Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரதராசனார் காலத்தில் வாங்கிய பொருள்களுக்கான பற்றுசீட்டைக் கையில் வைத்திருந்தால் அவற்றை வேண்டாதவிடத்து கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருந்திருக்கவில்லை. மேலும் அந்த நாட்களில் ஒரு டிவி வாங்க நினைத்தால் RCA யையோ அல்லது கூடப்போனால் எதாவது கடைகளில் Philips மட்டுமோதான் கிடைக்கும். ஒன்றை வாங்க கொடுக்க வேண்டிய விலை உழைப்புக்கு மிக அதிகம் எனவேதான் அவர் அப்படிக் கூறினார். எனவே இன்றைய கால கட்டங்களில் இளசுகளை அதைபற்றி பட்டிமன்ற நேரம் அதிகம் கவலைப்பட்டாமல் பட்டி மன்றம் தான் கொண்டிருக்கும் இரண்டு கவலைகளில் ஒன்றை தத்தெடுக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி. :D

இப்போலாம் ஒண்டு வாங்கினா இன்னொன்னு free ஆ கொடுக்கும் போது எதுக்கு கவலை படுவான்னு சொல்லுறிங்களா? :D

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே....

உன் பார்வை தான் படனும் கொஞ்சமே....

நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசை தான்....இதய துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசை தான்

http://m.youtube.com/watch?feature=related&v=u54qwwhsoyw

கும்ஸ் தாத்ஸ் வரும் வரை காதுக்கு இனிமையான ஒரு காதலர் கீதத்தை கேட்ட வண்ணம் இருங்கள்.....:D

  • தொடங்கியவர்

என்னைப் பட்டிமன்றத்தில் சேர்த்து கொள்ளாததையிட்டு கடுமையான கண்ட‌னங்களை பட்டி மன்ற நிர்வாகிகளுக்கும்,அதில் பங்கு பற்றுபவர்களுக்கும்,இந்த பட்டிமன்றத்தை ஒருங்கினைத்தவருக்கும் சொல்லிக் கொள்கிறேன் ^_^
 
கலைஞன் எனக்குப் பிறகு வந்து கேட்டவுட‌ன் அவருக்கு திறமை இருக்குது என எடுத்துக் கொண்ட‌வர்கள்.என்னிட‌ம் விவாதத் திறமை இன்மையால் என்னை எடுக்கவில்லை...யாழ் இப்போதெல்லாம் பாராபட்ச‌மாய் தான் நட‌க்குது <_<
 
இனி மேல் கூப்பிட்டால் ர‌தி வருவார் பங்கு பற்றுவார் என நினைக்க வேண்டாம்...நன்றி உங்கள் சேவைக்கு :mellow:
 

 

வணக்கம் ரதி அக்கா !!

 

களவிதிகளின்படி மூடப்பட்ட பதிவில் இருந்து கருத்துக்கள் உதாரணமாகக் காட்டுவது தவறான விடையமாகும் . அத்துடன் கோமகனுக்கு கருத்துக்களத்தில் கல்லெறிவிழுவதும் வசைபாடல்கள் வருவதும்  ஒன்றும்   புதிது இல்லை . மேலும் , இந்த இணைப்பில் http://www.yarl.com/forum3/index.php?showtopic=118453&page=1 கருத்து இலக்கம் 16ல் உங்கள் " நிபந்தனை " சம்மதத்தை தெரிவித்திருந்தீர்கள் . பின்பு கிருபன் நெடுக்கர் தாங்கள் வரமாட்டோம் என்று சொன்னதால்  , http://www.yarl.com/forum3/index.php?showtopic=118453&page=4 கருத்து இலக்கம் 66ல் நீங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என்று உறுதிப்படுத்தினீர்கள் . நாங்கள் உங்களை மீண்டும் கருத்து இலக்கம் 67ன் மூலம் அழைத்திருந்தோம் . நீங்கள் வரவில்லை . மாறாக , இப்பொழுது தூக்கத்தில் இருந்து எழுந்து எழுந்தமானத்தில் எழுதுவது அவ்வளவு நாகரீகமாக எமக்குத் தெரியவில்லை . உங்களுக்கு எமது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றோம் .

 

நடுவர்கள்

 

கோமகன்

 

மொசொப்பத்தேமியா சுமேரியர்

 

 

*** எழுத்துப் பிழை திருத்தப்பட்டுள்ளது

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன்
பிச்சைக் காரனா? :lol:

 

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது.... :(

 

"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... :icon_mrgreen:
 அதேதான்....

எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா? :o

 

:lol: :lol: :D :D
 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணை எல்லாம் சுண்டலின் சுண்டல்ல இருந்து தூக்கி அடிக்கிறிங்க போல.....:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணையின் வாதம் அருமை!

