Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

45 வருடங்களின்பின் மறுவாசிப்புப்புக்காக - வ.ஐ.ச ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதைக்கும் நம்ம புதுவையாருக்கும் என்ன தொடர்பு புங்கை..! புதுவையை.. ஏன் வைரமுத்துவை.. ஏன் கண்ணதாசனை.. தோழர் என்று அழைப்பதன் மூலம் தமக்கு ஒரு அங்கீகாரத்தை மக்களிடம் தேட விளைபவர்கள் பற்றியும் நாங்கள் அறிவோம்..! அதுகளை விடுங்க. இப்படி எத்தனையோ மனிதர்களை எமக்கு போர்க்காலம் காட்டிவிட்டுள்ளது..! :lol:

புதுவையின் உற்ற தோழர் தற்போதும் சிறீலங்கா அரசுடன்.. அதற்கு ஆதரவளிக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளுடன்.. இந்திய அரசு அதிகாரிகளுடன்.. தொடர்பில் உள்ள ஒருவர் ஏன் புதுவையின் எதிர்காலம் குறித்து.. எந்தவித அக்கறையும் இன்றி சாதாரண புலம்பெயர் தமிழன் போல இருக்கிறார்...???! கவிதையில்.. புதுவையை தோழன் என்று பாடினால் மட்டும் போதுமா..??????????????!

நான் இந்த ஜெயபாலனின் கவிதைகளோ ஆக்கங்களோ அதிகம் படிப்பதில்லை. ஏனெனில் அவரின் எழுத்தின் போக்கை நான் யாழில் அழகாக இனங்கண்டு கொண்டிருக்கிறேன்..! இப்ப நான்.. சொல்வேன்.. 1944 இல் அவர் குவா குவா என்று அழுதது கூட ஒரு கவிதை தான் என்று..! அதுவும் 2009 மே இல் மக்களுக்கு  பெரும் அவலம் வரப்போவது அறிந்து அன்றே அவர் அப்படி அழுதார் என்றும் நான் எழுதலாம்..! எனக்கும் ஒரு கெளரவிப்பு பின்கதவால் கிடைக்கனுன்னா... அதைச் செய்யலாம்..! :icon_idea::D

கவிஞர் ஜெயபாலனைக் கவிஞராக மட்டுமன்றித், தனிப்பட்ட முறையில், அவருடன் கூடப் பழகியவன் என்ற முறையில், சில விடயங்களைச் சொல்ல வேண்டியது அவசியமாகின்றது!

ஜெயபாலன் விட்ட தவறென்று நீங்கள் கருதுவது, அவர் தமிழருக்காக அழவில்லை என்பது போலத் தான் எனக்குப் படுகின்றது!

உண்மை என்னவெனில், ஜெயபாலன் எல்லோருக்காகவும் அழுதான் என்பது தான்! 

அவனது பார்வையில், போரில் கொல்லப்பட்ட சிங்களவருக்காகவும், தமிழருக்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் ஒரே மாதிரி அழுதிருக்கிறான் என்பது தான் ! புதுவையைப்பற்றி, அவன் என்ன செய்திருக்கிறான் என்பதை, இங்கு நான் எழுதுவது, ஜெயபாலனுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக அமையும் என்பதால், அதை ஜெயபாலனே எழுதட்டும் என விட்டு விடுகின்றேன்!

சாதிப் பிரச்சனகளுக்காகத் தெரிந்தவர்களுக்கு எதிராகவே செருப்புத் தூக்கியவன், முதலாளித்துவப் பிரச்சனைகளுக்காகத் தனது தந்தையையே சிலகாலம் விலக்கிவைத்தவன் என இவனைப்பற்றிப் பலதை எழுதலாம்!

சுருக்கமாகச் சொன்னால், உலகத்துக்காக, நடிக்கத் தெரியாதவன், தனது உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துபவன் என்று கூறலாம்! அவனை உலகம் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உங்கள் பதிவுகளிலிருந்து தெரிய வருகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ் ,பல போராளிகள் பல நாடுகளில் தப்பி வந்திருக்கிறார்கள்.சிலர் காயங்களுடனும் ஊனமாகவும் வந்திருக்கிறார்கள். அதே போல் தீபச்செல்வனும் வந்திருக்கலாம் தானே.உண்மையை சொன்னால் என்ன. டக்ளசுக்கும், மனோ கணேசனுக்கும் இன்னும் பல அரசியல்வாதிகளுக்கும் பணம் கொடுத்து பல போராளிகள் தப்பியுள்ளார்கள். இவர்களுள் வெள்ளை கொடியுடன் வந்தவர்களில் இருந்து போராடி காயப்பட்டவர்கள் வரை அடங்கும்.
 
மேலும் சக கருத்தாளரான பொயட் அவர்களின் கவிதை பிடிக்கவில்லை எனில் பிடிக்கவில்லை என சொல்ல வேண்டியது தானே. அதற்காக அவரின் மனம் நோக எழுதுவதில் என்ன இன்பம் கண்டீர்கள்?

அப்படின்னு சொல்லுறீங்க. ஆனால் அவர்.. முஸ்லீம்களிடம் தமிழ் மக்களை மன்னிப்புக் கேட்கச் சொல்லிட்டு முஸ்லீம் கடும்போக்காளர்களிடம் தமிழ் மக்களைச் சரணாகதியும் அடையுங்கள் என்று சொல்லித் திரிகிறாரே. முஸ்லிம்களால் சிதைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு.. முஸ்லீம்களால் இன்றும் சிதையும் தமிழீழத்திற்காக அவர் குரல் கொடுத்ததை நான் அவதானிக்க முடியவில்லை. எனவே நீங்கள் சொல்பவற்றில் பலவற்றை என்னால் நம்ப முடியவில்லையே புங்கை. இதனை உண்மை இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா..???!

எனது நண்பன் என்பதற்காக.. உச்சாரக் கொப்பில் வைத்துத்தான் அழகு பார்க்கனும் என்றில்லை. அவர்களும் தவிறு செய்து கொண்டிருக்கின்ற போது அதனை மறைக்க வேண்டும் என்ற அவசியம் வரக் கூடாது. அதுவும் பொதுவாழ்வில் தம்மை இணைத்துக் கொள்வதாக இனங்காட்ட விரும்புபவர்கள்.

