Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய வேலை தேடுவது எப்படி - சுயவிபரக் கோவை தயாரிப்பு / விண்ணப்பம் / தொலைபேசி நேர்முகத் தேர்வு / நேர்முகத் தேர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே,

நம்மில் அனைவருக்கும் அத்தியாவசியமானது ஒரு வேலை. இதனாலேயே சான்றோர் "உத்தியோகம் புருஷ லட்சணம்' எனக் கூறியிருக்கிறார்கள். சராசரியாக நாம் அனைவரும் ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதியை வேலையில் செலவிடுகிறோம். செய்யும் வேலை மகிழ்ச்சியாகவும், மனதுக்கு நிறைவாகவும், சிறந்த சம்பளம் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். ஆனால் அது அனைத்தும் சேர்ந்ததாக வேலை அமைவது கடினமே. இவ்வாறான நிலை வரும்போது புதிய வேலை தேடும் படலம் ஆரம்பிக்கிறது. போட்டியான சூழலில் வேலை தேடும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விடயங்கள், தயார்படுத்தல்கள் பற்றி இந்தப் பதிவில் அலசி ஆராயவுள்ளேன். இது முற்று முழுதாக நான் வாசித்த புத்தகங்கள், கேட்ட வழிகாட்டல்களின் பதிவாக இருப்பதால் ஏதாவது தவறுகள் இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தினால், நான் திருத்த / திருந்த வசதியாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் உதவும்.

முன்பும் நேர்முகத் தேர்வுகள் பற்றி சில திரிகளில் அலசபட்டிருக்கின்றது. அவைகளின் இணைப்பைக் கீழே தருகின்றேன்.

 

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல் by இசைக் கலைஞன்

 

நேர்முகத் தேர்வுகள் எதிர்கொள்வது எப்படி? by வீணா

 

இந்தத் திரியிலே ஆரம்பத்திலிருந்தே ஒரு வேலையைப் பெற எவ்வாறு தயார் படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம். உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 

தொடரும் .....

 

 

 

 

 

Edited by Thumpalayan

  • Replies 63
  • Views 20.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கும், பிரயோசனமாக இருக்கும் தலைப்பு, ஆரம்பியுங்கள் தும்பளையான். வாசிக்க ஆவலாக உள்ளோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
தும்பளையான்,
 
நல்ல சேவை. தொடருங்கள்.
 
அதேவேளை எனது அவதானிப்பு;எமது மக்களின் 'மிகச் சிறந்த வேலை' பெறுவது தொடர்பான பயம் (fear), அணுகுமுறை ( attitude) மாறவேண்டும். இது நடை பெறாவிடில் காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போன கதை தான்.
 
இது நான் மட்டும் சொல்லவில்லை. பிரிட்டிஷ் பிரதமரே சொல்கின்றரர். 188,000 வெளி நாட்டவர் வந்து வேலை பெருமளவுக்கு இங்கே வேலை இருந்துள்ளது தானே.
 
வேலை தொடர்பான நேர்முகத் தேர்வு ஒரு புறமும், என்ன துறையில் வேலை .இலகுவாக கிடைக்கும் என்பதனையும் சொல்லாம்.
 
தொடருங்கள்.

நல்லதொரு தேவையான திரி. ஆரம்பியுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் தும்ஸ்.. பயனுள்ள தொடராக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் முக்கியமான ஒன்றைத் தொட்டிருக்கின்ர்கள், தும்ஸ்!

 

தொடருங்கள்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவிசயம் தும்பளை! ஆரம்பியுங்கள்.

 

தொடருங்கள் தும்ப்ஸ் அண்ணா :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 
வேலை தேடுவதே முதலாவது முழு நேர வேலை ஆக வேண்டும்.
 
வேலை தேட என்று வெளிக்கிடும்போது, நாளை செய்வோம் அல்லது பிறகு செய்வோம் என ஒதுக்கி வைப்பது வழமை. முக்கியமாக இருந்து மினக்கெடும் பஞ்சியிலேயே பலர் அதை ஒத்திப் போடுகிறோம். ஒரு நாளிலே இத்தனை மணித்தியாலங்களை வேலை தேடுவதற்கு என்று ஒதுக்கி வைத்து மினெக்கெடுவது மிகவும் முக்கியம். தற்போது வேலை செய்து கொண்டிருப்பவர்கள் கூடிய அளவில் அலுவலக கணனியில் வேலை தேடுவதைத் தவிர்ப்பது நல்லது. கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்ததால் நான் அலுவலக கணனியே பாவித்திருக்கிறேன். இல்லாவிட்டால் வேலை தவிர்ந்த விடயங்களுக்கு அலுவலக சொத்துக்களைப் பாவித்தமை எண்டு சொல்லி வீட்ட அனுப்பவும் சந்தர்ப்பம் வரும். எக்காரணம் கொண்டும் அலுவலகத் தொலைபேசியைப் பாவிக்க வேண்டாம். அத்துடன் அலுவலக நண்பர்களுக்கு வேலை தேடுவதை சொல்லவேண்டாம். அவர்கள் எவ்வளவு திறமான நண்பர்களாக இருந்தாலும். குறிப்பிட அளவான பதவிகள் இருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களே உங்களுக்குப் பதில் அந்த வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம். உங்கள் போட்டியாளர்கள் எவ்வளவு குறைவோ அவ்வளவுக்கு உங்களுக்கு வேலை கிடைப்பதற்கான சந்தர்ப்பமும் அதிகம். 
 
