Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பூ......

Featured Replies

சும்மா சொல்லக் கூடாது.

நம்ம மூளை சித்த நேரம் சும்மா இருக்க மாட்டேங்குது. எதையாச்சும் பூட்டு புடுங்கிக் கிட்டு இருக்குது.

நம்மளுக்கு புரியாத சங்கதியை கேள்வியாக் கேக்கப் போறேனுங்க.

நீங்க தான் படிச்சவளாச்சே! பதிலைத் தேடிச் சொல்லுங்கப்பூ....... :D

சரி சித்த நேரத்திலை கேள்வியோடை வாறனுங்க......

  • தொடங்கியவர்

இந்த ஹை வே ஹைவே எண்ணு சொல்றாங்களே! அங்கிட்டுஎப்ப பாறு  traffic, traffic எண்ணு சொல்லி வாகனம் எல்லாம் ஊந்துகிட்டே போகுதுங்க....

நம்ம் கேள்வி என்னான்னா! றொம்ப வாகனங்கள் போகட்டும். பிரச்சினை கிடையாது. எல்லா வாகனமும் 100 கி.மீ வேகத்திலை போய்க்கிட்டு இருந்தா எப்படீங்க traffic ஆகும். சரி ஒரு வாகனம் 80 இலை போய்க்கிட்டிருந்தாலும் பின்னாலை போற வாகனங்கள் 80 கிலோமீட்டர் வேகத்திலை போகணுமில்லோ! எதனாலை எல்லா வாகனம் 20 கி.மீ வேகத்திலை போக வேண்டியதா இருக்குதுங்க.

சரி யாராவது விசயம் தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க.....

நம்ம போக்குவரத்து நைனா இருந்தா சிம்பிளா பதில் சொல்லுவாறு.... பாப்போம்......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாகனம் ஒரேயடியா ஓடிக்கொண்டிருந்தா நீங்கள் சொல்லும் 100, 80 இதெல்லாம் சரிதான். ஆனால் இடையில் ஒரு தடை ஏற்பட்டு  ஒவ்வொரு வாகன ஓட்டுனரும் நிறுத்தி மீண்டும் ஓடத்தொடங்கும்போது சிலர் விரைவாகவும் பலர் மெதுவாகவுமே வேகமெடுபர். அப்படி பலர் குறைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக வேகமேடுப்பது குறைந்து 20 இல் வந்து நிக்கும். அதைவிடக் குறைய ஓட முடியாதெல்லோ மணிவாசகன். என் சிற்றறிவில் பட்டது இது. இதற்காகச் சிரிக்க வேண்டாம். நானும் சரியான பதிலை எதிர்பார்க்கிறேன். என்போன்றவர்களுக்கும்  விளங்கும்படியாக தெளிவான பதிலை கூறுங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்க‌ள் க‌னேடிய‌ (குறிப்பாக‌ ஒன்ராறியோ மாகாண‌) வாக‌ன‌மோட்டிக‌ளின் "எருமை மாட்டுக்" குண‌த்தினால் ஏற்ப‌டும் பிர‌ச்சினை என‌ நினைக்கிறேன். பெருந்தெருவில் வாக‌ன‌ நெருக்க‌டி ஏற்ப‌டுவ‌து பெரும்பாலும் போக்குவ‌ர‌த்துட‌ன் வாக‌ன‌ங்க‌ள் சேரும் போது (merging) . இது புதிதாக‌ பெருந்தெருவுட‌ன் இணைவ‌தாக‌வோ அல்ல‌து முடிவ‌டையும் வ‌ல‌து/இட‌து ஒழுங்கைக‌ளில் இருந்து ந‌டு ஒழுங்கைக்கு மாறுவ‌தாக‌வோ இருக்க‌லாம். இப்ப‌டி இணையும் வாக‌ன‌ங்க‌ளுக்கு ம‌ற்றைய‌ வாக‌ன‌ங்க‌ள் வேக‌த்தைக் குறைத்து இணைய‌ அனும‌தித்தால் கொஞ்ச‌ நேர‌ மெதுவாத‌லுக்குப் பிற‌கு போக்கு வ‌ர‌த்து நெரிச‌லின்றி ந‌க‌ரும். இட‌ம் கொடுக்கா விட்டால், இணைய‌ முய‌லும் வாக‌ன‌ங்க‌ள் வ‌ரிசை க‌ட்டி நின்று ஒவ்வொன்றாக‌ இணைய‌ வேண்டி ஏற்ப‌டும். இப்போது 0 வேக‌த்தில் ந‌க‌ரும் வாக‌ங்க‌ளின் பின்னால் நீங்க‌ள் 20 இலும் ப‌த்திலும் ந‌க‌ர‌ வேண்டியிருக்கும்! இது தான் என‌க்கு விள‌ங்கின‌து!

