Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த உறவை எப்படி அழைப்பீங்க..?! அவங்க அவங்க விருப்பம் போல.. அமைவதே வாழ்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பலர் துணிவின்றி சமூக பயம் கொண்டு தம் வாழ்வை வீணடிக்கின்றனர். அவர்கள் துணிவுடன் தம் வாழ்வை வாழ்கின்றனர். இதற்குப் பெயர் தேவையே இல்லை. அதை தவறு ஏன்னு கூறவோ கொச்சைப் படுத்தவோ முடியாது. ஏனெனில் ஒருவரின் வாழ்வை மற்றவர்கள் தீர்மானிப்பதும் விமர்சிப்பதும் கூடத் தவறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுக்கு என்ன பெயர் என்று ஊர் கேட்டால்..???! போங்கடா நீங்களும் உங்கட கேள்வியும் என்று சொல்வது தான் சரியான பதில்..??!  இல்ல my road my car  my petrol.. என்று சொல்ல வேண்டியது தானா..??! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெரிதாக எதுவும் சொல்லவரவில்லை

ஏனெனில் கமல் பற்றி ஏற்கனவே தெரிந்தபடியாலா???

ஆனால் வசதி வயதிருந்த  நேரத்தில் தெரிந்தோ தெரியாமலோ எல்லாவற்றையும்  தூக்கி  எறிந்தவர்கள் அல்லது இழந்தவர்கள்

தற்பொழுது இவ்வாறு ஒன்று கூடி சந்தோசமாக வாழ்கிறார்கள் என்றால் தவறுகள் தொடராதிருக்க இது வழி வகுக்குமென்றால்...

இதில் எமக்கென்ன  இடைஞ்சல்???

  • கருத்துக்கள உறவுகள்

நம் செயல் இன்னொருவரைக் காயப்படுத்துமானால் அது தவறு.. இவர்கள் அதைச் செய்யவில்லை என நினைக்கிறேன்..! அவ்வகையில் பாராட்டுக்கு உரியவர்களே..

இப்படி வாழ்வதில் தவறே இல்லை.  தமக்கு விருப்பமான வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள்.   இதில் கட்டாயம் இல்லை.  போலித்தனம் இல்லை.  இதுதான் உண்மையான வாழ்வு.

மற்றவர்களைப் பாதிக்காத மட்டில் இது அவரவர் விருப்பம்.

ஆனால், இது உங்களது குடும்பங்களுக்குள் நடக்கும்போது, ஏற்றுக் கொள்வீர்களா?

ஆனால், இது உங்களது குடும்பங்களுக்குள் நடக்கும்போது, ஏற்றுக் கொள்வீர்களா?

தனியாக இருப்பவர்கள் இப்படி சேர்ந்து வாழ்வதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அல்லது வீண் பிரச்சனையில்தான் முடியும்.

உறவுக்குள் இதே போல இரண்டு  நடந்தது. ஒன்று பிரச்சனையில்லாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இன்னுமொன்றை கஷ்டப்பட்டு பிரித்து விட்டார்கள். அதன் பிரச்சனை இன்னும் ஓயவில்லை.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரகளது வாழ்க்கையில் யதாரத்தம் இருக்கிறது உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டுள்ளாரகள்.  

என்னைப் பொறுத்தவரை தவறு கற்பிக்கும் உரிமை இன்னொருவருக்கு இல்லை அவரகளுக்குப் பிடித்த வாழ்வை அவரகள் வாழ்கிறாரகள். மேலும் அதே மாதிரி மற்றவரகளை வாழும்படி அவரகள் கேட்கவுமில்லை வற்புறுத்தவுமில்லை.

எம்மால் முடிந்தால் ஏற்றுக் கொள்வோம் முடியாவிட்டால் விமரசிக்காமல் விலத்தி நிற்பது தான் நாகரீகம். உண்மையைப் பேசுவோமானால் நெடுக்ஸ் கூறியது போல், It is their car and their petrol. மொத்தத்தில் அது அவரகளது தேரவும் அவரகளது தனி மனித உரிமையும் சுதந்திரமும் ஆகும்

இந்த உறவுக்கு என்ன பெயர் என்று ஊர் கேட்டால்..???! போங்கடா நீங்களும் உங்கட கேள்வியும் என்று சொல்வது தான் சரியான பதில்..??!  இல்ல my road my car  my petrol.. என்று சொல்ல வேண்டியது தானா..??! :lol:

மற்றவரின் காரிற்கு எனது பெற்றோலை ஊற்றி ஓட புறப்பட்டால்தான் தப்பு. :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் சிந்தனைகள்  எப்போதும் சமுதாயக் கட்டுப்பாடுகளை

 உடைத்தெறிவதாக இருக்கும். அவருடைய சிந்தனையில் கௌதமியும் 

சங்கமித்திருப்பது கமலின் சிந்தனைக்கு வலுவூட்டுகின்றன. 

