Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சுஜாதா” அவருடைய ஆதங்கத்தை மட்டுமா வெளிப்படுத்தினார்…!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sujatha.jpg

 

ழுத்தாளர் சுஜாதா எனும் ரங்கராஜன் அவர்களைப் பற்றி அவரது மனைவி சுஜாதா அவர்கள், தனது கணவர் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தினகரன் நாளிதழுடன் வெளிவரும் வசந்தம் இதழுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா பற்றி ஒரு பிம்பம் உருவாக்கி வைத்து இருந்தவர்களுக்கு இதைப் படிக்கும் போது வருத்தமாகவும் அதை ஜீரணிக்க முடியாமலும் இருக்கிறது. சுஜாதா என்றில்லை எந்த பிரபலத்தின் ரசிகர்களுக்கும் இது பொருந்தும். இதன் காரணமாகவே அந்தப் பிரபலம் தவறு செய்து இருந்தாலும், அதை நியாயப்படுத்தி பேச வேண்டியதாகி விடுகிறது. கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள் என்றால் அது அவர் தனிப்பட்ட விஷயம் என்பதை புரிந்து கொண்டு அதிகம் அது பற்றி கவலைப்படாமல் இருந்து விடுவார்கள்.

நானும் ஒரு கணவன், இரு குழந்தைகளுக்கு தந்தை என்கின்ற வகையில் சில விசயங்களைப் பகிர விரும்புகிறேன். காரணம், சுஜாதா அவர்கள் தனது கணவர் பற்றிக் கூறியதை அவருக்கு மட்டும் கூறியதாக நினைக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு கணவருக்கும் / மனைவிக்கும் கூறிய ஒரு அனுபவப்பாடமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் அவர் கூறியதைப் பற்றி விமர்சிக்க எனக்கு உரிமையில்லை ஆனால், அவர் கூறிய கருத்துகளில் உள்ள சில விசயங்களைப் பற்றி பகிர விரும்புகிறேன்.

முதல் சுஜாதா என்ன கூறினார் என்பதை படித்து விடுங்கள் [நன்றி தினகரன்]

“பொதுவா கலை உலகைச் சேர்ந்தவர்கள் வேற உலகத்துல வாழ்வாங்கன்னு சொல்வாங்க. அதை என் கணவர் விஷயத்துல கண்கூடாப் பார்த்தேன். அவரோட மனநிலை எப்ப, எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது. தன்னோட அந்தரங்கத்துக்குள்ள அவர் யாரையும் அனுமதித்ததில்லை. எப்பவும் எழுதறது, படிக்கறது, ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே இருப்பார். மனைவி, குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்குக் கிடையாது. சுருக்கமாச் சொல்லணும்னா பசங்க என்ன படிச்சாங்க, எப்படிப் படிச்சாங்கன்னு கூட அவருக்குத் தெரியாது. பசங்களாப் படிச்சாங்க…. அவங்களா வேலையைத் தேடிகிட்டாங்க… அவங்களா பிடிச்ச பெண்ணைத் திருமணம் செய்துகிட்டாங்க… மத்தபடி அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை.

இந்த மனநிலையை மனைவியான என்னிடமும் செலுத்தினார். நான் சாப்பிட்டனா….தூங்கினேனா… எனக்கு என்ன வேணும்… எதையும் அவர் கேட்டதில்ல… செஞ்சதில்ல. அவர் எழுதினதை நான் படிச்சா அவருக்குப் பிடிக்காது.

குடும்பத்தைத் தாண்டிப் பெண்கள் வெளில வரக்கூடாதுனு நினைப்பார். இதுக்குக் காரணம், அவர் வளர்ந்த விதம்.

அவரோட உலகம் ரொம்பச் சின்னது. ஸ்ரீரங்கத்துல பாட்டி வீட்லதான் வளர்ந்தார். அந்த அஹ்ரகாரம்தான் அவருக்கு எல்லாம். அதைத் தாண்டி அவர் சின்ன வயசுல வந்ததில்லை. வளர்ந்தபிறகு கூட மனதளவுல அந்த அஹ்ரகாரப் பையனாத்தான் இருந்தார்.

