Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சத்தைக் கிள்ளாதே...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம் பாராத காதல்கள் அனேகமாக முகம்பார்க்கும்பொழுது முற்றிலும் கோணலாகிப் போவதைப் பார்த்திருக்கின்றேன் . என்னைப் பொறுத்தவரையில் இந்தக்கதையின் கதாநாயகி ஓர் எதிர்பார்ப்புடனேயே தனக்கான துணையைத் தேடுகின்றாள் . முதலில் கமலைத் தெரிவு செய்தவள் இப்பொழுது மயூரனை நேசிப்பவளின் செயற்பாடுகளை " காதல் " என்கின்ற வரையறைக்குள் சேர்க்க முடியாது . வேண்டுமானால் அதை ஹோர்மோன்களின் குளறுபடிகள் என்றே சொல்ல முடியும் . வாழ்துக்கள் ஜீவா !!! இந்தக்கதையே உங்கள் எழுத்துப் பயணத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கப் போகின்றது .

நன்றி கோமகன் அண்ணா, வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்.

முடிவு வரை தொடர்ந்திருங்கள். :)

  • Replies 134
  • Views 14.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலிலை இருந்து கதை கொஞ்சம் சீரியசாகப் போகுது போல கிடக்கு! :D

 

தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்கிறேன்!

 

காதல் கதையை மட்டுமே எழுதினால் வாசிப்பவர்களுக்கும் வெறுப்பு வந்திடும், எழுதுவதற்கான வெளிகள் இருப்பதால் எல்லாவற்றையும் தொட்டுச் செல்லட்டுமே என்று எழுதிப் பழகிறேன் அண்ணா.

உங்களுடைய ஆக்கமும்,ஊக்கமும் தான் எம்மைப் போன்றவரை உற்சாகமூட்டும்.

நன்றி புங்கை அண்ணா, வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற தலைப்பை முதல் முதல் வாசித்தபோதும் கதையின் ஆரம்பமும் ஏதோ காதலால் ஆதலால் அழிதலால் என்று போலவே ஆரம்பித்தது. ஆனால் தொடர்ந்து செல்லும் கதையின் நீளம் ஒரு காலத்தை பதிவு செய்து கொண்டு போகிறது.இதுவொரு நாவலாக தொடரக்கூடிய சகலத்தையும் கொண்டுள்ளது.

விளையாட்டுப் பிள்ளையாய் கலக்கிய ஜீவாவுக்குள் ஒரு மாபெரும் கலைஞன் ஒளிந்திருந்திருக்கிறான். ஏற்கனவே நீங்கள் எழுதிய கதைகளில் இக்கதை காத்திரம் மிக்கதாய் தொடர்கிறது.வாழ்த்துக்கள்.

 

பி.கு:-   வாரக்கணக்காக இழுத்தடிக்காமல் விரைவில் எழுதி முடியுங்கோ. ஒரு தொடர்கதையை நீண்டநாள் காத்திருந்து வாசிப்பதற்கு நமக்கெல்லாம் பொறுமையில்லையடா தம்பி. :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல த்ரில்லாகப் போய்க் கொண்டிருக்கின்றது ஜீவா

வாழ்த்துகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே ..... பகுதி - 10

Earth+Goddess.jpg

 

இரவு படுக்கைக்குப் போக முன்னரே சுவாமிப் படத்துக்கு எல் ஈ டி பல்ப்பில் ஓடி ஓடிப் பத்திற மாதிரிச் செய்ய வேணும் என்ற நினைப்பிலையே படுத்தவன். விடிஞ்சது தான் தாமதம் குளிக்கக் கூடவில்லை, முகம் கழுவிப்போட்டு வந்து எஸ்லோன் பைப்பில் ஒரு இஞ்சி இடைவெளியில் இருபது எல் ஈ டி க்கு அளவான ஓட்டை போட்டு விட்டு பழைய ரேடியோவைக் கழட்டி அதிலிருந்த டயோட்டுக்களைப் பிச்சுக் கொண்டிருந்தான்.

