Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாமி நிழலியானந்தாவின் வாழ்வும் அருளுரைகளும்..

Featured Replies

முன்னுரை: சுவாமிகளின் சூழல் மற்றும் வாழ்க்கை பற்றி சின்ன அறிமுகம்.

 

த(ப்)போ வனத்தில் சுற்றிலும் மரங்களும் கறிக்காக வளர்க்கப்படும் மான்களும் ஆடுகளும் நன்கு வளர்ந்த மாடுகளும், கேரிக் கொண்டு இருக்கும் கோழிகளும் நிறைந்து இருக்க,

 

சுற்றி வர பக்தைகள் மெய்  மறந்து இருக்க,

 

கால் பாதத்தில் உள்ள நன்கு வளர்ந்த கழுவி சுத்தப்படுத்தாத நக்ங்களை மட்டும் படம் பிடித்து அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று விளம்பரப்படுத்த போட்டி போடும் விளம்பரக் கம்பெனிகள் சூழ்ந்து இருக்க

 

சுவாமி நிழலியானந்தாவின் ஆச்சிரமம் தன் வழக்கம் போல மாலை 6 மணிக்கு களை கட்டிக் கொண்டு இருந்தது.

 

உள் நாட்டுக்குள் இப்படி ஒரு ஆச்சிரமம் வைத்தால் சட்ட மற்றும் அரசியலமைப்பு பிரச்சனைகள் வரும் என்பதால் நாடு கடந்து இவரது ஆச்சிரமம் இருக்கின்றது. இங்கு வரும் பக்தர்கள் வாசலில் செருப்பை (தம் மூளையையும்) கழட்டி வைத்தால் பாதுகாப்பாக திருப்பி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு தொங்குகின்றது. வாசலில் Mental detectors மூலம் துருவித் துருவி ஆராய்ந்த  பின்னே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

 

நெடிதுயர்ந்த மரங்கள் சோலையாக வளர்ந்து இருக்கும் வீதியின் உள்ளே கொஞ்ச தூரம் சென்றபின் தான் சுவாமி நிழலியானந்தாவின் பிரதான மடம் இருக்கு. முக்கியமாக அவரது சயன அறை அங்கு தான் இருக்கு. இரவு 10 மணிக்கு பின் எந்த ஆணுக்கும் அங்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக எவராவது கையில் கமரா போன்ற ஒரு சாதனத்துடன் வந்தால் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்.

 

எந்த விடயங்களிலும் செயற்கையை விரும்பாத சுவாமிகள் என்பதால் அவருக்கு விசிறி விசுக்க 10 இளம்பெண்களும், குடை பிடிக்க இன்னும் 10 பேரும் எப்பவும் இருப்பர். பட்டு மெத்தை பாவித்தால் பட்டுப் பூச்சிகள் பாவம் என்பதால் புலித்தோல்களை அடுக்கடுக்காக அடுக்கிய மெத்தையில் வைரக்கல் பதிச்ச கட்டிலில்தான் சுவாமிஜி உறங்குவார்.

 

பொதுவாக சுவாமிகள் மிகவும் அமைதியானவர். நீண்ட உறக்கம் கொள்ளும் போது எவராவது வீடியோ வெளியிட்டு குழப்பினால் மட்டுமே தன் உறக்கத்தில் இருந்து விழித்து உருத்திரம் கொள்வார்.

 

அவருக்கு பிடித்த புராண பாடல் இதுதான்:

 

"உறங்குகின்ற கும்பகன்ன! உன்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்".

"என்றும் ஈறு இலா அரக்கர் இன்பமாய வாழ்வு எலாம்
சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்
இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே
அன்று அலைத்த செங்கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார்".

 

இப்படியாக சுவாமி மக்களுக்காக தன் வாழ்நாளை அர்பணித்து வாழும்போது இடைக்கிடை அவர் சில வார்த்தைகளை உதிர்ப்பார். அப்படியான வார்த்தைகளை மகா வாக்கியங்கள் என்று சொல்லுபவர்கள் உண்டு. அவரது எதிரிகள் அது அவர் "மப்பில் உளறுவது" என்றும் சொல்வர்.