ஆனா எங்க வீட்ல அப்படிக் கிடையாது. பெண்களுக்கு எல்லா உலக விஷயமும் தெரியணும், அவங்களும் படிக்கணும்னு நினைச்சாங்க. அப்படித்தான் என்னை வளர்த்தாங்க. எங்க தாத்தா ஆங்கிலேயர் கிட்ட வேலை பார்த்தவர். அதனால எங்கம்மாவுக்கு ஆங்கிலத்தையும், அறிவியலையும் தாத்தா ஸ்பெஷலா ஒரு ஆங்கிலோ இந்திய டீச்சரைப் ப்ரைவேட்டா நியமிச்சு படிக்க வச்சார்.

என் தங்கை டாக்டருக்குப் படிச்சுட்டு அமெரிக்காவுல இருக்கா. ஒரு தம்பியும் அமெரிக்கால செட்டிலாயிட்டான். இன்னொரு தம்பி சென்னைல நல்ல வேலைல இருந்து ரிடையர் ஆகியிருக்கான்.

இப்படிப்பட்ட குடும்பத்துலதான் 20 வருஷங்கள் வளர்ந்தேன். திடீர்னு கல்யாணமாகி வேறொரு சூழல் அமைந்ததும் முதல்ல ஒண்ணும் புரியலை. கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ரொம்பச் சிரமப் பட்டேன். அப்புறம் என் கணவரோட உலகம் எனக்கு பழகிடுச்சு. அவரோட உலகத்துக்குத் தகுந்த உயிரினமா வாழ ஆரம்பிச்சேன்.

பல நாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறியிருக்கேன். ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது அட்ஜஸ் பண்ணிக்கன்னு சொன்னாங்க. அந்த காலகட்டம் அப்படி. அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா எங்கம்மா கிட்ட யோசனை கேட்டிருக்க மாட்டேன். குழந்தைகளோட தனியா வந்திருப்பேன்…

அவருக்கு மனைவி குழந்தைகள் மேல அன்பு இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா, அதை வெளிப்படுத்தத் தெரியாது. வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்! உறவுங்கிற சக்கரம் சுழல அன்புதானே அவசியம். அவரை முழுசாப் புரிஞ்சிக்க எனக்குப் பத்து வருஷங்களாச்சு. அதுக்குப் பிறகு, என்னோட சுயத்தை விட்டுட்டு, அவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதனால அவரால எங்கயும் போக முடியாது. துணையா நான் இருந்தேன்.

எங்களுக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருமே அமெரிக்காவுல வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க. அவர் காலமானதும் பெரியவன் சென்னைக்கு வந்துட்டான். சின்னவன் அமெரிக்காவுலதான் இருக்கான். எனக்கு வர்ற மருமகள் தமிழ்ப்பெண்ணா இருக்கணும்னு ஆசைப் பட்டேன். அது நடக்கலை. பெரியவன் பஞ்சாபிப் பெண்ணையும், சின்னவன் ஜப்பானியப் பெண்ணையும் விரும்பிக் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. ஆனா ரெண்டு மருமகள்களுமே தங்கமானவங்க.. என்னைக் கைல வச்சுத் தாங்கறாங்க..

இதுவரைக்கும் கணவன், மாமனார், மாமியார், அம்மா, அப்பா, பிள்ளைகள்னு மத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டேன். இப்பதான் எனக்காக வாழ ஆரம்பிச்சுருக்கேன். கோயில், யாத்திரைகள்னு பொழுது போகுது. அமெரிக்காவுல இருக்கற சின்னவன் வீட்டுக்கும், தம்பி, தங்கைகள் வீட்டுக்கும் போய் வர்றேன், விருப்பப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது. பெரிய எதிர்பார்ப்புகள் எனக்குக் கிடையாது. அதனாலேயே சந்தோஷமா இருக்கேன். ஏன்னா, எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்குக் கத்துக் குடுத்த பாடம் இது.”