எத்தனையோ விடயங்களை மீளாய்வு செய்கிறோம். மண்ணிற்காக அப்பழுக்கற்று.. மாண்டுபோனவர்களின் உயிர்களைக் கூட சந்தேகித்து மீளாய்கிறோம். உயிர் வாழும் இவர்களிடம் சுத்துமாத்தும் நச்சுப்பாய்ச்சல்களும் அவதானிக்கப்படுகின்ற போது ஏன் இவர்களை நாம் முதலில் மீளாயக் கூடாது...???! :icon_idea:

 தீபச் செல்வன் எப்படியும் வந்திருக்கலாம்.. அவரும் ஒரு சராசரி மனிதன் தானே. தேவைக்கு சூழலுக்கு ஏற்ப அவர்களின் குணங்களும் சேர்க்கைகளும் மாறலாம். இன்று முன்னாள் போராளிகள் எத்தனையோ பேர் எத்தனையோ நிலையில் வாழ்கின்றனர். சிலர் சிங்கள இராணுவத்தின் முக்கிய உளவாளிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமற்றவர்கள் என்று யாரும் இருக்க முடியாது தானே. அதனை ஏன் நாங்கள் ஏற்க மறுக்க வேண்டும்..???!

உளவு அமைப்புக்கள் மக்களை நோக்கி பல்வேறு ரூபங்களிலும் தங்கள் கருத்தை விதைக்கும் என்ற அடிப்படையையும் நாங்கள் உள்வாங்கிக் கொண்டு தான் பயணிக்க வேண்டி உள்ளது. அதுவும் இன்றைய குழப்பகரமான காலத்தில். எமக்குள் எவ்வாறான ஊடுருவல்கள் அமைகின்றன என்பதில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டி உள்ளது.

சக கருத்தாளர் ஒரு படைப்பாளியாக இருந்து அவரின் படைப்புக்களை.. அவரது பொது வாழ்வின் அம்சங்களை.. நாம் மீளாய்வு.. திறனாய்வு.. விமர்சனம்.. செய்ய முடியாது.. அவரின் மனம் நோகும் என்றால் அவர் தன்னை ஒரு சக கருத்தாளன் என்ற நிலையில் மட்டும் தான் வைச்சிருக்கனும். படைப்புக்களை.. சொந்த அரசியலை முன்னிறுத்தக் கூடாது. அப்படின்னும் ஒரு கருத்துக்கள கருத்தாளனா நீங்கள் பார்க்கத்தானே வேண்டும் நுணா. அதுதான் நீதி..!

பொயட் விமர்சனத்தைக் கண்டால் மனது வலிப்பார் என்பதற்காக அவர் சொல்வதை எழுதுவதை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கவும் கைதட்டவும் வேண்டுமா..??! இந்தப் பாழாப்போன காக்கா பிடிப்பால் தான் அவர்களும் எம்மீது காலம் காலமா பல வகை போர்வைகளைப் போர்த்துக் கொண்டு.. சவாரி செய்ய முடிகிறது.

பொய்ட் அடிப்படையில்.. பலமான விமர்சனத்துக்குரிய ஒரு படைப்பாளி என்பது தான் எனது நிலைப்பாடு. மாறாக அவரை.. அவரது..கவிதையை.. கட்டுரையை வெறுக்கிறேன் என்பதல்ல அர்த்தம். அவை சுமந்து வரும் விடயங்கள் தொடர்பில் எனக்கு நிறைய சந்தேகங்களும் மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன..! இங்கேயே சில உதாரணங்களைக் காட்டியுள்ளேன்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னும் கூட.. இந்தியா தொடர்பான அவரின் பண்டைய நிலைப்பாட்டை தழுவுதல் அல்லது திணித்தல்.... தலித்தியத்திணிப்பும்.. அதனை.. யாழ்ப்பாணத்திற்குள் மட்டுப்படுத்தும்.. ஒரு குறுநிலைச் சிந்தனையோட்டமும்.. முஸ்லீம்களிடம் தமிழ் மக்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.. ஆனால் முஸ்லீம்களுக்கு அந்தக் கடப்பாடு இல்லை என்பது போன்ற யதார்த்தச் சூழலுக்குள் மக்கள் உணர்வைப் புரிந்து கொள்ள முடியாத எழுத்துக்கள்.. என்று பலவற்றை இனங்காட்டலாம்..! நாங்கள் அவரை காரணத்தோடு தான் விமர்சிக்கிறோம். காழ்ப்புணர்ச்சியோடு அல்ல. அதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை. :icon_idea: :icon_idea: :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி இப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டு விளையாட்டு மைதானத்தில அம்மணமா ஓடின ஆள் மாதிரி ஆகிப் போட்டுது! :D

நெடுக்கு, சகிக்க முடியவில்லை! நோபல் பரிசும் அதற்கு அடுத்த நிலைப் பரிசுகளும் வாங்காத விஞ்ஞானிகள் ஆய்வாளர்களை நீங்கள் விஞ்ஞானிகள் இல்லையென்று சொன்னால் அவர்களுக்கு எப்படியான ஒரு ஆத்திரம் காயம் வரும் என்று யோசித்துப் பாருங்கள்! அதைப் போலத்தான் பாடப் புத்தகத்தில் வராதவன் எழுத்தாளனோ கவிஞனோ அல்ல என்பதும் ஜெயபாலனை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான கவிஞர்களைக் காயப்படுத்தும் ஒரு செயல். மேலும், இது போன்ற கருத்துக்களால் நீங்கள் உங்கள் முதிர்ச்சியின்மையைக் காட்டிக் கொள்கிற வேலை தான் நடக்குது. எல்லாமே எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்ள வேண்டிய தேவை ஏன் உங்களுக்கு? ரிலாக்ஸ்..நெடுக்கர்! :)

நாங்கள் உங்களிடம் ஒரு அறிவியலாளன் என்பதற்கு அப்பால் கண்டறிந்த விடயம்.. நீங்களும் சில பழமைவாதங்களுக்கு அடிமை என்பதுதான்.

யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படைப்பாளிகள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. மேலும் ஜெயபாலன் யாவரும் அறிந்த பெரும் படைப்பாளி என்பது போன்றவை கொஞ்சம் மிகைப்படுத்திய கருத்துக்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

யாழுக்கு வெளியிலே போய் ஒரு கேள்விக் கொத்தை மக்களிடம் முன் வைத்துப் பாருங்கள் எத்தனை பேருக்கு இவரை கவிஞர்.. படைப்பாளி என்று தெரியும் என்று.

