Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் பெண் போராளிகள் - ஒருசிலரின் இன்றைய மனநிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் கட்டாயம் இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து காணொளியின் இறுதியில் (21 நிமிடம் 30 செக்கன்) உங்களுக்கு ஏற்ப அனுபவத்தை முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மன்னியுங்கள்  தாயே

ஒரு கோழைத்தமிழனின் கண்ணீரை மட்டுமே தரமுடிகிறது

 

நிச்சயம் வருவோம்

உம்மை நிமிர்த்துவோம் தாங்குவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றோம் எனது பணிகளை..............

 

கிருபனின் கேள்விக்கு

முடியல ராசா

நாம் எங்கே?

அவர்கள் இந்தநிலையிலும் உயர்ந்து நிற்கிறார்கள்

மகிந்தவும்உலகமும்தொடர்ந்து தப்பைச்செய்கின்றனர்

அதுவே இத்தனைக்கும் காரணம்

இனி  நடக்கப்போவதற்கும் .....................???

ஒரு கையில் சாவையும் மறுகையில் வாழ்வையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த சகோதரிகளுக்காக என்ன செய்யப் போகின்றோம்?

 

இராணுவ அழுத்தங்களுக்கு போராட துணிச்சலின்றி இருக்கும் இதே பெண்கள் தாம் சார்ந்த சமுதாயத்தின் கொடுமைகளுக்கும் எதிராக போராட வழியின்றி தவிக்கும் போது நான் சார்ந்து இருக்கும் இந்த தமிழ் / யாழ்ப்பாண சமூகத்தின் மீதே வெறுப்பும் அருவருப்பும் எழுகின்றது.

 

வெறுமனே நாம் மாவீரர்களுக்கு வணக்கம் என்று சொல்லும் போது எமக்குள் எழும் இயந்திரத்தன்மை இந்த சகோதரிகள் மாவீரர் வணக்கம் செய்யும் போது ஈட்டி மாதிரி குத்துகின்றது.

 

என்ன செய்யப் போகின்றோம்...?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யப் போகின்றோம்...????????????????????????

என்ன செய்யப் போகின்றோம்...????????????????????????

 

வடக்கு - கிழக்கில் உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான உறவினர் இருந்தால், நிச்சயமாக நீங்களும் உங்கள் சுய முயற்சி மூலம் உதவலாம்!

நாம் கடந்த சில வருடங்களில் 300+ பெண் போராளிகள் தமது வாழ்வை தாமே சிறப்பாக நிரந்திர ஆதரங்களுடன் கட்டியெழுப்ப எமது கட்டமைப்பின் ஊடாக உதவியுள்ளோம். பெரும்பாலும் உறவினர் நெருங்கிய நண்பர்கள் பாதுகாப்பு / கண்காணிப்பில் நாம் நன்கு அறிந்த புலம்பெயர் உறவுகளின் பொருளாதார உதவிகளுடன் இதை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் செய்துள்ளோம்.

முக்கியமாக அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் வரும்போது அதை எப்படி சமாளிப்பது போன்ற ஆலோசனைகள், அவசரமாக ஆலோசனை பெற நம்பிக்கையான ஒரு தொடர்பு (அவர்களில் N எண்ணிக்கையான  பெண்கள் ஒரு குழுவாக இணைத்து  - ஒருவருக்கு ஒருவர் உதவியாக - அதில் ஓரிருவருக்கு சவால்களை எதிர்கொள்ளும் பயிற்சி) போன்றவை அவர்கள் தன்னம்பிக்கை பெற உதவுகிறது). அவர்களின் பாதுகாப்பு காரணமாக மேலதிக விபரங்களை தர முடியவில்லை.

மேலும்பலருக்கு உதவ எடுத்த முயற்சிகள் அவரவர் மனநிலை, சூழ்நிலை காரணமாக பெருமளவு வெற்றிபெறவில்லை. ஆனால் முயற்சி தொடர்கிறது.

புலம் பெயர் தேசத்தில் இருக்கும்  நீங்கள் உங்கள் உறவினர்கள் மூலம் அயலில் இருக்கும் பெண்களை தேடி அறிந்து, காதும் காதும் வைத்தமாதிரி உதவ முயலலாம். பிள்ளைகளின்  படிப்பு + சுயவேலை தொடங்க / பொருத்தமான வேலை பெற உதவுதல், சிறு தொழில் பயிற்சி போன்றவை  வெற்றியளிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது அனுபவம்.