இதில் சுஜாதா அவர்கள் மனதில் இருந்ததை கூறியதால் அவருக்கு மனசு லேசாகி இருக்கலாம் அல்லது மற்றவர்கள் “இப்படி உங்கள் கணவரைப் பற்றி கூறி அவரை அசிங்கப்படுத்தி விட்டீர்களே!” என்று தொடர்ந்து கூறி அவரை விமர்சித்து அவருக்கு மன உளைச்சலை கொடுத்து இருக்கலாம். இதை எல்லாம் எதிர்பார்த்தே அவர் கூறி இருப்பார் என்றே நம்புகிறேன்.

நான் கூற வருவது, இணையத்தில் பலரும் எழுத்தாளர் சுஜாதா பற்றி விமர்சிக்கிறார்கள். இதில் எத்தனை பேர் தாமே அந்த தவறை செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை இந்தப் பேட்டியின் மூலம் உணர்ந்தார்கள்? தவறு செய்வது என்பது மனித இயல்பு ஆனால், செய்த தவறை யாராவது சுட்டிக்காட்டும் போது அல்லது மற்றவர் அனுபவத்தில் உணரத்தவறியவர்கள் மிகப்பெரிய தவறை செய்து கொண்டு இருப்பதாகத் தான் அர்த்தம்.

இங்கே Blog எழுதும் எத்தனை பேர் தங்களின் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? எத்தனை வீடுகளில் “எப்பப் பாரு இந்த லேப்டாப்பை கட்டிட்டே அழுகறீங்க” என்று கூறாமல் இருக்கிறார்கள் [ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவையும் அடக்கம்]. “வீட்டுக்கு வந்தவுடனே எப்ப பாரு லேப்டாப் தான்… ” என்று புலம்பல் கேட்காமல் இருக்கிறதா! ஒரு Blog வைத்துட்டு அதில் 10 பேர் பாராட்டுவதால் அதற்கு போதையாகி அதிலேயே கிடந்து, குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு? நமக்காகவே இருப்பவர்களை விட திடீர் நண்பர்களுக்கு அதிக நேரம் ஒதுக்குகிறோம். ஒரு Blog வைத்துட்டே இவ்வளவு நேரம் இதில் செலவழிக்கும் போது, சுஜாதா போன்ற மிகப்பெரிய எழுத்தாளர் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கவில்லை என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமுமில்லை.

நானும் பல காலம் வீட்டிற்கு வந்தால், லேப்டாப்பே கதி என்று இருப்பேன். என்னுடைய மனைவி இது பற்றி கூறிக்கொண்டே இருப்பார். சரி என்று ஒரு வாரம் குறைவான பயன்பாட்டில் இருப்பேன், பின்னர் வழக்கம் போல ஆகி விடும். பின்னர் எங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் எங்கள் ஊரில் இருக்க வேண்டிய நிலை. இதன் பிறகு எனக்கு கிடைத்த அனுபவங்கள் என் தவறை உணரச் செய்தது. குடும்பத்துடன் நேரம் செலவழிக்க நினைக்கும் போது, மனைவி குழந்தைகள் என்னுடன் இல்லை. இனி இந்தத் தவறை செய்யக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். தற்போது சுஜாதா அவர்கள் பேட்டியைப் படித்ததும் இன்னும் தெளிவாகி விட்டேன்.

சுஜாதா அவர்கள் தங்களின் தனிப்பட்ட விசயங்களை பகிர்ந்ததால், உடனே கணவர்கள் அனைவரையும் இதே போல நினைக்க வேண்டிய அவசியமில்லை. எத்தனையோ வீட்டில் மனைவியின் டார்ச்சர் தாங்காமல் புலம்புவர்களை சந்தித்துள்ளேன். வீட்டில் இருந்தால் நிம்மதி இல்லை என்பதாலையே வேறு விசயத்தில் தங்களை திருப்பிக்கொண்டவர்கள் நிறைய உள்ளனர்.