"விடிஞ்சால் காணும் கையை வச்சுக்கொண்டு சும்மா இருக்கிறானோ என்று, எதையாவது போட்டு நோண்டிக் கொண்டிருக்கிறதே வேலையாப் போச்சு" 

அம்மாக்களுக்கே உரிய புராணம் பாடிக்கொண்டு வந்து தேத்தணியைக் குடுத்துவிட்டுப் போனார் மயூரனின் தாய்.

 தன்னுடைய வேலையில் மூழ்கியிருந்தவனைப் பக்கத்து வீட்டுப் பொடியன் சொன்ன சேதி அதிர்ச்சியில் உறைய வைத்தது.

"மயூரன், உங்கண்டை சசி அண்ணாவை வேலைக்குப் போகேக்குள்ளை யாரோ சுட்டுப்போட்டாங்களாமடா"

மூளையும்,மனமும் வெற்றிடமாய் உணர்ந்தவனாய் உடனே சைக்கிள் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தான். நாலைந்து பொடியளைத் தவிர யாரும் இல்லை. எதுக்கு தேவையில்லாத சோலி என்று பக்கத்து வீட்டுச் சனம் எல்லாம் வேலியால் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.

அப்ப தான் சுட்டிருக்க வேணும்  தலையில் இருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது,  " சுட வேண்டாம் என்று கும்பிட்டிருப்பான் போல  , அப்படி இருந்தும் கோழைகள் சுட நினைக்க ஓடி இருக்கிறான் முதுகில் மூன்று சன்னங்கள் பாய்ந்திருந்தது அவன் விழுந்ததும் உச்சந்தலையில் சுட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள் போலும்" வானத்தைப் பார்த்தபடியே ஒரு கையை வயிற்றுடன் அணைத்த படி மறுகை நெஞ்சை அணைத்த படி பிணமாகக் கிடந்தான்."

அவனின் குடும்பமும் ஓடி வந்து கதறவே அந்த இடம் சனங்களால் நிரம்பிவழிந்தது. பொலிஸ்,நீதிபதி வந்து விசாரணை முடிந்ததும் பிரேத பரிசோதனைக்காக மந்திகை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மறுநாள் உதயன் பேப்பரில் செய்தி "இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை" இப்படி எத்தனை பேர் இனந்தெரியாதோர் என்ற போர்வையில் வேட்டையாடப் பட்ட நாட்கள் அவை.

சசி,

மயூரனின் ஒன்று விட்ட அண்ணா, இருவீட்டாரும் அதிகம் கதைப்பதில்லையாயினும் அவன் எப்போதும் எல்லாருடனும் அன்பாகப் பழகுபவன், என்ன உதவி என்றாலும் கேட்டவுடன் ஓடிவந்து முன்னுக்கு நிற்பவன். அதை விட அந்த வீட்டின் தலை மகன் அவன் தான் அவனுக்குக் கீழ் இரண்டு தம்பி,இரண்டு தங்கை. உயர்தரத்தில் சித்தியடையாததால் சாதாரண தரத்திற்குப் பின் தோட்டத்தையும் செய்து கொண்டு, பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மனேஜராக வேலை செய்து கொண்டிருந்தான். சொல்லிக் கொள்ளும் படி எந்த பெரிய கெட்ட பழக்கமும் இல்லை, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். சமாதான காலத்தில் தான் அவனின் இரண்டாவது தங்கை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டாள். தாய்நாட்டின் மீது தீராத காதல் கொண்டு போனாள் என்று நினைக்க வேண்டாம், "கோழிக்கு அடை வைத்திருக்கிறார்கள் இருபத்தி ஒரு முட்டை வச்சிருக்கிறார்கள் பத்தொன்பது குஞ்சு தான் பொரித்திருக்கிறது. அக்காக்கு பத்து மற்றவளுக்கு ஒன்பது என்று சொல்லி பிரிக்க, அவள் தான் தான் தோட்ட வேலை, வீட்டு வேலை எல்லாம் செய்யிறன், கோழியைப் பார்க்கிறது, சாப்பாடு போடுறது கூட நான் தான் எப்படி அக்காக்கு மட்டும் ஒரு குஞ்சு கூடக் குடுப்பான் என்ற சண்டை முத்தி அவள் வீட்டாருடன் கோவித்துக் கொண்டு இயக்கத்துக்குப் போய்விட்டாள், எவ்வளவோ கெஞ்சியும் அவள் வரவே இல்லை இன்று அவளும் எப்படி இருக்கிறாள்? என்ன ஆனாள்?? வீரச்சாவடைந்திருப்பாளோ அல்லது சரணடைந்து எங்கும் முகாமில் இருப்பாளோ?? விடைகளற்ற கேள்விகளாய் இன்னும் அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

