Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

*தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  *தியாகிகளும் துரோகிகளும்-

எதுவரை சஞ்சிகைக்காக  சாத்திரி.

 

ழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப்
போராட்டங்களை வழிநடத்தியவர்களின் துப்பாக்கிகள் , முதன் முதலில்
எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை
நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்பது
பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின்
தாரக மந்திரமாகவே இருந்தது. அது எமது விடுதலைப் போராட்டத்தில் கொஞ்சம்
தூக்கலாகவே இருந்துவிட்டது.மேடைகள் தோறும் தமிழர் விடுதலைக்
கூட்டணியினரால் துரோகியாக வர்ணிக்கப்பட்ட சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின்
யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை என்னும் செய்தி இலங்கைத்
தீவில் பெரும் அரசியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல்
துரேக அழிப்பு என்று பெருமையாக மக்களால் கொண்டாடப்பட்டதோடு தொடங்கி
துரையப்பாவின் கொலைக்கு மறைமுக ஆதரவுகளை வழங்கிய தமிழர் விடுதலைக்
கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும் அதே துரோகப்பட்டியலில் இணைக்கப் பட்டு
கொல்லப்பட்டார்.இப்படியாக ஈழ விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளாக இனம் காணப்பட்டு கொல்லப்பட்டவர்களின் பட்டியல் என்பது மீக நீளமானது.


துரோகிகள் என்று போட்டுத் தள்ளியதில் ஈழத்து அனைத்து விடுதலைப்
போராட்ட இயக்கங்களும் ஒன்றிக்கொன்று சளைத்தலையல்ல.இறுதியில் மிஞ்சிய
இயக்கங்களை துரோகிகளாக்கி போட்டுத் தள்ளியபடியே புலிகள் இயக்கம் மட்டும்
மக்களிற்கான விடுதலையை பெற்றுத்தரும் போராட்ட இயக்கமாக தனித்துநின்று
,2009 மே மாதத்தோடு அதுவும் முடிந்துபோய்விட்டது. விடுதலை இயக்கங்களாலும்
முஸ்லிம் குழுக்களாலும் தங்களிற்குளேயும் வெளியேயும் மாறி மாறி
கொல்லப்பட்ட அந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின்
எண்ணிக்கை என்பது எங்கள் பொது எதிரி என விடுதலை இயக்கங்களால்
இனம்காணப்பட்ட இலங்கை இராணுவத்தால் கொல்லப் பட்ட தமிழ் முஸ்லிம் மக்களின்
தொகையோடு ஒப்பிடும்போது இரண்டிற்கும் பெரியளவு வித்தியாசம்
இருக்கப்போவதில்லை.





இதில் வேடிக்கை என்னவென்றால் எமது விடுதலைப் போராட்டத்தில் தியாகிகள்
துரோகிகளாகியும். துரோகிகள் தியாகிகள் ஆன விந்தையான வரலாறும் கூட உண்டு.
அதற்கு ஒரு சில உதாரணங்களாக துரோகிகளாக கருதப்பட்ட அமிர்தலிங்கம்
சுடப்பட்டபோது சூடுவாங்கி மயிரிழையில் உயிர் தப்பிய சிவசிதம்பரமும்.
புலிகள் அமைப்பின் பரம எதிரியான புளொட்டின் முக்கிய உறுப்பினர் தாராகி
சிவராமும் தியாகிகளாகியும் அதே நேரம் மக்களிற்காகவும் அந்த மண்ணிற்காகவும்
உயிரைக்கொடுத்து தியாகிகளாக போராட வந்த மாத்தையாவோடு சேர்ந்த சுமார்
முன்னூறிக்கும் அதிகமானவர்களும்.கருணாவோடு சேர்ந்து சுமார் அறுநூறு
பேர்வரை துரோகிகளாக்கப்பட்டு கொல்லப்பட. கருணாவும் இன்னும் சிலர் மட்டும்
உயிர்தப்பிவிட்டார்கள் .இதே கருணா மீண்டும் தியாகியும் ஆகலாம் நடக்காது
என்று சொல்வதற்கில்லை.


இங்கு தியாகி துரோகி என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் பலமானவர்களாலும் கையில் ஆயுதங்கள் உள்வர்களாலுமே
தீர்மானிக்கப் படுகின்றது. இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் ஆயுத
விடுதலைப் போராட்டத்தின் போது சேர்ந்தே தாயகத்தில் தொடங்கப்பட்ட இந்த
தியாகி துரோகி விளையாட்டு இன்றைய நிலையில் அங்குள்ள மக்களினால்
மறக்கப்பட்டு அவர்கள் தங்கள் வாழ்வாதாரப் போராட்டத்தில் இறங்கிவிட ,
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் பரவிவிட்டது மட்டுமல்லாமல் இது
ஒரு மன நோயாகவே மாறிவிட்டிருக்கின்றது.அதற்கு வலுச் சேர்ப்பது புலம்பெயர்
தமிழர்களால் நடாத்தப் படும் இணையத் தளங்களாகும்.


தமிழில் இணையத் தளம் நடாத்துவதென்பது புலம்பெயர் தேசங்களில் குடிசைக்
கைத்தொழில் போல் ஆகிவிட்டது. ஒரு கணணியும் தமிழில் தட்டச்சும் செய்யத்
தெரிந்தால் அவர் ஒரு செய்தி இணையத் தளத்தை நடாத்துவார் என்பது மட்டுமல்ல
தினமும் பிரதான செய்தித் தளங்களில் வெளியாகும் செய்திகளை எடுத்து தலைப்பை
மட்டும் தனகோற்றவாறு கவர்ச்சிகரமாக மாற்றத் தெரிந்துவிட்டால் அவர்
பத்திரிகையாளராகவும் மாறிவிட்டிருப்பார். அதே நேரம் செய்திகளின் கீழ்
தாயகத்திலிருந்து எமது செய்தியாளர் என்று அவர் போடத் தவறுவதும்
இல்லை.இப்படி இங்கு இணையத் தளம் நடத்தும் ஒருவரிற்கு யார் யாரையெல்லாம்
பிடிக்காதோ அவர்களெல்லாம் துரோகிகள்தான்.


புலம்பெயர் நாடுகளில் பெருமளவான இணையத் தளங்களை நடாத்திக்
கொண்டிருப்பவர்கள் புலிகள் அமைப்பின் வெளிநாட்டுக் கிளைகளாக இயங்கிய
அனைத்துலகச் செயலகத்தை சேர்ந்தவர்களே.அதே நேரம் புலிகள் அமைப்பின்
பெருமளவான சொத்துக்கள் இன்னமும் இவர்கள் கைகளிலேயே தங்கியிருப்பதால்
இன்றைய நிலவரப்படி பணபலம் மற்றும் இணையத்தளங்களின் பலத்தோடு தமிழர்கள்
புலம்பெயரந்து வாழும் நாடுகளில் இவர்களே தியாகிகளையும் துரோகிகளையும்
தீர்மானிக்கிறார்கள்.முன்னைய காலங்களில் தாயகத்தில் இயக்கங்களால்
துரோகிகள் என தீர்மானிக்கப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப் படுவார்கள்.
பின்னர் புலிகள் தங்கள் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் சிறைகளில்
அடைத்தார்கள். ஆனால் வெளிநாடுகளில் இவை இரண்டையுமே புலிகளின் அனைத்துலகச்
செயலகத்தினரால் செய்யமுடியாது என்பதால் துரோகியாக்கப்பட்டவரின் படத்தோடு
தங்களால் இயக்கப்படும் இணையங்களில் இவர் இலங்கை புலனாய்வுத் துறையோடு
சேர்ந்து இயங்குகிற கைக்கூலி என பதிவிட்டபின்னர் இராணுவத்தில்
லெப்ரினன்ற்.லெப்.கேணல். கேணல் என தர வரிசை வழங்குவது போல் துரோகியாக்கப்
பட்டவரிற்கு மேலதிகமாக தர வரிசை பதவிகள் வழங்கப்படும். அந்த மேலதிக தர
வரிசைக்காக அவர்கள் பயன்படுத்துவது டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான் ,கருணா,
கே.பி ஆகியோரோடு சேர்ந்து இயங்குகிறார் என்பதுதான்.


கே.பி யின் வருகைக்கு பின்னர் துரோகப் பதவி கொடுப்பவர்களால் டக்லஸ்
பின்னிற்கு தள்ளப்பட்டு விட்டார்.கே.பி யோடு சேர்ந்து இயங்குகிறார் என
ஒருவரிற்கு வழங்கப்படும் துரோகிப் பட்டம்தான் மிக உயர்ந்த லெப்.கேணல்
அல்லது தளபதி துரோகிப்பட்டம் ஆகும். அத்தோடு இவர்களிற்கு இந்த
உலகநாடுகளின் உளவமைப்புக்களில் தெரிந்த இரண்டேயிரண்டு உளவமைப்புக்களின்
பெயரான இந்திய றோ..வின் கைக்கூலி மற்றும் அமெரிக்காவின்
சி.ஜ.ஏ.ஏஜெண்ட்.என்கிற வசனங்களையும் சேர்ந்து விடுவார்கள். இப்படி
அண்மையில் அனைத்துலகச் செயலகத்தினரால் தங்கள் இணையத் தளங்களில் துரோகிகளாக
அறிவிக்கப்பட்டவர்கள்தான் முருகதாசனின் பெற்றோர்கள்.


murugathaas.jpgயார்
இந்த முருகதாசன் ஏன் அவரின் பெற்றோர்கள் துரோகியாக்கப்பட்டார்கள் என்று
இனி பாரக்கலாம். புலிகளிற்கும் இலங்கையரசிற்குமான யுத்தம் இறுதிக்கட்டத்தை
இலங்கையில் அடைந்துகொண்டிருக்கும் போது 2009 ம் ஆண்டு மாசி மாதம் 12 ம்
திகதி வியாழக் கிழைமை இரவு சுவிஸ் நாட்டில் ஜெனீவா ஜ.நா சபைக்கு முன்பாக
இலண்டனில் இருந்து வந்து தீக்குளித்து இறந்து போகிறார் முருகதாசன்
என்கிறவர். இதற்கு முன்னரேயே தமிழ் நாட்டில் முத்துக்குமார் என்பவர் இதே
ஈழத் தமிழர்களிற்காக தனது கைப்பட கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து
போயிருந்த சம்பவம் நடந்திருந்தது.அந்தச் சம்பவத்தால் தமிழ்நாட்டு இளையோர்
மாணவர்களிடையே ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாக ஏற்பட்டதொரு எழுச்சியானது தமிழ்
நாட்டு அரசியல் வாதிகளினால் சிதைந்து சின்னாபின்னமாகிப் போனது வேறு கதை.
அதில் எந்த கட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்திருந்தார்கள்.


அதே போல முருகதாசனின் மரணமும் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு உணர்வு
ரீதியான எழுச்சியை கொடுத்திருந்தது என்பது உண்மை.அதே நேரம் முருகதாசனின்
மரணத்தின் பின்னால் பல சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது .அவை
என்வெனில்,முருகதாசன் இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி ஒரு பச்சைக் நிற
காரில் நண்பர்களோடு புறப்பட்ட வீடியோ ஒளிப்பதிவென்றை பிரித்தானிய
காவல்த்துறையினர் கைப்பற்றி விசாரணைகளும் நடாத்தியிருந்தார்கள்.அடுத்ததாக
ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் அவர்களது நிலைமையையும் சர்வதேசத்திற்கும்
ஜ.நா சபைக்கும் எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தக்கோரி
தீக்குளித்தவன் எதற்காக ஜ.நா சபை சுற்றாடலில் யாருமேயற்ற இரவு நேரம் தீக்
குளித்தான்?.முருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின்
பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .எனவே
முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள்? அவர்கள் யார்??.
ஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என முருகதாசனால்
எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஏழுபக்க அறிக்கை என்று இணையத் தளங்களில்
மட்டுமே செய்தியாக வெளியாகியிருந்தது. அதன் மூலம் எங்கும்
இல்லை.



குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த முருகதாசன் தனது இறுதிக்
கணம் வரை தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வேயில்லை. அவன் இறந்துபோன
செய்தியை மறுநாள் மாலையளவில் செய்திகளை பார்த்தே அவர்கள் அறிந்து
கொண்டிருந்தார்கள். அதுவரை அவர்களிற்கு தங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான்
என்றே தெரிந்திருக்கவில்லை இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேககங்களும்
முருகதாசனின் மரணத்திற்கு பின்னால் இருந்தாலும். ஒரு இனத்தின் அவலத்தை
நினைத்து தனது உயிரையே ஆகுதியாக்கியாக்கிவன் என்கிற காரணத்திற்காக
அதைப்பற்றி ஆராச்சி செய்யாமல். அடுத்த கட்டத்திற்கு போவோம்.

முருகதாசனின் மரணத்திற்கு பின்னர் முருகதாசனிற்காக இலண்டனில் ஒரு
நினைவிடம் எழுப்ப வேண்டும் என அவரது பெற்றோர்கள் விரும்பினார்கள். அதற்காக
முருகதாசன் அறக்கட்டளை என்கிற பெயரில் ஒரு அமைப்பினை தொடங்கி நினைவிட
கற்களை இந்தியாவில் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியிருந்தார்கள்.
ஆனால் முருகதாசன் என்பவன் அனைவரிற்கும் பொதுவானவன் , எமது மக்களின்
அவலத்தை உலகத்திற்கு அறிவிப்பதற்காக மரணித்தவன் எனவே அதனை பொது அமைப்பின்
சார்பாக அனைத்து பிரித்தானிய மக்களின் பங்களிப்போடு கட்டித் தருகிறோம் என
நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டிருந்ததோடு அந்த
அமைப்பின் மாவீரர் மற்றும் மாவீரர் குடும்ப விவகார அமைச்சர் எனப்படும்
சேகர் என்பவர் ( இந்த அமைப்பில் அடிக்கடி பதவிகள் மாற்றப் படுவதால் சேகர்
என்பவர் தற்சமயம் என்ன அமைச்சராக இருக்கிறார் என்று தெரியவில்லை) நினைவிடம்
அமைப்பதற்கு நிதி சேகரிப்பதற்காக பற்றுச் சீட்டுக்கள் தயாரிக்கபட்டு
விற்பனை தொடங்கியிருந்த நேரம், சேகரை தொடர்பு கொண்ட இலண்டன் அனைத்துலகச்
செயலக பொறுப்பாளர் தனம் என்பவர் நீங்கள் முருக தாசனிற்கு நினைவிடம்
அமைப்பதற்காக மக்களிடம் நிதி சேகரிக்க தேவையில்லை. அதனை நாங்களே எங்கள்
செலவில் செய்து தருகிறோம் எனவே உங்கள் திட்டத்தை கைவிடுங்கள் என கோரிக்கை
வைக்கிறார்.அவரது கோரிக்கையை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசு அந்த
திட்டத்தை கை விட்டு விற்பதற்காக கொடுத்த பற்றுச் சீட்டுக்களையும் மீளப்
பெற்றுக்கொண்டதோடு முருகதாசன் குடும்பத்தினரிற்கும் தகவலை தெரிவித்து
விடுகிறார்கள்.




ஆனால் ஒரு வருடம் கழிந்தும் நினைவிடம் கட்டுப்படாமல் இருக்கவே
முருகதாசனின் பெற்றோர்கள் அனைத்துலகச் செயலத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட
பொழுது சரியான பதில் ஏதும் வராததால் அவர்கள் ஆரம்பத்தில் தொடங்கியிருந்த
இந்தியாவில் நினைவு கல் செய்து, இலண்டன் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை
தொடரத் தொடங்கியிருந்தார்கள்.அப்போதுதான் கடந்த வருடம் மாவீரர் நாளிற்கு
சரியாக இரண்டு நாளிற்கு முன்னர் முருகதாசன் குடும்பத்தினரிற்கு அனைத்துலக
செயலகத்திடமிருந்து ஒரு அழைப்பு. அது என்னவென்றால் உங்கள் மகனிற்கு
நினைவுக்கல் நட்டுவிட்டோம் அதற்கு நிகழ்வு செய்யப் போகிறோம் அங்கு வந்து
சேருங்கள் என்கிற அதிகார தோரணையிலான அழைப்பு.அதே நேரம் அனைத்துல
செயலத்தினரால் நடாத்தப்படும் இணையத் தளங்களிலும் முருகதாசனின் நினைவுக்கல்
நடப்பட்டு மரியாதை செய்யப்பட்டதாக செய்திகள் படங்களோடு வெளியாகியிருந்தது.


மாவீரர் தினத்திற்கு இரண்டே நாளிற் முன்னர் ஏன் அவசர அவசரமாக
நினைவுக்கல் அமைக்கப்பட்டதன் பின்னணி என்னவெனில், கடந்த இரண்டு ஆண்டுகளாக
வெளி நாடுகள் எங்கும் புலிகள் அமைப்பின் பிரதான பிரிவான தலைமைச் செயலகம்
மற்றும் வெளிநாட்டு பிரிவான அனைத்துலகச் செயலகம் என இரண்டு பிரிவுகளால்
மாவீரர் தினம் இரண்டு இடங்களில் நடாத்தப்பட்டது. அது தொடர்ந்து கொண்டும்
இருக்கின்றது. வெளிநாடுகளில் அனைத்துலகச் செயலகத்தின் செயற்பாடுகளால்
அதிருப்தியடைந்த பலரும் தலைமைச் செயலகத்தின் நடவடிக்கைகளிற்கு ஆதரவு
கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்.எனவேதான் கடந்த வருடம் தலைமைச்
செயலக்தினரால் நடாத்தப்பட்ட மா வீரர் நிகழ்வுகளிற்கு மக்கள் போய்விடாமல்
தங்கள் பக்கம் அவர்களை இழுப்பதற்கான ஒரு தந்திரம்தான் திடீரென நடப்பட்டு
விளம்பரம் செய்யப்பட்ட முருகதாசன் நினைவிடம் ஆகும். இங்கு நடந்தேறியது
உண்மையில் முருகதாசனிற்கான நினைவிடத்தை எழுப்பி மனசார அவனின் தியாகத்திற்கு
மதிப்பளித்து , அவனிற்கு அஞ்சலி செலுத்தி அவனது குடும்பத்தினரிற்கு
மதிப்பளிப்பது என்பது அல்லாமல் அனைத்துலகச் செயலகத்தின் பண பலம், ஆட்பலம்,
ஊடக பலம் என்பதனையும் நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல் தாங்களே தமிழர்களின் ஏக
பிரதிநிதிகள் என்கிற இன்னொரு செய்தியையும் புலம்பெயர்ந்து வாழும்
தமிழர்களிற்கு தெரியப் படுத்துவது என்பதாகும்.


ஆனால் இவர்களது அரசியல் விளையாட்டில் தங்களது மகனின் நினைவிடம் சிக்கி
தவிக்கிறது என்பதை தாங்க முடியாத முருகதாசனின் குடும்பத்தினர் எந்த
அமைப்பினது நினைவிடமும் தங்களிற்கு வேண்டாம் என முடிவெடுத்து அவர்கள்
ஏற்கனவே தொடங்கியிருந்த முருகதாசன் அறக்கட்டளையால் இந்தியாவில் செய்ப்பட்ட
நினைவுக்கல்லை இலண்டனிற்கு எடுத்து வந்து இந்த வருடம் தங்கள் மகனின்
நினைவு நாளன்று ஏற்கனவே அனைத்துலகத்தினால் நிறுவப் பட்ட கல்லை எடுத்து
தங்கள் வீட்டு காணியில் நிறுவி விட்டு தங்கள் கல்லை அதே இடத்தில் நிறுவி
விட்டார்கள். தங்களால் நிறுவப் பட்ட நினைவுக்கல் அகற்றப் பட்டதால்
அனைத்துலகச் செயலகத்தினர் சும்மாயிருப்பார்களா??
அதன் இலண்டன் பொறுப்பாளர் அவசரமாக ஒரு அறிக்கையை விட்டார். அது
என்னவெனில் இலங்கை அரசின் கைக்கூலிகள் முருகதாசனது நினைவிடத்தை உடைத்தனர்,
இவர்கள் துரோகிகள் என்பதோடு மட்டுமல்லாமல் அதி உயர் பதவியான கே.பி யின்
கைக்கூலிகள் என்று அறிக்கை வெளியானது. இங்கு இலங்கையரசின் கைக்கூலி ,
துரோகி கே.பியின் கையாள் என வர்ணிக்கப்பட்டவர்கள் யாரெனில் முருக தாசனின்
தாய் தந்தையரே. இது மட்டுமல்ல அனைத்தலகச் செயலகத்தின் கடந்தகால
செயற்பாடுகளால் வெறுப்படைந்து இவர்களால் நடாத்தப் படும் மாவீரர்
தினநிகழ்வுகளிற்கு போகாது விட்ட மாவீரர் குடும்பங்களினது உறவுகளான
மாவீரர்களது படங்களை கடந்த வருடம் பல நாடுகளிலும் கடந்த மாவீரர் தின
நிகழ்வுகளில் வைக்காது புறக்கணித்து விட்டிருந்தார்கள்.


எனக்கு தெரிந்த கிழக்கு மகாணத்தை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தில் 5
பேர்கள் போராளிகளாக இருந்தவர்கள். அவர்களில் நான்கு பேர் இயக்கத்தின்
பெரிய பொறுப்புக்களில் இருந்து மாவீரர்கள் ஆகிவிட்டிருந்தனர்.எஞ்சியிருந்த
கடைசி போராளி தற்சமயம் ஜரோப்பாவில் வசிக்கிறார். அவரது குடும்பத்தின்
நான்கு மாவீரர் படங்களும் ஒவ்வொரு வருடமும் வணக்க நிகழ்விற்காக
வைக்கப்படுவது வழமை. ஜரோப்பாவில் வசிக்கும் அந்த போராளிக்கும் அனைத்துலக
செயலகபொறுப்பாளரிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது, அதனால் அந்த
போராளி துரோகியாக்கப் பட்டதோடு கடந்த வருடம் மாவீரர்களான அவரது நான்கு
சகோதரர்களின் படங்களும் நிகழ்வில் வைக்காமல் புறக்கணிப்பு
செய்துவிட்டிருந்தார்கள்.இது தெரியாமல் வழைமை போல் வணக்க நிகழ்விற்கு
குடும்பத்தோடு அந்த போராளியும் போயிருந்தார்.அவரது பிள்ளைகள்
மாவீரர்களான தங்கள் பெரியப்பாக்களின் படங்களிற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக
படங்களை தேடியபோது எந்தப் படங்களும் இருக்கவில்லை . நிகழ்வு
பொறுப்பாளரிடம் படங்கள் எங்கே என்று கேட்டபோது ஏதோ தவறுதலாக
விடுபட்டிருக்கலாம் என்றார்.