கணவர் மனைவி இருவருமே கலந்து பேசினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். யார் முதலில் பேசுவது என்ற ஈகோ இருக்குமானால், அங்கு பிரச்சனை விரைவில் தீராது. யாரோ ஒருவர் விட்டுக்கொடுத்துத்தான் ஆக வேண்டும். எப்போது பிரச்சனை வெடிக்கிறது என்றால், யாரோ ஒருவர் விட்டுக் கொடுப்பது என்றாலும், அந்த ஒருவரே எத்தனை காலத்திற்கு விட்டுக் கொடுப்பார்! அவரின் பொறுமை எல்லை மீறும் போது பிரச்சனையாக உருவெடுக்கிறது. விட்டுக் கொடுப்பது என்றால் அவ்வப்போது தான், எப்போதுமே அல்ல. இதை இருவருமே புரிந்து கொண்டால் பிரச்சனை இல்லை.

நிதர்சனத்தில், அனைவரது வீட்டிலும் இது போல நடப்பதில்லை. அவரவர்க்கு அவரவர் நியாயம் என்பது போல நடந்து கொள்வதால், பிரச்சனைகள் கூடுகிறது. ஒரு சிலர் / பலர் என்னதான் வயது கூடினாலும் தாங்கள் செய்யும் தவறுகளை உணரவே மாட்டார்கள். மற்றவரிடமே குறை கண்டு கொண்டே இருப்பார்கள். என்னுடைய அனுபவத்தில் நிறையப் பேரை சந்தித்து இருக்கிறேன்.

நம் துணை, நம்மை ஒரு விசயத்தில் குறை கூறும் போது, தன்மான இழுக்காக நினைத்து அப்போது நாம் செய்வதை நியாயப்படுத்திப் பேசினாலும், நமக்குத் தவறு என்று தெரியலாம். இது போல சமயங்களில் அப்போது வீராப்பை காட்டினாலும், பின் பொறுமையாக யோசித்து நாம் செய்தது தவறு என்று புரிந்தால், அடுத்த முறை நம் தவறை திருத்திக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.

நாம் (ஆண் / பெண்) அனைவருமே, நாம் செய்வது தான் சரி என்று நினைப்போம். நம் விருப்பங்களை திணிப்பதில் தான் அதிக அக்கறை காட்டுவோம். இது மனித இயல்பு ஆனால், இது வரம்பு மீறும் போது அங்கு பிரச்சனை எழுகிறது. அடுத்தவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

சுஜாதா அவர்கள் கூறியதை, எழுத்தாளர் சுஜாதாக்கு மட்டும் கூறியதாக நினைக்காமல், நம் (ஆண் / பெண்) அனைவருக்குமே கொடுக்கப்பட்ட அனுபவமாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்குப் பிடித்ததை முற்றிலும் ஒதுக்கி விட்டு குடும்பத்தினருக்காக வாழுங்கள் என்று கூறவில்லை, குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்குங்கள் என்று தான் கூறுகிறேன். நமக்காகவும் வாழ்ந்தால் தான் குடும்பத்தினருக்காக வாழவும் நமக்கு விருப்பமாக இருக்கும். இல்லை என்றால் ஒரு இயந்திர வாழ்க்கையாகி விடும்.

என்ன தான் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்கினாலும், ஒரு சில வீட்டில் போதாது. தொடர்ந்து புலம்பல்கள் / திட்டுகள் வரும். அதை எதுவுமே செய்ய முடியாது. பொறுமையாக விளக்குவதன் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும். சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ள மாட்டார்கள் (இது போல நிறைய இருக்கிறார்கள்) இது போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டவர்கள் நிலை பரிதாபமானது தான்.