தன் தங்கை, தம்பியருக்கு ஒரு நல்ல வாழ்வு அமைத்துக்குடுக்க வேண்டும் என்று நினைத்த அண்ணனும் இன்று உயிரோடு இல்லை, நடைபிணங்களாய் எஞ்சியிருக்கும் நாட்கள் வரைக்கும் உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

"அம்மா, இனிமேல் நான் இஞ்சை இருக்க சரிவராது, எங்கையாவாது போகவேணும். கெதியா பாஸ் எடுக்கவேணுமணை."

எப்படா அவனைப் பிடிச்சு அனுப்பவேணும் என்று இருந்தவர்களுக்கு அவனே கேட்டது நெஞ்சில் பாலை வார்த்திருந்தது."

அந்த நாட்களிலேயே கோவில்திருவிழாவும் நடந்ததால் அதையும் முடித்து விட்டு,நண்பர்கள் யாருக்கும் கூட எதுவும் சொல்லாமல் ஊரைவிட்டுப் பிரிகிறான். "அவனுக்கு அடித்தாலே அடித்து விட்டு அடித்த இடத்தில் நல்லெண்ணையை சூடாக்கி மசாஜ் பண்ணிவிட்டு அதுக்கு மேல் குண்டுமணி இலை போட்டு விட்டு அவனுக்குப் பிடித்ததெல்லாம் வாங்கிக் குடுத்துவிட்டு பல தடவை தன் தந்தை கண்ணீர் விடுவதைப் பார்த்திருக்கிறான், ஆனால் அன்று அவரின் கண்ணீரில் ஏதோ ஏக்கம் தெரிந்தது. என்றைக்குமே இனி பார்க்க மாட்டோம் என்று உணர்ந்தாரோ என்னவோ இதுக்கு முதல் அவன் அவரை அப்படிப் பார்த்ததே இல்லை.கோயிலடி வரைக்கும் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தவர், அம்மன் கோவில் திருநீறை அவனுக்குப் பூசிவிட்டு

பார்த்து பத்திரமாப் போட்டு வாய்யா" என்றார்.

அவரின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும், கட்டிப் பிடிச்சு முத்தம் குடுக்க வேண்டும் என்று தெரிந்தாலும், பழக்கமில்லையே எப்படிக் குடுக்க, அவர் அடிக்க வர விட்டைச் சுற்றி ஓடுவதும் எந்த விசயமா இருந்தாலும் நேருக்கு நேர் எதிர்த்துப் பேசினாலும், தலைக்கு எண்ணை வைத்து, நகம் வெட்டி விட்டாலும், அவன் தன் தந்தையை தூரத்தில் இருந்தே ரசித்ததால் அவனுக்கு இதெலாம் அன்னியமாகவே பட்டது. ஆனால் தாயுடன் அப்படியில்லை குளிக்கும் போது தாய்க்கு முதுகு தேய்த்து விடுவதிலிருந்து, அரிசி,தூள் இடிச்சுக் குடுப்பதிலிருந்து, காதுக் குடுமி எடுத்து விடச் சொல்ல ஊண்டி இடிச்சு தலை சுத்தி விழ அம்மாக்கு ஏதும் ஆயிருக்குமோ என்று பயந்து மாமி வீட்டை ஓடியது வரை அவனுக்கும் அம்மாவுக்குமான அன்பு தொடுகையானதும் கூட

ஆனால் தந்தை என்பது அவன் உயிருள்ள வரை பிரிக்க முடியாத ஆத்மார்த்தமானது.