கணவன் மனைவியாக வாழ்வதுதான் வாழ்க்கையா

கமலும் கௌதமியும் சேர்ந்து வாழ்வதும் வாழ்க்கைதான் :D

உறவுகளின் கருத்துக்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இனிவரும் சந்ததியாவது தங்களுக்குப் பிடித்தவகையில் பிடித்தமானவர்களுடன் இணைந்து வாழட்டும்.  ஆனால், அதற்காக அடிக்கடி மாற்றுவது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல.

எதிர்காலத்தில் இவ்வாறான உறவுகள் அதிகரிப்பதற்குத்தான் அதிகம் வாய்ப்புகள். இது அதிகரிக்கும் போது, ஆண் பெண் உறவு என்பது இன்னும் அதிக வலுவுள்ளதாகவும், ஒருவரை ஒருவர் மதிக்கக் கூடியதாகவும் அமையும் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 இது கமல், கௌதமியின் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும்...
கமலுக்கு மூன்றாவது துணையாக இருக்க, கௌதமி எப்படித் துணிந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது.
(ஏற்கெனவே கமல் வாணியையும், சரிகாவையும் விவாகரத்து செய்தவர்.) 

 இது கமல், கௌதமியின் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும்...

கமலுக்கு மூன்றாவது துணையாக இருக்க, கௌதமி எப்படித் துணிந்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

(ஏற்கெனவே கமல் வாணியையும், சரிகாவையும் விவாகரத்து செய்தவர்.) 

கௌதமிக்குத் தேவை தனக்கேற்ற ஒரு துணையே தவிர, அவரின் முற்கால வாழ்க்கையல்ல.  கமல் தனது அன்பைக் கொடுக்கும்வரை கௌதமி கமலோடு மனச்சஞ்சலமின்றி வாழுவார்.  கௌதமியோடுதான் கமலின் பிள்ளைகளும் இருந்தார்கள்.  அவர்களது சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிடாதவரையில் அவர்களுக்குள் பிரச்சனைகள் வரச் சந்தர்ப்பம் இல்லை.

கௌதமி ஊர் என்ன சொல்லும் என்று கவலைப் படமால்.... தனது துணையை தேடிக் கொண்ட துணிச்சல் சாதாரணமானது அல்ல. சரியான துணிச்சலான பெண். பாராட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கமல், கௌதமி இருவரது சேர்ந்து வாழ்தலில், எந்தத் தவறும் இல்லை!

எனினும், சினிமாக் கதாநாயகர்களை, இலட்சியபுருசர்களாக வரித்திருக்கும், தமிழ்நாட்டுச் சினிமா ரசிகர்களுக்கு, இவர் என்ன செய்தியை விட்டுச் செல்லுகிறார், என்பது தான் இங்கு முக்கியமானது!

இவரது செயல்கள், சமுதாயத்தில் ஒரு குழப்பத்தை, நிச்சயமாக ஏற்படுத்தும்!

வாணியுடன், நடந்த முதலாவது திருமணத்தில், பிராமணராக, வந்து திருமணம் செய்துகாட்டினார்! அந்தக்காலத்தில், இவரை உதாரண புருசராக எல்லோரும் புகழ்ந்தார்கள்.

சரி, முதலாவது சரிவரவில்லை. இரண்டாவதும் சரிவரவில்லை!

பிரச்சனை எவரில் உள்ளது என்பது, அவரது தனிப்பட்ட விடயம்.

ஆனால், இதுவே பொது நீதியாக வரும்போது, பெண்ணினம் சுரண்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். ஒரு படித்த, பண்பட்ட தலைமுறையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர்களது முடிவுகளை, அவர்களே எடுக்கின்றார்கள்.

ஆனால், பாமர மட்டத்தில் உள்ள ஒருவன், உன்னால, என்னாடி பண்ணமுடியும்? கமல் சாரே, சரின்னு சொல்லிட்டாரே? என்று கேட்டால், படிப்பறிவில்லாத பெண்களுக்குத் தாய்வீடு தவிர வேறு இடம் கிடையாது, என்பது தான் எனது கருத்து! :D

  • கருத்துக்கள உறவுகள்

------

ரஜனி ரசிகர்கள் ஒரு திருமணத்துடன் நிறுத்தி விடுவார்கள், கமல் ரசிகர்கள் தங்கள் தலைவன் வழியில்... வேண்டுமென்றே முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, அடுத்ததுக்கு தாவ சந்தர்ப்பம் உண்டு,  யூவார்.... ஆனர். :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு மனங்கள் ஒத்து உண்மையான புரிந்துணரவுடன் இருவர சேரந்து வாழ்வதில் ஊருக்காகவும் உலகுக்காகவும் சம்பிரதாயத்திற்காகவும் பாரம்பரியத்திற்காகவும் குறை காண விளைதல் தவறான விடயமாகும்.