முக்கியமாக ஒருசிலரை இணைத்து உதவும் போது, "சிறப்பு" முகாமில் மாட்டுப்பட்டு விடுபட்டவர்களையும், ஏனையவர்களையும் வெவ்வேறாக கையாளுவது பல சவால்களை சமாளிக்க உதவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யப் போகின்றோம்...????????????????????????

 

தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும்,
அதற்காக சேர்ந்து உழைப்போம். 
  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைக்கு ஒரு சிறு தீர்வாக கடைகளில் கணக்குப் புத்தகம் வைத்து அவர்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்வதுபோல் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் வெ ளியில் உள்ளவர்கள் அந்தக் கணக்கை பணம் செலுத்தி முடிக்கலாம்.. இதற்கு உள்ளுரில் உள்ளவர்களின் துணை அவசியம்.. செய்வோமா?? செய்யமுடியுமா??

சிறு கைத்தொழிலுக்கு பண உதவி செய்து அவர்களின் வாழ்வாதரத்தை அவர்களே பார்த்து கொள்ள வைக்கலாம்


 

எனக்கு தெரிந்த சிலர் அப்படி பயன் அடைந்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் வாழும் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னாள் போராளிகளை கட்டிக்கொடுக்க முன்வர வேண்டும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் பார்த்ததும் அழுதேன்,கண்ணீர் வடித்தேன் என்று மட்டும் சொல்லிவிட்டுப் போகவில்லை. இதயம் இருக்கும் எந்த ஒரு வரும் இதைப் பார்த்து உருகாமல்ப் போய்விட முடியாது. அதை விட இத்துப்போன, நாத்தம் பிடிச்ச எம்மினத்தின் அத்தனை ஊத்தைகளையும் நான் அறிவேன். இந்த காணொளி பார்த்தல்ல, முதலும்,எப்பவுமே நானும் வேதனைப்படுவது இப்படியான ஒரு இனத்தில் வந்து பிறந்தோமே என்று தான். நமக்கு தமிழீழம் தான் வேண்டும் என்று கூறவே நாக்கு தழுதழுக்கும்.

அதை விட இப்படியான காணொளிகள் வருவதும் அது குறித்து சில தினங்கள் மட்டும் பேசிவிட்டு போகும் போது எரிச்சல் தான் வரும். சனல்4 போர்க்குற்ற காணொளி ஆகட்டும், பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்களாகட்டும், சில நாள் பேச்சு, பல நாள் மௌனம் மறுபடி ஒரு காணொளி வரும் வரைக்கும் காத்திருப்பு இது தான் அரசியலாகிவிட்டது.

 

என்னைப் பொறுத்தவரைக்கும் எம்மினத்தின் முன்னேற்றம் குறித்து நான் நினைப்பவற்றைச் சுருக்கமாகக் கூறவேண்டும் என நினைக்கிறேன்.

 

1. போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் வாழ்க்கைத்தர மேம்பாடு.

* அதற்காக தொண்டு நிறுவனங்கள் மூலம் பிச்சைக்காசு போல எம்மில் தங்கி இருக்காது பொது நிதியம்  ஒன்று தொடங்கி

குறைந்த வட்டியில் அல்லது வட்டியில்லாக் கடனாய் அவர்கள் தம் திறமைக்கேத்த தொழில்,கல்வி விருத்திக்கு உதவுதல்.

 

2. ஒருங்கிணை(த்)தல்.

*பலமான ஒரு தலைமைத்துவம் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் விடுதலைப்புலிகள்,மாற்றுக்குழுக்கள் என்று பழைய தலைமையின் கீழ் ஒன்று படுவது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை காரணம். அவர்களுடைய காலப்பகுதி காலாவதியாகி விட்டது, அதற்காக அவர்களுடைய தியாகங்கள், வீர வரலாறுகள்,சாதனைகளைப் புறக்கணிக்கிறோம் என்பது அல்ல காரணம். வரலாற்றில் அவர்களின் பாடங்களை யாராலும் மறந்திடவும்,மறுத்திடவும் முடியாது என்பது புத்தியுள்ள அத்தனை பேருக்கும் தெரியும்.