உங்களது தற்போதைய வேலையில் உங்களுக்குப் பிடிக்காததைக் குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் புது வேலை தேட ஒரு ஊக்கி (motivation) தேவை. அது அதிக காசாகவோ, பதவி உயர்வாகவோ, கூட வேலை செய்பவர்களாகவோ, கண்றாவியான முதலாளியாகவோ கூட இருக்கலாம். சிலவேளைகளில் எல்லாம் நன்றாக இருந்தாலும் எதோ ஒரு குறை இருக்கிறது போல இருக்கும். Posh அலுவலகத்துக்காக வேலை மாறின நண்பன் ஒருத்தனும் எனக்கு இருக்கிறான். ஆரம்பத்திலே வங்கி ஒன்றிலே வேலை செய்த போதும் அது அவ்வளவு நல்ல அலுவலகமில்லை என்றுவிட்டு E & Y யில் வேலை எடுத்த கில்லாடி அவன். நீங்கள் குறித்தவற்றை தினமும் பார்க்கும் போது உங்களுக்கே புது வேலை எடுக்க வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படும். அத்துடன் புது வேலையில் இந்த சில விடயங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க பார்த்துக் கொள்ளவும், உங்கள் வேலை தேடும் பரப்பைக் குறைக்கவும் அது உதவும். 
 
நீங்கள் மாணவராகவோ, அல்லது பல்கலை, வேறு கல்வி கற்றுவிட்டு வேலை தேடுபவராக இருந்தால் பட்டதாரி நியமனங்களுக்கு (graduate positions) கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் நீங்கள் படித்த துறையில் உங்களின் பலம் / பலவீனம் என்ன என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக நான் கணக்கியல் படித்திருந்தாலும் கம்பனி சார்பான கணக்குகள், அவர்களின் risk analysis அவ்வளவு ஓடாது. இதனால் ஆரம்பத்தில் வேலை என்று தேடும் போது இந்தத் துறை வராது பார்த்துக்கொண்டேன். ஓடாத வேலையே செய்து என்னை நானே ஏமாற்ற விரும்பவில்லை. மாறாக பொருளியல் (Finance) பிடித்திருந்தது. இதனால் இந்த ரூட்டையே பிடித்தேன். வாய்ப்புகள் குறைவாக இருந்தால் குருட்டு வாக்கில எல்லா வேலைகளுக்கும் போட வேண்டியதுதான். குறிப்பாக பெரிய, சிறிய கம்பனிகளில் நண்பர்களைப் பிடித்து வைத்திருப்பது கைமேல் பலன் தரும். 
 
