Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களிற்கு சொந்தமான Fashion bug கடையினை தாக்கி சேதமாக்கிய சிங்கள இனவாதக் குழு

Featured Replies

இன்று பெப்பிலியான பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான Fashion bug கடையினை சிங்கள இனவாதக் கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தி 2 முஸ்லிம் ஊடகவியளாலர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.
 
வீடியோ:
 

 


 
ஆங்கிலத்தில்:

A tense situation was reported from Pepiliyana this evening when a leading textile shop was attack by a group of people, sources said.

It is learnt that several people received minor injuries including a journalist from a private TV channel. The building and a vehicle were also damaged in the attack.

However, the police brought the situation under control.

http://www.dailymirror.lk/news/27384-tension-in-pepiliyana.html
 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் மீதான சிங்களவர்களின் வெறுப்புணர்வு இன்று நேற்றானதல்ல. நாங்கள் கொழும்பில் கல்வி கற்கும் காலத்திலேயே சிங்கள மாணவர்கள் சொன்னது.. இவர்களின் ஆட்டம் புலிகள் இருக்கும் வரை தான் என்று. புலிகளோடு ஒரு உறுதியான நிலைப்பாடு வரும் போது இவர்களை கவனிப்போம் என்று. இன்று அதுதான் நிகழ்கிறது. அப்போதே முஸ்லீம் மாணவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்கள்.. புலிகள் எமக்கும் ஒரு காப்பரணாக உள்ளனர் என்று. என்ன கடும்போக்கு முஸ்லீம் அரசியல்வாதிகளின் தவறான அரசியல் இன்று சிங்களவர்களின் நீண்ட கால எண்ணத்தை அவர்கள் இலகுவாக முஸ்லீம்கள் மீது முன்னெடுக்க இடமளித்துள்ளது.

 

இந்த நிலையை மாற்ற வேண்டின்.. சாதாரண முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே உள்ள அடிமட்ட புரிந்துணர்வை வளர்த்து.. அதன் அடித்தளத்தில் இருந்து அரசியல் செய்ய முஸ்லீம் அரசியல் தலைமைகள் சிறுபான்மையினரின் கரங்களைக் கோர்த்துப் பலம்பெற்று.. அரசியல்..செய்ய முன்வந்தால் அன்றி.. முஸ்லீம்களை எனி அல்லாவாலும் காப்பாற்ற முடியாது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ஈழத்தில் தமிழ்பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் அரசியல்நிலையில் பிறழ்ந்து சிங்களவோடு நின்றிருந்தாலும், இந்தக் காட்டுமிராண்டிச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சகுனம் 

  • தொடங்கியவர்

இலங்கையின் மிகப்பிரபலமான முஸ்லீம் வர்த்தகரின் ஆடைவிற்பனை நிலையமான பசன் பக் இன்று இலங்கை நேரம் இரவு பொதுபல சேனாவால் அடித்து நொருக்கப்பட்டு உள்ளது.

பொரலஸ்கமுவ பெபிலியானவில் அமைந்துள்ள ‘பெஷன் பக்’ (Fashion Bug ) ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்களாலும் கற்களை எறிந்தும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நீண்ட நேரம் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பேர் வரையிலான அணியினரே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் பிரபல முஸ்லீம் வர்தகரின் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பலபாகங்களில் கிளைகளைக் கொண்டுள்ள இந்த வியாபார ஸ்தலத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90180/language/ta-IN/article.aspx

முஸ்லீம் கடை மீதான தாக்குதல் செய்தி ஒன்றை தெளிவாக கூறி நிற்கின்றது: தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். ஒரு பயங்கராவாத பெரும்பான்மை அரசிற்கு எதிராக தம்மை ஆயுத ரீதியாக பாதுகாத்தவர்கள்.

பிரேரணை முடிந்துவிட்டது. இந்த முறை கக்கீமோ ரிசாத்தோ அதைபற்றி பெரிய அக்கறை காட்டவில்லை.

 

அவர்கள், இனி வர இருப்பதற்கு தாம் கோடிக்குள் ஒழிக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள் என்பதைத்தான் அது காட்டுகிறது. 

 

லண்டன் எக்கொனொமிஸ்ட் சிராணி பதவி நீக்கப்பட்டபோது அதை இலங்கையின் எல்லா சமூகங்களும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இலகுவாக ஏற்றுக்கொண்டார்கள் என்று இழித்துரைத்திருந்தது. 

 

 

முந்திய பிரேரணையின் போது கொம்பனித்தெருவையே முஸ்லீம்கள் அடங்கப்பண்ணியிருந்தார்கள். அந்த வலிமையை அவர்கள் இப்போது காட்டவிடாமல் அடக்குகிறது முஸ்லிம் தலைவர்களின் பேச்சுக்கள்.