ஒரு பெண்ணுக்கு தேவை தான் தன் மனதில் துணை என்று வரித்திருப்பவனின் முழுமையான அன்பு தனக்கு மட்டுமே உரித்தானது என்ற உறுதிப்பாடாகும். அந்த உறுதிப்பாடு கிடைக்கும் பட்சத்தில் எந்த ஒரு பெண்ணும் தன் துணைவனின் இதர குறைகளைப் பெரிது படுத்துவதில்லை. 

இதுவே தற்கால யதாரத்தமாகவும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பலர் துணிவின்றி சமூக பயம் கொண்டு தம் வாழ்வை வீணடிக்கின்றனர். அவர்கள் துணிவுடன் தம் வாழ்வை வாழ்கின்றனர். இதற்குப் பெயர் தேவையே இல்லை. அதை தவறு ஏன்னு கூறவோ கொச்சைப் படுத்தவோ முடியாது. ஏனெனில் ஒருவரின் வாழ்வை மற்றவர்கள் தீர்மானிப்பதும் விமர்சிப்பதும் கூடத் தவறு.

சமூகம் என்றால் என்ன? விலங்குகளாக திரிந்த மனிதன் ஏன் சமூகம் என்ற ஒன்றை கட்டி எழுப்பினான்? போன்ற கேள்விகளுக்கு கொஞ்சம் விளக்கம் தேவை.

துணிவு என்பது ? என்ன?
டெல்லியில் மாணவியை பல்த்தாகறம் செய்தவர்களும் சமூக பயமின்றி துணிவுடந்தான் செய்தார்கள்.
 
இவர்களுடைய வாழ்வில் இது நடக்கிறது என்பதற்காக.........
இதுதான் சரி என்றாகிவிடுமா?
 
நானும் ஒரு பெண்ணும்  திருமணம் செய்ய விரும்பும்போது ஏன் அரசில் அதை பதிவு செய்யவேண்டும்?
அப்போ அவையெல்லாம் வெறும் பித்தலாடமா?
 
உங்களுடைய கருத்தில் நான் எந்த தவறையும் காணவில்லை.
(இந்த கருத்தில் இருக்கும் சில வரிகளை மேற்கோள் காட்டவே இதை தெரிவு செய்தேன்). அதே நேரம் சரி என்று இதுவரையில் இருந்தது தவறா?
அதுவும் சரி ......... இதுவும் சரி என்பது பொருந்தவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு நிற்கிறது.
 
இதுவரையில் இவரை நம்பிய பெண் இப்போது ............. இவர்களுக்கு கிடைக்கும் எந்த சுகமும் இன்றி இருக்கிறாள். இவர்களுக்கு சுகமாக இருக்கிறது.
அவளை பற்றி இந்த இருவரும் சொல்ல நினைப்பது என்ன?
 
கலாச்சார சீரழிவு என்பது என்ன?
 
யார்க்கும் இவர்கள் தீங்கு இழைக்கவில்லை என்று எந்த அடிப்படையில் கருத்தை முன்வைப்பது?
இவர்களுடைய உறவு பிரிவினால் வந்ததா?
உறவு வந்ததால் பிரிவு வந்ததா?
இது யாருக்கு தெரியும்?

குழப்பிப்போட்டீர்களப்பா

இதற்கு முன் எழுதியதை வாசித்து தெளிவு வருகுது

நானும் கொஞ்சம் மாறணும்   போல என மாறிவருகையில்............

குழப்பிப்போட்டீர்களப்பா

இதுவும் சரிதானே...............

முன்னோர்கள் எல்லாம் முட்டாள்களா?

சரியான கேள்வி

கமல் சரிகாவுடன் சேர்ந்து வாழும் போதே  கெளவுதமியுடன் உறவை வைத்துள்ளார் அது சட்டப்படியும் குற்றம்  கலாச்சார பார்க்கிறவர்களின் கண்ணுக்கும் குற்றமே. மற்றும் படி யார் யாரோடு போனால் நமக்கு என்ன என்ற கொள்கைதான்  உடலுக்கு ஆரோக்கியம். :D

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம் என்றால் என்ன? விலங்குகளாக திரிந்த மனிதன் ஏன் சமூகம் என்ற ஒன்றை கட்டி எழுப்பினான்? போன்ற கேள்விகளுக்கு கொஞ்சம் விளக்கம் தேவை.

துணிவு என்பது ? என்ன?
டெல்லியில் மாணவியை பல்த்தாகறம் செய்தவர்களும் சமூக பயமின்றி துணிவுடந்தான் செய்தார்கள்.
 
