Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்துப்பிழை விடலாம் என்று தோன்றுகின்றது

Featured Replies

பொதுவாக இணையவெளியில் தமிழ் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை சார்ந்து பரிட்சயமான ஒரு கூச்சல் இருக்கிறது. மேலோட்டமாய்ப் பார்க்கையில் இந்தக் கூச்சல் நியாயமானதாகத் தான் தெரிகிறது. இருப்பினும், இந்தக் கூச்சலை நிராகரிப்பதற்கும் ஏராளமான நியாயங்கள் தெரிகின்றன. அந்த வகையில் இந்தப்பதிவு எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை சார்ந்து அமைகிறது. புதிவிற்குள் செல்லமுன்னர் இதயசுத்தியாக ஒன்றைக் கூறவேண்டும். பதிவெழுதுவதற்காக இதை எழுதவில்லை. இந்த முனையில் உண்மையில் இவ்வாறு தான் எனக்குப் படுகின்றது. யாரேனும் இந்தப் பார்வை தவறு என்பதனை காத்திரமான கருத்துக்கள் கொண்டு தெரியப்படுத்தினால் மனதார மகிழ்வேன். மாறிக்கொள்வேன்.
 
சங்க கால இலக்கியத்தை வாசித்து ரசிப்பதற்கு என்னால் முடியாது. காரணம் எனக்கு அந்தத் தமிழ் தெரியாது. இணையவெளியில் தமிழ் பரப்பும் மிகப்பெரும்பான்மையானவர்களிற்கு இதுவே நிலையாய் இருக்கின்றது. ஆனால் நாங்கள் தமிழில் தான் உரையாடிக்கொண்டிருக்கின்றோம் என்ற தரவானது, தமிழ் சங்ககாலத்தில் இருந்த நிலையில் இருந்து இன்றைக்கு மாறிநிற்கின்றது என்பதை வெளிப்படையாக்குகின்றது. இந்த மாற்றம் ஒரு இரவில் நடந்திருக்க முடியுமா? 
 
ஒரு விடயம் மாறுகிறது என்றால், ஒவ்வொரு மாற்றமும் பழையதன் பார்வையில் தவறானாதாகவே நிகழ்ந்திருக்கவேண்டும். அதாவது, சங்ககாலத் தமிழில் ஒரு விடயத்தை இவ்வாறு இன்ன சொற்கள் கொண்டுதான் எழுதவேண்டும் என்ற நிலை இருக்கையில், அதே விடயத்தை இன்றைய தமிழில் இன்றைய முறையில் எழுதுவதானது அன்றைய விதியின் பிரகாரம் தவறு. ஆனால் இன்றைக்கு இதைத்தானே எழுதுகிறோம். எமக்கு அது தெரியாது, சங்ககாலத்தவர்கள் அப்படியே எங்கேனும் இருப்பின் அவர்களிற்கு இது புரியாது. ஆனால் இரண்டும் தமிழ். இந்த மாற்றத்தை மொத்தமாகப் பல்லவரிலோ, மொகலாயரிலோ அல்லது வேறு எவரிலுமோ போட்டுவிடமுடியாது. நம்மாளிற்கு அவன் குளத்தைக் காட்டியிருக்கலாம், ஆனால் தண்ணி குடித்தது நாம் தானே. 
 
சங்கத்தமிழ் தான் செம்மொழி, அதன் இனிமை தமிழில் இன்றைக்கு இல்லை என்று ஒரு பண்டிதன் கூறலாம். ஆனால், அக்கூற்றின் தார்ப்பரியம் பண்டிதனின் பயத்தில்--எங்கே தான் செல்லாக்காசாகிவிடுவேனோ என்ற பயம்--இருந்து உருவாகிறதே அன்றிப் பண்டிதனின் கூற்றை நிறுவுவது சாத்தியமற்றது. சுவை என்பது ஒவ்வொருவர் சார்ந்தது. அதற்குப் பிரபஞ்ச வரைவிலக்கணம் சாத்தியமில்லை. ஒவ்வொருவரும் தம்மை எவ்வாறு காண்கிறார்கள் என்பது தான் அவர்களின் உலகம். ஒரு அறிஞன் சொன்ன ஆங்கில வாக்கியத்தைத் தமிழ்ப்படுத்தினால் 'உருளைக்கிழங்கிற்குள் இருக்கும் புழுவிற்கு உருளைக்கிழங்கு தான் உலகம்'. 
 
இப்போ தமிழில் 'ழ' மகிமை என்ற கூற்று தமிழ் தெரிந்த அனைவரிற்கும் தெரியும். ஆனால் எந்தப் பண்டிதனிற்கும் எங்கு 'ழ' போடுவது எங்கு 'ள' போடுவது என்று விதி எழுதத் தெரியவில்லை. கேட்டால், அது பழக்கத்தில் வருவது என்பார்கள். பாடமாக்கு என்பார்கள். ஒரு முதலீடடிற்கு ஒரு பயன் இருக்கவேண்டும். சரி 'ழ' எங்கு போடுவது என்று நான் பாடமாக்குகின்றேன், அதன் பலன் என்ன என்று கேட்டால், உச்சரித்துப் பார் இனிமை உணர்வாய் என்பார்கள். எனக்கு அந்த இனிமை தெரியவில்லை, அது என்ன என்று சற்று விபரிப்பீரா பண்டிதரே என்றால், உணர்வெல்லாம் விபரிக்கமுடியாது அது உணரணும் என்பார்க்ள. எட மக்கா, நமக்குத் தான் அந்த உணர்வு கைப்படலியே, அப்போ நானேன் பாடமகாக்கணும்ங்கிறேன் என்றால், உடனே சொல்லின் அர்த்தம் மாறிவிடும் என்பார்கள். வாழ்க்கை பத்தி நான் ஒரு வசனம் எழுதி அதப் படிச்ச நீ நான் வாளைப் பத்தி எழுதியிருக்கிறேன்னு நினைச்சா, அந்த ஒத்த சொல்ல விடு மத்த வசனத்தின்ர அர்த்தம் ஏதாச்சும் உனக்குள்ள ஏறியிருக்கா மக்கா? இதுல நான் இந்த சொல்ல மட்டும் சரியா எழுதியா நீ சிந்திக்ப்போற? வாழைப்பழமே வெறுக்கிற ஒருவனிற்கு அது வாளைப்பளமா இருந்தா என்ன வாழைப்பழமா இருந்தா என்ன? 
 