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரினின் கருத்துதான்.. ஆனால் வாகனம் ஓட்டிகளை எல்லா நேரங்களிலும் குறை சொல்ல முடியாது.. வாகனங்கள் பெருந்தெருக்களில் சேரும்போது (merging) கிட்டத்தட்ட 300மீட்டர் தூரமே வேகம் எடுப்பதற்குக் கிடைக்கும்.. அதிகமான வாகன நெரிசல் உள்ளபோது ஏற்கனவே பெருந்தெருவில் போய்க்கொண்டிருப்பவர்கள் சேருபவர்களை உள்ளடக்க வேண்டும் (yielding) அதனால் அவர்கள் வேகத்தைக் குறைக்கவும், படிப்படியாக ஒட்டுமொத்த வேகமும் குறைந்துவிடுகிறது..

பொதுவாக இரண்டாவது பாதையில் சென்றுகொண்டிருந்தால் புதிதாகச் சேருபவர்களுக்கு சிக்கல் இராது.. ஆனால் அவசரக்குடுக்கை ஓட்டுனர்களுக்கு பொறுமை கம்மி.. :D

சிங்கப்பூரில் சேரும் பாதை முடிவுறுவதில்லை.. ஆகவே பெருந்தெருவில் உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக அதே பாதையில் போய்க்கொண்டிருக்கலாம்.. ஆனால் அடுத்த வெளியேறும் பாதையாக அந்தப் பாதை மாறிவிடும் (Exit). அவர் ஏற்கனவே பொதுத்தெருவில் சேரவில்லையானால் வெளியேறவேண்டியதுதான்.

இது உங்க‌ள் க‌னேடிய‌ (குறிப்பாக‌ ஒன்ராறியோ மாகாண‌) வாக‌ன‌மோட்டிக‌ளின் "எருமை மாட்டுக்" குண‌த்தினால் ஏற்ப‌டும் பிர‌ச்சினை என‌ நினைக்கிறேன். பெருந்தெருவில் வாக‌ன‌ நெருக்க‌டி ஏற்ப‌டுவ‌து பெரும்பாலும் போக்குவ‌ர‌த்துட‌ன் வாக‌ன‌ங்க‌ள் சேரும் போது (merging) . இது புதிதாக‌ பெருந்தெருவுட‌ன் இணைவ‌தாக‌வோ அல்ல‌து முடிவ‌டையும் வ‌ல‌து/இட‌து ஒழுங்கைக‌ளில் இருந்து ந‌டு ஒழுங்கைக்கு மாறுவ‌தாக‌வோ இருக்க‌லாம். இப்ப‌டி இணையும் வாக‌ன‌ங்க‌ளுக்கு ம‌ற்றைய‌ வாக‌ன‌ங்க‌ள் வேக‌த்தைக் குறைத்து இணைய‌ அனும‌தித்தால் கொஞ்ச‌ நேர‌ மெதுவாத‌லுக்குப் பிற‌கு போக்கு வ‌ர‌த்து நெரிச‌லின்றி ந‌க‌ரும். இட‌ம் கொடுக்கா விட்டால், இணைய‌ முய‌லும் வாக‌ன‌ங்க‌ள் வ‌ரிசை க‌ட்டி நின்று ஒவ்வொன்றாக‌ இணைய‌ வேண்டி ஏற்ப‌டும். இப்போது 0 வேக‌த்தில் ந‌க‌ரும் வாக‌ங்க‌ளின் பின்னால் நீங்க‌ள் 20 இலும் ப‌த்திலும் ந‌க‌ர‌ வேண்டியிருக்கும்! இது தான் என‌க்கு விள‌ங்கின‌து!