ஒரு அறிவியலாளனாக இருந்து கொண்டும்.. சிறியண்ணாவின் கேள்விகளை குறைத்து மதிப்பிடுவது அதனை வெளிப்படுத்தும் பாங்கு ரசிக்கக் கூடியதாக இல்லை.

எத்தனையோ பெரிய ஆய்வுகளுக்கு கணப்பொழுதில் பொறி தட்டிய சின்னக் கேள்விகள் தான் காரணமாகியுள்ளன என்ற அறிதல் இன்றி இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

என்னால் சிறியண்ணாவின் கேள்விக்குள் பொதிந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணரும் தன்மையை உணர முடிகிற போது ஏன் உங்களால் அது முடியல்ல. ஏன்னா.. உங்கள் பழமைவாதம்.. இந்தப் பொயட்டுக்கு ஒரு ஆசனம் வழங்கி உள்ளது. அந்த ஆசனத்தில் இருந்து அவரை இறக்கி வைத்து விமர்சிக்க அது இடம்கொடுக்குதில்லை. புங்கையிடத்திலும் இதனையே அவதானித்தேன்.

என்னைப் பொறுத்த வரை.. பொயட் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டிய.. கண்காணிப்போடு அணுக்கப்பட வேண்டிய.. விமர்சனங்களுக்கு உட்பட்ட ஒரு படைப்பாளி. இதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அது அவர் கொண்டுள்ள வெளித்தொடர்புகள் மற்றும்..  படைப்புக்களின் அணுகுமுறையில் தான் உள்ளது. அவருக்கு நாங்க ஒரு ஆசனம் கொடுத்து அதில் உட்கார வைச்சு பார்ப்பதில்லை. எந்தப் படைப்பாளிக்கும் அரசியல்வாதிக்கும்.. சமூகவியலாளனுக்கும்.. அதை நாங்கள் செய்வதில்லை..! தியாகிகளுக்கு அது அவசியம் இல்லை. மற்றும் படி எல்லோரும் விமர்சனத்துக்குரிய படைப்பாளிகளே..! அதனை விஞ்சி யாரும் ஜனநாயக கருத்தியல் வெளியில் மக்கள் முன் படைப்புக்களோடு வர முடியாது. நாங்கள் மக்கள். எங்களை நோக்கி படைப்புக்கள் வரும் போது நாம் எச்சரிக்கையோடும்.. விமர்சனத்தோடும் அவற்றை அணுக வேண்டும். ஒரு படைப்பை.. படைப்பாளியை.. கண்ணாபின்னான்னு தலையில்.. தூக்கி வைச்சு ஆட முடியாது தானே..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

"நாங்கள் உங்களிடம் ஒரு அறிவியலாளன் என்பதற்கு அப்பால் கண்டறிந்த விடயம்.. நீங்களும் சில பழமைவாதங்களுக்கு அடிமை என்பதுதான்.

யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படைப்பாளிகள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. மேலும் ஜெயபாலன் யாவரும் அறிந்த பெரும் படைப்பாளி என்பது போன்றவை கொஞ்சம் மிகைப்படுத்திய கருத்துக்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

யாழுக்கு வெளியிலே போய் ஒரு கேள்விக் கொத்தை மக்களிடம் முன் வைத்துப் பாருங்கள் எத்தனை பேருக்கு இவரை கவிஞர்.. படைப்பாளி என்று தெரியும் என்று."

யாழ் இணையம் தொடங்க முதலே தமிழுலகம் அறிந்த கவிஞர் அவர் .யாழ் பல்கலை கழக மாணவர் தலைவர் ஆக வேறு இருந்தவர் .(எண்பதுகளில் )

செம செம கொமடி நெடுக்ஸ் .

குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுவது என்பற்கு இதை விட பொருத்தம் வேறு எதுவும் இருக்கமுடியாது .

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்ற கதைதான் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு வெளியிலே போய் ஒரு கேள்விக் கொத்தை மக்களிடம் முன் வைத்துப் பாருங்கள் எத்தனை பேருக்கு இவரை கவிஞர்.. படைப்பாளி என்று தெரியும் என்று.

போனவருடம் இலங்கை போன போது வவுனியா பொது நூலகம் போயிருந்தேன். ரமணி சந்திரன் கதைகள் இருந்த பகுதி சன நடமாட்டத்துடன் இருந்தது. செங்கை ஆழியான், சட்டநாதன் கதைகள், ஆங்கிலத்தில் ருட்யார்ட் கிப்லிங் தொகுப்பு இருந்த பகுதிகளில் சிலந்தி கூடு கட்டி இருந்தது. புனைகதைகள் கொஞ்சம் வாசித்த எனக்கே ஈழத்தில் ஆழியான், சட்டநாதன், முத்துலிங்கம் ஆகிய மூன்று பேரும் தான் பரிச்சயம். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் உங்களுக்கு? இப்படி பட்ட எங்கைளைப் போன்ற  தமிழ் வாசிப்பாளர்களிடம் போய் ஜெயபாலனின் பிரபலத்தைப் பற்றி கருத்துக் கணிப்பு எடுத்து வரும் முடிவு நம்பத் தக்க (robust) முடிவைத் தரும் என்று அறிவியலாளர் நீங்கள் நம்புறீங்கள்! நல்லது நெடுக்கு, எனக்கு பயனுள்ள சில வேலைகள் இருக்கு. இப்படியே நேரே போங்கோ உங்கட வழியில!   :D

அந்த வகையில் ஆவது.. இவர்களின் சமூக முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கிறீர்கள் அல்லவா. யாழ் என்ற ஒரு குறுவெளியில் இவர்களை விமர்சனங்களுக்கு அப்பால் மூடி மறைத்து.. முன்னிலைப்படுத்துவதனூடாக மட்டும் நாங்கள் மக்கள் நாட்டத்தை இவர்களை நோக்கி வர வைக்க முடியாது. அதையே சிலர் இங்கு செய்ய விளைகின்றனர். அது தவறு. மக்களின் பெரும்பாலானோரின்.. என்ன உணர்வோடு பேசாத எந்தப் படைப்பும் மக்களைச் சரிவரச் சேராது..! கட்டாயப்படுத்தி திணித்தால் அன்றி..! அதுவும் இலகுவில் மறக்கப்பட்டு விடும்.