"போட்டு வாறேன் அப்பா." இது தான் அவன் சொன்ன வார்த்தை மௌனங்களின் மொழிகளில் தான் பேசிக்கொண்டார்கள்.

அவர்களை அழைத்துப்போக வந்த ஹையேஸ் வானில் அவனும்,அம்மாவும்,அத்தானும் ஏறி கையசைத்தவாறே பலாலி நோக்கிப் பயணமாகிறார்கள்.

தொடரும்...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற தலைப்பை முதல் முதல் வாசித்தபோதும் கதையின் ஆரம்பமும் ஏதோ காதலால் ஆதலால் அழிதலால் என்று போலவே ஆரம்பித்தது. ஆனால் தொடர்ந்து செல்லும் கதையின் நீளம் ஒரு காலத்தை பதிவு செய்து கொண்டு போகிறது.இதுவொரு நாவலாக தொடரக்கூடிய சகலத்தையும் கொண்டுள்ளது.

விளையாட்டுப் பிள்ளையாய் கலக்கிய ஜீவாவுக்குள் ஒரு மாபெரும் கலைஞன் ஒளிந்திருந்திருக்கிறான். ஏற்கனவே நீங்கள் எழுதிய கதைகளில் இக்கதை காத்திரம் மிக்கதாய் தொடர்கிறது.வாழ்த்துக்கள்.

 

பி.கு:-   வாரக்கணக்காக இழுத்தடிக்காமல் விரைவில் எழுதி முடியுங்கோ. ஒரு தொடர்கதையை நீண்டநாள் காத்திருந்து வாசிப்பதற்கு நமக்கெல்லாம் பொறுமையில்லையடா தம்பி. :lol:

 

நன்றி சாந்தி அக்கா வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும். :)

இந்தளவுக்கு நீட்டிமுழக்குவதாய் எனக்கும் உத்தேசம் இருக்கவில்லை :rolleyes: ஆனால் எழுதும் போது

அந்தக் காலத்தையும் ஊறுகாய் போல தொட்டுச் செல்லலாம் என்று தான் எழுதுகிறேன். இனி இந்தக் கதையை இடையில் ஏதேனும் ஒன்றுடன் தொடர்பு படுத்த முடியவில்லை ஆனால் காதல்க் கடலில் தான் முடிவு சங்கமிக்கும். :D:lol:

 

ஐ.பி.எல், சம்பியன்ஸ் லீக் வந்து தான் கெடுக்குது தினமும் ஒரு பகுதியாவது எழுதி முடித்து விடுகிறேன் அக்கா: :rolleyes:

தொடர்ந்து படித்து சரி,பிழைகளைச் சுட்டிக்காட்டுங்கள் அக்கா. :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜீவா

 

  • கருத்துக்கள உறவுகள்

அவன் தன் தந்தையை தூரத்தில் இருந்தே ரசித்ததால் அவனுக்கு இதெலாம் அன்னியமாகவே பட்டது.
ஜதார்த்த வரிகள் ..தொடருங்கள் ஜீவா

தொடருங்கள் ஜீவா! வாசிக்க ஆவல்

 

Edited by அலைமகள்

அடுத்தது எப்ப வரும் என்ற ஆவலில் இருப்பதால் பின்னூட்டம் விட மறந்துவிட்டேன் .மன்னிக்கவும் .

தொடர்ந்து எழுதுங்கள் ஆவலாக வாசித்துக்கொண்டே இருக்கின்றேன் .இன்று திரும்ப முழுவதும் வாசித்தேன் .