இவர்களுடைய வாழ்வில் இது நடக்கிறது என்பதற்காக.........
இதுதான் சரி என்றாகிவிடுமா?
 
நானும் ஒரு பெண்ணும்  திருமணம் செய்ய விரும்பும்போது ஏன் அரசில் அதை பதிவு செய்யவேண்டும்?
அப்போ அவையெல்லாம் வெறும் பித்தலாடமா?
 
உங்களுடைய கருத்தில் நான் எந்த தவறையும் காணவில்லை.
(இந்த கருத்தில் இருக்கும் சில வரிகளை மேற்கோள் காட்டவே இதை தெரிவு செய்தேன்). அதே நேரம் சரி என்று இதுவரையில் இருந்தது தவறா?
அதுவும் சரி ......... இதுவும் சரி என்பது பொருந்தவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு நிற்கிறது.
 
இதுவரையில் இவரை நம்பிய பெண் இப்போது ............. இவர்களுக்கு கிடைக்கும் எந்த சுகமும் இன்றி இருக்கிறாள். இவர்களுக்கு சுகமாக இருக்கிறது.
அவளை பற்றி இந்த இருவரும் சொல்ல நினைப்பது என்ன?
 
கலாச்சார சீரழிவு என்பது என்ன?
 
யார்க்கும் இவர்கள் தீங்கு இழைக்கவில்லை என்று எந்த அடிப்படையில் கருத்தை முன்வைப்பது?
இவர்களுடைய உறவு பிரிவினால் வந்ததா?
உறவு வந்ததால் பிரிவு வந்ததா?
இது யாருக்கு தெரியும்?

சபாஸ் மருதங்கேணி...சரியாக சொன்ன்னீர்கள்..எப்படியும் வாழலாம் என்று இருந்திருந்தால் மனித இனம் இப்பவும் விலங்குபோலவே வாழ்ந்திருக்கும்..சமூகமாக வாழத்தொடங்கிய போதுதான் மனித இனம்மெதுமெதுவாக நாகரீகமடையத்தொடங்கியது..சிந்திக்க தொடங்கியது..தமக்கு தாமேபோட்டுக்கொண்ட மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உருவாக்கிய பலவிடயங்கள் கட்டுப்பாடுகள்தான் மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்தி நாகரீகத்தால் முன்னேறிய விலங்குகள் ஆக்கியது...

  • கருத்துக்கள உறவுகள்

பெரிதாக எதுவும் சொல்லவரவில்லை

ஏனெனில் கமல் பற்றி ஏற்கனவே தெரிந்தபடியாலா???

ஆனால் வசதி வயதிருந்த  நேரத்தில் தெரிந்தோ தெரியாமலோ எல்லாவற்றையும்  தூக்கி  எறிந்தவர்கள் அல்லது இழந்தவர்கள்

தற்பொழுது இவ்வாறு ஒன்று கூடி சந்தோசமாக வாழ்கிறார்கள் என்றால் தவறுகள் தொடராதிருக்க இது வழி வகுக்குமென்றால்...

இதில் எமக்கென்ன  இடைஞ்சல்???

கமல் சரிகாவுடன் சேர்ந்து வாழும் போதே  கெளவுதமியுடன் உறவை வைத்துள்ளார் அது சட்டப்படியும் குற்றம்  கலாச்சார பார்க்கிறவர்களின் கண்ணுக்கும் குற்றமே. மற்றும் படி யார் யாரோடு போனால் நமக்கு என்ன என்ற கொள்கைதான்  உடலுக்கு ஆரோக்கியம். :D

இதைத்தானே  ராசா நானும் மேலே எழுதியுள்ளேன்.

சபாஸ் மருதங்கேணி...சரியாக சொன்ன்னீர்கள்..எப்படியும் வாழலாம் என்று இருந்திருந்தால் மனித இனம் இப்பவும் விலங்குபோலவே வாழ்ந்திருக்கும்..சமூகமாக வாழத்தொடங்கிய போதுதான் மனித இனம்மெதுமெதுவாக நாகரீகமடையத்தொடங்கியது..சிந்திக்க தொடங்கியது..தமக்கு தாமேபோட்டுக்கொண்ட மற்றவர்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உருவாக்கிய பலவிடயங்கள் கட்டுப்பாடுகள்தான் மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்தி நாகரீகத்தால் முன்னேறிய விலங்குகள் ஆக்கியது...

என்னப்பா

மீண்டும் குழப்புகிறாய்???

எல்லாம் கிடைக்குது

கல்யாணம் எதுக்காக என்று எங்கோ கேட்ட மாதிரி   ஞாபகம்???? :lol:  :D  :D  :D

(ஒருவேளை  உங்களுக்கு என்னைவிட  தெளிவு வந்திட்டுதோ?)

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.