இதே இடத்தில் காசி ஆனந்தன் ஐயா.. புதுவை போன்றவர்களை மக்களில் பலரும் அறிவர். காரணம் அவர்கள் மக்களின் மனதோடு கவிதைகளால் பேசிக் கொண்டதால்..! மாவீரர் கப்டன் வானதி அக்கா போன்றவர்கள் இளைய சமூகத்தோடு பேசிக் கொண்டதால் அவா போன்ற போராளிக் கவிஞர்களும் எம்மிடையே இப்போதும்  வாழ்கின்றனர் தானே..! அவர்கள் விதைத்ததை விமர்சனங்களுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. காரணம் மக்களின் வாழ்வியலோடு அவை பொருந்தி நின்றதால். ஆனால்.. இன்று பலரும் சுய அரசியலை மக்களுக்குள் திணிக்க விளைவதால் அவர்களின்  படைப்புக்கள் செத்துவிடுகின்றன. அவற்றை வலிந்து தான் மக்களிடம் திணிக்க முற்படுகின்றனர்..! இதுவே அந்தப் படைப்பாளிக்கு ஒரு தோல்வி இல்லையா. இதில் மக்களை முழுமையாக குறை சொல்லக் கூடாது..!

நன்றி அண்ணா தங்கள் நேரத்திற்கும் கருத்திற்கும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மகாகவி உருத்திர மூர்த்தி அவர்களுக்கே அவர் வாழ்ந்த காலத்தில் அங்கீகாரம் கிடைத்ததா நெடுக்ஸ்????

"நாங்கள் உங்களிடம் ஒரு அறிவியலாளன் என்பதற்கு அப்பால் கண்டறிந்த விடயம்.. நீங்களும் சில பழமைவாதங்களுக்கு அடிமை என்பதுதான்.

யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படைப்பாளிகள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. மேலும் ஜெயபாலன் யாவரும் அறிந்த பெரும் படைப்பாளி என்பது போன்றவை கொஞ்சம் மிகைப்படுத்திய கருத்துக்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

யாழுக்கு வெளியிலே போய் ஒரு கேள்விக் கொத்தை மக்களிடம் முன் வைத்துப் பாருங்கள் எத்தனை பேருக்கு இவரை கவிஞர்.. படைப்பாளி என்று தெரியும் என்று."

யாழ் இணையம் தொடங்க முதலே தமிழுலகம் அறிந்த கவிஞர் அவர் .யாழ் பல்கலை கழக மாணவர் தலைவர் ஆக வேறு இருந்தவர் .(எண்பதுகளில் )

செம செம கொமடி நெடுக்ஸ் .

குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுவது என்பற்கு இதை விட பொருத்தம் வேறு எதுவும் இருக்கமுடியாது .

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்ற கதைதான் .

டக்கிளஸ் மந்திரியாக இருக்கிறார் என்பது ஒன்றும் குண்டுச்சட்டிக்குள் ஓடும் குதிரை அல்ல. அது உண்மை. பொய்யட்டின் எந்த பதவியும் அவரை பெரிய மனிதன் ஆக்காது. நான் அவரை பல இடங்களில் காணவில்லை. ஆனால் அவர் புதிய தமிழகம் டி.வி. வந்து, தமிழரில் எந்த கூட்டமும் ஏற்காத 13ம் திருத்தத்தை வலிந்து விற்க முயன்ற போது பலரும் முகம் சுழித்தாதர்கள். அநாகரிகமாக தனக்கு அளிக்கப்படாத நேரங்களில் வலோற்காரமாக கதைத்தார். மாபெரும் மேதை, புகழ் தானாகத் தேடி வருபவர், அப்படி நடந்து கொள்ளக் காரணம் தெரியாது. அதன் கீழ் பொய்யடை பற்றி நல்ல கருத்து ஒன்றும் இருக்கவில்லை. சிலர் அப்பட்டமாக இவர் ரோவின் கையாள் என்று எழுதியிருந்தார்கள். இது தமிழ் நாட்டின் கருத்து. இதை யாழில் பதிந்தவரே இராஜவன்னியன்.

பலர் யாழில் வேறும் சம உறவு சண்டம்மருதனின் நாய்கவிதை விளங்காமல் பச்சை குத்தி முடிய அவர் விளங்கப்படுத்தியவர்.  இவர்கள்  மாபெரும் மேதை வ.ஐ.ச. ஜெ. ய. பாலன் அவர்களின் கவிதைகளை விளங்கிக்கொள்கிறார்கள் என்றால் அது இந்த உலகில் வ.ஐ.ச. ஜெ. ய. பாலன் அவர்களுக்கு செய்யும் மிகக் கேவலமான அவமானம்.

இந்த கவி எங்கும் தனது இரட்டைகுணத்தை காட்டுவது கண்டது நான் யாழுக்கு வந்த பின்னர் தடக்குப்பட்ட ஒரு கட்டுரையில். இந்த சாதியத்தியத்திற்கு எதிராக போராடும் இந்த மேட்டுக்குடி சாமனிய மனிதன் தனது கட்டுரை ஒன்றில் சாதியத்தை தாக்கும் போது புங்குடு தீவிலிருந்ததாக காட்டியும், பின்னர் மேட்டுக்குடித்தனத்தை காட்டும் போதும், தனது பெருமைகளை இழுத்து விடும் போது தனது உடுவில், மானிப்பாய் சொந்தங்களின் விலாசங்களை காட்ட முயன்றதையும் ஒரே கட்டுரையில் பார்த்திருந்தேன்.

அதன் பின்னர் அவர் யாழில் எழுதியவை பலவற்றுக்கு விளக்கம் கேட்ட போது என்னைக் கொலையாளை மாதிரி நினைத்து வெருண்டுகொண்டு தன்னை எப்படிப் புலிகள் கொலை செய்ய வந்தார்கள் என்றும் அப்போது அதிலிருந்த கப்டன்கள் தன்னை பல்லக்கில் வைத்தார்கள் என்றும் புலியை தாக்கியும் தன்னை புகழ்ந்தும் எழுதினார். இவரின் தலைக்குள் இருப்பது தொடர்ந்து குழப்பமாக கதைத்து  தனக்கு பெரிய அங்கீகரம் தேடும் சின்னப்பிள்ளைத்தனம் மட்டும்தான்.  அவர் இந்த கவிதைகளை எழுதிப் போடுவது சுய விளம்பரத்திற்கு என்பதை விளங்காதவர்கள் அவரை புகழ்கிறார்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மகாகவி உருத்திர மூர்த்தி அவர்களுக்கே அவர் வாழ்ந்த காலத்தில் அங்கீகாரம் கிடைத்ததா நெடுக்ஸ்????