எனக்கு நடந்தது இது தான். எனது நண்பன் (தமிழன்!) ஒருவன் ஒரு நடுத்தர கணக்கியல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தான். அவன் பல்கலையிலும் என்னுடன் சில பாடங்கள் படித்தவன். அவன் கஷ்டப்பட்டே நேர்முகத் தேர்வு எல்லாம் செய்து அந்த நிறுவனத்தில் புகுத்திருந்தான். அந்த நிறுவனத்தில் கொஞ்சம் வேலைப்பளு அதிகரித்த போது தற்காலிகமாக ஒரு இறுதி ஆண்டு மாணவனை எடுக்க யோசித்திருந்தார்கள். சாதாரணமான வேறு வேலைகள் செய்து கொண்டிருந்த நான் இவனிடமும், வேலை இருந்தால் சொல்லு மச்சான் என்று சொல்லி வச்சிருந்தேன். காரணம் பணமல்ல, அனுபவம். ஓசியிலே வேலை செய்யவும் தயாராகவே இருந்தேன். இந்த இடத்தில் ஒரு விடயம் சொல்ல வேண்டும், சில வேளைகளில் அனுபவம் தேவை என்றால் ஒசியிலேயும் வேலை செய்யும் மன நிலை இருக்க வேண்டும். இவனும் விசயத்த சொன்னான். ஒரு கிழமையிலேயே நான் அங்கு போய்  இரண்டு நாட்கள் வேலை செய்து அதற்கு ஒரு $300 காசோலையையும் அந்த முதலாளி அம்மா தந்திருந்தா. எனது நண்பன் முதலே சொல்லியிருந்தான் "டேய் உனக்கு intro  மட்டும் தான் குடுப்பன், அங்கால உண்ட கெட்டித்தனம் எண்டு". இதனால எல்லா வேலையையும் முடிச்சு குடுத்துவிட்டு கிளம்பும் போது ஒரு கடதாசியில் எனது தொலைபேசி இலக்கத்தையும் மின் அஞ்சலையும் எழுதிக் குடுத்து விட்டே கிளம்பினேன். இரண்டு கிழமைகளில் மீண்டும் வேலைக்கு வா என அழைத்தார். ஒரு மாதத்திலேயே அங்கு எனக்கு வேலை கிடைத்துவிட்டிருந்தது. நான் இதை சொல்லக் காரணம், இருக்கும் நண்பர்களை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் தண்ணியடிக்கு மட்டும் நண்பர்களை வைத்திருக்காது நாலு விஷயம் தெரிந்த, செல்வாக்குள்ளவர்களையும் நண்பர்களாக வைத்திருக்க வேண்டும். சில வேலைகள் கிடைப்பதை செல்வாக்கு தீர்மானிக்கிறது என்பது கசப்பான உண்மை.
 
தொடரும் .....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு.தொடருங்கள் தும்பளையான்

 

migavum nalla pathivu

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு.. பிச்சைக்காரன் தெரிவு செய்ய ஆசைப்படக்கூடாது என்பது மாதிரி முதல் வேலை உங்கள் துறையின் எந்தப் பிரிவாக இருந்தாலும் எடுத்துச் செய்வதே புத்திசாலித்தனம்.. பின்னுக்கு நின்றால் மற்றவர்கள் தள்ளிவிட்டு முன்னே போய்க்கொண்டிருப்பார்கள்..

வெளிநாடுகளில் வேலைகளுக்கு மிகவும் முக்கியமானது அனுபவமே.  இந்த அனுபவத்தை மட்டும் பெற்றுக் கொண்டால் மிகுதி எல்லாம் மிகவும் இலகு.  அந்த அனுபவம் எப்படி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள வேண்டும்.  நானும் ஆரம்பத்தில் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்தேன்.   நான் படித்தது உளவியல்.  நான் வேலை செய்ததோ கணக்கியல் (Accounting).   நான் கணக்கியலைப் படித்தது பாடசாலையில் மட்டுமே (1994).  அதன்பின்னர், கணக்கியல் படிக்கவில்லை.  அலுவலகங்களில் ஆரம்பகட்ட வேலையாளாகத்தான் எனது வேலைகளைத் தொடங்கினேன்.    நான் ஏஜென்சி மூலமாகவே எனது வேலைகளைச் செய்து வந்தேன்.  அவற்றின் மூலம் கிடைத்த அனுபவத்தினால் மட்டுமே முன்னேறி கணக்கியல் வேலைகளைச் செய்து வந்தேன். எனக்கு கணக்கியல் பிடிக்காததால் அந்தத் துறையில் மேலதிகமாகச் செல்ல விருப்பம் இருக்கவில்லை.  அதனால் எந்தக் கோர்சும் செய்யவில்லை.  இத்தனைக்கும் நான் தொடர்ந்தும் வேலை செய்யவில்லை.  நான் இரண்டரை வருடங்கள் மட்டுமே (2010 -2012) ஒரு கம்பனியில் தொடர்ந்து வேலை செய்தேன்.  மற்றவை அனைத்தும் ஏஜென்சி மூலம் இடைவெளிகள் விட்டு வேலை செய்தவை.  இப்போதும், நான் வேலை தேடுவேனாயின், ஆகக் கூடியது ஒரு மாதத்திற்குள் வேலை எடுத்து விடுவேன்.  இப்போதும் நான் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.  ஒரு கம்பனிக்குள் நுழைந்துவிட்டால், அந்தக் கம்பனியே என்னை வேலையில் அமர்த்தும் என எனக்குத் தெரியும்.  அந்தளவிற்கு வேலைகளைக் கற்று வைத்திருக்கிறேன்.  வேலை தேடுவோர், ஆரம்பத்தில் சம்பளத்தையோ அல்லது கம்பனியின் தராதரத்தையோ பார்க்கக்கூடாது.   அனுபவத்தைப் பெற்ற பின்னர், இவை எல்லாம் உங்களைத் தேடிவரும்.  

