Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னைக்கு சென்று விளையாடப் போவதில்லை – தமிழர் முத்தையா முரளீதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு சென்று வளையாடப் போவதில்லை என இலங்கையின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலையும், விளையாட்டையும் கலக்க முயற்சிப்பது மிகவும் வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் தாம் விளையாடக் கூடாது என தமிழக அரசாங்கம் கருதினால், அங்கு சென்று விளையாடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தம்மால் எதனையும் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

முத்தையா முரளீதரன் இம்முறை இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்களுர் றோயல் சலன்ஜர்ஸ் அணியில் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தாம் விளையாடுவதனை பார்ப்பதற்கு சென்னை விரும்பவில்லையென்றால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும், அது உலக முடிவாக கருத வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு வீரர் என்ற ரீதியில் அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டியதில்லை எனவும், மைதானத்தில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டியதே தமது கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.'நான் தமிழன், எனினும் அதற்கு முதல் நான் ஓர் இலங்கையர், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நானும் சென்னையில் சென்று விளையாட மாட்டேன். யுத்த நிறைவின் பின்னர் நாட்டில் பாரியளவு சமாதான நிலைமை நீடித்து வருகின்றது இதனை உறுதிபடக் கூற முடியும். தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் சமமாக நடாத்தப்படுகின்றனர்' என முரளீதரன் இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90112/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கையை நிமித்திப் பந்தை எறியுங்கள், முரளி!

 

அதுக்குப் பிறகு, சென்னையைப் பற்றி யோசிப்பம்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தமிழனின் திறமை சிங்களத்தின் கப்பல் ஏறவேண்டும் என்றால் அவன் குணத்தில் பாதி அளவாவது டக்ளஸ்ஸின் புத்தி இருந்தாகவேண்டும் என்பதை முரளி நிரூபிக்கின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்

....  ... போனாலும் விளையாட  விடவேண்டுமே 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நாட்டு துடுப்பாட்டவீரரின் கருத்து. இதைப்பற்றி நாங்கள் கவலைப்படத்தேவையில்லை. எனென்றால் நாங்கள் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.

தயவு செய்து தலைப்பில் தமிழர் என்ற அடையாளத்தை எடுத்துவிடுங்கள்.

வேற்று நாட்டு விளையாட்டு வீரர்களே சிங்கள தேசத்தை புறக்கணிக்க வேண்டுகையில் இவர் இப்படி நடப்பது இவருக்கே  முழு அவமானம்.

 

நாளை அமைய இருக்கும் தமிழீழ நாட்டிற்காக குரல் கொடுத்து அதன் துடுப்பெடுத்தாட்த்தில், விளையாட்டுத்துறையில் ஒரு ஆரம்பகர்த்தாவாக இருக்கும் அரிய சந்தர்ப்பத்தை முரளி தவறவிட்டுவிட்டார்.

5262_440467589361943_2107920000_n.jpg

'தமிழகத் தீர்மானம் யதார்த்தத்துக்கு புறம்பானது' - ராம்

 

இந்தியாவின் இலங்கைக் கொள்கை குறித்து தமிழக அரசு ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது, இந்திய அரசியல் சட்டத்தின் படி, இந்திய வெளியுறவுக் கொள்கை என்பது மத்திய அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட ஒரு விஷயம், இதில் மாநில அரசு தனது பங்களிப்பைச் செய்யலாம், ஆனால் யதார்த்த்துக்குப் புறம்பான, தீவிரமான கோரிக்கைகளை வைக்க முடியாது என்று இந்து பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் கூறியிருக்கிறார்.


தமிழ் நாட்டில், அரசியல் கட்சிகள் இலங்கை பிரச்சினையை வைத்து போட்டா போட்டி அரசியல் நடத்துவதன் விளைவே தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை(27.3.13) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்றார் ராம்.

 

எனினும் இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா மன்றத் தலையீட்டை கோரும் தீர்மானத்துக்கு வலு இருக்காது, அது செல்லுபடியாகாது என்றும் அவர் கூறுகிறார்.