காதல் வலியில் இருந்து விடுதலை வேள்விக்குள் புகுந்துவிட்டீர்கள்.எழுத்தும் கதையை நகர்த்தும் விதமும் அருமை ஜீவா.பெண்களை வர்ணிக்கும் போதுதான் சாண்டில்யன் ஆகிவிடுகின்றர்கள் அது கொஞ்சம் இடிக்கின்றது.

தொடருங்கள் ஜீவா. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுக்கமுழுக்க காதல் கதையைத்தான் எதிர்பார்த்தன். நீங்களும் பெரிய ஆள்போல கிடக்கு.

 

பெரிய ஆள் என்று நினைச்சால் காமடி பண்ணுறா என்று சிரிக்கப் போறாங்க அக்கா.

உண்மையாக எழுதும் போது நானே இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை அக்கா,ஏதேச்சையாக வந்தது தான் அக்கா. முடிவு வரை தொடர்ந்திருங்கள் அக்கா.

 

நன்றி வருகைக்கும்,கருத்துப்பகிர்விற்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓராம்கட்டை சந்தி காம்பாலை பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும் . தொடந்து எழுதுங்கோ தம்பி .

 

அக்காச்சி, நீங்களும் பருத்தித்துறையோ? :rolleyes:  என்ன யாழ் களத்திலை பருத்தித்துறையை அண்டிய ஆக்கள் தான் அதிகம் போல.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்காச்சி, நீங்களும் பருத்தித்துறையோ? :rolleyes:  என்ன யாழ் களத்திலை பருத்தித்துறையை அண்டிய ஆக்கள் தான் அதிகம் போல.. :icon_idea:

 

நாங்கள் ஒறிஜினல் பருத்தித்துறையார் . பண்டாரியம்மன் கோயலடிக்கு கிட்டத்தான் எங்கடை வீடு .

அந்த நேரத்திலை சாவுகள் கூட நடந்தது . இப்ப இருக்கிற வசதியள் எல்லாம் அப்ப இல்லாததாலை நியூசுகள் எல்லாம் வெளியிலை வரேலை . உங்கடை கதை ஒரு திறில்லான கதையா இருக்கு தொடருங்கோ .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசத்தலப்பா கதை.. சும்மா கை கால் எல்லாம் வேர்க்குது.. :D

 

நன்றி மாம்ஸ்.

 

நகைச்சுவைத் திலகங்கள் நீங்கள் எல்லாம் தரும் ஊக்கம் தான் மாம்ஸ். :)

  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சி, நீங்களும் பருத்தித்துறையோ? :rolleyes: என்ன யாழ் களத்திலை பருத்தித்துறையை அண்டிய ஆக்கள் தான் அதிகம் போல.. :icon_idea:

இதில் ஆச்சரியம் என்ன.. :D பாக்கு நீரிணையுடன் இந்து சமுத்திரம் சேருவதால் தோன்றும் அறிவுக்கடல் அல்லவா நாம்? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் ஜீ

 

நன்றி அக்கா.

ஜதார்த்த வரிகள் ..தொடருங்கள் ஜீவா

 

நன்றி புத்தன் அண்ணா, தொடர்ந்திருங்கள். :)

இதில் ஆச்சரியம் என்ன.. :D பாக்கு நீரிணையுடன் இந்து சமுத்திரம் சேருவதால் தோன்றும் அறிவுக்கடல் அல்லவா நாம்? :D

 

ஆண்கடலும் பெண்கடலும் சேரும் அந்த முனைபகுதியில், தும்பளை கடற்கரை ஒட்டிய வாசிகசாலையில், வெளிச்சவீட்டு பேக்கரியில் நாங்கள் அடிச்ச கூத்தையும் ஒரு நாள் எழுதுவம் தானே இசை. அப்போதெரியும் அறிவுக்கடலைப்பற்றி  :lol:

 

ஜீவா மிக அருமையாக விறுவிறுப்பாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். நாங்களும் கொஞ்ச நாட்கள் உங்கள் பகுதியில் வாழ்ந்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அடிச்ச கூத்தையும் ஒரு நாள் எழுதுவம் தானே இசை. அப்போதெரியும் அறிவுக்கடலைப்பற்றி  :lol:

 

எழுதாமல் ஒளிச்சால் ஆயிரம் தோப்புக்கரணமும் 15கிலோ மீற்றர் ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டையை சுத்தி ஓட வேண்டி வரும். :icon_idea:

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி கதை எப்ப போடுவிங்கள் ??

