Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் நாலாவது தேசிய துக்க நாள் நினைவும்

Featured Replies

எழுத்து பிழை

may182013flyer.jpg

Uploaded with ImageShack.us

தமிழீழத்துக்கு மேலே அமரிக்கக்கொடிபறக்கின்றது. நல்ல முன்னேற்றம்.

தமிழீழத்துக்கு மேலே அமரிக்கக்கொடிபறக்கின்றது. நல்ல முன்னேற்றம்.

தமிழீழம் இப்ப அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டும் தான் இருக்கு. அது தான் அப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் இப்ப அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டும் தான் இருக்கு. அது தான் அப்பிடி

தமிழீழம் சிறீதர் தியேட்டர் மூலையிலும் இருக்குது..! "அண்ணன்" குத்தியரும்.. ஆயுதம் தூக்கினதும்.. பலஸ்தீனத்தில் பயிற்சி எடுத்தும்.. அதுக்குத் தானே..! சிங்களவனுக்கு அடிவருட ஆயுதம் எதற்கு பலஸ்தீனப் பயிற்சி எதற்கு..! அதற்கு நக்கத் தெரிந்தால் போதும்.  :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்கு மேலே அமரிக்கக்கொடிபறக்கின்றது. நல்ல முன்னேற்றம்.

உங்கட  நக்கல் எனக்குப்புரியல.

விளக்கமா சொல்லமுடியுமா?

பிரபாகரன் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால்  தமிழீழம் கிடைத்திருக்கும் என்று எழுதுபவர்களை  வரவேற்கும் தாங்கள் அமெரிக்கக்கொடியை ஒரு துண்டுப்பிரசுரத்தில் கண்டதும் ஆத்திரப்படுவது ஏனோ??? :(  :(  :(  :( 

அது வந்து பிரபாகரன் தான் விட்டுக்கொடுக்கனும்.. பிரபாகரன் தான் தப்புப் பண்ணினது என்று ஏற்றுக் கொள்ளனும்.. பிரபாகரன் தனக்குத் தான் தமிழீழனுன்னு சொல்லனும்.. அப்படி என்றதை மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கினம். மற்றவை என்னவும் செய்யலாம்..! அது தான் அவையிட சன நாய் அகம்.

============================

அதுபோக.. இது.. போஸ்டர் தயாரிக்கும் போது நிகழ்ந்த தவறாக இருக்கலாம். குறிப்பிட்டவர்கள் இதனை கவனத்தில் கொள்வது நன்று. தங்கட பிழைப்புக்கு அப்பால்.. தமிழீழமே நக்கலாகிப் போய்விட்டவர்களுக்கு இப்படியான தவறுகள் மெல்ல நல்ல அவலாகி விடுகின்றன. :icon_idea::)

Edited by nedukkalapoovan

தமிழீழம் சிறீதர் தியேட்டர் மூலையிலும் இருக்குது..! "அண்ணன்" குத்தியரும்.. ஆயுதம் தூக்கினதும்.. பலஸ்தீனத்தில் பயிற்சி எடுத்தும்.. அதுக்குத் தானே..! சிங்களவனுக்கு அடிவருட ஆயுதம் எதற்கு பலஸ்தீனப் பயிற்சி எதற்கு..! அதற்கு நக்கத் தெரிந்தால் போதும்.  :lol::D

தனி நாட்டு கோரிக்கைக்கு முதல் வெற்றி

கனடாவில் முதன் முதலாக தமிழ்மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து அரசு வன்னி தெருவை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் தமிழீழத்தையும் எங்களால் உருவாக்கமுடியும் என்று தமிழீழ கோரிக்கையாளர்கள் ஒப்பாரி வைப்பார்கள் :icon_mrgreen: . தமிழீழம் கிடைத்துவிடும்

உங்கட  நக்கல் எனக்குப்புரியல.

விளக்கமா சொல்லமுடியுமா?

பிரபாகரன் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால்  தமிழீழம் கிடைத்திருக்கும் என்று எழுதுபவர்களை  வரவேற்கும் தாங்கள் அமெரிக்கக்கொடியை ஒரு துண்டுப்பிரசுரத்தில் கண்டதும் ஆத்திரப்படுவது ஏனோ??? :(  :(

இதில் நக்கல் என்று ஒன்றும் இல்லை.

அமரிக்காவுக்கு ஆதரவானவர்கள் அமரிக்கக்கொடியை தமிழீழத்துக்குமேல பற்கவிடலாம். சீனா ஆதரவாளர்கள் இந்திய ஆதரவாளர்கள் அவரவர் விரும்பிய கொடியை பறக்கவிடலாம். அரசை ஆதரிப்பவர்கள் சிங்கக் கொடியை பற்கவிடலாம். மக்களின் அவலங்களுக்காக கவனயீர்ப்பு செய்கையில் அவலங்களை முன்நிலைப்படுத்துங்கள் புலிக்கொடியை முன்நிலைப்படுத்தாதீர்கள் என்ற கருத்து இருந்தபோது இல்லை இது ஆண்ட பரம்பரையின் இனத்தின் புலிக்கொடி என்றார்கள் ! இப்போது கொடியை மாற்றிவிட்டார்கள். உலகின் முதன் நிலை வல்லரசின் கொடியை பறக்கவிடுவது முன்னேற்றம் என்றுதான் எழுதியுள்ளேன்.