வேறொருவர் சொன்னார் 'ஓளவைப்பாட்டி' என்பதனை 'அவ்வைப்பாட்டி' என்று எழுதினால் அது ஒளவையினை வைப்பாட்டி ஆக்கிவிடுமாம். ஏனெனில் அவ்வைப்பாட்டி என்பது அந்த வைப்பாட்டி என்று பொருள்படுமாம். ஓளவைப்பாட்டி என்பது பிரிக்கமுடியாததாம். மறுபடியும் எனது கேள்வி என்னவெனில், கேக்கிறவன் வைப்பாட்டியைப்பத்தியே யோசிச்சிட்டிருந்தா, நான் ஒளவையினைப் பத்தி என்னத்தைப் பேசி என்னத்தைப் புகுத்தமுடியும்? பொழுதுபோக்கு விடயங்கள் இன்றி, கையில் நிறைய நேரமிருந்த ஒரு சமூகத்தில் புலவர்கள் வார்த்தை கொண்டு விளையாடினார்கள் என்பதற்காக, அவனவன் ஆலாய்ப்பறக்கிற இந்தக் காலகட்டத்தில் அதையே பிடித்துக்கொண்டு நாம் தொங்க முடியுமா?
 
மொழியியலாராய்ச்சியாளர்கள், ஏகப்பட்ட சொற்கள் சார்ந்து பல சுவாரசியமான தரவுகளை கண்டறிந்துள்ளார்கள். முதலும் கடைசியும் எழுத்த மாத்தாது நடுவில உள்ள எழுத்துக்களை ஒழுங்கு மாத்திப்போட்டாக் கூட சொல்லப்படும் விடயம் சார்ந்து மனித் மூளை தடங்கலின்றி அந்த வார்த்தைகளை வாசித்துச் செல்லும் என்பது அதில் ஒன்று. ஒழுங்கை மாத்துவதோடு ஏன் பரிசோதனையினை நிறுத்தணும், நடுவில சில எழுத்தை எடுத்தும்விடலாமே. நாம் அனைவரும் இதனைச்சோத்திதுப் பாக்லாம். பார்த்தீர்களா? உண்மையில் சொல்லப்படுகின்ற விடயம் சார்ந்து சிந்திக்காது எழுதுக்கூட்டிக்கொண்டிருந்தால் மட்டுமே அத்தகைய விதிமீறல்களை உணரமுடியும். எப்பிடி மாறும் காலத்திற்கு ஏற்ப நம்மை நாம் வினைத்திறன் மிக்கவர்களாக மாற்றி வருகின்றோமோ, அதைப்போல நாம் கருத்தாடும் ஊடகங்கள் சார்ந்தும் நமது வாழ்வியல் சார்ந்தும் நம் மொழியும் மாறித் தான் ஆகவேண்டும். ஒவ்வொரு மாற்றமும் இருக்கின்ற விதி சார்ந்து தவறாகத் தான் முதலிற் தோன்றும். 
 
ஆனால் தாயகத்தில் அதே பழைய தளம் இன்னமும் இருக்கின்றது தானே. அந்தத் தளத்தை நாம் உளப்பூர்வமாக நேசிப்பின்; அதை வாழவைப்பதற்காகவேனும் அதன் நீண்ட பாரம்பரியத்தையும் நடைமுறைகளையும் தக்கவைக்கத்தானே வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுப்பப்படலாம். தமிழ் எழுத்துப் பிழைகள் கூட தாயத்தை வாழவைத்தல் என்ற நோக்கில் நியாயப்படுத்த முனையப்படலாம். ஆனால் இந்த வாதத்தில் இரண்டு அடிப்படைப் பிழைகள் இருக்கின்றன. முதலில் நாங்கள் பிரிந்த தாயகம் இன்று அங்கு இல்லை. உலகமயமாக்கல் எமது தாயகத்தையும் விட்டுவைக்காது. கணனியும் ஸ்மாட்போனும் அங்கும் இருக்கின்றன. அவர்களும் பேஸ்புக் பாவிக்கிறார்கள். நாங்கள் பிரிந்த தேசத்தை அதை நாங்கள் பிரிந்த வடிவத்தில் எங்களால் கற்பனையில் மட்டும் தான் பேணமுடியும். உண்மையில் எங்கள் தேசத்தைத் தக்க வைத்தல் என்பது அதனைத் தக்கதாக அமைப்பதில் தான் இருக்கமுடியும். சங்கத் தமிழ் இன்றைய தமிழானது தமிழன் புலம்பெயர்ந்ததால் நிகழவில்லை, அது போல் இன்றைய தமிழ் தாயகத்திலும் மாறியே தீரும். அடுத்து, தாயகத்தை வாழவைப்பதற்கோ இல்லை குறைந்த பட்சம் நம் குடும்பத்தையேனும் வாழவைப்பதற்கோ, முதலில் நாம் வாழவேண்டும். அதற்கு புதிய தளம் சார்ந்து நமக்கு சுயபுத்தி வந்தே ஆகவேண்டும். சொல்லித் தர ஆலமரமும் கட்டைப் பஞ்சாயத்தும் இங்கு கிடைக்காது. புனிதம் பாரம்பரியம் என்று நாம் சொல்புத்திக்காக ஏங்குவது சாத்தியமற்றது. விதிகளை உடைக்கவேண்டும் என்பதற்காக மட்டும் மீறுவது எவ்வளவு தவறோ அந்ததளவிற்குத் தவறானது, விதி என்பதைக் கேட்டுக்கேள்வியின்றி, விதி உருவாகிய தளத்திற்கு முற்றிலும் புறம்பான ஒரு தளததில,; பின்பற்றுவதும். விதிக்குக் கட்டுப்பட்டுப் பயணிக்கும் தருணங்களில் எமது சிந்தனை கட்டுப்பட்டேயாகும், ஏனெனில் எம்மை இயக்கும் விதி நாம் சிந்தித்தது அல்ல. எனவே விதிதொடர்பில் விழிப்புணர்வு அவசியம்.
 
இலக்கு, ஓட்டத்தில் வெற்றி பெறுவது என்பதாக இருந்தால் எட்டுமுள வேட்டியோடு ஒடுவது சார்ந்தும் சிந்திக்கவேண்டும் என்பது மட்டுமே முன்வைக்கப்படுகிறது. ருவிற்றரில் ஏற்கனவே 140 கட்டுப்பாடாக இருக்கிறது, பல பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள் விண்ணப்பதாரரை 140க்குள் விபரிக்கச் சொல்லுகிறார்கள். போட்டியின் தளம் மாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ் எட்டுமுள வேட்டியோடு மட்டும் தான் எழுதும் என்றால், அவ்விதி அதற்குப் பாதகாமானதில்லையா?
 
