Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு விமான பயணமும் ஐயப்ப பக்தர்களும்

Featured Replies

இங்கு யாழ் களத்தில் பங்கு பற்றி கருத்தெழுதும் உறவுகள் பலரும் பல தரப்பட்ட விமான சேவைகளில்  பல்வேறு இடங்களுக்கு  பயணம் செய்து அனுபவம் உடையவர்களாக இருப்பீர்கள். நீண்ட தூர விமான பயணங்களின் பொது விமானத்தில் உணவு பரிமாறுவார்கள். அப்படி வழங்கப்படும் உணவு எல்லாருக்கும் பொருத்தமாக/ பிடித்த மாதிரி இருக்காது. விசேட உணவு விருப்பு / பழக்கம் உள்ளவர்கள் தமது உணவு பழக்கத்தை பொறுத்து பயண சீட்டை முன் பதிவு செய்யும் போதோ அல்லது பயணத்திற்கு 24 மணி நேரம் முன்பதாக பயணம் செய்ய இருக்கும் விமான சேவை நிறுவத்தை அழைத்தோ குறித்த உணவு பழக்கம் பற்றி அறிய தந்தால்  பயணத்தின் போது  விருப்பமற்ற அல்லது  உண்ண  முடியாத உணவை விமான பணியாளர்கள் வழங்குவதை தவிர்க்கலாம்.

 

அந்த வகையில் தெரிவு செய்ய கூடிய உணவுகள் 

 

Asian meal

Asian vegetarian meal

Muslim meal

Kosher meal

Hindu meal

Ovo-lacto vegetarian meal

Vegan/ absolute vegetarian  meal

Kids meal

 

 

மேலே சொன்னது ஒரு தகவல் பகிர்வுக்கு. அதற்கும் பதிவின் தலைப்பிற்கும் தொடபில்லை.

 

 

இயலுமான வரை ஒருவருடைய நடை உடை பாவனைகளை கொண்டு அவர்கள் பற்றிய முன் அனுமனக்களுக்கு வரக்கூடாது என்பது என்னுடைய விருப்பம். ஆனால் அதை பல சமயங்களில் கடைப்பிடிக்க முடியாது போய்விடுவது நிதர்சனம்.

 

 

 

 

 

அண்மையில் என்றால் இரண்டு மாதங்களுக்கு முன் விமான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது  ஏற்பட்ட அனுபவம்.

 