காக்கா பிடிக்கவும்.. இந்திய பாசம் காட்டவும்.. அடிச்சாலும் கொன்றாலும் ஊரைக் கொள்ளை அடிச்சாலும்.. முஸ்லீம் சகோதரத்துவம் பேசிக் கைகுலுக்கவும்.. சாதி அழிப்பென்று.. சாதியத்தை பறைசாற்றி வளர்க்கவும்.. தாடி வைக்கவும்.. மீசை வளர்க்கவும்.. தண்ணி அடிக்கவும்.. மார்க்ஸியம் பேசவும்.. தூசணத் தமிழ் வளர்க்கவும்.. அவருக்கு சரியா தெரியவில்லைப் போலும்..!

இதைப் பார்க்கவே தெரியுதில்ல.. இவர் எடுபட மாட்டார் என்று...

mat01004maks.jpg

அவரே இப்படிச் சொல்லி உள்ளார்...

கேட்டலுத்த சொற்றொடரில் கேட்டலுத்த செய்திகளைப்

போட்டுக் கொடுத்தால்தான் போற்றிடுவார்; போகட்டும்

நாட்டிற் புதிதாக நாமேதும் கூறவரின்

ஏட்டுக்கொவ் வாததென இகழ்வார்கள்; இகழட்டும்.

இதையே நாங்கள் எழுதினால்.. வசனத்தை உடைக்கிறான்.. தமிழ்தேசியத்தை தகர்க்கிறான்.. என்று சொல்லக் கூடிய கூட்டத்திடம்... உருத்திரமூர்த்தி என்ன... ஒருவரும் உருப்படியா பயணம் போய்ச் சேர முடியாது..! :):lol:

http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01004mkp6.htm

  • கருத்துக்கள உறவுகள்

மகாகவி உருத்திர மூர்த்தி அவர்களுக்கே அவர் வாழ்ந்த காலத்தில் அங்கீகாரம் கிடைத்ததா நெடுக்ஸ்????

நீங்கள் மகாகவி பற்றி கேட்டவுன் அவரைப் பற்றி தேடி எடுத்து இணைத்திருக்கும் நெடுக்கருக்கு நன்றிகள்...இணைத்த இணைப்பு பயனுள்ளது

காக்கா பிடிக்கவும்.. இந்திய பாசம் காட்டவும்.. அடிச்சாலும் கொன்றாலும் ஊரைக் கொள்ளை அடிச்சாலும்.. முஸ்லீம் சகோதரத்துவம் பேசிக் கைகுலுக்கவும்.. சாதி அழிப்பென்று.. சாதியத்தை பறைசாற்றி வளர்க்கவும்.. தாடி வைக்கவும்.. மீசை வளர்க்கவும்.. தண்ணி அடிக்கவும்.. மார்க்ஸியம் பேசவும்.. தூசணத் தமிழ் வளர்க்கவும்.. அவருக்கு சரியா தெரியவில்லைப் போலும்..!

இதைப் பார்க்கவே தெரியுதில்ல.. இவர் எடுபட மாட்டார் என்று...

mat01004maks.jpg

அவரே இப்படிச் சொல்லி உள்ளார்...

கேட்டலுத்த சொற்றொடரில் கேட்டலுத்த செய்திகளைப்

போட்டுக் கொடுத்தால்தான் போற்றிடுவார்; போகட்டும்

நாட்டிற் புதிதாக நாமேதும் கூறவரின்

ஏட்டுக்கொவ் வாததென இகழ்வார்கள்; இகழட்டும்.

இதையே நாங்கள் எழுதினால்.. வசனத்தை உடைக்கிறான்.. தமிழ்தேசியத்தை தகர்க்கிறான்.. என்று சொல்லக் கூடிய கூட்டத்திடம்... உருத்திரமூர்த்தி என்ன... ஒருவரும் உருப்படியா பயணம் போய்ச் சேர முடியாது..! :):lol:

http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01004mkp6.htm

நன்றி இணைப்புக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ,பல போராளிகள் பல நாடுகளில் தப்பி வந்திருக்கிறார்கள்.சிலர் காயங்களுடனும் ஊனமாகவும் வந்திருக்கிறார்கள். அதே போல் தீபச்செல்வனும் வந்திருக்கலாம் தானே.உண்மையை சொன்னால் என்ன. டக்ளசுக்கும், மனோ கணேசனுக்கும் இன்னும் பல அரசியல்வாதிகளுக்கும் பணம் கொடுத்து பல போராளிகள் தப்பியுள்ளார்கள். இவர்களுள் வெள்ளை கொடியுடன் வந்தவர்களில் இருந்து போராடி காயப்பட்டவர்கள் வரை அடங்கும்.
 
மேலும் சக கருத்தாளரான பொயட் அவர்களின் கவிதை பிடிக்கவில்லை எனில் பிடிக்கவில்லை என சொல்ல வேண்டியது தானே. அதற்காக அவரின் மனம் நோக எழுதுவதில் என்ன இன்பம் கண்டீர்கள்?

நான் எங்கோ வாசித்த ஞாபகம் கடைசி யுத்தம் நடக்கும் நேரம் தீபச்செல்வன் யாழில் அல்லது இந்தியாவில் படித்து கொண்டு இருந்திருக்க வேண்டும்.சரியாகத் தெரியவில்லை பிழை என்டால் மன்னிக்கவும்.அவரது தாயாரும்,தங்கையும் தான் யுத்தத்தில் மாட்டுப்பட்டார்கள்.
 
