Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாவத்தின் சம்பளம்- த .அகிலன்

Featured Replies

தலைப்பும் பொருத்தமாய்தான் இருக்கிறது."பாவத்தின் சம்பளம்"

  • Replies 68
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தன் வீட்டிற்கு இழப்பு வந்ததால் தனது ஆதங்கத்துக்கு எழுதுவதில் தவறில்லை.. ஆனால் அதற்கு முன் விசிலடித்தவராக இருந்தால் அனுதாபம் வர வழியில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று இயக்கங்கள் செய்ததை மக்கள் மறக்கிற அளவுக்கு   கடசி நேரம்  புலிகளும்  மக்களை கொடுமைப்படுத்தினார்களே அதுக்கு நீங்கள் என்ன சொல்ல போறிங்கள்?

பிழை இல்லை என்று எங்கு சொல்லியுள்ளேன் ??
 
கடைசி நேரம் மக்களை கொடுமை படுத்தியவர்களில் கருணா, ஒட்டுக்குழுக்களின் பங்கு பற்றி உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்.மேலும் தகவல் தேவை எனில் தனி மடலில் தரலாம்.
தீபச்செல்வனின் செவ்வியையும் ஒரு தரம் பார்க்கவும்.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு உதவி தேவை. அவரிடமுள்ள புலம்பெயர் தமிழ்மக்களின் பணத்தை அங்கு கஷ்டப்படும் வறிய மக்களுக்கு உதவ சொல்வீர்களா?

http://www.facebook.com/sencholai.sencholai?fref=ts

http://www.anbuillam.nerdolanka.org/index.php/2012-03-19-13-34-12/layout

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அனைவருக்கும் தமக்கு விருப்பமான மொழியில் பேசினால் மட்டுமே இனிக்கின்றது. கட்டாயமாக போராட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டவரின் அண்ணரும், எவரையும் இழக்காமல் சொந்தம் அனைவரையும் வெளிநாட்டுக்கு அழைந்து வந்தவரும் ஒரே மொழியில் தான் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனநிலையில் தான் நாம் இங்கு இருக்கின்றோம்.

அனைவரும் உரையாடக் கூடிய வெளி இன்று இருக்கும் போதும் கூட ஒரே வகையான உரையாடலை மட்டுமே கேட்க நினைப்பதும் அவ்வாறு எமக்கு விருப்பமில்லாத ஒரு உரையாடலைக் கேட்டவுடன் அந்த பொது வெளியையே வெறுத்து போவதும் துயரமானது.

யார் எங்கு நின்று சொன்னாலும் ..............

இங்கு இதுவரையில் வராத கடவுள் வந்து சொன்னாலும்...........
 
உண்மையும் நியாயமும் ஒன்றுதானே????
 
அதை ஏன் மாற்றி மாற்றி சொல்ல வேண்டும்.
 
(கட்டுரையாளருக்கு  இறந்த உடல் துவராகவாக இருந்த போது  இனித்திருக்கிறதா?  அடுதாவன் இந்த மரணங்களை மறந்து மட்டுமே இருக்கிறான். இவர்கள்தான் பிணங்களின் சிதைகளை புடுங்கி கட்டுரை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.)
 
இவர் இதுவரையில் தமிழருடைய சுதந்திர போர் சரியா? தவறா? என்று சொல்லவில்லை.
அதை சொல்லிவிட்டால் கட்டிரையில் பாதியை தானே அழிக்க  வேண்டும் என்று விட்டு விட்டார் போல.

மக்களுக்காக ஆரம்பிக்க பட்ட போராட்டம் இறுதிவரை மக்களின் விருப்பம் என்ன என்று தெரியாமலே அழிந்து போய்விட்டது.

எனக்கு தெரிந்து மக்களின்  விருப்பம் என்ன என்று தெரிந்த ஒரே ஆள் நீங்கள்தான்.

எனக்கு ஒரு சின்ன ஆசை, நீங்கள் இறக்கு முன்பு அதை யாரிடமாவது சொல்லிவிடுங்கள். அடுத்த சந்ததி அறிந்து கொள்ள வசதியாய் இருக்கும். 

உங்கள் பங்களிப்பு!
pixel.gif

Commercial Bank A/C 161 0046482 Code:CCEYLKLX Vavuniya, Sri Lanka Account Name: North-East Rehabilitation & Development Organization

NERDO UK - Barclays Bank A/C 53048950 Sort Code : 209689.

ஏன் இந்த அன்பளிப்பு கேட்கின்றார்?

கேடி இருக்கிற கோடிகளை செலவலித்தாலே வடகிழக்கு ஏழைகளுக்கு பல ஆண்டுகளுக்கு போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

 ஆனால் அன்று நான் ஜரோப்பிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து  பலரை வெளியே கொண்டுவந்திருந்தேன்.

அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பினை தரமுடியுமா ? பல போர்க்கைதிகள் , அரசியல் கைதிகளுக்கான விடுதலைக்கு நீங்கள் குறித்த ஐரோப்பிய அமைப்பிடமிருந்து உதவி பெற முடியுமா ? உதவி பெற முடியுமென்றால் விபரத்தை தந்துதவுங்கள்.