ஆனால் நினைப்பது கடந்த காலங்களில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களின் தொடர்ச்சி இவ்வளவு இழப்புக்குப் பின்னரும் தொடரக்கூடாது என்பதற்காகவே.

தன்னெழுச்சி கொண்ட இளைஞர்,மாணவர் கூட்டம் இதைப் பொறுப்பெடுக்கலாம்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் நாடுவாரியாக ஒரே பெயரில் அரசியல்,ராஜதந்திர செயற்பாடுகளைச் செய்யலாம்.

 

3. சமூக விளிப்புணர்வு.

*எந்தளவுக்கு இனப்பிரச்சனை இருக்கோ அந்தளவுக்கு எமது சமூகத்திலும் வேர்விட்டுப் பரவியுள்ள சாதீயம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பழைய சிந்தாந்தங்களுக்கு எதிராகவும் முடிந்த அத்தனை வழிகளிலும் விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மனிதனை மனிதனாய் பார்க்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

 

4. செயற்பாடு.

* உண்மையாக தாயகத்துக்கு திரும்பக் கூடியவர்களில் சிலராவது களப்பணி செய்ய முன்வரவேண்டும்.

ஆலோசனைக் குழுக்கள் அமைத்து தரவுகளை சரியான முறைகளில் செயற்படுத்தலாம்.

 

இப்படி ஏராளம் இருக்கு, அதை விடுத்து உணர்ச்ச்சி வசப்பட்டு பேசுவதோடு மட்டும் நிறுத்தாமல், மாற்றி யோசித்தால்

தோள்குடுக்க நாம் என்றும் தயார்.

 

செய்வோமா? அல்லது அடுத்த காணொளி வரும் வரைக்கும் கண்ணீரை மீதப்படுத்துவோமா???

இந்த விவரண படம் ( தாம் காணாமல் போனாலும் போகலாம் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=120099 )  கூறி நிற்பது தமிழர் பகுதிகளில் ஒரு அரசியல் தீர்வும் அந்த தீர்வால் வரும் ஆட்சியாளர்கள் புலிகளை போன்ற ஒரு சமூக பொருளாதார ஆட்சியையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

யீவா இவ்வளவு ஆழமாக யோசிக்கும் நீங்களே இதைப் பொறுப்பெடுத்து நடைமுறைச்சாத்தியம் ஆக்குவது இலகு ஏன் நீங்கள் இத்தகைய பொறுப்பை எடுக்கக்கூடாது?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரை தமிழர்களுக்கு இருக்கிற அமைப்புகளே காணும்.... ஒவோன்றுக்கும் ஒவொரு அமைப்பு தொடங்க வெளிகிட்டா மேலும் மேலும் எமது மக்களை பிரிக்கும்.... ஏனைய கருத்துக்கள் ஓகே....

ஒவொரு அமைப்பு மீதும்

நம்பிக்கை இல்லை நம்பிக்கை இல்லை எண்டு கொண்டு போன காசில மக்கள் தொகையை விட அமைப்புகள் தான் கூடி போய்டும்.....

சோ அவர் அவர் தங்களுக்கு தெரிந்த அமைப்புகளின் ஊடா ஒவொரு போராளியையும் பொறுப்பெடுக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பில் இருந்து வந்த அல்லது இப்போதும் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு பொருளாதாரப் பிரச்சினை மட்டும் இல்லை. அவர்களின் மீதான சமூகப் பார்வை தலைகீழாக மாறியுள்ளது எம்மினத்தின் மீது கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இது எதுக்கு சொல்லுறேன்னா..... புதுசா ஒரு பலமான அமைப்பு அனைத்து நாடுகளிலும் கட்டி எழுப்பும் போது அதை குற்றம் சொல்லுறதுக்கு நாலு பேர் வருவாங்க.... :D

தடுப்பில் இருந்து வந்த அல்லது இப்போதும் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு பொருளாதாரப் பிரச்சினை மட்டும் இல்லை. அவர்களின் மீதான சமூகப் பார்வை தலைகீழாக மாறியுள்ளது எம்மினத்தின் மீது கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது.