மறுபடியும், எனக்குத் தோன்றுவதைப் பகிர்கிறேன். இது தவறு என்று காரணகாரியத்தோடு காத்திரமாக எவரேனும் முன்வைத்தால் மகிழ்வுடன் மாற்றிக்கொள்கிறேன். நன்றி.
 
குறிப்பு:
ஒருவேளை சாமானிய பேச்சுப்பாசையில் ஒருமையில் எழுதப்பட்ட சில வரிகள் யாரையேனும் சங்கடப்படுத்துகின்றனவோ தெரியவில்லை. தமிழ் பண்டிதர்கள் முன்னிலையில் ஒரு சாமானியனாக எழுப்பப்பட்ட கேள்விகள் என்ற ரீதியில் தான் அவ்வாறு அவை எழுதப்பட்டன. அவை பண்டிதரை நோக்கியதே அன்றி வாசகரை நோக்கியதல்ல.

 

Edited by Innumoruvan

சில பந்திகள் படித்து விட்டு மவுஸை தட்டி கட்டுரையின் முடிவில் "நன்றி: குடியரசு இதழ்" என்று ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். அப்படி ஏதும் இல்லை.

இந்தச் சொல்லுக்கு ஏன் இந்த "ழ", இதற்கு ஏன் "ள" என்று கேட்கின்ற மகளுடன் நான் படுகின்ற பாடு நினைவு வந்து போனது. சிந்தனையை தூண்டுகின்ற நல்ல ஒரு ஆக்கம்

நான் என்னுடைய மகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பொழுது நடந்த ஒன்றை சொல்ல வேண்டும்.

"காகம் வடையைக் கொத்திக் கொண்டு போனது" - இது அவளுக்கு புரியவில்லை.

"காகம் வடையை கொத்தி கொண்டு போனது" - இப்படி எழுதிக் கொடுத்தேன். இது புரிந்தது.

"வடையைக்" என்பதையும் "கொத்திக்" என்பதையும் அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. "வடையை" என்கின்ற போதே அவள் புரிந்து கொண்டாள்.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

சில பந்திகள் படித்து விட்டு மவுஸை தட்டி கட்டுரையின் முடிவில் "நன்றி: குடியரசு இதழ்" என்று ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். அப்படி ஏதும் இல்லை.

 

 

நன்றி சபேசன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். ஒரு சில இணையங்களையும் தெரிவு செய்த நாவல்களையும் தவிரத் தமிழில் எந்த இதழையும் படிப்பதில்லை. அதனால் 'குடியரசு இதழ்' சார்ந்த கருத்துப் புரியவில்லை.?

குடியரசு இதழ் தந்தை பெரியாரினுடையது. அவருடைய கட்டுரையோ என்று ஒரு சிறு சந்தேகம் வந்து விட்டது.

  • தொடங்கியவர்

குடியரசு இதழ் தந்தை பெரியாரினுடையது.

தகவலிற்கு நன்றி சபேசன். 

 

 

அவருடைய கட்டுரையோ என்று ஒரு சிறு சந்தேகம் வந்து விட்டது.

 

 

அதுசரி :D

தமிழ் செந்தமிழ், கொடும்ந்தமிழ் என்ற பிரிவினை உடையது. கொடுந்தமிழ் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும். செந்தமிழ் அவ்வாறு அல்ல. தற்காலம் செந்தமிழை ஆட்டம் காணவைக்கும் இயல்பை கொண்டிருக்கு.

 

சங்க பாடல்கள் கொடுந்தமிழில் இயற்றப்பட்ட நாடோடிப்பாடகளாக இருக்கலாம் என்ற அபிப்பிராயம் இருக்கு. அது வும் ஒரு காரணம் அவற்றை விளங்க இருக்கும் சிரமம்.

நியாயமான திசையில் தான் உங்கள் சிந்தனை பதியப்பட்டுள்ளது. மேடைத்தமிழ் குறித்து தற்போது ஒரு சிலர் ஆராய்கின்றார்கள் என நண்பருடன் சில மாதங்களுக்கு முன்னர் உரையாடினேன். அப்போது அறிந்துகொண்டது என்னவெனில் இப்போது கூட்டங்களில் பேசுகின்ற (பெரும்பான்மை தமிழக அரசியல் பேச்சு வடிவங்கள் )தமிழ் மேடைப்பேச்சு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்திருக்கின்றது. அதன் முன்னர் இழுவையுடன் கூடிய பிரசங்க வடிவ உரையாடலே இருந்துள்ளது. தற்போது வைகோ சீமான பேசுவது நூறு நூற்றியம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்தால் புரியும். பேச்சுவடிவ மாற்றம் என்பது ஆறுமுக நாவலர் மறைமலைஅடிகள் காலத்தில் ஆரம்ப்பிக்கின்றது இதில் பிரித்தானிய காலனித்துவமும் ஆங்கில பேச்சுவடிவமம் பின்னணியில் நிற்கின்றது. பின்னர் திராவிட அரசியல் கட்சிகளின் மேடைப்பேச்சு பெரிய மாற்றத்தை கொண்டுவருகின்றது. மாற்றம் என்பது இன்றைக்கும் நூறு நூற்றியம்பது ஆண்டுகளுக்குமிடையில் மிப்பெரிய மாற்றம். இதை தடுக்க முடியாது. அதுபோல் இன்றய காலம் கடந்த இருபது வருடத்தில் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியளவு கணனி உள்ளங்கையளவுக்கு வந்துவிட்டது. ஒரு மூன்று மாடிக்கட்டடத்தில் அடுகக் கூடியளவு புத்தகங்கள் ஒரு சிறு மின் வாசிப்புக் கருவிக்குள் அடக்கப்படுகின்றது. எழுத்துகள் இலகுவாகும் சுருங்கும் என்பது தவிர்க்க முடியாது. பிழை சரிகள் குறித்து அவனவனே பெரும்பாலும் முடிவெடுப்பான். எதிராளிக்க்கு காலத்துக்கேற்ப புரிந்தால் போதும் என்ற நிலையே இருக்கும். இதற்கு குறுக்காக மல்லுக்கட்டுபவர்களுடன் மினைக்கட இந்த வேகமான வாழ்க்கைச் சூழல் இடம்தரப்போவதில்லை.