கே பி யருக்கும்  எனக்குமான தொடர்பு  84 களில் தொடங்கியது  ஆனால் அன்று அவரிற்கும் எனக்குமான தொடர்பு விடுபட்ட நிலையிலேயெ  இருந்தது.  இப்பொழுது மீண்டும்  என்னுடன் தொடர்பிலேயே உள்ளார்   உங்களிற்கு ஏதும் உதவி தேவைப் படின் சொல்லவும்  நன்றி

கே.பி சிபார்சுகள் மூலம் மட்டுமா உதவுவார் ? அப்போ கே.பியும் உள்மன சுத்தியோடு உதவவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பினை தரமுடியுமா ? பல போர்க்கைதிகள் , அரசியல் கைதிகளுக்கான விடுதலைக்கு நீங்கள் குறித்த ஐரோப்பிய அமைப்பிடமிருந்து உதவி பெற முடியுமா ? உதவி பெற முடியுமென்றால் விபரத்தை தந்துதவுங்கள்.

கே.பி சிபார்சுகள் மூலம் மட்டுமா உதவுவார் ? அப்போ கே.பியும் உள்மன சுத்தியோடு உதவவில்லையா ?

சாந்தி 2009 மே மாதம் போராளிகள் சரணடைந்து கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் பற்றிய விடயங்களை சர்வதேசத்திற்கு எடுத்த செல்ல  பொது அமைபுக்களுடனும்  வெளிநாட்டு அரசியல் தொடர்புடையவர்களும் முன்வாருங்கள் அதே நேரம் சரணடையும் போராளிகளிற்கு  உதவ முன்வாருங்கள் என்றொரு அறிவிப்பை யாழிலும் விட்டிருந்தேன் ஆனால் அன்று  போராளிகளாவது சரணடைவதாவது . அவர்கள்  தேள் வடிவ தாக்குதலிற்கு  தயாராகிறார்கள்.  முடியாவிட்டால்    குப்பியடிப்பார்கள்.  சரணடைவு என்பது புலிகள் வரலாற்றிலெயே இல்லை சாத்திரி இலங்கை அரசுடன் சேர்ந்து  போராடும் போராளிகளினதும்.  புலம்பெயர் தமிழர்களின்  மன உறுதியை  உடைப்பதற்காக  உளவியல் யுத்தம் செய்கிறார் என்று  என்னை  இங்கு திட்டியவர்கள் தான் அதிகம். அன்றைய நேரத்தில் நீங்கள் நேசக்கரத்தின்  ஜேர்மனிய பொறுப்பாளர்  மட்டுமே  ஆனால் எனக்கு  உதவிகள் சேர்த்ததற்காக  இதே யாழ் கள உறவுகளிடம் இருந்து தூசணம் தாங்கிய  மின்னஞ்சல்களும்  தொ.பே அழைப்புக்களும் வந்திருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.  இதே யாழ் உறவு ஒருவர் என்னையும் உங்களையும் தொடர்பு படுத்தியும் எழுதியிருந்தார். அதன் பதிவு என்னிடம் இன்றும் இருக்கிறது. அவரிற்கான  பதிலைத்தான்  இங்கு கொடுத்திருக்கிறேன் மற்றபடி உங்களிற்கு  ஜரோப்பிய நிறுவனத்தின்  உதவி தேவைப் பட்டால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.  தாராளமாய் தரலாம். அடுத்ததாக கே.பியர்  சிபரிசிலை வேலை செய்யிறாரா இல்லையா  அவரின் இதம் சுத்தியா (சுத்தியல்)இல்லை  கடப்பாறையா எங்கள்  வலைப் பின்னல் தொடர்புகளை யெல்லாம் புரிந்து கொள்ளும் வயதோ அனுபவமோ உங்களிற்கு கிடையாது

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் திருந்தல்லையா யாரும்...

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி 2009 மே மாதம் போராளிகள் சரணடைந்து கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் பற்றிய விடயங்களை சர்வதேசத்திற்கு எடுத்த செல்ல பொது அமைபுக்களுடனும் வெளிநாட்டு அரசியல் தொடர்புடையவர்களும் முன்வாருங்கள் அதே நேரம் சரணடையும் போராளிகளிற்கு உதவ முன்வாருங்கள் என்றொரு அறிவிப்பை யாழிலும் விட்டிருந்தேன் ஆனால் அன்று போராளிகளாவது சரணடைவதாவது . அவர்கள் தேள் வடிவ தாக்குதலிற்கு தயாராகிறார்கள். முடியாவிட்டால் குப்பியடிப்பார்கள். சரணடைவு என்பது புலிகள் வரலாற்றிலெயே இல்லை சாத்திரி இலங்கை அரசுடன் சேர்ந்து போராடும் போராளிகளினதும். புலம்பெயர் தமிழர்களின் மன உறுதியை உடைப்பதற்காக உளவியல் யுத்தம் செய்கிறார் என்று என்னை இங்கு திட்டியவர்கள் தான் அதிகம்.

2009 ஏப்றல்மாதமே போராளிகள் சரணடைவு ஆரம்பமாகிவிட்டிருந்தது. அதன் சாட்சிகள் பலர் ஐரோப்பாவிலும் ஊரிலும் போராளிகள் இருக்கிறார்கள். மே 18இன் பிறகு யாரும் ஒளிச்சிருந்து சரணடைஞ்சினமோ எனக்குத் தெரியாது.

நீங்கள் பொதுநிறுவனங்களை உங்கள் இராஜதந்திர நகர்வுகளால் அழைத்ததும் எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் சாதாரணமான ஒருத்தி. என்னால் இராஜதந்திர நகர்வையோ அல்லது உலக அரசியலையோ புரியும் அளவு நான் உலக அரசியலை படிக்கவும் இல்லை. இந்தப் பெரிய மாயாஜாலங்களை புரிவதற்கு அதற்கென்று பெயரெடுத்தவர்களாலேயே முடியும்.

எனக்கு விளங்காத விசயங்களை நீங்கள் சொல்லியும் நான் விளங்கிக் கொள்ளப்போறதும் இல்லை.