விமானத்தில் ஏறுவதற்கு காத்திருந்த போது பயணத்துக்கு காத்திருந்தவர்களில் சிலர், ஜீன்ஸ் செட், குளிர் ஜக்கட்  அணிந்து, அதற்கு எந்த விதத்திலும் பொருந்தாத கருப்பு சால்வைகளுடனும் தாடி வளர்த்தும் இருந்தாதை அவதானித்தலும் அவர்களை பற்றி எந்த கவனத்தையும் எடுக்க தோன்றவில்லை. பின்னர் விமானத்தில் ஏறி  எனது இருக்கையை தேடி இருந்து கொண்ட பிற்பாடு எனக்கு அருகில் யார் வரப்போகிறார்கள் என யோசித்து கொண்டிருக்க எனது இருக்கையை நோக்கி கறுப்பு  சால்வை அணிந்த குழுவினர் வந்து கொண்டிருந்தனர். எனது இருக்கையை அண்மித்ததும் ஒருவர் என்னை பார்த்து இவரும்  தமிழ் ஆளோ  தெரிவில்லை மற்றவர்களுக்கு சொல்லி கொண்டு வந்து எனக்கு அருகில் அமர்ந்தார். விமான பயணத்தில் பொதுவாக எனக்கும் அருகில் இருக்கும் முன் பின் தெரியாதவர்களுடன் பேசுவதற்கு தயக்கமாக இருக்கும், பேச்சு கொடுப்பதும் குறைவு. பெரும்பாலான பயணங்களில் எனக்கு அருகில் இருப்பவர்களும் என்னுடன் பேச்சு கொடுத்ததில்லை.  விமான இருக்கைகளை தெரிவு செய்யும் பொது ஜன்னல் ஓர இருக்கைகளை தெரிவு செய்வது வழாக்கம், பெரும்பாலான சந்தர்பங்களின் ஜன்னலூடு வெளியே பார்க்க முடியும், நித்திரை கொள்ளும் பொது  ஜன்னல் கரை ஓரளவுக்கு அசைந்து திருப்பி ஓய்வெடுக்க வசதி அதிகம் என எனக்கு இருப்பதால் அந்த தெரிவு. ஆனால் எழுப்பி செல்வதாக இருந்தால் பக்கத்தில் இருப்பவருக்கு தொந்தரவு செய்ய வேண்டும் என்பது சில நேரங்களில் வசதியீனம் தான். விமான பயணத்தில் அருகில்   இருப்பவருடன் பேசுவதில்லை என்பதை முடிவுக்கு கொண்டு வந்து, எனக்கு அருகில் இருந்த கருப்பு சால்வை போட்டவரிடம் நானும் தமிழார் தான் என சொல்லி வைத்தேன். அவர் இருக்கையில் அமரும் போது  அவரிடம் இருந்து வந்த வியர்வை நாற்றம் தாங்க முடியவில்லை. தான் ஐயப்பனுக்கு மாலை போட்டிருப்பதாகவும், ஐயப்ப தரிசனத்துக்கு இந்தியாவுக்கு போவதாகவும், கனடாவில் 15 - 20 வருடமாக இருப்பதாகவும், தனது மகன் பொறியியல் படிதிருப்பதகவும், ஏனைய பிள்ளைகளும் பல்கலை கழக படிப்பில் இருப்பதாகவும் சொன்னார். இவ்வளவையும் கேட்டபின் எனக்கு தோன்றியது இத்தனை வருடமாக கனடாவில் இருக்கிறவருக்கு, பல வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் ஒருவர், கிட்ட தட்ட இந்தியாவை சென்றடைய 20 மணி நேர விமான பயணமாவது செய்ய வேண்டும். பயணத்தில் வியர்க்கும், உடல் மணக்கும், குறிப்பாக அக்குள் பகுதி தான் அதிகம் வியர்த்து அதிகளவில் கேட்ட மணத்தை  கொடுப்பது எல்லாருக்கும் தெரியும். அதை கட்டுப்படுத்த பலதரப்பட்ட பொருட்கள இப்போது கிடைக்கிறன. கிடைக்கும் பொருகளில் வாசனை திரவியம் சேர்காத வகைகளும் உண்டு. நாளாந்தம் பாவிக்க விட்டாலும் நெடுந்தூர பயணத்தின் போது  பாவித்திருந்தால் பக்கத்தில் இருப்பவருக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்கலாம் என்று அவருக்கு ஏன்   தோன்றவில்லை என எனக்குள் எழுந்த கேள்வியை தவிர்க்க முடியவும் இல்லை. அவர் மீது ஒரு விதத்தில் எரிச்சலும் வந்தது.

 

சரி இனி என்ன எனக்கு பக்கத்தில் யார் இருக்க போகிறார்கள் என்பது எனது கட்டுபாட்டில் இல்லை தானே என என்னை நானே சமதப்படுத்தி கொண்டு இருந்தேன். அடுத்ததாக உணவு பரிமாறிய பொது அவரும் அவரது ஐயப்ப பக்த குழுவினரும் மரக்கறி உணவு கேட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். நானும் அவ்வாறு தான் கேட்டிருந்தேன். எல்லாருக்கும் உணவு கொடுக்க முன்னர் விசேட உணவு கேட்டவர்களுக்கு உணவு பரிமாறபட்டது. எனக்கும் அவருக்கும் கடலை கறியுடன் சோறும்  ஏனைய சில பண்டங்களும் கிடைத்தன. சாப்பிட்டு முடியும் தருவாயில் எனக்கு அருகில் இருந்தவர் செய்த காரியம் எனக்கு  இன்னும் அதிர்ச்சியை தந்தது. இருக்கையில் இருந்து எழுந்து தனது பயணப்பையை  திறந்து வீட்டில் இருந்து சமைத்து வந்த சாப்பட்டை ( புளி சாதமாக இருக்கும் என நினைக்கிறேன்) வலு சாவகாசமாக திறந்து தனக்கும் எடுத்து கொண்டு தந்து குழுவினருக்கும் கொடுத்து ஒரு வித பயமும் இல்லது சாப்பிட்டார்.

 

எனது அறிவுக்கு எட்டிய வகையில் வீட்டில் சமைத்த உணவுகளை விமான பயணத்தின் பொது எடுத்து செல்ல முடியாது என்பது எனது எண்ணம். சிறிய ஏற்கவே பொதி செய்யப்பட சிற்றுண்டிகளுக்கு தடை இல்லை என நினைக்கிறன்.  வீட்டில் சமைத்த உணவை கொண்டு வருவது தடை என்றால் அவர் அப்படி கொண்டு வந்து உண்டது பற்றி உங்கள் கருத்து என்ன?

