Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய் சொல்லும் இனம்.

Featured Replies

பொய் சொல்லும் இனம். // பரணி கிருஸ்ணரஜனி

( சற்று நீண்டு விட்டது. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் படியுங்கள்)

நேற்று முகநூல் வழி மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவருடன் உரையாட முடிந்தது. மண்டபம் அகதி முகாமில் நீண்டகாலம் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சி தொடக்கம் தமிழக மாணவர் போராட்டம் வரை நிறைய கதைத்தார். தமிழீழம் ஒன்றுதான் தமிழனுக்கு தீர்வு என்றும் குறிப்பிட்டார். மேற்றர் இதுவல்ல. பேசி முடிக்கும் போது ஒரு வசனம் கூறினார். "எல்லாம் பிடிக்கும், ஈழத்தமிழர்களிடம் எனக்கு பிடிக்காதது அவர்கள் சொல்லும் பொய்கள்தான். மண்டபத்தில் பணிபுரியும்போது அவர்கள் சொல்லும் பொய்களை கேட்டு எனக்கு வெறுத்து விட்டது."

உண்மைதான். அவர் சொல்வது சரிதான். ஆனால், எதுவுமே செய்யாமல் வரும் அப்பாவிகள் மீது பெற்றோல் கடத்தினான், ஆயுதம் கடத்தினான், புலிப்பயங்கரவாதி என்று எத்தனை பொய் வழக்குகளை பதிவு செய்து தமிழக காவல்துறை சிறப்பு முகாம்களுக்குள் உள்ளே தள்ளும்போது வருபவர்கள் இவற்றை பார்த்து விட்டு எப்படி உண்மை பேசுவார்கள்.?

அவர்கள் தம்மை முன்னாள் புலிகள், புலிகளுக்கு உதவி செய்தவர்கள், தமிழீழத்திற்காக ஏதோ வழியில் உதவி செய்தவர்கள் என்ற உண்மையை சொன்னால், தமிழக காவல்துறை என்ன "சாகித்திய அக்கடமி" விருதா அவர்களுக்கு தரப்போகிறது?

இந்த இனம் விரும்பி பொய் சொல்லவில்லை. பொய் சொல்ல நிர்ப்பந்திக்கப்படும் இனம் இது.

இந்த பொய்கள் இப்போது தொடங்கவில்லை. இன அழிப்பு நோக்குடள் சிங்களம் படையெடுத்தபோதே தொடங்கிவிட்டது.

எனக்கு இப்போதும் துல்லியமாக ஞாபகம் இருக்கிறது. எனக்கு அது அதிர்ச்சியான சம்பமும் கூட. ஒரு மோசமான உளவியலால் எனது குழந்தைப்பருவம் பின்னப்பட்ட சம்பவமும் கூட.. சுமார் 25 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் சிறுவன். ஒன்றும் அறியாத வயது. எமக்கு பக்கத்து வீட்டில் லட்சுமி என்று ஒரு அக்கா இருந்தார். அந்த தெருவில் இருக்கும் எல்லோருக்கும் தமிழ் ரியூசன் தருவது அவாதான். சரியாக ஞாபகமில்லை ஏதோ ஒரு காரணத்திற்காக எனது தம்பி பொய் சொல்லிவிட்டான். அவா அவனை பிரம்பெடுத்து வெளுத்து வாங்கி விட்டார்.

ஆனால் சிறிது காலம் கழித்து நடந்தது வரலாற்றின் மிக மோசமான பழிவாங்கல். அவா திருமணம் முடித்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்துவிட்டார். கொழும்புக்கு வேலை நிமித்தம் போன அவரது கணவரை சிங்கள இராணுவம் பிடித்ததும் சித்திரவதை செய்து சிறையில் அடைத்ததும் பின்பு பெரும் தொகை பணத்தை செலவளித்து அவர் வெளிநாடு போனதும் நடந்தது. ஒரு கட்டத்தில் கொழும்பு சென்று பயண முகவர் மூலம் லட்சுமி அக்காவும் குழந்தையும் செல்ல முயற்சி நடந்தது.