 

மொழி ஒரு உரையாடல் கருவி. முன்னர் எனது உணர்வை எனது மொழியில் மட்டும்தான் முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்ற ஒரு மனோ நிலை இருந்தது. இங்கு பிறந்து வளர்ந்த தமிழ்ப்பிள்ளைகள் sorry என்னும் போதும் நாம் மன்னிச்சு கொள்ளுங்கோ என்று சொல்லும்போதும் உணர்வுகள் கருவிக்கு அப்பற்பட்டவை என்ற தெளிவு வந்துவிட்டது.

 

மொழி குறித்த அதிகப்படியான பிம்பங்கள் அதில் பிழை குறித்த அதிகப்படியான அலட்டல்கள் மிகைப்படுத்தல்கள் இருக்கின்றது. இது மொழியை வைத்து பிழைப்பு நடத்திய காலத்தில் மொழியை ஒரு அடக்கமுறைக்கருவியாய் பயன்படுத்திய காலத்தில் இருந்து எஞ்சி வருபவை.  ஒரு விடயத்தை அதன் அளவோடு பார்பதே சாலப்பொருந்தும் அதை மிகைப்படுத்துவதும் தவறு சுருக்குவதும் தவறு அந்தவகையில் என்னைப்பொறுத்தவரை மொழி ஒரு உரையாடல் கருவி அவ்வளவுதான். அதைக் காலத்துக்கேற்ப மாற்றியே காப்பாற்ற முடியும். ழவுக்கும் ளவுக்கும் பஞ்சாயத்து வைக்கவெளிக்கிட்டால் la தான் தீர்பாக வரும்.

  • தொடங்கியவர்
நன்றி மல்லையூரான் மற்றும் சுகன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். 
 
சுகன் உங்களது கருத்தோடு முற்றாக உடன்படுகிறேன்.
  • தொடங்கியவர்

நான் என்னுடைய மகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பொழுது நடந்த ஒன்றை சொல்ல வேண்டும்.

"காகம் வடையைக் கொத்திக் கொண்டு போனது" - இது அவளுக்கு புரியவில்லை.

"காகம் வடையை கொத்தி கொண்டு போனது" - இப்படி எழுதிக் கொடுத்தேன். இது புரிந்தது.

"வடையைக்" என்பதையும் "கொத்திக்" என்பதையும் அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. "வடையை" என்கின்ற போதே அவள் புரிந்து கொண்டாள்.

 

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இந்த “க்” சேர்க்கும் போது வருகின்ற குழப்பத்திற்கும் ஜேர்மன் மொழியின் பரிட்சயத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது. தமிழின் குறிப்பிட்ட வேறு ஏதேனும் பகுதிகள் குழந்தைகளிற்குக் குழப்பமாக இருந்ததை வேறு எவரேனும்
அவதானித்திருந்தால் உங்கள் குழந்தைகளின் குழப்பங்களையும் பகிருங்கள். 
 
அது போல, எமது முன்னோர்கள் மோதகம் கொழுக்கட்டை என்ற முற்றிலும் மாறுபட்ட, முற்றிலும் வேறு ஓசை எழுப்புகின்ற இரு சொற்களை வடிவத்தைத் தவிர முற்றிலும் ஒன்றான இந்த புலகாரங்களிற்குப் பெயராக ஏன் வைத்தார்கள் என்று எவரிற்கேனும் ஏதாவது கதைகள் தெரிந்தால் அதையும் பகிருங்கள். 
 
தொலைத்தொடர்புச சாதனங்கள் மற்றும் பிரயாண வசதிகள் வளாந்திராத ஒரு காலகட்டத்தில், வௌ;வேறு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்கள் தனித்தனியாகக் கண்டுபிடித்து உண்டு மகிழ்ந்த உணவுகள், காலப்போக்கில் அச்சமூகங்கள் சேர்ந்தபோது இரு வேறு பலகாரங்களாக நிலைத்திருக்கும் என்ற ஒரே ஒரு காரணத்தை மட்டுமே என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இதற்கு என்னிடம் எந்தச் சான்றும் இல்லை, ஆனால் ஒரே கிராமத்தில் கொழுக்கட்டையினையும் மோதகத்தையும் உருவாக்கி முற்றிலும் வேறுபட்ட பெயர்களை வைத்தார்கள் என்று நினைக்கமுடியவில்லை. அப்படி அவை ஒரு கிராமத்தில் உருவாகியிருப்பின் அது சார்ந்து
சுவாரசியமான காரணக் கதைகள் நிச்சயம் இருக்கும். அப்படி ஏதேனும் எவரிற்கேனும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

தமிழில் இருப்பது போன்ற புணர்ச்சி விதிகள் எதுவுமே ஜேர்மன் மொழியில் இல்லை. மற்றைய ஐரோப்பிய மொழிகளிலும் இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை.

பேசவதும் ஒரு மாதிரியும் எழுதுவது ஒரு மாதிரியும் இருக்கின்ற தமிழில் இப்படி "க்", "ச்" விகுதியாக வருவதை எங்கள் குழந்தைகள் புரிந்து கொள்ள உண்மையிலேயே சிரமப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக மக்கள் பேசும்போதோ எழுதும்போதோ பிழைவிடுகின்றனர்.

அதற்குக் காரணம் ஒருகணம் யோசிக்காமல் பேசுவது அல்லது எழுதுவது.

 

ஆனாலும் இவ்வாறான பிழைகளை பண்டிதர்கள் ஏற்றுக் கொண்டு

இலக்கணத்தில் இவ்வாறான பிழைகள்( வழுக்கள்) ஏற்பட அமைதியே ( அது இன்மையால் )

காரணம் என்பதால் அதையும் இலக்கணத்தில் சேர்த்திருக்கின்றனர்.


 

அவை வழுவமைதிகள்  எனப்படும்

இவை ஏழு வகைப்படும்


திணைவழுவமைதி

பால்வழுவமைதி

இட வழுவமைதி

கால வழுவமைதி

வினா வழுவமைதி

விடை வழுவமைதி

மரபு  வழுவமைதி

 

இவையெல்லாம் திட்டமிட்ட வழுக்கள் அல்லது பிழைகள் அல்ல

ஆதலால் இவையும் இலக்கணத்தில் சேர்க்கப்பட்டன.