யாரிங்கே கனடிய வாகனமோட்டிகளை எருமை மாடு என்று சொன்னது? <_<

இங்கு புதிதாக Merging ஆகும் போது (முக்கியமாக சாதாரண தெருவில் இருந்து பெருந்தெருவுக்குள் மாறும் போது) அநேகானோர் தங்கள் வாகனத்தின் வேகத்தினை குறைத்து வழிவிடுவர். இடையில் ஒழுங்கை மாறும் போதும், குறிப்பிட்ட கால அவகாசத்துடன் சமிக்ஞை விளக்குகளை எரிய விட்டால் அநேகமானோர் விட்டுக் கொடுப்பர் அத்துடன் சரியாக கவனித்து கணித்து திட்டமிடலுடன் ஒழுங்கை மாறுபவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை (நான் ஒரு ஊர்சுத்தி...)

எனக்குத் தெரிந்து 20 கி.மி வேகத்தில் செலுத்த வேண்டிய நிலை வருவது ஒன்றில் வாகன விபத்து அல்லது, சாலைகளின் திருத்த வேலைகளுக்காக பகுதியாகவோ, முழுமையாகவோ  மூடும் போதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வீதியின் கொள்ளளவுடன் தொடர்புள்ள விடயம்.

100 கார்கள் ஓடிக்கொண்டிருப்பதற்கும் 1லட்சம் கார்கள் ஓடிக்கொண்டிருப்பதற்குமான எச்சரிக்கையுடனான  முன்னகர்வுகளே இதைத்தீர்மானிக்கின்றன.

உதாரணமாக தண்ணீருடன்தான் இதை ஒப்பிட்டு வீதிகளில்   போக்குவரத்து நேரத்தைக்கணக்கிட்டு அறிவிப்பார்கள்.

ஓரு ஓடையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இடைஞ்சல் இல்லாதபோது அது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகரும்

அதுவே பல பக்கத்தாலும் உள்ளே வரும் நீர் அதிகரித்து வெளியேறுதல் குறையும்போது அதன்வேகம் குறைவடைந்து தேங்குதல் நிலை ஏற்படும்.

அதுவே இங்கும் என்பது எனது கணிப்பு.

  • தொடங்கியவர்

ஆத்தாடீடீடீடீ! விசயம் தெரிஞ்சவங்க எம்புட்டுப் பேர் இருக்கீக..

றொம்ப சந்தோசமுங்க..... :lol:

ஹைவேயின் வேகத்தை விட றாம்பின் வேகம் குறைய(100:40 ). ஓரிரு வாகனங்கள் கைவேயில் போய்க்கொண்டிருந்தால் றாம் வாகனங்களால் அவர்களின் வேகம் பாதிக்கப்படாது.  ஒழுங்கை மாறி சென்றுவிடுவார்கள் ஆனால் தொகையான வாகனங்கள் உள்நுளையும் போது நிற்பாடி இடம் கொடுத்துதான் போக முடிகிறது. Yield சட்டம் இருந்தாலும் மந்த கதியில் உள் நுளைந்த வகனத்தின் வேகத்திற்கு அமைவாக பின்னால் வந்த வாகனம் நடந்துகொள்ள வேண்டும்.