அப்போது நாங்களும் கொழும்பில்தான் அப்பாவின் ஏதோ பணி காரணமாக இருந்தோம். லட்சுமி அக்கா இருந்த வீட்டுக்கு போனோம். அக்கா அழுதபடி இருந்தார். பல உறவினர்கள் அங்கு இருந்தார்கள். அவாவின் 4 வயது குழந்தையும் அழுதபடியே இருந்தது. போனபோதுதான் விடயம் நமக்கு தெரியவந்தது. 4 தடவைகள் வெளிநாடு போக முயற்சித்து பிடிபட்டு விட்டார். அதாவது ஒவ்வொரு தடவையும் பயண முகவர் மூலம் ஒவ்வொரு நபர்கள் தமது மனைவி மற்றும் குழந்தை என்று போலி கடவுச்சீட்டில் கொண்டு செல்ல முற்பட்டு குழந்தையிடம் நடந்த விசாரணை மூலம் 4 தடவையும் பிடிபட்டு விட்டார்கள். அதுதான் இவ்வளத்திற்கும் காரணம்.

லட்சுமி அக்கா எமது அம்மாவை கண்டவுடன் சொன்ன வாசகம் தான் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. தனது குழந்தையப்பார்த்தபடி" இந்த சனியனுக்கு 4 தடவையும் இதுதான் அப்பா என்று படத்தையும் காட்டி பெயரையும் வடிவா கிளிப்பிள்ளைக்கு சொல்லுறமாதிரி சொல்லிக்கொடுக்க, இப்படி செய்து போட்டாளே..!" என்று அழுது புலம்பினா..

"பொய் சொல்லக்கூடாது பாப்பா" என்ற பாடலை எமக்கு சொல்லித்தந்த, ஒரு சின்ன பொய் சொன்னதற்காக எனது தம்பியை பெண்டு நிமிர்த்திய லட்சுமி அக்காவா இது? என்று நான் அதிர்ந்துபோன தருணம் அது.

இவை எல்லாம் கூட பரவாயில்லை. தாய் அழுவதை பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் கிட்ட வந்து அவாவின் குழந்தை "அம்மா இனி அப்பாவை அப்பா என்று சொல்லமாட்டன் அம்மா" என்று சொன்ன போது லட்சுமி அக்கா மட்டுமில்லை சுற்றி நின்ற எனது அம்மா உட்பட அனைவருமே வெடித்து அழுதுவிட்டார்கள். நானும் தம்பியும் ஒன்றும் புரியாமல் திரு திரு என்று முழித்து கொண்டிருந்தோம்.

"ஐயோ எனது பிள்ளைக்கே பெத்த அப்பனை இல்லை என்று வேறு 4 பேரை காட்டி சொல்லிக்கொடுக்கும் நிலை வந்து விட்டதே.. அந்த பிள்ளைக்கு இனி எப்படி பொய் சொல்லக்கூடாது என்று சொல்லிக்கொடுப்பேன்" என்று ஒப்பாரி வைத்து அழுதா லட்சுமி அக்கா.

ஆனால் இதெல்லாம் அன்றைய நிலைதான். அடுத்த வாரமே வேறு ஒருவர் தனது மனைவி பிள்ளை என்று அவாவை வெளிநாடு கொண்டுபோய் சேர்த்துவிட்டார். அதாவது லட்சுமி அக்காவின் குழந்தை நன்றாக பொய் சொல்ல பயிற்சி எடுத்து கொண்டது என்பதே இதன் மறுவளமான உண்மை. இது லட்சுமி அக்காவினதும் அவாவின் குழந்தையினதும் கதை இல்லை. பிறக்கும்போதே பொய் சொல்லி வாழ நிர்ப்பந்திக்கப்படும் ஒரு இனத்தின் கதை இது.

சிங்களத்திடம் இருந்து தப்ப ஒரு பொய், வெளிநாடு செல்ல ஒரு பொய், அங்கு அகதி அந்தஸ்து பெற ஒரு பொய், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டால் வேலை செய்ய ஒரு பொய் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வாழ்வை சுற்றி பொய்களே நிரம்பிக்கிடக்கின்றன - உண்மை மிக அரிதாக தூரத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

நாம் உண்மை பேசினால் நாம் அழிவது மட்டுமல்ல இந்த உலகமும் அழிந்துவிடும்.

பொய்கள்தான் இன்று இந்த இனத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. இல்லாத நாட்டை நாம் இருக்கு என்கிறோம். எமது தலைவன் எங்கு என்றே தெரியாது. ஆனால் நாம் "அவர் இருக்கிறார். வருவார்" என்கிறோம். நாம் சக மனிதர்களாக இந்த பூமி பந்தில் வாழ எந்த உண்மையும் உதவப்போவதில்லை. பொய்களே எமக்கு உதவுகின்றன.