நீங்கள் பலபேரை சிறையிலிருந்து எடுத்துவிட்டதற்கு ஐரோப்பிய அமைப்பொன்று உதவியதாக எழுதயிருந்தீர்கள். அந்த உதவியமைப்பின் தொடர்பைத்தான் தந்துதவச் சொல்லி இங்கு எழுதினேன். நீங்கள் வலையமை(டை)ப்பு என்று எனக்கு விளங்காத வலைகளை கொண்டு வந்து விளக்கம் தாறீங்கள். அப்ப அந்த ஐரோப்பிய அமைப்பின் விபரத்தை தனிமடலில் அனுப்பிவிடுங்கோ.

அன்றைய நேரத்தில் நீங்கள் நேசக்கரத்தின் ஜேர்மனிய பொறுப்பாளர் மட்டுமே ஆனால் எனக்கு உதவிகள் சேர்த்ததற்காக இதே யாழ் கள உறவுகளிடம் இருந்து தூசணம் தாங்கிய மின்னஞ்சல்களும் தொ.பே அழைப்புக்களும் வந்திருந்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். இதே யாழ் உறவு ஒருவர் என்னையும் உங்களையும் தொடர்பு படுத்தியும் எழுதியிருந்தார். அதன் பதிவு என்னிடம் இன்றும் இருக்கிறது. அவரிற்கான பதிலைத்தான் இங்கு கொடுத்திருக்கிறேன் மற்றபடி உங்களிற்கு ஜரோப்பிய நிறுவனத்தின் உதவி தேவைப் பட்டால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். தாராளமாய் தரலாம்.

2009 ஏப்றலோடு நீங்கள் நேசக்கரம் வேண்டாமெண்டு ஒதுங்கீட்டீங்கள். அப்ப எங்கை நான் யேர்மனி பொறுப்பாளராக இருந்தேனோ ? நான் எங்கேயும் பொறுப்பாளராயிருந்ததில்லை வெறும் ஊழியராகவே இருந்து வருகிறேன். மற்றும் நான் ஒரு அமைப்பின் விபரத்தை தாங்கோ என்று கேட்டதற்கு நேசக்கரத்தை உள்ளை கொண்டு வந்து கருத்தை எழுதுவது கூட தேவையற்றது. கேட்ட கேள்விக்கு சுருக்கமாக பதிலை தந்திருந்தால் இந்த மக்கு மண்டைக்கு போதுமாயிருந்திருக்கும்.

அப்போது எழுதியவருக்காக இப்ப இந்தத்திரியில் விவாதத்துக்கு அப்பாற்பட்டு எழுதுவது நீங்களே. இங்கு அந்தக் கருத்தாளர் எதையும் இப்போது எழுதவுமில்லை. இப்போது அந்தக் கருத்தாளரை இங்கே வாவென்றழைப்பது கூட வில்லங்க அழைப்புத்தான் அது உங்கள் பிரச்சனை. அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பு முகவரி அல்லது தொலைபேசியிலக்கத்தை தனிமடலில் போட்டீர்களானால் பேருதவியாக இருக்கும்.

அடுத்ததாக கே.பியர் சிபரிசிலை வேலை செய்யிறாரா இல்லையா அவரின் இதம் சுத்தியா (சுத்தியல்)இல்லை கடப்பாறையா எங்கள் வலைப் பின்னல் தொடர்புகளை யெல்லாம் புரிந்து கொள்ளும் வயதோ அனுபவமோ உங்களிற்கு கிடையாது

நீங்களே தான் இன்னொருவருக்கு எழுதியிருந்தீங்கள் உதவி ஏதும் தேவையென்றால் கே.பிமூலம்

செய்து தரமுடியும் தொடர்பு கொள்ளச் சொல்லி. அதற்குத்தான் கேட்டேன் கே.பி சிபார்சு இருந்தால் மட்டுமா உதவுவார் என்று.

கே.பி அவர்கள் தனது அறிக்கைகளில் அல்லது பேட்டிகளில் எங்கும் சொன்னதாய் நினைவில்லை யார் மூலமேனும் சிபார்சோடு வந்தாலே உதவுவேன் என்று. போராளிகள் மறுவாழ்வு , முன்னேற்றம் என சிந்திப்பதாக சொல்லும் கே.பி ஏன் இன்னொருவரின் சிபாரிசில் உதவ வேண்டும் ?விளங்காததை விளங்கிக் கொள்வதற்காகவே கேட்டேன்.அதுக்காக இப்பிடி விளங்காத பதிலையா தர வேணும்.

நம்ம அறிவுக்கு தெரிஞ்சது கரைவலை , கம்பான் கயிறு இதுகள் தான்.

உங்கள் பெரீய வ(த)லைப்பின்னல் எனக்குத் தெரியாது.

நான் உங்கள் பின்னல்களை கேட்கேல்லயே. அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பு முகவரி அல்லது தொலைபேசியை தந்துதவினால் நாங்கள் ஆட்களை வெளியில எடுக்க உதவி கேட்கலாம்.

கேள்வி கேட்டதுக்காக இப்பிடி பெரிய பின்னலை போட்டிருக்கத் தேவையில்லை.

அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பினை தரமுடியுமா ? பல போர்க்கைதிகள் , அரசியல் கைதிகளுக்கான விடுதலைக்கு நீங்கள் குறித்த ஐரோப்பிய அமைப்பிடமிருந்து உதவி பெற முடியுமா ? உதவி பெற முடியுமென்றால் விபரத்தை தந்துதவுங்கள்.

கே.பி சிபார்சுகள் மூலம் மட்டுமா உதவுவார் ? அப்போ கே.பியும் உள்மன சுத்தியோடு உதவவில்லையா ?