இது வாகனங்கள் ஹைவேயை விட்டு வெளியேறும் போதும் இது ஓரளவு நடப்பதுதான். ஒருவாகனம் றாம்பிக்குள் போக தயார் படுத்தினால் மற்றயவை ஒழுங்கை மாறி சென்று வேகத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஆனால் பல வாகங்கள் வெளியேறும் போது மந்த கதிக்கு மாறுவது தவிர்க்க முடியாததாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரிங்கே கனடிய வாகனமோட்டிகளை எருமை மாடு என்று சொன்னது? <_<

ம‌ன‌ம் வ‌ருந்தி ம‌ன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..... :(  எருமை மாடுக‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌மைக்காக‌ எருமை மாடுக‌ளிட‌ம்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ன‌ம் வ‌ருந்தி ம‌ன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..... :(  எருமை மாடுக‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌மைக்காக‌ எருமை மாடுக‌ளிட‌ம்! :icon_mrgreen:

நான் ரொராண்டோவில் இருந்தாலும் ஜஸ்ரினின் கருத்துடன் உடன்படுகிறேன்..! :D மகா மட்டமான எருமைமாட்டுக்கு கூட்டமெல்லாம் இங்கதான் இருக்கு.. எல்லாம் புதிய குடிவரவாளர்கள்..! அரைகுறை புரிதலுடன் ஓட்டி இரத்த அழுத்தத்தைக் கூட்டுகிறார்கள்..!

Edited by இசைக்கலைஞன்

ம‌ன‌ம் வ‌ருந்தி ம‌ன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..... :(  எருமை மாடுக‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌மைக்காக‌ எருமை மாடுக‌ளிட‌ம்! :icon_mrgreen:

என்றாவது பக்கத்து நாட்டுக்கு வரத்தானே வேண்டும் மகனே... அப்ப கென்ரயினர்களை நடு வீதியில் குறுக்காக விட்டு block பண்ணி ஒரு வழி பண்ணுவம்.

நான் ரொராண்டோவில் இருந்தாலும் ஜஸ்ரினின் கருத்துடன் உடன்படுகிறேன்..! :D மகா மட்டமான எருமைமாட்டுக்கு கூட்டமெல்லாம் இங்கதான் இருக்கு.. எல்லாம் புதிய குடிவரவாளர்கள்..! அரைகுறை புரிதலுடன் ஓட்டி இரத்த அழுத்தத்தைக் கூட்டுகிறார்கள்..!

கனடாவின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும், எங்காவது பத்து பதினைந்து பேர் வீதியில் போகும் காஞ்ச  ஊரில் இருந்து செல்வச் செழிப்பு இருக்கின்ற சிங்கார ரொரன்டோ வுக்கு வந்தால் இப்படித்தான் சொல்லச் சொல்லும்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சீனர்கள் வாகனம் ஓட்டினால் பயம்

ஒன்றில் நன்றாக இடம் விட்டு நாலைந்து கார்களை  இடையில் விட்டு பின்னுக்கு செல்வேன்

அல்லது வேகத்தை அதிகப்படுத்தி  மறைந்து விடுவேன் :(

  • கருத்துக்கள உறவுகள்

என்றாவது பக்கத்து நாட்டுக்கு வரத்தானே வேண்டும் மகனே... அப்ப கென்ரயினர்களை நடு வீதியில் குறுக்காக விட்டு block பண்ணி ஒரு வழி பண்ணுவம்.

என்றாவ‌து என்ன‌, இந்த‌ ஜூலை மாத‌ம் றோல்சும் மோத‌க‌மும் தின்ன‌ வ‌ருகிறேன்! க‌ல‌ண்ட‌ரில் நாள் ஒதுக்கி வையுங்க‌ப்பு!

என்றாவ‌து என்ன‌, இந்த‌ ஜூலை மாத‌ம் றோல்சும் மோத‌க‌மும் தின்ன‌ வ‌ருகிறேன்! க‌ல‌ண்ட‌ரில் நாள் ஒதுக்கி வையுங்க‌ப்பு!