 

இப்படியாக அவர் வாழ்ந்து சொன்ன மற்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் வார்த்தைகளைத்தான் இங்கு பதியப் போகின்றோம். இதை வாசித்து வளம் பெறுவீர்கள் அல்லது பிள்ளை பெறுவீர்கள் அப்படியும் இல்லாட்டி கல்லடி படுவீர்கள் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்

 

நன்றி

சுவாமி நிழலியானந்தாவின் பக்த கேடிகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எது விற்பனைக்குகந்தது என்பதை அறிதலே சுவாமிகளின் அருளுரைதானே

 

எமது  எதிர்த்தாக்குதல் எதுவும் தங்களுக்கு இராது

அது தங்கள் பக்தைகளுக்கு மட்டுமே இருக்கும் என்பதை அறியத்தருகின்றோம்

  • தொடங்கியவர்

சுவாமி நிழலியானந்தா அருளியவை:

 

1.Too much worry; spoil the body.

Little வெறி spoil the Worry:

 

2. தப்பை தப்பாக செய்தால் தான் தப்பு. தப்பை தப்பில்லாமல் செய்தால்
தப்பில்லை. எந்த தப்பையும் எவர் தப்பில்லாமல் செய்கின்றாரோ அவரே
நல்லவராகின்றார். அதே தப்பை தப்பு தப்பாகச் செய்பவர் தப்பு பேர்வழி
ஆகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி நிழலியானந்தாவின் பக்த கேடிகள்

ha ha 

  • தொடங்கியவர்

3. புரியாணியில் முட்டை வைக்காத Restaurant உம் வாழ்க்கையில் காதலிக்காத மனிதரும் ஒன்றுதான். இருவரும் வெற்றி பெறப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல தத்துவம், 
வாழ்க வளர்க சுவாமி நிழலியானந்தா.  :D


சாப்பாட்டு ராமன் என்பது தங்களின் தத்துவங்களில் தெரிகிறது  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

3. புரியாணியில் முட்டை வைக்காத Restaurant .

புரி ஆணியில் முட்டையை வைத்தால் அது உடைந்துவிடும்

அதனால் வைக்காமல் விட்டிருப்பார்கள். :D  

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ..நீங்கள் தத்துவம் மட்டும்தான் சொல்லுவியளா..? அல்லது பக்தர்களின் சந்தேகம்களையும் தீர்த்துவைப்பியளா..? வெளியில் இருந்து நிறையக்கேள்விகள் வருகின்றன..உங்கள் சார்பாக நிறைவெறியில் நீங்கள் உளறிய தத்துவங்களை பொறுக்கிவைத்திருக்கேன் போட்டுவிடட்டா..?

  • தொடங்கியவர்

ஜீ..நீங்கள் தத்துவம் மட்டும்தான் சொல்லுவியளா..? அல்லது பக்தர்களின் சந்தேகம்களையும் தீர்த்துவைப்பியளா..? வெளியில் இருந்து நிறையக்கேள்விகள் வருகின்றன..உங்கள் சார்பாக நிறைவெறியில் நீங்கள் உளறிய தத்துவங்களை பொறுக்கிவைத்திருக்கேன் போட்டுவிடட்டா..?

 

தாரளமாகக் கேட்கலாம். கேட்கப்படும் கேள்விகளில் சிறந்த கேள்விகளுக்கு காதைப் பொத்தி ஒரு பரிசு வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
சரி ஜி..முதலாவது கேள்வி..லாசப்பலுக்கு முருக்கங்காய் வாங்க வந்த அன்பர் தனது வங்கிகணக்கை சரிபார்த்தபின் ஈமெயிலில் அனுப்பி வைத்தது..
 
உலகத்தில் ஓசியில் திறக்க கூடிய எல்லா கணக்கும் (பேஸ்புக்,றுவிட்டர்,யூடிப்,புளோக்கர்) நல்லா ஓடுது வங்கி கணக்குமட்டும் எப்பபாரு பூஜ்ஜியத்தில நிக்குது..ஏன் ஜீ..???

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விடயங்களிலும் செயற்கையை விரும்பாத சுவாமிகள் என்பதால் அவருக்கு விசிறி விசுக்க 10 இளம்பெண்களும், குடை பிடிக்க இன்னும் 10 பேரும் எப்பவும் இருப்பர். பட்டு மெத்தை பாவித்தால் பட்டுப் பூச்சிகள் பாவம் என்பதால் புலித்தோல்களை அடுக்கடுக்காக அடுக்கிய மெத்தையில் வைரக்கல் பதிச்ச கட்டிலில்தான் சுவாமிஜி உறங்குவார்.

பட்டுப்பூச்சிகளில் சுவாமிகள் வைத்திருக்கும் அளவு கடந்த கருணை, என் இதயத்தைத் தொட்டுச் செல்கின்றது!

 

ஆனால் தோலை இழந்த புலிகள், கட்டாயம் மோட்சத்தில் வீணை வாசித்துக்கொண்டிருக்கும் என்பதையும் அறிவேன்!