 

எனக்குத் தெரிந்தவர்கள் சிலரைப் பற்றியும் இங்கு குறிப்பிடுகிறேன்.  ஒரு பெண், வரிகள் சம்பந்தமாகப் படித்தவர்.  அவர் வேலை செய்வது கனேடிய வரித் திணைக்களத்தில் மூன்று நாட்கள் மட்டுமே.  அவரது வருடச் சம்பளம் 90,000 டொலர்கள்.    அவர் வேலை எடுக்கும்போதே, மூன்று நாட்கள் மட்டும்தான் வேலை செய்வேன் எனக் கூறிச் சேர்ந்தவர்.  அவரை முழு நேரமாக்குவதற்கு முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால், இவருக்கு விருப்பமில்லை.  இன்னொருவர், கணக்கியல் கட்டுப்பாட்டாளர் (Controller).  ஒரு கம்பனியில் அதிகம் ஐந்து ஆண்டுகளே வேலை செய்வார்.  பின்னர், கூடிய சம்பளத்துடன் வேறு வேலைக்குப் போய்விடுவார்.  இருவருமே தமிழர்கள்.  என்னோடு கூட வேலை செய்த மற்றைய நாட்டவர்களும் இப்படியே.  எனது வி.பி.  எனது கம்பனியில் ஐந்து வருடங்கள் முடிந்ததும் வேறு வேலை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.  எனது மேலாளரும் வேறொரு கம்பனியில் இருந்து விட்டு மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் எனது கம்பனிக்கு வந்தார்.  எனது வி.பி., கட்டுப்பாட்டாளர் (தமிழர்), வரி செய்பவர், மற்றும் எனது மேலாளர் இவர்கள் அனைவரும் முன்னர் வேறு கம்பனிகளில் வி.பி.யோடு ஒன்றாக வேலை செய்தவர்கள்.  முதலில் எனது வி.பி.தான் வந்தார்.  அதன்பின்னர், அவரே இவர்களை இந்தக் கம்பனிக்கு வரவழைத்தார்.  எனது மேலாளர்,  அவுஸ்ரேலியாவில் பி.காம் முடித்துவிட்டு இங்கு வந்தவர்.  ஆரம்பத்தில் கனடாவில் அமைந்திருக்கும் அவரது நாட்டு (போலந்து) வங்கியில், வங்கிப் பணியாளராக (Teller) வேலைக்குச் சேர்ந்தார்.  ஒரு வருடம் மட்டுமே அங்கு வேலை செய்தார்.  அதன் பின்னர், கம்பனிகளில் வேலை செய்து,   கிடைத்த அனுபவத்தின் மூலம் பத்து வருடங்களுக்கு முன்னர் முதல் மேலாளராகப் பதவி வகித்து வருகிறார்.  அவுஸ்ரேலியாவில் படித்ததற்குப் பின்னர், அவர் இங்கு படிக்காதது குறிப்பிடத்தக்கது. 

 

வேலை என்று வரும்போது, முதல் இரண்டு வருடங்கள் மட்டுமே கடினமானவை.  இரண்டு வருடங்கள் தொடர்ந்தோ அல்லது இரண்டு வருடங்களுக்கான அனுபவமோ பெற்றபின்னர் உங்கள் விருப்பத்திற்கேற்ற வேலைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.   ஆகவே, இரண்டு, மூன்று வருடங்களுக்கு உங்கள் துறை சார்ந்து என்ன வேலை கிடைத்தாலும் செய்து அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சியுங்கள்.  அதுமட்டுமின்றி, கூடியளவு நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்ல முயற்சியுங்கள்.  அந்த வேலை உங்களுக்குப் பொருத்தமற்றதாக இருந்தாலும் அந்த வேலைக்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்குச் செல்ல முயற்சியுங்கள்.  அப்படிச் செல்லும்போது, இந்த வேலை இல்லாவிட்டாலும், நேர்முகத் தேர்வாளர்களுக்கு உங்களைப் பிடித்து விட்டால், எதிர்காலத்தில் உங்கள் துறைசார்ந்த வேலைவாய்ப்பு வரும்போது, உங்களை நினைவில் வைத்திருந்து அழைப்பார்கள். 