இதை எழுதிக்கொண்டிருக்கும் சமகாலத்தில், வர்pப்புலி சீருடையுடன் புன்னகைத்தபடி நிமிர்ந்து நிற்கும் ஒரு தலைவனை மனதில் நிறுத்திய ஒரு புலிவீரன் சிங்கள வதைமுகாமிலிருந்து வெளியேறுவதற்காக, "மகிந்த ராஜபக்சதான் எனது தலைவர், நாம் இலங்கையன்" என்ற பொய்யை சொல்லிக்கொண்டு அந்த சித்திரவதை முகாமிலிருந்து வெளியேற எத்தனித்து கொண்டிருப்பான். லட்சுமி அக்கா போல ஒரு அக்கா தனது குழந்தையுடன் வேறு ஒரு வரை தனது கணவர் என்று சொல்லியபடி ஒரு விமான நிலைய குடிவரவு அதிகாரியை கடந்து கொண்டிருப்பார்.

ஒரு குடிவரவு அதிகாரியிடம் தனது அகதி விண்ணப்பத்தை ஏற்க சொல்லி ஒரு தமிழன் பல பொய்களை அவிழ்த்து கொண்டிருப்பான். புலம்பெயர் தேசமொன்றில் வேறு ஒருவரின் வேலை அனுமதி பத்திரத்தை தனது என்று சொல்லி ஒரு தமிழன் நம்ப வைத்து கொண்டிருப்பான். இப்படி தினமும் 1000 பொய்களை சொல்லி நாம் வாழ இந்த கேடுகெட்ட உலகத்தால் நிர்ப்பந்திக்கப்ட்டிருக்கிறோம்.

எமக்கு என்று ஒரு தேசம் கிடைக்கும்வரை, அந்த மண்ணிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறும்வரை இந்த இனம் பூமிப்பந்தில் எங்கு வாழ்ந்தாலும் பொய் சொல்லிக்கொண்டுதான் இருக்கும். அது வரை எம்மை நோக்கி இந்த சில்லித்தனமான கேள்விகளை யாரும் கேட்காதீர்கள்.

https://www.facebook.com/parani.krishnarajani/posts/581199985266211

இந்த இனம் விரும்பி பொய் சொல்லவில்லை. பொய் சொல்ல நிர்ப்பந்திக்கப்படும் இனம் இது.

இந்த பொய்கள் இப்போது தொடங்கவில்லை. இன அழிப்பு நோக்குடள் சிங்களம் படையெடுத்தபோதே தொடங்கிவிட்டது. :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஒரு நல்ல ஆக்கம் இது!

 

எனது இனம் என்பதற்காகச் சொல்லவில்லை! இந்தப் போராட்டக்காலத்துக்கு முன்பும், எமது இனத்தில் பலர் இவ்வாறு தான் இருந்தார்கள்! எல்லோரும் இல்லை, ஆனால் பெரும்பாலானவர்கள்!

 

பொய் சொல்லுபவன் கெட்டிக்காரன் என்று கூடக் கருதப்பட்டான், படுகின்றான்! இதன் பின்னணி பணத்தேவை மட்டுமே என்பதையும் வேறு தீய நோக்கங்கள் இல்லை என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்!

 

உதாரணத்திற்குச் சில: 

 

எத்தனை வெளிநாட்டு மாப்பிள்ளைகள், உண்மை சொல்லிக் கலியாணம் செய்திருக்கின்றார்கள்?

 

எத்தனை கல்யாணத்தரகர்கள்  உண்மை சொல்லிக் கலியாணங்களை நிறைவேற்றியிருக்கின்றார்கள்?

 

எம்மில், எத்தனை பேர் எமது உண்மை வாழ்வின் நிலையை எமது உறவுகளுக்கு, மனம் திறந்து சொல்லுகின்றோம்?

 

தமது மனச்சாட்சியைக் கொன்று போட்டுவிட்டு, எமக்காகக் கதைப்பது போல கதைத்து, எதிரிக்காக உழைப்போர் எத்தனை பேர்?

 

ஊடகங்கள் நடத்துவது மூலம், பச்சைப் பொய்களைத் திரும்பத் திரும்பப் பரப்புபவர்கள் எத்தனை பேர்?