 

ஆக மிஞ்சி மிஞ்சிப் போனால், ஐந்து பக்தைகள் யாழ் களத்தில் இருக்க, சுவாமிக்கு இவ்வளவு பக்தைகள் எங்கிருந்து தான் கிடைக்கிறார்களோ? :o

 

எல்லாம் அவனது அருள்!!! :D

  • தொடங்கியவர்

உலகத்தில் ஓசியில் திறக்க கூடிய எல்லா கணக்கும் (பேஸ்புக்,றுவிட்டர்,யூடிப்,புளோக்கர்) நல்லா ஓடுது வங்கி கணக்குமட்டும் எப்பபாரு பூஜ்ஜியத்தில நிக்குது..ஏன் ஜீ..???

 

மனிதனது வாழ்க்கையே பூச்சியத்தில் இருந்துதான் ஆரம்பிக்குது. பூச்சியத்திலே ஒரு ராச்சியம் என்று எம் முன்னோர்கள் எமக்கு தள்ளியிருப்பவையும் ஏராளம். ஒருவரது வங்கிக் கணக்கு பூச்சியமாக இருக்கும் போதுதான் அரச உதவிகள், welfare உதவிகள் என்று எம் பு.பெ வாழ்க்கை பெரும் மோட்சம் அடையும்.

 

உங்கள் வங்கிக் கணக்கு பூச்சியத்தினை அடையும் போது நீங்கள் கண்டு கொள்ளக் கூடிய உண்மைகள்.

 

1. மப்புக்காக குப்பென்று குழுமும் நண்பர்கள் ஓடிவிடுவர்

2. பொண்டாட்டி பக்கத்து வீட்டை (அல்லது வீட்டுக்காரனை) பார்த்து பெருமூச்சு விடுவார்

3. காதலி இருந்தால் அண்ணா என்று உங்களை திடீரென அழைப்பார்

4. கோயிலில் ஐயர் உங்களுக்கு விபூதி தரமாட்டார்

5. அடிக்கடி மனசுக்குள் "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்கள்" என்ற பாட்டு விட்டு விட்டு விக்கல் மாதிரி போகும்.

6. குருஜியிடம் இப்படிக் கேள்விகள் கேட்கத்  தோன்றுவது...

3. புரியாணியில் முட்டை வைக்காத Restaurant உம் வாழ்க்கையில் காதலிக்காத மனிதரும் ஒன்றுதான். இருவரும் வெற்றி பெறப்போவதில்லை.

 

 

 

ஆகா என்ன தத்துவம் சுவாமிஜி!
தங்கள் ஆச்சிரமம் எங்கோ..........
இன்று முதல் தங்களை நிழலிஜீ என்றழைப்போமாக
  • தொடங்கியவர்

இன்று முதல் தங்களை நிழலிஜீ என்றழைப்போமாக

 

நிழலி வேறு நிழலியானந்தா வேறு. அவர் இவர் இல்லை. இவர் அவர் இல்லை. அவரும் இவரும் ஒன்றென்பர்: அது பொய். இரண்டும் வேறென்பர்: அதுவும் பொய்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஜி..முதலாவது கேள்வி..லாசப்பலுக்கு முருக்கங்காய் வாங்க வந்த அன்பர் தனது வங்கிகணக்கை சரிபார்த்தபின் ஈமெயிலில் அனுப்பி வைத்தது..
 
உலகத்தில் ஓசியில் திறக்க கூடிய எல்லா கணக்கும் (பேஸ்புக்,றுவிட்டர்,யூடிப்,புளோக்கர்) நல்லா ஓடுது வங்கி கணக்குமட்டும் எப்பபாரு பூஜ்ஜியத்தில நிக்குது..ஏன் ஜீ..???

உள்ளீடுகளை  அளவாக  அவ்வப்போது  அளவாகப்  போடுங்கள்   :D

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி நிழலியானந்தா அவர்களிடம் ஒரு கேள்வி


நீங்கள் நடுச் சாமத்தில் நற்சிந்தனையில் உங்களையே மறந்த 

மெய் நிலையில் லயித்திருக்கும் பொழுது :lol:

கடவுள் உங்கள் முன் தோன்றி 

உங்கள் நற்சிந்தனையைக் குழப்பினால்  

 

உங்கள் மன நிலை எப்படி இருக்கும். :D


அப்போது கடவுளுக்கே அருளும் உங்கள் மொழி எதுவாக இருக்கும் :lol:    

 

  • தொடங்கியவர்

குருஜி எருமை நகரில் நடக்கும் 'மனசு கடந்த உலா' திருவிழாவுக்கு பிசியாக இருக்கின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு தலைமை தாங்க பிரதம சிசியன் அருத்திரன் வருகின்றார் என்றும், அவருடன் அவரை மாதிரியே பெரும் தூக்கம் கொள்ளும் மங்குனி மந்திரிகளும் வருவதாகத் தகவல்.

 

யார் இந்த அருத்திரன் என்று கேள்வி கேட்பவர்களுக்கு அருத்திரன் என்பவர் குருஜியின் பிரதம சீடன் என்றதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். அவரின் சிறப்பே அவரால் hibernating animals மாதிரி hibernation நித்திரை கொள்ள முடியும்.

 

அருத்திரனுக்கும் குருஜிக்கும் நடந்த உரையாடல் hack செய்யப்பட்டதாக தகவல்கள் வதந்திகளாக உலா வருகின்றன. அதில் இடம்பெற்ற உரையாடல் பற்றி விக்காதாலீக்ஸ் வெளியிட்டவை:

 

"குருஜி"

 

"சொல்லுங்கோ அருத்திரன்"

 

"எருமை நகரில் நடக்கும் கூத்துக்கு நீங்கள் வந்து ஒரு யாகம் செய்ய முடியுமா"

 

"என்ன இன்னொரு யாகமா"

 

"ஏன் குருஜி"

 

"ரொரன்டோவில் நிகழ்த்திய யாகத்திற்கே இன்னும் சம்பள பாக்கி இருக்கு"

 

"கெதியன தாரம்"

 

"..ம்ம்ம்" (குருஜி யோசிக்கின்றார். அவர் யோசிக்க வெளிக்கிட்டால் அவரது யோசனைகளை அவரே கேட்க மாட்டார்...அப்படி ஒரு யோசிப்பு"). "இவங்கள் என்னை கைவிட்டல் பிறகு யாரும் கூப்பிடமாட்டாங்கள்...தந்தவரைக்கும் லாபம்.. எதுக்கும் கொஞ்சம் பிகு பண்ணி விட்டு ஓம் என்பம்"

 

"என்ன குருஜி யோசனை"

 

"சரி நான் வாரன்...ஆனால் ஒரு கண்டிசன்"

 

"என்னை மாதிரி நல்லா உருண்டு பிரண்டு படுக்க எயார் கொண்டிசன் வேண்டுமா"

 

"No no...  "

 

"அப்ப என்ன"

 

" என் அருளால் தான் அந்த படங்கள் உலகுக்கு வந்ததென்று சொல்ல வேண்டும்"

 

" எந்தப் படங்கள்"

 

" அதான் எல்லா பத்திரிகைகளிலும் சனல்களிலும் வந்து பெரிய உணர்ச்சிப் பிழம்பாக சனத்தை மாத்தி இருக்கே அந்தப் படங்கள்"

 

அருத்திரனுக்கு மண்டைக்குளால போகுது.

 

"உது எப்ப நடந்தது"

 

" ஒரு இரண்டு வாரமாக"

 

:"அடடா... நாம நல்லா நித்திரை கொள்ளும் போதா இப்படி படங்களை வெளிவிடுவார்கள்... குருஜி...சத்தியமாக எனக்கு ஒன்றும் தெரியாது...எருமை நகரில் நடக்கும் கூத்து பார்க்க அங்கால சனம் வேற வரப்போகுது. எனக்கு என்றால் இப்படி படங்கள் வந்ததே தெரியாது... குருஜி காப்பாத்துங்கள்..இப்ப இல்ல அடுத்த பத்து வருடங்களுக்கு நடக்கும் யாகங்களுக்கு நீங்கள் தான் பிரதம் குரு"

 

"ஒகே அப்படியே ரஞ்சிதத்துக்கும் அழைப்பு கொடுக்க வேண்டும். கண்டிசன்"

 

"ஒகே"

 

hacking software இனை இன்னொருவர் Jam பண்ணியதால் இதற்கு பின் என்ன நடந்தென்று தெரியவில்லை.........

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜி..தங்கள் பதிலால் ஆனந்தம் அடைந்ததாக அன்பர் கடிதமும் அதனுடன் கையூட்டும் அனுப்பிவைத்திருக்கிரார்...

 

 

 

அடுத்த கேள்வி..
 
1)சுப்ரமணியசுவாமிக்கும் நித்தியானந்த சுவாமிக்கும் இரண்டுவித்தியாசம் சொல்லுங்க ஜீ...?
 