ஒரு படம் தவறுதலாக விடுபட்டிருக்கலாம் நான்கு
படங்களுமே எப்படி தவறுதலாக விடு பட்டது என்று கேட்டபோது அதை பற்றியெல்லாம்
எனக்கு தெரியாது அடுத்த வருடம் பார்க்கலாமென்று விட்டு அந்த இடத்தை விட்டு
நழுவிவிட்டார்.அங்கு போயிருந்த போராளி மற்றைய மாவீரர்களின் படங்களிற்கு
அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்தார்.இப்படியாக தங்கள் மக்களிற்காகவும் தங்கள் மண்ணிற்காகவும் எந்த சுயநலமும்
இன்றி பெரும் கனவுகளோடு தங்கள் உயிரையே காவு கொடுத்த மாவீரர்களும் அந்த
மாவீரர்களை இழப்பை நினைத்தபடியே தினமும் கவலையோடும் கண்ணீரோடும் தங்கள்
நாட்களை கடத்தும் அவர்களது தாய் தந்தையரும் ,உறவினர்களும், துரோககிகள்
என்றால் தியாகிகள் யார்?? ஒரு கதைக்காக நாளை தலைவர் பிரபாகனே உயிரோடு
இங்கு வந்து இவர்கள் முன்னால் நான்தாண்டா பிரபாகன் என்று சொன்னால் போய்யா
நீ இலங்கையரசின் கைக்கூலி , கே.பி யின் கையாள் என்றுவிட்டு மக்களே
விழிப்பாயிருங்கள் பிரபாகரன் என்கிற பெயரில் இலங்கை புலனாய்வுப் பிரிவும்
,றோவும் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் ,அவர் ஒரு
துரோகி என்று தங்கள் இணையத் தளங்களில் அவரது படத்தை போட்டு செய்தியும்
போட்டு விட்டு ,தங்கள் இலாபநட்டக்கணக்கை பார்க்கப் போய்விடுவார்கள்
என்பது மட்டும் உண்மை.


மீண்டும் ஒரு பதிவோடு “எதுவரை”யில் சந்திப்போம் அதுவரை .இப்படிக்கு துரோகி (லெப்.கேணல், தளபதி )

http://eathuvarai.net/?p=3076

 

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

எதுவரை தளத்தில் antimedia இட்ட கருத்தை இங்கு பதிவிடுகிறோம்.

 

 

வணக்கம்

அதே நேரம் மக்களிற்காகவும் அந்த மண்ணிற்காகவும்
உயிரைக்கொடுத்து தியாகிகளாக போராட வந்த மாத்தையாவோடு சேர்ந்த சுமார்
முன்னூறிக்கும் அதிகமானவர்களும்????????

 

எழுந்தமான தகவல்கள் எதுவரை?

 

குடிசைக்கைத்தொழில் எழுத்தாளர்களில் சாத்திரி விதிவிலக்கா?

ஷதங்களின் தமிழ் தேசிய போராட்ட உள்வீட்டு தகவல்கள் பல சாதரண பாமர வாசகர்களுக்கு விறுவிறுப்பானவை; பரபரப்பானவையும் கூட என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த போராட்டத்துடன் ஒன்றர இரு சகாப்தகாலத்துக்கும் மேலாக இரகசியங்களுடன் உறங்கியவர்களுக்கு சிரிப்பானவை.கசப்பானவையும் கூட.

புலிகளும் பிரபாகரனும் முடிந்துவிட்டார்கள் என்று தமிழர்கள் கேட்க நாதியற்ற சமூகமாக சிங்கள தேசம் எண்ணுவது போல் தமிழ் ஊடகப்பரப்பிலும் சில நுனிப்புல் மேயும் தமிழ் தேசிய விட்டோடிகள் தாங்கள் சொல்வது தான் வரலாறு என்றும் இதுதான் நடந்தவைகள் என்று புனைவு செய்வது கடந்த மூன்றாண்டுகளாக தொடர்கிறது.

பாமர தமிழ் வாசகர்களுக்கு தெரியாத சங்கதிகளை பதிவுகளாக்கி இதுதான் என்று முடிந்த முடிவாக்கி வரலாறு எழுதி , உங்களுக்கு தெரியவராத உண்மைகளை நையாண்டி பண்ணுகிறீர்கள்.

 

தங்களின் பல்வேறு தகவல் பிழைகள் வாசகர்களுக்கு சுவாரசிகமாக இருந்தாலும் உண்மை தெரிந்தவர்களுக்கு கடுப்பாகவுள்ளது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்தவேண்டியுள்ளது. ஏனெனில் இதுவே நாளை வரலாறாக்கி புத்தகமாக்க கூடிய தமிழ் சூழலே நிலவுகிறது. உண்மைகள் பல தெரிந்தவர்கள் பிரபாகரனும் பொட்டரும் சூசையும் தினேசும் ரஞ்சித்தப்பாவும் அல்ல. இவர்களுக்காக உழைத்த கீழ் நிலையில் உள்ளவர்கள். இதில் பலர் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார்கள். இலை மறைகாயாக, சந்திக்கு வராமல் கமுக்கமாக அவதானித்தபடி இருக்கிறார்கள்.

 

இவர்கள் யாரும் உருத்திரா அணியும் இல்லை, நெடியவன் அணியும் இல்லை, வினாயகம் அணியும் இல்லை. இவர்களில் பலர் அணி சாராது நடப்பவற்றை அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

உங்களை மறைமுகமாக மிரட்டுவதாக எண்ணிவிடாது முதலில் தகவல் மூலங்கள் சரியானதா? என்பதை சரிபார்க்கவும்.

 

இது மிகத்தவறான தகவல்.இதையே ஒப்புவிப்பது போல் மாற்றுகருத்து ஊடகங்களும் புலிகளுக்கு எதிரானவர்களும் கூட மணலாற்றிலும் பூனகரியிலும் 400 மாத்தையாவின் ஆதரவாளர்களை சுட்டுக்கொன்றதாக எழுதுகின்றனர்.இது மிக மோசமான தரவு.

 

புலிகளால் சிறை பிடிக்கப்பட்டவர்கள்.இவர்களில் பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.சிலர் மீண்டும் இயக்கத்தில் இணைந்தனர்.சிலர் விலகியே சென்றுவிட்டனர்.சிலர் வீரச்சாவடைந்துவிட்டனர்.

 

மாத்தையா (கொலை)

 

சுரேஸ் (ஏற்கனவே போரில் ஒரு கையை இழந்தவர்.மாத்தையாவின் பிரதான ஆள் கொலை)

 

செங்கமலம் ( பிரபாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் கொலை)

 

கிருபன் ( கொலை)

 

எஞ்சினியர் ( கிருபனுக்கு முன்னரே இந்திய சிறையில் இருந்து தப்பி வந்தவர்)

 

சுசிலன் (பிரபாகரனின் பெரு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்.முன்னர் மாத்தையாவின் அணியில் வன்னியில் இருந்த போதும் பிற்காலத்தில் 0 அணியில் விஜபியாக இருந்தவர்.இவரது குடும்பமே பிரபாகரனை நேரில் தரித்த பெருமையுடையவர்கள்.பிரபாகரனுக்கு ஆரம்ப காலங்களில் வெளி நாட்டு இராணுவம் பாவிக்கும்sophisticated பொருட்களை கொண்டுவந்து அன்பளிப்பு செய்பவர்கள்.பிரபாகரனுக்கு ஆரம்பகாலத்தில் கொடுத்தது இவரது கனடாவில் உள்ள அண்ணன்.இவரும் கொலை)

 

குட்டி ( நிதித்துறைக்குட்டி விடுதலை)

 

மகேந்தி ( இவரது வேறு இரு சகோதரர்களும் புலிகளில் முக்கிய பொறுப்புக்களில் இருந்தனர்.இவரது ஒரு சகோதரனான சூட்டி மாத்தையாவின் பிரதான மெய்க்காப்பாளர்.பின்னர் ஆனையிறவில் 1991இல் வீரச்சாவு.மற்றவர் அரசியல் பிரிவிலும் பின்னர் நிதிப்பிரிவிலும் இருந்தவர்.இவர் பற்றி தகவல் இல்லை.மகேந்தி விடுவிக்கப்பட்டு பின்னர் 2007 இல் வீரச்சாவு.)

 

தளபதி தீபன் ( இவரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது.)

 

தளபதி ஜெயம்( விடுதலை)

 

ஜான் ( முன்னாள் மன்னார் தளபதி.அண்மைக்காலத்தில் சரணடைந்து காணாமல் போனதாக மனைவி முறைப்பாடு செய்ததாக பரவலாக பேசப்பட்ட ஒருவர்)

 

கொலம்பஸ் ( இவர் இந்தியா 5வது முகாம்.இவர் மன்னாரை சேர்ந்தவர்.இந்திய பின்னணி கொண்ட வம்சாவளி.இவர் விடுவிக்கப்படவில்லை)

 

கதிர் (மன்னார் துணை தளபதி. நிதிப்பொறுப்பாளர். விடுவிக்கப்பட்டு விலகி கனடாவில் உள்ளார்)

 

அமீன் ( இந்தியா 10வது முகாம்.பப்பா அல்பா மாத்தையா அணியில் இருந்தவர்.இந்திய இராணுவ காலத்தில் கொடுக்கப்பட்ட வியட்நாம் என்ற பெயரிலான பயிற்சி முகாமின் ஆசிரியர்.பின்னர் பொட்டரின் புலனாய்வுப்பிரிவின் பயிற்சி ஆசிரியர்.றோ சந்தேகம்.செம காமடி.கொலை)

 

ராசன் ( இவர் கிளிநொச்சி புலனாய்வு பிரிவு பொறுப்பாளர்.இந்திய வம்சாவளி. விடுதலை.விலகி சொந்த வாழ்க்கை)

 

மார்சல் ( புலனாய்வுப்பிரிவு.இதே றோ சந்தேக நபர்களை விசாரித்துக்கொண்ட விசாரணையாளர்.பின் அவரே சிறையிடப்பட்டார்.முன்னர் மாத்தையா பிரிவில் இருந்த ஒரே காரணம்.பின் விடுதலைசெய்யப்பட்டார்.மீண்டும் இயக்கத்தில் இணைந்து மிகத்திறமையாக வேவுப்பிரிவில் செயற்பட்டவர்.அவர் சார்ந்த பிரிவு பொறுப்பாளர்களுடன் முரண்பட்டு விலகி வெளி நாட்டில் வசிக்கிறார்.)

 

சின்னவன் ( இவர் அமிர் கொலை விசுவின் உதவியாளர்.பின்னர் பொட்டரின் புலனாய்வுப்பிரிவில் இருந்தவர்.தேனீயில் எழுதும் புத்தக‌ மணியத்தின் தொடரிலும் வருகிறார்.தென்பகுதியில் நடந்த முக்கியமான தாக்குதலுக்கு பின்களப்பணியில் சிறப்பாக செயற்ப்பட்டவர்.கேணல் சாள்ஸ் தொடர்பான பொட்டரின் கட்டுரையை படிக்க.விடுவிக்கப்பட்டு.மீண்டும் புலனாய்வுப்பிரிவில் செயற்பட்டவர்.இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்.தகவல் இல்லை.

 

கீதன் ( இவரும் மார்சல் போன்று விசாரணையாளராக இருந்து சுசிலனின் விசாரணை தகவலில் கைதாகி விடுதலையாகி சொந்த வாழ்க்கை)

 

சலீம் ( இவர்தான் மாத்தையா தலைவருக்கு எதிராக கதைக்கிறார்.தன்னுடனும் தலைவர் பிழையான வழியில் செல்கிறார் என கதைத்ததாக மாத்தையா பற்றி ஆரம்ப தகவலை பொட்டருக்கு தெரிவித்தவர்.சலீம் சந்தேகத்தில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டு கனடாவில் வசிக்கிறார்.