 

வேலை கட்டாயம் தேவை என்ற நிலை எனக்கு வந்தபோது, நான் முழுநேரமாக வேலை தேடியிருக்கிறேன்.  ரொறன்ரோவில் இருந்த அனைத்து ஏஜென்சிகளின் விலாசத்தையும் ஒரு நோட்புக்கில் குறித்து வைத்துக் கொண்டு, எனது புரோபைல்களை (Resume) கொப்பி எடுத்து வைத்துக் கொண்டு அந்த ஏஜென்சிகளுக்கு நேரடியாகச் சென்றேன்.  சில இடங்களில் அவற்றை ஏற்றுக் கொண்டார்கள். சில இடங்களில் ஏற்றுக் கொள்ளவில்லை.  நான் சென்ற அனைத்து ஏஜென்சியிடத்திலிருந்தும் அங்கு வேலை செய்பவர்களின் (Career Consultants) வியாபாரக் கார்ட்டினைப் (Business Card) பெற்றுக் கொண்டு வந்தேன்.   பின்னர், அவர்களின் இமெயிலுக்கு நேரடியாக எனது புரோபைலினை அனுப்பிவிட்டு, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன்.  இம்முயற்சியில் அதிக பலன் உள்ளது.  நான் இதற்கு செலவழித்த கால அவகாசம் 4 நாட்கள் மட்டுமே.  முதல் இரண்டு நாட்கள் ஏஜென்சிகள் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லவும், அடுத்த ஒரு நாளை இமெயில் அனுப்பவும், கடைசி நாளை தொடர்புகளை (Follow-up) ஏற்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டேன்.   புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இது மிகவும் உதவும் என்று நம்புகிறேன். 

 

எனது அனுபவத்தின் மூலம், வேலை எடுத்துத் தரும் ஏஜென்சியில் வேலை செய்பவர்கள் (Career Consultants), வேலை தேடுபவர்கள் வெறும் புரோபைலை இமெயில் அனுப்பி விடுபவர்களை விரும்புவதில்லை.  அனுப்பியபின், தம்மோடு தொடர்பு கொள்பவர்களையே அதிகம் விரும்புவார்கள்.  அதோடு, ஆரம்பத்தில் எந்த வேலையையும் செய்பவர்களையே அதிகம் விரும்புகிறார்கள்.  அவர்களாலேயே எந்த சந்தர்ப்பத்திலும் சவால்களை எதிர்நோக்க முடியும் என நம்புகிறார்கள்.  கிழமைக்கு ஒருமுறையேனும் அவர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கு உங்களின் பெயரைப் பரிச்சயம் செய்கிறீர்கள்.  அதனால், அவர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு வரும்போது, உங்களின் பெயர் அவர்களின் நினைவுக்கு வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்து தமிழச்சி.உங்கள் அனுபவத்தை பதிந்தமைக்கு நன்றிகள்.பச்சை குத்த முடியவில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுய விபரக் கோவை தயாரிப்பு

வேலை தேடும் போது, அந்த வேலை கிடைப்பதையும் கிடைக்காமல் விடுவதையும் தீர்மானிப்பதில் அதி முக்கிய பங்கு வகிப்பது உங்களது சுய விபரக்கோவை ஆகும். பலரும் ஏனோ, தானோ என சுய விபரக்கோவைகளை தயாரிப்பதை கண்டுள்ளேன். நான் இதுவரை பார்த்த சுயவிபரக் கோவைகளில் 5% இலும் குறைவானவையே தரமானவையாக இருந்துள்ளன. சராசரியாக ஒரு சுயவிபரக் கோவைப் பார்க்க ஒரு தொழில் வழங்குனர் செலவழிக்கும் நேரம் 10 - 15 செக்கன் எனக் கூறுகிறார்கள். இந்த மிகக் குறுகிய நேரத்தில் உங்களின் சுயவிபரக் கோவை அதனது மந்திரத்தை செய்ய வேண்டும். பல சுயவிபரக் கோவைகளைப் பார்க்கும் போது உங்களது மற்றவர்களினதிலும் பார்க்க சிறப்பாக இருக்க வேண்டும்.

 

ஆரம்பத்தில் எனது சுயவிபரக் கோவை ஆறு பக்கங்கள் கொண்டதாக இருந்தது. கண்ட கண்ட தேவையில்லாத விடயங்கள் பலவற்றை உள்ளடக்கி இருந்தேன். இப்போது இரண்டு பக்கங்கள் மட்டுமே. இரத்தினச் சுருக்கமாக உங்களின் கல்வித் தகமைகள், நிபுணத் துவப் பட்டங்கள், (தகமை பெற்றுக்கொண்ட பல்கலை அல்லது நிபுணத்துவ நிறுவனம், பெற்ற வருடம் அவசியம்) அங்கு நீங்கள் செய்த வேலைகள், உங்களுக்கு பரிட்சயமான தொழில் சார் கணணி அறிவு பற்றிய விபரங்களை உள்ளடக்க வேண்டும். நான் எனது தொடர்பாடல் (Refree) விபரங்களையும் உள்ளடக்கி விடுவேன். சிலர் Refree's provided on request என விட்டுவிடுவார்கள். நான் தனிப்பட refree விபரங்கள் உள்ளடக்கியவர்களை விரும்புவதுண்டு. இவர்களுக்கு தன்னம்பிக்கை, சவால்களை ச்திர்நோக்கும் தன்மை அதிகம் என்பன எனது கருத்து. அத்துடன் உங்களின் refree விடயங்களைத் தாருங்கள் எனக் கேட்டுப் பெற வேண்டும். அவர்களுக்கு வேலை அவசியம் என்றால் refree விடயங்களை முதலே துணிவாக தந்திருக்கலாம் என யோசிப்பதுண்டு.

