Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்டமைப்புக்கு டில்லி அவசர அழைப்பு; மன்மோகன், சோனியாவுடன் 13 தொடர்பில் முக்கிய பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய அதிகாரங்களை நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழ்நிலையில் அவசரமானதும்,  முக்கியமானதுமான பேச்சுகளை நடத்துவதற்கு உடனடியாகப் புதுடில்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.

 
இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் அடுத்தவார முற்பகுதியில் புதுடில்லிக்கு விரையவுள்ளனர்.
 
அங்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உட்பட்ட தலைவர்களுடன் இவர்கள் முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.
 
13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ள  சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புதுடில்லிக்கு அழைத்துள்ள இந்திய மத்திய அரசு, 13ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கையில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளது. 
 
இலங்கையின் தமிழர் பிரச்சினைத் தீர்வில் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு மீறிச் செயற்படுவதால் கடந்த காலங்களைப்போல் விசேட இராஜதந்திரி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி நிலைமைகளை ஆராய்வதற்கும் இந்தியா ஆலேõசித்து வருவதாகத் தெரிகிறது.
 
கடந்த தசாப்தங்களில் இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளான கே.பார்த்தசாரதி, ரொமேஷ் பண்டாரி போன்றோர் இலங்கைக்கு அனுப்பப்பட்டமைபோன்று தற்போதும் மூத்த இராஜதந்திரி ஒருவரை அனுப்புவதற்குப் புதுடில்லி ஆலோசித்து வருõதாகக் கூறப்படுகிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வருகுது

தேர்தல் வருகுது

இழிச்சவாயன் 

ஈழத்தமிழன்  தலை இருக்குது

ஈழத்தமிழன் தலை இருக்குது

அரை

அரை

அள்ளி  வைச்சு அரை................ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இப்போது இலங்கையில் ஒரு சில பிடிமானங்கள்தான் உள்ளன.. இந்த 13ம் அதில் ஒன்று.. அதையும் இல்லாமல் செய்ய சிங்களவன் ஒற்றைக்காலில் நிக்கிறான். :rolleyes::D

தேர்தல் வருகுது

தேர்தல் வருகுது

இழிச்சவாயன் 

ஈழத்தமிழன்  தலை இருக்குது

ஈழத்தமிழன் தலை இருக்குது

அரை

அரை

அள்ளி  வைச்சு அரை................ :(  :(  :(

 

விழுந்தடித்தோடும் கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழனும் கையாலாகாத இந்திய மத்திய அரசிடம் ஏமாந்துவிடக் கூடாது.

தமிழக மக்கள் ஏமாந்துவிடாமல் காக்க தமிழக மாணவர்கள் உள்ளனர்.

சம்பந்தன், சுமந்திரனின் ஏமாற்று நாடகத்திலிருந்து.ஈழத் தமிழரை காக்க வேண்டும்!

சிலசமயம் அமெரிக்காவுக்கும் பயணமாகலாம் .

13ம் திருத்தத்தை JVP வழக்குப் போட்டு உடைத்த போது கிருஸ்ணா சொன்ன கதை இலங்கை கொடுப்பதை மட்டும்தான் கூட்டமைப்பு வாங்க வேண்டும் என்பது. 

 

இப்போது காங்கிரஸ் துடிப்பது இலங்கை அரசு 13லிருந்து விலகப் போவது என்பதால் அல்ல. மேலும் காங்கிரசுக்கு தெரியும் தான் தேர்தலில் திரும்பிவரும் சந்தர்ப்பம் இருந்தால் இலங்கை அரசு 13ல் கைவையாது; தான் வரமுடியாவிட்டால்த்தான் அதை நீக்கும் என்பதும். 

 

காங்கிரசுக்கு வலிப்பது இலங்கையின் மேற்கு நாடுகளுடன் மிரண்டு பிடிக்கும் போக்கு. இந்தியா பிரேரணை நேரம் சு.சாமியை அனுப்பி இலங்கையை அமெரிக்காவுடன் மிரண்டு பிடிக்க வேண்டம் என்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. .சு. சாமியால் அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் முகத்தை காக்க முடிந்தாலும் இன்று இலங்கை அமெரிக்கா மீது பயப்படாமல் துவக்கை நீட்டுகிறது. இலங்கைக்கு தான் சீனாவின் கழுத்திலிருக்கும் பாம்பு என்ற துணிச்சல். இதுதான் இந்தியாவுக்கு வலிக்கிறது.