 

சாந்தி ( ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் வருபவர்.அகிலாவின் பொறுப்பாளர்)விடுதலையாகி கனடாவில்.

 

சுதா ( இந்திய பெண்கள் அணியில் பயிற்சி பெற்றவர்.மகளிர் புலனாய்வுப்பொறுப்பாளர். விடுதலையாகி சொந்த வாழ்க்கை)

 

புனிதன் ( இவர் தான் மாத்தையா சுதுமலையில் கைதாகும் போது இருந்த பிரதான மெய்ப்பாதுகாவலர்.மாத்தையாவின் நம்பிக்கைகுரியவர்.இவர் விடுதலையாகி லண்டனில் வசிக்கிறார்.புலிகளின் சித்திரவதையாலோ என்னவோ குடும்ப வாழ்வில் குழந்தை பாக்கியமின்றி தவிக்கின்றார்)

 

சந்தோஸ் ( பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்.வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்.விடுதலையாகி விலகி லண்டனில் வசிக்கிறார்.)

 

நிர்மலன் ( லண்டனிலிருந்து வந்து மாத்தையா அணியில் செயற்பட்டவர்.பின்னர் பொட்டர் புலனாய்வு பிரிவை பொறுப்பெடுத்த போது அதில் மோப்ப நாய்ப்பிரிவு, பறக்கும் படை, கைதிகள் புனர்வாழ்வு முகாம் போன்றவற்றுக்கு பொறுப்பாக இருந்தவர்.மாத்தையாவின் குழப்பத்தின் போது இவரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.பின்னர் விமானப்படை பிரிவில் சங்கருடன் செயற்பட்டுவந்தார்.இந்த வேளையிலேயே வரதகுமாரின் பழைய நட்பின் மூலம் காவற்துறை நடேசனின் சில உறுப்பினர்களுக்கு அயர்லாந்தில் காவற்துறை பயிற்சி பெற்றுக்கொடுக்க நிர்மலனுதவினார்.பின்னர் வவுனியா சென்றிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார்.இவரது துணைவியாரும் புலிகளின் மகளிர் பிரிவு ஒன்றின் பொறுப்பாளர். அண்மையில் பிரான்சிஸ் கரிசனால் கிலாகிக்கப்பட்ட பிரித்தானியாவில் வாழும் பெண் போராளி.

 

சீனிவாசன் ( இந்தியா 5வது முகாம்.விடுவிக்கப்பட்டு பிரான்சில் உள்ளார்)

 

குமரன் (இவர் மாத்தையாவின் நெருங்கிய உறவினர்.பிரபாகரனின் செற் தொடர்பாளர்.மாத்தையாவின் விசாரணை தகவலில் கைதானார்.இவர்தான் கிட்டு வரும் கப்பல் செய்தியை மாத்தையாவுக்கு சொன்னதாக பிரதான குற்றச்சாட்டு.இது நிரூபிக்கப்படவில்லை.இவரும் கொலை.

 

தேவன் (இந்தியா 10வது முகாம்.இவர் 2009 மே மாதத்துக்கு பின்னர் கேபியுடன் தொடர்பில் இருந்தவர்.இவர் 1990 களில் மலேசியாவில் பிடிபட்ட கப்பலில் இருந்தவர்.இவரும் சந்தேகத்தில் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.பின்னரும் இயக்கத்தில் இருந்து மூதூர் பொறுப்பாக இருந்தவர்.

 

32 குமார் (ரெக்கி)( இவர் மணலாற்றில் இந்திய ஆமி காலத்தில் பிரதான வழிகாட்டி.பிரபாகரன் தங்கியிருந்த புனித பூமியின் பிரதான ரெக்கி ரீமின் பொறுப்பாளர்.வன்னியை சேர்ந்த இவர் முன்னர் மாத்தையா அணியில் இருந்தவர்.வன்னியில் காட்டில் றோ உறுப்பினர்களை மறைத்துவைத்திருந்ததாக குற்றச்சாட்டு.செம காமடி>>> இவர் விடுவிக்கப்படவில்லை.

 

யோகி (இவர் பற்றி சொல்ல தேவையில்லை.)

 

புலிக்குட்டி (இவர் பப்பா அல்பா மாத்தையா அணியின் இராணுவ பிரிவின் பொறுப்பாளர்.கோட்டை சண்டையில் பிரபல்யமானவர்.இந்தியா 10வது முகாம்.விடுதலை.சொந்த வாழ்க்கை.

 

சிவிகே.சிவஞானம் ( முன்னாள் யாழ் மா நகர ஆணையாளர்.இவர் றோ தொடர்பாளர் என சந்தேகம்.இவர் தான் இபோதைய தமிழரசு கட்சியின் யாழ் பிரதானி.

 

சுது ( இவர் பிரான்சில் இருந்து சென்று புலிகளில் ஃ1990களில் சேர்ந்தவர்.ரிஆர் ஓவுக்கு மாத்தையாவுடன் இருந்த போது யாழ் மாவட்ட பொறுப்பாக இருந்தவர்.தொண்டமானாற்ரை சேர்ந்தவர்.இவர் மாத்தையாவின் ஆள் என பிடிக்கப்பட்டவர்.விடுவிக்கப்பட்டு சொந்தவாழ்க்கைக்கு திரும்பியவர்,பின்னர் மீண்டும் சூசையால் இணைக்கப்பட்டு கடற்புலிகளின் புலனாய்வுப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர்.பின்னர் சூசையால் வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர். வெளிநாடொன்றில் இருக்கிறார்.

 

நரேன் ( இவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்.இவரும் பிரபாகரனின் இன்னொரு செற் பிரிவில் இருந்தவர்.விசாரணை தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.மீண்டும் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்.சமர் ஆய்வுப்பிரிவில் யோகியுடன் இறுதிக்காலத்தில் செயற்பட்டவர்.

 

அன்பரசன்( இவர் வல்வெட்டிதுறையை சேர்ந்தவர்.இந்தியா 6வது முகாம்.இந்திய ஆமி காலத்தில் வலிகாமத்தில் செயற்பட்டவர்.1990களில் வலிகாமம் பகுதி இராணுவ பொறுப்பாளராக இருந்தவர்.அப்போது நடந்த ஓர் ஊடறுப்பு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சொர்ணத்துடன் ஏற்பட்ட சண்டை தொடர்பான முரண்பாட்டில் விலத்தப்பட்டவர்.இதை இங்கு குறிப்பிட காரணமுண்டு.சொர்ணம்,சூசை போன்றவர்களால் இயக்கத்தில் தம்மை அர்ப்பணித்து போராட வந்த பலர் இயக்கத்தைவிட்டு விலகவும், விலக்கப்படவும் காரணமாக இந்த பிரிகேடியர்களக‌ இருந்துள்ளனர்.இது பிரபாகரனுக்கு போட்டுக்கொடுக்கும் பாரம்பரியத்தில் ஏற்பட்ட ஓர் மிகத்தவறான ஆளுமைக்குறைபாடு.இதுதான் இறுதிக்காலத்திலும் நடந்த தோல்விக்கான பிரதான காரணம்.இளையவர்களுக்கு இடம் கொடுப்பதாக கூறிக்கொண்டு முதிர்ச்சியானவர்களை ஓரங்கட்டி தள்ளி வைத்த தவறை பிரபாகரன் செய்தார்.இன்றும் இதே பல்லவியை தான் சிலர் நீட்டி முழங்குகின்றனர்.

 

அன்பரசனும் மாத்தையாவுடன் தொடர்பென கூறி கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டார்.

 

லெ.கேணல் லெனின் (தூயமணி)_ வைத்தியநாதன் சிவநாதன் (22.8.1997) இல் வீரச்சாவு.

 

பிறேம்(சாவகச்சேரி)(மாத்தையாவின் ஆலோசகர் என சொல்லப்பட்டவர்.இவர் விடுவிக்கப்பட்டார்.எனினும் 2000ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் வன்னிப்பகுதிக்கு வந்த இவர் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இவர் தென்னிலங்கை சிங்கள பத்தியொன்றில் மாத்தையா தொடர்பான கட்டுரைக்கு தகவல் கொடுத்தது.மில்ட்றி இன்ரலியன்ஸ் உடன் இவருக்கு இருந்த தொடர்பு பற்றி உறுதிப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.புலிகளின் வைத்தியராக அறியப்பட்ட டொக்டர் சிவபாலனின் நெருங்கிய உறவினர்.இவர் மீண்டும் கைது செய்யப்பட்ட போது சிவபாலனிடம் இவரது குற்றவாக்குமூலம் நிரூபிக்கப்பட்டே தண்டனை வழங்கப்பட்டது.

 

மாணிக்கசோதி மாஸ்ரர்( பிறேமதாசா பேச்சுவார்த்தைக்கு இடைத்தூதராக இருந்தவர்.மாத்தையாவின் நம்பிக்கைக்குரியவர்.இவரும் கைதாகி விடுவிக்கப்பட்டவர். நீண்டகாலத்தின் பின்னர் சென்ற முறை நடந்த தேர்தலில் யாழில் சுயேட்சையாக போட்டியிட்டவர்.

 

அகஸ்ரின்பப்பா( குருநகரை சேர்ந்தவர்.மாத்தையாவின் நீண்ட நாள் ஆதரவாளர்.விடுவிக்கப்பட்டார்)

 

தளபதி லோரன்ஸ் ( இவர் கைதுசெய்யப்படும் போது யோகியின் உதவியாளராக இருந்தவர். கைதாகி விடுவிக்கப்பட்ட பின்னர் இராணுவ பிரிவில் இணைந்து தளபதி நிலைக்கு சென்றவர்.இறுதியில் சரணடைந்ததாக தகவல்.

 

வெங்கடேஸ்( இவரின் பெயரில் இவரது சகோதரன் வீரச்சாவு.இவரது சகோதரி கடற்கரும்புலி.இவர் பிரபாகரனின் தொலைதொடர்பு பிரிவில் இருந்து பின்னர் கிருபனின் உதவியாளராக இருந்தவர்.இவரும் விடுவிக்கப்பட்டு விலகி லண்டனில் இருக்கிறார்.இவரின் தாயார் தான் லண்டன் மாவீரர் அகவத்தின் தலைவியாம்.இவரை இப்போது அனைத்துலக கஸ்ரோ பிரிவு லண்டனில் இரண்டு மாவீரர் தினம் நடத்த றோவுடன் இந்தியா சென்று பேச்சுவார்த்தை நடத்திவந்தவர் என கறுப்பில் வெள்ளையடித்தனர்.

 

சின்னமணி ( தலைவரின் சாரதி) இவர் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர்.திறமையான சாரதி என்பதால் பிரபா தனது பிரத்தியேக சாரதியாக வைத்திருந்தார்.மாத்தையா,கிருபன் ஆட்களால் பிரபாகரனை வாகனத்தில் வைத்து கொல்ல சதி செய்ய முயன்றார் என்பது குற்றச்சாட்டு.விடுவிக்கப்படவில்லை.கொலை.

 

இவை தவிர்ந்த கிருபனுடன் தப்பி வந்த இன்னொருவர்,(பெயர் உடனும் நினைவுக்கு வரவில்லை.) இன்னும் ஒரு சிலரின் பெயர் நினைவுக்கு வரவில்லை இவர்கள் தவிர்ந்த யார் யார் பிடிக்கப்பட்டார்கள்.கொலை செய்யப்பட்டார்கள் என யாராவது சொல்லட்டும் பார்க்கலாம்.