 

உங்களின் சுயவிபரக் அமைப்பு (format) முக்கியமானது. பலவகையான மாதிரி அமைப்புக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் தயவுசெய்து வெட்டி ஒட்டாதீர்கள். பல நூறு சுயவிபரக் கோவைகள் வந்து குவியும் போது வெட்டி ஒட்டிய சுயவிபரக் கோவைகளைப் பார்க்கப் புரியும். ஒரே மாதிரி பல இருக்கும் போது அதில் சில வசனங்கள் / சொற்களை கூகிள் பண்ணிப் பார்ப்பேன், அல்லது sample CV / resume எனப் போடும் போது அவர்களின் வடிவத்தை எங்கிருந்து சுட்டார்கள் என்பது விளங்கி விடும். ஆக்கத்திறன் (creativity) இல்லாதவர்கள் என இவர்களையும் தவிர்ப்பார்கள். இன்னொரு முக்கிய விடயம் எழுத்துப் பிழை, இலக்கணம் பிழை அறவே இருக்கக் கூடாது. உங்கள் சுயவிபரக் கோவை அச்சிட்டு வாசியுங்கள். கணனித் திரையில் வாசிக்கும் போது எழுத்துப் பிழைகளைக் கண்டு பிடிப்பது கடினம் அத்துடன் கணணி பிழை என்று சொல்லும் எல்லா சொற்களையும் மாற்ற வேண்டாம். நீங்கள் கணனியில் பாவிக்கும் ஆங்கிலம் (US/UK) வித்தியாசமாக இருந்தால் கணணி பிழை இல்லாததையும் பிழை எனத்தான் கூறும். மிக இலகுவான உதாரணம் US ஆங்கிலத்தில் maximization UK ஆங்கிலத்தில் maximisation. இந்த "z", "s" தவறுகளை கவனமாகப் பாருங்கள்.

 

நல்ல ஆங்கில அறிவுள்ள நண்பர்களிடம் சரிபார்க்கும் படி கொடுங்கள். எழுத்துப் பிழைகளுடன் வரும் சுயவிபரக் கோவைகள் வேலை வழங்குபவர்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதுடன் உடனடியாகவே குப்பைக் கூடைக்குள் சென்று விடும். உங்கள் நம்பர்களின் சுயவிபரக் கோவைகளையும் பிரதி பண்ணாதீர்கள். அவர்கள் அதைப் பல வேலைகளுக்கும் அனுப்பி இருப்பார்கள், நீங்கள் அதைப் பிரதி பண்ணும் போது ஒருமாதிரியான சுயவிபரக் கோவை வேலை வழங்குநர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உங்களது சுயவிபரக் கோவையையும் எல்லாருக்கும் குடுக்காதீர்கள். என்னிடம் யாராவது கேட்டால் கொடுப்பதற்கு என்றே ஒரு சுயவிபரக் கோவை தயாரித்து வைத்திருக்கிறேன். நான் உண்மையாகப் பாவிக்கும் சுயவிபரக் கோவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது அது. சில வேளைகளில் அவர்கள் நினைக்கலாம் இந்தமாதிரியான ஓட்டை CV இக்கு எல்லாம் எப்பிடி வேலை கிடைக்கிறது என. விசேடமாக முக்கிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களைத் தவிர மற்ற அனைவருமே உங்களுக்குப் போட்டியாளர்கள். நீங்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு வேலை, எனவே சில இறுக்கமான முடிவுகள் அவசியம்.