 

இப்போதைய பயம் காங்கிரசுக்கு தான் தேர்தலில் போய்விட்டால், இலங்கை தொடர்ந்தும் இந்தப் பிடியை பிடித்தால் சர்வதேச தலையீடு இலங்கையில் வந்து இறங்குவது சாத்தியமாக போய்விடும் என்பதுதான். 

 

இது சம்பந்தருக்கும், சுமந்திரனுக்கும் விளங்கும். சுமந்திரனுக்கு தான் இதுவரையில் காணாத கதிரை மீது ஒரு ஆசை இருக்கலாம். ஆனால் சம்பந்தர் அந்த கதிரையில் தூங்கவில்லை. ஆனால் துணிச்சலாக இந்தியாவையும் அதன் 13ம் திருத்தத்தையும் வேண்டாம் என்று சொல்லப் பயப்படுகிறார். கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷ்ன் என்று சிந்திக்கிறார். பின்னர் ஒருநாள் மேற்கு நாடுகள் தண்ணி காட்டினால் புருஷனை விட்டு அரசனை பிடித்த கதையாகக் கூடாது என்று பார்க்கிறார். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

13 நீக்கம் எல்லாம் எங்களுக்கு தெரியும்.

 

மகிந்தர் ஐயா, சொல்லிப் போட்டுத் தான் செய்யறார். நல்ல மனிசன்!!

 

ஆர்பாட்டம், போராட்டம் என்று நசலை போடாமல் பேசாமல் இருக்க வேண்டும் எண்டு சொல்லாத தான் கூப்பிட்டோம்...

  • கருத்துக்கள உறவுகள்

981110031batti.jpg

13 என்ற போர்வையில் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த தீய சக்திகள் முயற்சி

30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் மக்கள் இன, மத வேறுபாடின்றி சமாதானமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நல்ல சூழலில் 13வது சீர்திருத்தம் என்ற போர்வையில் சிறுபான்மை இனங்களுக்கு மத்தியில் இனமுறுகலை ஏற்படுத்தி அதில் சில தீய சக்திகள் குளிர்காய நினைப்பதாக இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். 


அதற்கு எந்த மதத்தவர்களும் ஒரு போதும் அனுமதி வழங்கக் கூடாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன எனும் பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 11-06-2013 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. 

அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

இந்த 13வது சீர்திருத்தம் பலாத்காரமாக திணிக்கப்பட்ட பயத்திற்கும் அச்சத்திற்கும் மத்தியில் இந்திய அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளின் பேரில் இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு சட்டமாக மாற்றப்பட்டது. 

எங்களுக்கு 13ஐயும் தெரியாது 15ஐயும் தெரியாது. மக்களுக்கு அபிவிருத்தியை வழங்குகின்ற எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் அதை நாங்கள் கொடுக்கவுள்ளோம்.

இன்று தமிழ்பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளை எவ்வாறு தீர்வு காண வேண்டுமென்ற ஒரு நிலையைத்தான் உருவாக்கித் தருகிறோம். 

அரசியல் ரீதியாக பிரச்சினைகள் உருவாக்கி இனங்களுக்கு இடையில் வைராக்கியத்தை உண்டுபண்ணி பிளவுகளை ஏற்படுத்தி விடாமல் இன, மத மொழி வேறுபாட்டிற்கப்பால் நாமெல்லோரும் ஒரே தாய் நாட்டு மக்களே என்ற உணர்வோடு வாழ வேண்டும். 

இன்று இலங்கை நாட்டை ஆசியாவிலேயே ஆச்சரியமிக்க நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருகின்ற வேளையில், விமான ஓடு பாதைகளை போடுதல், கப்பல் போக்குவரத்து ஹம்பாந்தோட்டையில் அபிவிருத்தி செய்தல், வீதி அபிவிருத்திகள் என பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்ற வேளையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜெனீவாவிலும் இலங்கை அரசுக்கு எதிராக சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

நாம் ஒரு போதும் அவ்வாறிருக்கக் கூடாது. நாம் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற இன வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். 