எழுத்து எழுத்தோட இருக்கனும், நீங்க இப்படியெல்லாம் கேட்க கூடாது கேட்க கூடாது. :D

அவர் எழுதுவதெல்லாம் உண்மையென்று நம்பிவிட்டீர்கள். :rolleyes:

வேறு யார் யார் உள் மன சுத்தியில்லாமல் உதவுகின்றார்கள்?

விரைவில் இன்னுமொரு ஆய்வுக்கட்டுரையை சாத்திரியிடம் ஏதிர்பாருங்கள். ஏன் கேபியைபற்றி ஆய்வு கட்டுரை இதுவரை வெளியிடவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஏப்றல்மாதமே போராளிகள் சரணடைவு ஆரம்பமாகிவிட்டிருந்தது. அதன் சாட்சிகள் பலர் ஐரோப்பாவிலும் ஊரிலும் போராளிகள் இருக்கிறார்கள். மே 18இன் பிறகு யாரும் ஒளிச்சிருந்து சரணடைஞ்சினமோ எனக்குத் தெரியாது.

நீங்கள் பொதுநிறுவனங்களை உங்கள் இராஜதந்திர நகர்வுகளால் அழைத்ததும் எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் சாதாரணமான ஒருத்தி. என்னால் இராஜதந்திர நகர்வையோ அல்லது உலக அரசியலையோ புரியும் அளவு நான் உலக அரசியலை படிக்கவும் இல்லை. இந்தப் பெரிய மாயாஜாலங்களை புரிவதற்கு அதற்கென்று பெயரெடுத்தவர்களாலேயே முடியும்.

எனக்கு விளங்காத விசயங்களை நீங்கள் சொல்லியும் நான் விளங்கிக் கொள்ளப்போறதும் இல்லை.

நீங்கள் பலபேரை சிறையிலிருந்து எடுத்துவிட்டதற்கு ஐரோப்பிய அமைப்பொன்று உதவியதாக எழுதயிருந்தீர்கள். அந்த உதவியமைப்பின் தொடர்பைத்தான் தந்துதவச் சொல்லி இங்கு எழுதினேன். நீங்கள் வலையமை(டை)ப்பு என்று எனக்கு விளங்காத வலைகளை கொண்டு வந்து விளக்கம் தாறீங்கள். அப்ப அந்த ஐரோப்பிய அமைப்பின் விபரத்தை தனிமடலில் அனுப்பிவிடுங்கோ.

2009 ஏப்றலோடு நீங்கள் நேசக்கரம் வேண்டாமெண்டு ஒதுங்கீட்டீங்கள். அப்ப எங்கை நான் யேர்மனி பொறுப்பாளராக இருந்தேனோ ? நான் எங்கேயும் பொறுப்பாளராயிருந்ததில்லை வெறும் ஊழியராகவே இருந்து வருகிறேன். மற்றும் நான் ஒரு அமைப்பின் விபரத்தை தாங்கோ என்று கேட்டதற்கு நேசக்கரத்தை உள்ளை கொண்டு வந்து கருத்தை எழுதுவது கூட தேவையற்றது. கேட்ட கேள்விக்கு சுருக்கமாக பதிலை தந்திருந்தால் இந்த மக்கு மண்டைக்கு போதுமாயிருந்திருக்கும்.

அப்போது எழுதியவருக்காக இப்ப இந்தத்திரியில் விவாதத்துக்கு அப்பாற்பட்டு எழுதுவது நீங்களே. இங்கு அந்தக் கருத்தாளர் எதையும் இப்போது எழுதவுமில்லை. இப்போது அந்தக் கருத்தாளரை இங்கே வாவென்றழைப்பது கூட வில்லங்க அழைப்புத்தான் அது உங்கள் பிரச்சனை. அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பு முகவரி அல்லது தொலைபேசியிலக்கத்தை தனிமடலில் போட்டீர்களானால் பேருதவியாக இருக்கும்.

நீங்களே தான் இன்னொருவருக்கு எழுதியிருந்தீங்கள் உதவி ஏதும் தேவையென்றால் கே.பிமூலம்

செய்து தரமுடியும் தொடர்பு கொள்ளச் சொல்லி. அதற்குத்தான் கேட்டேன் கே.பி சிபார்சு இருந்தால் மட்டுமா உதவுவார் என்று.

கே.பி அவர்கள் தனது அறிக்கைகளில் அல்லது பேட்டிகளில் எங்கும் சொன்னதாய் நினைவில்லை யார் மூலமேனும் சிபார்சோடு வந்தாலே உதவுவேன் என்று. போராளிகள் மறுவாழ்வு , முன்னேற்றம் என சிந்திப்பதாக சொல்லும் கே.பி ஏன் இன்னொருவரின் சிபாரிசில் உதவ வேண்டும் ?விளங்காததை விளங்கிக் கொள்வதற்காகவே கேட்டேன்.அதுக்காக இப்பிடி விளங்காத பதிலையா தர வேணும்.

நம்ம அறிவுக்கு தெரிஞ்சது கரைவலை , கம்பான் கயிறு இதுகள் தான்.

உங்கள் பெரீய வ(த)லைப்பின்னல் எனக்குத் தெரியாது.

நான் உங்கள் பின்னல்களை கேட்கேல்லயே. அந்த ஐரோப்பிய நிறுவனத்தின் தொடர்பு முகவரி அல்லது தொலைபேசியை தந்துதவினால் நாங்கள் ஆட்களை வெளியில எடுக்க உதவி கேட்கலாம்.

கேள்வி கேட்டதுக்காக இப்பிடி பெரிய பின்னலை போட்டிருக்கத் தேவையில்லை.