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செயல்கள் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கும்.
நமது ஆட்கள், தமது பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள முன் வரவேண்டும்.
ஐயப்பனுக்கு, விரதம் இருந்து பிரயாணம் செல்பவருக்கு, விமானப் பயணத்தில் புளிச்சாதம் சாப்பிடாமல் விரதம் இருக்க முடியாதா?
சிலர் இங்குள்ள ஆஸ்பத்திரிகளில் இருக்கும் போதும், வீட்டிலிருந்து இடியப்பம் கொண்டு வந்து கொடுப்பதைக் கண்டுள்ளேன்.
எமது உணவுக்குள் போட்ட வாசனைப் பொருட்கள் மற்றவர்களுக்கு, சங்கடத்தை ஏற்படுத்தலாம்.... தயவு செய்து இப்படியான, செயல்களை நம்ம‌வர்கள் தவிர்க்க வேண்டும்.
"ரோமுக்குப் போனால்.. ரோமனாயிரு, இஸ்ரேலுக்குப் போனால்... யூதனாயிரு" என்று ஒரு பழமொழி உண்டு, அது முடியாதவர்கள்... ஊரிலேயே இருக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மனித 'நாகரீகம்' என்பது  இயலுமானவரையில் மற்றவனுக்கு அலுப்புக் கொடுக்காமல் வாழ்வது என்பது தான் நான் விளங்கிக் கொண்ட விதமாகும்!!

 

பொதுவாக இந்தியர்கள் (இதில் எம்மவரும் அடக்கம்) பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதமானது, உலகத்திலுள்ள மற்ற எல்லா மனிதர்களும், தங்களுக்காகத் தான் படைக்கப் பட்டிருக்கின்றனர் , என்ற தோரணையில் தான் இருப்பது வழக்கம்.

 

ஆனால் விமானத்தில், மருத்துவ ஆலோசனையின் படி சாப்பாடு கொண்டுபோகலாம் என நினைக்கிறேன்!

மற்றும்படி அனுமதிக்க மாட்டார்கள் எண்டு தான் நினைக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் விமானத்தில், மருத்துவ ஆலோசனையின் படி சாப்பாடு கொண்டுபோகலாம் என நினைக்கிறேன்!

மற்றும்படி அனுமதிக்க மாட்டார்கள் எண்டு தான் நினைக்கிறேன்! 

 

சிறு திருத்தம், புங்கை.

அமீரகத்திலிருந்து புறப்படும் படு சிக்கன விமான நிறுவனங்கள்(Budget Airlines) சிலவற்றில் (ஏர் அரேபியா, இன்டிகோ மற்றும் இன்ன பிற) நாம் வீட்டிலிருந்தே கட்டுச்சோறு கட்டி எடுத்துச் சென்று விமானத்தினுள்ளே சாப்பிடலாம். பாத்திரம், பண்டங்களை உள்ளேயே அலம்பலாம். ஏனெனில் இங்கிருந்து ஆண்டுதோறும் இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் மிக அதிகமான பயணிகள்,  உழைப்பாளிகளே..!

 

விமான நிறுவனங்களுக்கிடையேயான வணிகப் போட்டிகளினால், பயணிகளை தன் பக்கம் இழுக்க, விமான பயணத்தின் செலவை குறைக்க என்ன வழியென யோசித்ததில் கிடைத்த அற்புத யோசனை இது..! விமானத்தினுள்ளே வழமையாக வழங்கப்படும் சாப்பாடு, மது வகைகளை மற்றும் பயணக்காப்பீடு முதலியவற்றை நீக்குதல்.. :icon_idea:

இந்த நிறுவன விமானங்களில் பறப்போர்கள், தேவைப்படின் தங்கள் வீட்டிலிருந்தே சாப்பாடு மட்டும் பொட்டலங்கட்டி எடுத்து வரலாம்(சர்வதேச விமான பாதுகாப்பு சோதனைகளின் விதிகளுக்குட்பட்ட முறையில்).

 

வசதி படைத்தவர்கள் அதிக விலை கொடுத்து விமானத்தில் வழங்கப்படும் சாப்பாடையும் (இருப்பு இருந்தால்) கட்டணம் செலுத்தி வாங்கி உண்ணலாம், அல்லது பயண முன்பதிவு செய்யும் போதே என்ன உணவு வேண்டுமென குறிப்பிட்டு பதிவும் செய்யலாம்.