 

இவர்கள் அனைவருமே, நாம் அடக்கப் படுவதனால் பொய்யர்களாக மாறியவர்களா?

 

அடக்கப்பட்டவர்களிடம் தான், இன்னும் உண்மை மிஞ்சியிருக்கின்றது என்பதே எனது கருத்து! :o

 

அதனால் தான் அவர்கள், இன்னும் சீரளிகின்றார்கள்! :unsure:

 

தென்னாபிரிக்கக் கறுப்பன் அடக்கப்பட்ட அளவுக்கு, உலகத்தில் எவரும் அடக்கப்பட்டிருக்க மாட்டார்கள்! ஆனால், அவர்களை விடப் பொய்கள் சொல்லுவதில், நைஜீரிஜக் கறுப்பன் மேலே நிற்கிறான்!

 

இதேபோலத் தான் எம்மவர்களில் பலரும்! :icon_idea:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு ஒன்று நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாய் வாழனும் என்றால் முதலில் மனத் திண்மையும்,உடல் பலமும் வேண்டும். அதனால்தான் முதலில் அவற்றைச் சிதைத்து விடுகின்றனர் . அதற்குமேல் உண்மையாவது,பொய்யாவது .எல்லாமே ஒரே மாதிரித் தெரியும் !!

இணைப்புக்கு நன்றி  மகம் !!

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்லக்கூடாது என்பது வீட்டில் ஒரு கட்டாய பாடமாக உள்ளது.. குறிப்பாக சிறுசிறு பொய்களை பலர் தயங்காமல் சொல்வதைப் பார்த்திருக்கிறேன.. குறிப்பிட்ட வயதுவரை நானும் செய்ததுதான்.. :rolleyes: இப்போது தவிர்த்து வருகிறேன்.. அதற்கு சில வழிமுறைகளும் வைத்திருக்கிறேன். :rolleyes:

உதாரணமாக யாராவது கடன் கேட்டால் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்வது கடினம்.. பொய் சொல்லவும் விரும்புவதில்லை.. ஆகவே எப்போதும் சிறிது கடனில் மூழ்கியபடியே இருப்பேன்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்லக்கூடாது என்பது வீட்டில் ஒரு கட்டாய பாடமாக உள்ளது.. குறிப்பாக சிறுசிறு பொய்களை பலர் தயங்காமல் சொல்வதைப் பார்த்திருக்கிறேன.. குறிப்பிட்ட வயதுவரை நானும் செய்ததுதான்.. :rolleyes: இப்போது தவிர்த்து வருகிறேன்.. அதற்கு சில வழிமுறைகளும் வைத்திருக்கிறேன். :rolleyes:

உதாரணமாக யாராவது கடன் கேட்டால் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்வது கடினம்.. பொய் சொல்லவும் விரும்புவதில்லை.. ஆகவே எப்போதும் சிறிது கடனில் மூழ்கியபடியே இருப்பேன்.. :icon_idea:

இசை அப்பிடியே நான் கேட்டத மறந்திடாதீங்க  :D

பரணி கிருஸ்ணறஜினி மூலம் தான் மிnஷல் பூக்கோவைப்பற்றியே அறிந்திருந்தேன். பரணிக்கு பல்முனையில் மிக ஆழமாகச் சிந்திக்கத்தெரியும் என்பதில் இரண்டாம் கருத்தில்லை. இருப்பினும் பரணியின் இந்தப்பதிவில் நியாயம் இருப்பதாகத் தெரியினும் ஒரு பாதி மட்டுமே கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது.
 
உலகத்தில் அனைத்து விடயங்களையும் காரணகாரியத்தோடு ஒவ்வொரு நொடிப்பொழுதும் அணுகிக்கொண்டிருப்பது சாத்தியமில்லைத் தான். ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கும் வரைமுறைகள் சார்ந்து நடப்பது வினைத்திறன் மிக்கது தான். இருப்பினும், ஒரு விடயம் சார்ந்து அனுதாபம் அல்லது இரக்கம் வேண்டி மட்டுமே எம்மால் ஒன்றைப் பேசப்கூடியதாக இருக்கிறது என்றால், அங்கு நாம் பேசவேண்டியதையெல்லாம் பேசவில்லை என்றே தோன்றுகின்றது.
 