இங்கு வெறுமனே சமுகத்தை மட்டும் குற்றம் சாட்ட முடியாது.... அந்தளவிற்கு இராணுவ அழுத்தங்கள் மக்கள் மீது கொடுக்கப்படுகின்றது......மக்கள் மிரட்டப்படுகின்றார்கள்....

முன்னாள் போராளிகளை அரவணைக்கும் போது இராணுவ புலனாய்வாளர்களால் மக்கள் மிரட்டபடுகின்றார்கள்....

ஆகவே வெறுமனே மக்களையும் யாழ்ப்பான சமுகத்தையும் நீங்கள் வெளிநாட்டில் இருந்து கண்டிப்பது மிக பெரிய தவறு......

அங்கிருக்கும் மக்களின் நிலைமையை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்....

இவர்களது வேதனைகளின் சிறு பகுதியைத் தான் பொருளாதார ரீதியான உதவி மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்றாலும் தற்போது உடனடியாக எங்களால் செய்யக் கூடியது அதுதான். தனிப்பட்ட முறையில் என்னாலான வழியில் நான்உதவிக் கொண்டிருந்தாலும் யாழ் களம் சார்பாக ஒரு நிதியம்அமைக்கப்பட்டு மாதாந்தம் சிலருக்காவது உதவுகின்ற திட்டமொன்று செயற்படுத்தப்பட்டால் மாதாந்தம் எனது பங்களிப்பைத் தரத் தயாராயிருக்கிறேன்.

 

சுமார் 30 - 40 உறவுகள் இந்த நிதியத்திற்குப் பங்களிப்புச் செய்தாலே ஒரு சிலருடைய பொருளாதாரப்பிரச்சினைக்கு உதவலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்

பொதுமக்களில் சிலர் எவ்வாறு முன்னாள் போராளிகளை இழிவு செய்கிறார்கள் என்பது காணொளியில் உள்ளது..

மணிவாசகன் போல் நானும் செய்யத் தயார்..

  • கருத்துக்கள உறவுகள்

சரி வெளிநாட்டில் இருந்தவாறு யாழ்ப்பாண சமுகத்தை திட்டி தீர்க்கும் உங்களில் எத்தனை பேர் அங்கிருக்கும் உங்கள் உறவுனர்களை வைத்து போராளிகளை பராமரிக்க முன்வருகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய சுற்றம் அங்கே இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்

பொதுமக்களில் சிலர் எவ்வாறு முன்னாள் போராளிகளை இழிவு செய்கிறார்கள் என்பது காணொளியில் உள்ளது..

மணிவாசகன் போல் நானும் செய்யத் தயார்..

யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்களும் அதன் சார்ந்த மக்களும் இருகின்றார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம்.....

இந்த விவரண படம் ( தாம் காணாமல் போனாலும் போகலாம் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=120099 )  கூறி நிற்பது தமிழர் பகுதிகளில் ஒரு அரசியல் தீர்வும் அந்த தீர்வால் வரும் ஆட்சியாளர்கள் புலிகளை போன்ற ஒரு சமூக பொருளாதார ஆட்சியையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே.

 

இப்படியான கருத்து இருக்கும் வரை இவ்வாறான பெண்களின் வாழ்வு சிதைக்கப்படும். தலை கொய்யப்படும். பின்னர் நீங்கள் கனடா கந்தசாமி கோயிலில் இவர்களின் ஆத்மா சாந்தி அடைய ஒரு யாகத்தை பூசையை செய்து தேசீயத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.

 

இவர்கள மறுவாழ்வுக்கு பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்று எவனும் யோசிக்க முதல் தனியரசு என்ற சிம்மாசனம் தான் தீர்வு வேறு எதைப்பற்றியும் யோசிக்கத்தேவையில்லை என்ற அதி உன்னதமான ஒரு பிரகடனத்தை செய்து தற்போதைக்கு கற்பனையில் அந்த சிம்மாசனத்தில் இருந்துகொள்ளுங்கள்.

