பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
Tell a friend
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெற்றிகரமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறுவதற்கு முன்பு பல முறை அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் முடிவுகள் தெரிவித்துள்ளன. புதிய மரபணு ஆராய்ச்சி, நவீன மனிதர்கள் உயிர் வாழ நியாண்டர்தால் மனிதர்கள் முக்கியமான பங்கு வகித்தனர் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய பிறகு ஆரம்பகால ஐரோப்பிய மக்களே உலகில் ஆதிக்கம் செலுத்தும் மனித இனமாக நீண்ட காலத்திற்கு கருதப்பட்டது. ஆனால் நியாண்டர்தாலுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட மனித இனத்தால் மட்டுமே செழித்து வாழ முடிந்தது, மற்ற மனித இனங்கள் அழிந்துபோயின என்று இந்த புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில், நாம் இதற்கு முன்பு எதிர்கொள்ளாத புதிய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க நியாண்டர்தால் மரபணுக்கள் முக்கியமானதாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. 48,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஹோமோ சேபியன்ஸ் (இன்றைய மனிதர்கள்), நியாண்டர்தாலுடன் குறுகிய காலத்திற்கு இனச்சேர்க்கையில் ஈடுபட்டதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதன் பிறகு இந்த மக்கள் உலகம் முழுவதும் சென்று வாழத் தொடங்கினர். "ஹோமோ சேபியன்ஸ் அதற்கு முன்பும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் அந்த மக்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின்பு தான் அவர்களால் வெற்றிகரமாக உலகம் முழுவதும் சென்று வாழ முடிந்தது" என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் பரிணாம உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஜோஹன்னஸ் கிரவுஸ், பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில், நவீன மனிதர்களின் வரலாறு இனி மாற்றி எழுதப்பட வேண்டும் என்று கூறினார். "நாம் நவீன மனிதர்களை ஒரு பெரிய வெற்றிக் கதையாகப் பார்க்கிறோம், 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, உலகெங்கும் சென்று வாழ்ந்து, இந்த கிரகத்தின் மிகவும் வெற்றிகரமான உயிரினமாக மாறியுள்ளோம். ஆனால் ஆரம்பத்தில் இது போன்ற நிலை இல்லை, நமது இனம் பல முறை அழிந்து போயிருக்கிறது.", என்று அவர் கூறினார். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 திண்டுக்கல்: தனியார் மருத்துவமனை தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் பலி - நடந்தது என்ன?13 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,DAVID GIFFORD / SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, மனித இனத்தின் வரலாற்றை மாற்றி மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் நீண்ட காலமாக, நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் புதைபடிவ எச்சங்களின் வடிவங்களை ஆராய்ந்து, அந்த மக்களின் உடற்கூறியல் காலப்போக்கில் எவ்வாறு மெதுவாக மாறியது என்பதை கவனித்ததன் மூலமும், எப்படி ஒரே ஒரு மனித இனம் உயிர் பிழைத்து, பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை தெரிந்துகொள்ளமுடிந்தது. இந்த புதைபடிவ எச்சங்கள் அரிதானவை மற்றும் பெரும்பாலும் சேதமடைந்த நிலையில் மட்டுமே கிடைக்கும். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்புகளிலிருந்து மரபணு குறித்த தரவுகளை பற்றி செய்த ஆராய்ச்சி, மனித இனத்தின் மர்மமான கடந்த காலத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. புதைபடிவங்களில் உள்ள மரபணுக்கள் மூலம், அந்த மக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தனர் என்பதை பற்றிய கதைகளை நமக்கு கூறுகிறது. நியாண்டர்தாலுடன் இந்த மக்கள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த பிறகும், ஐரோப்பாவில் உள்ள இந்த மக்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. நியாண்டர்தாலுடன் வெற்றிகரமாக இனச்சேர்க்கை செய்த முதல் நவீன மனிதர்கள் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் சந்ததியினர் உலகம் முழுவதும் சென்று பரவி வாழத் தொடங்கியதற்கு முன்பு, ஐரோப்பாவில் முற்றிலும் அழிந்து போயினர். ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?13 டிசம்பர் 2024 அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SPL படக்குறிப்பு, நியாண்டர்தால் மண்டை ஓடு நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே வந்த பிறகு நியாண்டர்தால்கள் ஏன் இவ்வளவு விரைவாக அழிந்துபோயினர் என்பதற்கான புதிய கண்ணோட்டத்தையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது. இது ஏன் நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், நம் மனித இனம் அவர்களை வேட்டையாடி அழித்தது அல்லது நாம் அவர்களைவிட எப்படியாவது உடல் ரீதியாகவோ அல்லது அறிவு ரீதியாகவோ மேம்பட்டவர்கள் என்ற கோட்பாடுகளிலிருந்து புதிய ஆதாரங்கள் நம்மை வேறு பக்கம் திருப்புகின்றன. மாறாக, நியாண்டர்தால்களின் அழிவு சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்பட்டது என்று பேராசிரியர் க்ராஸ் கூறுகிறார். "அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் ஐரோப்பாவில் ஹோமோ சேப்பியன்ஸ், நியாண்டர்தால் ஆகிய இரு மனித இனங்களுமே எண்ணிக்கையில் குறைந்து வந்துள்ளன. இன்றும் வெற்றிகரமாக இருக்கும் நமது இனமே( ஹோமோ சேப்பியன்ஸ்) அந்த பகுதியில் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில், அதைவிட குறைந்த எண்ணிக்கையில் இருந்த நியாண்டர்தால்கள் அழிந்து போனதில் பெரிய ஆச்சரியம் இல்லை," என்று அவர் கூறினார். அந்தக் காலத்தில் காலநிலை மிகவும் நிலையற்றதாக இருந்தது. சில சமயங்களில் இன்று இருப்பதைப் போலவே அப்போது சூழல் வெப்பமாக இருந்திருக்கலாம் அல்லது திடீரென கடுங்குளிராக மாறியிருக்கலாம், என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர் கூறுகிறார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கண்காட்சி. "நியாண்டர்தால் மக்களின் இறுதி காலகட்டத்தில் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுடன் வாழ்ந்த நவீன மனிதர்களை (ஹோமோ சேப்பியன்ஸ்) விட அவர்கள் மரபணு ரீதியாக குறைவான வேறுபாடு கொண்டவர்கள். இதனால் அவர்கள் அழிவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை என்று இந்த ஆய்வு காட்டுகிறது", என்று அவர் கூறினார். "நியாண்டர்தால்களிடம் இருந்து நவீன மனிதர்கள் சில முக்கிய மரபியல் பண்புகளை பெற்றிருந்ததாக ஆய்வு கூறுகிறது. அது அவர்களுக்கு ஒரு பரிணாம நன்மையை அளித்திருக்கலாம்" என்று சயின்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு மரபணு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஒன்று அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது. ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றிய போது, அவர்கள் இதுவரை சந்தித்திராத புதிய நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்பட்டனர். நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்டதே அவர்களின் சந்ததியினருக்குப் பாதுகாப்பைக் கொடுத்தது. "ஒருகட்டத்தில் நியாண்டர்தால் மரபணுவை பெற்றதன் மூலம் இந்த மனிதர்களால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே சென்று சிறந்த வாழ்க்கையை வாழ ஏதுவாக இருந்தத்து", என்று பேராசிரியர் ஸ்டிரிங்கர் கூறினார். "நாம் ஆப்பிரிக்காவில் உருவானோம், அதேநேரம் நியாண்டர்தால்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரிணாம வளர்ச்சியடைந்தனர்". என்றும் அவர் தெரிவித்தார். "நியாண்டர்தால்களுடன் இனச்சேர்க்கை செய்ததன் மூலம் நமது நோயெதிர்ப்பு சக்தி வலுவானது". என்பது அவரது கருத்து. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/ceqlg03wg9wo -
By நன்னிச் சோழன் · Posted
பல் மருத்துவர் சுதர்சன் -
Gukesh Interview: வரலாறு படைத்த இந்திய வீரர் என்ன சொல்கிறார்? | Chess Championship
-