 

மனுசனும் தன்னால முடிஞ்சளவுக்குத் தன்ர பக்கத்து வாதத்தை எடுத்து வைச்சுது என்பது,உண்மை தான்!

ஒரு விமரிசனம் வைச்சு, எதிரணியை உலுக்குவம் எண்டு யோசனை போய்க்கொண்டிருக்கிற நேரம், மனுசன் புங்குடுதீவையும், நெடுந்தீவையும் இதுக்குள்ள கொண்டு வந்திட்டுது! :o

 

பேசாமல் பச்சைப்புள்ளியைப் போட்டிட்டு, நழுவுவம் எண்டு யோசிக்கிறன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட கும்ஸ் தாத்ஸ் அந்த மாதிரி கலக்கிட்டார்.....ஓவொரு உதாரணமும் சூப்பர்.....ஊரில ஆடு மாடு வளர்த்தே அது தரும் பயன்களை விட அதனுடைய கழிவு பொருட்ட்களை கூட இயற்க்கை உரமாக பயன்படுத்துவார்கள்.....

எதிர் அணியினரை பாத்து நாலு கேள்வி நறுக்கெண்டு கேட்டு இருக்கின்றார்.....

பாராட்டுக்கள் கும்ஸ் தாத்ஸ்.....

அடுத்து இதுக்கு கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க போறவர் ... சும்மா சாதாரண ஆள் இல்லை.....

பாப்பம் அவர் என்ன சொல்ல போறார் எண்டு :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரதி அக்கா !!

 

பின்பு கிருபன் நெடுக்கர் தாங்கள் வரமாட்டோம் என்று சொன்னதால்  , http://www.yarl.com/forum3/index.php?showtopic=118453&page=4 கருத்து இலக்கம் 66ல் நீங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என்று உறுதிப்படுத்தினீர்கள் . நாங்கள் உங்களை மீண்டும் கருத்து இலக்கம் 67ன் மூலம் அழைத்திருந்தோம் . நீங்கள் வரவில்லை . மாறாக , இப்பொழுது தூக்கத்தில் இருந்து எழுந்து எழுந்தமானத்தில் எழுதுவது அவ்வளவு நாகரீகமாக எமக்குத் தெரியவில்லை . உங்களுக்கு எமது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கின்றோம் .

 

நடுவர்கள்

 

கோமகன்

 

மொசொப்பத்தேமியா சுமேரியர்

 

 

*** எழுத்துப் பிழை திருத்தப்பட்டுள்ளது

 

நாங்கள் வரமாட்டோம் என்று சொல்லவில்லை. புதியவர்களுக்கு வழிவிட்டு பார்வையாளர் வரிசையில் இருக்கப் போகிறோம் என்று தான் சொல்லி இருக்கிறோம். வரமாட்டோம் என்பதற்கும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்.. எங்கள் பங்களிப்பை.. தவிர்க்கிறதிற்கும் இடையில் பொருள் நிலை வேறுபாடு இருக்கிறது என்று கருதுவதால் இதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மற்றும்படி.. நோப் பிராப்பிளாம்.  :)

 

 

 

அனைத்து உறவுகளின் வாதங்களும் அருமை. கு.சாண்ணாவின் எளிமையான ஆனால் ஆணித்தரமான விவாதங்களும் அருமை..! :)

சிம்பிளாக சொன்னால் குமாரசாமி அண்ணே மண்வாசனையுடன் கலக்கிட்டீங்கள் அண்ணே.

 

அப்படியே எங்களை எங்கட மண்ணுக்கே கூட்டி சென்றுவிட்டீங்கள் அண்ணே.

 

மாலை மயங்கும் நேரத்தில் பனங்கூடல்களுக்கு நடுவே தெரியும் தீவுபகுதியின் அழகை உலகில் எங்கையுமே காண முடியாது. குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து எழுவை தீவையும் பருத்தி தீவையும் சூரியன் மறையும் நேரத்தில் பாருங்கள். ஜமைக்கா என்ன ஜமைக்கா..

 

எதிரணியினர் எல்லாருக்குமே நெத்தியடி.

 

சூப்பர் குமாரசாமி அண்ணே ..!!

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட‌ நாளுக்கு பின்பு உறவினர் வீட்டுக்கு சென்றார் ஒருவர் ..

வீட்டுக்கார‌ அம்மா அடேயப்பா இப்பதான் கண் தெரிங்சிதோ..

எங்கவீடு என்று சொல்லிவிட்டு ..

தனது கடைசி மகன் ராமனை.......

கூப்பிட்டு வாப்பா செல்லம் மாமா நீண்டனாளைக்கு பின் வந்திருக்கிறார் ..ஓடிப்போய் பக்கத்துக்கடையில் பிஸ்கட்டும்..