 

இங்கு விசாரணை முறைகளில் தகவல் பெற்ற முறைகளில் தண்டனை கொடுத்தது தவறுகள் இருக்கலாமே தவிர வாய்க்கு வந்தபடி எண்ணிக்கை கணக்கில் தவறான பதிவிடல்களை செய்யக்கூடாது.

 

இது பதிவிடும்பட்சத்தில் யார் இந்த முருகதாசன் என்பதையும் முருகதாசன் முன் வந்து செய்யத்துணிந்த ஈகதியாகத்தை மலினப்படுத்தியப்படுத்தி அதை பேரெழுத்தியாக்காமல் முடக்கிய அறிவிலிகள் யார் என்பதையும் தெளிவுபடுத்திட தயார்? இப்போது நடக்கும் கல்லறை விவகாரத்துக்குள் போகவில்லை; நான்காண்டுக்கு முன்னோக்கி செல்வோம்; முருகதாசனின் தீக்குளிப்பு எப்படி நிகழ்ந்தது என்று பகிரலாம்.

Edited by முதல்வன்

இதில் செங்கமலம்  மாத்தையாவின்  பிரச்சனைக்கு முன்னரே மரணதண்டனை பெற்றவர்  (பெண் பிரச்னை )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன் அவர்களே அதே எதுவரை  தளத்தில்  அதே anti media  என்பவர் இன்னொரு  கருத்தையும் இணைத்துள்ளார் அதனை நீங்கள் இங்கு இணைக்கவில்லை அதனால் நான் இணைக்கிறேன். <_<


 

யார் இந்த முருகதாசன்?


சமாதான காலத்தில் வன்னிக்கு வந்திருந்த போது புலிகளின் புலனாய்வுப்பிரிவினரால் உள்வாங்கப்பட்ட ஓர் நம்பர் ரூ போராளி.


இதைவிட இவரது மாமனார் முருகதாசன் பிறக்கும் முன்னரே புலிகள் அமைப்பில்
பிரபாகரனுடன் இயங்கிய ஆரம்ப போராளிகளில் ஒருவர்;1980களில் சுந்தரத்துடன்
புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய 13 பேரில் ஒருவரான சசியின் மருமகனே
இந்த முருகதாசன் என்பது இன்னொரு வரலாற்றுப்பக்கம்.சசி இன்று கனடாவில்
இருக்கிறார்.


இவ்வாறு புலிகளின் புலனாய்வுப்பிரிவினரால் உள்வாங்கப்பட்ட முருகதாசன்
லண்டனில் ஒன்றும் புலனாய்வுப்பணியில் ஈடுபடவில்லை.இது எம்.ஐ 5/6 க்கு
சமர்ப்பணம்.வன்னியில் இருந்து கூறப்படும் பொருட்களை வாங்கியனுப்புவதும்
தென்னிலங்கையில் செயற்படும் போராளிகளின் தொடர்பாடல் இடைத்தொடர்பு பணியில்
மட்டும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

இறுதிப்போர் நடந்த போது தமிழகத்தில் தன்னெழுச்சியாக ஓர் முத்துக்குமார் தீக்குளித்து இறந்து ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார்;


இதன் தாக்கம் வன்னியில் இருந்த புலிகளின் தலைமைக்கும் ஏதாவது ஒன்றை
செய்து போரின் அகோரத்தை நிறுத்தவேண்டும் என்ற ஜடியா எழுந்தது.பிரபாகரன்
பொட்டம்மானையும் கஸ்ரோவையும் அழைத்து புலத்தில் இப்படியான ஓர் தீக்குளிப்பை
செய்யத்தயாரான போராளிகளை ஊக்குவிக்கும்படி கட்டளையிட்டார்.


கஸ்ரோவின் தரப்பில் இருந்து எவரும் புலத்தில் தயாராக இருக்கவில்லை.


பொட்டரின் புலனாய்வுப்பிரிவுக்கு அந்த நேரத்தில் புலத்தின் தொடர்புகளை
பராமரித்த ஞானவேலிடம் இதற்கான தயார்ப்படுத்தல் செய்யும்படி
சொல்லப்பட்டது;ஞானவேல் தெரிவு செய்த ஆளே இந்த முருகதாசன்.


புலிகள் அமைப்பில் ஓர் ஊக்கமருந்து சொல் “சாதித்துக்காட்டுதல்” என்பது
இது ஒட்டுமொத்த போராட்டத்துக்கா அல்லது தலைமைக்கா? என்பதில் தான் போராளிகள்
மத்தியில் சரியான தெளிவு இருக்கவில்லை.இந்த சாதித்துக்காட்டுதல் என்பதும்
ஓர் தனிமனித வழிபாடாகத்தான் போராளிகள் மத்தியில் இருந்து வந்தது.இது மொத்த
மக்களுக்கானது அல்ல.


இந்த சாதித்துக்காட்டுதல் என்ற மூளைச்சலவையுடன் முருகதாசனும்
இணைந்துகொண்டார்.ஜெனிவாவில் தீக்குளிப்பது மட்டுமே சொல்லப்பட்டது;இந்த மனித
தற்கொடையின் வீச்சு எப்படி அமையவேண்டும் என்றோ எந்த நேரத்தில் எப்படி
செய்யவேண்டும் என்றோ ,முத்துக்குமார் போன்று ஓர் மரணசாசனம் எழுதி
வைக்கவேண்டும் என்ற எந்த விபரங்களும் வன்னியில் இருந்து கட்டளையிட்ட
அறிவிலிகளால் சொல்லப்பட்டிருக்கவில்லை.


முருகதாசனின் இறப்பு நிகழ்ந்த பின்னரே அவரின் இறப்புக்கான தேசிய மரணச்சான்றீதழ் எழுதி ஊடகங்களுக்கு அவசரஅவசரமாக கொடுக்கப்பட்டது.


இது மேற்குலகின் அரசுகளுக்கு பெரியளவில் எடுபடாமல் பிசுபிசுத்து போனது.


முருகதாசனின் ஈகம் மலினப்பட்டுப்போவதற்கு வன்னியில் இருந்தவர்கள்
தமிழகமாக ஜெனிவாவையும் உலகத்தையும் நினைத்துவிட்டார்கள்;ஓர் உன்னதமான
தியாகத்தை பேரெழுச்சி கொள்ளப்படாமல் அணைத்ததில் வன்னியில் இருந்த ஓட்டு
மொத்த தலைமையும் காரணமே.


ஆனால் முருகதாசனின் தியாகத்தை புலத்தில் இருந்த அனைத்துலக கஸ்ரோ அணி தமது பிரச்சாரங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டது.


இங்கு முருகதாசனுக்கு சட்டரீதியான இன்னோர் சிக்கலும் பிரித்தானியாவில்
இருந்தது;அதனால் பிரித்தானியாவும் அது பற்றிய விசாரணைகளை முடித்துக்கொண்டு
முருகதாசனின் தியாகத்தை வேறு கோணத்திலேயே பார்த்தது.என்ன சட்டசிக்கல்
என்பது பிரித்தானிய உளவுத்துறைக்கும் தெரியும்.

 

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மாத்தையாவோடு கைது செய்யப் பட்ட கொலை செய்யப் பட்டவர்களின் பெயர்களை  அன்ரி மீடியா எழுதியதை முதல்வன் இணைத்துள்ளார்.  தகவல்கள் சரியானதுதான்.மறுக்கவில்லை. அனால் அவர் எழுதிய பெயர்கள் எல்லாமே முக்கிய பொறுப்பில் இருந்த  பொறுப்பாளர்களின் பெயர்கள் மட்டுமே. அவர் பொறுப்பாளர்களை மட்டுமே போராளிகளாக பார்த்திருக்கிறார்.பொறுப்பாளர்கள் கைது செய்யப் பட்ட பின்னர்  அந்த பொறுப்பாளர்களின் கீழ் இருந்த போராளிகள் அவர்கள் மீது இருந்த விசுவாசத்தாலும்  அன்பாலும் இயக்கத்தின் மீதும் தலைமை மீதும் வெறுப்படைந்து   தலைமைக்கு எதிராக அவர்களிற்குள் கருத்துக்களை  பகிர்ந்து கொண்டிபோது அவர்களும் புலனாய்வு பிரிவினரால் கைதாகி விசாரணைகளிற்கு அழைத்துச் சொல்லப் பட்டு   கொலை செய்யப் பட்டனர். அவர்களது தொகையையும் சேர்த்துத் தான் 300 பேரளவு என்று எழுதியிருந்தேன்..பொறுப்பளர்களாக இல்லாது சாரணமானவர்களாக இயக்கத்தில் இருந்தாலும் போராடப் போனதால் அவர்களும் போராளிகளே..

Edited by sathiri

சுசில்ன் நெல்லியடியை சேர்ந்தவர்  சுசிலனிடம் இருந்து உண்மைகளை கறந்தவர் ஒரு பெண் புலநாய்வு போராளிகளே.

 

எனது அம்மாவின் தம்பியார்( விஜயன்)  மாத்தையாவின்  அணி தான் ( முத்தயன்கட்டு பொருப்பாளராக இருந்தவர் வன்னியில்) மத்தையா  கைதின் பின்  கொஞ்ச நாள் விசாரனைக்கு பின் விரும்பின்  அமைப்பில் தொடரலாம் அல்லது  எவித பனிஸ்மெண்டுமில்லாது  விலகிச் செல்ல அனுமதிகப்பட்டவர்,  தற்போது திருமணமாகி 2 பிள்ளைகளுடன் ஊரில் வாழ்கிறார்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

anti media  எழுதியது

பிறேம்(சாவகச்சேரி)(மாத்தையாவின் ஆலோசகர் என சொல்லப்பட்டவர்.இவர்
விடுவிக்கப்பட்டார்.எனினும் 2000ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும்
வன்னிப்பகுதிக்கு வந்த இவர் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இவர்
தென்னிலங்கை சிங்கள பத்தியொன்றில் மாத்தையா தொடர்பான கட்டுரைக்கு தகவல்
கொடுத்தது.மில்ட்றி இன்ரலியன்ஸ் உடன் இவருக்கு இருந்த தொடர்பு பற்றி
உறுதிப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

பிறேம். கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப் பட்ட பின்னர் தொடர்ந்தும்  இயக்கத்திற்காகவே வேலை செய்தவர். இவரிற்கு  சிங்களம் ஆங்கிலம் என்பன  நல்ல புலமை உண்டு  அதனால் மாங்குளம் தாக்குவின்போது அங்கிருந்த ஆவணங்களை  தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்.  பின்னர்  குடும்பமாக கொழும்பிற்கு வந்து தங்கியிருந்தவர். அன்றைய காலத்தில்  த.ஜலண் பத்திரிகையில் மாத்தையா பற்றிய கட்டுரை ஒன்று இயக்கத்திற்கு எதிரக வெளியாகியிருந்தது.அதனை எழுதியவர் பிறேம் என்று  கையெழுத்திட்டிருந்தார்கள். அதனை உண்மையில்  இந்த பிறேம் எழுதியிருக்கவில்லை. பின்னர் பிறேம் வன்னிக்கு சென்றபொழுது கைது செய்யப் பட்டு விசாரணைகளின் போது அடித்ததில்  இறந்து போயிருந்தான்.நீண்டகாலமாக  வன்னிக்கு போன கணவன் திரும்பாததால்  அவனின் மனைவி சுமதி'(இவரும் ஆரம்பகால போராளி) தேடிப்போய் அரசியல் பொறுப்பளர் தமிழினியை சந்தித்து கேட்டபொழுது  பிறேம் முகாமில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக சொன்னதோடு  உடனடியாக வன்னியை விட்டு வெளியேமாறும் இல்லாவிட்டால்  உன்னையும் போட்டு விடுவோம் என்று சுமதியை  தமிழினி மிரட்டியும் இருந்தார். சுமதி தற்சமயம் நோர்வேயில் வசிக்கிறார்.