மக்களிடம் பொதுவாக ஒரு பயம் இருக்கிறது. புனிதங்கள் அல்லது பெறுமதிகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டால் நாம் வெறும்பயல்கள் ஆகிவிடுவோம், பிடித்து நிற்பதற்கு எதுவும் இன்றிப் பந்தாடப்பட்டுவிடுவோம் என்பது அது. இது நியாயமான பயம் தான். ஆனால் எப்போது இந்தப் பயம் சித்தரிக்கும் வகையில் நாம் பந்தாடப்படுவோம் என்றால், நாம் நிர்மூலமாக்குகின்ற கட்டமைப்புக்களிற்கான மாற்றுக் கட்டமைப்புக்களை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்தாதபோது மட்டுமே. சுதந்திரமான சிந்தனை, விட்டுவிடுதலையான நிலை என்பது கூட, சரியாக அணுகப்படுகையில் உண்மையில் அதுவே ஒரு கட்டமைப்பாகத் தான் ஆகி வழிநடத்தும்.
 
பொய்சொல்லக்கூடாது என்பது எம்மில் ஊறிப்போன ஒரு பெறுமதி. அதனால் பொய் சொல்கையில் ஒரு பதைபதைப்பு வரவே செய்யும். அதற்கு மேல் சத்தியசோதனை போன்ற பிரமி;ப்புக்கள் வேறு எம்முள் ஆழப்பதிந்துள்ளன. ஆனால் பொய் என்றால் என்ன? எவ்வாறு உண்மை என்றால் என்னவென்று மறுகருத்திற்கிடமின்றி வரைவிலக்கணப்படுத்தமுடியாதோ அது போன்றது தான் பொய்யும். உண்மையின் எதிர்ச்சொல் பொய் என்னையில், உண்மை வரைவிலக்கணப்படுத்தமுடியாதது ஆயின் நிச்;சயமாக அதன் எதிர்ச்சொல்லும் வரைவிலக்கணப்படுத்தமுடியாதது தான். குறைந்தபட்சம் தர்;க்கரீதியிலேனும் இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
 
இவ்வுலகத்தில் எமது கையிற்கெட்டும் விடயங்கள் சொற்பமானவை. அவற்றிற்கிடையே ஏகப்பட்ட போட்டிகள் நிலவுகின்றன. போட்டியில் அவரவர் தம்மிடம் இருக்கும் அத்தனை அஸ்த்திரங்களையும் பிரயோகித்தபடி இருக்கிறார்கள். மேலும், பேராசை அவா போன்ற விடயங்களால், எவரும் தமக்குத் தேவையானவற்றைத் தேவையான அளவில் மட்டும் எடுத்துக்கொள்வதில்லை. இதனால், அத்தியாவசியத்தேவைகள், உயிர்வாழ்வதற்கு அவசயிமானவற்றின் தேவைகள் சார்ந்து போட்டி அதிகரித்தபடியே இருக்கின்றது. இந்நிலையில், சதாசர்வகாலமும் ஒரு புறத்தில் போட்டியாளர்கள் தடக்கிவிழுத்தப்பட்டப்படி தான் மறுபுறத்தில் நியாயமாக ஓடவேண்டும் என்ற போதனைகள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
 
ஒருவனை நோக்கிப் பொய்சொல்லாதே என்று நாம் கூறுகின்றதன் அடிப்படையில் யாரின் நலம் சார்ந்து அக்கூற்று மொழியப்படுகிறது? நிச்சயமாக எம்மைச் சார்ந்து தானே அன்றி பொய்சொன்னவன் சார்ந்தது அல்ல அது. அவன் பொய்சொல்வதால் அவனிற்கு ஏதோ ஒரு ஆதாயம் கிடைக்கிறது அந்த ஆதாயம் எமக்கு முரணானது என்ற அடிப்படையில் தான் அக்கூற்று எழுகிறது. மனிதன் தவிர்ந்த மற்றைய உயிரினங்கள் பலம் சார்ந்து தான் செயற்படுகின்றன. மனிதன் தான் சமூகமாக வாழ்தல்  என்பதை பெரும் பெறுமதி என்றாக்கி அதன்பொருட்டுப் பல கற்பிதங்களை உருவாக்குகிறான். சுமூகமாக வாழ்வதனால் அதியுச்ச பலன் பெற்றுக்கொண்டிருப்பவர்களே பொதுப் பெறுமதிகளைத் தோற்றுவிக்கவும் நடைமுறைப்படுத்தவும் போதிக்கவும் திணிக்கவும் முடிகிறது. சமூகத்துள் நசுங்கிக் கொண்டிருப்பவனிற்கு பெறுமதியுருவாக்கம் அவன் குடும்பத்திற்குள் மட்டும் தான் சாத்தியம்.
 