ஃபன்ரா சோடாவும் ..வாங்கிட்டு வாப்பா...செல்லமெல்லா என்று சொல்ல‌...

மகன் ...ராமன் ..

அம்மா பக்கத்துக்கடை பூட்டியிருந்தா(மூடியிருந்தா) ....?

கொஞ்சம் தள்ளி ராமசாமி அப்புவின் கடையில் வாங்கிட்டு வாவண்டா...?

அதுவும் பூட்டெண்டா (மூடியிருந்தா..?)

தங்கச்சியின் சைக்கிளை எடுத்து நாலு மிதி மிதித்தா..சந்தியில‌ இருக்கிர‌ கடையில் ..வாங்கிட்டு வாடா..!

அதுவும் பூட்டியிருந்தா ...?

அதுவும் பூட்டியிருந்தா திரும்பிவாவன்...

அப்ப‌...ஏம்மா..நான் போகனும்....?

:( :( :D

( இப்படிதாங்க‌ இப்பத்தே பையங்கல் ...சொல்லுர‌ விடை மொக்கே விடையா இருக்கும் ஆனா யோசிக்கவும் வைக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்: அண்ணே flower க்கும் lover க்கும் என்னண்ணே difference ?

நந்தன் ஜி: டேய் சுண்டல்........

Flower சீக்கிரம் வாடி போய்டும்.....

Lover சீக்கிரம் ஓடி போய்டும்....

  • கருத்துக்கள உறவுகள்
சூப்பர் கு.சா அண்ணா நெத்தியடி :lol:  கலக்கிட்டீங்கள் :D  :)
  • கருத்துக்கள உறவுகள்

சுடு தண்ணீர் தேவையில்லையா? :icon_mrgreen:

 

பிறகென்னத்துக்கு, வேப்பமரத்துக்குத் துகிலுரித்து, நொச்சி மரங்களுக்கு மொட்டையடித்து, 'சுடு தண்ணி' வைத்துக் குளிப்பான்? :o

 

மனுசனின்ர சம்பளம் முழுவதையும், சீரகமாக்கிப் 'பத்தியம்' வைச்சு, வயித்தைக்கழுவுவான்? பத்தியம் பச்சைத் தண்ணியா? :o

 

கம்பீரமான கட்டிடங்களைக் கட்டி எழுப்பும், 'இசை' உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

 

அவரது ஒரு பார்வை, வேண்டாம் விடுங்கள், 'ஒரு விழியசைவில்' எதிரணியினரின் 'துண்டும் வேணாம், துணியும் வேணாம்' என்று ஒடப்போவதை, நீங்கள் இன்னும் உணரவில்லையா? :icon_idea:  

 

 

அருமையான வாதம் குமாரசாமி, நீங்கள் உங்கள் மனம் திறந்து இதில்தான் எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.

 

மனதை நெருடும் வசனங்கள், வாசித்தபின் கண்ணை மூடி கற்பனை செய்து பார்த்தேன், எத்தனையை இழந்துவிட்டு இங்கு அல்லல் படுகின்றோம்

 

நினைக்கவே விழியோரத்தில் கண்ணீர் கசிகின்றது

 

கடைசி காலத்திலாவது அங்கு போய் நிம்மதியாக இருப்போமா, இதுதான் என்னுள் நான் பல நாட்களாக கேட்கும் கேள்வி. இந்த வாழ்க்கை பிடிக்கவேயில்லை, காலம் கடந்து போகும்போது அங்கு எங்களை ஏற்றுக்கொள்வார்களா அல்லது எம்மாலும் ஒன்றிட முடியுமா? மீண்டும் ஒரு அகதி வாழ்க்கையாக மாறிவிடுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

இசை உங்கள் வழக்கமான நக்கல்களுக்கு அளவில்லை, அருமையான வாதங்கள், பாராட்டுக்கள்

 

இதிலாவது உந்த முக்குறிகளை நீக்கியிருக்கலாம், வாசிக்கவே கஷ்டமா இருக்கு.

 

நீங்கள் காய்கறிகளை கழுவாமல் சமைத்திற்கு யார் காரணம்? 

 

