Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கிரிக்கெட் -பெண்கள் .

Featured Replies

இன்று இந்தியாவில் மகளிர்க்கான உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பமானது .முதல் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வெற்றி கொண்டுள்ளது .

இந்திய தரப்பில் விளையாடும் இரு தமிழ் வீரர்களும் மிக சிறப்பாக விளையாடினார்கள் .

காமினி ஆரம்ப ஆட்டக்காரராக களம்  இறங்கி சதம் அடித்தார் ,பந்து வீச்சில் நிரஞ்சனா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

 

மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகின்றன .

இங்கிலாந்து ,இந்தியா ,மேற்கிந்திய தீவுகள் ,சிறி லங்கா பிரிவு A

அவுஸ்திரேலியா ,நியுசிலாந்து ,பாகிஸ்த்தான் ,தென்னாபிரிக்கா பிரிவு B.

 

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்

தமிழ் துடுப்பாட்ட வீராங்கனை காமினி முருகேசனின் சதம் இந்திய அணிக்கு வெற்றியை கொடுத்துள்ளது

மேலும் வாசிக்க

http://www.espncricinfo.com/icc-womens-world-cup-2013/content/current/story/602960.html

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சும்மா பேச்சுக்கு தான்... நேர.. பண விரயம். இப்படியான போட்டிகள் தொடங்கிறதும் தெரியாது.. முடியுறதும் தெரியாது. உண்மையில்.. பெண்களின் இந்த விளையாட்டுக்களை எவருமே பெரிசாக் கவனிக்கிறாங்கில்லை. சமத்துவம் என்பது.. எழுத்தில.. பேச்சில இருக்கிறதில்ல. உணர்வில.. செயற்பாட்டில வரனும்.. என்றது இதைத்தான். :icon_idea::rolleyes::)

 

 

மகளிர் உலகக் கிண்ணம் : இலங்கை அணி அபார வெற்றி

மகளிர் உலகக் கிண்ண லீக் போட்டியில் இலங்கை அணி நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பத்தாவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று மும்பையில் நடைபெற்ற ஏ பிரிவு லீக் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணிக்கு குன் 52 ஓட்டங்களையும் ஜேன்ஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் கௌசல்யா, செனவிரத்ன மற்றும் சிறிவர்தன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 239 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தினை அமைக்க 50 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்து ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.

 

http://www.virakesari.lk/article/sports.php?vid=463

Edited by நவீனன்

இன்று நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை  91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியிட்டியது.

 

நியூசீலாந்து மகளிர் அணி, தென்ஆப்ரிக்க மகளிர் அணியை 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியிட்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக் கிண்ணம்: 209  ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கைய வீழ்த்தியது வெஸ்ட் இன்டீஸ்  :D

 

ICC Women's World Cup, 8th Match, Group A: Sri Lanka Women v West Indies Women at Mumbai, Feb 3, 2013

 

West Indies Women 368/8 (50 ov)

Sri Lanka Women 159 (40.0 ov)

 

West Indies Women won by 209 runs


.
இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 6 சுற்றுக்கு இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான போட்டியில் 138 ஓட்டங்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றே இலங்கை அணி சுப்பர் 6 சுற்றுக் தகுதிபெற்றது.

மும்பை பிரட்பேர்ண் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களைக் குவித்தது.

முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களைக் குவித்தது.
தொடர்ந்து வந்த வீராங்கனைகளும் சிறப்பாக ஆட இலங்கை அணி பலமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தீபிகா ரசங்கிக்கா 109 பந்துகளில் 84 ஓட்டங்களையும், அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன 67 பந்துகளில் 59 ஓட்டங்களையும், இஷானி கௌஷல்யா 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், யசோதா மென்டிஸ் 80 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுக்களையும், அமித்தா சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் வெற்றிபெற 283 ஓட்டங்களையும், சுப்பர் 6 சுற்றில் தகுதிபெற ஆகக்குறைந்தது 251 ஓட்டங்களையாவது பெற வேண்டுமென்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 138 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக றீமா மல்கோத்ரா 51 பந்துகளில் 38 ஓட்டங்களையும், திருஷ் காமினி 22 ஓட்டங்களையும், அணித்தலைவி மித்தாலி ராஜ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன, சாமனி செனவிரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், இஷானி கௌஷல்யா, உதேஷிக்கா பிரபோதனி, ஶ்ரீபாலி வீரக்கொடி, இனோக்கா ரனவீர, சன்டமாலி தொலவட்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியின் முடிவு காரணமாக குழு "ஏ" இலிருந்து இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன. குழு "பி" இலிருந்து அவுஸ்ரேலிய, நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் தகுதிபெற்றுள்ளன.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58361-2013-02-05-16-01-56.html

மும்பை: பெண்கள் உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையிடம் 138 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது. இலங்கை அணி "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறியது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 10வது, பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மும்பையில் நேற்று நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது.

