Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை சீண்டிப் பார்க்கும் ஆண்களுக்கு!: அதிர்ச்சி வைத்தியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தியாவின் டெல்லி நகரில் மருத்துவ கல்லூரி மணவியொருவர்  ஓடும்

பஸ்ஸில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமையும் பின்பு அவர்

உயிரிழந்தமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

 

இதுமட்டுமன்றி அங்கு தினந்தோறும் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகுகின்றனர்.

டெல்லி சம்பவத்திற்கு முன்னரும் இதே நிலைதான், அதற்கு பின்னரும் இதே நிலைதான்.

 

இதற்கு சிறந்த உதாரணமாக அங்கு வெளிநாட்டுப் பெண்ணொருவர்  மானத்தை

பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ஹோட்டலின் அறையிலிருந்து கீழே குதித்து

தனது  காலை உடைத்துக்கொண்டமையை குறிப்பிடலாம்.

 

article-2303287-190FACC6000005DC-232_634

 

எனினும் டெல்லி சம்பவமும் அதன் பின்னரான நாடளாவிய எழுச்சியும்

இந்தியாவில் இடம்பெறும் பாலியல் கொடுமைகள் தொடர்பில் அதிக கவனம்

செலுத்தப்பட காரணமாக அமைந்தன.

 

இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டின.

 

இந்நிலையில் இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இணைந்து பெண்களை

பாலியல் வல்லுறவிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன்  உள்ளாடையொன்றைத்

தயாரித்துள்ளனர்.

 

article-2303287-190FACD5000005DC-21_306x

 

இது வல்லுறவு புரிய முயல்பவர் மீது 3800 கிலோவோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி  நிலைகுலையச் செய்யக்கூடியது.

மார்புப்

பகுதியில் கூடுதலான அழுத்தம் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில்

மின்சாரத்தை இது பாய்ச்சுகின்றது. சுமார் 82 தடவைகள் மின்சாரத்தைப்

பாய்ச்சும் திறன் கொண்டது இவ் உள்ளாடை.

 

எதிரியை நிலையகுலையச் செய்வது மட்டுமல்லாமல்.ஜி.பி.எஸ்

தொழில்நுட்பத்தின் மூலமாக சம்பவ இடம் தொடர்பான தகவலை  பொலிஸ் மற்றும்

குடும்ப உறுப்பினருக்கு தானாக குறுந்தகவலொன்றை அனுப்பிவைக்கும் வசதியையும்

கொண்டுள்ளது.

 

இது Society Harnessing Equipment எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 3 மாணவர்களே இதனை உருவாக்கியுள்ளனர்.

 

பாலியல் வல்லுறவு மட்டுமன்றி பொது இடங்களில் பெண்களிடம் சேஷ்டை விட

முயல்பவர்களுக்கு இதுவொரு சிறந்த தீர்வாக அமையுமென இதன் உருவாக்குனர்கள்

தெரிவிக்கின்றனர்.

                

 

http://www.virakesari.lk/article/technology.php?vid=172

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆடையாவது ஒழுங்கா பெண்களுக்குப் பயன்படுகிறதா பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அளவில் சிறிதாக இருக்கவேண்டுமல்லவா.. வயர்களைத் தூக்கிக்கொண்டு சுற்றுலா போகமுடியுமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஒரு பகுதிக்கு பாதுகாப்புக் கொடுத்தாச்சு என்று வைச்சுக்குள்ளுவமே...

 

கன்னத்தில கிள்ளினா.. இடுப்பில கிள்ளினா.. நெஞ்சுக்கு கீழ.. கழுத்துக்கு மேல.. நோ பாதுகாப்பே..!

 

முடியல்ல.... இந்த மனிசப் பொண்ணுங்களும் மனுசாளும் படுற பாடு..! நினைச்சா சிரிப்புத்தான் வருகுது..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஆடையானாலும் மிகவும் பெரிதான இந்த ஆடையை இன்றைய நாகரீகப் பெண்மணிகள் அணியமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி விவேகானந்தர் சொன்னவர்.. ஆண்கள் மனைவியை தவிர மிச்ச எல்லா பெண்களையும் தாயாகப் பார்க்கனுன்னு. அதை குழந்தையில் இருந்து சொல்லிக் கொடுத்திருந்தா.. இந்த நிலை வந்திருக்குமா..???!

 

பெரியவா சொல்லை எவன் கேட்கிறான்.. இந்தக் காலத்தில..! !! :icon_idea:

நேற்று முன் தினம் PBSல் செய்தில் இந்தியாவின் பாலியல் பலாத்காரங்களை பற்றி பிரஸ்தாபித்தார்கள். தமிழ் சினிமாவில் பலாத்காரம் செய்வது வழமை என்றும், அது ஏற்றுக்கொள்ளபட்ட நடப்பு என்றும் கூறினார்கள். கதற கதற போகும் காட்சிகளை போட்டுக்காட்டிவிட்டு இவற்றுக்கு தமிழில் நல்ல கிராக்கி இருபத்தால் அவற்ற இந்தியில் திருப்ப எடுக்கிறார்கள் என்றும் கூறினார்கள்.

 

பட்டுக்கோட்டையின் "திருடனாய் பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒழிக்க வழியில்லை" என்ற பாடலையும் போட்டு அதுவும் தமிழ் சினிமாதான் என்று கூறி இந்தியில் வரும் என்றும் கூற மாட்டார்களா என்று அங்கலாய்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படின்னா.. ஹிந்திப் பொண்ணுங்க பாலியல் பலாத்காரத்தின் போது கதறுவதில்லைப் போல..! அது அவங்க சுபாவமாக்கும். :):lol:

தமிழ் படங்கள் அங்கும் போய் சக்கை போடு போடத்தொடங்கியபின்னர் பார்த்துப் பழகிக்கொள்கிறங்க!