நான் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன் முதலாக 1974ம் ஆண்டு வந்தேன். கடுமையாக பயங்கரமான சூழ்நிலை. இரண்டாவது மூன்றாவது தடவையாக காத்தான்குடியிலுள்ள ரஊப் ஹாஜியார் என்பவரின் வீட்டிற்கு 2008ம் ஆண்டு விமானத்தில் வந்துஇறங்கினேன்.2008 ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி நான் இந்த ஊரிற்கு புறப்பட இருந்த போது பாதுகாப்புத் தரப்பினர் இன்றைக்கு நீங்கள் செல்ல வேண்டாம். நாளை பயணத்தை ஆரம்பியுங்கள் ஏனெனில் 1990ம் ஆண்டு  புலிகள் ஆகஸ்ட் மாதம் 03ம் திகதிதான் 100க்கும் மேற்பட்ட அல்லாஹ்வை தொழுது சுஜுதிலே இருந்த முஸ்லிம் மக்களை சிறுவர் பெரியவர் பார்க்காது கொன்று குவித்த நாள். எனவே இன்று போக வேண்டாம். நாளை போகலாம் என்றார்கள். 

இப்படி எவ்வித அபிவிருத்தியும் காணாது அச்சமான சூழ்நிலை நிலவிய இந்த மாவட்டம் இன்று 2013ம் ஆண்டு நான் வந்து பார்க்கையில் அபிவிருத்திகள் முன்னேற்றம் கண்ட ஒரு மாவட்டமாக அவதானிக்க முடிகின்றது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலகட்டத்தில் நாளுக்கு நாள் கல்வி, பாதை, பாலங்கள், அடிப்படைத் தேவைகள் என பல்வேறு அம்சங்களில் முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிக்கின்றது இந்த மட்டக்களப்பு மாவட்டம். 

இந்த மாவட்டத்திலே அரசாங்க அதிபராக கடமையாற்றும் பி.எஸ்.எம்.சார்ல்ஸிடம் மட்டக்களப்பு மாவட்டம் எப்படியென்று கேட்டேன். அதற்கு நான் வவுனியாவில் கடமையாற்றும் போது வவுனியா இருந்ததை விட இந்த மட்டக்களப்பு சிறப்புற்று விளங்குகின்றது என்றார். 

ஆகவே நாம் இன மத மொழி உள்ளிட்ட எவ்வித வேறுபாடுமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 
 

 

Edited by nunavilan

புத்த பிக்குகளும், ஆமிகளும் சேர்ந்து 1958,1977,1981,1983 பூர்வீக இனப்படுகொலைகளை நடத்தினார்கள்.

1983 இலிருந்து நால்வகை மதத்தவர்களும், ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுத்து, வெட்டிக் கொன்றார்கள்.

 

அந்தப் பாவம், ஒரு மதயுத்தத்தை, வெகுவிரைவில் கொண்டுவரவிருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழுந்தடித்தோடும் கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழனும் கையாலாகாத இந்திய மத்திய அரசிடம் ஏமாந்துவிடக் கூடாது.

தமிழக மக்கள் ஏமாந்துவிடாமல் காக்க தமிழக மாணவர்கள் உள்ளனர்.

சம்பந்தன், சுமந்திரனின் ஏமாற்று நாடகத்திலிருந்து.ஈழத் தமிழரை காக்க வேண்டும்!

13 எண் அதிஷ்டமில்லாதது என்று சிலர் கூறுவார்கள்

ஆனால் இதை வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளுக்கு இது அதிஷ்டமான எண் என்பதில் சந்தேகமில்லை

13 எண் அதிஷ்டமில்லாதது என்று சிலர் கூறுவார்கள்

ஆனால் இதை வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளுக்கு இது அதிஷ்டமான எண் என்பதில் சந்தேகமில்லை

 

இந்த 13 சட்டமூலம், தமிழ் மக்களுக்கு உதவாது.

 

ஆனால், முஸ்லிம் மக்களுக்கு, போரால் வெல்லாத ஒரு வரப்பிரசாதம்.

 

13 ஐ இழந்தால், கிழக்கில் கிடைத்த முஸ்லிம் ஆட்சியை, இழக்கும், பரிதாபம்.