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம் அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

இதை நீங்கள் ஒரு கட்டுரையாக எழுதினால் நாங்களும் படிப்போம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவில் தமிழனின் மரணத்தை நிறுத்தவே இந்தப்போராட்டம் ஆரம்பித்தது என்பதை மறந்துவிட்டு அகிலன் பேசிக்கொண்டிருக்கிறார்..இலங்கையில் தமிழன் போராடி இருக்காவிட்டாலும் அழிந்திருப்பான்...இல்லை என்று அகிலன் நிரூபிக்கட்டும் பார்ப்பம்...ஒரு தமிழனாக இருந்துகொண்டு தன் கையை எடுத்து ன் கண்ணை குத்துவதை விட அகிலன் பேசாமல் இருந்திருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

இதை நீங்கள் ஒரு கட்டுரையாக எழுதினால் நாங்களும் படிப்போம் அல்லவா?

என்னுடைய கட்டுரைகளை படிப்பதில்லையென நீங்களே யாழில் எழுதியிருக்கிறீர்கள்.  :lol: :lol:  எனவே அது கட்டுரையாக வெளி வராது :icon_mrgreen:

என்னுடைய கட்டுரைகளை படிப்பதில்லையென நீங்களே யாழில் எழுதியிருக்கிறீர்கள்.  :lol: :lol:  எனவே அது கட்டுரையாக வெளி வராது :icon_mrgreen:

அப்பாடா நிம்மதி :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம் அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்படி எழுத வெக்கமாயில்லை :o

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் திருந்தல்லையா யாரும்...

நீங்கள் திருந்தியிருந்தால் மகிழ்ச்சியே

ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்படி எழுத வெக்கமாயில்லை :o

 வெட்கம் இல்லை அதுதான் தமிழன். :icon_mrgreen: அதை விட சவால்  என்பது  எனக்கு மிகவும் பிடித்தமானது   அது யாராக இருந்தாலும். நேரடியாக மோதும் வரை.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து மக்களின்  விருப்பம் என்ன என்று தெரிந்த ஒரே ஆள் நீங்கள்தான்.

எனக்கு ஒரு சின்ன ஆசை, நீங்கள் இறக்கு முன்பு அதை யாரிடமாவது சொல்லிவிடுங்கள். அடுத்த சந்ததி அறிந்து கொள்ள வசதியாய் இருக்கும். 

மக்களின்ட விருப்பம் என்ன என்டால் புலிகள் போராட வேணும்.நாடு பிடிச்சு கொடுக்க வேண்டும் ஆனால் எங்கட வீட்டிலிருந்து ஒருத்தரையும் போராட அனுப்ப மாட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...   பிரபாகரன் தன் குடும்பத்துக்காகவும் தனக்காகவும் தான் போராடினவரா...??  விளக்கத்துக்கும் கட்டுரைக்கும் மிக்க நண்றி...  

இதை சிங்களவன் கூட இன்னும் சொல்ல இல்லை... 

சிங்களவன் எம்மவர்கள் காட்டிக்கொடுத்து தொடங்கினவன்.. ஆனால் ஒன்றும் இன்னும்.. சரிவரல்ல.

பெரிய மனிதப் புதைகுழி என்று ஜெயசிக்குறு காலத்தில் உயிரிழந்த.. (எம் ஐ 18 மீதான தாக்குதலில்) சில சிங்களப் படைவீரர்களின் எலும்புகளை மீட்டு படம் காட்டினார்கள்.. அது பெரிசாக எடுபடவில்லை.

அதன் பின்னர் லயன் எயாரை கிண்டினார்கள்.. இப்ப கறுப்புப் பெட்டியும் இல்ல.. கண்டெடுத்த அடையாள அட்டைக்குரியவரும் உயிரோட... என்ன செய்யுறது என்று தெரியாமல்.. பைல் குளோஸ் ஆகப் போகுது. அதுவும் காப்புறுதி நிறுவனங்களிடம்.. பெருந்தொகையான நஸ்ட ஈட்டை பெறவே இது கிண்டப்படுகிறது. தமிழ் மக்கள் மீதான அக்கறையில் அல்ல..!  இன்று வரை விபத்துக்கான காரணம் தெரியாமல்.. சிறீலங்கா விமானப்படை சிவில் விமானம் என்று சொல்லி நஸ்ட ஈடுபெற முடியாமல் தவிக்கிறது.

லயன் எயாருக்கு முதல் தொப்பு தொப்பென்று விழுந்த அவ்ரோ.. அன்ரனோக்கள் பற்றி ஏன் இன்னும் விசாரிக்கல்ல..!

இந்த அகிலனிற்கும் சரி.. இங்குள்ள மாற்றுக்கருத்து விற்பன்னர்களுக்கும் சரி.. போரியல் இலக்குகளை போர்க்களத்தில் தாக்குவதில் உள்ள விதிமுறைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒட்டுக்குழுக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டம் முழுவதும்.. எதிரி இராணுவ இலக்குகளை தாக்கியதை விட எதிரி இலக்குகளில் கடமையாற்றியதே அதிகம். அந்த வகையில்.. அவர்களுக்கு சொந்த மக்கள் மீது படுகொலை செய்த பழக்கம் உண்டே தவிர போர் செய்தது கிடையாது.

