Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கிய மற்றுமொரு நபர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
    புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கிய மற்றுமொரு நபர் யார்?
February 1, 2013, 11:02 am|views: 612    
 
தமிழீழ விடுதலைப் புலிகளை பின்னடைவுக்குள் தள்ளும் சர்வதேசத்தின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கியதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
 
இதில் அமெரிக்காவுக்கு புலிகள் தொடர்பான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களும் வழங்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
 
இதற்கான ஆதரத்தையும் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
 
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுடன் தொடர்பினை பேணினாலும், திரு.சம்பந்தன் அவர்கள் அமெரிக்கா தூதுவராலயத்துடன் நீண்ட காலமாக தொடர்பிலிருந்து பல முக்கிய தகவல்களை வழங்கி வருவபவர் எனவும் அமெரிக்காவின் இரகசியக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை விக்கிலீக்ஸ் உறுதிபடுத்தியுள்ளது. 
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் என்ன புலிகளின் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்த மத்திய குழு உறுப்பினரா?

  • கருத்துக்கள உறவுகள்

சரி காட்டிக்கொடுத்தாச்சு.. புலிகளையும் அழிச்சாச்சு.. எனியாவது தமிழ் மக்கள் விரும்பிற தீர்வை எடுத்துக் கொடுக்கட்டன். அதையும் செய்யினமில்லையே..???! அப்ப இந்தக் காட்டிக்கொடுப்புக்களின் நோக்கம் தான் என்ன..???????????! :icon_idea::rolleyes::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு ஒரு முடிவுதான் என்ன??????

பரிஸ் தமிழ் இணையத்தின் அரசியலை புரிந்தவர்களுக்கு இப்படியான செய்திகள் புதிதில்லை.

விக்கிலீக்ஸில் சொல்லப்பட்டுள்ளது:

TNA members should not be on any sort of "watchlist" solely due to TNA affiliation.  The TNA does
have a close political relationship with the LTTE.  As U.S. officials are prohibited from meeting with the
LTTE, our association with the TNA, and Sampanthan in particular as a senior member, provides a crucial avenue for gaining insight into the LTTE's stance on issues, especially the peace process with the GSL.

Anyone to take an English coaching to this editor of Paris Tamil?

TNA enables us to be explicit 
about the reasons the LTTE is listed as a U.S. FTO and 
to reinforce what the U.S. is seeking from the LTTE to 
be able to remove them from the list.

எனது ஆங்கில அறிவு மட்டு. நல்ல ஆங்கிலம் தெரிந்தோர் Cableலில் காணப்படும் மேற்காட்டிய வசனத்தை மொழி பெயர்த்து அதன் கீழ் தங்கள் பெயரையும் போட்டுவிடவும். நிச்சயம் பரிசிலிருந்து ஒரு சம்பந்தர் எதிர்ப்பு பரவுகிறது.

விசுகு:

தயவு செய்து இதை கூகிலை பாவித்து பிசெஞ்சுக்கு மாற்றி பின்னர் தமிழுக்கு மாற்ற முயலவும். 

நிலா அக்காவும் இதை ஒருதடவை நேராக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டுவர முயற்சிக்கவும்.

ஏனது நினைவு:" கூட்டமைப்பு  (சம்பந்தருடனான தொடர்பு) புலிகள் ஏன் சர்வதேச பயங்கரவாதிகளாக கணிக்கப்பட்டார்கள் என்ற காரணத்தில் நாங்கள்  வெளிப்படையாக இருக்கவும், புலிகளை அந்த பட்டியலில் இருந்து  நீக்க ஐக்கிய அமெரிக்கா எதை அவர்களிடம்  எதிர்பார்க்கிறது என்பதை திரும்ப வலியுறுத்தவும் உதவுகிறது"

தயவு செய்து நல்ல தமிழ், நல்ல ஆங்கிலம் அறிந்தோர் எல்லோரும் முயற்சிக்கவும். ஏதாவது நல்லது நடக்க சந்தர்ப்பம் இருந்தால் பெயருக்கும் புகழுக்கும் அலைவோரால் அது கெடுபட சந்தர்ப்பம் இருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சபந்தன் காட்டி கொடுத்தாலும் நாங்கள் சம்பந்தனுக்குதான் ஆதரவு ......:D தமிழன்டா-------------- தலைவர் இருந்த இடத்தை காட்டி கொடுத்தது சம்பந்தன் என செய்தி வெளியிட்டாலும் வெளியிடுவினம் போல கிடக்கு...

Edited by putthan

TNA enables us to be explicit 
about the reasons the LTTE is listed as a U.S. FTO and 
to reinforce what the U.S. is seeking from the LTTE to 
be able to remove them from the list.

எனது ஆங்கில அறிவு மட்டு. நல்ல ஆங்கிலம் தெரிந்தோர் Cableலில் காணப்படும் மேற்காட்டிய வசனத்தை மொழி பெயர்த்து அதன் கீழ் தங்கள் பெயரையும் போட்டுவிடவும். நிச்சயம் பரிசிலிருந்து ஒரு சம்பந்தர் எதிர்ப்பு பரவுகிறது.

விசுகு:

தயவு செய்து இதை கூகிலை பாவித்து பிசெஞ்சுக்கு மாற்றி பின்னர் தமிழுக்கு மாற்ற முயலவும். 

நிலா அக்காவும் இதை ஒருதடவை நேராக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டுவர முயற்சிக்கவும்.

ஏன் மல்லை அண்ணா, உங்களுக்கு english தெரியும் தானே? ஆனால் நிலா அக்கா, விசுகு அண்ணாவிடம் மொழிபெயர்ப்புக்கு கேட்டிருக்கிறீர்கள். ஏன் என்று புரியவில்லை. :unsure: 

Edited by துளசி

 அப்ப இந்தக் காட்டிக்கொடுப்புக்களின் நோக்கம் தான் என்ன..???????????! :icon_idea::rolleyes::unsure:

குடும்ப உறுப்பினர்களுக்கு விசா பெறுதல்!

பரிஸ் தமிழ் இணையத்தின் அரசியலை புரிந்தவர்களுக்கு இப்படியான செய்திகள் புதிதில்லை.