குடும்பத்தை மட்டும் பாhத்;தால், ஒரு குழந்தை பொய்சொல்லக்கூடாது என்று பெற்றோர் கூறித்தான் வளர்க்கிறார்கள். எனினும் லட்சுமியக்கா செய்தது போல், பொய்சொல்லாதிருப்பது பெற்றோரிக்குச் சாதமாக இருக்கும் வரை தான் அது நடக்கிறது. இது ஈழத்ததமிழனது குணவியல்பு மட்டுமல்ல. உலகம் முழுவதும் உள்ளது தான். இதை ஈழத்தவன் பிறழழ்வாக மட்டும் கூறிய அந்த இந்தியரின் கூற்றுக்கு இரக்கம் வேண்டும் வகையில் மட்டும் பரணி பதிலளிப்பது முழுமை அற்றது. 
 
முதலில் என்னென்ன காரணங்களிற்காகப் பொய் சொல்லக்கூடாது என்று பெற்றோர் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். பொய்சொல்லுவது இகழ்விற்கிடமாகும் ஒன்றாக இருக்கையில், தமது பிள்ளைகள் பொய்யர் என்று சமூகத்தால் (பள்ளியிலோ எங்கோ) அடையாளப்படுத்தப்படுவது பெற்றோரிற்கு அவமானமானது.  எவ்வாறு மக்குப் பிள்ளை என்பது பிரச்சினையோ அதுபோன்றது தான் பொய்யன் என்பதும். அடுத்து, பெற்றோர் எப்போதும் தம்மை பிள்ளைகள் சார்ந்து ஒரு அதிகாரமாகவே உணர்கிறார்கள். பிள்ளை வளர்ப்பில் பிள்ளைகள் சார்ந்து தமக்கு பூரண அதிகாரம் பிள்கைள் மீது இருக்கவேண்டும் என்று எதிர்பார்;க்கிறார்கள். இந்நிலையில், பொய்சொல்லும் பிள்ளை பெற்றோரின் அதிகாரப்பிரயோகத்திற்குப் பாதகமானது. அடுத்து, பெற்றோரிற்குப் பிள்ளைகள் மீது பாசம் உண்டு. இச்சமூகத்தில் பொய் சட்டம் சார்ந்து தண்டிக்கப்படக்கூடியதாகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது என்கையில் பாசம் சார்ந்து பி;;ள்ளைகள் மீதான பாதுகாப்புணர்வில் பொய்சொல்லக்கூடாது என்று பெற்றோர்கள் போதிக்கிறார்கள். மதங்கள் சார்ந்து, கடவுளிற்குப் பாதகமானது பொய்சொல்லல் என்றிருக்கையில், சித்திரகுப்தன் நகக்கண்ணிற்குள் குத்திவிடுவான் என்ற பயத்தில் பொய்சொல்லாதே என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். இப்படி நடைமுறைச் சாத்தியம் சார்ந்தும் பயம் சார்ந்தும் ஏகப்பட்ட காரணங்களை அடுக்கலாமே தவிர, பொய் என்பதன் வரைவிலக்கணத்தை சந்தேகத்திற்கிடமின்றி உணர்ந்து அதை ஆதரித்துப் பெற்றோர் புகட்டுகிறார்கள் என்பதல்ல நடைமுறை. குழந்தைகளிற்குப் பூரண உணவைப் பெற்றோர் ஊட்டுவதற்கும் பொய்சொல்லாதே என்பதை ஊட்டுவதற்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளது.
 
ஆனால், ஒரு 'உயர்வான' நிலைக்குப் பிள்ளையினை உயர்த்துவதற்கு, தாமும் பிள்ளையும் ஓரணியாக நின்று (பிள்ளை பொய்சொல்வது தமது அறிவுரையில் என்று தெரிகையில் பெற்றோரின் அதிகாரம் பற்றிய உணர்வு அலாரம் அடிப்பதில்லை) செயற்படக்கூடிய தருணங்களில் பலபெற்றோர்கள் பொய்யினை ஒரு ஆயுதமாக எடுக்கிறார்கள். அது பயண முகவர் மட்டுமல்ல, ஒரு உத்தியோகம், திருமணம், கல்வி, சட்டத்தில் இருந்து தப்புதல் போன்று ஏகப்பட்ட முனைகளில் உலகம் தோறும் நாளாந்தம் நடக்கிறது.
 