இந்தியாவுக்கு இப்போது இலங்கையில் ஒரு சில பிடிமானங்கள்தான் உள்ளன.. இந்த 13ம் அதில் ஒன்று.. அதையும் இல்லாமல் செய்ய சிங்களவன் ஒற்றைக்காலில் நிக்கிறான். :rolleyes::D

இன்னொமொரு பிடிமானம் கூட்டமைப்பு, கூட்டமைப்பை விட்டால் அங்கு கூப்பிட்டவுடன் ஓடிப்போவதுக்கு யாரும் இல்லை.

 

கூப்பிடுவதுக்கும் யாரும் இல்லை. 

இன்னொமொரு பிடிமானம் கூட்டமைப்பு, கூட்டமைப்பை விட்டால் அங்கு கூப்பிட்டவுடன் ஓடிப்போவதுக்கு யாரும் இல்லை.

 

கூப்பிடுவதுக்கும் யாரும் இல்லை. 

 

சம்பந்தன், சுமந்திரனும்  அவர்களது புலம் பெயர்  வால்களும் கூப்பிடாமலே ஓடிப்போகத் தயாராக உள்ளனர்.

:D

கனடாவில் நடைபெறும் Fetna விழாவில் சம்பந்தர் ஐயாவும் ,முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனும் 
விழாக்குழுவினரின் அழைப்பில் கலந்துகொளபோகின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரின் ஊடகச்செய்தி ஒன்று தமிழ்நெற் இல் வந்துள்ளது.. யாராவது இணைத்துவிடுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் திருகுதாளங்கள் குறித்து கஜேந்திரகுமார்.. அனைவரும் கேட்கவேண்டியது.. :rolleyes:

 

https://soundcloud.com/tamilnet/gajendrakumar-ponnambalam-11

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36400

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை பற்றி பேசுவது தமிழ் மக்களுக்கு சாவுமணியடிப்பதற்கு சமம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சீற்றம்!!

June 11th, 2013

 

எமது பிரச்சினைக்கு மாகாணசபை என்பது தீர்வாகவோ அல்லது ஆரம்பப்புள்ளியாகவோ இருக்கமுடியாதென்பதினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெளிவாகவுள்ளதாக அதன் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் 26 வருடங்களுக்கு முன்னதாக நிராகரித்த அதே மாகாணசபையினை  இப்போது தூக்கிக்கொண்டாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.யாழ். ஊடக அமையத்தினில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் அவர் மேலும் தெரிவிக்கையினில் மிக முக்கியமாக எம்மைப்பொறுத்தவரையில் தமிழ்தேசத்திற்கு தெரிந்திருக்கவேண்டிய சம்பவம் ஒன்றுள்ளது. இச்சம்பவம் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் அதே வருடம் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் நடந்திருந்தது. இந்தியாவின் முக்கிய பிரமுகர்களைக்கொண்ட குழு இலங்கை வந்திருந்தது. அதன்போது முக்கியமான நபர்களாக இன்றைய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் நாராயணன் என பலரும்; இருந்திருந்தனர்.

K640_ka1.JPG

அவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினையும் அப்போது சந்தித்திருந்தார். அன்று  நானும் கலந்துகொண்டிருந்தேன். இந்திய தரப்பினால் சந்திப்பில் கூறப்பட்டவற்றினுள் பிரதானமானது தமிழ் மக்கள் 13ம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டும் எனபதாகும். அந்த் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் 13ம் திருத்தம் சம்மந்தமாக விமர்சனங்களை முன்வைத்து அந்த தீர்வுத்திட்டம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என கூறியபோது நாராயணன் கோபித்து பதிலளித்திருந்தார்.

தமிழருக்கு எது நல்லதென்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும் எனக்கூறி 13 வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அங்கு வற்புறுத்தப்பட்டிருந்தது. இது எங்கள் இனத்தின் அரசியல் சரித்திரத்தில் முக்கியமானது. சந்திப்பின் பின்னர் தமிழ்தேசிய வாத அரசியல் நிலைப்பாட்டில் அடிப்படை மாற்றங்கள் பல ஏற்பட்டிருக்கின்றது. அந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்? பின்னணி என்ன? என்பதை பதிவுசெய்யும் நோக்குடனேயே நாம்  மக்களை சந்திக்கின்றோம்.