ரசாங்கிகா அபாரம்:

இலங்கை அணிக்கு சாமரி அட்டபட்டு (4) ஏமாற்றினார். பின் இணைந்த யசோதா மெண்டிஸ், தீபிகா ரசாங்கிகா ஜோடி, இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த போது, அமிதா சர்மா பந்தில் மெண்டிஸ் (55) அவுட்டானார். கோஸ்வாமி "வேகத்தில்' ரசாங்கிகா (84) வெளியேறினார்.

கவுசல்யா அதிரடி:

"மிடில்-ஆர்டரில்' இணைந்த கேப்டன் ஷசிகலா சிரிவர்தனா, ஈஷானி கவுசல்யா ஜோடி பொறுப்பாக ஆடியது. நான்காவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த போது சிரிவர்தனா (59), "ரன்-அவுட்' ஆனார். மறுமுனையில் அதிரடி காட்டிய கவுசல்யா, பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். சுல்தானா வீசிய கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 17 ரன்கள் எடுத்த கவுசல்யா, அரைசதம் அடித்தார்.

இலங்கை அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்தது. கவுசல்யா (56), சாமணி செனிவிரத்னா (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஜுலான் கோஸ்வாமி 3 விக்கெட் கைப்பற்றினார்.

"டாப்-ஆர்டர்' சரிவு:

சவாலான இலக்கை துரத்திய இந்திய அணியின் "பேட்டிங்' படுமோசமாக இருந்தது. பூனம் ராத் (5) ஏமாற்றினார். படுமந்தமாக ஆடிய திருஷ் காமினி (22), கேப்டன் மிதாலி ராஜ் (20) நிலைக்கவில்லை. ஹர்மன்பிரீத் கவுர், "டக்-அவுட்' ஆனார். அடுத்து வந்த கரு ஜெயின் (8) சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 21.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 69 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது.

மல்கோத்ரா ஆறுதல்:

பின் கோஸ்வாமி (22), ரீமா மல்கோத்ரா (38) சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். இந்திய அணி 42.2 ஓவரில் 144 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. இதன்மூலம் சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் இருந்து சோகத்துடன் வெளியேறியது. இலங்கை அணி, 4 புள்ளிகளுடன் "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறியது.

கோஸ்வாமி சாதனை

நேற்று, "வேகத்தில்' அசத்திய இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி, 3 விக்கெட் கைப்பற்றினார். இவர், இலங்கையின் சமாரி அட்டபட்டுவை அவுட்டாக்கிய போது, ஒருநாள் அரங்கில் தனது 150வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் 150 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். இதுவரை இவர், 129 போட்டியில் 152 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

* சர்வதேச அளவில், 2வது வீராங்கனை ஆனார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கேத்ரின் பிட்ஸ்பட்ரிக், (109 போட்டி 180 விக்கெட்) உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை நீத்து டேவிட் (97 போட்டி, 141 விக்கெட்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

முதல் வெற்றி

அபாரமாக ஆடிய இலங்கை அணி, ஒருநாள் போட்டி அரங்கில், முதன்முறையாக இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்று, வரலாறு படைத்தது. இதுவரை, இவ்விரு அணிகள் 18 போட்டியில் மோதியுள்ளன. இந்தியா 16, இலங்கை ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

இலக்கு "251'

இந்திய அணி குறைந்தது 251 ரன்கள் எடுத்தால், "ரன்-ரேட்' அடிப்படையில் "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ஆனால், 144 ரன்களுக்கு சுருண்டதால், தொடரில் இருந்து வெளியேற நேர்ந்தது.

ஆஸி., முதலிடம்

கட்டாக்கில் நடந்த மற்றொரு "பி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தலா 2 வெற்றியை பெற்ற இவ்விரு அணிகள், ஏற்கனவே "சூப்பர்-6' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்துவிட்டன. முதலில் "பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சுஜி பேட்ஸ் (102) கைகொடுக்க, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேக் லன்னிங் (112) நம்பிக்கை தந்தார். ஆஸ்திரேலிய அணி 38.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி, 6 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதலிடம் பிடித்தது. நியூசிலாந்து (4 புள்ளி), தென் ஆப்ரிக்கா (2 புள்ளி) அணிகள் அடுத்த இரு இடங்களை பிடித்தன.