எது எப்படி இருந்தாலும் யுத்தத்தில் மாட்டுப்படவில்லை,சாகவில்லை,காயப்படவில்லை என்பதால் அவரைப் பற்றி தப்பாக கதைப்பது மிகவும் கேவலமான செயல்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் தமிழகத்தில் சங்கக் கவிஞர்கள் திரிந்த புவியியல் தடங்களில் பயணம் செய்து வருகிறேன். பாலியாறு நகர்கிறது கவிதையை யாழில் பதிவுசெய்துவிட்டு புறப்பட்டவன் இன்று திரும்பி வந்துபார்த்தால் இங்கு நிறைய விவாதங்கள் நடதேறியுள்ளது மகிழ்ச்சி தருகிறது.

நகர்கிறது பாலிய்று கவிதை 1980பதுகளில் இலங்கையிலும் இந்தியாவிலும் பிரபலமானது. யாழ்க்களத்தில் எழுதும் ஜமுனாராஜேந்திரன் உட்பட பல தமிழ் ஆர்வலர்கள் 1980பதுகளில் என் நண்பர்களாகக் காரணமாக இருந்த கவிதைகளில்இது மிதுவும் முக்கியமான கவிதையாகும்.

என்னுடைய முதல் கவிதையான பாலிய்று நகர்கிறது கவிதை 1987ல் வெளியான என்னுடைய இரண்டாவது கவிதை தொகுதியான  நமக்கென்றொரு புல்வெளியில் இடம்பெற்றுள்ளது. 1987ல் அதிகம் விற்பனையான புத்தகமாக நமகென்றொரு புல்வெளி அமைந்தது (தகவல் கிரியா பதிப்பகம்). 1970 - 80 பதுகளில் தமிழகத்திலும் இலங்கையிலும் என்னை பரவலாக அறிமுகம் செய்துவைத்த கவிதைகளுள் என் முதல்கவிதையான பாலியாறு நகர்கிறது முக்கியமானதாகும்.

இந்தக் கவிதையை அடியொற்றி நான் எழுதிய குறுங்காவியம் ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் 1987ல் இருந்து 2002 வரைக்கும் தொடற்சியாக 15 வருடங்கள்  சென்னை பல்களைக் களக MPhil தமிழ் பாடநூலாக இருந்தது.  இன்று பாலியாறு தமிழ் இலக்கியத்தின் Land Mark ஆகிவிட்டது.

என்னுடைய அழியாத கவிதையை புரிந்துகொண்டு வாழ்த்தும் விமர்சனமும் எழுதிய தோழ தோழியர்கள் புங்கையூரான், நுணாவிலான்,  லியோ, எழுஞாறு, மருதங்கேணி, கிருபன், ரதி,. ஜஸ்டின், அர்ஜுன், மொசப்த்தோமியோ சுமேரியன், அலைமகள் அனைவருக்கும் என் நன்றிகளும் நல்வாழ்த்துக்களும். 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

1990 களின் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் இந்தியத் தொடர்பு வர்த்தகர்கள்.. கவிஞர்கள்.. இந்தியா போற்றிப் புகழ்ந்த..தமிழ் அறிவாளிகள் என்று சொல்பவர்கள் மீது கூட விசேட கவனம் வைத்திருந்தனர். பலர் திடீர் திடீர் என விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சில முக்கிய இந்தியத் தொடர்பு தமிழ் அறிவாளிகளும் இதில் அடங்குவர். அவர்கள் விசாரணையின் பின் புலிக் காய்ச்சல் பிடிச்சு அலைந்ததையும் காண முடிந்தது.

இதில்.. கம்பன கழக மேதைகள் சிலரும் அடங்குவர். காரணம்.. இவர்களினூடாக இந்திய உளவுத்துறையின் ஊடுருவல் இருக்கும் என்பதற்காக. அதுக்கும் அப்பால் இந்திய சஞ்சிகைகள்.. சினிமா மீது கண்காணிப்பு இருந்தது. அதுவும் கூட எமது போராட்டம் நீண்டு வளர உறுதி பெற உதவியது. எப்ப வன்னியை திறந்து விட்டார்களோ அன்றில் இருந்தே.. ஆபத்தும் அதிகம் சூழ்ந்து கொண்டது..!

ஒரு போராட்டத்தின் வெற்றி என்பது.. அதன் ரகசியக் காப்புத் தன்மையிலும் தங்கியுள்ளது.

எனவே யாரையும் யார் கூற்றையும் அப்படியே நம்ப வேண்டும் என்ற அவசியம் மக்களுக்கு இல்லை. இவர்களின் தொடர்புகளை தொடர்ந்து.. தொடர்ச்சியாக சரியாகக் கண்காணித்து வருவதே திடீர் அதிர்ச்சிகளில் இருந்து மக்கள் விலகி இருக்க உதவும்..! மக்களோடு நெருங்குவது போல விடயங்களை நகர்த்திக் கொண்டு மக்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்டு தங்களின் வேளை வரும் போது வேலையைக் காட்டி விடுவார்கள். அப்போது வருந்திப் பயனில்லை..! இது நாம் கடந்து வந்த பாதையில் கண்ட அனுபங்கள் தான். மீண்டும் மீண்டும் அவை நிகழாதிருக்க அவதானங்கள் விழிப்புணர்வுகள் அவசியம்.  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழ்சாதி நாயே என்ற பெயரில் ஒருகவிதை (தற்போது தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). பற நாய் என்பதுபோன்ற மிக அருவருக்கத்தக்க சாதிவெறியர்களின் சொற்களைப் பயன்படுதி கவிதை எழுதுகிறவர்கள் மனசில் எவ்வளவு சாதிவெறி இருக்கவேண்டும். ஏன் இது யாழ்கள உறுப்பினர்களால் கண்டிக்கப் படவில்லை?