முள்ளிவாய்க்காலின் பின்னர், குத்துரக்கரணங்கள்.

2008ம் ஆண்டின் ஒக்ரோபர் முற்பகுதியில் தலைவர் பிரபாகரனை வன்னிக்குச் சென்று சந்திப்பதற்கு முன்னதாக  சம்பந்தனிடம் பாராளுமன்ற கட்டிடத்தில் வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். தமிழ் மக்களின் சுயநிர்ண உரிமையினை விட்டுக்கொடுக்காத வகையில் தீர்வு வலியுறுத்தப்படவேண்டும். இன்று யுத்த தீர்;வொன்றை சர்வதேச ஆதரவுடன் வழங்கினாலும், புலிகளை அழித்தாலும் கூட தமிழர்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் மாற்றம் இருக்காது என கூறினால் மட்டுமே சர்வதேசம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்கும்.தற்போதைய சூழலினில் தாங்களே மிக முக்கியமான ஒரு நபர்.அவ்வகையினில் தாங்கள் பகிரங்கமாக சர்வதேசத்திற்கு இதனை அறிவிக்கவேண்டுமென கோரியுமிருந்தார்.

 

அண்மைய சிவில் சமூக மன்னார் கூட்டத்திலும் இவ்விடயம் மீள இரா.சம்பந்தனுக்கு நினைவுபடுத்தப்பட்டது. மக்களுக்கும் இந்த விடயம் தெரிந்திருக்கவேண்டும். அப்போது கஜேந்திரனிடம் சம்பந்தன் கூறுகையினில் பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றேன். ஒஸ்லோ அடிப்படையில் ஒரு சமஸ்டி தீர்வுக்கு புலிகள் இணங்கினால் அந்த தீர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கூடாக முன்வைக்க இணங்கினால் போரை நிறுத்தி வடகிழக்கு இணைந்த தீர்வினை பெறலாம் என் இந்தியா தமக்கு கூறியிருக்கின்றது என  கூறியிருந்தார்.ஆனால் பிரபாகரன் தனக்கு பதில் தரவில்லையென்றும் சம்பந்தன் கூறியிருந்தார்.

 

இவ்விரு சம்பவங்களும் முக்கியமானவை. இன்றுள்ள பல குழப்பங்களுக்கான காரணமாகவும் இவை இருக்கின்றன. அன்று சம்மந்தன் கூறிய சமஸ்டித்தீர்வுக்கு புலிகள் இணங்கியிருந்தால் இனப்படுகொலையை நிறுத்தி இணைந்த வடகிழக்கில் இந்தியா தீர்வினைப்பெற்றுத்தருமெனவும் அதற்கு புலிகள் இணங்கவேண்டும் எனவும் சம்மந்தன் வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்தியா மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட மேற்குலகம் யுத்தத்தின் பின்னர் இரண்டு நாட்களுக்குள் ஒள்றையாட்சிக்குள், பிரிந்த வடகிழக்கில் 13வது திருத்தத்தை ஏற்கவேண்டும் என்று கூறியிருந்தது.

புலிகளை படத்திலிருந்து அகற்றிவிடவேண்டும் என்பதற்காக சமஸ்டித்தீர்வுக்குள் இணங்கவேண்டும் என கோரப்பட்டிருந்தது. ஆனால் புலிகள் இப்போது படத்தினில் இலலாத நிலையினில் தமிழ்தேசிய கூட்டமைப்பே மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.இந்நிலையில், ஒன்றையாட்சிக்குள் 13வது திருததத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று 26வருடங்கள் தமிழர்கள் நிராகரித்த விடயத்தை மீண்டும் கேட்கப்பட்டுள்ளது.