 

தமிழக தொடருந்துகளில், இரவில் பயணம் செய்தால் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் முதலிய நகரங்களில் பின்னிரவில் இந்நிலையங்களில் தொடருந்து நிற்கும்போது, ஆழ்ந்த தூக்கத்திலும் "சார்..டீ...காபி..சார்..டீ...காபி" என பண்டம் விற்போரின் குரல்கள், தூக்கத்திலிருப்போருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும்...அதேமாதிரியே இந்த விமானங்களிலும் உணவுத்தட்டேந்தி விற்பனை செய்யவரும் பாவையரைக் கண்டால், சிறிதே எரிச்சலும் வரும்! :rolleyes:

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பரிஸ் டிஸ்னி லான்டுக்கு போயிருந்த போது பாத்தேன்.எம்மவர்கள் தாம் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவுப்பொட்டங்களை கூடியிருந்து உண்டார்கள்.

இதெல்லாம் அதிகமான எங்கட ஆக்களுக்கு பெரிய விசயமில்லை.

 

'நத்தையைக் கொண்டு வந்து மெத்தையில வைச்சாலும்' என்ற மாதிரிதான் நடப்பார்கள்.

 

பல வைபவங்களில் உணவு பகிர்ந்த அனுபவமுண்டு. சீய்... என்று போய்விடும்.   இரண்டாயிரம் மூவாயிரம்  பவுண்சில் சீலை கட்டி / சூட்டுப்  போட்டு வருவார்கள். பழக்க வழக்கம் பற்றி சொல்லி வேலையில்லை. சிறிலங்காவில் உள்ள அகதி முகாம்களில் கூட அப்படி நடக்க மாட்டார்கள்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் குளம். இதைப் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். இவர்களைப் போன்றவர்களை அவர்களது பிள்ளைகள்தான் திருத்தி எடுக்க வேண்டும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய  தலைமுறை  திருந்தாது

அடுத்த தலைமுறை  நாடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் எனது விமானப்பயணத்திலும் இப்படி நடந்தது.

நான் எழுதும் கதையிலும் அதில் ஒரு சிறுபகுதியை மாத்திரம் குறிப்பிட்டு எழுதி இருந்தேன்.

உண்மையில் இப்படியான பல விடையங்கள் பேசப்பட வேண்டும் என்பதே எனது அபிப்பிராயமும் கூட அந்த வகையில் நல்லதொரு விடையத்தை எடுத்துள்ளீர்கள்.

 

நன்றி குளக்காட்டான் அண்ணா பதிவுக்கு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பரிஸ் டிஸ்னி லான்டுக்கு போயிருந்த போது பாத்தேன்.எம்மவர்கள் தாம் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவுப்பொட்டங்களை கூடியிருந்து உண்டார்கள்.

 

இதில் தப்பிருப்பதாக  தெரியவில்லை.

நானும் குரூப்பாக போகும் போது கொண்டு செல்வதுண்டு.  ஏன் இந்த நாட்டவரே கொண்டு வந்து தான் சாப்பிடுகிறார்கள்.

ஆனால் என்ன  கொண்டு வந்து சாப்பிடுகின்றோம் என்பதைப்பொறுத்தது.

(சோறும் மீன் கறியும் அல்லது கருவாட்டுக்கறியும் என்றால் நல்லது :lol: )

  • தொடங்கியவர்

தமிழ் சிறி, புங்கையூரன்  உங்கள் கருத்துக்கு நன்றி.

 

நான் நினைத்திருன்தேன்  வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு செல்ல முடியாது என்று. அப்படி வேண்டும் என்றால் பாதுகாப்பு சோதனை முடிந்த பின் இருக்கும் உணவு கடைகளில் வாங்கி கொண்டு செல்ல வேண்டும் என்று.

 

இராஜ வன்னியனின் கருத்தை பார்க்க விமான நிறுவனங்கள் உணவு எடுத்து செல்ல அனுமதிக்கும் போல் உள்ளது.

 

 

சிறு திருத்தம், புங்கை.


அமீரகத்திலிருந்து புறப்படும் படு சிக்கன விமான நிறுவனங்கள்(Budget Airlines) சிலவற்றில் (ஏர் அரேபியா, இன்டிகோ மற்றும் இன்ன பிற) நாம் வீட்டிலிருந்தே கட்டுச்சோறு கட்டி எடுத்துச் சென்று விமானத்தினுள்ளே சாப்பிடலாம். பாத்திரம், பண்டங்களை உள்ளேயே அலம்பலாம். ஏனெனில் இங்கிருந்து ஆண்டுதோறும் இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் மிக அதிகமான பயணிகள்,  உழைப்பாளிகளே..!