பிரபாகரன் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்ற பக்கமும் நான் போனதில்லை அவ்வாறு கதைத்தவர்களை நான் ஆதரித்ததும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. டக்களசுக்கு ஆதரவான கருத்து என்பது தமிழீழம் என்ற தனிநாடு சார்ந்த நிலையில் நான் முன்வைப்பதில்லை. மாறாக அனைத்து அமைப்புகளும் தமிழர்களை சீரளிக்கின்றது. சுரண்டுகின்றது. சுயநலமாகச் செயற்படுகின்றது. இது முடிந்த முடிப்பு. முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட கருத்து. இவ் முடிவு பெற்ற கருத்தில் இருந்து கெட்டவர்களில் யார் நல்லவர்கள் என்று யோசிக்கும் போது டக்கஸ் கே பி போன்றவர்கள் முன்நிலையில் இருக்கின்றார்கள். அற்பமேனும் மக்களுக்காக செய்கின்றார்கள்.  அவ்வளவுதான். இக்கருத்தை நான் பலதடவை இக்களத்தில் எழுதிவிட்டேன்.

யார் விட்டுக்கொடுத்தால் என்ன விடாப்பிடியாய் நின்றால் என்ன தமிழீழம் என்பது நடமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதில் மிகத்தெளிவோடு இருக்கின்றேன். தனித்துவமான ஒரு இனமாக தன்னை ஆழும் அடிப்படைத்தகுதி தமிழர்களுக்கு கிடையாது என்பதை தமிழர்களும் உணர்ந்துள்ளார்கள் உலகநாடுகளும் உணர்ந்துள்ளது. அடிமைத்தனத்தை இயல்பாகக் கொண்டவர்கள் அதையே இனத்தின் தேசீய ஆணிவேராகக்கொண்டவர்கள் அரசாள்வது பற்றி கற்பனை கூட செய்ய முடியாது. அந்தவகையில் தமிழீழம் தனியரசு என்ற பக்கம் நான் போவது இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தனி நாட்டு கோரிக்கைக்கு முதல் வெற்றி

கனடாவில் முதன் முதலாக தமிழ்மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து அரசு வன்னி தெருவை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் தமிழீழத்தையும் எங்களால் உருவாக்கமுடியும் என்று தமிழீழ கோரிக்கையாளர்கள் ஒப்பாரி வைப்பார்கள் :icon_mrgreen: . தமிழீழம் கிடைத்துவிடும்

வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்டவை வடக்குக்கிழக்கு எங்கும்.. புத்த கோயில்களையும்.. சிங்களவர்களையும் குடியமர்த்தி அதைச் சாதிக்க நினைக்கேக்க... தமிழீழம் கேட்கிறவை.. அதனை கனடாவில் வன்னித் தெரு அங்கீகாரத்தோடு ஆரம்பிக்கிறதில பெரிய தப்பு இருப்பதாகத் தெரியவில்லை..! முன்னையதை விட பின்னையது எவ்வளவே திறம்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நக்கல் என்று ஒன்றும் இல்லை.

அமரிக்காவுக்கு ஆதரவானவர்கள் அமரிக்கக்கொடியை தமிழீழத்துக்குமேல பற்கவிடலாம். சீனா ஆதரவாளர்கள் இந்திய ஆதரவாளர்கள் அவரவர் விரும்பிய கொடியை பறக்கவிடலாம். அரசை ஆதரிப்பவர்கள் சிங்கக் கொடியை பற்கவிடலாம். மக்களின் அவலங்களுக்காக கவனயீர்ப்பு செய்கையில் அவலங்களை முன்நிலைப்படுத்துங்கள் புலிக்கொடியை முன்நிலைப்படுத்தாதீர்கள் என்ற கருத்து இருந்தபோது இல்லை இது ஆண்ட பரம்பரையின் இனத்தின் புலிக்கொடி என்றார்கள் ! இப்போது கொடியை மாற்றிவிட்டார்கள். உலகின் முதன் நிலை வல்லரசின் கொடியை பறக்கவிடுவது முன்னேற்றம் என்றுதான் எழுதியுள்ளேன்.

பிரபாகரன் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்ற பக்கமும் நான் போனதில்லை அவ்வாறு கதைத்தவர்களை நான் ஆதரித்ததும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. டக்களசுக்கு ஆதரவான கருத்து என்பது தமிழீழம் என்ற தனிநாடு சார்ந்த நிலையில் நான் முன்வைப்பதில்லை. மாறாக அனைத்து அமைப்புகளும் தமிழர்களை சீரளிக்கின்றது. சுரண்டுகின்றது. சுயநலமாகச் செயற்படுகின்றது. இது முடிந்த முடிப்பு. முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட கருத்து. இவ் முடிவு பெற்ற கருத்தில் இருந்து கெட்டவர்களில் யார் நல்லவர்கள் என்று யோசிக்கும் போது டக்கஸ் கே பி போன்றவர்கள் முன்நிலையில் இருக்கின்றார்கள். அற்பமேனும் மக்களுக்காக செய்கின்றார்கள்.  அவ்வளவுதான். இக்கருத்தை நான் பலதடவை இக்களத்தில் எழுதிவிட்டேன்.