300 கொல்லப்பட்டார்களோ தெரியாது ஆனால்  மாத்தையாவின்  அணியில் இருந்த 90 % பேருக்கு ஒன்றுமே மாத்தையாவின் துரோகம் பற்றி தெரிந்து இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை சொல்ல வந்த விடயமும் அதற்கு பின் வந்த கருத்துக்களும் வழமைபோல வித்தியாசமாக இருக்கின்றது.

 

கட்டுரை சொல்ல வந்த விடயம் புலம்பெயர் நாடுகளின் தற்போதைய அதிகாரப் போட்டியைப் பற்றியது.

 

கருத்துக்கள் முன்னர் நடந்த விடயங்களைப் பற்றியது. அவற்றை மறுக்கவோ ஏற்கவோ பலர் உயிருடன் இல்லை. உயிருடன் இருப்பவர்களுக்கும் இவற்றைப் பற்றிக் கதைக்க விருப்பம் இருக்குமோ தெரியாது.. ஆனால் எங்களுக்கு அவல் வேண்டும்தானே.

முதல்வன் இணைத்த மேற்கோளில் கூறப்படும் அமீன் என்பவர் காங்கேசன்துறையைச் சேர்ந்த யோகராஜாவா? அதிகளவு போராளிகளிற்கு பயிற்சி கொடுத்த, மற்றும் ஏராளம் போர்க்களங்களில் எதிரிகளிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இவர் த.வி.பு மூலம் அடித்து கொல்லப்பட சரியான காரணம் என்ன? (ஊரவர் அவ்வாறே அப்போது கூறினார்கள், பிரேத பரிசோதனை செய்து பார்ப்பதற்கும் குடும்பத்தினருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லையாம்).

 

நான் சிறுவயதில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றியபோது இவர் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். இவர் சிறந்த ஓர் விளையாட்டு, மற்றும் தடகளவீரரும் ஆவார். பத்தாம் வகுப்பில் தனது துவிச்சக்கரவண்டியை விற்று அந்தக்காசில் - தனது சொந்தப்பணத்தில் இந்தியா சென்று த.வி.புவில் இணைந்தார். இவரது சகோதரர் சிறுவயதில் எனது வகுப்பு நண்பனும் ஆவார். தனது சகோதரரை இவரே த.வி.புவிடம் கூட்டிக்கொண்டுபோய் சேர்த்துவிட்டார். யோகராஜா அவர்கள் கொல்லப்பட்டது மாத்தையா கொல்லப்பட்டு சில ஆண்டுகளின் பின்னரே என்று நினைக்கின்றேன். யோகராஜா அண்ணா மீது எனக்கு மிகுந்த அபிமானமும், மரியாதையும் இருந்தது. இவரது இறப்பு எனக்கு அப்போது மிகுந்த துயரையும், வேதனையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதுவும் த.வி.பு மூலமே அவர் கொல்லப்பட்டது ஜீரணிக்கக்கூடிய விடயமாக இருக்கவில்லை.

 

[ சாத்திரி, உங்களிடம் பொதுவான ஓர் கேள்வி. தனிப்பட எடுக்கவோ, குறை நினைக்கவோ வேண்டாம். நீங்கள் நான் த.வி.பு சம்மந்தமாக பக்கச்சார்பின்றி 2008 காலங்களில் யாழில் கருத்துக்களை எழுதியபோது என்னை அதிகளவு கடிந்துகொண்டீர்கள், கிண்டலும் செய்தீர்கள். ஆனால், இப்போது நீங்களே த.வி.புவை கடுமையாக விமர்சனம் செய்வதுபோல் தெரிகின்றது. மாத்தையாவின் விடயங்கள் எல்லாம் பழைய கதைகள்தானே. இவைபற்றி நீங்கள் ஏன் அப்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை? த.வி.புவில் பல தவறுகள் காணப்பட்டிருப்பினும், அப்போதைய நிலையில் த.வி.பு மூலம் போராடி ஓர் தீர்வை பெற்றுக்கொள்வதே தமிழ் மக்களிற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று நினைத்தீர்களா? அல்லது இப்போதுள்ள நிலையை பார்க்கும்போது விசனம் தோன்றியுள்ளதா? ]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை சொல்ல வந்த விடயமும் அதற்கு பின் வந்த கருத்துக்களும் வழமைபோல வித்தியாசமாக இருக்கின்றது.

 

கட்டுரை சொல்ல வந்த விடயம் புலம்பெயர் நாடுகளின் தற்போதைய அதிகாரப் போட்டியைப் பற்றியது.

 

கருத்துக்கள் முன்னர் நடந்த விடயங்களைப் பற்றியது. அவற்றை மறுக்கவோ ஏற்கவோ பலர் உயிருடன் இல்லை. உயிருடன் இருப்பவர்களுக்கும் இவற்றைப் பற்றிக் கதைக்க விருப்பம் இருக்குமோ தெரியாது.. ஆனால் எங்களுக்கு அவல் வேண்டும்தானே.

 

இது வழைமையானதுதானே  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன் இணைத்த மேற்கோளில் கூறப்படும் அமீன் என்பவர் காங்கேசன்துறையைச் சேர்ந்த யோகராஜாவா? அதிகளவு போராளிகளிற்கு பயிற்சி கொடுத்த, மற்றும் ஏராளம் போர்க்களங்களில் எதிரிகளிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இவர் த.வி.பு மூலம் அடித்து கொல்லப்பட சரியான காரணம் என்ன? (ஊரவர் அவ்வாறே அப்போது கூறினார்கள், பிரேத பரிசோதனை செய்து பார்ப்பதற்கும் குடும்பத்தினருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லையாம்).

 

நான் சிறுவயதில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றியபோது இவர் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். இவர் சிறந்த ஓர் விளையாட்டு, மற்றும் தடகளவீரரும் ஆவார். பத்தாம் வகுப்பில் தனது துவிச்சக்கரவண்டியை விற்று அந்தக்காசில் - தனது சொந்தப்பணத்தில் இந்தியா சென்று த.வி.புவில் இணைந்தார். இவரது சகோதரர் சிறுவயதில் எனது வகுப்பு நண்பனும் ஆவார். தனது சகோதரரை இவரே த.வி.புவிடம் கூட்டிக்கொண்டுபோய் சேர்த்துவிட்டார். யோகராஜா அவர்கள் கொல்லப்பட்டது மாத்தையா கொல்லப்பட்டு சில ஆண்டுகளின் பின்னரே என்று நினைக்கின்றேன். யோகராஜா அண்ணா மீது எனக்கு மிகுந்த அபிமானமும், மரியாதையும் இருந்தது. இவரது இறப்பு எனக்கு அப்போது மிகுந்த துயரையும், வேதனையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதுவும் த.வி.பு மூலமே அவர் கொல்லப்பட்டது ஜீரணிக்கக்கூடிய விடயமாக இருக்கவில்லை.

 

[ சாத்திரி, உங்களிடம் பொதுவான ஓர் கேள்வி. தனிப்பட எடுக்கவோ, குறை நினைக்கவோ வேண்டாம். நீங்கள் நான் த.வி.பு சம்மந்தமாக பக்கச்சார்பின்றி 2008 காலங்களில் யாழில் கருத்துக்களை எழுதியபோது என்னை அதிகளவு கடிந்துகொண்டீர்கள், கிண்டலும் செய்தீர்கள். ஆனால், இப்போது நீங்களே த.வி.புவை கடுமையாக விமர்சனம் செய்வதுபோல் தெரிகின்றது. மாத்தையாவின் விடயங்கள் எல்லாம் பழைய கதைகள்தானே. இவைபற்றி நீங்கள் ஏன் அப்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை? த.வி.புவில் பல தவறுகள் காணப்பட்டிருப்பினும், அப்போதைய நிலையில் த.வி.பு மூலம் போராடி ஓர் தீர்வை பெற்றுக்கொள்வதே தமிழ் மக்களிற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று நினைத்தீர்களா? அல்லது இப்போதுள்ள நிலையை பார்க்கும்போது விசனம் தோன்றியுள்ளதா? ]

கரும்பு நீங்கள் செல்வராசா வத்தியை பற்றி சொல்லுறீங்கள் எண்டு நினைக்கிறன். நான் சொல்பவர் என்றால் அவர் புலிகளால் கொல்லப் பட்டிருக்கவில்லை.   நீங்கள் சொல்பவர் வேறாகவும் இருக்கலாம். அடுத்தது  நீங்கள் ஒரு தடைவை  சென்.ஜேன்ஸ்  அதிபர் கொலை பற்றிய  கருத்திற்கு  அதற்கு பிறகு நடந்த விவாதங்களில்தான் நான் ஒரேயொரு தடைவை  நீங்கள் மாற்றுக் கருத்தின் மாணிக்கம் என்று விளித்திருந்தேன்  மற்றபடி வேறு எங்கும் உங்களை  கிண்டல் அடித்திருக்கவில்லை அப்படி  ஏதாவது எழுதியிருந்தால்  சுட்டிக்காட்டாலாம்  தாரமாக.

அவர் பெயர் யோகராஜா. தகப்பனின் பெயர் நிச்சயமாக செல்வராஜா இல்லை.

 

நீங்கள் கூறும் செல்வராஜா மாஸ்டரும் (கராட்டி) காங்கேசன்துறையே. ஆனால், யோகராசா செல்வராசா மாஸ்ரடை விட மிக இளமையானவர். இப்போது இருந்தால் யோகராசாவுக்கு சுமார் நாற்பத்து நான்கு வயது இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

 

செல்வராசா மாஸ்டர் நான் மூன்றாம் வகுப்பு படித்தபோது காட்டடைப்பு வீதியில் தம்பியப்பா மாஸ்டரின் வீட்டிற்கு வருவார். எமது ஆசிரியர் தம்பியப்பாவின் மகனின் கூட்டாளி அவர். ஒரு தடவை ரியூசனின் சரஸ்வதி பூசைக்கு என்று நினைக்கின்றேன், நாம் ஏதோ நாடகம் செய்தபோது நாங்கள் எங்கள் பாட்டிலேயே மேக் அப்பும் எங்களிற்கு போட்போம். அப்போது நானும் கரியினால் முகத்தில் மீசை, தாடி கீறினேன். அதைப்பார்த்த செல்வராசா மாஸ்டர் கரியினால் கீறப்பட்ட எனது மீசை, தாடியை தனது நண்பனுக்கு காட்டி சிரித்து அந்தமாதிரி இருப்பதாக எதோ கூறியதாக நினைவு. அவரை, கடைசியாக இயக்கத்தில் அவர் சேரும் முன்னர் அப்போது கண்டேன் என நினைக்கின்றேன். பின்னர்...