திட்டமிட்டு விடும் எழுத்துப்பிழைகளால் ஒரு மொழி அழியப்போவதில்லை

ஆனால் இன்னொருமொழி, அதாவது தமிழ்மொழியைப் பிழையாக எழுதினால் அல்லது பேசினால் தமிழ்மொழியிலிருந்து திரிவுபட்ட இன்னுமொரு மொழி உருவாக வாய்ப்பிருக்கின்றது.

அது தமிழும் தமிழ் அற்றதுமான ஒரு இடைமொழியாக இருக்கலாம்.


உதாரணம் தமிழ் - மலையாளம் 

பல இணைய தளங்கள் வந்ததால் பல மொழிகள் எழுத்துப் பிழைகள் & இலக்கணத்தைவிட்டு பயணிக்கின்றது.

 

ஒரு ஆங்கிலேயனின் கவலை இந்த ஆசிய நாட்டுக்காரர்களால், தங்கள் மொழி அழித்துகொண்டுபோகின்றதென்று. இப்படி ஒவ்வொரு மொழிப்பற்றுள்ளவனும் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். 

 

நல்லதொரு திரி. உங்கள் கேள்வி நியாயமானது. நாங்களா எங்கள் பிழைகளை திருத்தும்வரை எங்கள் மொழி அழிவதை தடுக்க முடியாது.

 

அவசரத்தில் தட்டச்சு சொய்துவிட்டு பதிவேற்றும் போதும் பல பிழைகளை கவனிப்பதில்லை. அவசரம், இதுதான் எழுத்துப் பிழைக்கு முதல் காரணம், நான் பல தடவை விட்டுள்ளேன் மீண்டும் வாசிக்காமல். மற்றது தமிழில் தட்டச்சு செய்து பழக்கமின்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு திரி. அதற்குரிய பின்னோட்டங்களும்  பயனுள்ளவை. வணக்கம் இன்னுமொருவன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வு இன்னுமொருவன். மொழியை உறவாடும் ஊடகமாகவே நான் பார்க்கிறேன். எல்லா மொழிகளும் காலத்துக்குக் காலம் கூர்ப்படைவது இயற்கையே. உதாரணமாக நாம் தற்போது பேசும் ஆங்கிலமும் நூறு வருடங்களுக்கு முற்பட்ட ஆங்கிலமும் வித்தியாசமானது. சில பழைய ஆங்கில நாவல்களை வாசித்து விளங்கி கிரகித்துக்கொள்வதை கடினமாகக் கருத்துகிறேன். தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல ஆனால் எழுத்துப் பிழைகள் விடுவது மொழியின் கூர்ப்பின் அங்கம் அல்ல என்பதுடன் அது மொழியின் சிதைவில் ஊக்கியாகத் தொழிற்படும். ஒரு மனிதனின் வாழ்க்கையுடன் ஒரு மொழியை ஒப்பிடலாம் எனக் கருதுகிறேன். ஒரு மனிதனைப்போலவே ஒரு மொழியும், பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறுதியில் இறந்தும் விடுகிறது என்பது எனது அபிப்பிராயம். எப்படி ஒரு மனிதன் புகை, போதை மூலம் தனது ஆயுளைக் குறைக்கிறானோ, அதே போல எழுத்துப்பிழைகளும் ஒரு மொழியின் ஆயுளை குறைக்கின்றன. உண்மையில் தற்போது நாம் பேசுவது, தமிழா அல்லது தமிழின் ஒரு உபமொழியா என்னும் கேள்வி எழுகிறது. உதாரணத்துக்கு ஒரு பண்டைய தமிழ் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்களை ஒப்பிட்டால், நாம் தற்போது எழுதும் தமிழ் எழுத்துக்களிலும் இருந்து வேறுபட்டே இருக்கிறது. அதனை துறை சார் மேதைகள் தவிர வேறு எவரும் வாசித்து விளங்குவது கடினமாக இருக்கும்போது அதையும், நாம் தற்போது பேசுவதையும் "தமிழ்" என எவ்வாறு கூறலாம்? இன்னும் பல நூறு வருடங்களின் பின்னர் பேசப்படும், எழுதப்படும் தமிழ் நாம் தற்போது பாவிக்கும் தமிழை விட வேறாகவே இருக்கும். அப்போதும் அதை தமிழ் என அழைக்க முடியுமா?

 

ஒரு மொழியின் வாழ்க்கை வட்டம் மிக அதிகமாக இருப்பதாலும் தகவல்களைப் பேணும் வசதி மேம்படாததாலும் அதன் மரணத்தை மனிதர்கள் உள்வாங்க முடியவில்லை. தகவல் தொழில் நுட்பம் விருத்தியடைந்திருப்பதால், இன்னும் ஆயிரம் வருடங்களில் மொழியின் வாழ்க்கை வட்டத்தை மனிதன் உணர முடியும். அப்போது "வாழைப்பழம்" "வாலைப்பளம்"  எனவும் திரிபடைந்திருக்கலாம். அத்துடன் கணணி, இணையப் பயன்பாட்டில் ஆங்கிலத்தை சார்ந்து தமிழின் உள்ளீடு அமைவதால் தமிழில்  எழுத்துப்பிழைகள் அதிகரிக்கின்றன. இலக்கணத்தைப் பொறுத்தவரையில் இலக்கண விதிகள் தமிழ் விகாரமடைவதைத் தடுக்கின்றன ஆனால் நீங்கள் கூறியது போல, எம்மை இயக்கும் விதிகள், நாம் சிந்தித்தது அல்ல என்பதால், விதி மீறல்கள் அதிகரிக்கும் போது, விதி மாற்றங்களும் அதிகரிக்கும். அப்படியாயின் எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை விடுவது தவறல்லவே.

 

 

குறிப்பு - இந்தப் பதிவை, எழுத்துப்பிழை விடாமல் எழுத வேண்டும் என்று நேரம் செலவழித்து  மிகவும் முயன்று எழுதினேன், ஆனால் முடியவில்லை.

Edited by Thumpalayan

நண்பர்களே !

 

மொழி என்பது எப்பொழுதுமே பூரணமானது அல்ல. தொடர்பாடலில் மிக மிக தொல்லை தருவது மொழி. கணிதம் கூட ஒரு மொழிதான். இருக்கும் மொழிகளில் குறைந்த பட்சம், ஒரு திடமான வரையறைக்குள் பயணிக்கும் மொழிகளில் கணிதமும் ஒன்று. எமக்கு விளங்கவில்லை, முடியவில்லை என்பதற்காக கணித விதிகளை மாற்றுவோமா? அது எத்தகைய இடர்களுக்கு இட்டுச்செல்லும் என்பதை நான் கூறத்தேவையில்லை.