விக்கிலீக்ஸில் சொல்லப்பட்டுள்ளது:

TNA members should not be on any sort of "watchlist" solely due to TNA affiliation.  The TNA does

have a close political relationship with the LTTE.  As U.S. officials are prohibited from meeting with the

LTTE, our association with the TNA, and Sampanthan in particular as a senior member, provides a crucial avenue for gaining insight into the LTTE's stance on issues, especially the peace process with the GSL.

சம்பந்தர் அமெரிக்காவுக்கு சொன்ன தகவல்கள் / கருத்துக்கள் (இந்தியக் காட்டுமிராண்டிகளின் கைகூலியாக) :

- புலிகள் ஜனநாயக விரோதிகள்,

- தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது பயங்கரவாதச் செயல், 

- சிங்களப் பகுதியில் குண்டுகள்   வைத்தது பயங்கரவாதச் செயல், 

- அரசியல் தலைவர்களைக் கொலை செய்த பயங்கரவாதிகள் (சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகள் செய்த படுகொலைகளை புலிகள் மேல் போட்ட பெருமை சம்பந்தனுக்கும் உரியது)

- அரசியல் தீர்வில் நாட்டமில்லாதவர்கள்

- தமது மக்களையே கொலை செய்த பயங்கரவாதிகள் (கொல்லப்பட்டவர்கள் பாலியல் வன்புணர்வாளர்கள்,

தமிழின விரோதிகள் போன்றவர்களே  என்ற உண்மையை மறைத்து) 

இவை போன்றவை தான் சம்பந்தன் தனியாக சந்திக்கும் நபர்களிடம் கூறுபவை.

(இவை திருமலையில் சந்தித்த ஒரு அமெரிக்க அதிகாரி என்னிடம் கூறிய விடயங்கள். அதைவிட இவற்றில் சிலவற்றை - என்னை முழுமையாக அறியாத சம்பந்தன் - என்னிடமே  நேரடியாக கூறிய விடயங்கள்.)

  • கருத்துக்கள உறவுகள்

"TNA members should not be on any sort of "watchlist" solely due to TNA affiliation.  The TNA does

have a close political relationship with the LTTE.  As U.S. officials are prohibited from meeting with the
LTTE, our association with the TNA, and Sampanthan in particular as a senior member, provides a crucial avenue for gaining insight into the LTTE's stance on issues, especially the peace process with the GSL."

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ள தொடர்புகள் காரணமாக அதனை “அவதானிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல்” எதனிலும் போட்டுவிடக்கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய அரசியல் உறவு இருக்கிறது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிகாரிகளான நாம் விடுதலைப்புலிகளை சந்திப்பது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு பற்றி, குறிப்பாக சமாதான செயற்பாடுகள் மற்றும் சிறிலங்கா அரசு பற்றிய நிலைப்பாடு பற்றி, அறிந்து கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் குறிப்பாக அதன் முதிர்ந்த உறுப்பினர் சம்பந்தனுடனும் நாம் கொண்டுள்ள உறவுகள் எமக்கு முக்கியமான களமாக அமைந்திருக்கின்றன.

புலிகள் ஜனநாயக விரோதிகள்

மக்கள் தமது ஆட்சியாளர்களை பொதுசன வாக்கெடுப்பு மூலம் தெரிந்து கொள்வதை தடுப்பவர்கள் எவரும் ஜனநாயக விரோதிகள்.
  1. தமிழீழம் என்ற நாடு 9 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது. அங்கே எத்தனை முறை தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கறது? 
  2. முக்கியமான தமிழீழ அரசியல் கட்சிகளின் பெயர்கள் எவை?
  3. ஆட்சியமைத்த கட்சிகள் எவை?
  4. எதிர்க்கட்கள் எவை?
 
இவை எவற்றிற்கும் நேரடியான பதில் இல்லாவிட்டால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. அப்படி ஜனநாயகமற்ற நிலையில் அந்த நாட்டை வைத்திருந்தவர்களை ஜனநாயகவாதிகள் என்றா சொல்வர்?
இத்தனைக்கும் சிங்களவர்கள் நாட்டில் சிங்களவர்கள் தமது ஆட்சியாளரை வாக்குரிமை மூலம் மீண்டும் மீண்டும் மாற்றிவர அவர்களுக்கு உரிமை இருந்து வந்திருக்கிறது. 
 
 தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது பயங்கரவாதச் செயல்

வழிபாட்டு நிலையம் ஒன்றுக்கு குண்டு வைத்தது பயங்கரவாத செயல் இல்லையா? 
சிறிலங்கா அரசு கோவில்கள் மீதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் குண்டுவீசியது பயங்கரவாத செயல் இல்லையா?  
 
தலதா மாளிகைக்கு குண்டு வைத்தது பயங்கரவாதசெயல் அல்ல என்று சொல்லிவிட்டு அதே சம்பந்தன் எப்படி சிறிலங்கா அரசு கோவில்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் குண்டுவீசுவதை பயங்கரவாதசெயல் என்று சொல்ல முடியும்?
 
சிங்களப் பகுதியில் குண்டுகள்   வைத்தது பயங்கரவாதச் செயல்

மக்கள் வாழ்விடங்களில் குண்டுவைப்பது பயங்கரவாதசெயல் இல்லையா?
அப்படியென்றால் சிறிலங்கா அரசு இவ்வளவு காலமும் குண்டுவீசி மக்களை கொன்றது பயங்கரவாதசெயல் இல்லையா?
 
அரசியல் தலைவர்களைக் கொலை செய்த பயங்கரவாதிகள் (சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகள் செய்த படுகொலைகளை புலிகள் மேல் போட்ட பெருமை சம்பந்தனுக்கும் உரியது)
 
சம்பந்தன் அல்ல, இலங்கை புலனாய்வுதுறையும் இந்திய புலனாய்வுதுறையும் இவ்வாறு தெரவித்தன. உங்களிடம் உள்ள ஆதராங்களை இதுவரை பகிரங்கப்படுத்தாமல் நீங்கள் மிகவும் பாரிய பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்.

இது தவறான மொழிபெயர்ப்பு.