முல்லைத்தீவு மட்டுமல்ல.. மன்னார் அடம்பனில் விக்ரர் அண்ணா முதன்முதல் தென்னாபிரிக்க வெள்ளையின அரசு வழங்கிய.. பவளை தாக்கி அழித்து.. இராணுவச் சிப்பாய்களின் உடலங்களைக் கைப்பற்றி வீரகாவியமானது முதல் போர்க்களத்தில் இறந்த சிங்கள.. இராணுவ வீரர்களின் உடலங்கள் கைப்பற்றப்பட்டு மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பின்னர் கையளிக்கப்பட்டுள்ளன. மக்கள் அவற்றை பார்வையிட்டதோடு சரி.. வன்புணரவில்லை. மக்களுக்கு காட்சிப்படுத்துவது அதுவும் சீருடையுடன் காட்சிப்படுத்துவது என்பது பொதுவான நிகழ்வு தான்.

மேலும்.. பெரும்பாலான உடலங்கள் இராணுவ மரியாதைகளுடன் கையளிக்கப்பட்டும் அல்லது தகனம் செய்யப்பட்டும் அல்லது அடக்கம் செய்யப்பட்டும் வந்த நிலையில்.. 1990களின் ஆரம்பத்தில் மணலாறு முகாம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 180 பெண் போராளிகளை உருக்குலைத்து ஒட்டுக்குழு புளொட் கும்பலும்.. இராணுவமும் காட்சிப்படுத்தி சிங்களவர்களைக் குசிப்படுத்தியது. ஆடைகள் களையப்பட்டு உடலங்கள் காட்சிப்படுத்தப்பட்ட வரலாற்றை ஆரம்பித்து வைத்தார்கள்.. சிங்களவர்கள். அத்தோடு போச்சிப் போத்தல்களும் வைக்கப்பட்டு உடலங்கள் கையளிக்கட்டிருந்தன. இது அடிப்படை சர்வதேச போரியல் விதிகளுக்கு முரணான செயலாகும்.

ஓயாத அலைகள் 1 இல் இறந்த இராணுவ வீரர்களின் உடலங்களை பெண் புலிகள் பொறுப்பேற்று ஒப்படைக்க முன் வந்தார்கள். அந்தத் தாக்குதலில் பெண் புலிகள் அதிகம் பங்கேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இங்கு மக்கள் 1500 உடலங்களை பார்வையிட்டு மகிழ்ந்தார்கள் என்று கருத்தெழுதுபவர்கள் அந்தக் காலத்தில் களத்தில் வாழ்ந்தே இருக்காத மனிதர்கள் என்பது புரிகிறது. அன்றைய காலத்தில் இறந்த இராணுவ வீரர்களின் உடலங்களை சேகரிப்பது.. ஆயுதங்களைச் சேகரிப்பது என்று மக்கள் தன்னார்வப் பணி ஆற்றினர்.

பெருந்தொகையான கறுப்பு பாக்குகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்க.. இறந்த இராணுவ வீரர்களின் கணக்கு வெளிய தெரியும் என்று கருதிய சிங்கள அரசு அவற்றை வழங்க மறுத்துவிட்ட நிலையில்.. அந்த இராணுவத்தினரில் பலர் மக்களாலும் புலிகளாலும் அடக்கம் செய்யப்பட்டனர். முல்லைத்தீவு இராணுவ தளம் என்பது இராணுவ இலக்கு. அது ஒரு போர்த்தளத் தாக்குதல். அதில் இறந்தது மக்களோ அல்லது சரணடைந்த இராணுவத்தினரோ அல்ல. முகாமிட்டிருந்த படையினர். அவர்கள் சரணடையத் தயாராக உள்ளதாக அரசோ வெளியாரோ சொல்லவில்லை. மாறாக இறுதிவரை மீட்புப் போரையே சிறீலங்கா வான் வழி தரையிறக்கம் உட்பட பல யுக்திகளைக் கொண்டு செய்தது. இறுதியில்... அது அரச கெளரவம் சந்திரிக்காவின் அரசியலுக்காக சிங்களப் படையினரை கைவிட்டது.

முள்ளிவாய்க்கால் என்பது இராணுவ இலக்கல்ல. சிறீலங்கா அரசு பிரகடனப்படுத்திய யுத்த சூனியப் பிரதேசம். அங்கு அடைக்கலம் தேடிய அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஒரு பிரமாண்டமான அரச இராணுவ இயந்திரத்திற்கு உள்ள சர்வதேசக் கடப்பாடு ஆகும். அது சர்வதேசச் செஞ்சிலுவை.. யு என் எச் சி ஆர் போன்றவற்றோடு தொடர்பில் இருந்த மக்கள் சூழ்ந்த பகுதி. மேலும் தொடர்ந்தும் போரிடுதல் சாத்தியமற்ற இராணுவப் புறநிலையில்... சரணடைதல் தொடர்பில் சர்வதேச தகவல்கள் பரிமாறப்பட்ட பகுதி.

ஆக முல்லைத்தீவு இராணுவ தளம் அழிப்பு = முள்ளிவாய்க்கால் என்ற சமன்பாடு.. புலிக்காய்சல்.. ஒட்டுக்குழுக்களுக்கு சந்தோசமான சமன்பாடாக இருக்கலாம். ஆனால் உலகம் இரண்டிற்கும் உரிய வேறுபாட்டை நன்கே உணர்கிறது.

அனுராதபுரம் தாக்குதல் என்பது இராணுவ இலக்கு மீதான தாக்குதல். அதில் பங்கு கொண்ட புலிகளை காட்சிப்படுத்த வேண்டாம் என்பதல்ல புலிகளின் நிலைப்பாடு. அவர்களை நிர்வாணமாக்கி காட்சிப்படுத்தியதும் உடலங்களை தர மறுத்ததுமே போரியல் விதிகளுக்கு முரணானது. இதனை விளங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் ஒட்டுக்குழுக்களுக்கும் இல்லை.. இன்று தங்களின் பெயரும் அடிபடனும் என்றிட்டு கட்டுரை வரையும் விற்பன்னர்களுக்கும் இல்லை..!