 

இனி சாதாரண மொழிகளுக்கு வருவோம். கட்டுக்கோப்பான கணித மொழிக்கே அந்த நிலமை என்றால் மிக அற்பமான விதிகளுக்கு இணங்க ஊடாடும் சாதாரண மொழிகளின் சிதைவு பன்மடங்கு இன்னல் பயக்கும். கணிதத்திலாவது நாம் தவறைக்கண்டுகொள்ளலாம். சாதாரண மொழிகளில் அந்த வாய்ப்புக் கூட இல்லை.

 

கட்டுக்கோப்பு மொழிக்கு உறுதுணையானது. அதன் நேரடிப்பயனாக சமூகத்திற்கும் உறுதுணையானது. மொழியை சிதைப்பதன் மூலம், அது உயிர்விக்கும் சமூகத்தை சிதைக்கலாம். மொழிமீதான பற்றின்மை சமூகத்தின் மீதான பற்றின்மையின் வெளிப்பாடே.

 

தமிழின் இனிமை வேறெங்கு உண்டு?

 

வெய்யோ    னொளிதன்மேனியில்      விரிசோதியின்          மறைய

பொய்யோ   வெனுமிடையாளொடு    மிளையானொடும்   போனான்

மையோ       மரகதமோ      மறிகடலோ       மழைமுகிலோ

ஐயோ          இவன் வடிவென்பதோர்     அழியா     அழகுடையான்

 

 - கம்பராமாயணம், அயோத்யாகாண்டம்.

 

இதில் கம்பரின் தமிழ்வாண்மை என்னவென்று சொல்ல? இதை அனுபவிக்கும் தரத்திற்கு எம்மை மெருகேற்றுவதை தவிர்த்து, இதை இரசிக்கும் தரத்தில் நானில்லை எனக்கூறுவது சரியல்ல.

 

உணமையான மொழிப்பற்றும் இனப்பற்றும் இருக்குமாயின், இந்தக் கேள்வியே எழாது. ஒரு மொழியை சரிவர அறிந்து கொள்வதும், பிரயோகிப்பதும் அந்த மொழிக்கு நாம் செய்யும் மரியாதை; கைமாறு.

 

அன்புடன்

- ஈழத்திருமகன் -

 

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தமிழில் 'ழ' மகிமை என்ற கூற்று தமிழ் தெரிந்த அனைவரிற்கும் தெரியும். ஆனால் எந்தப் பண்டிதனிற்கும் எங்கு 'ழ' போடுவது எங்கு 'ள' போடுவது என்று விதி எழுதத் தெரியவில்லை. கேட்டால், அது பழக்கத்தில் வருவது என்பார்கள். பாடமாக்கு என்பார்கள். ஒரு முதலீடடிற்கு ஒரு பயன் இருக்கவேண்டும். சரி 'ழ' எங்கு போடுவது என்று நான் பாடமாக்குகின்றேன், அதன் பலன் என்ன என்று கேட்டால், உச்சரித்துப் பார் இனிமை உணர்வாய் என்பார்கள். எனக்கு அந்த இனிமை தெரியவில்லை, அது என்ன என்று சற்று விபரிப்பீரா பண்டிதரே என்றால், உணர்வெல்லாம் விபரிக்கமுடியாது அது உணரணும் என்பார்க்ள. எட மக்கா, நமக்குத் தான் அந்த உணர்வு கைப்படலியே, அப்போ நானேன் பாடமகாக்கணும்ங்கிறேன் என்றால், உடனே சொல்லின் அர்த்தம் மாறிவிடும் என்பார்கள். வாழ்க்கை பத்தி நான் ஒரு வசனம் எழுதி அதப் படிச்ச நீ நான் வாளைப் பத்தி எழுதியிருக்கிறேன்னு நினைச்சா, அந்த ஒத்த சொல்ல விடு மத்த வசனத்தின்ர அர்த்தம் ஏதாச்சும் உனக்குள்ள ஏறியிருக்கா மக்கா? இதுல நான் இந்த சொல்ல மட்டும் சரியா எழுதியா நீ சிந்திக்ப்போற? வாழைப்பழமே வெறுக்கிற ஒருவனிற்கு அது வாளைப்பளமா இருந்தா என்ன வாழைப்பழமா இருந்தா என்ன? 
 
வேறொருவர் சொன்னார் 'ஓளவைப்பாட்டி' என்பதனை 'அவ்வைப்பாட்டி' என்று எழுதினால் அது ஒளவையினை வைப்பாட்டி ஆக்கிவிடுமாம். ஏனெனில் அவ்வைப்பாட்டி என்பது அந்த வைப்பாட்டி என்று பொருள்படுமாம். ஓளவைப்பாட்டி என்பது பிரிக்கமுடியாததாம். மறுபடியும் எனது கேள்வி என்னவெனில், கேக்கிறவன் வைப்பாட்டியைப்பத்தியே யோசிச்சிட்டிருந்தா, நான் ஒளவையினைப் பத்தி என்னத்தைப் பேசி என்னத்தைப் புகுத்தமுடியும்? பொழுதுபோக்கு விடயங்கள் இன்றி, கையில் நிறைய நேரமிருந்த ஒரு சமூகத்தில் புலவர்கள் வார்த்தை கொண்டு விளையாடினார்கள் என்பதற்காக, அவனவன் ஆலாய்ப்பறக்கிற இந்தக் காலகட்டத்தில் அதையே பிடித்துக்கொண்டு நாம் தொங்க முடியுமா?
 