 

இப்போது நடப்பது உங்களைப்போன்றவர்களின் கருத்தளவில் மட்டுமான கற்பனைச் சிம்மாசனத்துக்கும் நிஜமான சிங்களச் சிம்மாசனத்துக்கும் நடக்கும் போர். இதில் உங்களுக்கோ சிங்களவனுக்கோ எதுவித இழப்பும் இல்லை. இழப்பு முழுக்க இவ்வாறான அவலப்பட்ட மக்களுக்கே.

 

மனிதநேயமுள்ளவர்கள் இரண்டுபேராவது இவர்களின் மறுவாழ்வுக்கு உதவ முன்வரலாம். ஆகக் குறைந்தது அவ்வாறான உதவிகளுக்கு குறுக்கேயாவது தயவுசெய்து உங்கள் செங்கோலை நீட்டாமல் இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்களும் அதன் சார்ந்த மக்களும் இருகின்றார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம்.....

மறக்கவில்லை சுண்டல்.. "சிலர்" என்றுதானே எனது கருத்தில் கூறியிருந்தேன்??

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்து இருக்கும் வரை இவ்வாறான பெண்களின் வாழ்வு சிதைக்கப்படும். தலை கொய்யப்படும். பின்னர் நீங்கள் கனடா கந்தசாமி கோயிலில் இவர்களின் ஆத்மா சாந்தி அடைய ஒரு யாகத்தை பூசையை செய்து தேசீயத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.

 

இவர்கள மறுவாழ்வுக்கு பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்று எவனும் யோசிக்க முதல் தனியரசு என்ற சிம்மாசனம் தான் தீர்வு வேறு எதைப்பற்றியும் யோசிக்கத்தேவையில்லை என்ற அதி உன்னதமான ஒரு பிரகடனத்தை செய்து தற்போதைக்கு கற்பனையில் அந்த சிம்மாசனத்தில் இருந்துகொள்ளுங்கள்.

 

இப்போது நடப்பது உங்களைப்போன்றவர்களின் கருத்தளவில் மட்டுமான கற்பனைச் சிம்மாசனத்துக்கும் நிஜமான சிங்களச் சிம்மாசனத்துக்கும் நடக்கும் போர். இதில் உங்களுக்கோ சிங்களவனுக்கோ எதுவித இழப்பும் இல்லை. இழப்பு முழுக்க இவ்வாறான அவலப்பட்ட மக்களுக்கே.

 

மனிதநேயமுள்ளவர்கள் இரண்டுபேராவது இவர்களின் மறுவாழ்வுக்கு உதவ முன்வரலாம். ஆகக் குறைந்தது அவ்வாறான உதவிகளுக்கு குறுக்கேயாவது தயவுசெய்து உங்கள் செங்கோலை நீட்டாமல் இருங்கள்.

 

 

மனித நேயம் உள்ளவர்கள் உதவி செய்யலாம் சரி. அப்படி உதவி கிடைக்கப்பெற்ற இருவர் காணாமல் போயிருக்கிறார்கள். இது நீண்ட கால அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதை சொல்லி நிற்கவில்லையா??
 
அல்லது அதற்கும் (காணாமால் போவோருக்கு) உங்களிடம் தீர்வு உள்ளதா என அறிய ஆவல்.

இந்த விவரண படம் ( தாம் காணாமல் போனாலும் போகலாம் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=120099 )  கூறி நிற்பது தமிழர் பகுதிகளில் ஒரு அரசியல் தீர்வும் அந்த தீர்வால் வரும் ஆட்சியாளர்கள் புலிகளை போன்ற ஒரு சமூக பொருளாதார ஆட்சியையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே.

 

 

புலிகளின் மக்களாட்சி பல முன்னேற்றகரமான கட்டமைப்புக்களை கொண்டு இருந்தது:

- காவல்துறை

- வங்கி

- நீதி

- கல்வி திட்டங்கள்

- வேலை வாய்ய்ப்புக்கள்

- மருத்துவ துறை

- பொருளாதார மேம்பாடு

 

இவை பல நாடுகள் வியக்கத்தக்க முறை யில் இருந்தது.

எனவே ஒரு அரசியல் தீர்வு வந்தபின்னர் எவ்வாறான ஆட்சி இருக்கவேண்டும்? என்ற கேள்விக்கான பதில் புலிகள் ஆட்சியில் இருந்தது என்பதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.