 

இலங்கைப் பிரச்சினையில் தொடர்ந்து வந்த மத்திய ஆளும் கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு பாராட்டுக்குரியது என்று கூறும் அவர், மத்திய அரசு சரியான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது என்றும், தனி ஈழக் கோரிக்கைக்கு ஆதரவு தருவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

 

ஆனால், இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் அதிகாரப் பரவல் என்ற மத்திய அரசுகளின் நிலைப்பாடு சரியானது என்றும் கூறுகிறார் ராம்.

 

ஐபிஎல் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீர்ர்கள், தமிழகத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று ஐபிஎல் ஆளும் கவுன்சில் முடிவெடுத்திருப்பதும் தவறானது என்றார் ராம்.

 

ஐபிஎல் போட்டிகளுக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தால் ஒட்டுமொத்தமாக அந்த ஐபிஎல் போட்டிகளையே தமிழகத்துக்கு வெளியே கொண்டு சென்று விடலாம், ஆனால் இலங்கை வீர்ர்கள் மட்டும் விளையாடக்கூடாது என்று முடிவெடுத்தது சரியல்ல எனவும் அவர் வாதிடுகிறார்.

 

மேலும், விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக்கக் கூடாது என்று இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருப்பது குறித்து பதிலளித்த அவர், இது கொள்கையளவில் சரியானது, ஆனால் யதார்த்த்தில் அது போல எல்லா சமயங்களிலும் நடந்துகொள்ள முடிவதில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

 

குறிப்பாக வரலாற்று ரீதியாகப் பார்த்தால், 1980 ல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸை அமெரிக்கா புறக்கணித்தது, தென் ஆப்ரிக்காவின் நிறவெறி அரசுடன் விளையாட்டு உறவுகளை பல நாடுகள் முறித்தது ஆகியவைகளில் அரசியல் இருந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/03/130327_ramaudio.shtml

முதலமைச்சரை ஒரு பயங்கரவாதியாக

 

சித்தரிக்கும் சிங்கள ஆங்கில நாளிதழ்

 

cartoon(24).jpg

 

http://www.dailymirror.lk/news/cartoon-of-the-day/27312-cartoon-of-the-day.html

  • கருத்துக்கள உறவுகள்

783365687mur.jpg

மீண்டுமொரு யுத்தத்தை எதிர்கொள்ள நாங்கள் விரும்பவில்லை - முரளிதரன்

தமிழர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் தனக்கு எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை என இலங்கை அணியின் ஓய்வுபெற்ற நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

தான் பல பிரச்சினைகளில் இருந்தபோதும் இலங்கை அரசும் இலங்கை கிரிக்கெட்டும் தனக்கு பல உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐபில் போட்டியில் இலங்கை வீரர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த முரளிதரன் மேலும் கூறியதாவது, 

"இது கிரிக்கெட்டுக்கு ஒரு கவலைக்குரிய நாள். இந்தியாவின் சில பகுதிகளில் விளையாட நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு அரசாங்க தீர்மானம். அவர்கள் எமக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

நான் ரோயல் செலன்ஜர்ஸ் அணிக்காக விளையாடுகிறேன். அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. சென்னை தவிர்ந்த ஏனைய போட்டிகளில் என்னால் விளையாட முடியும். 

முன்னர் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் யுத்தம் காணப்பட்டது. ஆனால் இன்று எனது நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். எனவே ஆட்சேபனை தெரிவிக்கும் இந்திய தரப்பினர் இலங்கைக்கு கட்டாயம் வந்து முன்னர் நடந்தவற்றை மறந்து அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கின்றனர் என பார்க்க வேண்டும். இப்போதுள்ள நிலைபோன்று மீண்டுமொரு யுத்தத்தை நாங்கள் விரும்பவில்லை. 

எங்களை விளையாட அனுமதித்தால் நாம் நிச்சயம் சென்னையில் விளையாடுவோம். சென்னை எனக்கு இரண்டாவது தாய்நாடு. காரணம் எனது மனைவி மதிமலர் இங்குதான் உள்ளார். இது எனக்கொரு உணர்வுபூர்வமான நிலை. நாங்கள் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை. கிரிக்கெட் விளையாடி எங்கள் ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புகிறோம்." 

இவ்வாறு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய ஐபிஎல் ரோயல் செலன்ஜர்ஸ் அணி வீரருமான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 

முரளிதான் தந்து சொத்துக்களையும் வர்த்தகத்தையும் முன்வைத்து விட்ட அறிக்கை இது.