சுனாமி அனர்த்தத்தின் போதும்.. மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட போது மக்கள் வரிசைப்படுத்திப் புதைத்தார்கள் தான். அதற்காக அவை பார்வையிடல்கள் அல்ல..!

இன்று சிங்களம் நடத்திய எத்தனையோ திட்டமிட்ட மக்கள் மீதான படுகொலைகள் மறைக்கப்பட்டு வரும் நிலையில் ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட திட்டமிட்ட மக்கள் மீதான படுகொலைகள் மறைக்கப்பட்டு வரும் நிலையில்.. இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட வரலாறுகளை தமக்கு ஏற்ற வடிவில் திரித்து எழுதி சிங்கள அரசு சர்வதேச அரங்கில் எதிர்நோக்கியுள்ள போர்க்குற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை யாழ் களமும் சேர்ந்து மலினப்படுத்த இப்படியான அற்தபுஸ்டியற்ற கட்டுரைகளை ஒரு சிலரின் காட்டுமிராண்டித்தனமான கண்மூடித்தனமான புலி எதிர்ப்பை மையமாக வைத்து அனுமதிக்கின்றனர் யாழில் சிலர்.

இவர்களுக்கு வாகரைப் படுகொலைகள் தெரிவதில்லை. இவர்களுக்கு செம்மணிப்படுகொலைகள் தெரிவதில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தெரிவதில்லை. ஒட்டுக்குழுக்கள் செய்து வரும் படுகொலைகள் தெரிவதில்லை. தெரிவதெல்லாம் புலிகள் செய்த தாக்குதல்களும்.. தவறுகளுமே தான்.

ஐநா மூவர் குழு அறிக்கையில் புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. விடுதலைப்புலிகள் தமக்கு சரியான சந்தர்ப்பம் அளித்தால் அதனை ஏற்றுக்கொண்டு விசாரணையில் பங்கெடுக்க தயாராக இருப்பதாக அறிவித்தும் விட்டுள்ளனர். இதன் பின்னரும் புலிகளில் குறைபிடிச்சுக் கொண்டு திரிவது சுத்த மனநோய் ஆகும்..!

ஆனால் மனித உரிமைகள் அமைப்புக்கள் தொடர்ச்சியாக  சாட்டி வரும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஒரு ஒட்டுக்குழுவாவது முன் வந்த சரித்திரம் உள்ளதா. இல்லை. அவர்களும் சிங்கள எதிரியும்.. இந்திய வல்லாதிக்கமும் இன்னும் மனிதப் படுகொலைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. இந்தக் கட்டுரைகளின் நோக்கம் என்பது புலிகளை எதுவும் செய்யாது.. அப்பாவித் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின்... இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை தான் மறைக்கும். அதன் நோக்கமே இக்கட்டுரைகளின் வரவும்.. வரைவும்.

முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கு உழைப்பதாக மக்களிடம் காசு வாங்குபவர்கள் கூட இங்கு இக்கட்டுரைகளுக்கு விருப்பு வாக்களித்திருக்கிறார்கள்.

இந்தியப் படைகள் காலத்தில் பிள்ளை பிடித்து.. பலாத்காரமாகக் கொண்டு சென்று TNA என்ற இராணுவ கைக்கூலி இயந்திரத்தை இயக்க..  தயார் செய்யப்பட்டு மக்கள் படுகொலைகளில் ஈடுபடுத்தப்பட்டு.. ஒட்டுக்குழுக்களால் பலியிடப்பட்ட எம் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் யாரும் இரக்கம் காட்டுவதில்லை. புலிகளின் தாக்குதலில் அவர்களும் இந்தியப் படைகளோடு சேர்ந்து இறக்க வேண்டி வந்த போது.. அதனை இயக்கிய ஒட்டுக்குழு ஆக்கள் ஒரிசாவிற்கு தப்பி ஓடிவிட்டார்கள். அன்று நிர்க்கதியான எத்தனையோ இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் புலிகளே ஆதரவும் அளித்தனர். இன்று.. புலிகளால் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லி அவர்களுக்காக கண்ணீர் வடிப்பவர்கள்.. சிங்களப் படைகளால் எமது பெண்கள் பலவந்தப்படுத்தப்பட்டு படையிலும்.. பாலியல் தொழில் விடுதிகளிலும் விடப்படுவதை இட்டு என்ன எழுதுகிறார்கள். என்ன மீட்சி நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். எல்லாவற்றையும் புலம்பெயர் மக்கள் மீதான குற்றமாகவே அவர்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள். காசுக்கும் தங்கள் சுய விளம்பரத்திற்கும்..அவர்களிடமே கையேந்துகிறார்கள்.

சிங்களத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுக்கள் இதனை செய்கின்றதை இன்னும் வேடிக்கை பார்க்கும் இதே கூட்டமே ஓயாத அலைகள் 1 வைத்து பிரிச்சு மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் இருந்து இவர்களின் நோக்கங்களை தெரிந்து கொண்டு மக்கள் இந்த வகையான கட்டுரைகள் மற்றும் அவற்றைக் காவித்திருபவர்கள் தொடர்பில் நல்ல விழிப்புணவோடு இருப்பதுவே அவசியம்..! இவர்களே எமது இனத்திற்குள் இன்று களைகளாக தோற்றப் பெற்றிருக்கும் சன நாய் அகத் தோல் போர்த்திய குள்ள நரிகள்..! ஒட்டுக்குழு விசுவாசிகள். முன்னாள் ஒட்டுக்குழுவினர்.