ஓ... நல்ல விசயம்... வாய்ப்பனும், பனங்காய்ப் பணியாரமும் கூடவே சேர்த்து வாங்கி வைக்கிறன் :)

  • தொடங்கியவர்

நம்மளுக்கும் ஆங்கில பாசைக்கும் எட்டாத பொருத்தமுங்க. 

நாசமாப் போன பாசை வாய்க்குள்ள பூராவே மாட்டேன்னு அடம்புடிக்குதுங்க. இதை மட்டும்தெளிவாக சொல்லித் தந்தீங்கன்னா மிச்சத்தை நான் புடிச்சிடுவேன்க.

cut  ன்னு எழுதினா கட் எங்கிறாங்க... but ன்னு எழுதினா பட் எங்கிறாங்க.  nut ன்னு எழுதினா நட் எங்கிறாங்க. ஆனா Put ன்னு எழுதினா மட்டும் ஏங்க புட் எங்கிறாங்க.......

என் கேள்வி அம்புட்டுத் தான்... 

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

Army ஆமை என்று தானே சொல்ல வேண்டும்.ஏன் எல்லோரும் ஆமி என்று சொல்லினம் :unsure:

இங்கிலீசை விடுங்கப்பு நான் தமிழில் கேட்கிறேன். தமிழ் ஒரு phonetic language. அதாவது ஒவ்வொரு சொல்லையும் எழுத்துக்கூட்டி வாசித்தால் அந்த சொல்லு வரும்.

உதாரணமாக எ ..ரு ..மை ..எருமை என்று வரும்.

இது கணினியில் text to speech முறைக்கு இலகுவானது. ஏனைய மொழிக்காரர் தமிழ் படிக்கவும் இலகுவானது.

சரி என்னுடைய கேள்வி தமிழில் ஒரே ஒரு சொல் இப்படி phonetic முறைப்படி சொல்லுவதில்லை அது என்ன சொல்.?

நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்திய சொல் தான். 

Edited by பகலவன்

தமிழில் பல சொல்கள் எழுத்தின் சத்தத்தை பின் பற்றவேண்டிய தேவையை கைவிடுகின்றன.

தமிழில் ஹ,ஷ, tha இல்லை. ஆனால் சொல்லைp பொறுத்து பாவிக்கப்படும். பிரபல சொல் "காகம்". இதன் சரியான உச்சரிப்பு "காஹம்".

தமிழில் tha இல்லை "த" மட்டும் இருக்கு. ஆனால் "நாதம்" நாthaம் என்று உச்சரிக்கப்படும். முன் வரும் எழுத்துகளை பொறுத்து நடு எழுத்தின் சத்தம் மாறும்.

மேலும் சொற்pபுணர்ச்சி வரும் சத்தங்கள் எழுத்து வடிவிலிருந்து கடுமையாக மாறும். இது தமிழ் பேசப்பட்டு வந்த மொழி என்பதும், எழுத்து வடிவுக்கு மாற்றும் போது சில சங்கடங்களை கண்டது என்பதும் இதனால் சொற்ப்புணர்சி விதிகள், பேசபட்டு வந்த மொழியை ஆதரிக்க சில நுணுக்கங்களை ஏற்க வேண்டி வந்தது என்பதும் உணராலாம்.

ஆனாலும் சிங்கலான இடம் "ராமன்" என்று எழுத முடியாது என்பது. இதை "இராமன்" என்றுதான் எழுத முடியும். "ற்","ல" இதே போல்.

மேலும் சில எழுத்துக்கள் சொற்களின் ஆரம்பமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்த எழுத்து முறை அந்த சத்தங்களை மறுக்கிறது.

தமிழிலும் சத்தச் சிக்கல் உண்டு. தமிழும் சுத்தமான phonetic language இல்லை :(

நன்றி மல்லையூரான். நான் சிறிது காலம் Microsoft இன் தமிழ் Keyboard மற்றும் Unicode பகுதியில் ஆலோசகராக வேலை செய்தேன். அது தவிரவும் text to speech பகுதியிலும் இருந்தேன்.