 

இவருக்கான பதில் காலத்தால் இவருக்கே திரும்ப கொடுக்கப்படும்.

முரளிதரன் தான் ஒரு கிணற்றுத் தவளை என்பதை தெளிவாக்கியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரென்ன.. ஆறுமுகம் தொண்டமானிடம் கேட்டாலும் இதைத்தான் சொல்லுவார். ஏன்னா அவர்கள் இருக்கிற இடம் அப்படி..! அட.. டக்கிளஸ்.. யுத்தமுன்னா சாவுகள் இருக்கத்தான் செய்யும் அதை எல்லாம் பெரிசு படுத்தக் கூடாதுன்னு டன் ரிவியில பிரச்சாரம் செய்ய அதனை நாங்கள் புலம்பெயர் நாடுகளில.. விளம்பரம் செய்து பார்த்துக்கிட்டுத் தானே இருக்கிறம். :icon_idea:

 

இப்படியான மனிதாபிமானமே அற்ற ஒரு சில மனிதப் பிறவிகளும் தப்பித் தவறி மனிதருள் பிறந்திடுவது இயல்பே..! அதற்காக காகம் திட்டி மாடு சாகப் போறதில்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

2004லில் அவுஸ்ரெலியா பிரதமர் ..இவர் பந்தை எறியிறார் என்று சொல்ல மன வருத்தப் பட்டன்...2006 அந்தக் காலப் பகுதியில் இவரின்ட படத்தை MSNனில் போட்டு அழகு பார்த்தேன்...இரண்டு நாளுக்கு முதல் இவர் விட்ட அறிக்கையோடை எல்லாம் வெறுத்து போச்சு...இவர் சிங்கள பிச்சைகார நன்றிகெட்ட எருமைகளின் செல்ல பிள்ளை. இன்று முதல் மானங்கெட்ட முரளிதரன் என்று உண்மையான தமிழர்களால் காரி காரி துப்பப்படுவார்..சிங்களம் அன்றில் இருந்து இன்று வர செய்த கொலைகளில் இவரின்ட குடும்பம் பலி ஆக்க வில்லை தானே அது தான் இவருக்கு சிங்களவன் நல்லவன் போல தெரியுது....

 

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது. ஒருமையில் உள்ளவை திருத்தப்பட்டுள்ளது

Edited by நியானி

முரளி , நீங்கள் நன்றாக வாழ்வதற்காய் 
இனத்தின் எதிர்காலத்தை புதைக்காதீர்கள்.
உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறோம்.
அதை பாழடிக்காதீர்கள்.  

10040_10200786662167156_1998825456_n.jpg



“நாங்கள் தொழில்ரீதியான மட்டைப்பந்து(Cricket) ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும், எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களை, படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம் , எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னி, இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பை, உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம்.
 
 — ஹென்றி ஒலாங்கா (முன்னாள் சிம்பாவே ம‌ட்டைப்ப‌ந்து வீர‌ர்)



“என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” .”என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுது,, பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்”.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட, ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

 

—– முக‌ம‌து அலி (உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்)

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை க்கு சென்று விலாட மாட்டாராம் அனால் சென்னை பொண்ணும் மலர் மருத்துவமனை சொத்துகளும் சீதனமா வாங்கிப்பாராம்....:D

முத்தையா முரளீதரன் அவர்களே! நீர் சொல்லும் அந்த "அமைதி" நாட்டில் வேணுமென்றால் முதலில் அத்தனை " காவி" மொட்டைகளையும் தூக்கி கம்பிக்குப் பின்னால் போடச் சொல்லும்..அதன்பின்பு அமைதி பற்றிப் பேசலாம்..அடங்கு, கொடூர அரசின் விசுவாசியே!!!!!!சிங்களனுக்கு யாரையாவது அடித்துக் கொண்டே இருக்கவேண்டும்..பிறவிக்குணம்..
ஒதுங்க இடம் கொடுத்தோம். இன்று நம்மையே முற்று முழுதாக ஒதுக்கப்பார்க்கிறான் சிங்களன்..ஒதுக்கமுடியுமா என்ன?

 

552238_446818252053873_612894211_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.