எழுத்தாளர் சுஜாதா பிரபலம் என்பதால் இது குறித்து விவாதிக்கப்படுகிறது, அவ்வளோ தான். இது பெரும்பாலனவர்கள் வீட்டில் நடைபெறுவது தான். நம்மை யோக்கியர்கள் போல நினைத்து, பெருமைப் பட்டு நமக்கு நாமே சான்றிதழ் வழங்குவதில் அர்த்தமில்லை. நாம் எப்படி என்று நம் துணையைக் கேட்டால் தான் தெரியும்.

சுஜாதா அவர்கள் தற்போது இதைக் கூறி பலரின் வெறுப்பை சம்பாதித்து இருக்கலாம்…. இதை பாசிடிவாக எடுத்துக்கொண்டால், பலருக்கு மறைமுகமாகத் தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பதை உணர முடியும். புரிந்து கொண்டவர்கள் அவரை தவறாக நினைக்க மாட்டார்கள்.  அதே போல எழுத்தாளர் சுஜாதாவின் திறமை / புகழ் இதன் மூலம் எந்த விதத்திலும் குறையப்போவதில்லை. இந்த ஒரு பேட்டியின் மூலம் அவரது புகழ் மங்கி விடும் என்று நினைத்தால், அதை விட முட்டாள்த்தனம் எதுவுமில்லை.

http://www.giriblog.com/2013/06/sujatha-expressed-her-feelings.html

 

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளிகளின் மறுபக்கம் ............. :(  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதா மட்டுமல்ல நான் உட்பட  இன்னும் எ த்தனையோ கொடிக்கணக்கான ஆண்கள் விடும் தவறு இது.

 

அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மனைவியை அரவணைத்துச் செல்லாமல் இறுக்கமாக இருக்கும் ஆண்கள் இவ்வுலகில் பலர்.

 

எத்தனை வேலைப்பளுவாக இருந்தாலும் ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மனைவி மக்களுக்காக ஒதுக்குவது கணவனின்/ தந்தையின்   கடமையாக இருக்க வேண்டும்.

 

சுஜாதாவைப்  பற்றி  அவர் துணைவியார் கூறும் குற்றச்சாட்டு 

என் மனதையும் அம்பு போல் குத்துகின்றது.

 

ஒருவருக்குச் சரியெனப்படுவது இன்னொருவருக்குப் பிழையாகப்படுவது இயல்பு

ஆனால் விடும் பிழைகளை ஏற்றுக் கொண்டு திருந்த முயற்சிப்பவன் மனிதனாகின்றான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்களின் தொழில் பக்தி குடும்பத்தை மறக்க செய்கிறது. இதில் சுஜாதா கூடி விதிவிலக்கல்ல என தெரிகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

சிந்து  பைரவியிலும் இதே பிரச்சினைதான்.  என்னுடைய ஆதர்சமான எழுத்தாளர், உபதேசம்  ஊருக்குத்தானோ எண்ட மாதிரி ஆயிட்டுது !

அதுசரி, நாமாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு பின் குத்துதே, குடையுதே எண்டால்..... .!

  • கருத்துக்கள உறவுகள்

சிந்து  பைரவியிலும் இதே பிரச்சினைதான்.  என்னுடைய ஆதர்சமான எழுத்தாளர், உபதேசம்  ஊருக்குத்தானோ எண்ட மாதிரி ஆயிட்டுது !

அதுசரி, நாமாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு பின் குத்துதே, குடையுதே எண்டால்..... .!

 

இது தான்

இதைத்தான் மறுபக்கம் என்று குறிப்பிட்டேன்.

அடிமைபோல் பெண்ணை  வீட்டிற்குள் பூட்டி வைத்துக்கொண்டு

படைப்பாளியாம்

உபதேசமாம்

பெண் சுதந்திரமாம்

கல்வி அறிவாம்

அதிலும் விஞ்ஞானமாம்...............