 

விமான நிறுவனங்களுக்கிடையேயான வணிகப் போட்டிகளினால், பயணிகளை தன் பக்கம் இழுக்க, விமான பயணத்தின் செலவை குறைக்க என்ன வழியென யோசித்ததில் கிடைத்த அற்புத யோசனை இது..! விமானத்தினுள்ளே வழமையாக வழங்கப்படும் சாப்பாடு, மது வகைகளை மற்றும் பயணக்காப்பீடு முதலியவற்றை நீக்குதல்.. :icon_idea:

இந்த நிறுவன விமானங்களில் பறப்போர்கள், தேவைப்படின் தங்கள் வீட்டிலிருந்தே சாப்பாடு மட்டும் பொட்டலங்கட்டி எடுத்து வரலாம்(சர்வதேச விமான பாதுகாப்பு சோதனைகளின் விதிகளுக்குட்பட்ட முறையில்).

 

வசதி படைத்தவர்கள் அதிக விலை கொடுத்து விமானத்தில் வழங்கப்படும் சாப்பாடையும் (இருப்பு இருந்தால்) கட்டணம் செலுத்தி வாங்கி உண்ணலாம், அல்லது பயண முன்பதிவு செய்யும் போதே என்ன உணவு வேண்டுமென குறிப்பிட்டு பதிவும் செய்யலாம்.

 

தமிழக தொடருந்துகளில், இரவில் பயணம் செய்தால் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் முதலிய நகரங்களில் பின்னிரவில் இந்நிலையங்களில் தொடருந்து நிற்கும்போது, ஆழ்ந்த தூக்கத்திலும் "சார்..டீ...காபி..சார்..டீ...காபி" என பண்டம் விற்போரின் குரல்கள், தூக்கத்திலிருப்போருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும்...அதேமாதிரியே இந்த விமானங்களிலும் உணவுத்தட்டேந்தி விற்பனை செய்யவரும் பாவையரைக் கண்டால், சிறிதே எரிச்சலும் வரும்! :rolleyes:

 

இது புதிய தகவல் நன்றி 

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் ஐயப்பன் சாமி பக்தர்களில் இருந்து அனேகமாக ஒரு துர் வாடை வரும். கட்டுநாயக்காவில் ஒரு தரம் கண்டேன். கறுத்த  மேற்சட்டை, கறுத்த  வேட்டி , ஒரு துண்டு முக மெல்லாம் தாடியுடன் இருப்பார்கள். இவர்களில் இருந்து வரும் துர்நாற்றம் சொல்லி வேலையில்லை. பிக்னிக் அல்லது தூர இடங்களுக்கு (காரில்) செல்லும் போது சாப்பாடு கட்டிக்கொண்டு போவது பிழையில்லை. அதற்குரிய இளைப்பாறும் இடங்களில் (ரெஸ்ட் ஏரியா) நிறுத்தி சாப்பிடலாம் ஆனால் விமானப் பயணங்களின் போது புளிச்சாதம் கட்டிக்கொண்டு வந்தது டூமச் :o . உதாலதான் அவனவன் எங்களை மதிக்கிறான் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேலைத்தேச நாடுகளுக்கு வந்தும் இன்னும் நம்மவர்கள் தங்களில் இருக்க கூடிய சில வேண்டாத பழக்கவழக்கங்களை கூடவே கொண்டு திரிகிறார்கள்...அதில் குளம் அண்ணா சொன்னவையும் தான்..ஒவ்வொரு நாடுகளிலிருந்து இந்தியா பயணமாகும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் கூடவே நெய் நிரப்பபட்ட தேங்காய் மற்றும் இதர பொருட்களையும் எடுத்து செல்பவர்கள் என்று முன்னரே அறிந்திருக்கிறன்..

நேற்றைய தினம் இந்த செய்திகளை மனதில் வைத்துக் கொண்டு புளிச்சாதமும் இந்தியாவுக்கு பயணம் போகுதாமே என்று ஒருவரிடம் கதையை கொடுத்து பார்த்தேன்..அவர் ஆமாம் உண்மை தான் என்று சொன்னார்..ஐயப்பன் பக்தர்களுக்கு விமானத்தில் கொடுக்கும் உணவு பிடித்து கொள்வதில்லையாதலால் கைப்பையில் சாப்பாடு எடுத்து செல்கிறார்கள்,அது மட்டுமல்ல சில நாட்களுக்கு பழுதாகமல் இருக்கும் என்பதற்காகவும் இப்படியான உணவுகளை எடுத்து செல்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்...

சிலவேளை ஐயப்பன் குளிக்க வேண்டாம் பல்லு விளக்க வேண்டாம் என்று சொன்னாரோ தெரியாது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.