 

1987ம் 28 ஒக்டோபர் மாதம் 13வது திருத்தச் சட்டம் முன்மொழிவாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் எழுதப்பட்ட கடிதத்தில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், செயலாளர் நாயகம் .அமிர்தலிங்கம், உபதலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கையொப்பமிட்டு எழுதியுள்ளனர். இதில் 13வது திருத்தம் சம்மந்தமாகவும், மாகாணசபை சட்டமாகவும் குறிப்பிடப்பட்ட 2வது பந்தியில் 13வது திருத்தம் தொடர்பாகவும், மாகாணசபைகள் தொடர்பாகவும் எங்கள் ஏமாற்றத்தை, அரசியல் தீர்வு தொடர்பாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என கூறப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, தீர்ப்பதாகவோ இழப்புக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலோ இது அமையவில்லை என்றும் துன்பங்கள், பிரச்சினைகள் தொடர்பாகவும் இந்த யோசனைகள் ஊடாக தீர்க்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

நாங்கள் இந்தச் சட்டங்களை மக்களுக்கு திருப்பதியளிப்பதாகNவுh, நீதியானதாகவோ, நிலைத்திருக்க கூடிய விடயமாகவே மக்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்க முடியாது என்றும் நீண்ட கடிதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கவலையுடன் குறிப்பிட்டிருந்தது.

 

காணி அதிகாரங்கள் தொடர்பில் 13ம் திருத்தத்தில் காணி அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கி;ன்றது. அதனை அமுல்;படுத்தினால் தீhக்கலாம் என்கிறார்கள், இணைந்த வடகிழக்கில் அரச காணி தொடர்பாக ஒரு பெறுமதியற்ற ஒரு விடயமாக இந்தச் சட்டமூலங்கள் ஒரு நிலையினை உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் ஆதிக்கம் இல்லாமல் மாகாணசபைகளுக்கு எந்தவித முடிவினையும் எடுக்க முடியாதென குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இறுதியாக சட்ட மூலங்கள் தொடர்பில் முன்மொழிவுகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தையும், மாகாணசபைகள் தொடர்பாக முன்மொழிவாக கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை சட்டமூலமாக உருவாக்க விடவேண்டாம் என குறிப்பிட்டிருந்தார்கள். இதுவே நடந்தது.

இன்று இந்த நிலை தலைகீழாக மாறி மாகாணசபைகளை ஆரம்ப புள்ளியாக கருதலாம் என்றும், கடவுள் கொடுத்த அரிய சந்தர்ப்பம் என்றும், கூறும் அளவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், அதிலுள்ளவர்களும் மாறியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரையில் இந்த 13ம் திருத்தம் தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வாகவோ, தீர்;வுப் பாதையில் ஆரம்பப் புள்ளியாகவோ இருக்க முடியாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றோம். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

 

13ம் திருத்தம் ஒரு முன்மொழிவாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உயர்நீதிமன்றிற்கு அரசால் அனுப்பப்பட்டு அன்றிருந்த அரசியலமைப்பிற்கு இடைஞ்சலாக இருக்கின்றதா என்பதை அறிவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றிலிருந்த ஒன்பது நீதவான்களும், அதனைப் படித்து கருத்துக்களை முன்வைத்தார்கள், ஆரம்பத்தில் ஜந்து நீதவான்கள் 13ம் திருத்தம் இலங்கை அரசியலமைப்பு அதாவது ஒற்றையாட்சியை மீறியுள்ளது என கூறி அதனை அமுல்ப்படுத்த பாராளுமன்றில் மூன்றினில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜனவாக்கெடுப்பும் நடத்தவேண்டு;ம் எனகூறியிருந்தனர்.

 

ஒற்றையாட்சியை மீறுவதாக கூறிய ஜந்து நீதவான்களில் ஒருவர் சில மாற்றங்களை செய்தால் இது ஒற்றையாட்சியை மீறவில்லை என கூறுவதாக கூறினார். அதன் பின்னர் சில மாற்றங்களுடன் இது நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவ்வாறிருக்க அவர்களது தீர்ப்பில் சாரம்சத்தை பார்த்தால் 13ம் திருத்தம் என்பது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் எல்லை என்றும், அதனால் 13ம் திருத்தத்தை பலப்படுத்தினால் ஒற்றையாட்சி முறையினை மீறும் என்றும். அதனை மீறினால் மூன்றினில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்ல சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என கூறியிருந்தனர்.

26வருடங்கள் நிராகரித்த 13ம் திருத்தத்தை அப்போது எல்லா அரசியல் கட்சிகளும் நிராகரித்து புறக்கணித்தார்கள். .பி.ஆர்.எல்.எவ் அமைப்பு மட்டும் திருத்தம் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்து இணைந்த வடகிழக்கில் போட்டியிட்டு வென்று முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் தெரிவானார். பின்னர் மாகாணசபையில் ஒன்றுமில்லை என கூறி தமிழீழ பிரகடனம் செய்து இந்தியா தப்பிச்சென்றார்.