யார் விட்டுக்கொடுத்தால் என்ன விடாப்பிடியாய் நின்றால் என்ன தமிழீழம் என்பது நடமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதில் மிகத்தெளிவோடு இருக்கின்றேன். தனித்துவமான ஒரு இனமாக தன்னை ஆழும் அடிப்படைத்தகுதி தமிழர்களுக்கு கிடையாது என்பதை தமிழர்களும் உணர்ந்துள்ளார்கள் உலகநாடுகளும் உணர்ந்துள்ளது. அடிமைத்தனத்தை இயல்பாகக் கொண்டவர்கள் அதையே இனத்தின் தேசீய ஆணிவேராகக்கொண்டவர்கள் அரசாள்வது பற்றி கற்பனை கூட செய்ய முடியாது. அந்தவகையில் தமிழீழம் தனியரசு என்ற பக்கம் நான் போவது இல்லை. 

வணக்கம் சுகன் எதற்காக தமிழிழம் கிடைக்காது என்ட முடிவுக்கு இப்பவே வந்தீர்கள்?
தலைவராலேயே முடியாமல் போனதை இனி மேல் யார் வந்தாலும் கிடைக்காது என்ட எண்ணம :unsure:
 
எதை வைத்து தனித்துவமாக,எம்மை நாமே ஆளும் தகுதி எமக்கு இல்லை என சொல்கிறீர்கள்?
தற்போது நாம் பிளவு பட்டு கிடப்பதாலா :unsure:
 
அடிமைத் தனத்திற்கும்,அடக்குமுறைக்கும் எதிராகத் தான் 60 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டு இருக்கிறோம்.எமக்குள் ஒற்றுமை இன்மையால் தோற்றுப் போகிறோம்.ஆனாலும் என்றாவது ஒரு நாள் வெல்வோம் என்ட நம்பிக்கை இருக்குது :)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடி இல்லாமல் முரசறைவோ...

அனுபவம் புதுமை அவரிடம் கண்டேன்...

  • கருத்துக்கள உறவுகள்

யார் விட்டுக்கொடுத்தால் என்ன விடாப்பிடியாய் நின்றால் என்ன தமிழீழம் என்பது நடமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதில் மிகத்தெளிவோடு இருக்கின்றேன். தனித்துவமான ஒரு இனமாக தன்னை ஆழும் அடிப்படைத்தகுதி தமிழர்களுக்கு கிடையாது என்பதை தமிழர்களும் உணர்ந்துள்ளார்கள் உலகநாடுகளும் உணர்ந்துள்ளது. அடிமைத்தனத்தை இயல்பாகக் கொண்டவர்கள் அதையே இனத்தின் தேசீய ஆணிவேராகக்கொண்டவர்கள் அரசாள்வது பற்றி கற்பனை கூட செய்ய முடியாது. அந்தவகையில் தமிழீழம் தனியரசு என்ற பக்கம் நான் போவது இல்லை

பாதுகாப்பான ஒரு இடத்திலிருந்து கொண்டு இப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு ஆராய்ச்சி  எதுவும் தேவையில்லை

இங்கு பலரும் கவலைப்படுவது

எழுதுவது

ஆதங்கப்படுவது.....

துன்பப்படும்

நசுக்கப்படும்

தொடர்ந்து வேட்டையாடப்படும் அந்த மக்களுக்கு என்ன தீர்வு என்று தான்

அதற்கு உங்களது இந்த முடிவு தேவையற்றது. பொறுப்பற்றது. :( 

வணக்கம் சுகன் எதற்காக தமிழிழம் கிடைக்காது என்ட முடிவுக்கு இப்பவே வந்தீர்கள்?
தலைவராலேயே முடியாமல் போனதை இனி மேல் யார் வந்தாலும் கிடைக்காது என்ட எண்ணம :unsure:
 
எதை வைத்து தனித்துவமாக,எம்மை நாமே ஆளும் தகுதி எமக்கு இல்லை என சொல்கிறீர்கள்?
தற்போது நாம் பிளவு பட்டு கிடப்பதாலா :unsure:
 
அடிமைத் தனத்திற்கும்,அடக்குமுறைக்கும் எதிராகத் தான் 60 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டு இருக்கிறோம்.எமக்குள் ஒற்றுமை இன்மையால் தோற்றுப் போகிறோம்.ஆனாலும் என்றாவது ஒரு நாள் வெல்வோம் என்ட நம்பிக்கை இருக்குது :)

என்றாவது ஒரு நாள் என்ற உங்கள் நம்பிக்கை நனவாகவேண்டுமானால் அந்த ஒருநாளில் தமிழரின் இருப்பு தமிழர் தாயகத்தில் நிலைத்திருக்கவேண்டும். அரசியல் பலத்துடன் நிலைத்திருக்கவேண்டும். அதற்கான எந்த முயற்சியும் அடிப்படையில் இல்லை.

நாம் எப்போதும் பிளவுபட்டுத்தான் கிடக்கின்றோம். இது சரிப்படுத்த முடியாத அளவுக்கு பிளவுகள் விரிவடைகின்றதே தவிர ஒன்றுபட முடியவில்லை. முன்னர் சமூக ரீதியாக பிளவுட்டுக்கிடந்தோம். அதிலிருந்து ஒற்றுமைப்பட சிங்களவர் இனம் என்ற ஒரு அடயாளத்தை எமக்கு சுட்டிக்காட்டினார்கள். நீங்கள் எல்லாம் சாதி மதம் பிரதேச வர்க்க வேற்றுமைகளுக்கு அப்பால் ஒரு தேசீய இனம் என்று அடிபோட்டார்கள். அதன் பிறகு முன்னை விட அதிகமாக ஆழமாக பிளவுபட்டோம். எமது விரிசல்களில் சிங்களம் தனது அரசியல் பலத்தை கட்டிஎழுப்பி விட்டது. இது தலைக்குமேல் போன வெள்ளம் போன்றது. நாம் ஒன்றுபடுவதற்கான எந்த முயற்சியையும் விருப்பத்தையும் அடிப்படையில் இன்றுவரை கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. இதன் பிறகும் நாம் அதன் அவசியத்தை உணரத்தலைப்படவில்லை.