 

உங்களுக்கு ஆங்கில அறிவு போதாமல் இருந்தால் கட்டணத்திற்கு சுயவிபரக் கோவை தயாரிக்கும் நிபுணர்களின் சேவை பல இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது. நான் இரண்டுதரம் இப்படியானவர்களின் சேவைகளைப் பயன்படுத்தி இருக்கிறேன். வழமையாக உங்களுடன் பேசி உங்களது தகவல்களைச் சேகரிப்பார்கள். பின்னர் அவர்கள் ஒரு சுயவிபரக் கோவை எழுதி உங்களுக்கு தருவார்கள். அதிலிருக்கும் சரிகள் பிழைகளைத் திருத்தச் சொல்லிக் கேட்டு ஒரு சிறந்த சுயவிபரக் கோவையை உருவாக்கலாம். சாதாரண நிபுணத்துவமான எழுத்துருக்களையே (fonts) பயன்படுத்துங்கள். மிகப் பெரிய, மிகச் சிறிய, வாசிக்க முடியாத எழுத்துருக்களால் உங்களது சுயவிபரக் கோவையின் மதிப்பு குறைந்துவிடும். பந்தி பந்தியாக எழுதாது சிறு சிறு தலையங்கங்களின் கீழ் dot points வடிவில் எழுதுவது சிறந்தது.

உங்களது சுயவிபரக் கோவை வாசிப்பவரின் மனதில் ஓடுவது - இவர் என்ன படித்திருக்கிறார், எங்கு, என்ன மாதிரியான வேலைகள் செய்திருக்கிறார், என்ன மாதிரியான நிபுணத்துவ அங்கீகாரம் (eg professional bodies such as  CPA) வைத்திருக்கிறார், என்ன மாதிரியான கணணி அனுபவம் இருக்கிறது, என்னிடம் இருக்கும் வேலையை இவரால் செய்ய முடியுமா போன்ற கேள்விகளே. இவை அனைத்திற்கும் அவர் ஆம் என முடிவெடுக்க வைக்க வேண்டியது உங்களது சுயவிபரக் கோவையின் வேலை. எனவே நேரம், தேவைப் படின் பணம் செலவழித்து சிறந்ததொரு சுயவிபரக் கோவை உருவாக்குவது வேலை தேடும் படலத்தின் அத்திவாரம் எனக் கூறலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே அசத்துது, தும்ஸ்!
தொடருங்கள்!!! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

சுயவிபரக் கோவை தயாரிக்கும் போது... நீங்கள் அதில் ஒட்டும் படத்தில் முக்கிய கவனம் எடுங்கள்.
சில வேலைக்கு... கட்டாயம் கோட் போட்டிருக்க வெண்டும்.
சிலதுக்கு... இளநீல, இள மண்ணிற, வெள்ளைச் சட்டை போன்றவை போதுமானது.
உங்களுக்கு "பற்றிக் சேர்ட்" பிடிக்கும், என்றுவிட்டு... அந்தச் சட்டையை, போட்டுக் கொண்டு போட்டோ எடுத்து அனுப்பாதீர்கள்.
முக்கியமாக படம் எடுக்கும் போது... புகையிரத நிலையங்களில் உள்ள, தானியங்கி படப்பிடிப்பு நிலையங்களில்... 5 €வுக்கு படம் எடுக்காது, தரமான புகைப்படக் கடைகளில்... படத்தை எடுங்கள். ஏனெனில்... உங்களது சுயவிபரக் கோவையை... வேலைக்கு விண்ணப்பிக்க அனுப்பும் போது, முதலில் பார்ப்பது... உங்கள் படத்தைத்தான். அதில் நீங்கள்... பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மாதிரி சிரித்துக் கொண்டிருந்தால்... வேலை கிடைச்ச மாதிரித்தான். :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுயவிபரக் கோவை தயாரிக்கும் போது... நீங்கள் அதில் ஒட்டும் படத்தில் முக்கிய கவனம் எடுங்கள்.

சில வேலைக்கு... கட்டாயம் கோட் போட்டிருக்க வெண்டும்.

சிலதுக்கு... இளநீல, இள மண்ணிற, வெள்ளைச் சட்டை போன்றவை போதுமானது.

உங்களுக்கு "பற்றிக் சேர்ட்" பிடிக்கும், என்றுவிட்டு... அந்தச் சட்டையை, போட்டுக் கொண்டு போட்டோ எடுத்து அனுப்பாதீர்கள்.