மொழியியலாராய்ச்சியாளர்கள், ஏகப்பட்ட சொற்கள் சார்ந்து பல சுவாரசியமான தரவுகளை கண்டறிந்துள்ளார்கள். முதலும் கடைசியும் எழுத்த மாத்தாது நடுவில உள்ள எழுத்துக்களை ஒழுங்கு மாத்திப்போட்டாக் கூட சொல்லப்படும் விடயம் சார்ந்து மனித் மூளை தடங்கலின்றி அந்த வார்த்தைகளை வாசித்துச் செல்லும் என்பது அதில் ஒன்று. ஒழுங்கை மாத்துவதோடு ஏன் பரிசோதனையினை நிறுத்தணும், நடுவில சில எழுத்தை எடுத்தும்விடலாமே. நாம் அனைவரும் இதனைச்சோத்திதுப் பாக்லாம். பார்த்தீர்களா? உண்மையில் சொல்லப்படுகின்ற விடயம் சார்ந்து சிந்திக்காது எழுதுக்கூட்டிக்கொண்டிருந்தால் மட்டுமே அத்தகைய விதிமீறல்களை உணரமுடியும். எப்பிடி மாறும் காலத்திற்கு ஏற்ப நம்மை நாம் வினைத்திறன் மிக்கவர்களாக மாற்றி வருகின்றோமோ, அதைப்போல நாம் கருத்தாடும் ஊடகங்கள் சார்ந்தும் நமது வாழ்வியல் சார்ந்தும் நம் மொழியும் மாறித் தான் ஆகவேண்டும். ஒவ்வொரு மாற்றமும் இருக்கின்ற விதி சார்ந்து தவறாகத் தான் முதலிற் தோன்றும். 

 

 

மில்லியனுக்கு மேல் உள்ள ஆங்கிலத்தில் பல சொற்களின் உச்சரிப்பை வைத்து சொற்களின் எழுத்தை சொல்லாம். பல விதிகளும் உண்டு.இவற்றையும் மீறி(விதிகளை) இன்னும் பல சொற்கள் உச்சரிப்பை வைத்து சொல்லவே முடியாது. spelling bee ல் வரும் சொற்கள் இதற்கு மிக நல்ல உதாரணம்.முடிவு: பாடமாக்கியே ஆக வேண்டும்.
 
ஆனால் தமிழ் மொழி உச்சரிப்பை வைத்து சொற்களை பெரும்பாலும் எழுதி விடலாம்.அப்படி எழுத முடியாத ள,ழ உச்சரிப்புகளை பாடமாக்குவதில்  ஏனிந்த சோர்வுத்தனம்???
  • தொடங்கியவர்
நன்றி சஜீவன், வாத்தியார், வந்தியத்தேவன், குமாரசாமி (வணக்கம் உங்களிற்கும்), தும்பளையான், ஈழத்திருமகன் மற்றும் நுணாவிலான் உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும்.
 
தும்பளையான் கூறுகின்றதைப்போல் தகவற்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மொழியின் மருவல்கள் எதிர்காலத்தில் துல்லியமாக அவதானிக்கக்கூடியதாய் இருக்கும் என்பது உண்மையும் சுவாரசியமானதும் தான்.
 
எழுத்துப்பிழை என்பது சிதைவா கூர்ப்பா என்ற கேள்வியில் எனக்குச் சற்று மாறுபட்ட கருத்து இருக்கின்றது. சிதைவு கூட கூர்ப்பின் அச்சில் ஒரு ஊக்கியாகத்தான் தெரிகிறது. மியூட்டேஷன் என்பதை சிதைவு என்று கூடப் பார்க்கலாம். மாற்றம், சிதைவு, கூர்ப்பு என்பனவற்றிற்கிடையில் உள்ள மெல்லிய கோட்டு வித்தியாசம் பார்வைகள் சார்ந்தது தான். சிதைவு என்பது அதன் இன்றைய எதிர்மறை பொருளுடையதாகத் தான் எப்போதும் இருக்கவேண்டும் என்பதில்லை. ஒருவேளை சில சிதைவுகள் தான் தமிழ் மொழியின் நிலைப்பிற்கு அவசியமான மாற்றத்தை உருவாக்கவும் கூடும்?
 
எழுத்துப் பிழைகள் இணையவெளியில் நிகழ்வதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன—உள்ளீட்டில் உள்ள சிக்கல்கள் முதற்கொண்டு. அவற்றுள் 'ழ' மற்றும் 'ள' பிரச்சினையினை இங்கு சுட்டிக்காட்டியமைக்கான காரணம், அது "புலத்தில் தமிழ்" என்ற முனையில் ஒரு அடிப்படைப் பிரச்சினையினைச் சுட்டி நிற்கிறது என்பதாலேயே. தமிழ் மருவி வளர்ந்த சூழ்நிலையில், 'ழ' வும் 'ள'வும் பாவிக்கப்பட்ட சொற்கள் அதே உணர்வை உச்சரிப்போரிற்குள் புலத்தில் உருவாக்கத் தவறுகின்றது. குளப்பத்தைத் தோற்றுவிக்கின்றது. இந்நிலையில் அவ்வெழுத்துக்களின் தனித்துவத்தையும் தார்ப்பரியத்தையும் அவை உருவான சூழ்நிலையில் இருந்ததைப் போன்று உணரமுடியாத ஒரு தமிழனிடம் வெறும் 'விதி' இன் பெயரால் அவற்றைப் பாடமாக்கு என்பது நிலைக்கப்போவதில்லை.
 
மொழி தொடர்பாடல் சாதனமாக மட்டும் பாhக்கப்படும் இடத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை மொழிசார்ந்து முன்வைக்கப்படும் பயம் அல்லது கோபத்தின் அடிப்படை, மொழியினை மட்டும் தான் எந்த அர்ப்பணிப்பும் இன்றி எந்தச் செலவும் இன்றி நாம் மாறாது வைத்திருக்கலாம் எனப் பல தமிழர்கள் உணர்வதால் அது தான் தமிழனின் அடிப்படை ஆக முன்மொழியப்படுகிறது—தொடர்பாடல் சாதனத்திற்கு மேலாக அது ஆகிவிடுகிறது. அதாவது, தமிழன் மருவிக்கொண்டிருக்கிறான். உணவு, உடை, தொழில், நம்பிக்கை,பெறுமதி, பழக்கவழக்கம் எனத் தமிழன் மருவிக்கொண்டிருக்கிறான். தமிழ் மொழி மருவினால் அதனைத் தமிழ் மொழி என்று அழைப்பதா அல்லது அது வேறொரு மொழியாகிவிடுமா என்ற கேள்வியினை இதயசுத்தியாகக் கேட்கமுடிகின்ற எமக்கு, தமிழன் மருவினால் அவனைத் தொடர்ந்தும் தமிழன் என்று அழைக்கலாமா என்று கேட்கத்தோன்றுவதில்லை. ஏனெனில் அக்கேள்விக்குச் சாத்தியமான பதில்கள் சார்ந்து எமக்குப் பயங்கள் உள்ளன. இங்கு தான் சிக்கல் எழுகிறது.
 