என் பதின்ம வயசுகளிலேயே சாதிவெறியர்களுக்கு எதிரான வன்முறையாளனாக நிமிமிர்ந்தவன்நான். 1960பதுகளின் பிற்பகுதியிலும் 1970 பதின் ஆரம்பத்திலும்  கூட்டிப்பார்த்தால் ஏறக்குறைய 2 வருடங்கள் விசாரனைக் கைதியாக சிறையில் இருந்திருக்கிறேன

சாதிவெறியர்களின் தமிழ் எழுதுகிறவர்கள்  என் கவிதைகள் பற்றி  பேசுவதற்க்காகவா நான் யாழ் இணையத்தில் கவிதை எழுதினேன்? மேரற்படி சாதிவெறி கவிதையை வெளியிட்டமைக்காக யாழுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

Edited by poet

அப்படின்னு சொல்லுறீங்க. ஆனால் அவர்.. முஸ்லீம்களிடம் தமிழ் மக்களை மன்னிப்புக் கேட்கச் சொல்லிட்டு முஸ்லீம் கடும்போக்காளர்களிடம் தமிழ் மக்களைச் சரணாகதியும் அடையுங்கள் என்று சொல்லித் திரிகிறாரே. முஸ்லிம்களால் சிதைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு.. முஸ்லீம்களால் இன்றும் சிதையும் தமிழீழத்திற்காக அவர் குரல் கொடுத்ததை நான் அவதானிக்க முடியவில்லை. எனவே நீங்கள் சொல்பவற்றில் பலவற்றை என்னால் நம்ப முடியவில்லையே புங்கை. இதனை உண்மை இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா..???!

எனது நண்பன் என்பதற்காக.. உச்சாரக் கொப்பில் வைத்துத்தான் அழகு பார்க்கனும் என்றில்லை. அவர்களும் தவிறு செய்து கொண்டிருக்கின்ற போது அதனை மறைக்க வேண்டும் என்ற அவசியம் வரக் கூடாது. அதுவும் பொதுவாழ்வில் தம்மை இணைத்துக் கொள்வதாக இனங்காட்ட விரும்புபவர்கள்.

எத்தனையோ விடயங்களை மீளாய்வு செய்கிறோம். மண்ணிற்காக அப்பழுக்கற்று.. மாண்டுபோனவர்களின் உயிர்களைக் கூட சந்தேகித்து மீளாய்கிறோம். உயிர் வாழும் இவர்களிடம் சுத்துமாத்தும் நச்சுப்பாய்ச்சல்களும் அவதானிக்கப்படுகின்ற போது ஏன் இவர்களை நாம் முதலில் மீளாயக் கூடாது...???! :icon_idea:

இங்கே பொயட் என்னும் மாண்புமிகு கவிஞர் என்ற பார்வையில் ஓர் கலைஞனாக அவரை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு தமிழனாக அவரை என்னால மதிக்க முடியவில்லை என்பதே எனது ஆதங்கம் ,அதுவே நெடுக்சின் ஆதங்கமாகவும் இருக்கமுடியும் என நினைக்கிறேன். 

உண்மையில் இந்த யாழ்களத்தில் ,இன்றைய தமிழர்களின் அரசியல் நிலையில் எத்தனையோ விசக்கிருமிகளின் கட்டுரைகளும், ஒட்டுமொத்த எம் உணர்வுகளை சிதறடிக்கும் வகையிலுமே பல பதிவுகளை நாம் காண்கிறோம். உண்மையான விடயங்கள் அல்லாது பொய்யான விடயங்களை உண்மைபோல ஆக்கி உளவியல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் நோக்கோடு அமைந்த பல கட்டுரைகளுக்கு முகம் கொடுத்தோம் .
 
மதிப்புக்குரிய பொயட் அவர்கள் வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகள் மத்தியில் வாழ்ந்த ஓர் ஆழுமையான மனிதர் என்பதும் எனக்கு தெரியும் .................ஆனால் அவரது சில அரசியல் பார்வைகள் ,யதார்த்தங்கள் அவரை ஒரு சந்தேகத்திற்கிடமான உருவமாய் பார்க்கத்தொன்றியத்தை மறுக்க முடியாது. 
 
இங்கே நான் அவரிடம் எதிர்பார்ப்பது நிறைய ,எம் விடுதலைக்காக ,உண்மையை எழுதுவாரா ,தனது உண்மையை காட்டுவாரா ...............
 
மன்னிக்கவும் புலவரே................

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

கீழ்சாதி நாயே என்ற பெயரில் ஒருகவிதை (தற்போது தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). பற நாய் என்பதுபோன்ற மிக அருவருக்கத்தக்க சாதிவெறியர்களின் சொற்களைப் பயன்படுதி கவிதை எழுதுகிறவர்கள் மனசில் எவ்வளவு சாதிவெறி இருக்கவேண்டும். ஏன் இது யாழ்கள உறுப்பினர்களால் கண்டிக்கப் படவில்லை?

என் பதின்ம வயசுகளிலேயே சாதிவெறியர்களுக்கு எதிரான வன்முறையாளனாக நிமிமிர்ந்தவன்நான். 1960பதுகளின் பிற்பகுதியிலும் 1970 பதின் ஆரம்பத்திலும்  கூட்டிப்பார்த்தால் ஏறக்குறைய 2 வருடங்கள் விசாரனைக் கைதியாக சிறையில் இருந்திருக்கிறேன

சாதிவெறியர்களின் தமிழ் எழுதுகிறவர்கள்  என் கவிதைகள் பற்றி  பேசுவதற்க்காகவா நான் யாழ் இணையத்தில் கவிதை எழுதினேன்? மேரற்படி சாதிவெறி கவிதையை வெளியிட்டமைக்காக யாழுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

அந்த ஆக்கம் சொல்ல வந்த விடயமே இது தான். சாதி என்ற ஒரு எண்ணப்பாட்டை விதைப்பதன் மூலம் அதன் அழிக்கிறேன் என்று கிளம்பும் விசித்திர மனிதர்களாலும் தான் அந்த எண்ணக்கரு அப்படியே அடைகாக்கப்படுகிறது. மற்றும்படி.. முட்டையும் விந்தும் சந்திக்கத்தோன்றும் உயிரிகளாகவே நாமும் சரி நாயும் சரி உள்ளோம். நமக்குள் கீழென்ன மேலென்ன என்பதே வினவல்..??!

இதனை எல்லாம் புரிந்து கொள்ள முடியாமல்.. 1960 புறப்பட்டேன்.. 70 இல் சாதித்தேன் என்பதெல்லாம்.. சுயதம்பட்டமாக இருக்குமே தவிர.. இன்றைய தலைமுறையினருக்கு அது ஒன்றும் ஆக்கபூர்வமாக இல்லை..!

நாங்கள் எங்கேயோ நிற்கிறோம். நீங்கள் இன்னும் அதே சுப்பரின் கொல்லைக்குள் தான். :):icon_idea:

நன்றி கெட்டதுகள்!

கண்களில்

வேட்டைப் பற்கள்.

காயத்தைத் தின்னும்

ஈக்கள்.