Lunstead அடைமொழிகள் இல்லாமல் தெளிந்த வசன ந்டையில் எழுதியிருக்கிறார். அதை தமிழுக்கு கொண்டு வரும் தமிழில் கருத்து பொருள் மயக்கம் கொடுத்தால் சின்ன சின்ன வசங்களாக உடைத்து பார்க்கலாம்.

"த.தே. கூட்டமைப்பு த.ஈ.வி.புலிகளுடன் அரசியல் உறவு வைத்திருக்கிறதுதான்.  த.தே.கூட்டமைப்பின் அங்கத்தவர்களை, தனிய  த.தே.கூட்டமைப்புடன் உறவுவைத்திருக்கிறார்கள் என்ற ஒரே ஒரு காரணத்தைமட்டும் வைத்துக்கொண்டு அவர்களை அவதானிக்க வேண்டியர் பட்டியலில் போடக்கூடாது. "

(இந்த வசன அமைப்பால் Lunstead புலிகள் பிழையென்றோ, அல்லது கூட்டமைப்பினர் எல்லோரும் சரியென்றோ ஒரு அபிப்பிராயத்தை தான் ஏற்படுத்துவதை தவிர்க்கிறார். இதன் பின்னர் ஆங்கில அறிவில்லாதார் Lunstead இலங்கையில் செய்தது புலிகளை வேவு பார்த்தது என்றும் அதை அவர் செய்ய உதவியது சம்பந்தன் என்றும் அனுமானித்து உயர்தர மாணவன் கூட விள்ங்கிக்கொள்ளக் கூடிய ஆங்கில வசனங்களை போட்டு குழப்பியடிக்கிறார்கள். நான் மேலே காட்டிய கருத்தில் Lunstead ஐயத்திற்கிடமின்றி புலிகளை வெளியே எடுத்துவிட முயற்சித்தார் என்பது சொல்லப்பட்டுள்ளது. அதை பார்த்த பின்னரும்,  இந்த வசனத்தில், Lunstead சொல்லாமல்,  தாம் விரும்பியதை அனுமானிப்பது அவர்களின் அரசியல் அப்பாவித்தனம். வஞ்சகம் அல்ல :lol:. இந்த பந்தியை Lunstead எழுதியிருப்பதன் நோக்கம் அமெரிக்க தலைமைப்பீடம்,  தம்மீது கொண்டுவந்துள்ள புதிய கட்டுப்பட்டுவிதிகள் தாம் தமிழர்களிடம் காணும் நடத்தைகளுக்கு தொடர்பில்லாது என்பதை சொல்லவாகும். புதிதாக அமெரிக்கா காட்ட ஆரம்பித்திருந்த கூட்டமைப்பு எதிர்ப்பு(சம்பந்தரின் வீசாவை மறுத்தது) அவர்களை தங்கள் தூதுவர் என்றகடமையையே செய்யத் தடுப்பது போல இருக்கிறது என்பதைதான் சொல்ல முயல்கிறார். அமெரிக்கா, "அஞ்சினன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பே" என்று நடக்கிறது என்பதை தான் சொல்கிறார்.  

இதில் பகிடி என்னவென்றால் Lunstead கூட்டமைப்புடன் தொடர்பு வைப்பது தடுக்கபட்டிருக்கிறார். அவர் தான் தொடர்ந்து கூட்டமைப்புடன் மீண்டும் தொடர்பு வைக்க(வீசா சிறு பிரச்சனையே) தனக்கு அதிகாரத்தை கேட்டு மேலிடத்திற்கு எழுதிகிறார். அதாவது தூதுவர், சாதாரண நேரத்தில் புலிகள், கூட்டமைப்பு பற்றிய விபரங்களை தலைமை பீடத்திற்கு அறிவிக்க வேண்டிய கடமை உள்ளவர். அவருக்கு அந்த அதிகாரம் மறுக்கப்பட்டிருப்பதால் அவர் அது தனக்கு வேண்டும் என்று மேலிடத்திற்கு எழுத்தும் கோரிக்கையை வைத்து அவர் முன்னர், "புலிகளை தான் சம்பந்தர் ஊடக வேவு பார்த்தாக எழுத்துகிறார்" எனபது ஆங்கிலம் அறியாமை அல்ல எந்த மொழியிலும் அரசியல், ஆபிஸ் கடிதம் போன்றவற்றை பார்த்திருக்காமையே. அதாவது Lunstead தான் கூட்டமைப்பூடாக புலிகளை வேவு பார்த்து Lunstead கூட்டமைப்புடன் தொடர்பு வைக்க கூடாது என்ற கட்டளையை அமெரிக்கா பிறபித்தாக சொல்ல வருகிறார்கள்.  அதனால்,அதன் பின்னர், Lunstead தான் இழந்து போன அதிகாரத்தை திரும்பப் பெற, குழந்தை பிள்ளை மாதிரி, அதையே காரணமாக வைப்பதாகவும் சொல்கிறார்கள். இதில் Lunstead அல்ல இவர்கள்தான் அரசியல் குழந்தைகள்.)

"அமெரிக்க அதிகாரிகளான நாம் த.ஈ.வி.பு களை சந்திப்பது தடுக்கபட்டிருப்பதால், த.தே.கூ அமைப்பினதுடனான தொடர்பு, பிரத்தியேகமாக (தமிழர்களின் பழைய அரசியல் போராட்டங்களில் அனுபவம்) முதிர்ந்த அங்கத்தினான சம்பந்தரின்  தொடர்பு, புலிகளின் நிலைப்பாடுகளை, பிரதானமாக அரசாங்கதுடனான சாமாதான முனைப்புகளில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தின் உள்ளார்த்தத்தை தெளியவைக்க மிகத்தேவையான ஒரு பாதையை அமைத்து தருகிறது"

இதில் எந்த இடத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் வேவு என்ற சொல்லுக்கே இடம் தரப்படவில்லை. இதில் Lunstead தனக்கு, சம்பந்தருக்கு வீசா கொடுக்கும் அதிகாரம் ஆச்சரியமான முறையில் மறுக்கப்படிருப்பதை வைத்துதான் மற்றவற்றை பிரஸ்தாபிக்க முயல்கிறார். மேலிடத்தால் வீசா மறுக்கபட்ட காரணத்தின் இரகசியத்தன்மை, தன்னை அமெரிக்கா புலிகளுடன் தொடர்பு வைக்கிறதாக சந்தேகிக்கிறதா என்று ஆச்சரியப்படுகிறார்.

