Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தட்ட வேண்டிய நேரத்தில் தட்டி கொடுக்கும் அர்ஜுன் அண்ணாவிற்கும் நன்றி :D

  • கருத்துக்கள உறவுகள்

இத்தீர்மானம் நிறைவேற உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக மாணவர் சமுதாயம், திருமுருகன், வைக்கோ, நெடுமாறன், சீமான் ஆகியவர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும். மாநில அளவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இத்தீர்மானம் நாடாளாவிய ரீதியில் வலுப்பெற உழைத்தல் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்காக உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி, முக்கியமாக தமிழக மாணவர்களுக்கு. தீர்மானத்துடன் மட்டும் நிற்காமல் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளையும் தொய்வின்றித் தொடரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொது வாக்கெடுப்பு என்று வந்தால் ஒட்டுகுளுக்கள் கள்ள வாக்குகள் போட எத்தனிப்பார்கள் உசாராக இருக்கவெண்டும் :)

நன்றி அம்மா, தமிழக மாணவர்கள் & இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

 

மிகச் சிறப்பான நல்லதொரு தீர்மானம், அம்மாவின் அதிரடியை யாரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்

அகோதா அண்ணா ஒரு நன்றி கடிதம் எழுதுவீங்கள் என்றால் எல்லாருமாக தமிழ்நாடு அரச மின்னஞ்சலுக்கு நன்றி கடிதம் அனுப்ப வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி என்ற சொல்லைத்தவிர வேறொன்றும் இல்லை.வெறுமனே தீர்மானத்தோடு நின்று விடாது மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்க வேண்டும்.தமிழகத்தின் 6கோடி மக்களின் கருத்தை இந்திய மத்திய அரசு வெறுமனே ஒதுக்கி விட முடியாது.ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு இது தொடர்பான தீர்மானத்தை இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அது தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் தமிழகம் மத்திய அரசுக்கு கீழ்பட்டு நடக்காது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தீர்மானம் நிறைவேற உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இத்தீர்மானம் நிறைவேற உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக மாணவர் சமுதாயம், திருமுருகன், வைக்கோ, நெடுமாறன், சீமான் ஆகியவர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும். மாநில அளவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இத்தீர்மானம் நாடாளாவிய ரீதியில் வலுப்பெற உழைத்தல் அவசியம்.

உங்களது கருத்தே என்னதும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐநா தீர்மானத்தால் ஏமாற்றப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நம்பிக்கையை கொடுக்கின்றது - அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET )

 

makkalavaikal.jpg

27.03.2013 அன்று தமிழக சட்டப்பேரவையில்  மாண்புமிகு தமிழக  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாவை வலியுறுத்தும் முகமாக ஐநா சபையின் கண்காணிப்பில்  பொதுவாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . கடந்த வாரம் ஈழத்தமிழர்களின் பல்வேறு கோணங்களில் தொடரும் இன அழிப்பை  தடுத்து நிறுத்த தவறிய ஜெனீவா தீர்மானத்தால் ஏமாற்றம் அடைந்த ஈழத்தமிழர்கள் ஆகிய எம் மத்தியில் தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எமது விடுதலைப்  பாதைக்கு வலுவாக அமைந்துள்ளது .

தமிழகத்தில் கடந்த மூன்று  வாரங்களாக ஈழத்தமிழர்களின்  விடுதலைக்காக  அதிஉயர் அர்ப்பணிப்போடு அகிம்சை வழிப் போராட்டங்களை   முன்னெடுக்கும் தமிழக மாணவர்களின் போராட்டங்களின் பலனாகவும்  இத் தீர்மானம் பார்க்கப்பட வேண்டும் .

சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானமாக கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி  ,உள்ளக விசாரணையை மற்றும் ஈழத்தமிழர்களுக்கு  தீர்வாக முன்வைக்கப்படும் வடக்கு மாகாண சபை தேர்தல் உள்ளடங்கிய ஜெனீவா தீர்மானம் மீண்டும் சர்வதேசம் தமிழ் மக்களை அழிவில் இருந்து காக்க தவறியதாகவே  கருத வேண்டும் .

இத்தருணத்தில் ஈழத் தமிழர்களை இன அழிப்பில் இருந்து காத்திடவும் அவர்களின்  எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனித் தமிழீழம்  ” குறித்து நிலத்திலும் புலத்திலும்  ஈழத்தமிழர்களிடம், பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்சபையில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும்,அத்தோடு சிறீலங்கா மீது பொருளாதாரத்தடை மற்றும் இன அழிப்பு ,போர்குற்றம் ,மானிடத்துக்கெதிரான குற்றம் விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில்   நிறைவேற்றிய  தீர்மானம் தகுந்த நேரத்தில் வரலாற்று ரீதியான முக்கியத்தை வகிக்கின்றது .

2012 இல் இந்தியாவில் முப்பத்தாறுக்கும் மேற்பட்ட முன்னணிக் கட்சிகளினுடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பில்  கனடியத் தமிழர் தேசிய அவை பிரான்ஸ் தமிழீழ பேரவை இணைந்து மேற்கொண்ட ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் மக்களால் இதே தீர்மானம் வலியுறுத்தப்பட்டது. இதனைத்; தொடர்ந்து 2013 ஆண்டு  மார்ச் 1ம் 2ம் 3ம் திகதிகளில்  அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால்  நடத்திய சர்வதேச தமிழர் உரிமை மாநாட்டில் பதினெட்டு நாடுகளில் இருந்து கலந்து கொண்ட பன்னாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், மானில முதல்வர், அனைத்துலக பிரதிநிதிகள்,; மனிதவுரிமை ஆர்வலர்கள், மனித நேயச் செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள் சிங்கள முற்போக்கு சக்திகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஜெனீவாவில் இதே தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இத்தாலியில் பலமோர் (Palermo) நகரசபையில் மேஜர்.லேலுகா ஒலான்டோ (Maj.Lay lu ka Orlando) அவர்களால் ஜெனீவா தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. இன்று தமிழகச் சட்டமன்றம் ஜெனீவாத்  தீர்மானத்திற்கு ஒப்பான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எம் தாயக உறவுகளுக்கும் புலம்பெயர்ந்து உலகப்பரப்பெங்கும் வாழ்ந்துவரும் ஈழத் தமிழருக்கும் இத்தீர்மானம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை  தீர்மானத்தை நாம் வரவேற்பதோடு  , ஈழத்தமிழர்களின் இருப்பை நிலை நாட்ட குரல் கொடுக்கும் தொப்புள்கொடி உறவுகளான தமிழக மாணவர்களுக்கும் மக்களுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் , சிறப்பாக மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .

குறிப்பு :

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக மேல் குறிப்பிட்ட வாழ்த்துச் செய்தி மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் காரியாலயத்துக்கு தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் 

நன்றி

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவைv-iceteelamreporttamilnadu%20%282%29.jpgv-iceteelamreporttamilnadu%20%281%29.jpg

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

299260_623531487661705_485273482_n.jpg

இதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிய தமிழக மாணவர்கள் என்றும் எம் மனதில் நிலைத்திருப்பார்!
பல சவால்களை எதிர்கொண்டு வேங்கையென வீறுநடை போட்ட அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை!!