 
2)செத்தவீட்டில பிணமா இருக்கணும் என்கிறாங்க.....கல்யாண வீட்டில மாப்பிளையா இருக்கணும் என்கிறாங்க....வெறி ஏறினா வீட்டில என்னவா இருக்கணும் ஜீ..?
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நிழலியானந்தாவின் பிரதான பள்ளியறை.. பஜனைப் பாடல்...! :lol:

 

http://youtu.be/t-O8Mv-nHcg

 

Spoiler
ஜோக்ஸ். :lol:
  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி, எனது குருவி மூளையின் அவதானங்களின் படி, கோவில் கோவில் என்று அலைபவர்களிடம், ஈரம் இருப்பதில்லையே அது ஏன்? :o

 

முற்றும் துறந்த கடவுள்களுக்கு, தங்க ஆபரணங்களும், வாசனத்திரவியங்களும் அளித்து வழிபடுகிறார்களே, அது ஏன்?

 

அண்மையில் முருகன் 'சேவ்' எடுக்காதபோதும் அவரிலிருந்து 'ஓல்ட் ஸ்பைஸ்' வாசம் வந்து கொண்டிருந்ததை அவதானித்தேன்! இது ஒருவேளை, பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஐயரிலும் இருந்து வந்திருக்கும் சாத்தியங்களும் இல்லாமல் இல்லை! :lol:  

குருஜீ அருமையான பதிவுகள், தொடருங்கள் உங்கள் சேவையை. ஒரு சின்ன கேள்வி, நீங்கள் யாழில் இணைப்பதே போலவே, நேரடியாக கனடா கிளை ஒன்றை திறந்து, அங்குள்ள மக்கள் உங்கள் அரிய சேவையை பெற வழி செய்ய முடியாதா? மக்கள் ஏங்குகின்றார்கள் உங்கள் வரவிற்க்காக. உங்கள் சேவை பலருக்குத்தேவை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி, எனது குருவி மூளையின் அவதானங்களின் படி, கோவில் கோவில் என்று அலைபவர்களிடம், ஈரம் இருப்பதில்லையே அது ஏன்? :o

 

முற்றும் துறந்த கடவுள்களுக்கு, தங்க ஆபரணங்களும், வாசனத்திரவியங்களும் அளித்து வழிபடுகிறார்களே, அது ஏன்?

 

அண்மையில் முருகன் 'சேவ்' எடுக்காதபோதும் அவரிலிருந்து 'ஓல்ட் ஸ்பைஸ்' வாசம் வந்து கொண்டிருந்ததை அவதானித்தேன்! இது ஒருவேளை, பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஐயரிலும் இருந்து வந்திருக்கும் சாத்தியங்களும் இல்லாமல் இல்லை! :lol:  

இப்பிடி எல்லாம் கேட்டால்...சுவாமிகளுக்கு ஏறினபோதையும் இறங்கிவிடும்... :(  :D

  • கருத்துக்கள உறவுகள்

குருஜீ அருமையான பதிவுகள், தொடருங்கள் உங்கள் சேவையை. ஒரு சின்ன கேள்வி, நீங்கள் யாழில் இணைப்பதே போலவே, நேரடியாக கனடா கிளை ஒன்றை திறந்து, அங்குள்ள மக்கள் உங்கள் அரிய சேவையை பெற வழி செய்ய முடியாதா? மக்கள் ஏங்குகின்றார்கள் உங்கள் வரவிற்க்காக. உங்கள் சேவை பலருக்குத்தேவை

பல குடும்பங்களை தெருவில நிப்பாட்டுறதுக்கு ஜடியா போடுறீங்க 

பல குடும்பங்களை தெருவில நிப்பாட்டுறதுக்கு ஜடியா போடுறீங்க 

 

அடங்கி போய் உள்ளவர்களுக்கு, களைப்பாற ஒரு இடம் தேவைதானே?  எல்லாம் ஒரு பரந்த நோக்கம்.

 

குருஜீ நீங்கள் இப்படி ஆக மாறனும் என்பற்கு பின்னால் ஏதும் காரணமிருக்கா? 

 

அத்துடன் கடந்து வந்த பல்லம் மேட்டு வாழ்க்கை வரலாறுகளையும் பக்த கேடிகளுடன் பகிர்ந்துகொள்ள உத்தேசமுன்டா?

நானும் நிழளியானந்தாவின் சீடராக விரும்புகிறேன் .............என்னிடம் அதற்குரிய தகுதிகள் உள்ளதோ என்ற சந்தேகமே .................நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் சுவாமி ............. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.