இங்கிலாந்து வெற்றி

மும்பையில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 36.4 ஓவரில் 101 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் 6 பேர் "டக்-அவுட்' ஆனார்கள். சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 35 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து, இரண்டாவது வெற்றியை பெற்று, 4 புள்ளிகளுடன் "சூப்பர்-6' சுற்றுக்கு "ஏ' பிரிவில் இருந்து முதல் அணியாக முன்னேறியது. இந்திய அணி, தோல்வி அடைந்ததை அடுத்து, "ரன்-ரேட்' அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறியது.

வெளியேறியது பாக்.,

கட்டாக் நகரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. மாரிஜன்னி காப் (102*), டான் வான் நிகெர்க் (55*) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, 29.4 ஓவரில் 81 ரன்களுக்கு சுருண்டு, படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம், முதல் வெற்றியை பதிவு செய்த தென் ஆப்ரிக்க அணி, "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறியது. பல்வேறு சர்ச்சைகளை கடந்து இத்தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி, ஒரு வெற்றி கூட பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

இந்தியா-பாக்., மோதல்

"சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய "பரம எதிரி'களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள், 7-8வது இடத்துக்கான போட்டியில் பிப். 7ம் தேதி மோதுகின்றன. இப்போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடக்கிறது.

"சூப்பர்-6' சுற்று அட்டவணை

நாள் அணிகள் இடம் நேரம்

பிப். 8 இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மும்பை காலை 9 மணி

பிப். 8 இலங்கை - நியூசிலாந்து மும்பை காலை 9 மணி

பிப். 8 வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா கட்டாக் காலை 9 மணி

பிப். 10 இலங்கை - ஆஸ்திரேலியா மும்பை காலை 9 மணி

பிப். 10 இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா கட்டாக் காலை 9 மணி

பிப். 11 வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து மும்பை காலை 9 மணி

பிப். 13 வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா மும்பை காலை 9 மணி

பிப். 13 இலங்கை - தென் ஆப்ரிக்கா கட்டாக் காலை 9 மணி

பிப். 13 இங்கிலாந்து - நியூசிலாந்து மும்பை காலை 9 மணி

 

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=15957&Value3=I

 

 

பெண்கள் அணியிடமிருந்து ஆண் வீரர்கள் கற்றுக் கொள்ளலாம்: அர்ஜூன ரணதுங்க

 

இலங்கை ஆண் கிரிக்கெட் வீரர்கள் இலங்கையின் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளிடமிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம் என இலங்கைக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவரான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகிறது.


உலக சம்பியன்கள் இங்கிலாந்தையும், பலமான இந்தியாவையும் தோற்கடித்து இலங்கை அணி சுப்பர் 6 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அர்ஜூன ரணதுங்க, இப்பெண்களுக்காகத் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அவர்களின் அர்ப்பணிப்புப் பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்தார்.

 

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அவர்கள் காட்டும் பெருமை மகிழ்வுக்குரியது என அவர் தெரிவித்தார்.


இலங்கையில் பெண்கள் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்துவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தடுமாறி வந்தது எனத் தெரிவித்த அர்ஜூன ரணதுங்க, ஆனால் இலங்கைக் கிரிக்கெட் அணியின் உலகக்கிண்ண வெற்றிகள் இலங்கையில் பெண்கள் கிரிக்கெட்டின் நிலையை முழுமையாக மாற்றும் எனவும் தெரிவித்தார்.

 

இலங்கைப் பெண்கள் அணியின் வெற்றியை இலங்கை ஆண்கள் வீரர்கள் பாராட்டி வரும் நிலையில், அவற்றை பாசாங்கு எனக் குறிப்பிட்ட அர்ஜூன ரணதுங்க, ஆண்களின் அதேவகையான சீருடையைப் பெண்கள் அணி அணிய முற்பட்டபோது சிலவருடங்கள் இவ்வீரர்களே எதிர்ப்புத் தெரிவித்தார்கள் எனக் குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58436-2013-02-07-05-59-00.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலக கோபையில் இரண்டு விளையாட்டில் நல்லா விளையாடினாப் போல இவர்களை இங்கிலாந்து அவுஸ்ரெலியா மகளிர் அணியோடை ஒப்பிட்டு பார்க்க ஏலாது......... இங்கிலாந்தோடை கிடைச்ச வெற்றி குருட் லக் என்று தான் சொல்ல வேனும்...மேற்க்கத்தைய தீவோடை 209 ஓட்டத்தால் தோல்வி அடைஞ்சவை.....இந்தியாவோடை கிடைச்ச வெற்றி பரவாயில்லை

மகளிர் உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது இந்தியா  .