பந்தியின் பொருள்: நமக்கு தூதுவர் என்ற கடமையை செய்ய நாம் இலங்கையில் நடப்பவற்றை அவனித்து முடிவெடுக்க அதிகாரம் வேண்டும். Lobby கம்பனிகளை மட்டும் நம்பி எம்மை அமெரிக்கா அதிகம் கட்டுப்படுத்துவது அமெரிக்க அரசியலுக்கு ஆபத்தானது. சமாதான முயற்சிகளில் புலிகள் அரசுடன் ஒரு முடிவுக்கு வர முடியாமையை வெறுமனே அவர்கள் பயங்கரவாதிகள் என்பதானல் என்று மட்டும் தட்டிக்கழிக்க முடியாது. இவற்றின் பின்னல் ஒரு அரசியல் சரித்திரம் இருக்கிறது. புலிகளின்(அரசியல் மட்டும்)நடத்தையை விளங்கிக்கொள்ள சம்பந்தன் போன்ற அனுபவசாலிகள் அவசியம். அமெரிக்கா அவர்களையும் பயங்கரவாதிகளாக நினத்து கண்காணிப்பு பட்டியலில் போடுவது உண்மைகளை அறியும் நிலையில் இல்லாமல் அமெரிக்கா தன்னைத்தான் அன்னியபடுத்துவதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தமது ஆட்சியாளர்களை பொதுசன வாக்கெடுப்பு மூலம் தெரிந்து கொள்வதை தடுப்பவர்கள் எவரும் ஜனநாயக விரோதிகள்.
  1. தமிழீழம் என்ற நாடு 9 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது. அங்கே எத்தனை முறை தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கறது? 
  2. முக்கியமான தமிழீழ அரசியல் கட்சிகளின் பெயர்கள் எவை?
  3. ஆட்சியமைத்த கட்சிகள் எவை?
  4. எதிர்க்கட்கள் எவை?
 
இவை எவற்றிற்கும் நேரடியான பதில் இல்லாவிட்டால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. அப்படி ஜனநாயகமற்ற நிலையில் அந்த நாட்டை வைத்திருந்தவர்களை ஜனநாயகவாதிகள் என்றா சொல்வர்?
இத்தனைக்கும் சிங்களவர்கள் நாட்டில் சிங்களவர்கள் தமது ஆட்சியாளரை வாக்குரிமை மூலம் மீண்டும் மீண்டும் மாற்றிவர அவர்களுக்கு உரிமை இருந்து வந்திருக்கிறது. 

குண்டர்களை வைத்து கள்ள வாக்கு போடுதல் , தேர்தல் வாக்களிப்பு அன்று சேலை,சாராயம் வழங்கி தமக்கு வாக்களிக்க வற்புறுத்துதல் தீவக பக்கமே எந்த கட்சியினரும் செல்லது ஓட ஓட அடித்து விரட்டல் என்பன எந்த ஜனநாயகத்தில் அடங்கும்??
 
அது சரி உலகில் நிழல் அரசில் உலகில் எங்காவது தேர்த்தல் நடந்துள்ளதா??
 
இந்தியாவில் சோனியாவின் குடும்ப அரசு, இலங்கையில் மகிந்தவின் குடும்ப அரசு என்பனவும் ஜனநாயகத்தின் விழுமியங்களா??

 தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது பயங்கரவாதச் செயல்

வழிபாட்டு நிலையம் ஒன்றுக்கு குண்டு வைத்தது பயங்கரவாத செயல் இல்லையா? 
சிறிலங்கா அரசு கோவில்கள் மீதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் குண்டுவீசியது பயங்கரவாத செயல் இல்லையா?  
 
தலதா மாளிகைக்கு குண்டு வைத்தது பயங்கரவாதசெயல் அல்ல என்று சொல்லிவிட்டு அதே சம்பந்தன் எப்படி சிறிலங்கா அரசு கோவில்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் குண்டுவீசுவதை பயங்கரவாதசெயல் என்று சொல்ல முடியும்?
 
சிங்களப் பகுதியில் குண்டுகள்   வைத்தது பயங்கரவாதச் செயல்

மக்கள் வாழ்விடங்களில் குண்டுவைப்பது பயங்கரவாதசெல் இல்லையா?
அப்படியென்றால் சிறிலங்கா அரசு இவ்வளவு காலமும் குண்டுவீசி மக்களை கொன்றது பயங்கரவாதசெயல் இல்லையா?
 
அரசியல் தலைவர்களைக் கொலை செய்த பயங்கரவாதிகள் (சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகள் செய்த படுகொலைகளை புலிகள் மேல் போட்ட பெருமை சம்பந்தனுக்கும் உரியது)
 
சம்பந்தன் அல்ல, இலங்கை புலனாய்வுதுறையும் இந்திய புலனாய்வுதுறையும் இவ்வாறு தெரவித்தன. உங்களிடம் உள்ள ஆதராங்களை இதுவரை பகிரங்கப்படுத்தாமல் நீங்கள் மிகவும் பாரிய பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்.

அப்படி பார்த்தால் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கிய நாடுகள் ஏன் மகிந்த அரசை பயங்கரவாத நாடு ஆக்கவில்லை??

புலிகள் ஜனநாயக விரோதிகள்

மக்கள் தமது ஆட்சியாளர்களை பொதுசன வாக்கெடுப்பு மூலம் தெரிந்து கொள்வதை தடுப்பவர்கள் எவரும் ஜனநாயக விரோதிகள்.
  1. தமிழீழம் என்ற நாடு 9 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது. அங்கே எத்தனை முறை தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கறது? 
  2. முக்கியமான தமிழீழ அரசியல் கட்சிகளின் பெயர்கள் எவை?
  3. ஆட்சியமைத்த கட்சிகள் எவை?
  4. எதிர்க்கட்கள் எவை?
 