 

டிஸ்னியின் மொகொலி படத்தில் இப்படி ஒரு வசனம்.

சார்க்கான் என்ற புலி மொகிலிப்பார்த்து கூறுகிறது: "ஏய் ஒட போகிறாயா இல்லையா? எனக்கு ஓடும் போது துரத்திப்பிடித்து சாப்பிடுவதுதான் ஆசையான செயல்."

 

டெல்கி பெண் பஸ்ஸில் தக்கியவர்கள் மீது திரும்ப தாக்க முயன்றதால்த்தான் அந்த சம்பவம் சினிமா சுவை கெட்டு, செய்தியாக மாறியது. தமிழ் படங்கள் திருத்தி எடுத்துவிடும். :icon_mrgreen:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

"சுவாமி விவேகானந்தர் சொன்னவர்.. ஆண்கள் மனைவியை தவிர மிச்ச எல்லா பெண்களையும் தாயாகப் பார்க்கனுன்னு".

 

உண்மைதாங்க. இந்த உண்மையை சுவாமி விவேகானந்தர் சொல்வதற்கு முன்பாகவே கடவுள்கள் செயலில் காட்டியதாக எனக்கு பள்ளிக்கூடத்தில் பாடமாகப் படிப்பித்தவர்கள். முனிவரின் மனைவியை அம்மணமாக நின்று உணவு பரிமாறுமாறு கடவுள்கள் வேண்டிக்கொண்ட வேளையில் அந்தப் பத்தினிப் பெண் கடவுள்களைக் குழந்தைகளாக்கி தான் அம்மணமாக நின்று உணவு பரிமாறினார். அங்கு கடவுள்கள் அந்தப் பெண்ணை தாயாக! அம்மணமாகப் பார்த்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பார்த்தா.....

 

உரியச்சொல்வது போல் தோன்றும்

 

அப்புறம்

ஒரு கல்லில் 2 மாங்காய் என்று பட்டாம்பூச்சி  பறந்ததது என்றால் நம்பத்தானே வேண்டும்

 

எனக்கென்றால்  பிள்ளையையும் கிள்ளி  தொட்டிலையும் ஆட்டி  தூண்டிவிடுவது போலிருக்கு...

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஒரு பகுதிக்கு பாதுகாப்புக் கொடுத்தாச்சு என்று வைச்சுக்குள்ளுவமே...

 

கன்னத்தில கிள்ளினா.. இடுப்பில கிள்ளினா.. நெஞ்சுக்கு கீழ.. கழுத்துக்கு மேல.. நோ பாதுகாப்பே..!

 

முடியல்ல.... இந்த மனிசப் பொண்ணுங்களும் மனுசாளும் படுற பாடு..! நினைச்சா சிரிப்புத்தான் வருகுது..! :lol::D

நீங்கள் குறிப்பிடும் இடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்தில் இல்லை  என்பதை அறியத்தருகின்றோம்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதுகின்ர விலை எவ்வளவு எண்டு தெரியுமா?

 

இதுக்காகவே பெண்ணைக் கடத்திக்கொண்டு போய், உள்ளாடையை மட்டும் களட்டி எடுத்திட்டு, ஆளை விட்டிருவாங்கள்? :o

 

இந்தியாக்காரனா, கொம்பா?  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதுகின்ர விலை எவ்வளவு எண்டு தெரியுமா?

 

இதுக்காகவே பெண்ணைக் கடத்திக்கொண்டு போய், உள்ளாடையை மட்டும் களட்டி எடுத்திட்டு, ஆளை விட்டிருவாங்கள்? :o

 

இந்தியாக்காரனா, கொம்பா?  :icon_idea:

போடுபவர்களுக்கு தவறுதலாக சாக்கடிக்காதா?

 
என்று நான் எழுதியதையே தூக்கிவிட்டார்கள் .
 
நீங்கள் பெண்களின் உள்ளாடையை கழட்டுவது.............. என்று எழுதியிருப்பதை பார்த்தால்.
 
விழுந்து விழுந்து சிரிக்கிறேன் !
 
மட்டுறுத்தினர்களை சும்மாவே விட மாட்டீங்களா?

போடுபவர்களுக்கு தவறுதலாக சாக்கடிக்காதா?

 
என்று நான் எழுதியதையே தூக்கிவிட்டார்கள் .
 
நீங்கள் பெண்களின் உள்ளாடையை கழட்டுவது.............. என்று எழுதியிருப்பதை பார்த்தால்.
 
விழுந்து விழுந்து சிரிக்கிறேன் !
 
மட்டுறுத்தினர்களை சும்மாவே விட மாட்டீங்களா?

புங்கையிலை பொறாமைப் படுகிறீர்கள் போலிருக்கு.  :D

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வயர் எட்டி பார்த்தாலே கானுமே தற்கொலை குண்டு தாரி என்று ஆமி பொலிஸ் எல்லாரும் சேர்ந்து தனிய ரூட் போடுவானுங்களே தேவையா இது?

இதற்கெல்லாம் ஒரேவழி தன் மீது கை வைப்பவனை அந்த பெண் உடனே கத்தியாலோ வேறு ஆயுதத்தாலோ உடனே தாக்குவது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெல்லாம் ஒரேவழி தன் மீது கை வைப்பவனை அந்த பெண் உடனே கத்தியாலோ வேறு ஆயுதத்தாலோ உடனே தாக்குவது தான்.

 

இந்தாள் வேற

நிலமை புரியாமல்............???

 

வாறவங்கள்  துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் ஐயா துப்பாக்கி.............. :D

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.