கால்களிடைத் தொங்கும்

நிமிரா வால்.

காலடியை முகரும்

என் நாய்.

தாண்டிச் சென்றால்

குதறிடுமோ?

என்னில்

பசியாறிடுமோ?

நன்றி கெட்டது

நாயா...நானா?

அல்சேஷன், பார்மேனியன்

மேல் சாதியானால்

மடியில், தோளில்

ஏன்

சைக்கிளிலும் பெட்டி கட்டிக்

காவிச் சென்றிருக்கலாம்.

பதுங்கு குழியுள்ளும்

இடம் ஒதுக்கி இருக்கலாம்.

ஆனால் நீ....

ஊர் நாய்

தெரு நாய்

'பற' நாய்

ஐம்புலனும் ஒடுங்க

அந்தகாரம் சூழும்.

துப்பாக்கிச் சனியன்களின்

வேட்டைகள் தொடங்கும்.

எவ்விழியாய், செவியாய்

உணர் நரம்பாய்...

நீ....

அந்நிய வாடை சுமந்த

காற்றையும் எதிர்த்தாய்.

இந்திய ஜெனரல்களின்

சிம்ம சொப்பனமானாய்.

இசையின் சுருதியென

குலைப்பினில் பி஡஢த்து உரைத்தாய்

உயர்சாதி நாயெல்லாம்

சோபாவில், குஷனில்

ஒய்யாரமாய் ஓய்வெடுக்க

மண் விறாண்டா கிடங்கெடுத்து

படலையடியில்

காவல் இருந்தாய்.

இருந்தும்தான் என்ன?

கைவிடப்பட்டாய்.

அப்படிப் பார்க்காதே

கம்பியால் இழைத்த

சுருக்குத் தடத்தினுள்

உன் மூதாதையா஢ன்

உயி஡஢ன் யாசிப்பு,

நாய்களின் தொல்லையென

முன்னம் நாட்களில்

காட்டிக் கொடுத்தது.

உனக்கு நினைவுத் தொடர் உண்டா?

ஐந்தறிவு ஜீவன்

வாஞ்சையுடன் தாவுகின்றது

பா஢தவிப்பின் முனங்கல்

புண்களின் வீச்சம்

கண்கள் சுடா஢ட

செவிமடல் துடிக்கின்றது.

அன்ன தண்ணி இல்லாமல்

எப்படி நீ....?

சோற்றுப் பருக்கையுமின்றி

விடுப்பல்லவா

பார்க்க வந்தேன்

ஈனப் பிறவியடா நான்

இந்த எஜமானனுக்காகவா

நீ....?

மூசி மூசி

மூச்சிரைத்து, சிணுங்கி

பிறாண்டி, கல்விப்

பிடித்திழுத்து

வானை மோப்பமிட

தெற்கிருந்து வரும்

சாவின் இரைச்சல்.

நிலத்தில் முகம் கவிழ

நான்.

மூச்சிழந்திருந்தது

நாய்

கண்களில்

வேட்டைப் பற்கள்.....

ஆகஸ்ட் 1990, யாழ்ப்பாணம்

http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0096.html

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வருகிற விடயம் சொன்ன விதம் தெரிவு செய்கிற வார்த்தைகள் ஒரு கவிஞனது நிலைபாட்டைக் காட்டிக் கொடுத்துவிடும். ஒரு சாதிவெறியர் மட்டுமே பயன்படுத்தும் சொற்கள் இவை. கவிதையின் அடிப்படையே சொற்தெரிவுதான்.

இந்தியாவிலோ ஈழத்திலோ  இந்தக் கவிதையை யாரும் வெளியிட்டிருக்க மாட்டார்கள். இந்தியாவில் நிச்சயம் இந்திய வன்கொடுமை சட்டம் கேழ்வி எழுப்பியிருக்கும்?  

சாதியபார்வை இல்லாத வேறு சொற்கள் இல்லையா? அப்படியாயின் தலைப்பை எப்படி மாற்றினார்கள்? தலைப்பை மாற்றியதே ஒப்புதல் வாக்குமூலம்தான். தலைப்பை மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோதே குற்றம் நிரூபணமாகிவிட்டது. இவர்கள்தான் சாதி ஒழிந்துவிட்டது என பறை வேறு தட்டுகிறார்கள். முதலில் உங்கள் மனசைக் கழுவுங்கள். யாழ் இணையத்தினர் சிந்திக்க வேண்டும். 

நாங்கள் எழுதிய அதே வார்த்தைப் பிரயோகத்தோடு "நன்றி கெட்டதுகள்".. என்ற கவிதை 1989/90 இன் ஆரம்பத்தில் யாழ்ப்பாண நிலையை.. மையமாக வைத்து..எழுதப்பட்டு.. மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்திலும் சேர்த்திருக்கிறார்கள்.

அதற்கு.. இந்திய வன்கொடுமைச் சட்டமோ... அல்லது சாதியச் சாயமோ பூசப்படவில்லை.

படைப்பாளிகள் சுத்தமாகத்தான் இருக்கிறார்கள். வாசகர்களுள் சிலருக்கும்... பிற தலித்தியவாதிகளுக்கும் தான்.. பதங்களினூடான சாதிய இருப்பு அவசியமாகிறது. அதனை தமக்குள் பத்திரமாக.. இருத்தி வைத்துக் கொண்டு வெளியில் சமூகத்திற்கு அழிக்கிறோம் என்று வேடம் போடுகிறார்கள்.. தம்மை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த அரசியலையும் வேடதாரிகளையும் ஆக்கம் சாடுவதால்.. அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்வேறு மன ஆதங்கங்கள் பிறக்கும் என்பது தெரிந்ததே.

தலைப்பு மாற்றம்.. நிர்வாகத்தினதும்.. சில கள உறவுகளினதும் பார்வைக்கு ஏற்ப மாற்றப்பட்டது. யாழில் மட்டுமே தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற இடங்களில் பிரசுரிக்கப்பட்ட அதே தலைப்புடன் தான் உள்ளது. :):lol:

பாலியாறு நகர்கிறதின் ஆங்கில மொழி பெயர்ப்பு அருமை. அசலுக்கு பல படிகள் மேலே நிற்கிறது.  மொழிபெயர் பென்றில்லமால் ஆங்கில பாரம் பரியங்களுடன் மிளிர்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.