 

இனி  இங்க கொஞ்சப்பேர் எழதுவினம்

ஆளைப்பார்க்காதீர்கள்

ஆக்கத்தை பாருங்கள் என்று...... :(

இது சிலருக்கு பொருந்தலாம் எல்லோருக்குமானது இல்லை .தமிழ் நாட்டில் பலருக்கு பொருந்தும் அங்கிருக்கும் வாழ்க்கை முறை அப்படி .வைரமுத்துவிற்கு உது பொருந்தாது .

இதில் சுஜாதா ரங்கராஜனில் என்ன பிழை இருக்கு .இப்ப சுஜாதா  செய்வதை முன்னர் செய்யாமல் ஏன் விட்டார் .சுதந்திரம் வேணுமென்றால் அவனன் தான் போராடவேண்டுமே ஒழிய அடங்கி இருக்கவோ ஓடி ஒழியவோ பழககூடாது (ஓடி வந்து சுதந்திரம் கேட்டால் கிடைக்காது ,நின்று போராடவேண்டும் ).

 

அது சரி சிந்து பைரவி ஏன்  இங்குவந்து ?அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு ?

  • கருத்துக்கள உறவுகள்

சுஜாதா ரங்கராஜனில் பிழை இருக்குது. ஏன் மனைவி சுஜாதா அப்ப எதுவும் செய்யவில்லை என்றும் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அர்ஜூன் விசுகு எழுதினதை மட்டும் பார்த்து விட்டு அவசரப் பட்டுக் கேள்வியும் கேட்டு விட்டார் போலிருக்குது!    

 

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளிகளின் மறுபக்கம் ............. :(  :(  :(  :(

 

இவர்களை படிக்காதவர்கள்தான் ...........
"படைப்பாளிகள்" என்று பல்லக்கு தூக்குவோர்கள்.
பொதுவாக இவர்கள் படைப்பது என்று எதுவுமே இல்லை.
கொப்பி  அடித்தாலும் ..... 

 
தள்ளு முள்ளு செய்வதும்தான் இவர்கள் வேலை.
 
ஒரு கதையில் ."பெண்ணை" அழகாக படைப்பவன். தனது பெண்ணை அழகு என்றே பார்ப்பான். அந்த அழகும் தனது ரசனையும் கெட்டு  விட கூடாது என்று நினைப்பான்.
இவர்கள் சுயநல மிருகங்கள்.
சுயவிளம்பரத்திட்கு ...... கொப்பி அடித்து கதை வடித்து. பெயர் பெற்றவுடன் 
அதை தக்க வைத்து கொள்வார்கள்.

இது மறைந்த ரங்கராஜனின் Action or Reaction? இந்த அம்மா உண்மையாகவே இருக்கட்டும். ஏன் இப்படி செய்தார்? பல காரணாங்கள் இருக்கலாம் .

 
ஒரு மனைவி ரொம்ப ஆசைபட்டால்( பெரிய வீடு , luxury car , etc..) இரவு பகலாக உழைக்கத்தான் வேண்டும். அப்ப எப்படி குடும்பத்துடன் செலவழிக்க நேரம் வரும். அப்படி உழைத்து கொடாவிட்டால் என்ன சொல்லி இருப்பா என்று யோசித்தேன் 
 
இந்த அம்மாவின் கூற்றை நம்பி அவரை நல்லவர் இல்லை என்று மதிப்பிட முடியாது.
 
இப்படி எங்கள் spouse செய்யக் கூடாது என்று நினைப்போம். 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது சுஜாதா நல்ல குடும்பஸ்தன் என்பதற்கு ஆகத்தான் அவருடைய படைப்புகளை வாசித்தோ,பார்த்து ரசித்திருந்தால் இது பெரிய ஏமாற்றம் ஆக இருக்கும். நாங்கள் கூடுதலான மட்டும் அவருடைய புத்தங்கங்களை இரவலாக படித்து கொண்டு இதற்கு கருத்து (பிழை என) சொல்லுவது சரியோ தெரியவில்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.