தமிழின் சில விதி முறைகள் எங்களுக்கு தமிழை கணினியில் புகுத்துவதற்கு தடையாக இருந்தன. உதாரணமாக உயிரெழுத்து நடுவில் வரும் சொற்கள். உதாரணமாக ஜாஎல

மற்றும் இடமிருந்து வலமாக வாசிக்கும் மொழியாக தமிழ் இருந்தாலும் பல இடங்களில் ஒரு எழுத்தை முழுமையாக அறிய வலமிருந்து இடமாகவும் வாசிக்க வேண்டி இருக்கும். உதாரணமாக கொ, கௌ போன்ற எழுத்துக்கள். இவற்றை கணினி கொண்டு வாசிக்கும் போது க என்ற எழுத்தை வாசித்து பின்னர் ள என்ற எழுத்தை வாசித்து பின்னர் ஒற்றை கொம்பை வாசிக்க வேண்டும்.

அதை விட இன்று மட்டும் எங்களுக்கு பிரச்சனையாக உள்ளது தனியே ஒற்றை கொம்பையோ, தனியே அரவு என்ற எழுத்தையோ, சங்கிலி கொம்பையோ காட்ட முடியாது. இன்னொரு எழுத்துடன் சேர்த்து தான் காட்ட வேண்டும். அதை விடவும் பிழையான எழுத்துக்களை காட்ட முடியாது உதாரணத்துக்கு ஒற்றைக்கொம்பும் அ என்ற எழுத்தையோ அ என்ற எழுத்தும் அரவையுமோ காட்ட முடியாது.

அரேபிய சீன மொழிகள் கடினமாக இருந்தாலும் அவற்றின் எழுத்துமுறைகளை இலகுவாக கணினி மயபடுத்த கூடியதாக இருந்தது. தமிழுக்கு அவ்வாறு செய்வது கஷ்டமாக இருந்தது. அதைவிடவும் தமிழில் மாற்றம் செய்யவல்லவர்கள் யார் என்பதில் கேள்விகள் இருந்தன. தமிழ்நாடு அரசு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், யாழ் பல்கலைக்கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள் இவர்களுடனும் இது தொடர்பாக பேசினோம். எம் ஜி ஆர் காலத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் தமிழ் கணினி முறைக்காகவேனும் மாற்றம் செய்யப்படவில்லை.

இன்னும் உ மற்றும் ஊ வரிகளில் மாற்றம் செய்தால். keboard இல் இலகுவாக தமிழை புகுத்தலாம். 

கணனிப்படுத்தும் போது உயிர்மெய் எழுத்துக்களுக்கு தேவை இல்லை. ஆங்கிலம் மாதிரி உயிர், மெய் எழுத்துக்களுடன் இருந்துவிடலாம்.  இது மிக இலகுவாக இருக்கும்.

  • தொடங்கியவர்

இதுவும் ஆங்கிலம்தொடர்பான ஒரு கேள்வி தான்.... திருமணமாகாத பெண் கீழே நிற்கிறார் என்பதை ஆங்கிலத்தில் ஒரு சொல்லில் சொல்ல முடியுமா? கவனியுங்கள் ஒரு வசனத்தில் அல்ல .. ஒரு சொல்லில்......

இதுவும் ஆங்கிலம்தொடர்பான ஒரு கேள்வி தான்.... திருமணமாகாத பெண் கீழே நிற்கிறார் என்பதை ஆங்கிலத்தில் ஒரு சொல்லில் சொல்ல முடியுமா? கவனியுங்கள் ஒரு வசனத்தில் அல்ல .. ஒரு சொல்லில்......

இது மாதிரியே அவன் ஒரு பானையைக் கொண்டு செல்கிறான் என்றும் ஒரு சொல் உள்ளது.

 a pot he car®y

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.