மாணவச் செல்வங்களுக்கு ஆதரவு வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள், தமிழ்
ஊடகவியலாளர்கள், தமிழக காவல்துறையினர் முதலிய அனைவருக்கும் நன்றிகள்!
இவர்களுடன்

தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்
வைகோ
நெடுமாறன் அய்யா
சீமான்
வேல்முருகன்
புதிய தலை முறை தொலைகாட்சி
மற்றும் அனைவருக்கும்


நன்றி நன்றி நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழக முதல்வரின் தமிழீழ தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து சென்னையில் சுவரொட்டிகள்!
 

v-jeyasuvaroddti%20%282%29.jpg

photo.gifதமிழீழ விடியலுக்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நறைவேற்றிய தமிழக முதல்வருக்கு தமிழீழ விடியலுக்கான மாணவர் அமைப்பு நன்றிகளை தெரிவித்து சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

v-jeyasuvaroddti%20%283%29.jpgv-jeyasuvaroddti%20%281%29.jpg

 

இத்தீர்மானம் நிறைவேற உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வருக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வாழ்த்துக்கள்!

 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இதய பூர்வமான வாழ்த்துக்களை அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அனுப்பிய கடிதத்தின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேன்மைதங்கிய தமிழக முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு! 

மார்ச் 27 2013 அன்று தமிழகச் சட்டசபையில் நீங்களே நேரடியாகக் கொண்டு வந்த தீர்மானத்தில் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு கொண்டுவருதல்இ சிறிலங்காவை பகைநாடாக அறிவித்தல் போர்க்குற்றம் மீதான சர்வதேச விசாரணை பொருளாதாரத்தடை போன்ற விடையங்களை தீர்க்கமாக வெளியிட்டு தீர்மானம் கொண்டுவந்து அதனை பெரும் பான்மை ஆதரவுடன் நிறைவேற்றி உள்ளீர்கள். இது ஈழத்தமிழர் வாழ்வில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொன்நாள்.

இத்தீர்மானத்தினை கொண்டுவந்து அடிமைப்பட்டு அகதியாக்கப்பட்டு போன மக்களுக்கு ஒரு புதிய ஒளியை நீங்கள் ஏற்டுத்தி ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் உண்மையான தாயாக காட்சி தருகின்றீர்கள். அதிலும் தீர்மானத்தை முன்மொழியும் போது நீங்கள் தமிழீழ பொது வாக்கெடுப்பு நடைப்பு நடைபெறும் நாள் மிக விரைவில் என்று குரலை உயர்த்தி கூறியபோது எமக்கெல்லாம் மெய் சிலிர்த்துக்கொண்டது. 

நீங்கள் 2009ம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் போசும் போது 'மத்தியில் எனது ஆதரவில் கூட்டணி அமைந்து ஆட்சி அமைந்தால் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் அமைத்து தருவேன்' என்று கூறியபோது எமக்கு தூரத்தில் விடுதலைகான ஒரு ஒளி கீற்று தெரிவதை உணர்ந்தோம். அது மார்ச் 27 2013 அன்று தமிழகச் சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தின் மூலம் நம்பிக்கை ஒளியாக மிளிர்கின்றது.

சிறிலங்கா விடையத்தில் நீங்கள் முதலமைச்சர் பொறுப்பெடுத்த முதல் கொண்டு நீங்கள் எடுத்து வரும் அதிகப்படியான கரிசனையும் அப்போது அமெரிக்கா வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் அம்மையாருடன் எமது பிரச்சனை பற்றி தீவிரமாக ஆராய்ந்தது இதன் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவினால் முதலாவது தீர்மானம் கொண்டுவரப்பட்டது போன்றவை முக்கியமானவையாகும்.

நீங்கள் தற்போது நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை நாங்கள் நிச்சயமாக ஒபாமா நிர்வாகத்திற்கும் குறிப்பாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் அம்மையாருக்கும் எடுத்துச் செல்வோம். உலக அரங்கில் உங்கள் தீர்மானமும் குரலும் ஓங்கி ஒலிக்கச் செய்வோம். உங்கள் ஆசியுடனும் தமிழகத்து மாணவர்களுடைய அர்ப்பணிப்பு நிறைந்த போராட்டங்களினாலும் கிடைத்த தமிழீழத்துக்கான எழிர்ச்சி தீயை அணையாது அனைத்துலகிற்கும் கொண்டு சென்று தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடார்தி தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழீழத்தை பெறுவோம் என்று உறுதி பட சூறிக்கொள்கின்றோம். 