இவை எவற்றிற்கும் நேரடியான பதில் இல்லாவிட்டால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. அப்படி ஜனநாயகமற்ற நிலையில் அந்த நாட்டை வைத்திருந்தவர்களை ஜனநாயகவாதிகள் என்றா சொல்வர்?
இத்தனைக்கும் சிங்களவர்கள் நாட்டில் சிங்களவர்கள் தமது ஆட்சியாளரை வாக்குரிமை மூலம் மீண்டும் மீண்டும் மாற்றிவர அவர்களுக்கு உரிமை இருந்து வந்திருக்கிறது. 
 
 தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது பயங்கரவாதச் செயல்

வழிபாட்டு நிலையம் ஒன்றுக்கு குண்டு வைத்தது பயங்கரவாத செயல் இல்லையா? 
சிறிலங்கா அரசு கோவில்கள் மீதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் குண்டுவீசியது பயங்கரவாத செயல் இல்லையா?  
 
தலதா மாளிகைக்கு குண்டு வைத்தது பயங்கரவாதசெயல் அல்ல என்று சொல்லிவிட்டு அதே சம்பந்தன் எப்படி சிறிலங்கா அரசு கோவில்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் குண்டுவீசுவதை பயங்கரவாதசெயல் என்று சொல்ல முடியும்?
 
சிங்களப் பகுதியில் குண்டுகள்   வைத்தது பயங்கரவாதச் செயல்

மக்கள் வாழ்விடங்களில் குண்டுவைப்பது பயங்கரவாதசெயல் இல்லையா?
அப்படியென்றால் சிறிலங்கா அரசு இவ்வளவு காலமும் குண்டுவீசி மக்களை கொன்றது பயங்கரவாதசெயல் இல்லையா?
 
அரசியல் தலைவர்களைக் கொலை செய்த பயங்கரவாதிகள் (சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகள் செய்த படுகொலைகளை புலிகள் மேல் போட்ட பெருமை சம்பந்தனுக்கும் உரியது)
 
சம்பந்தன் அல்ல, இலங்கை புலனாய்வுதுறையும் இந்திய புலனாய்வுதுறையும் இவ்வாறு தெரவித்தன. உங்களிடம் உள்ள ஆதராங்களை இதுவரை பகிரங்கப்படுத்தாமல் நீங்கள் மிகவும் பாரிய பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்.

அப்படி பார்த்தால் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கிய நாடுகள் ஏன் மகிந்த அரசை பயங்கரவாத நாடு ஆக்கவில்லை??

தாயகத்தின் யதார்த்த சூழ்நிலைகள் துளியும் அறியாதவர் போல் ஜூட் என்பவர் எழுதிய மேலுள்ள பதிலைப் படிக்கும் போது, அதற்கு நுணாவிலன் எழுதிய அதே பதில் எனது மனதிலும் தோன்றியது! அதுவும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைப் படுகொலை செய்த சிங்களப் பயங்கரவாத அரசை உலகம் ஏன் இன்னமும் பயங்கரவாதிகளாக அறிவிக்கவில்லை! சம்பந்தன், ஜூட் போன்ற 'தமிழர்'களின் விதண்டாவாதமும் ஒரு காரணம்.

மேலும், ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்துவிடுவதல்ல. அதற்கு மேல் பல விடயங்கள் அடங்கியுள்ளன. 15 திருடர்களும் 5 நேர்மையானவர்களும் உள்ள இடத்தில் ஜூட்
கூறும் ஜனநாயகம் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகின் மிகப்பெரிய போலி ஜனநாயக இந்தியாவும் இதற்கு ஒரு உதாரணம்!

ஜனநாயகம் பேசும் சம்பந்தன் கூட்டமைப்புக்குள் ஜனநாயகத்தை என்றும் பேணியதில்லை! மாறாக எதேச்சாதிகாரமாகவே நடந்து கொள்கிறார். மாறாக ஜனநாயகத்தை பேணாதவர்கள் என்று சொல்லப்படும் புலிகளின் தலைமை கூட அவர்களின் நிர்வாக விடயங்களில் முழுமையான ஜனநாயகப் பண்பை மதித்தவர்கள் என்பதை அவர்களின் எதிரிகளே போற்றிய ஒரு விடயம். இதெல்லாம் ஜூட் என்பவருக்கு தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை!

மேலும் புலிகள் ஒரு முழுமையான அங்கீகரிக்கப்பட்ட அரசு கிடையாது. அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் முழுவது வியாபித்திருந்த யுத்த சூழலில் முழுமையான ஒரு அரசையும் அவர்கள் தாபித்து முடிக்கவில்லை. அவர்களை சர்வதேசத்தால் அங்கீகரிக்கபப்ட்ட அரசுடன் ஒப்பிட்டு ஜனநாயகம் பேசுவது மடமையிலும் மடமை! 

மேலும் புலிகள் மக்கள் இலக்குகளை எப்போதும் வலிந்து தாக்கியது இல்லை.

இறுதியாக புலிகளின் செல்வாக்கால் அரசியல் செய்துகொண்டு புலிகளின் செயலை பயங்கரவாதமாக உளரும் தமிழின விரோதிகளின் அடிவருடி சம்பந்தன், எப்போது சிங்களப் பயங்கரவாத அரசின் செயல்களை பயங்கரவாதச் செயல்களாக குறிப்பிட்டுள்ளார்? எப்போது இந்தியக் காட்டுமிராண்டி அரசின் செயல்களை
பயங்கரவாதச் செயல்களாக குறிப்பிட்டுள்ளார்?

இலங்கையில் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சிக்கவில்லை. ஆனால் ஜனநாயகம் இருப்பதாக காட்ட முயன்றன. உண்மையை மூடி  மறைத்து அவர்கள் மகிந்தாவை ராஜாவாக உதவினார்கள். ஐ.நா.உள்ளக விசாரணையின் படி அங்கத்துவநாடுகளிடமிருந்து சிறிய ஆதரவைத்தன்னும் பெற்று போரில் இறந்துகொண்டிருக்கும் மக்களுக்கு கொடுக்க வேண்டுமாயின், போர் நேரம், அரசு கொல்லவில்லை, புலிகள் தான் கொல்கிறார்கள் என்ற அறிக்கையை ஐ.நா எழுதிக் அவர்களுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. இது விசாரணயின் அறிக்கையில் கறுப்பு வெள்ளையாக எழுதப்பட்டிருக்கிறது.

ஐ.நா, அரசுதான் கொல்கிறதென்றால் இந்தியா போன்றவை தனது வேவு பார்க்கும் வைத்தியசாலைகளை, பேருக்கு தன்னும் வடக்கில் ஸ்தாபிக்க வந்திருக்க மாட்டா. இந்த ஐ.நா நிலையில் சம்பந்தர் விடும் அறிக்கைகளை வைத்து அலசுவோர் உண்மையை  முழு பூசனிக்காயுக்குள் மறைக்க முயலும் செயல்களை செய்கிறார்கள். எனவே புலிகள் கொன்றார்கள் என்றதை ஏற்றால்த்தான் அரசு கொன்றதை ஏற்க முடியும் என்பது உண்மைக்கு புறம்பான வாதம். அப்படித்தான் கொன்றிருந்தாலும் அது ஆனைக்கு பானையை சரியாக்கும் பேக்காட்டு வித்தை.

கோழி ஏறி குஞ்சை மிதிப்பது போல தான் பாதுகாத்திருக்கவேண்டிய மக்களை அரசு கொன்றதை புலிகள் மீது போட்டு எழுத்தி வைத்துவிட்டு புலிகளை இணையாக்க முடியாது. பிளேக் மட்டக்களப்பு போனபோது அரசு வேண்டுமென்றேதான் புலிகளின் நிலைகளை தாக்கிவிட்டு உலங்கு வானூர்த்தியில் பிளேக்கை போட்டு அனுப்பியது. அரசின் நோக்கம் புலிகள்தான் பிளேக்கை கொன்றார்கள் என்று காட்டுவதாகும். தலதா மாளிகையை புலிகள் ஈராகில், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அப்பாவிகள் கூடும் இடங்களை குண்டுவைத்து தாக்குவது போல தாக்கவில்லை.  இந்து மதத்தையும் இந்துக்களையும் அழிப்பதற்காக 2100 இந்து கோவில்களை அழித்த பின்னர் ஒரு தலதா மாளிகையை, புத்த மதத்தையோ அல்லது பௌத்தர்களையோ தாக்கும் நோக்குடன் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக தாக்கியதை சம்பந்தப்படுத்த முடியாது. தேவையோடு இந்திய அரசு பஞ்சாப் பொற்கோவிலை தாக்கியது.  இந்திய சீக் சிறுபான்மையினரின் கோவிலை தாகியதாக நாம் குற்றம் சாட்டுவதில்லை, விபச்சாரம், கள்ள வியாபாரம்,... பல நடந்த இடம் அது. 

மகிந்தா அரசராகி இப்போது சிராணியை பதவி நீக்கினார்.  இந்தியா, சீனா மாதிரி நாடுகளுக்கு இதுவும் நல்லதொரு முன்னேற்றம், double bonus ஆக அதையும் வைத்து தமது அரசியலை கொண்டு செல்ல முயல்கின்றன. ஆனால் அமெரிக்காவுக்கு (மேற்குநாடுகளுக்கு) இது தொடரவேண்டுமா என்பது அவ்வளவு நிச்சயமில்லை. என்வே அவர்கள் திடுதிடுப்பென்று,  சர்வதேச கண்காணிப்புக்களின் முன் தேர்தல் சரியாக நடத்து, இலங்கை அரசியல் அமைப்பின் கீழ் சிராணி பதவி விலக்கப்பட்டாலும் அங்கு ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்.

இந்தியா இனி நமக்கு உதவ வராது என்று கூறிய சம்பந்தர், மேற்கு நாடுகள் தலதாமாளிகையை புலிகள் தாக்கியது குற்றம் என்று கூற சொன்னால் அதை அவர் கூறுவார்.

Edited by மல்லையூரான்

மேலும் புலிகள் ஒரு முழுமையான அங்கீகரிக்கப்பட்ட அரசு கிடையாது. அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் முழுவது வியாபித்திருந்த யுத்த சூழலில் முழுமையான ஒரு அரசையும் அவர்கள் தாபித்து முடிக்கவில்லை. அவர்களை சர்வதேசத்தால் அங்கீகரிக்கபப்ட்ட அரசுடன் ஒப்பிட்டு ஜனநாயகம் பேசுவது மடமையிலும் மடமை!

நானும் இதை தான் கூற வந்தேன்.

தமிழீழம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாடாக உருவாகிய பின்னர் ஆளும் கட்சி, எதிர்கட்சி போன்றவற்றை அமைக்காமல் விட்டிருந்தால் அது பற்றி கேள்வி கேட்டிருக்கலாம்.

அதற்கு முன்னரே கேள்வி கேட்பதென்றால்.... :o போராடும் குழுக்கள் எல்லாம் தமக்குள் ஆளும் கட்சி, எதிர் கட்சி அமைத்துக்கொண்டோ போராடுவினம்? :icon_idea:

உண்மையில் அங்கீகரிக்கப்பட்ட பல நாடுகள் நடத்திய ஆட்சியை விட புலிகள் நடத்திய ஆட்சி மிகவும் போற்றுதற்குரியதாக இருந்தது. அதை பல வெளிநாட்டு பிரமுகர்களே கூறியிருந்தார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] அதுவும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைப் படுகொலை செய்த சிங்களப் பயங்கரவாத அரசை உலகம் ஏன் இன்னமும் பயங்கரவாதிகளாக அறிவிக்கவில்லை! சம்பந்தன், ஜூட் போன்ற 'தமிழர்'களின் விதண்டாவாதமும் ஒரு காரணம்.[/size]

சிறிலங்கா பயங்கரவாத நாடாக இருப்பதை புலிகள் தேர்தல் மூலம் மக்களுக்கான ஆட்சியை தெரிவு செய்ய மறுத்ததற்கு காரணமாக சொல்கிறீர்கள். தமிழர்கள் மீதான தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புலிகளின் வன்முறையை சிறிலங்கா காரணமாக தெரிவித்து வந்தது. ஜனநாயக விரோதிகளும் பயங்கரவாதிகளும் தங்களுக்கு என்று காரணங்களை வைத்திருப்பதால் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் ஜனநாயக விரோதிகள் அல்ல என்றும் உலக றாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

[size=5]மேலும், ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்துவிடுவதல்ல. அதற்கு மேல் பல விடயங்கள் அடங்கியுள்ளன. 15 திருடர்களும் 5 நேர்மையானவர்களும் உள்ள இடத்தில் ஜூட்

கூறும் ஜனநாயகம் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகின் மிகப்பெரிய போலி ஜனநாயக இந்தியாவும் இதற்கு ஒரு உதாரணம்!