எனவே 13ம் திருத்தம் அந்தச் சம்பவத்தின் பின்னர் பேசாப்பொருளாகவே மாறிவிட்டது. இதன் பின்னர் 2008ம் ஆண்டு 13ம் திருத்தம் தொடர்பில் பேசப்பட்டபோது கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் பேசும் போது அழிந்துபோன டோடோ பறவை எனக் குறிப்பிட்டு அதனைக் குறித்துப்பேச தயாரில்லை என கூறியிருந்தார்.

எனவே இன்று அந்த கருத்து தலைகீழாக மாறி ஆரம்ப புள்ளியாகவோ, இறுதி தீர்வினை அடை வதற்கான பாதை என்ற போலியான நம்பிக்கையினை ஊட்ட ஒரு சிலர் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் மக்களிடம் கூற விரும்புவது சிங்கள தேசத்தில் தமிழருக்கு எதிரான இனவாதம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது, சமஸ்டி குறித்துப் பேசி .தே.கட்சி கூட அண்மையில் முன்வைத்த அரசியலமைப்பில் ஒற்றையாட்சியினையே வெளிப்படுத்தியுள்ளது.

 

சிங்கள தேசத்தின் தமிழர் எதிர் இனவாதம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அந்த இனவாதம் தமிழர்களுக்கு பெயரளவில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் நீக்கப்படவேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிக்கப்படவேண்டும் என கூறிவருகின்றனர். அதனால் தமிழ் மக்களுக்கும் இதில் எதோ இருக்கின்றது என நினைத்துவிடக் கூடாது. வேறு தரப்புக்கள் கூறும் கருத்துக்களை வைத்துக் கொண்டு எங்கள் இருப்புக்கான முடிவுகளை எடுக்க முடியாது.

 

13ம் திருத்தம் தொடர்பில் அறிந்து விளங்கிக் கொண்டு முடிவுகளை எடுக்கவேண்டும். பதிலாக நடந்துகொண்டு எதிர்வினையாக செயற்படவேண்டும். அந்த வழியிலே நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படுவோம். ஜெனீவாவில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்pன்றன. அவையும் கூட ராஜபக்ச அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தியதே தவிர தமிழர்களுக்கு அதில் எதுவுமே இல்லை. இதே போன்றதே 13ம் திருத்தமும். சரியான பின்னணியில் அணுகவேண்டும்.தமிழ் புத்திஜீவகளுக்கும், சிவில் சமுகத்திற்கும் பாரிய கடமையுள்ளது. உங்கள் சிந்தனைகள் மக்களை சரியான வழியில் கொண்டு செல்வதாக அமையவேண்டும். உன்மைகளை சரியாக விளங்கிக் கொண்டு ஆக்கபூர்வமான செயற்பாட்டில் இனத்தின் எதிர்காலம் தொடர்பாக செயற்பட வேண்டும் அது மிக முக்கியம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.

இப்பத்திரிகையாளர் மாநாட்டினில் முன்னணியின் சர்வதேச அமைப்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பிரச்சன்னமாகியிருந்தனர்.

 

சரிதம்

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரின் ஊடகச்செய்தி ஒன்று தமிழ்நெற் இல் வந்துள்ளது.. யாராவது இணைத்துவிடுங்கள்..

 

எவரும் எதுவும் கதைக்கலாம் பேசலாம் .பிரச்சனை இல்லை .

எது சாத்தியம் என்பது தான் கேள்வி .

சிங்கள கட்சிகள் யார் கூடுதலாக தமிழனை அடக்குவது என்று சிங்கள மக்களுக்கு காட்டி வாக்கு பெறுவதுபோல தமிழ் கட்சிகளும் யார் கூடுதல் உரிமைக்காக பாடுபடுகின்றோம் என்பதை காட்டி தமிழ் வாக்குகளுக்காக அடிபடுகின்றார்கள் .

இவர்கள் எல்லோருக்கும் வேண்டியது ஒரு எம் பி சீட்டு மட்டுமே .

பாவம் சனங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எவரும் எதுவும் கதைக்கலாம் பேசலாம் .பிரச்சனை இல்லை .

எது சாத்தியம் என்பது தான் கேள்வி .