என்னைப் பொறுத்தவரை, காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தமிழ் மருவுவதையும் கூர்ப்படைவதையும் புரிந்து ஏற்றுக்கொண்டு, என்ன தான் மாறினாலும் நாங்கள் பேசுகின்ற எங்களின் பொதுமொழியின் பெயர் 'தமிழ்' தான் என்று அடம்பிடித்துப் பாவிப்பது தான் தமிழிற்கு ஆரோக்கியமானது. ஆங்கிலத்தில் ஒரே சொல்லை பக்கத்துப்பக்கத்து நாடுகளில் வௌ;வேறாக எழுதிக்கொண்டு, அந்த வித்தியாசங்களைத் தெரிந்து கொண்டு, இரண்டையும் ஆங்கிலம் என்று அவர்கள் எந்த விவாதமுமின்றிக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். உலகின் மொழிகளில் இருந்தெல்லாம் சொற்களைத் தேவைக்கேற்பக் கடன்வாங்கி அவை உள்வந்ததும் அவற்றையும் ஆங்கிலம் என்றே கூறிக்கொண்டிருக்கிறார்கள். எங்களின் புனிதம் என்ற பரடைமில் தான் எங்களிற்கான பல சிக்கல்கள் தோன்றுகின்றன.
 
இப்போ உதாரணத்திற்கு, ஈழத்திருமகனின் கருத்து இவ்வாறு இருக்கிறது:
 
  "உண்மையான மொழிப்பற்றும் இனப்பற்றும் இருக்குமாயின் இந்தக்கேள்வியே எழாது. ஒரு மொழியைச் சரிவர அறிந்து கொள்வதும் பிரயோகிப்பதும் அந்த மொழிக்கு நாம் செய்யும் மரியாதை: கைமாறு."
இதைவிடத்தெளிவாக புனிதம் என்ற பரடைமை விளக்க முடியாது. இங்கு மொழி தொடர்பாடல் சாதனம் என்பதைத் தாண்டி பூசைக்குரியது ஆகிவிட்டது. அதன்பின்னர், மொழிபற்றிக் கேள்வி கேட்பது என்பது சாமி பற்றிக் கேள்விகேட்பதைப் போலவே ஆகிவிடும். அப்படிக்கேள்வி கேட்டால் நம்பிக்கையாளர்கள் புண்பட்டு போவர். 
இதனை ஈழத்திருமகன் இப்படிக் கூறுகின்றார்:
 
"ிமொழியைச் சிதைப்பதன் மூலம் அது உயிர்விக்கும் சமூகத்தைச் சிதைக்கலாம். மொழிமீதான பற்றின்மை சமூகத்தின் மீதான பற்றின்மையின் வெளிப்பாடே."
 
ஆக, ஈழுத்திருமகனின் பார்வையில் சமூகத்தை மொழிதான் உயிர்விக்கிறது. உயிர்விக்கும் என்ற சொல்லின் சரியான அர்த்தம் எனக்குத் தெரியவில்லை, உயிர்ப்போடு வைத்திருக்கும் என்று எடுத்துக்கொள்ளின், தமிழ் சமூகம் மாறாது பேணப்படும் தமிழ் மொழியினால் மட்டும் தான் தக்கவைக்கப்படும் என்கிறார். ஏனெனில் சமூகத்தின் இதர அங்கங்கள் எல்லாம் மருவிக்கொண்டிருக்கின்றன! 
 
தமிழ் மொழி பற்றி கேள்வி கேட்பதை விட்டு சரியாகப் பிரயோகிக்கவேண்டும் என்பது ஈழத்திருமகனின் நிலைப்பாடு. இது பல முனைகளில் எமது சமூகத்திற்குப் பரிட்சயமான ஒரு நிலைப்பாடுதான் என்பதால் இது பற்றி அதிகம் பேசத்தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒன்றை மட்டும் சொல்லலாம், ஒரு தமிழனிற்குத் தனது மொழி சார்ந்து பிரச்சினையும் கேள்வியும் எழுகிறது என்றால், அப்பிரச்சினை மற்றும் கேள்வி பற்றிய சிந்தனை புனிதப் பிரகடனத்தைக் காட்டிலும் மொழியின் இருப்பிற்கு உதவும் என்பது எனது அபிப்பிராயம்.
 
'தமிழின் இனிமை வேறெங்கு உண்டு' ? நானும் நீங்களும் ஆமாம் ஆமாம் என்போம். எமக்கு இது பொதுமை. அவ்வளவில் மட்டுமே உடன்படமுடிகிறது. ஆனால், தமிழின் இனிமை கம்பராமாயணத்தைப் படிச்சால் மட்டும் தான் கைப்படும் என்பதில்லை. மொழி ஒரு படத்தை வரைகிறது அல்லது உணர்வை உசுப்புகிறது என்றால் உசுப்புவது தமிழ்மொழி என்பதால் அது உசுப்பும் அனைத்து உணர்வும் ஓரேவாறுதான் இரு தமிழரிற்கு இருக்கவேண்டும் என்பதில்லை. எனக்கும் உங்களிற்கும் வௌ;வேறு உணர்வுகளில் சுவை இருக்கும். தமிழ் மொழியால் பிடிக்காத சுவையினையும் முன்வைக்க முடியும். சுவை என்பது சுவைப்பவரைச் சார்ந்தது மட்டுமே. எமக்கு இனிப்பது மொழி அல்ல. அந்த மொழி உணர்த்திய உணர்வு. அந்த உணர்த்தலை தமிழ் அலலாத பிறவும் (உதாரணம் : ஓவியம், இசை, வேற்று மொழி) நிகழ்த்த முடியும். கபிலனின் பாடலை நான் ரசிக்கச் செய்தது 'காடு' என்ற இற்றைக்கால இலக்கியம் தான். எங்கள் மொழி ஒரு புராதன மொழி என்பதால் அது சார்ந்த எங்கள் சிந்தனை கடிவாளமிடப்பட்டதாய் புராதமானதாய் மாற்றமற்றதாய் இருக்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
 
நுணாவிலான், பாடமாக்குவதில் சோர்வு என்பதல்ல பிரச்சினை. புhடமாக்கவேண்டிய அவசியத்தை என்னால் என்னை ஏற்றுக்கொள்ளப்பண்ணமுடியவில்லை.

Edited by Innumoruvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.