 

இதில் முஸ்லீம் தலைமைகளின் கபடத்தனம் அரசுக்காக  முஸ்லீம்களை இடம் பெயரச்செய்து வடக்கு கிழக்கை தமிழரின் பாரம் பரிய பூமியாக வாக்களிக்கப்படுவதை தடுப்பதாகும்.

 

இதனால்த்தான் முஸ்லீம்கள் தமது மத்தை காக்க ஜனநாயக எதிர்ப்பு காட்டினால் அதை முஸ்லீம் தலைவர்கள் அடக்கி, சிங்கள காடைகளை கேட்பார் விசாரிப்பார் இல்லாமால் போக வைக்கிறார்கள். 

 

சிலர் முஸ்லீம்களை செல்லாக்காசுக்கு தேவை  இல்லாத முட்டாள்களாக்கியது சிங்களத்தின் ராஜ தந்திரமாக விவரிக்க கூடும். ஆனால் ராஜதந்திரத்தில் யார் எதிரி  யார் அயலவன் என்று கணக்கிட்டுக்கொள்ள வேண்டிய தேவை இல்லையா? பில்லின் கணக்கில் சகோதர இனமான தமிழரின் சொத்துப்பத்துகளை தீக்கிரை ஆக்கி அவர்களில் 350,000 கொலை செய்வது உண்மையான ராஜ தந்திரமா? அதே ராஜதந்திரமா முஸ்லீம்களுடனும்?

 

1948-2009 வரை தமிழர். 2011 தொடக்கம் முஸ்லீம்கள்.  இப்போது ஒன்று மட்டும் தெரிகிறது. அடுத்தமுறை தேர்தலில் வெல்ல வேண்டியவர்கள்(UNP அல்லது SLFP) கதைக்க வேண்டியது தமிழரைப்பற்றி அல்ல. முஸ்லீம்களைப் பற்றியது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அல்லா காக்கட்டும்.....இப்பதான் ஹக்கீம் அலிபாபாவும் நாற்பது திருடர்களின் கதை படிக்கிறார்...இன்னமும் எத்தினை கதை படிக்க கிடக்கோ தெரியாது...

The clothing store in Pepiliyana following the attack on Thursday (29).

PEPILIYANA SHOP ATTACKED OVER ‘LOVE AFFAIR’ - POLICE

March 29, 2013  01:27 pm

lg-share-en.gif
Police today said that the reason behind the tense situation in Pepiliyana last night was a personal dispute. 

A love affair between a youth and an underage girl had been the cause for the attack on the clothing store in Pepiliyana, police spokesman SP Buddhika Siriwardena said.

A violent mob had attacked and pelted stones at a popular clothing store in Pepiliyana last night causing damages to the shop while one person reportedly injured in the incident.

The situation was brought under control by the police while a special police team has commenced investigations into the attack.

Police, however, said no arrests have been made so far regarding the incident.


பொலிஸ் சுபிரிண்டன் "பித்தா பிறை சூடி" என்று கக்கீமுக்கு அடி எடுத்துக்கொடுத்திருக்கிறார்.

 

வாழ்க கக்கீம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

  • தொடங்கியவர்

விகாரையில் மணி அணித்து மக்களை ஒன்றுகூட்டி பெசன்பெக்கை தாக்கினார்கள்

Thursday, March 28, 2013 Jaffna Muslim 9

பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள ‘பெஷன் பக்’ (Fashion Bug) ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இத் தாக்குதல் நீடித்ததாகவும் சுமார் 100 பேர் கொண்ட குண்டர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக அறியமுடிகின்றது.

இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விற்பனை நிலையம் தாக்கப்படுவதற்கு முன்னர் அதற்கு முன்னுள்ள விகாரையில் மணி அணித்து மக்களை ஒன்றுகூட்டி பெசன்பெக்கை தாக்கினார்கள் என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

http://www.jaffnamuslim.com/2013/03/blog-post_2949.html?spref=fb

" முஸ்லீம்களின் சனத்தொகை சிங்களவர்களை விட கூடிவிடும் " என்ற செய்தி சிங்களவர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்படுகின்றது. அதனால் தமது சொந்த நாட்டில் தாங்கள் சிறுபான்மை மக்கள் ஆகிவிடுவோம் என்ற மனநிலை கோபமாக வெறுப்பாக மாறிவருகின்றது.

 

 

அதேவேளை தமிழர்களின் சனத்தொகை குறைந்து வருவதும், புலிகள் அழிக்கப்பட்டதும், மத / கலாச்சார ரீதியாக ஒற்றுமைகளை கொண்டுள்ளதும் தமிழர்கள் மீதான வெறுப்பை குறைத்துள்ளது.


இங்கே தமிழர்கள் அமைதியாக இருக்கவேண்டுமா? இல்லை
முஸ்லீம் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டுமா?  இல்லை
வெறும் பார்வையாளர்களாக இருக்கவேண்டுமா?

 

வெளிப்படையாக தமிழ் அரசியல் வாதிகள் மௌனமாகவும் முஸ்லீம் மற்றும் சர்வதேச அரசியல்வாதிகள் மத்தியில் சிங்கள பௌத்த பேரினவாதம் பற்றி எடுத்து சொல்வதும் நன்று என்பது எனது கருத்து.

தமிழர்களால் யாழ்ப்பாணத்தில் வெளியேற்றப்படதை நீண்டகாலமாக இண்று வரைக்கும் நினைவிலை வைத்து இருந்து இனவாதத்துக்கு உதவிய இஸ்லாமிய சமூகம் இதனை சில நாட்களில் மறந்து போவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடந்தாலும் ஐக்கிய இலங்கையென்ற கோட்பாட்டில் விடாப்பிடியாக இருப்பவர்கள் முஸ்லீம்கள்.  பௌத்த சிங்கள இனவாதத்தைத் தாக்குப் பிடிக்க அவர்கள் சிங்கள மொழியைக் கற்றுப் பௌத்த மதத்தைப் பின்பற்றத் தொடங்கினாற்போதும்.  அதை அவர்கள் உடனே செய்யத் தொடங்கித் தம் இனத்தைக் காத்துக்கொள்ள முயலவேண்டும். பிறகு அவர்களை யாரும் அசைக்கமுடியாது.
 

என்னதான் நடந்தாலும் ஐக்கிய இலங்கையென்ற கோட்பாட்டில் விடாப்பிடியாக இருப்பவர்கள் முஸ்லீம்கள்.  பௌத்த சிங்கள இனவாதத்தைத் தாக்குப் பிடிக்க அவர்கள் சிங்கள மொழியைக் கற்றுப் பௌத்த மதத்தைப் பின்பற்றத் தொடங்கினாற்போதும்.  அதை அவர்கள் உடனே செய்யத் தொடங்கித் தம் இனத்தைக் காத்துக்கொள்ள முயலவேண்டும். பிறகு அவர்களை யாரும் அசைக்கமுடியாது.

 

இது ஒன்றுதான் அவர்களுக்கு இருக்கும் தெரிவு. இதை அவர்கள் நோகாமல் செய்வார்கள் பாருங்கள்.

மிகவேகமாக இனப்பரம்பல் செய்யும்  பொருளாதார ஆதிக்கமுள்ள முஸ்லிம்களின் மேல், ஆரம்பத்திலிருந்தே சிங்களவர்களுக்கு ஒரு கண் உண்டு. தமிழர் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வரும் மட்டும் பொறுத்திருந்தார்கள். இப்ப சிறிது சிறிதாக ஆரம்பித்துள்ளார்கள்.

முஸ்லிம்கள்தான் தங்களது உண்மையான எதிரி என்று, முன்பு ஊரில் ஒரு பிரச்சனை நடந்த பொழுது ஒரு பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

இது ஒரு முஸ்லிம் இளைஞர் ஒரு சிங்களப் பெண்ணை ஏமாற்றியதால் நடாத்தப்பட்ட தாக்குதல் என சிங்கள போலிஸ் பயங்கரவாதிகளும் பௌத்த பிக்குக் காடையர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே ஹகீம், ஹிஸ்புல்ல, பௌசி, அலவி போன்றவர்கள் இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதை சர்வதேசத்துக்கு தெரிவிக்க வேண்டும்!  இதுவும் ஒரு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்று சர்வதேசம் விளாங்கிக் கொள்ளவேண்டும்!

"இது ஒரு முஸ்லிம் இளைஞர் ஒரு சிங்களப் பெண்ணை ஏமாற்றியதால் நடாத்தப்பட்ட தாக்குதல் என சிங்கள போலிஸ் பயங்கரவாதிகளும் பௌத்த பிக்குக் காடையர்களும் கண்டுபிடித்துள்ளனர்."

 

நல்லாத்தான் நெருப்பு வைத்திருக்கிறார்கள். எற்கனவே இருக்கும் முஸ்லீம் பெண்கள் போதாது என்று தங்கள் பெண்களையும் பிடித்து முஸ்லீம் இனத்தை வளர்க்கிறார்கள் என்றுதான் காடைகள் இதை விளங்கிக்கொள்வார்கள். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.