நியாயம் என்றோ சரி பிழை என்று பார்த்தாலோ புலிகள் செய்த அநியாயத்தைவிட அரசு ஆயிரம் மடங்கு அநியாயம் செய்தது.

சர்வதேச உறவுகள் ,அவர்கள் வைத்திருக்கும் கொள்கைகள் என்ற கணக்கில் பார்த்தால் புலிகள் செய்த அந்த பிழைகள் மட்டுமே கணக்கில் வரும்.

இதில் எங்கள் பக்க நியாயத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வைப்பதும் சிங்களஅரசின் கொடூரமுகத்தை அவர்கள் உண்மை என உணரவைப்பதும் தான்   எமது அரசியல் போராட்டம்,இது சர்வதேசத்திற்கு  தெரியாதா ஒன்றல்ல ஆனால் ஒரு அரசாக இருந்துகொண்டு  சிங்கள அரசைத்தான் அவர்கள் காப்பாற்றதான்  அவர்கள் முனைவார்கள் ஏனெனில் எல்லா அரசுகளும் அதைத்தான் தமது தமது நாடுகளில் செய்துகொண்டிருக்கின்றார்கள் .

இங்கு பலர் எழுதுவது அரிச்சுவடி அரசியல் .உங்களுக்கு மட்டும் ஏன் வீட்டோ அதிகாரம் ,நீங்கள் மட்டும் எப்படி அணு ஆயுதம் வைத்திருக்கலாம் இப்படி எல்லாம் கேள்வி கேட்கவெல்லாம் முடியாது ஏனெனில் அந்த சட்டத்தை அவர்கள் தமது சுய இலாபத்திற்காக  இயற்றி வைத்திருக்கின்றார்கள் .

சிங்கள அரசு குண்டு போடுவது பயங்கரவாதிகளை ஒழிக்க என்று புலிகள் குண்டு வைத்தால் அது பயங்கரவாதம் இப்படித்தான் சர்வதேசம் பார்க்கும் அரசு செய்கின்றது அதையே நாங்களும் திருப்பி செய்கின்றோம் என்று எல்லாம் சொல்ல முடியாது இதை புலிகளும் கடைசிவரை விளங்கவில்லை யாழில் பலரும் விளங்கவில்லை போலிருக்கு.

உங்களுடைய நியாங்கள் எல்லாம் உங்களுடன் மட்டும்தான் நியாயமானது அது உலக நியாயம் அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதை தான் கூற வந்தேன்.

தமிழீழம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாடாக உருவாகிய பின்னர் ஆளும் கட்சி, எதிர்கட்சி போன்றவற்றை அமைக்காமல் விட்டிருந்தால் அது பற்றி கேள்வி கேட்டிருக்கலாம்.

அதற்கு முன்னரே கேள்வி கேட்பதென்றால்.... :o போராடும் குழுக்கள் எல்லாம் தமக்குள் ஆளும் கட்சி, எதிர் கட்சி அமைத்துக்கொண்டோ போராடுவினம்? :icon_idea:

புதிய நாடாக தமிழீழம் சர்வதேச அங்கிகாரத்தை தேடிய வேளையில், அது ஜனநாயக நாடா இல்லையா என்ற கேள்வி அமெரிக்க அரசிடம் இருந்து வேளையே இந்த தகவல் பரிமாற்றம் இடம்பெற்றிருக்கிறது.

  • இன்று சோமாலிலாந்து அங்கிகாரம் தேடும் ஒரு நாடு. அங்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கிறது.
  • தென் சூடானில் தேர்தல் நடந்து ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைந்து இன்று அது தனி நாடாக அங்கிகாரம் பெற்றுள்ளது.
  • இசுரேலும் இவ்வாறாகவே ஜனநாயக நாடாக விடுதலை பெற்றது.
  • சிங்கப்பூர் கூட ஜனநாயக நாடாகவே தேர்தல் மூலம் ஆட்சியமைத்த தனிநாடக உருவானது.

தமிழீழம் எத்தனையோ சாதித்திருந்த போதும், ஜனநாயகம் மட்டும் செய்வதற்கு கடினமானது என்று தெரிவித்தது.

இதில் மற்ற நாடுகளைப் பற்றிச் சொல்ல முடியவில்லை. ஆனால் சிங்கப்பூரில் நடந்தது அதுவல்ல..

சீனர்களின் அரசியல், பொருளாதார முன்னேற்றத்தால் செய்வதறியாது நின்ற மலாய் அரசியல்வாதிகள் சிங்கையைப் பிரித்துவிட்டார்கள். அதற்கு எதிராக நின்றவர்கள்தான் சீனத் தலைவர்கள். 

சிங்கப்பூரில் எந்த வளமும் இல்லாததால் உருப்படாமல் போவார்கள் என்று மலாய் தலைவர்கள் நினைத்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நியாயம் என்றோ சரி பிழை என்று பார்த்தாலோ புலிகள் செய்த அநியாயத்தைவிட அரசு ஆயிரம் மடங்கு அநியாயம் செய்தது.

சர்வதேச உறவுகள் ,அவர்கள் வைத்திருக்கும் கொள்கைகள் என்ற கணக்கில் பார்த்தால் புலிகள் செய்த அந்த பிழைகள் மட்டுமே கணக்கில் வரும்.