ஒரு சராசரித்தமிழன் தனது அதிகாரத்தை பாரம்பரியமாக தனக்கு கீழான ஒரு தமிழனிடமே காட்ட முற்படுகின்றான். தனது சமூக அடயாளத்தை தன்னினத்தில் உள்ள ஒருவனிடம் மோதி பெற்றுக்கொள்ள முற்படுகின்றான். அவனது அதிகார எல்லை என்பது அவனது இனத்துக்குள்ளகவே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுவிட்டது. இது இரண்டுவிதமான விழைவுகளை தருகின்றது. ஒன்று நாம் எம்மை அழித்துக்கொள்வோம் (தற்கொலைக்கு ஒப்பானது) இரண்டாவது என்னுமொரு இனத்துக்கு இரையாவோம் (கொலை செய்யும்படி தலையை கொடுப்போம்) இது இரண்டும் தான் எமக்கு நடந்துவருகின்றது. இந்த நிலையில் முக்கியமான ஒரு விசயம் "இது எமது அறிவுக்கு தெரிந்தே நடக்கின்றது" என்பதுதான். அதனால் உலகின் எந்த ஒரு நாடும் எமக்கு உதவுவதற்கு சாத்தியம் இல்லை. இவ்வாறான நிலையில் தனித்துவமான இனம் தனியரசாக ஆழுவதற்கான கனவு நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.

மேலும் இன்றய நிலையில் தாயகத்தில் உள்ள தமிழனுக்கு தனிநாடா வெளிநாடா என்று கேட்டால் வெளிநாடே தேர்வாக உள்ளது. அதற்கான வழியை காட்டி நிற்பவர்கள் நாங்கள். தனிநாட்டுக்கான சிந்தனையில் மாற்றுத் தெரிவை முன்வைத்துவிட்டோம். எமது வாழ்வே தனிநாட்டுக்கான சாத்தியப்பாட்டை தகர்த்தெறிந்து நிற்கின்றது.

சரி தாயகத்தில் உள்ளவர்கள் அங்கு பாதுகாப்பாகவும் பொருளாதரரீதியில் தலைநிமிர்வதற்கும் அதனூடாக அவர்கள் இருப்பு தக்கவைக்கப்படவும் புனர்வாழ்வு போர்க்குற்றம் குறித்து இங்கிருந்து முயற்சி எடுப்பதற்கு பதிலாக ந க அரசு அமர்வுள் பாராளுமன்றம் அதிகாரப்போட்டி அடயளம்தேடும்போட்டி என்றே நகர்கின்றோம். தனியரசுக்கான அத்தனை வழிகளையும் நாமே அடைத்துக்கொண்டு அதுகுறித்து கனவுகாண்பது எந்தவிதத்தில் பொருத்தமானது என்று எனக்குப் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி பறக்க விட்டதற்கு எதிராக பிரச்சாரம் செய்த அதே ஆட்கள் அமெரிக்க கொடி பறக்கிறது என்று நக்கல் அடிப்பவர்கள் தமிழர்கள் எது செய்தாலும் நக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக எழுதுகிறார்களே தவிர தமது இனம் உருப்பட ஒரு போதும் கருத்து எழுதுவதில்லை.

வணக்கம் சண்டமாருதன்.

இப்படியான இணைப்புகள் சாதாரண தொண்டர்களால் தான் இணைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.விடயம் தெரிந்தவர்கள் முன்வந்து இவர்களுக்கு உதவலாம்.பின்னிருந்து விமர்சிப்பதால் ஏதும் இல்லை.

எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கும் போது எங்கோ ஓர் மூலையில் உள்ளதை பெரிது பண்ணாமல் நல்ல விடயங்களை உள் வாங்குங்கள்.

அடுத்து இரண்டு நாட்கள் பல நாடுகளிலும் இருந்து பட்டதாரிகள் பேராசிரியர்கள் வழக்கறிஞர்கள் என பலரும் வந்து உரையாற்ற இருக்கின்றனர்.நேரடித் தொலைத் தொடர்பும் ஏற்படுத்த உள்ளதாக கூறினார்கள்.என்ன தான் சொல்கிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கவும்.முடிந்தால் இணைப்பைத் தருகிறேன்.