.
இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றிகொண்டுள்ளது. 7ம் இடத்திற்கான போட்டியிலேயே இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

கட்டாக்கில் இடம்பெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.
முதலாவது விக்கெட்டை 6 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, அதன் பின்னர் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக நீடா டார் 83 பந்துகளில் 68 ஓட்டங்களையும், பிஸ்மா மரூப் 113 பந்துகளில் 58 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக நாகராஜன் நிரஞ்சனா 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஜூலன் கோஸ்வாமி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், எக்தா பிஸ்த் 50 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டை 8 ஓட்டங்களுக்கும், 2வது விக்கெட்டை 51 ஓட்டங்களுக்கும் இழந்த போதிலும், தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வெற்றி இலக்கை அடைய உதவினர்.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அணித்தலைவி மித்தாலி ராஜ் 141 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களையும், திருஷ் காமினி 44 பந்துகளிலவ் 26 ஓட்டங்களையும், றீமா மல்கோத்ரா 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக குவானிற்றா ஜாலில், பிஸ்மா மரூப், நீடா டார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகியாக இந்திய அணியின் தலைவி மித்தாலி ராஜ் தெரிவானார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58482-2013-02-07-16-28-33.html

  • கருத்துக்கள உறவுகள்

மகளீர் அணிகளைப் பொறுத்தவரை இங்கிலாந்து, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளே பலம் பொருந்தியவை. இந்தியா பரிதாபமாக சுப்பர் 6 க்குத் தகுதி பெறாமல் வெளியேறியது.  இலங்கை மீதமுள்ள அணிகளில் நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இது இலங்கைக்கு ஒரு பலப்பரீட்சை. இத் தொடரில் பங்குபற்றிய எட்டு அணிகளிலும் இலங்கை, பாக்கிஸ்தான் அணிகளே முதலில் வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

எனது கணிப்பின்படி சார்ல்ட் எட்வேட்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியே மீண்டும் கிண்ணத்தைக் கைப்பறும். நியுஸிலாந்து, அவுஸ்திரேலியா அடுத்தடுத்த தெரிவுகள்.

 

இலங்கை வெல்லும் என்கிறது பகல் கனவு! :D

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது இந்தியா  .

 

பாகிஸ்தான் லேடீஸ் தலிபான் குடுத்த எச்சரிக்கைக்குப் பயந்து பர்தா போட்டுக்கொண்டு வந்திருப்பினம்.. :unsure: என்ன ஸ்விங் எண்டு தெரியாமல் போயிருக்கும்.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் லேடீஸ் தலிபான் குடுத்த எச்சரிக்கைக்குப் பயந்து பர்தா போட்டுக்கொண்டு வந்திருப்பினம்.. :unsure: என்ன ஸ்விங் எண்டு தெரியாமல் போயிருக்கும்.. :D

 

Spoiler
பர்தாவுக்குள்ள இன் ஸ்விங் எண்டா என்ன அவுட் ஸ்விங் எண்டா என்னா எல்லாம் நேர மிடில் ஸ்டம்ப்புக்குள்ளதான் அண்ணா :D

Spoiler
பர்தாவுக்குள்ள இன் ஸ்விங் எண்டா என்ன அவுட் ஸ்விங் எண்டா என்னா எல்லாம் நேர மிடில் ஸ்டம்ப்புக்குள்ளதான் அண்ணா :D

அது என்றால் உண்மை தான் காவாலி :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வெஸ்ட் இண்டீஸ் தோற்கிறதை   பார்க்க  கவலையாய் கிடக்கு. 
கெய்ல்  ஒரு மட்சிலயாவது அடிக்கவேணும்.
  • கருத்துக்கள உறவுகள்

Spoiler
பர்தாவுக்குள்ள இன் ஸ்விங் எண்டா என்ன அவுட் ஸ்விங் எண்டா என்னா எல்லாம் நேர மிடில் ஸ்டம்ப்புக்குள்ளதான் அண்ணா :D

 

Spoiler
நான் நினைச்சன் yorker தான் சரிவருமெண்டு.. :icon_mrgreen:

பெண்கள் அணியிடமிருந்து ஆண் வீரர்கள் கற்றுக் கொள்ளலாம்: அர்ஜூன ரணதுங்க

 

இலங்கை ஆண் கிரிக்கெட் வீரர்கள் இலங்கையின் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளிடமிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம் என இலங்கைக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவரான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58436-2013-02-07-05-59-00.html

 

 

cartoon-of-the-day-08_02_2013-600-1.jpg

cartoon-of-the-day-08_02_2013-600-1.jpg

 

நேற்று ஆண்களும் இன்றைய பெண்கள் மாதிரித்தான் இருந்தனர்.