இதில் எங்கள் பக்க நியாயத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வைப்பதும் சிங்களஅரசின் கொடூரமுகத்தை அவர்கள் உண்மை என உணரவைப்பதும் தான்   எமது அரசியல் போராட்டம்,இது சர்வதேசத்திற்கு  தெரியாதா ஒன்றல்ல ஆனால் ஒரு அரசாக இருந்துகொண்டு  சிங்கள அரசைத்தான் அவர்கள் காப்பாற்றதான்  அவர்கள் முனைவார்கள் ஏனெனில் எல்லா அரசுகளும் அதைத்தான் தமது தமது நாடுகளில் செய்துகொண்டிருக்கின்றார்கள் .

இங்கு பலர் எழுதுவது அரிச்சுவடி அரசியல் .உங்களுக்கு மட்டும் ஏன் வீட்டோ அதிகாரம் ,நீங்கள் மட்டும் எப்படி அணு ஆயுதம் வைத்திருக்கலாம் இப்படி எல்லாம் கேள்வி கேட்கவெல்லாம் முடியாது ஏனெனில் அந்த சட்டத்தை அவர்கள் தமது சுய இலாபத்திற்காக  இயற்றி வைத்திருக்கின்றார்கள் .

சிங்கள அரசு குண்டு போடுவது பயங்கரவாதிகளை ஒழிக்க என்று புலிகள் குண்டு வைத்தால் அது பயங்கரவாதம் இப்படித்தான் சர்வதேசம் பார்க்கும் அரசு செய்கின்றது அதையே நாங்களும் திருப்பி செய்கின்றோம் என்று எல்லாம் சொல்ல முடியாது இதை புலிகளும் கடைசிவரை விளங்கவில்லை யாழில் பலரும் விளங்கவில்லை போலிருக்கு.

உங்களுடைய நியாங்கள் எல்லாம் உங்களுடன் மட்டும்தான் நியாயமானது அது உலக நியாயம் அல்ல .

முக்கால்வாசி ஏற்றுக்கொள்ளக்கூடியவை..

புலிகள் ஏதோ சிங்களவர்கள் தொகையைக் குறைக்கவும், விகாரைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தென்பகுதியில் குண்டு வைத்துக் கொண்டிருந்தார்கள் போன்று சில கருத்துக்கள் உள்ளன. அங்கு நடந்தது போர். எதிரியின் கைகளில் எந்த நேரமும் எதையும் இழக்கலாம் என்கிற நிலைதான் போராட்டத்தின் நடுப்பகுதியில் நிலவியது. அந்த நேரம் எதைச் செய்தாவது தம்மைத் தக்க வைக்க முனைந்தார்கள். அவை தவறாக இனங்காட்டப்பட்டன. சித்தாந்த ரீதியில் தவறு என்பதில் ஐயமில்லை.

இறுதிப் போரின்போது தென்பகுதியில் தாக்குதல்கள் விமானத்தாக்குதல்களாக மட்டுமே இருந்தன.. நினைத்திருந்தால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருக்க முடியும். ஸ்ரீலங்கா அரசு அவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தது என்பது ஏற்புடையதல்ல. ஆனால் தென்பகுதித் தாக்குதல்களினால் எந்த ஒரு பிரியோசனமும் வரப்போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது.

அரசு செய்கின்றது அதையே நாங்களும் திருப்பி செய்கின்றோம் என்று எல்லாம் சொல்ல முடியாது இதை புலிகளும் கடைசிவரை விளங்கவில்லை யாழில் பலரும் விளங்கவில்லை போலிருக்கு.

இவற்றை தவிர இந்த முறை உங்களுடன் ஒத்துத்தான் போக வேண்டியிருக்கிறது.

அரசு செய்கிறதென்பதற்காகத்தான் ஆயுத போராட்டம் ஆரம்பமானது. அதனால் பலதடவைகளில் அரசுக்கு ஏட்டிக்கு போட்டியா நடக்கத்தான் வேண்டும் என்றிருந்தது. இன்று அரசுடன் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்ள முடியாமையால்தான்  அரசு தாண்டவ கூத்தாடுகிறது. அரசின் இன்றைய நடத்தைகளை ஆராய்ந்துவிட்டு, புலிகளை அடக்கி ஒடுக்கிய பிளேக்கே, இலங்கை இந்த பாதையில் போனால் திரும்ப வன்முறைகள் வெடிப்பதை தவிர்க்க முடியாது என்றார். 

போராட்டம் ஏட்டிக்கு போட்டியாகத்தான் இருக்கும். இதில் புலிகள் பக்கத்தால் கொல்லப்பட்டவர்கள், புலிகளுக்குள் மறைந்திருந்த துரோகிகள், எதிர் இயக்கங்கள், பொது சனத்துக்குள் மறைந்திருந்த துரோகிகள், மற்றய இனங்களிலிருந்து வேவு பார்த்தவர்கள்...... குற்றவாளிகள் (சரியான முறையில் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டு, எதிர்த்தரப்பு சட்டதரணிகளால் பிரதிநிதிபடுத்தபாடமல் தூக்கு தீர்ந்தவர்கள்.) , போராட்டங்களில் இடையில் அகப்பட்டவர்கள். இதில் கடைசி இரண்டுமே மனித உரிமைகளை மீறுபவை. நாம் எல்லோரும் சவுதியரசு ரிசானாவுக்கு சிரச்சேதம் தீர்த்த போது எதிர்த்தோம். ஆனால் புலிகள் ஆரம்பத்திலிருந்து குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கும் முறைகளை மாற்றி வந்ததால் எமக்கு அங்கு ஜனநாயகம் ஏற்படும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இருக்கவில்லை. மற்ற இனங்கள் இறக்க நேரிட்ட இடங்கள் மட்டும்தான் ஏட்டிக்கு போட்டியாக இருந்தது. இது அரசு ஆரம்பித்து வைத்த வன்முறையின் விளைவு.

நாம் போராட்டம் முடிய முதல் தேர்தல் நடந்து தலைவர் பதவியை கையளிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படை ஏற்பட, தேர்தல் நடத்தி அதிகாரத்தை தலைவர் கையளிக்க போராட்டம் முடிந்திருக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.