நாடுகடந்த அரசு என்பதன் ஆரம்பத்தில் இருந்தே இது தவறானது என்ற கருத்தை எழுதிவருகின்றேன். இவ்வாறன போக்கு எமது முரண்பட்ட சமுதாயத்துக்கும் சூழ்நிலைக்கும் ஒத்துவரது என்பதை பலவிதத்தில் பல திரிகளில் எழுதிவருகின்றேன். ந க அரசுக்குப் பதிலாக உலகளாவிய தமிழர்களை ஒருங்கிணைத்த ஒரு மனிதநேய அமைப்பு புனர்வாழ்வு அமைப்பு பெருத்தமானது என்பதை நடுகடந்த அரசு என்பது உருவாக முன்னரே இந்தக்களத்தில் பல தடவை வாதிட்டுள்ளேன். அவ்வாறு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தால் இன்று இவ்வாறான பாராளுமன்ற அமர்வுகள் சாசனங்கள் என்பதற்குப் பதிலாக காணி அபகரிப்புக்கு எதிரான மநாடு பேர்குற்றத்துக்கு நீதிகேட்கும் மாநாடு மீள் குடியேற்றத்தை வலியுறுத்தும் மாநாடு என்றே தொடர்ந்திருக்கும். இவையே தாயகத்தில் வாழும் தமிழர்களின் யதார்த்த நிலையுடன் இணையும். ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்கான அடித்தளத்தை உருவாக்கும். தமிழ்த்தேசீயம் என்ற கருத்தியலும் சிந்தனையும் உணர்வும் செயற்பாடாக தாயகத்தை நோக்கி நகரவேண்டும். ந க அரசும் அதன் செயற்பாடுகளும் இதற்கு முற்றுமுழுதாக எதிர்த்திசையில்  இருக்கின்றது. உங்கள் அனைத்து செயற்பாடுகளும் தாயக மக்களை தொடவும் இல்லை சிங்களத்தை எதிர்க்கவும் இல்லை தாயக மக்கள் அவலங்களை சர்வதேச முற்றத்தில் கொண்டு செல்லும் முயற்சியும் இல்லை. மக்களை ஒருங்கிணைக்கும் அடிப்படையும் இல்லை. யதார்த்தத்துக்கு ஒரு துளியும் பொருந்தாத வெறும் சிம்மாசனக் கனவுகளும் அதைச் சுற்றிய அடயாளந்தேடலும் என அர்த்தமற்ற அடிப்படையை கொண்டுள்ள ந க அரசை பற்றி கருத்துக்கூற எதுவும் இல்லை. ந க அரசுக்குப் பதிலாக நாடு கடந்த மனிதநேய அமைப்பை முன்நிறுத்துங்கள் அமர்வுகள் வாக்கெடுப்புகள் அரசியல் சாசனங்கள் யாகங்கள் போன்றவற்றுக்குப் பதிலாக புனர்வாழ்வு போர்க்குற்றம் மீள் குடியேற்றம் என்பதை முன்னெடுங்கள் உங்கள் பின்னால் வருகின்றோம். அதுவரை உங்களை எதிர்ப்பது கடமை.

இவர்கள் இவ்வாறான நிகழ்வுகளுக்குச் செலவழிக்கும் பணத்தையாவது அங்குள்ள மக்களுக்குச் செலவழித்தால் பிரியோசனமாக இருக்கும்.  ஆனால், இவர்களோ மக்களின் பணத்தை இவ்வாறான வீண்விரய விடயங்களுக்கே பயன்படுத்துகிறார்கள்.   இவர்கள் மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று தாங்கள் ஊர்சுற்றத்தான் பயன்படுத்துகிறார்களே தவிர, இதுவரை பிரியோசனமாக எதுவும் செய்ததில்லை.  அப்படிச் செய்ததாக யாராவது கூறின், அதனை மக்கள்முன் வையுங்கள்.  அதேபோல், இந்த சுதந்திர சாசனத்தை எத்தனை பேர் பூர்த்தி செய்தார்கள் என்றும், அது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் எத்தனை வீதமானோர் என்பதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்று வைத்துக் கொள்வோம்.  அதில் ஒரு ஐயாயிரம் பேராவது இந்த சாசனத்தைப் பூர்த்தி செய்திருப்பார்களா?  அப்படி ஐயாயிரம் பேர் பூர்த்தி செய்திருப்பின், அதுவே 0.05 வீதம்தான் வருகிறது.  வெறும் 0.05 வீதம் மக்களின் விருப்பை மட்டும் வைத்துக் கொண்டு இவர்களால் எப்படி தமிழ்மக்களுக்காகப் போராட முடியும்?  மக்களைப் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.  தங்கள் பதவி, புகழ், பணம் மட்டுமே இவர்களுக்கு முக்கியம்.   அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் நாடகங்களே இவ்வாறான அமர்வுகள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது கிரியேற்றிவிற்றியாகச் செய்தாலும் ஏகப்பட்ட குறைசொல்லல்கள்!!

தனித் தீவு வாங்கிக் குடியேற்றுவதை விடப் பரவாயில்லைத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இவ்வாறான நிகழ்வுகளுக்குச் செலவழிக்கும் பணத்தையாவது அங்குள்ள மக்களுக்குச் செலவழித்தால் பிரியோசனமாக இருக்கும்.  ஆனால், இவர்களோ மக்களின் பணத்தை இவ்வாறான வீண்விரய விடயங்களுக்கே பயன்படுத்துகிறார்கள்.   இவர்கள் மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று தாங்கள் ஊர்சுற்றத்தான் பயன்படுத்துகிறார்களே தவிர, இதுவரை பிரியோசனமாக எதுவும் செய்ததில்லை.  அப்படிச் செய்ததாக யாராவது கூறின், அதனை மக்கள்முன் வையுங்கள்.  அதேபோல், இந்த சுதந்திர சாசனத்தை எத்தனை பேர் பூர்த்தி செய்தார்கள் என்றும், அது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் எத்தனை வீதமானோர் என்பதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்று வைத்துக் கொள்வோம்.  அதில் ஒரு ஐயாயிரம் பேராவது இந்த சாசனத்தைப் பூர்த்தி செய்திருப்பார்களா?  அப்படி ஐயாயிரம் பேர் பூர்த்தி செய்திருப்பின், அதுவே 0.05 வீதம்தான் வருகிறது.  வெறும் 0.05 வீதம் மக்களின் விருப்பை மட்டும் வைத்துக் கொண்டு இவர்களால் எப்படி தமிழ்மக்களுக்காகப் போராட முடியும்?  மக்களைப் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.  தங்கள் பதவி, புகழ், பணம் மட்டுமே இவர்களுக்கு முக்கியம்.   அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் நாடகங்களே இவ்வாறான அமர்வுகள். 