 

இந்திய இராணுவத்தின் பிரசன்ன காலத்தில் ஒரு நாள் காலை நான் பாடசாலைக்கு (சென்.ஜோன்ஸ்) வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்தபோது கட்டுமஸ்தான உடம்பு, சரக்கட்டுடன் சைக்கிளில் செல்வராசா மாஸ்டர் தனியாக வந்தார். அவரிடம் மிக நீண்ட பெரியதொரு துப்பாக்கி (சுமார் நாலரை அடி நீளம் இருக்கும்) காணப்பட்டது. என்னைப்பார்த்து தண்டவாளத்தடியில், அந்தப்பக்கமாக ஆமி நிக்கிறாங்களா என்று கேட்டார். நான் அவர் முதல் தரம் கேட்டபோது உண்மையில் அவர் என்னுடன் கதைத்ததை கவனிக்கவில்லை. பின்னர் ஆத்திரத்துடன் என்னைப்பார்த்து "டேய் பு*மோனே அங்கால ஆமி நிக்கிறாங்களா?" என்று கேட்டார். நான் திடீரென்று அவர் அப்படி கேட்டதும் சற்று திகைப்படைந்து, பின்னர் இல்லை என்று தாழ்ந்த குரலில் சொன்னேன். அன்றுதான் நான் அவரை கடைசியாக கண்டது. பின்னர் மோதலில் அவர் வீரச்சாவு அடைந்தார் என்று நினைக்கின்றேன் (பலாலி/வசாவிளான்/கட்டுவனில் 1990/1களில்). செல்வராசா மாஸ்டரின்  மறைவின் போதும் த.வி.புவே அவரை போட்டதாகவும் ஊரார் கதைத்தார்கள். எல்லாம் பரமசிவனுக்கே வெளிச்சம்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

சுசில்ன் நெல்லியடியை சேர்ந்தவர்  சுசிலனிடம் இருந்து உண்மைகளை கறந்தவர் ஒரு பெண் புலநாய்வு போராளிகளே.

 

எனது அம்மாவின் தம்பியார்( விஜயன்)  மாத்தையாவின்  அணி தான் ( முத்தயன்கட்டு பொருப்பாளராக இருந்தவர் வன்னியில்) மத்தையா  கைதின் பின்  கொஞ்ச நாள் விசாரனைக்கு பின் விரும்பின்  அமைப்பில் தொடரலாம் அல்லது  எவித பனிஸ்மெண்டுமில்லாது  விலகிச் செல்ல அனுமதிகப்பட்டவர்,  தற்போது திருமணமாகி 2 பிள்ளைகளுடன் ஊரில் வாழ்கிறார்.

விஜயன்  உங்கட மாம்ஸா    அவர் எப்போதும் சைற்ரானை  சைட்டில்  கட்டுவதில்லை  பின்பக்கம்  செருகித்தான் 

வைப்பார் 

நிலாந்தன் முன்னுரையில் சொல்லுவதைப்போல ஒரு காலத்தில் உண்மைகளை உன்னத

லட்சியம் ஒன்றிக்காக காத்திருத்தல் என்பதன் பெயரில் அடைகாத்தார்கள்.

இப்போது எந்த உன்னத லட்சியங்களும் கிடையாது. அடைகாத்த உண்மைகள் பாம்புகளாக

மாறித் துரத்தத் தொடங்கிவிட்டன. அந்தப் பாம்புகள் யாரையும் விட்டுவைக்கப்

போவதில்லை.

எல்லா கருத்துகளுக்கும் ஆணிவேராக அர்ஜன் நச்சென்று சொல்லிவிட்டார்.

 

நிலாந்தன் முன்னுரையில் சொல்லுவதைப்போல “ஒரு காலத்தில் உண்மைகளை உன்னத
லட்சியம் ஒன்றிக்காக காத்திருத்தல் என்பதன் பெயரில் அடைகாத்தார்கள்.
இப்போது எந்த உன்னத லட்சியங்களும் கிடையாது. அடைகாத்த உண்மைகள் பாம்புகளாக
மாறித் துரத்தத் தொடங்கிவிட்டன. அந்தப் பாம்புகள் யாரையும் விட்டுவைக்கப்
போவதில்லை.”

 

இது இது சாத்திரியையும் விட்டுவைக்கப் போவதில்லை, என்னையும் விட்டுவைக்கப்போவதில்லை, போராட்டத்தில் புல்லுப்பிடுங்கியவரையும் விட்டுவைக்கப்போவதில்லை. சாகும்வரை துரத்தத்தான் போகிறது. 

 

ஆனால் சாத்திரி போன்றோர் றால் போடுகிறார்கள் சுறாகை்கள் வெளியே வருகின்றன என்பது மட்டும் வெளிப்படை. சுறாக்கள் சாத்திரியையும் விழுங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அர்ஜுன் அண்ணா பாம்பு வந்து திறத்தி என்ன பயன்? அதான் யாரையும் கொத்த முடியாதே.......

I mean உங்க வாதப்படி இப்போ தான் யாரும் இல்லையே நைனா.....

அப்பிடி பாம்பு வந்தாலும் அதுக்கு எப்பிடி மகுடி ஊத்தி ஆடப்பன்னனும் என்ற வித்தை தெரியாமலா இருப்பாங்க......

உங்க காமடிக்கு ஒரு அளவே இல்லை அர்ஜுன் அண்ணா....

அது சரி யார் அந்த நிலாந்தன்? அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரா?

:D :d

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் முன்னுரையில் சொல்லுவதைப்போல ஒரு காலத்தில் உண்மைகளை உன்னத

லட்சியம் ஒன்றிக்காக காத்திருத்தல் என்பதன் பெயரில் அடைகாத்தார்கள்.

இப்போது எந்த உன்னத லட்சியங்களும் கிடையாது. அடைகாத்த உண்மைகள் பாம்புகளாக

மாறித் துரத்தத் தொடங்கிவிட்டன. அந்தப் பாம்புகள் யாரையும் விட்டுவைக்கப்

போவதில்லை.

 

இதைத்தானே நீங்க ஆரம்பத்தில இருந்து செய்யுறீங்க.

 

இந்த ஆக்கத்தின் மூலம் அடையப்பட்ட உன்னத இலட்சியம்.. ஆளையாளுக்கு இன்னும் மோதவிடுறது.. காழ்ப்புணர்ச்சியில மிதக்கிறதுகளை குசிப்படுத்துவது..!

 

விடுதலைப்புலிகள் மீது உள்ளக நடவடிக்கைகளுக்கு குற்றச்சாட்டு எழும் போது அதற்கு நிகராக ஏன் மேலதிகமாக மற்ற எல்லா தமிழர் விரோதக் குழுக்கள் மற்றும் அரசியல் சக்திகள் மீதும் அவற்றின் உள்ளக நடவடிக்கைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன் வைக்க முடியும். ஆனால் அதை சிலர் செய்ய மாட்டினம்..! ஏன்னா அவைக்கு இப்ப அந்த தீய சக்திகள் தான் இப்ப முண்டுகொடுத்து நிற்கினம்.

 

மாத்தையா.. கிட்டு.. பொட்டு.. பிரபா செய்தவை மட்டும் தான் குற்றம் என்றல்ல. அதற்கும் அப்பால்.. உமா.. பத்மநாபா.. சிறீசபாரட்ணம்.. வரதராஜப் பெருமாள் (வாழும் நபர்).. பரந்தன் ராஜன் (வாழும் நபர்).. மோகன்.. ரஞ்சித்.. ராஜி (வாழும் நபர்) சித்தார்த்தன்(வாழும் நபர்).... டக்கிளஸ் (வாழும் நபர்).. கருணா (வாழும் நபர்).. பிள்ளையான் (வாழும் நபர்).. அமிர்தலிங்கம்.. சங்கரி (வாழும் நபர்).. யோகேஸ்வரன்.. இப்படி இன்னோரனென்ன பேர்வழிகள் செய்த பாதங்களையும் பட்டியலிடுங்கள். ஆளாளிற்கு.. தனி ஒரு மனித உரிமை விசாரணைக் கமிசன் அமைக்கனும்.. அப்பதான் எவர் செய்தது அதிகம் என்று தெரிய வரும்..!

 

ஆனால் இன்று எம்முன்னுள்ள பிரச்சனை அதுவல்ல. பொது எதிரியான சிங்களப் பேரினத்தின் தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டுவதே ஆகும். அதை நோக்கிச் செயற்படுபவர்களை.. செய்யப்படும் செயற்பாடுகளை பலவீனப்படுத்தக் கூடிய ஈனத்தனங்களை எதிரிக்கு சாதகமான வகையில்.. செய்து.. மக்களுக்கு மேலும் மேலும் துரோகங்களை இழைக்காதீர்கள். நிச்சயமா நீங்கள் புலிகள் மீது என்னதான் புறணிபாடினாலும்.. (இந்தியப் படைகள் காலத்தில் செய்ததைக் காட்டிலுமா இப்ப செய்யிறீங்க..) மக்கள் உங்களை தியாகிகளாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

 

நீங்க முன்னாடி என்னத்தை வெட்டிக் கிழித்தீர்களோ தெரியாது. ஆனால் இந்தியப் படைகள் காலத்திலும் அதன் பின்னரும்..  நீங்கள் எம் மக்கள் கண் முன்னால் போட்ட ஆட்டம்.. உங்களை அவ்வளவு இலகுவில் மன்னிக்கவோ.. சக தமிழர்களாக ஏன் சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவோ இடமளிக்காது.

 

http://youtu.be/8NsZ_QW-HAU

 

விடுதலைப் புலிகள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்.

"ஈ.பி.ஆர்.எல்.எப்., டேலோ, ஈ.என்.டீ. எல்.எப். போன்ற அமைப்புக்கள்

முற்றுமுழுதாக இந்தியப்படைகளுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை

எடுத்திருந்தார்கள்.

"புளொட்" அமைப்பினரோ ஸ்ரீலங்கா அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு,

ஸ்ரீலங்காப் படைகளுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில், ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பான "ஈரோஸ்" அமைப்பு

எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருந்தது என்பது பற்றி இந்த வார உண்மையின்

தரிசனம் ஆராய்கின்றது."

 

அன்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஆதரிச்சவை.. சிங்களப் பேரினவாதத்தின் மடியில் புரண்டவர்கள்...  இப்ப என்ன வாயால வீணியா வழிய விட்டுக் கொண்டு நிற்கினம்...??????! பிரபாகரனின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ள நுழைஞ்சு நின்று குளிர்காய்வதும் ஏனோ..?????! அதைவிட்டிட்டு வெளில போய் ஏலும் என்றால் இதே புறணியைப் பாடிக் கொண்டு மக்கள் முன் வாங்கோ பார்ப்போம். கோழைகளே...???!  :rolleyes::lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு.. நீங்கள் சொல்லும் ஆள் உங்களுக்கு நல்லவரா இருக்கலாம்.. ஊருக்கு நல்லவரா இருந்தவரோ..????! ஏன்னா வரதராஜப் பெருமாள் அவரின் மகளுக்கு அப்பா.. நமக்கு..நமக்கு செய்தவற்றிற்கு...........?????????!

 

நாங்க நாலு பேர் நல்லவனுன்னு சொல்லுறதிற்காக கொடிய மனித மிருகங்களை எல்லாம் தியாகிகள் ஆக்கிடக் கூடாது கரும்பு..!

 

புலிகள் அமைப்பில் இணைந்த எல்லோரும் இறுதி வரை புலிகளாக இருந்ததில்லை. துரோகிகளாகவும் ஆகியுள்ளனர். அது புலிகள் அமைப்புக்கு மட்டுமான பொது விதியல்ல. உலகில் எல்லா போராட்ட அமைப்புக்களும் கண்ட தலைவிதி..!

 

பிரபாகரன்.. இந்தத் துரோகிகளை இனம் காட்டினார்.. ஏலுமானதுகளை.. அழித்தார்.. ஆனாலும்.. அவர்களின் குடும்பங்களை அழிக்கவில்லை. ஆனால் இந்தக் கிராதகர்கள் அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தின் அழிவில் மனம் மகிழும்.. மனநோயாளிகளாக உள்ளமை.. உங்களுக்குத் தெரியவில்லையோ..???! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன் இணைத்த மேற்கோளில் கூறப்படும் அமீன் என்பவர் காங்கேசன்துறையைச் சேர்ந்த யோகராஜாவா? அதிகளவு போராளிகளிற்கு பயிற்சி கொடுத்த, மற்றும் ஏராளம் போர்க்களங்களில் எதிரிகளிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இவர் த.வி.பு மூலம் அடித்து கொல்லப்பட சரியான காரணம் என்ன? (ஊரவர் அவ்வாறே அப்போது கூறினார்கள், பிரேத பரிசோதனை செய்து பார்ப்பதற்கும் குடும்பத்தினருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லையாம்).

