல்லையெனில், பிழைக்கப்போன தமிழர்களுக்கு, இலங்கையில் தனிநாடு தேவையாயென பலரும் 'பேக்கு'களாக இங்கே 'ஞே'யென முழித்துகொண்டிருப்போம்... !

தேவையா?

உங்களையும் புரட்சி அண்ணாவையும் எனக்கு அதிகம் பிடிக்கும். காரணம் ஈழத்தின் மேல் கொண்ட அக்கறை. :)

  • கருத்துக்கள உறவுகள்
உங்களையும் புரட்சி அண்ணாவையும் எனக்கு அதிகம் பிடிக்கும். காரணம் ஈழத்தின் மேல் கொண்ட அக்கறை. :)

நன்றி துளசி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே,

அண்மைக்காலத்தில் அவதானித்த வரை யாழ் களத்தில் இந்திய செய்திகளுக்கு பாரிய வரவேற்ப்பு இருப்பதை அதனை பார்வையிடும் எண்ணிக்கைகளை வைத்து அறியக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ் உறவுகளும் யாழ் களத்தை பார்க்க தொடங்கி இருப்பதையே இது காட்டுகின்றது...... அந்த வகையில் இந்த களத்தை இன்னும் மாபெரும் களமாக மாற்ற எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்......

யாழின் வளர்ச்சிப்பாதையில் அனைவரும் இணைந்து பயணிப்போம்

வாழ்க யாழ்

என்றும் உங்களில்

ஒருவன்

சுண்டல்

யாரைய்யா அந்தச் செய்திப் பிரிவினர்? அவர்கள் தாங்கள் இணைக்கும் செய்திகளை வாசிக்கின்றார்களா தெரியவில்லை.

இப்போது யாழ் களத்தில் செய்திகளை தேடிப் பிடிப்பதே கஸ்டமாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்களுடைய நேரத்தின் ஒரு பகுதியை செலவு செய்து யாழின் பல பகுதிகளில் செய்திகளை இணைப்பவர்களை கொஞ்சமாவது நன்றி உணர்வுடன் பாத்து பழகுங்கள் நக்கல்கள் நளினங்கள் குத்தல்கள் கிண்டல்கள் செய்வதை விட்டு

நீங்களும் கவனித்து எழுதுவது நல்லது மச்சி. கறுப்பி அண்ணா, நுணா அண்ணா, தமிழரசு அண்ணா, அகூதா அண்ணா மற்றும் பலர் செய்திகளை (இந்திய செய்திகள் உள்ளடங்கலாக) இணைக்கும் போது தனியே பிழம்பு அண்ணா மட்டும் செய்திகளை இணைப்பதாக எழுதியுள்ளீர்கள்.

மக்கள் எதனை விரும்பி படிகின்றார்களோ எதற்கு ஆதரவு இருக்கின்றதோ அது தடைகளை தகர்த்து யாழின் ஊடாக எடுத்து வரப்படும் உங்கள் பார்வையில் குப்பையாக இருப்பது இன்னொருவர் பார்வையில் மாறுபடும் இனினும் அதிகமாக இந்திய மற்றும் தமிழக செய்திகளை நான் எடுத்து வருவேன் பிழம்பு அண்ணா மட்டும் எத்தனயோ பணி சுமைகளுக்கு மத்தியில் அதை செய்துகொண்டு இருக்க முடியாது யாழின் நீண்ட கால உறுப்பினன் என்ற முறையில் எனக்கு யாழின் பரந்து பட்ட வளர்ச்சியே முக்கியம் தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு அல்ல

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சிறிதே மாறுபடுகிறேன்.

நீங்கள் இந்திய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பதிந்தால் ஈழத்தின் அவலங்கள், செய்திகள் அனைத்தும் தமிழகத்திற்கு சரிவர சென்றடையாத சூழல் உருவாகும். தமிழக தமிழர்களுக்கு செய்திகளை அறிய, ஆயிரம் வழிமுறைகள் உண்டு. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு...?

பதியுங்கள்..ஆனால் தேனில் குழைத்துத் தரும் மருந்தாக ஈழத்தின் செய்திகளை அவசியம் புகுத்திப் பரப்புங்கள்.

இல்லையெனில், பிழைக்கப்போன தமிழர்களுக்கு, இலங்கையில் தனிநாடு தேவையாயென பலரும் 'பேக்கு'களாக இங்கே 'ஞே'யென முழித்துகொண்டிருப்போம்... !

தேவையா?

 ராஜவன்னியன்! ஒரு உண்மையை அலட்டாமல் சொல்லியிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியச் செய்திகள் இறுதிக்காலத்தில் குறைவடைந்ததற்குக் காரணம் இந்தியர்களே 

 தமிழக உறவுகள் அல்ல. தமிழகச்செய்திகள் யாழில் நிறைய வரவேண்டும்.

தமிழன் எங்கே எதற்காகச் சென்றாலும் தன பிழைப்பைத் தானே பார்த்துக்கொள்வான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களை கவர வேண்டுமென்றால்..... (கிசு,குசு) போன்ற‌ சினிமாச் செய்திகளையும்.... இணைக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் கவனித்து எழுதுவது நல்லது மச்சி. கறுப்பி அண்ணா, நுணா அண்ணா, தமிழரசு அண்ணா, அகூதா அண்ணா மற்றும் பலர் செய்திகளை (இந்திய செய்திகள் உள்ளடங்கலாக) இணைக்கும் போது தனியே பிழம்பு அண்ணா மட்டும் செய்திகளை இணைப்பதாக எழுதியுள்ளீர்கள்.

அவர்கள் செய்திகளை இணைத்தாலும் கூட அதிகமாக இந்திய செய்திகளில் கவனம் எடுத்து இணைப்பது பிழம்பு அண்ணா மட்டுமே ஆகவே நாங்கள் கவனமாக தான் எழுதுகின்றோம்

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டதால் அது சம்பந்தப்பட்ட கருத்து தணிக்கை

Edited by நியானி

அவர்கள் செய்திகளை இணைத்தாலும் கூட அதிகமாக இந்திய செய்திகளில் கவனம் எடுத்து இணைப்பது பிழம்பு அண்ணா மட்டுமே ஆகவே நாங்கள் கவனமாக தான் எழுதுகின்றோம்

பிழம்பு அண்ணா மட்டும் செய்திகளை இணைப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அதிகளவிலா குறைந்தளவிலா என்பது இரண்டாவது விடயம்.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.