அந்த வெள்ளையைப்பற்றி சொன்னால் எனக்கு பல எச்சரிக்கை புள்ளிகள் வரலாம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எமது தரப்பின் வாதத்தில் எதிரணியினரே  குழம்பிபோய்  தங்கள் பக்கத்தில் இன்னொருவர்   புங்கையூரான் வாதத்தை  வைக்க முன்னரேயே தாங்கள்  தேற்றுப் போய் விடுவோம் என்கிற பயத்தில்.  எதிரணி தலைவரே  அவசரப்பட்டு தனது  பக்க அணியை  காப்பாற்றுவதற்காக  வாதத்தை வைத்து சென்று விட்டார் என்று வந்து பார்த்தால்புங்கையூரான்  ஏதே திருவள்ளுவர் என்கிற  நினைப்பில்  நாலு வரி எழுதி விட்டு போயிருக்கிறார். திரு வள்ளுவர் இரண்டே வரிதான்  இவர் பெரு வள்ளுவராம். பிறகு தனது அணியை எப்படியாவது காப்பாத்தலாம் என்கிற முயற்சியில் முகக் குறிகளோடு  இசை கலைஞன் குதிரையோடி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை இசைக்கு வரவேற்புக்கு வந்தவரே ஒழிய அவரின் வாதத்தை இன்னும் தொடங்கவில்லை என எண்ணுகிறேன். சாத்திரி ஒருவர் குறைந்தால் உங்கள் பக்கம்
தராசு சாயும் என்று பார்க்கிறீர்களோ??? விடமாட்டம். :D 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது வியூகங்களை இப்போதைக்கு வெளிப்படுத்த மாட்டோம்..! :lol:

சாமி அண்ணை வித்தியாசமான திசையில் பயணித்திருந்தார். தனக்கு கவலை உண்டென்றார். ஆனால் தலைப்பு "புலம் பெயர் மக்களுக்கு" என்றதை மறந்திருந்தார். சாமியண்ணை கவலைப்பட்டால் யாழ்க்களம் அதில் பங்கு கொள்ளும். ஆனால் அது புலத்து மக்கள் கவலையாக இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளுமா?. 

 

விவாதத்தில் மேற்கு நாடுகளில் மக்களின் வாழ்நாட்கள் கூட என்பதை மறுக்கிறார்கள். தனி மனித சுதந்திரம் கூட என்பதை மறுக்கிறார்கள்.  படித்தவர்களின் எண்ணிக்கை கூட என்பதை மறுக்கிறார்கள். வேலை இல்லாத்திண்டாடம் குறைவு என்பதை மறுக்கிறார்கள். வலிந்த கூட்டுக்குடும்பத்திற்கு தேவை இல்லை என்பதை மறுக்கிறார்கள். <_<

 

இந்த பொது உண்மைகளில் கை வைக்காமல் விவாதம் போக முடியாதா? :huh:

 

மற்றக்கரை தொடந்து பொருளாதார மேம்பாட்டுக்கு வந்தாக நினைத்துதான் வாதாடுகிறார்கள். இவர்களின் கருத்துகளில் தாங்கள் அகதிகள் அல்ல என்பது போலவும், Student Visa, Business Visa விசாவில்தான் தங்கள் எல்லோரும் சந்தோசமாகவே  இங்கே  வந்து மேற்கு நாடுகளை ஆர அமர அனுபவிப்பது போல எழுதுகிறார்கள். :(  

 

"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா! நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும் எமக்கென்நென்றுடுண்டிரும்" என்று வாழத்தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். :(  :(  :(

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னப்பா பட்டி மன்றத்த படையப்பா ரேஞ்சு க்கு ஆக்கி இப்பிடி ஒரு ட்விஸ்ட் வைச்சிட்டாங்க இசை அண்ணா அணி.....:D

Who is next? I'm confused :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கை இசைக்கு வரவேற்புக்கு வந்தவரே ஒழிய அவரின் வாதத்தை இன்னும் தொடங்கவில்லை என எண்ணுகிறேன். சாத்திரி ஒருவர் குறைந்தால் உங்கள் பக்கம்

தராசு சாயும் என்று பார்க்கிறீர்களோ??? விடமாட்டம். :D

 

இதென்ன புது விளையாட்டு.....அப்பிடியெண்டால் நாங்களும் எங்கடை ஆக்களுக்கு குத்துவிளக்கு கும்பம் வைச்சிருப்பமெல்லே :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது வியூகங்களை இப்போதைக்கு வெளிப்படுத்த மாட்டோம்..! :lol:

இசை, திட்டம் அபாரம்! :icon_idea:

 

மற்றப்பக்கம், அப்பிடியே பொறி கலங்கிப்போய் நிக்குது! :o

 

அடிக்கடி 'நெத்தியடி' எண்டு சொன்னவங்களுக்கு, 'நெத்தியடி' எண்டா எப்பிடியிருக்கும் எண்டு விளங்கியிருக்கும்! :D

 

'அர்ஜுனா, இது தான் தருணம், இன்னுமேன் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்?'

 

எடுத்துவிடு உன் பாணங்களை, அழித்துவிடு, உன் எதிரிகளை!!!

 

ஹா.... ஹா.... கலக்கல், தலைவா! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சும்மா உங்களுக்குள்ளேயே பஞ்ச் டயலொக்குகளையே பேசிறீங்கள் :D

 

ஆனா ஒண்டு கடுமையா கலங்கிப்போய் இருக்கிறீங்கள் எண்டு மட்டும் விளங்கிது. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.