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்கடலும் பெண்கடலும் சேரும் அந்த முனைபகுதியில், தும்பளை கடற்கரை ஒட்டிய வாசிகசாலையில், வெளிச்சவீட்டு பேக்கரியில் நாங்கள் அடிச்ச கூத்தையும் ஒரு நாள் எழுதுவம் தானே இசை. அப்போதெரியும் அறிவுக்கடலைப்பற்றி  :lol:

 

ஜீவா மிக அருமையாக விறுவிறுப்பாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். நாங்களும் கொஞ்ச நாட்கள் உங்கள் பகுதியில் வாழ்ந்திருக்கிறோம்.

 

எங்கை கொஞ்ச நாளா நீங்களும் காணாமல் போட்டிங்கள் ? ஐ.பி.எல் மச் வந்து கெடுத்துப் போட்டுது இனி தொடரும். .. :)

  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் போட்டுவிட்டுச் சொன்னாலும் பரவாயில்லை. போட்டி முடிஞ்சு 4 நாட்களாச்சு :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே ... பகுதி - 11

il_fullxfull.363456203.jpg

 

அவனது மனக்குதிரையைப் போலவே வானும் வேகமெடுத்தது. ஏனோ அவன் மனம் ஏக்கத்தில் தவித்தது, வீதியோரத்து மின்கம்பங்களுடன் லயித்திருந்தவனுக்கு தெரு விளக்குகளும்,வேலிக்கதியால்களும் தான் ஓடுவது போல இருந்தது பத்த வச்ச கற்பூரம் போல அவன் கனவுகளும் கலைந்து கொண்டேயிருந்தது ஏனோ அந்த வலியின் கணத்தாக்கங்கள் அவனுள் கலந்து கண்ணீரைய விசும்பியது. நீண்ட நேரங்கள் எடுத்திராது வான் துரையப்பா விளையாட்டரங்கில் நிறுத்தி " பலாலிக்கு வானிலை போகேலாது இதிலை இறங்குங்கோ ஆமியின்ரை பஸ்ஸிலை தான் கூட்டிக்கொண்டு போவான்" என்று சொல்லிவிட்டு ட்றைவர் திரும்பி விட்டான்.

ஆமியின்ரை பஸ்ஸில் ஏறியவனுக்கு நடுக்கம் "கிளைமோர்" ஏதும் அடிப்பாங்களோ ..!! முன்னுக்கும் பின்னுக்கும் போற பஸ்ஸிலை எல்லாம் ஆமி தான் இருக்கிறாங்கள் அவங்கண்டை பாதுகாப்புக்குத் தான் போலை இப்படி அப்பாவியளைக் கூட்டிக்கொண்டு போறாங்கள், அம்மாளாச்சி என்னைக் காப்பாத்து உயிரோடை போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று மனதுக்குள் வேண்டியவாறே இருமருங்கும் குண்டடி பட்ட கட்டிடங்களின் சிதைவுகளைக் கணக்கிட்ட வாறே நினைவுகளில் தொலைந்தான்.