By நன்னிச் சோழன் · Posted
படைய மருத்துவர் லெப் கேணல் சத்தியா (ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில்...) 'வலமாக அடுத்து நிற்பது மருத்துவர் முரளி' -
கட்சியின் தலைவர் விடயம்! நாள்முழுதும் பேசி முடிவுகள் எட்டப்படாமல் முடிந்த கூட்டம்! 14 DEC, 2024 | 06:31 PM இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சனிக்கிழமை (14) இடம்பெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (14) காலை10.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெற்றது. இதன்போது கூட்டம ஆரம்பிக்கமுன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா வருகைதராமல் கூட்டத்தை நடாத்தவேண்டாம் என தெரிவித்திருந்தார்.இதனால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. பின்னர் மாவைசேனாதிராயா கூட்டத்திற்கு வருகைதந்திருந்தார். அதனைத்தொடர்ந்து கூட்டம் ஆரம்பமாகியது. இந்தநிலையில் மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதால் அவருக்கு பதிலாக வேறொருவர் தலைவராக நியமிக்கப்படவேண்டும் என்று ஒரு தரப்பினர் கேட்டுக்கொண்டதுடன், மற்றொருதரப்பினர் அவரே தொடர்ச்சியாக தலைவராக செயற்படவேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதனால் இன்றைய கூட்டம் முழுவதும் அந்த விடயம் தொடர்பாகவே பேசப்பட்டதுடன், முடிவுகள் எடுக்கப்படாமல் பிறிதொருநாள் அதனை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ.சுமந்திரன்…. கட்சியின் கூட்டத்திற்கு தலைமைதாங்குவது யார் என்ற கேள்வி எழுந்தது. மாவை சேனாதிராஜா கடந்த ஒக்டோபர் மாதத்திலே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன்பிறகு இடம்பெற்ற அரசியல் குழு கூட்டத்தில் அது தொடர்பாக செயலாளர் அவரிடம் தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார். கடிதமும் அனுப்பியிருந்தார். இருப்பினும்அவர் அதற்கு பதில் சொல்லியிருக்கவில்லை. இதனால் செயலாளர் அவரது ராஜினாமா நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு அடுத்தகட்டநடவடிக்கையினை மேற்கொள்வதாக அவருக்கு அறிவித்திருக்கிறார். அதன்பின்னர் தனது ராஜினாமாவை மீள கைவாங்குவதாக அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளதாக காட்டப்படும் ஒரு கடிதம் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மூலம் செயலாளருக்கு அனுப்பபட்டிருந்தது. அதற்கு மறுநாள் மாவை அவர்களும் செயலாளருக்கு அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார். எனவே அவர் ராஜினாமா செய்திருப்பதால் கட்சியின் அடுத்த மாநாடுவரைக்கும் எஞ்சியிருக்கிற காலத்துக்கு மத்தியசெயற்குழு ஒருவரை தலைவராக நியமிக்க முடியும் என்ற எமது யாப்பின் அடிப்படையில் சிவிகே சிவஞானம் அவர்களை அந்த பதவிநிலைக்கு நியமிக்குமாறு முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. இதேவேளை சேனாதிராஜா தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றிருக்கிறார் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற மாற்று முன்மொழிவும் சொல்லப்பட்டது. இதனால் குறித்த விடயம் தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது. எனவே இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விடும்படியாக அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தரப்பினர் கேட்டுக்கொண்டனர். இறுதியில் அது வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் அதற்காக இன்னொரு கூட்டத்தை கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் யார் என்று தெரியாத ஒரு நிலையிலேதான் அடுத்த கூட்டம் வரைக்கும் கட்சி பயணிக்க வேண்டியநிலையில் இருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/201292
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.- 4 replies
Picked By
மோகன், -
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 4 replies
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 4 replies
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts