Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவிடம் தமிழர்களுக்கு தனிமாநிலம் வாங்கி தரமுடியும்! - சொல்கிறார் சுப்பிரமணியம் சுவாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
subramaniyaswami-232013-150.jpg

ராஜபக்சவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தர தன்னால்தான் முடியும் என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. திருச்சியில் நடைபெறும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநாட்டுக்கு வந்திருந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்திக்கும். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். இந்தக் கூட்டணியில் அதிமுக இடம்பெறுமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதை ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் அவரிடம் சென்று கேளுங்கள். மத்தியில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனிக்கு தொடர்பில்லை; முழுதும் சோனியாதான் காரணம். அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்.

முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தின் முன் ஆஜராகி வாதாடுவேன் என்று சொல்வதால் எந்த பலனும் இல்லை. ஜேபிசி முன் வாதாடுவதற்கு பதில், அவர் விதி எண் 313ன் கீழ் நீதிமன்றத்தில் அவர் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லலாம். அவற்றை ஜேபிசி முன் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஜேபிசியில் காங்கிரஸாரே அதிகம் உள்ளனர். எனவே அவர் கூறும் எதுவும் எடுபடாது.

நான் ராஜபக்சவை சந்தித்து வந்தேன். தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சிக்காக நான் ராஜபக்சவை வலியுறுத்தி வருகிறேன். அது என்னால்தான் முடியும். வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது. ராஜபக்சவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் நான் வாங்கித் தருவேன். இவ்வாறு கூறினார் சுப்பிரமணியம் சுவாமி.

http://www.seithy.com/breifNews.php?newsID=77188&category=TamilNews&language=tamil

என்னாப்பா இந்தாளு ...........கடையல பொம்மை வாங்கித்தருவேன் என்ற றேஞ்சில கதை விடுறாரு ..........................ஒன்றுமே புரியலைப்பா ..................

  • கருத்துக்கள உறவுகள்

என்னாப்பா இந்தாளு ...........கடையல பொம்மை வாங்கித்தருவேன் என்ற றேஞ்சில கதை விடுறாரு ..........................ஒன்றுமே புரியலைப்பா ..................

மகிந்தா குடுத்த விருந்தில் கூட ரிங்ஸ் பாவிக்கப் பட்டதாம்..

  • கருத்துக்கள உறவுகள்

Excuse me sir முதல்ல எனக்கு ஒரு lollypop வாங்கி கொடுக்க முடியுமா sir ?

டொனமூர், சோல்பரியில் இருந்து பாங்கி மூன், சாமி வரை...

தலதாமளிகை போய்வந்தால் இப்படித்தான்.

பிளேக் கேள்விப்பட்டால் நான் பேசவேண்டிய வசனத்தை சாமி பேசிவிட்டார் என்று  கோவிக்க போகிறார், 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்த்தலில் தமிழ் நாட்டு வாக்குகளை தன்பக்கம் திருப்பலாம் என யோசித்தாரோ தெரியாது.பாங்கியை மடக்கிய சிங்களவருக்கு சாமி ஒரு தூசு.

Excuse me sir முதல்ல எனக்கு ஒரு lollypop வாங்கி கொடுக்க முடியுமா sir ?

சுண்டல் அண்ணா அவர் உங்களுக்கு கெட்டுப்போன புளியோதரைதான் வாங்கி தருவாருங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு போனவுடன் அவருக்கு பாப்பா போச்சிதான் (baby feeding bottle))...கொடுத்தவையாம்.... அதுதான் நன்றி மறக்காமல்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சோனியாகாந்தி நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தனி மாநில சுயாட்சிக்காக நான் ராஜபக்சவை வலியுறுத்தி வருகிறேன்- சுப்பிரமணியம் சாமி
subramanian-swamy_topnews.in_-500x477.jp

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி, திருச்சியில் நடைபெறும் விஸ்வ ஹிந்து பரிஷத் தின் மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சந்திப்பின்போது அவர், ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோ னிக்கு தொடர்பு இல்லை; இதற்குக் காரணம் முழுவதும் சோனியாதான் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர்,    வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்திக்கும். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். இந்தக் கூட்டணியில் அதிமுக இடம்பெறுமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதை ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் அவரிடம் சென்று கேளுங்கள்.

மத்தியில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனிக்கு தொடர்பில்லை; முழுதும் சோனியாதான் காரணம். அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்.

முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தின் முன் ஆஜராகி வாதாடுவேன் என்று சொல்வதால் எந்த பலனும் இல்லை. ஜேபிசி முன் வாதாடு வதற்கு பதில், அவர் விதி எண் 313ன் கீழ் நீதிமன்றத்தில் அவர் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லலாம்.  அவற்றை ஜேபிசி முன் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஜேபிசியில் காங்கிரஸாரே அதிகம் உள்ளனர். எனவே அவர் கூறும் எதுவும் எடுபடாது’’என்றார்.

நான் ராஜபக்சவை சந்தித்து வந்தேன். தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சிக்காக நான் ராஜபக்சவை வலியுறுத்தி வருகிறேன். அது என்னால்தான் முடியும். வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது. ராஜபக்சவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் நான் வாங்கித் தருவேன். இவ்வாறு கூறினார் சுப்பிரமணியம் சுவாமி.

http://tamil24news.com/news/?p=47057

சீமானை நம்புகின்றதை விட சாமியை நம்பலாம் .சீமான் வெறும் சவுண்டு பாட்டி உந்த ஆள் பொல்லாத காரியவாதி.

ஸ்பெக்டரம் பிரச்சனையை ஊதி பெரிதாக்கியது சாமி  தான் .

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை நம்புகின்றதை விட சாமியை நம்பலாம் .சீமான் வெறும் சவுண்டு பாட்டி உந்த ஆள் பொல்லாத காரியவாதி.

ஸ்பெக்டரம் பிரச்சனையை ஊதி பெரிதாக்கியது சாமி  தான் .

புலி பசிச்சாலும் புல்லை தின்னாது... ஒரு இனத்தையும் ஒரு இனத்தின் தலைவனையும் படு கேவலமாய் கதைத்தவட்டை இருந்து தமிழ் மக்கள் ஒன்றையும் எதிர் பார்க்க மாட்டினம்...ராஜிப் காந்தி இறந்த உடனை அறிக்கை விட்டவர் அது புலிகள் தான் செய்தார்கள் என்று.......!!!  ஒரு மானம் உள்ள தமிழன் சீமான் அண்ணாவை பற்றி இப்படி எழுதினது கொஞ்சமும் பிடிக்க வில்லை....

நியானி: தணிக்கை/திருத்தம் செய்யப்பட்டுள்ளது

Edited by நியானி

சீமானை நம்புகின்றதை விட சாமியை நம்பலாம் .சீமான் வெறும் சவுண்டு பாட்டி உந்த ஆள் பொல்லாத காரியவாதி.

ஸ்பெக்டரம் பிரச்சனையை ஊதி பெரிதாக்கியது சாமி  தான் .

பெரிய காரியம்தான், அகில இந்திய குடியரசில் கனிமொழிக்கு மட்டும்தான் களவெடுக்க தெரியும் என்று நிரூபித்தது.

சாமி வாயடியில் ஊதுவார்; குழலில் சத்தம் அதன் சில்லடியால் தான் எப்போதும் வெளிவரும். இதானால்தான் சாமி மட்டும் ஊதி பெருப்பிப்பதில் பலே சாமியாக இருக்கிறார்.  கெலிகோப்ட்டர் விவகாரததிலிலும் மாட்டப் போவது ஒரு ஓடுகாலி மட்டுமே. விமானப்படை அதிகாரிதான் வியாபாரத்தை நடத்தி முடித்திருக்கிறார். இதை ஊதி சாமி அந்தனியை மாட்டிவிட்டால் நமக்கு ஒரு மலையாளி போவதில் சந்தோசமே.

சாமி எமது விடயத்தில் ஒதுங்கி இருந்தாலே பெரிய சேவை.

எமது இனம் அதற்கு நன்றி செலுத்தும் !

ராஜபக்சவிடம் தமிழர்களுக்கு தனிமாநிலம் வாங்கி தரமுடியும்! - சொல்கிறார் சுப்பிரமணியம் சுவாமி

இதுதான் இந்த வருடத்துக்கான மிக சிறந்த நகைச்சுவை :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிய சுவாமியின் கோமாளித்தனம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பரவி புலம்பெயர்ந்த நாடுகளுக்கும் தொற்றிவிட்டது போலுள்ளது. இப்படியானவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டால் தானாகவே காணாமல் போய்விடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சவிடம் தமிழர்களுக்கு தனிமாநிலம் வாங்கி தரமுடியும்! - சொல்கிறார் சுப்பிரமணியம் சுவாமி

கோமாளித்தனம்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை நம்புகின்றதை விட சாமியை நம்பலாம் .சீமான் வெறும் சவுண்டு பாட்டி உந்த ஆள் பொல்லாத காரியவாதி.

ஸ்பெக்டரம் பிரச்சனையை ஊதி பெரிதாக்கியது சாமி  தான் .

கடந்த தேர்த்தலில் காங்கிரசும்,தி.மு.கவும் மண்ணை கவ்வியதில் சீமானின் பிரச்சாரம் முக்கிய பங்கை வகிக்கிறது.இதை தமிழ் நாட்டு நண்பர்களே கூறுகிறார்கள்.சீமானை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூறுவதை விட்டு விட்டு நொண்டிச்சாட்டுகளை அடுக்க வேண்டாம்.

இந்த திரி சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்கப்பட வேண்டியது.... :lol:

கடந்த தேர்த்தலில் காங்கிரசும்,தி.மு.கவும் மண்ணை கவ்வியதில் சீமானின் பிரச்சாரம் முக்கிய பங்கை வகிக்கிறது.இதை தமிழ் நாட்டு நண்பர்களே கூறுகிறார்கள்.சீமானை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூறுவதை விட்டு விட்டு நொண்டிச்சாட்டுகளை அடுக்க வேண்டாம்.

கடைசி ஒரு தொகுதியில் என்றாலும் நின்று தனது செல்வாக்கை காட்டியிருக்காலம் தானே ?உங்களுக்கு மற்றவனை தோற்கடிக்க முடியுமென்றால் ஏன் வெல்ல முடியாது .ஜெயலலிதா போட்ட மாஸ்டர் பிளான் அது .வை கோவை கூட நடு வீதியில் விட்ட ஆள் அவர் .வை கோ ,சீமான் ,திருமாவளவன் ,நெடுமாறன் எல்லோரும் சேர்ந்து ஒருக்கா முயற்சித்து பார்த்திருக்காலம் தானே ?

அவர்கள் பலம் அவர்களுக்கு தெரியும் உங்களுக்கு தான் தெரியவில்லை ,புலிகளின் பலம் எங்களுக்கு முன்னரே தெரியும் உங்களுக்கு முள்ளிவாய்காலில் தான் தெரிந்தது .கனவுலகில் வாழ தமிழன் வாழ பழகித்தான் இவ்வளவு அழிவும் நடந்தது அதற்குள் உண்மையை எழுதினால் கோவம் வேறு வருகின்றது.

தமிழ் நாட்டில் எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமான  பல நண்பர்கள் இருக்கின்றார்கள்

புலிகளை பற்றி தெரியுமெனில் அவர்களை அழிக்க உங்களுக்கு 30 வருடம் எடுத்ததோ??

ஏன் காங்கிரசும் ,தி.மு.கவும் இப்படி படுதோல்வி அடைந்தது என கூற முடியுமா? 

எங்களுக்கு கோபம் வரவில்லை. உங்களின் முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுவது தான் புரியவில்லை.
 
இந்தியா புளட்டுக்கு  இல்லை தமிழர் அனைவருக்கும் தெரியும்.என்ன துணிவில் மாலை தீவை பிடிக்க போனீர்கள் என்று நாங்களும் கேட்பமில்ல.
 
தமிழ் நாட்டு அரசியலில் கருணாநிதி தோற்றால் ஜெயலலிதா வெல்லுவார் என்பது பல ஆண்டுகளாக எழுதப்படாத விதி.இதிலை எங்கே ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளான் என்று விளங்கவில்லை.சீமான்  போன்றவர்கள் இனப்படுகொலைக்கு துணைபோன காங்கிரசுக்கும் தி.மு.கவுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றார்கள்.அது நடந்தது.ஜெயா தொலைக்காட்சியில் கூட இதனை தான் சீமான் வந்து சொன்னார்.ஜெயா தான் பிரபாகரனை அழிப்பேன் என்றவர் சீமானின் பக்கம் காற்றடிப்பதால் பிளேட்டை மாற்றி விட்டார்.
 
தமிழ் நாட்டு நண்பர்கள் அனேகர் பிஎச் டியுங்கோ.
 
சீமானுக்கு இனிமேலும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கெடுக்கும் எண்ணம் இல்லை. அதை அவரே சொல்லிவிட்டார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில்தான் குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் நாம்தமிழர் கட்சி போட்டியிடும் எனத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பற்றி தெரியுமெனில் அவர்களை அழிக்க உங்களுக்கு 30 வருடம் எடுத்ததோ??

ஏன் காங்கிரசும் ,தி.மு.கவும் இப்படி படுதோல்வி அடைந்தது என கூற முடியுமா? 

எங்களுக்கு கோபம் வரவில்லை. உங்களின் முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுவது தான் புரியவில்லை.
 
இந்தியா புளட்டுக்கு  இல்லை தமிழர் அனைவருக்கும் தெரியும்.என்ன துணிவில் மாலை தீவை பிடிக்க போனீர்கள் என்று நாங்களும் கேட்பமில்ல.
 
தமிழ் நாட்டு அரசியலில் கருணாநிதி தோற்றால் ஜெயலலிதா வெல்லுவார் என்பது பல ஆண்டுகளாக எழுதப்படாத விதி.இதிலை எங்கே ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளான் என்று விளங்கவில்லை.சீமான்  போன்றவர்கள் இனப்படுகொலைக்கு துணைபோன காங்கிரசுக்கும் தி.மு.கவுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றார்கள்.அது நடந்தது.ஜெயா தொலைக்காட்சியில் கூட இதனை தான் சீமான் வந்து சொன்னார்.ஜெயா தான் பிரபாகரனை அழிப்பேன் என்றவர் சீமானின் பக்கம் காற்றடிப்பதால் பிளேட்டை மாற்றி விட்டார்.
 
தமிழ் நாட்டு நண்பர்கள் அனேகர் பிஎச் டியுங்கோ.
 
அவருக்கு எப்படி சொன்னாலும் புரியாது...அவட்ட நினைப்பு மற்றவர்கள் இருண்ட உலகில் வாழுகிறார்கள் அவர் மட்டும் ஏதோ வெளிச்சமான உலகில் வாழ்வது போல.....விட்டா நல்லாத் தான் பாடம் எடுப்பார்....

அர்ஜூன் அண்ணா..வேர ஒரு திரில சீமான் அண்ணாவை பற்றி அப்படி எழுதி போட்டு இந்த திரில இப்படி எழுதுறார்.......அவருக்கே தான் என்ன எழுதுறேன் என்று தெரியாமல் எழுதுறார்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி ஆரம்பித்த வுடன் தேர்தலில் போய் நிற்பதற்கு சீமான் என்ன முட்டாளா? அதுவும் பணத்தையே பலமாக கொண்டவர்களோடு? இது என்ன இலங்கையில் இருந்துகொண்டு இன்னொரு நாட்டுக்கு படையெடுக்க போன கதை மாதிரில இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எல்லோரும் தமிழீழத்தில் இருந்து எப்பிடி  போராடினோமோ  அப்பிடித்தான் தமிழ்நாட்டு மக்களும் ,இது வை .கோ ,சீமானுக்கு தெரியாதா 

தமிழன்கள் எங்கிருந்தாலும்  ஒரே புத்திதான் எண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் 'தனி மாநிலம்' உங்கட சப்பாத்தி சைசாவது இருக்குமா, சாமி? :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.