சிங்கள கட்சிகள் யார் கூடுதலாக தமிழனை அடக்குவது என்று சிங்கள மக்களுக்கு காட்டி வாக்கு பெறுவதுபோல தமிழ் கட்சிகளும் யார் கூடுதல் உரிமைக்காக பாடுபடுகின்றோம் என்பதை காட்டி தமிழ் வாக்குகளுக்காக அடிபடுகின்றார்கள் .

இவர்கள் எல்லோருக்கும் வேண்டியது ஒரு எம் பி சீட்டு மட்டுமே .

பாவம் சனங்கள் .

 

ஜனநாயக அரசியலில் வேறென்ன எதிர் பார்க்கிறீர்கள்? சிறிலங்கா தொடக்கம் கனடா வரை ஜனநாயக அமைப்பின் மாதிரி(pattern) இது தானே.

உண்மைதான் நுணா.

ஆனால் தமிழர் ஆகிய நாங்கள் கனேடியர்கள் போலவா எமது நாட்டில் இருக்கின்றோம் .கடைசி தமிழ் நாட்டு தமிழன் மாதிரி இருந்தால் கூட ஓரளவு நிம்மதியாக இருக்கலாம் .

எதுவுமே இல்லை எங்களிடம் இப்போது. இதற்குள் அரசியல் செய்கின்றார்கள் அனைவரும் .படுபாவிகள் .

அவர்கள் எம்.பி. பதவியை வைத்திருக்க வேண்டிய காரணம் என்ன என்று கூற முடியுமா?

 

இந்த அடிப்படை இல்லாத அரசியல் ஆராய்ச்சிகள் இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு கொள்கைள் போன இடங்களுக்குத்தான் போகப்போகிறது.  குப்பை கூடத்தை தவிர அவற்றுக்கு இடம் வேறு இல்லை.

 

1947 இலிருந்து தேர்தல்களில் தமிழர் கேட்பது உரிமை மட்டும்தான். அதில் புதிதாக கண்டு பிடித்தது என்னவோ?

 

Edited by மல்லையூரான்

உண்மைதான் நுணா.

ஆனால் தமிழர் ஆகிய நாங்கள் கனேடியர்கள் போலவா எமது நாட்டில் இருக்கின்றோம் .கடைசி தமிழ் நாட்டு தமிழன் மாதிரி இருந்தால் கூட ஓரளவு நிம்மதியாக இருக்கலாம் .

எதுவுமே இல்லை எங்களிடம் இப்போது. இதற்குள் அரசியல் செய்கின்றார்கள் அனைவரும் .படுபாவிகள் .

 

எத்தனை தமிழருக்கு கனேடியர் பார்ப்பது போல போத்தலும் கையுமாக இருந்து இலங்கை கிரிக்கெட் ரீமின் விளையாட்டுக்களை பார்த்து பொழுது போக்கிக்கொண்டிருக்க முடிகிறது?

 

இது எந்த ஊரில் மொக்கு கூட்டத்திற்கான அரசியல் போதனைகள்.

 

இது இரவா பகலா? வனமா மாளிகையா? Wake up baby Wake up

 

இலங்கை கிரிகெட்டை பார்த்து கொண்டு, வன்னி அவலம் என்ற சுவாரசிய தொடர் கதையை வாசித்துகொண்டு, அந்த கதைக்கு விவரணம் எழுதுவோரின் செய்கைகளுக்கு பெயரா அரசியல்?

 

துன்பியல் கதைகள் பிடிக்குமாக இருந்தால் பொன் விலங்கு, குறிஞ்சிமலர், சென்மீன், தேவதாசி மாதிரி ஒரு நாவலை வாசித்துவிட்டு விவரணம் எழுதலாமே. எதற்கு கிறிகெட் பார்க்கும் போது கொறிப்புக்கு  வன்னி அவல செய்திகளையும் பார்த்துவிட்டு நாவல் வாசித்தது மாதிரி பொறுபில்லாமல் விவரணம் எழுதிக்கொண்டிருப்பான்?

சம்பந்தன், சுமந்திரனின் ஏமாற்று நாடகத்திலிருந்து.ஈழத் தமிழரை காக்க வேண்டும்!

செயலில் காட்டலாமே !வாய் வீரம்தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.