ஈழத்தமிழன் பொய்சொல்வது சகிக்கலை என்று சொன்ன இந்தியர் தன்னாட்டு கோல்சென்ரர்களில் நாளாந்தம் தனது மக்கள் தமது இந்தியப் பெயர்களை வெள்ளையன் பெயர் என்று மாற்றிப் பொய் சொல்லிப் பணத்திற்காக நடித்துக்கொண்டிருக்கும் பொய்கள் பற்றிப் பேசப்போவதில்லை. எத்தனை இந்தியர்கள் தாம் ஈழத்தமிழர்கள் என்று அகதி அந்தஸ்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள். வரதட்சணை அது இது என்று இந்தியாவில் நிரம்பியிருக்கும் பொய்கள் பற்றிய எந்த நினைப்பும் இன்றி மண்டம் அகதிமுகாமில் பொய்பேசுகிறார்கள் என்ற பேச்சைப் போன்ற மட்டமான பேச்சிற்கு இரக்கம் வேண்டிப் பதிலளிப்பது போதுமானதாகது.
 
ஒவ்வொரு மனிதனிற்கும் அடிப்படையில் சமூகத்திற்குள் தக்கதாதகத் தன்னை உருவாக்கிக் கொள்ளவது அவசியமானது. அதற்குச் சுயசிந்தனை அவசியம். ஆரோ சொன்னார்கள் என்ற பெறுமதிகளை கேள்வியின்றிக் காவித்திரிபவர்கள்; பலிக்கடாக்களாக மட்டுமே முடியமுடியும். ஏனெனில் பெறுமதி சொல்லும் சொல்லும் எவனும் தன்னலம் சார்து மட்டுமே அவற்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறான்.
  • கருத்துக்கள உறவுகள்
எல்லாம் பிடிக்கும், ஈழத்தமிழர்களிடம் எனக்கு பிடிக்காதது அவர்கள் சொல்லும் பொய்கள்தான். மண்டபத்தில் பணிபுரியும்போது அவர்கள் சொல்லும் பொய்களை கேட்டு எனக்கு வெறுத்து விட்டது."

 

 

எம்மவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.தேவைக்காக பொய் சொல்கிறார்கள்.இதனை ஏனையவர்கள் செய்யவில்லை என்பதை ஏற்கமுடியாது. வெளிநாட்டுக்கு வேலைக்கு என வரும் இந்தியர்கள்  "அங்கே படித்தேன் இங்கே படித்தேன்' என கள்ள அத்தாட்சிப் பத்திரத்துடன் வேலைக்கு சேர்பவர்கள் பொய் சொல்லிதான் சேர்கிறார்கள்.பொதுவாக எல்லோரும் பொய் சொல்கிறார்கள்.ஆனால் குறிப்பிட்டு இவர்கள் தான் பொய் சொல்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது.
 

பொய் சொல்லக்கூடாது என்பது வீட்டில் ஒரு கட்டாய பாடமாக உள்ளது.. குறிப்பாக சிறுசிறு பொய்களை பலர் தயங்காமல் சொல்வதைப் பார்த்திருக்கிறேன.. குறிப்பிட்ட வயதுவரை நானும் செய்ததுதான்.. :rolleyes: இப்போது தவிர்த்து வருகிறேன்.. அதற்கு சில வழிமுறைகளும் வைத்திருக்கிறேன். :rolleyes:

உதாரணமாக யாராவது கடன் கேட்டால் வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்வது கடினம்.. பொய் சொல்லவும் விரும்புவதில்லை.. ஆகவே எப்போதும் சிறிது கடனில் மூழ்கியபடியே இருப்பேன்.. :icon_idea:

சூப்பர் கொள்கை நண்பா ....... :D  :D  :D 

பொய் சொல்லாமல் இந்த வாழ்க்கையை ஓட்ட முடியுமா? "நீ இன்றைக்கு அழகாய் இருக்கிறாய் செல்லம் " என்று மனைவிக்கு சொல்லும் பொய்யோடு ஒரு நாள் ஆரம்பம் ஆகிறது.  :) 

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல பதிவு. அத்தனையும் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.