முக்கியமாக படம் எடுக்கும் போது... புகையிரத நிலையங்களில் உள்ள, தானியங்கி படப்பிடிப்பு நிலையங்களில்... 5 €வுக்கு படம் எடுக்காது, தரமான புகைப்படக் கடைகளில்... படத்தை எடுங்கள். ஏனெனில்... உங்களது சுயவிபரக் கோவையை... வேலைக்கு விண்ணப்பிக்க அனுப்பும் போது, முதலில் பார்ப்பது... உங்கள் படத்தைத்தான். அதில் நீங்கள்... பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மாதிரி சிரித்துக் கொண்டிருந்தால்... வேலை கிடைச்ச மாதிரித்தான். :D

 

அவவுசில் சுயவிபரக் கோவைகளுக்கு படம் ஒட்டுவதில்லை அண்ணா. அதிகம் எதிர்பார்ப்பது பெயர், முகவரி, மினஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம். ஆண்/பெண், வயது விபரங்கள் எதிர்பார்க்கப்படுவதில்லை. சில வேலை விளம்பரங்களில் பிரத்தியேகமாக குறிப்பிட்டிருந்தால், அது வேற விடயம். ஐரோப்பாவில் படமும் போட வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அவவுசில் சுயவிபரக் கோவைகளுக்கு படம் ஒட்டுவதில்லை அண்ணா. அதிகம் எதிர்பார்ப்பது பெயர், முகவரி, மினஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம். ஆண்/பெண், வயது விபரங்கள் எதிர்பார்க்கப்படுவதில்லை. சில வேலை விளம்பரங்களில் பிரத்தியேகமாக குறிப்பிட்டிருந்தால், அது வேற விடயம். ஐரோப்பாவில் படமும் போட வேண்டுமா?

 

lebenslauf2.gifLebenslauf.png

 

ஐரோப்பாவில் முதல்பக்க, வலது மூலையில்... படம் ஒட்ட வேண்டும் தும்பளையான்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் நீங்கள் இணைத்ததில் பொழுது போக்கு விபரம் எல்லாம் போட்டிருக்கிறார்கள். இங்கு அது எதுவுமே தேவையில்லை. சிலர் அப்படிப் போடுவார்கள் ஆனால் அது un professional என்று கருதப்படும். அவர்களின் பொழுது போக்கு, பாட்டுப் பாடுவது, முத்திரை சேர்க்கிறது எல்லாம் எமக்கு தேவையில்லாதது. இங்கு (அவுசில்) எதிர்ப்பது - என்ன படிப்பு?, எங்க வேலை செய்தது/செய்யுறது? என்ன வேலை தெரியும்?

 

 

உங்க ரெசுமியில பொழுது போக்காக: ஸ்கபாக், ஸ்க்லெய்ன்டெர், ஜொக்கன் எல்லாம் போட்டிருக்காங்க..
 
இம்புட்டு மேட்டர் எல்லாம் உங்க ஊரில இருக்கா தமிழ் சிறி ?  :D  :D

தற்பொழுது பிரபள்யமாக வரும் https://www.linkedin.com  இல் அங்கத்தவராக இணைத்தால் நல்லது

 

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் நீங்கள் இணைத்ததில் பொழுது போக்கு விபரம் எல்லாம் போட்டிருக்கிறார்கள். இங்கு அது எதுவுமே தேவையில்லை. சிலர் அப்படிப் போடுவார்கள் ஆனால் அது un professional என்று கருதப்படும். அவர்களின் பொழுது போக்கு, பாட்டுப் பாடுவது, முத்திரை சேர்க்கிறது எல்லாம் எமக்கு தேவையில்லாதது. இங்கு (அவுசில்) எதிர்ப்பது - என்ன படிப்பு?, எங்க வேலை செய்தது/செய்யுறது? என்ன வேலை தெரியும்?

 

 

உங்க ரெசுமியில பொழுது போக்காக: ஸ்கபாக், ஸ்க்லெய்ன்டெர், ஜொக்கன் எல்லாம் போட்டிருக்காங்க..
 
இம்புட்டு மேட்டர் எல்லாம் உங்க ஊரில இருக்கா தமிழ் சிறி ?  :D  :D

 

 

தும்பளையான், ஈசன்...

சுயவிபரக் கோவையில்... பொழுது போக்கு விசயங்களை கட்டாயம் எதிர்பார்ப்பார்கள்...

காரணம்... உதைபந்தாட்டத்தை ஒருவர் பொழுது போக்காக வைத்திருந்தால்..

எங்காவது விளையாடி... காலை முறித்துவிட்டு... 6 மாதம் சுகவீன விடுப்பில் நின்றிடுவார் என்ற முன்னெச்சரிக்கை தான்... காரணம்.

சில இடங்களில்... அது, கெட்ட அனுகூலத்தையும், கூடுதல் அனுகூலத்தையும் தரும். :)

 

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது பிரபள்யமாக வரும் https://www.linkedin.com  இல் அங்கத்தவராக இணைத்தால் நல்லது

 

 நிச்சயமாக. பின்னர் வரும் பகுதிகளில் சமூக தொடர்பாடல் தளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என ஒரு பகுதி எழுதுவேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.