சுதந்திர சாசனத்தை நீங்கள் பூர்த்தி செய்தீர்களா?

இது பற்றி தெரிய படுத்தி வேறு நபர்களை பூர்த்தி செய்ய தூண்டிநீர்களா?
உங்கள் தூண்டுதலால் எத்தனை பேர் பூர்த்தி செய்தார்கள்?
 
தமிழச்சியாக இருந்து கொண்டு நீங்கள் செய்வது பற்றி ஒரு அலசலுக்கு  நீங்கள் தயாரா?
 
சொந்த பணத்தில் பயணங்கள் செய்து சில முக்கிய விடயங்கள் நாடு நோக்கி செய்வதற்கான வெற்றிடங்கள் நாடு கடந்த அரசில் நிறையவே உண்டு. 
ஏன் அதில் ஒரு வெற்றிடத்தை நீங்கள் இன்னமும் நிரப்பவில்லை??
 
(சொகுசு கதிரையில் அமர்ந்து தட்டச்சு செய்ய வசதியாக இருக்கிறதா?)

வடஅமெரிக்காவில் தமிழ்மக்களின் தொகை 4 இலட்சத்தைத் தாண்டும்.  சில வருடங்களுக்கு முன்னர்கூட, இங்கிருந்து ஆயிரக்கணக்கில் 10 - 12  மணிநேரங்கள் பயணங்கள் செய்து, அங்கு தங்கியிருந்து தமது போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்திருந்தனர்.   ஆனால், இன்றோ, 40 பேரோடு ஒரு அரசாங்கத்தின் முரசறைவு நடந்திருக்கிறது.   ஆரம்பகாலத்திலிருந்தே மக்கள் இவர்களுக்கு ஆதரவு தர முன்வந்திருந்தனர்.   இவர்களுக்குப் பணம் வசூலிப்பதற்கு மட்டுமே மக்களின் ஆதரவு தேவையாக இருந்தது.   மற்றைய விடயங்களில் மக்களை உதாசீனப்படுத்தி அவர்களின் ஆதரவுக் கரங்களை நிராகரித்துத் தமது சொந்தப் பெயருக்கும் புகழுக்காகவும் மட்டுமே செயற்பட்டு வருகின்றனர்.   இதற்குப் பிரதமரும் விதிவிலக்கல்ல என்பதை நான் நன்கே அறிந்து வைத்திருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  

சுதந்திர சாசனத்தின் பிரதிகள் என்னிடம் இருக்கின்றன.  ஆனால், அதிலுள்ள கேள்விகள் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடியளவிலான வலுவுடன் இருக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிந்ததனால் அதனை நிரப்பவோ மற்றவர்களை ஊக்கப்படுத்தவோ நான் விரும்பவில்லை.  40 பேரோடு முரசறிவித்த ஒரு சாசனத்தை ஏதாவதொரு நாடுதன்னும் ஏற்றுக் கொள்ளுமா?  ஆகக் குறைந்தபட்சம் தென்சூடான் போன்றதொரு நாடுதன்னும் ஏற்றுக் கொள்ளுமா? 

நான், சொகுசு கதிரையில் அமர்ந்து தட்டச்சு செய்பவளல்ல.  நான் சொந்த சொலவில் பிரதமர் வரை சென்று வந்தவள்தான்.  வேலையிலிருந்து விடுமுறை எடுத்து இந்த நாடுகடந்த அரசாங்கச் செயற்பாடுகளுக்காக உழைத்தவள்.  அவர்களின் செயற்பாடுகள் தாயக விடுதலைக்கும், ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக இருப்பதை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்களோடு அவை பற்றி விவாதித்தது மட்டுமின்றி, பிரதமர்வரைகூட எடுத்துச் சென்றிருக்கிறேன்.  என் போன்று, விசுவாசமாக தாயக விடுதலையையே நோக்காகக் கொண்டு பணியாற்றுபவர்களை இந்த வெற்றிடங்களில் வைத்திருக்க மாட்டார்கள்.  என் போன்றவர்களின் செயற்பாடுகள் எல்லாம் விழலுக்கிறைக்கும் நீர் என்பது குறுகிய காலத்திலேயே அறிந்ததனால் அங்கிருந்து நானாக விலகியவள்.    பிரதமரோடு நான் மட்டுமல்ல இங்கிருந்து பலர் கதைத்தார்கள்.  கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.    ஆனால், எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

தமிழச்சியாக நான் இதுவரை எனது கடமைகளிலிருந்து தவறவில்லை.  இப்போதும் எனது கடமையைச் செய்து கொண்டுதானிருக்கிறேன்.  எதிர்காலத்திலும் செய்வேன்.  வெளிவரவேண்டிய நேரத்தில் அவை தானாக வெளிவரும். 