பஸ் குறிப்பிட்ட இடத்தில் நின்றதும் மோப்ப நாய்களின் சோதனை எல்லாம் முடிந்து வெளியே எங்கும் பார்க்க முடியாதவாறு கண்ணாடிகளுக்குத் திரைச்சீலை கட்டியிருந்த வேறோர் பஸ்ஸில் ஏறிப் பலாலி போனதும் அனைவரையும் தனித்தனியே புகைப்படம் எடுத்து விசாரணை முடித்த கையோடு சில மணிநேரத் தாமதத்தின் பின் ஓடு பாதையில் நின்ற விமானத்தில் ஏறுகிறான். மயூரனுக்கு அது தான் முதல் விமானப் பயணம் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் உருவமில்லா உருண்டை உருள்கிறது என்ற வைரமுத்து வரிகள் போல அவன் நெஞ்சாங்கூட்டுக்குள்ளும் இனம்புரியதா உணர்வுகளின் கலவை உந்தித்தள்ளியது அம்மாவையும், அத்தானையும் பார்த்தவன் அவர்களின் சீற்பெல்டை சரி செய்தவாறே சாளரங்களூடு கூகிளின் சட்டலைட் படங்கள் போல தாயகத்தின் அழகை கண்களில் வரிந்துகொண்டான் ஆனால் பயமும் அவனை வாட்டாமல் இல்லை எங்கை "சாம்7" ஏவுகணை வந்து சாக்காட்டி விடுமோ இல்லை இவன் தான் பாவி இரணைமடுக்குளத்தில் இறக்கிவிடுவானோ என்று இருந்தவனுக்கு இரத்மலானையில் இறங்கிய போது தான் "அப்பாடா ஒரு கண்டம் தாண்டிவிட்டோம்" என்ற நின்மதி வந்ததாய் உணர்ந்தான். உடனேயே கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறியவன் ஏற்கனவே பேசிவைத்த லொட்ஜில் போய் இறங்கினான்.

மறுநாள் தெரிந்த ஒருவருடன் போய் காலையில் பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்தவன் மாலையில் சென்று அதைப் பெற்றுக்கொண்டு வந்து நோ லிமிட்டில் வீட்டில் எல்லோருக்கும் உடுப்புகள் எடுத்து அம்மாவிடம் குடுத்து விட்டு அத்தானிடம் அம்மாவை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கோ என்று சொல்லி விட்டு அவனை அழைத்துக் கொண்டு போக வந்திருந்த உறவினருடன் நுவரெலியா நோக்கிப் பயணமாகிறான்.

கோட்டை பிரதான பஸ்தரிப்பிடத்துக்கு வந்தவன் நுவரெலியா செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொள்கிறான் சிங்களப் பாட்டு கேட்கும் குரல்கள் எல்லாம் சிங்களத்தில் இருக்க வேறு ஏதோ நாட்டுக்கு வந்த உணர்வை அவனால் தடுக்க முடியவில்லை, மாலை நேரம் என்பதால் பார்க்கும் இடமெல்லாம் பசுமை,குளிர்ச்சி இயற்கை அன்னை தன் அழகுப்பாழங்களைக் கொட்டிச் சிதறி விட்டிருந்தாள் அவ்வளவு அழகு. அருகில் இருந்தவர்கள் எல்லாம் பேருந்தின் குலுக்கலிலும், பயணக்களைப்பிலும் கண்ணயர்ந்த போதும் அவனுக்கு முதல் முதல் அனுபவம் இயற்கையென்னும் இளைய கன்னியை கண்களால் கற்பழித்துக்கொண்டிருந்தான்.

இடையில் ஒரு நிறுத்தத்தில் அனைவரும் இறங்கி உணவு உண்டபின் மீண்டும் பயணமாகிறான், அவன் ஏக்கங்கள்  இப்போது அபி2யின் நினைவுகளில்..

தொடரும்..

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒருமாதிரி திரும்ப எழுதத் தொடங்கீட்டியள். இயற்கையைக் கூட சிங்களவர்களின் பக்கம் அழகையும் செழிப்பையும் தள்ளிவிட்டு எமக்கு வறட்சியைத் தந்திருக்கிறான் கடவுள். நுவரெலியா உண்மையில் அழகுதான்.அதை மறுக்க முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர்வதையிட்டு மகிழ்ச்சி ஜீவா :)  

பயணங்கள் தொடரட்டும்  

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் ஜீவா :) இல்லையென்டால் வாசிப்பவர்களுக்கு கதை மறந்து போய் விடும் :icon_idea:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.