 

நான் சிறுவயதில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றியபோது இவர் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். இவர் சிறந்த ஓர் விளையாட்டு, மற்றும் தடகளவீரரும் ஆவார். பத்தாம் வகுப்பில் தனது துவிச்சக்கரவண்டியை விற்று அந்தக்காசில் - தனது சொந்தப்பணத்தில் இந்தியா சென்று த.வி.புவில் இணைந்தார். இவரது சகோதரர் சிறுவயதில் எனது வகுப்பு நண்பனும் ஆவார். தனது சகோதரரை இவரே த.வி.புவிடம் கூட்டிக்கொண்டுபோய் சேர்த்துவிட்டார். யோகராஜா அவர்கள் கொல்லப்பட்டது மாத்தையா கொல்லப்பட்டு சில ஆண்டுகளின் பின்னரே என்று நினைக்கின்றேன். யோகராஜா அண்ணா மீது எனக்கு மிகுந்த அபிமானமும், மரியாதையும் இருந்தது. இவரது இறப்பு எனக்கு அப்போது மிகுந்த துயரையும், வேதனையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதுவும் த.வி.பு மூலமே அவர் கொல்லப்பட்டது ஜீரணிக்கக்கூடிய விடயமாக இருக்கவில்லை.

 

[ சாத்திரி, உங்களிடம் பொதுவான ஓர் கேள்வி. தனிப்பட எடுக்கவோ, குறை நினைக்கவோ வேண்டாம். நீங்கள் நான் த.வி.பு சம்மந்தமாக பக்கச்சார்பின்றி 2008 காலங்களில் யாழில் கருத்துக்களை எழுதியபோது என்னை அதிகளவு கடிந்துகொண்டீர்கள், கிண்டலும் செய்தீர்கள். ஆனால், இப்போது நீங்களே த.வி.புவை கடுமையாக விமர்சனம் செய்வதுபோல் தெரிகின்றது. மாத்தையாவின் விடயங்கள் எல்லாம் பழைய கதைகள்தானே. இவைபற்றி நீங்கள் ஏன் அப்போது பெரிதாக அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை? த.வி.புவில் பல தவறுகள் காணப்பட்டிருப்பினும், அப்போதைய நிலையில் த.வி.பு மூலம் போராடி ஓர் தீர்வை பெற்றுக்கொள்வதே தமிழ் மக்களிற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று நினைத்தீர்களா? அல்லது இப்போதுள்ள நிலையை பார்க்கும்போது விசனம் தோன்றியுள்ளதா? ]

 

 

சாஸ்திரி,மாத்தையாவின்ட‌ கொலைகள் எப்பவோ முடிஞ்சு போன கதை ஏன் இப்ப தூக்கி பிடித்து எழுதுறீங்கள்? அத்தோட‌ புலிகள் செய்த கொலைகளை அப்போது நீங்கள் கண்டிக்காமல் இப்போது ஏன் அது பற்றி விமர்சிக்கிறீங்கள் என நான் கேட்கவில்லை [நான் கேட்டாலும் பதில் வராது எனத் தெரியும்] கலைஞன் கேட்கிறார் அவருக்கு பதிலை சொல்லுங்கோ
 
நீங்கள் ஏன் இப்ப இப்படியெல்லாம் எழுதுறீங்கள் என எனக்குத் தெரியும் கலைஞனுக்குத் தெரியாது போல :(

கரும்பு.. நீங்கள் சொல்லும் ஆள் உங்களுக்கு நல்லவரா இருக்கலாம்.. ஊருக்கு நல்லவரா இருந்தவரோ..????! ஏன்னா வரதராஜப் பெருமாள் அவரின் மகளுக்கு அப்பா.. நமக்கு..நமக்கு செய்தவற்றிற்கு...........?????????!

 

நாங்க நாலு பேர் நல்லவனுன்னு சொல்லுறதிற்காக கொடிய மனித மிருகங்களை எல்லாம் தியாகிகள் ஆக்கிடக் கூடாது கரும்பு..!

 

புலிகள் அமைப்பில் இணைந்த எல்லோரும் இறுதி வரை புலிகளாக இருந்ததில்லை. துரோகிகளாகவும் ஆகியுள்ளனர். அது புலிகள் அமைப்புக்கு மட்டுமான பொது விதியல்ல. உலகில் எல்லா போராட்ட அமைப்புக்களும் கண்ட தலைவிதி..!

 

பிரபாகரன்.. இந்தத் துரோகிகளை இனம் காட்டினார்.. ஏலுமானதுகளை.. அழித்தார்.. ஆனாலும்.. அவர்களின் குடும்பங்களை அழிக்கவில்லை. ஆனால் இந்தக் கிராதகர்கள் அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தின் அழிவில் மனம் மகிழும்.. மனநோயாளிகளாக உள்ளமை.. உங்களுக்குத் தெரியவில்லையோ..???! :rolleyes::icon_idea:

 

 

நான் கூறும் ஆள் என்று நீங்கள் யாரை கூறுகின்றீர்கள் என்று தெரியவில்லை. மேலும், நான் சொல்லித்தான் ஒருவர் தியாகியாகவேண்டும் என்றும் இல்லை. நான் நேரில் கண்டவை, நேரில் பெற்ற அனுபவங்கள், சொந்த அனுபவங்கள் எனது வாழ்க்கையின் திசையை தீர்மானிப்பதில், நான் எடுக்கும் முடிவுகளில் அதிக செல்வாக்கை செலுத்துகின்றன. த.வி.பு ஆகட்டும், ஈப்பியாகட்டும், இந்திய இராணுவமாகட்டும், இலங்கை இராணுவமாகட்டும்... ஒவ்வொரு தரப்பிலிருந்தும் நான் பெற்ற சொந்த அனுபவங்கள், நேரில் கண்ட அனுபவங்கள் எனக்கு நிறையவே உள்ளன. இந்தவகையில் நான் வாழ்வில் நேரடியாக சந்தித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள், ஊரவர்கள் சம்மந்தப்பட்ட விடயங்கள் வரும்போது நிச்சயம் எனக்கு அவர்கள் சம்மந்தப்பட்ட சம்பவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதல்வன் இணைத்த இணைப்பில் உள்ள அமீர் அவர்கள் பற்றிய குறிப்பு காரணமாகவே இங்கு நான் எனது கருத்தை பகிர்ந்தேன். மற்றும்படி த.வி.புவோ... அல்லது ஈப்பியோ.. அல்லது வேறு எவ்வித அமைப்பு சம்மந்தமாக விமர்சனம் செய்யும் நிலையில் நான் தற்போது இல்லை.

விஜயன்  உங்கட மாம்ஸா    அவர் எப்போதும் சைற்ரானை  சைட்டில்  கட்டுவதில்லை  பின்பக்கம்  செருகித்தான் 

வைப்பார் 

 

 அவருக்கு பட்ட பெயர் சொத்தி( ஒருகாலை நொண்டிக் கொண்டு நடப்பார்)

(தியாகிகளும்) துரோகி(களும்)- சாத்திரி

 

 

சாப்பிட்ட கோப்பையிலேயே ***** கழிக்கின்றீர்கள் வர வர

 

 

பிகு; திரியை ஆரம்பித்தவரின் வேண்டுகோளுக்கிணங்க திரியை மூடுவதென்றால், ஏன் அவர் திரியை இணைக்க வேண்டும்? இணைக்க முதல் யோசிக்க கூடாதா? நிர்வாகம் திரிக்கு சம்பந்தமில்லாமல் கருத்துகள் சென்றால், திரியை மூடலாம், இப்படியே ஒவ்வொருவரும் திறந்துவிட்டு இழுத்து மூடு மூடு என்றால் எப்படியிருக்கும் ஒரு கருத்துக்களம், இனியாவது திரியை இணைக்க முதல் ஆற அமர இருந்து யோசித்துவிட்டு இணையுங்கள் திரியை

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்

  *தியாகிகளும் துரோகிகளும்-

எதுவரை சஞ்சிகைக்காக  சாத்திரி.

 

துரோகிகள் என்று போட்டுத் தள்ளியதில் ஈழத்து அனைத்து விடுதலைப்

போராட்ட இயக்கங்களும் ஒன்றிக்கொன்று சளைத்தலையல்ல.இறுதியில் மிஞ்சிய

இயக்கங்களை துரோகிகளாக்கி போட்டுத் தள்ளியபடியே புலிகள் இயக்கம் மட்டும்

மக்களிற்கான விடுதலையை பெற்றுத்தரும் போராட்ட இயக்கமாக தனித்துநின்று

,2009 மே மாதத்தோடு அதுவும் முடிந்துபோய்விட்டது. விடுதலை இயக்கங்களாலும்

முஸ்லிம் குழுக்களாலும் தங்களிற்குளேயும் வெளியேயும் மாறி மாறி

கொல்லப்பட்ட அந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின்

எண்ணிக்கை என்பது எங்கள் பொது எதிரி என விடுதலை இயக்கங்களால்

இனம்காணப்பட்ட இலங்கை இராணுவத்தால் கொல்லப் பட்ட தமிழ் முஸ்லிம் மக்களின்

தொகையோடு ஒப்பிடும்போது இரண்டிற்கும் பெரியளவு வித்தியாசம்

இருக்கப்போவதில்லை.

மீண்டும் ஒரு பதிவோடு “எதுவரை”யில் சந்திப்போம் அதுவரை .இப்படிக்கு துரோகி (லெப்.கேணல், தளபதி )

http://eathuvarai.net/?p=3076

இது வெறும் பச்சை பொய்.....

 
எந்த ஆதாரமும் அற்ற வெறும் பிதற்றல்.
நாம் பக்க சார்பின்றி பினார்துகிறோம் என்று தொடங்கும் எல்லா கட்டுரைகளுக்கும் இதுதான் பிள்ளையார் சுழி என்று ஆகிவிட்டது. 
 
துரோகிகள் என்று தொடங்கி பலபேர் அழிந்து போனார்கள்தான். ஆனால் இன  அழிப்பின் உச்சம் விடுதலை போரின் உச்சம் எல்லாமே இரண்டாவது ஈழப்போரின்  பின்பே தொடங்கியது. இதில் நாம் கொத்து கொத்தாக கொடுத்தோம். இந்த எண்ணிக்கையோடு எதுவும் கிட்டவும் நிற்காது. அப்போதிருந்த மொத்த இயக்க எண்ணிக்கையே இதில் ஐந்து வீதம் கூட வராது.
வெறும் வாந்தி இதை வாந்தி இல்லை என்று நிருபிக்க முடிந்தால்.............
தயவு செய்து ஆதாரங்களை இணையுங்கள்.
 
அத்தனையும் எண்ணிக்கையில் ஆதாரத்தோடு இருக்கிறது.
இருந்தும் சாத்ரியாரும் அதே சாக்கடையில்  விழுந்தததில் வியக்க ஏதும் இல்லை. பூண்ட வேடம் அப்படி  இனி சந்தனமும் பூசித்தான் ஆகவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. அப்படி வேறு எழுதியிருக்கா? :D நன்றி மருதங்கேணி..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.