நாள் பெண்களுக்கும் ஐ.பி.எல். வரலாம்.

அப்பொழுது

பெண்களுக்கும் ஆண்களின் நிலை தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மகளிர் அணிக்கு இண்டைக்கு நல்ல அடி... 103 ஓட்டத்துக்கு எல்லாரும் போட்டினம்....இதை பற்றி அர்ஜுனா ரன்னதுங்கா என்ன அறிக்கை விடப் போகிறார்...

நியூஸிலாந்திடம் தோல்வியடைந்தது இலங்கை  .

வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013

.

இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 6 சுற்றுத்தொடரின் போட்டியில் இலங்கை அணி நியூஸிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது.

மும்பை பன்ட்ரா குர்லா மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஓர் ஓட்டத்திற்கே தனது முதலாவது விக்கெட்டை இழந்த இலங்கை அணி, தொடர்ந்தும் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் இணைப்பாட்டத்தைப் பகிர்ந்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 39 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து 4 விக்கெட்டுக்களை இழந்து 61 ஓட்டங்களுடன் காணப்பட்டபோதிலும், அதன் பின்னர் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டன.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக டிலானி மனோதரா 70 பந்துகளில் 34 ஓட்டங்களையும் தீபிகா ரசங்கிக்கா 17 பந்துகளில் 20 ஓட்டங்களையும் சன்டமல்லி டொலவட்ட 60 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கையின் அண்மைக்கால நட்சத்திரமான இஷானி கௌஷல்யா 2 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சார்பாக லீ ரகுகு 4 விக்கெட்டுக்களையும், சியன் றக் 3 விக்கெட்டுக்களையும் ஃப்ரான்ஸஸ் மக்கே 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

104 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டுக்காக 71 ஓட்டங்கள் பகிரப்பட நியூஸிலாந்தின் வெற்றி இலகுவாக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பாக ஃப்ரான்ஸஸ் மக்கே 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் சுசி பேட்ஸ் 41 பந்துகளில் 37 ஓட்டங்களையும் சோபி டெவைன் 30 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை சார்பாக வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுக்களையும் இனோக்கா ரணவீர வீழ்த்தினார்.

இப்போட்டியின் நாயகினாக லீ ரகுகு தெரிவானார்.

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58534-2013-02-08-10-48-34.html

அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது இலங்கை  .

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி
.
இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து இலங்கை அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்தே இலங்கை அணி வெளியேற்றப்பட்டுள்ளது.
அத்தோடு இன்றைய வெற்றியையடுத்து அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
மும்பை பிரட்பேர்ண் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 45.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 7 ஓட்டங்களுக்கு இழந்த அவ்வணி, அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தீபிகா ரசங்கிக்கா 77 பந்துகளில் 43 ஓட்டங்களையும் டிலானி மனோதரா 46 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக எரின் ஒஸ்போர்ண் 10 ஓவர்களில் 6 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் மேகன் ஸ்கட், லீசா ஸ்தலேக்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ஜூலி ஹன்ரர், ஹோலி ஃபேர்லிங், சாரா கோய்ற் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
132 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்தி;ரேலிய அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது,
முதலாவது விக்கெட்டுக்காக 55 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் 2ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 77 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ராசல் ஹேய்ன்ஸ் 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும் மெக் லனிங்ஸ் 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் ஜெஸ் கமரன் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ஸ்ரீபாலி வீரக்கொடி வீழ்த்தினார்.
இப்போட்டியின் நாயகியாக எரின் ஒஸ்போர்ண் தெரிவானார்.
http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58633-2013-02-10-09-31-48.html
 

  • கருத்துக்கள உறவுகள்

1694887521images22.jpg

ஆஸியிடம் தோற்று உலக கிண்ண கனவை இழந்தது இலங்கை மகளிர் அணி
 
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்று போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 22.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 132 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இன்றைய போட்டியில் தோல்லியை தளுவியதன் காரணமாக இலங்கை அணி உலக கிண்ணத்தை பெறும் வாய்ப்பை இழந்தது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.