முரசரைவு எதிர்பார்த்த வெற்றிகளுடன் நடந்தேறியது. 40 பேர் என்பது பிரச்சார எண் இலக்கமாக இருக்கலாம். அது எங்கிருந்து வந்ததது என்ற முலத்தை சுட்டிக்கட்டினால் ஏன் அப்படி இலக்கம் ஒன்றை வெளிவிடுகிறார்கள் என்பது புரியும். நாடு கடந்த அரசின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் தமிழீழ நட்புநாடுகளின் பிரதி நிதிகளுடனும் நிறைவேற்றி வைக்கப்பட்டது. இது திறந்த வெளிக்கூட்டமாக நடத்தபடவில்லை. மண்டபம் நிறந்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

வடஅமெரிக்காவில் தமிழ்மக்களின் தொகை 4 இலட்சத்தைத் தாண்டும்.  சில வருடங்களுக்கு முன்னர்கூட, இங்கிருந்து ஆயிரக்கணக்கில் 10 - 12  மணிநேரங்கள் பயணங்கள் செய்து, அங்கு தங்கியிருந்து தமது போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்திருந்தனர்.   ஆனால், இன்றோ, 40 பேரோடு ஒரு அரசாங்கத்தின் முரசறைவு நடந்திருக்கிறது.   ஆரம்பகாலத்திலிருந்தே மக்கள் இவர்களுக்கு ஆதரவு தர முன்வந்திருந்தனர்.   இவர்களுக்குப் பணம் வசூலிப்பதற்கு மட்டுமே மக்களின் ஆதரவு தேவையாக இருந்தது.   மற்றைய விடயங்களில் மக்களை உதாசீனப்படுத்தி அவர்களின் ஆதரவுக் கரங்களை நிராகரித்துத் தமது சொந்தப் பெயருக்கும் புகழுக்காகவும் மட்டுமே செயற்பட்டு வருகின்றனர்.   இதற்குப் பிரதமரும் விதிவிலக்கல்ல என்பதை நான் நன்கே அறிந்து வைத்திருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  

சுதந்திர சாசனத்தின் பிரதிகள் என்னிடம் இருக்கின்றன.  ஆனால், அதிலுள்ள கேள்விகள் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடியளவிலான வலுவுடன் இருக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிந்ததனால் அதனை நிரப்பவோ மற்றவர்களை ஊக்கப்படுத்தவோ நான் விரும்பவில்லை.  40 பேரோடு முரசறிவித்த ஒரு சாசனத்தை ஏதாவதொரு நாடுதன்னும் ஏற்றுக் கொள்ளுமா?  ஆகக் குறைந்தபட்சம் தென்சூடான் போன்றதொரு நாடுதன்னும் ஏற்றுக் கொள்ளுமா? 

நான், சொகுசு கதிரையில் அமர்ந்து தட்டச்சு செய்பவளல்ல.  நான் சொந்த சொலவில் பிரதமர் வரை சென்று வந்தவள்தான்.  வேலையிலிருந்து விடுமுறை எடுத்து இந்த நாடுகடந்த அரசாங்கச் செயற்பாடுகளுக்காக உழைத்தவள்.  அவர்களின் செயற்பாடுகள் தாயக விடுதலைக்கும், ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக இருப்பதை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்களோடு அவை பற்றி விவாதித்தது மட்டுமின்றி, பிரதமர்வரைகூட எடுத்துச் சென்றிருக்கிறேன்.  என் போன்று, விசுவாசமாக தாயக விடுதலையையே நோக்காகக் கொண்டு பணியாற்றுபவர்களை இந்த வெற்றிடங்களில் வைத்திருக்க மாட்டார்கள்.  என் போன்றவர்களின் செயற்பாடுகள் எல்லாம் விழலுக்கிறைக்கும் நீர் என்பது குறுகிய காலத்திலேயே அறிந்ததனால் அங்கிருந்து நானாக விலகியவள்.    பிரதமரோடு நான் மட்டுமல்ல இங்கிருந்து பலர் கதைத்தார்கள்.  கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.    ஆனால், எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

தமிழச்சியாக நான் இதுவரை எனது கடமைகளிலிருந்து தவறவில்லை.  இப்போதும் எனது கடமையைச் செய்து கொண்டுதானிருக்கிறேன்.  எதிர்காலத்திலும் செய்வேன்.  வெளிவரவேண்டிய நேரத்தில் அவை தானாக வெளிவரும். 

நன்றி  தமிழச்சி

எனக்கு இது தெரியும்

இருந்தாலும்  ஒழித்து மறைத்த எழுதி  பிரயோசனமில்லை

எல்லாவற்றையும் இனி  வெளியிடும் காலம்

மக்களுக்கு உண்மை தெரியணும்.

அனுபவப்பட்டவர்களின் கருத்தக்கள் முக்கியம்.

நானும் இங்கு நடந்த கூட்டத்துக்கு   போயிருந்தேன்

20 இலிருந்து 30 பேருக்குள்தான் வந்திருந்தார்கள்.

படிவம் எடுத்த வந்தேன்

அதன் அடுத்த கட்டமாக என்னிடம் வந்து பெறுவதாக சொல்லியிருந்தார்கள்.  செய்யவில்லை.

(அச்சடித்த படிவங்களுக்கே பணம் கொடுபடவில்லை பணம் பெரும் சிக்கலாக இருப்பதாக  சொன்னார்கள். 100 ஈரோக்கள் பங்களிப்பு செய்தேன். பற்றுச்சீட்டு தந்தார்கள்.)

இதை இங்கு பதிவதற்கு காரணம் எந்த காழ்ப்புணர்வோ 

அவர்களுக்கு எதிராகவோ அல்ல.