இவர்களையும் இவர்களுக்காக துதிபாடுபவர்களின் உள்நோக்கங்களையும் புரிந்து கொள்வதும் இனங்கண்டு புறக்கணிப்பதுவுமே.. இன்றைய தேவை..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அகிலன் இந்த கட்டுரை வாசித்த கூட்டதிற்கு நான் சென்றிருந்தேன் .அவர் இதை வாசிக்கும் போது சற்று உணர்ச்சி வசப்பட்டே வாசித்தார் ,அவருக்கு இந்த சமூகத்தினல் இருக்கும் கோபம் தான் அதற்கு காரணம் என நினைக்கின்றேன் .

மிகவும் உண்மையான நேர்மையான அவரது ஆழ்மனத்தில் இருந்து வந்த ஒரு தரமான ஒரு கட்டுரை ,அகிலன் வாசித்துமுடிய பலராலும் பாராட்டபட்டது.

முக புத்தகத்தில் பதியப்பட்டு உலகெங்கும் இருந்து நல்ல விமர்சனங்கள் பலரால் எழுதப்பட்டிருந்தது .

யாழ் வாசகர்கள் ,

வழக்கம் போல இங்கு கட்டுரை வாசிக்காமலே ,எழுதியதை விழங்காமலே பின்னூட்டங்கள் .

அகிலன் யார் என்று தெரியாமல் பின்னூட்டங்கள் .

மாட்டை பற்றி எழுத சொன்னால் மாட்டை பிலா மரத்தில் கட்டிவிட்டு பிலா மரத்தை பற்றிய பின்னூட்டங்கள் .

தொடர்ந்தும் வகுப்பில் கடைசி வாங்கில் இருந்தவர்களை நினைவு படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள் .

அதற்காக அரசியல் கருத்தையும்  தன்னோடு காவி வந்து கொட்டும் போது ஏனையவர்களின்  அரசியல் கருத்துக்களையும் வாசிக்க வேண்டும்.மற்றையவர்கள் ஆபிரிக்காவில் பிறந்து வளரவில்லை.அகிலன் பிறந்த  மண்ணில் தான் இங்கு கருத்து எழுதியவர்களும் பிறந்து வளர்ந்து பலவற்றை அனுபவமாக கண்டவர்கள்.
 
முன் வாங்கில் இருந்த அர்ஜுனின் கருத்தை விளங்க முடியாமல் பலர் தத்தளிப்பதை காண்கிறோம்.இப்படி ஒரு ஜீனியசை தமிழ் மக்கள் பெற என்ன தவம் செய்திருக்க வேண்டும் என்று பலர் பஸ்களிலும் கார்களிலும் முணுமுணுப்பதை உணர முடிகிறது. ஏன் வெள்ளைகள் கூடி இப்படி ஒரு ஜீனியசை மார்க்கம் நகரில் கண்டீர்களா என்று கேட்குமளவுக்கு அவரின் கருத்துக்கள் இருக்கின்றதாம்.குறிப்பாக பிலா மரத்தை உதாரணம் காட்டினார் பாருங்கள். சா நினைக்கவே புல்லரிக்கிறது.  :D  :D
  • தொடங்கியவர்

அகிலன் பிறந்த  மண்ணில் தான் இங்கு கருத்து எழுதியவர்களும் பிறந்து வளர்ந்து பலவற்றை அனுபவமாக கண்டவர்கள்.-நுணா .

இங்குதான் உங்கள் அறியாமை வெளிவருகின்றது .எப்படி எல்லோரும் பிரபாகரன் ஆக முடியாதோ அதே மாதிரித்தான் எல்லோரும் அகிலனாகவும் முடியாது .

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் .

அகிலன் தனது சகோதரன் கொல்லப்பட்டதுக்கு எழுதியதை  போல் ஏன் எழுத முடியாது? பலர் இதனை விட  யதார்த்தமாக எழுத கூடியவர்கள் உள்ளனர். அகிலனை விட பல மடங்கு குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் இந்த  தமிழீழத்தில் இல்லை என்பது உங்கள் அறியாமை. நாலு வசை பாடினால் உங்களுக்கு சிறந்த எழுத்தாளராக தெரியலாம். உங்களின் நக்கலை அவர் காவி வந்தால் உங்களுக்கு அவர் சிறந்த எழுத்தாளராக இருக்கலாம்.மற்றவர்களுக்கு அவர் அப்படி தென்படவில்லையே.
 
பிரபாகரன் ஏன் பங்கருக்குள்ளே இருந்தவர்  போன்ற நக்கல்களை எழுதிய நீங்கள் பிரபாகரன் போன்ற ஒரு தலைவராக எல்லோரும் ஆக முடியாது என நீங்கள் எழுதி உங்கள் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான் அன்று அனைத்துலகத்தின்  பொறுப்பாளர்  கஸ்ரோவும்  2003 ம் ஆண்டு எகத்தாளமாக  கதைத்திருந்தார். ஆக்கியவர்களால்  அழிக்கவும் முடியும் என்று சொல்லியிருந்தேன்  அதனை செய்தும் முடித்திருத்தோம் அதே போலத்தான்  உங்களிற்கும்  சொல்கிறேன்  ஆக்கியவர்களால் அழிக்கவும் முடியும். ஆனால்  நேசக்கரம் அமைப்பை அழிக்க விரும்பவில்லை  முடிவு உங்கள் கையில்.

இந்தக்கருத்தை நிர்வாகம் எக்காரணம் கொண்டும் அழித்துவிட வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன். இந்த எகத்தாளத்திற்கு எனது பதிலை வேலை முடிந்து வந்ததும் எழுதுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.