 

அன்புடன்

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

http://www.sankathi24.com/news/28493/64//d,fullart.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Letter.jpg

இந்தக் கடிதங்களை இப்போது இங்கு இணைப்பதன் நோக்கம் என்ன தமிழரசு?
சிலவற்றை தவிர்ப்பது நலம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் ஜெயானந்தமூர்த்தி பாராட்டு

 

 

தமிழகசட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா கொண்டு வந்துள்ள கடுமையான தீர்மானம் தாயக மற்றும் உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு தமது விடுதலை தொடர்பில் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கொண்டு வந்துள்ள இத்தீர்மானத்திற்காக ஈழத்தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Jeyananthamoorthi.jpg

இது தொடர்பாக அவர் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவுக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

 

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

 

"இன்றைய காலகட்டத்தில் தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்கள் தொடர்பாக தாங்கள் கொண்டு வந்துள்ள தீர்மானங்கள் மிகவும் வலுவானதாகும், ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்கா அரசினால் இந்திய அரசின் உதவியுடன் நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும் அதனை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாகவும் கடுமையான தொனியில் இத்தீர்மானம் அமைந்துள்ளது.

 

அது மாத்திரமின்றி இலங்கையை நட்பு நாடாக இந்தியா அழைக்கக் கூடாது என்பதும் ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழமே ஒரே முடிவு. அதற்காக ஐ.நா தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும்  ஈழத்தமிழர்கள் மத்தயில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமான விடயமாகவே நாம் பார்க்கின்றோம்.

 

இந்த தீர்மானத்தை  ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளான இந்திய மக்களின் முதலமைச்சர் என்ற கோதாவில் தாங்கள் கொண்டு வந்துள்ளது இந்திய அரசுக்கு பெரும் அடியாகவே அமைந்துள்ளது. இத்தீர்மானத்தில் 

 

இருந்து இந்தியா மெத்தனமாக இருந்துவிட முடியாது என்பது பேருண்மை.

இந்தியா அதுவும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு எமது இனத்திற்கு விடுதலையை பெற்றுத்தராது என்ற யதார்த்தத்தை நாம் மறப்பதற்கில்லை. ஏனெனில் இலங்கை அரசு எமது மக்களை வகைதொகையின்றி அழித்தபோது இந்தியா கண்ணை மூடிக்கொண்டே இருந்தது மாத்திரமின்றி இலங்கை அரசுக்கு போர்த்தளபாட மற்றும் ஏனைய அனைத்து உதவிகளையும் வழங்கியது. இதனால்தான் இலங்கை அரசால் இறுதிப்போரில் வெல்ல முடிந்தது. இதைத் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

 

எனினும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பே முக்கியமானது என்ற வரலாற்று உண்மையையும் நாம் மறுதலிப்பதற்கில்லை. எனவே இந்திய மத்திய அரசிற்கு தமிழக அரசு  ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு அமையும் வரை தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவும் தங்கள் தலைமையிலான அரசே உண்மையான, நேர்மையான வழியில் குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

 

கடந்த காலங்களில் எமது விடுதலைப்போராட்டம் தொடர்பாக சில கசப்புணர்வுகள் தங்களுக்கு இருந்திருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் எமது போராட்டத்தின் யதார்த்தத்தையும் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடே ஒரு வழி என்பதையும் தாங்கள் புரிந்து கொண்டதன் மூலமும் எமது மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றுப்பாசம் காரணமாகவுமே இன்று சட்டசபையில் இவ்வாறான தீர்மானத்தைத் தாங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். இதனால் எமது மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.

தாங்கள் எமது இனத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே எமது மக்களின் 

பேரவா என அந்த கடிதத்தில் ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.sankathi24.com/news/28530/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.