மக்கள் எதையோ எதிர்பார்த்தபடி ஆதரவு வளங்கியபடி பங்களிப்புசேய்தபடிதான் உள்ளனர் என்பதை உறுதி  செய்யவே.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தமது விருப்பங்கள் நிறைவேறவும், குறைகள் நீங்ககவும் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்து மனத் திருப்தி அடைவது மாதிரித்தான் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க எவர் எதையும் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு வந்தால் தங்கள் பங்களிப்புக்களை வழங்குகின்றனர். ஆனால் எல்லா விருப்பங்களும் எப்போதும் நிறைவேறுவதில்லை. எல்லாக் குறைகளும் நீங்குவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தமிழச்சி

எனக்கு இது தெரியும்

இருந்தாலும்  ஒழித்து மறைத்த எழுதி  பிரயோசனமில்லை

எல்லாவற்றையும் இனி  வெளியிடும் காலம்

மக்களுக்கு உண்மை தெரியணும்.

அனுபவப்பட்டவர்களின் கருத்தக்கள் முக்கியம்.

நானும் இங்கு நடந்த கூட்டத்துக்கு   போயிருந்தேன்

20 இலிருந்து 30 பேருக்குள்தான் வந்திருந்தார்கள்.

படிவம் எடுத்த வந்தேன்

அதன் அடுத்த கட்டமாக என்னிடம் வந்து பெறுவதாக சொல்லியிருந்தார்கள்.  செய்யவில்லை.

(அச்சடித்த படிவங்களுக்கே பணம் கொடுபடவில்லை பணம் பெரும் சிக்கலாக இருப்பதாக  சொன்னார்கள். 100 ஈரோக்கள் பங்களிப்பு செய்தேன். பற்றுச்சீட்டு தந்தார்கள்.)

இதை இங்கு பதிவதற்கு காரணம் எந்த காழ்ப்புணர்வோ 

அவர்களுக்கு எதிராகவோ அல்ல.

மக்கள் எதையோ எதிர்பார்த்தபடி ஆதரவு வளங்கியபடி பங்களிப்புசேய்தபடிதான் உள்ளனர் என்பதை உறுதி  செய்யவே.

ஏன் விசுகு அண்ணா.. நீங்கள் இணையத்தில் தானே அதிகம் நிற்கிறீர்கள். இணையத்தில் அந்தப் படிவம் இருந்தது. அதனை நிரப்பி இருந்தாலோ.. அல்லது மற்றவர்கள் அதனை நிரப்ப உதவி இருந்தாலோ போதுமே..!

மேலும் அவர்கள் ஆள் பற்றாக்குறை என்றும் தொண்டர்கள் தேவை என்றும் சொன்னார்கள். இணையத்திலும் விளம்பரப்படுத்தி இருந்தார்கள். எத்தனை பேர் அதில் இணைந்து செயற்பட முன் வந்தார்கள்...??!

நானும் நண்பர்களும் படிவத்தை இணையத்தில் நிரப்பினோம்..! எங்களுக்கு அவர்களின் கஸ்டங்களை.. நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களைப் புரிந்து கொள்வது தான் இப்போது நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஆதரவின் வடிவமும் கூட..! :icon_idea::)

நாடு கடந்த தமிழீழ அரசு பல வெளியார் உள்வீட்டு குழப்பவாதிகளின் குளப்படிகள் மத்தியிலும்.. சுதந்திர தமிழீழ சாசன முரைசறைவைச் செய்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கதும் வரவேற்கத்தக்கதும் ஆகும். பாடுபட்ட உறவுகளுக்கும் பங்களித்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விசுகு அண்ணா.. நீங்கள் இணையத்தில் தானே அதிகம் நிற்கிறீர்கள். இணையத்தில் அந்தப் படிவம் இருந்தது. அதனை நிரப்பி இருந்தாலோ.. அல்லது மற்றவர்கள் அதனை நிரப்ப உதவி இருந்தாலோ போதுமே..!

மேலும் அவர்கள் ஆள் பற்றாக்குறை என்றும் தொண்டர்கள் தேவை என்றும் சொன்னார்கள். இணையத்திலும் விளம்பரப்படுத்தி இருந்தார்கள். எத்தனை பேர் அதில் இணைந்து செயற்பட முன் வந்தார்கள்...??!

நானும் நண்பர்களும் படிவத்தை இணையத்தில் நிரப்பினோம்..! எங்களுக்கு அவர்களின் கஸ்டங்களை.. நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களைப் புரிந்து கொள்வது தான் இப்போது நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஆதரவின் வடிவமும் கூட..! :icon_idea::)

இந்த கருத்தில் எந்தவித மறுப்பும் கிடையாது நெடுக்கு..

உண்மையில் நான் அப்படி செய்திருக்கலாம்.

அத்துடன் ஐந்து விண்ணப்பப்படிவங்கள்  தந்துவிட்டார்கள். அதை உறவுகளிடம் கொடுத்தேன்.

நான் வரவேண்டாம்

மினக்கட வேண்டாம் என்று  சொல்லியபோதும்

இல்லை வருவோம் என்றார்கள்

அதைச்செய்யவில்லை

அதையே  இங்கு குறிப்பிட்டேன்.  செயல் முறையில்  ஒழுங்கு வேண்டுமல்லவா?

இதற்கு அவர்களை மட்டும் குறைகூற முடியாது. 

அவர்களது நேரமின்மை மற்றும் ஆட்பலமின்மையை  அறிவேன்.

சரி

பிழை   இரண்டையும் எழுதணும் என்பதற்காகவே இங்கு பதிந்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.