"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 116
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 116 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்"
வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் மற்றும் ரோமிலா தாப்பர் [Wilhelm Geiger and Romila Thapar] உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்கள், கி.மு 544 ஆம் ஆண்டை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரிக்கின்றனர். வில்லெம் கெய்கர் 1912 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மகாவம்சத்தின் முதல் பதிப்பில், புத்தர் இறந்த ஆண்டாக கி.மு 483 ஆம் ஆண்டைப் பயன்படுத்தினார். அதன் ஐந்தாவது அச்சு 2018 ஆம் ஆண்டில் இலங்கை புத்த கலாச்சார மையத்தால் [Buddhist Cultural Centre – Sri Lanka.] வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள நகல் இதுவேயாகும். சுமார் 108 ஆண்டுகளுக்கு முன்பு முதல் அச்சில் இருந்ததைப் போலவே, இந்த ஐந்தாவது பதிப்பிலும் கி.மு 483 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தர் இறந்த ஆண்டாக கி.மு 483 ஆம் ஆண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி டாக்டர் ஃப்ளீட்டின் [Dr. Fleet ] கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த விடயத்தில் டாக்டர் ஃப்ளீட்டின் பிற கட்டுரைகளும் உள்ளன, மேலும் பின்வரும் மூன்று கட்டுரைகள் கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
1. புத்தர் இறந்த தேதி, அசோகரின் பதிவால் தீர்மானிக்கப்பட்டது.[The Date of Buddha's Death, as Determined by a Record of Asoka, By J.F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1904, pp 1-26]
2. புத்தர் இறந்த தேதி, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1912), pp 239 to 241 இதில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது
3. புத்தர் இறந்த நாள், By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1909), pp 1 to 34 இல் விளக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition '- - பக்கம் 20 இல், புத்தர் இறந்த இரண்டு நம்பகமான ஆண்டுகள் என கிமு 483 மற்றும் கிமு 486 ஐ கிட்டத்தட்ட சமமான தகுதியுடன் தருகிறது.
லும்பினி தூண் கல்வெட்டு (Lumbini pillar inscription) படேரியா கல்வெட்டு [ Paderia inscription] என்றும் அழைக்கப்படும் இது பண்டைய பிராமி எழுத்து முறைகளில், காணப்படும் ஒரு கல்வெட்டாகும். இது 1896 டிசம்பர் இல் நவீன நேபாளத்தின் லும்பினியில் அசோகரின் தூண்களில் தொல்லியலாளர் அலோயிஸ் அன்டன் ஃபுரர் [Alois Anton Führer] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறிய தூண் கட்டளை, ரம்மிண்டே தூண் கல்வெட்டு [Rummindei Pillar Inscription] என்றும் அழைக்கப்படும். அசோகர் தனது ஆட்சியின் இருபதாம் ஆண்டுக்குப் பிறகு புத்தரின் பிறந்த இடத்திற்கு [லும்பினியில் புத்தர் பிறந்தார்] பயணம் செய்து நேரில் காணிக்கை செலுத்தியதாக லும்பினி தூண் கட்டளை பதிவு செய்துள்ளது. பின்னர் அவர் ஒரு கல் தூணை நிறுவினார், அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் வரிககள் குறைக்கப்பட்டன. அவர் அந்த யாத்திரைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு சூரிய கிரகணம் [solar eclipse] ஏற்பட்டது. 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition' ['அசோகரும் மௌரியர்களின் வீழ்ச்சியும் - ரோமிலா தாபர், மூன்றாம் பதிப்பு'] என்ற குறிப்பின்படி. சூரிய கிரகணம் கிமு 249 இல் என்று கணக்கிடப்படுகிறது. அந்த கிரகணத்திற்குப் பிறகு, மன்னர் அசோகர் யாத்திரைக்குச் சென்ற ஆண்டுகளின் எண்ணிக்கை எங்களுக்குத் உறுதியாகத் தெரியவில்லை. சூரிய கிரகணம் நடந்த அதே ஆண்டில் அவர் புறப்பட்டிருந்தால், மன்னர் அசோகர் கி.மு 249 ஆம் ஆண்டு யாத்திரையைத் தொடங்கியிருக்க வேண்டும். எனவே, புத்தரின் பரிநிர்வாணம் கி.மு 487, 249+218+20 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். என்றாலும், கிரகணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புறப்பட்டிருந்தால், புத்தரின் பரிநிர்வாணம் கி.மு 485, 249-2+218+20 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். [Two hundred and eighteen years after the Parinibbāna of the Sambuddha Piyadassana was anointed king என்ற நாளாகமம்களின் செய்தியின் படி] இலங்கை நாளாகமம், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ளபடி, புத்தர் இறந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்திருந்தால் மட்டுமே இது சரியானதும் ஆகும்.
மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள, லும்பினியில் உள்ள ரம்மிண்டே சிறிய தூண் கல்வெட்டு அரசாணையின் தொலைப்பிரதி அல்லது தொலைநகல் [Fax (short for facsimile)], வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919' ['இந்தியாவின் புத்த பேரரசர் அசோகர், வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதியது, மூன்றாம் பதிப்பு 1919'] என்ற புத்தகத்தின் பக்கம் 222, கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
"இருபதாம் ஆண்டு ஆட்சி நடைபெறும் போது, தேவனின் பிரியமானவன் என்ற பியதசி (அசோகர்) இந்த இடத்திற்கு சென்று தரிசனம் செய்து வணங்கினார். இதுவே சக்யமுனி [சாக்கியர்களின் முனிவரான] புத்தர் பிறந்த இடம் என்பதால், இங்கே குதிரையைத் தாங்கிய ஒரு கல் செய்யப்பட்டு, ஒரு கல் தூண் அமைக்கப்பட்டது. இறைவன் (புத்தர்) இங்கே பிறந்ததால், இந்த லும்பினி கிராமத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது; கிராமம் எட்டிலொரு பகுதி மட்டுமே வழங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது."
இந்த வினோதமான பதிவு, 1896 இல் கண்டுபிடிக்கப்பட்டு சரியாகப் பாதுகாக்கப்பட்டது / இந்தப் பதிவு அரச கட்டளையால் செதுக்கப்பட்டதாகக் கூறவில்லை என்பதைக் கவனிக்கலாம். அசோகரின் வருகையையும் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் வழங்கிய உதவிகளையும் நினைவுகூரும் வகையில், உள்ளூர் அதிகாரியால் இது வரைவு செய்யப்பட்டு செதுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.?
Part: 116 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana"
Most scholars, including Wilhelm Geiger and Romila Thapar, discard the year 544 B.C. as untenable. Wilhelm Geiger used the year 483 B. C. as the year on which the Buddha’s death took place, in the first edition of his translation of the Mahavamsa which was published in the year 1912. The fifth print of the same was published in the year 2018 by the Buddhist Cultural Centre – Sri Lanka. This is the copy referenced in this study. The same year 483 B.C. is used in this fifth edition too, as it was in the first print about 108 years ago. The year 483 B.C. as the Buddha’s year of death was based on the articles by Dr. Fleet as given below. There are other articles also by Dr. Fleet on this subject, and the following three articles are cited below.
1. The Date of Buddha's Death, as Determined by a Record of Asoka, By J.F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1904, pp 1-26
2. Date of Death of Buddha, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1912), pp 239 to 241
3. The Day on Which Buddha Died, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1909), pp 1 to 34
Romila Thapar, Reference 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition '- page 20, gives 483 B.C. and 486 B.C. as two credible years of Buddha’s death with almost equal merit.
In Nepal, the Lumbini Pillar Edict is known as the Rummindei Pillar Inscription, one of his Minor Pillar Edicts. The Lumbini Pillar Edict recorded that Ashoka traveled to the birthplace of Buddha [Lumbini is where the Buddha was born] sometime after the twentieth year of his reign and made offerings personally. Then he got a stone pillar put up and the residents of that area lowered their taxes. There was a solar eclipse before he set out on that pilgrimage, as per Reference 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition'. The eclipse of the sun is calculated to be on 249 B. C. We are not sure of the number of years after that eclipse the King Asoka set out on the pilgrimage. If he had set out on the same year as the solar eclipse, then King Asoka must have started on the pilgrimage on the year 249 B. C. Therefore, the Buddha’s Parinirvana must have had occurred on 487 B.C., 249+218+20. If he had set out two years after the eclipse then the Buddha’s Parinirvana must have occurred on 485 B. C.,249-2+218+20. This is correct only if the coronation of Asoka took place two hundred and eighteen years after the death of Buddha, as is given in the Chronicles of Ceylon, the Dipavamsa and the Mahavamsa.
The facsimile of the above mentioned Minor Pillar Edict, Rummindei pillar inscription in Lumbini, as given by Vincent A. Smith, page 222 of Reference 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919', is given below:
" By His Sacred and Gracious Majesty the King when he had been consecrated twenty years, having come in person and reverence having been done inasmuch as ' : Here was born Buddha, the sage of the Sakyas" a stone bearing a horse was caused to be made and a stone pillar was erected. Inasmuch as " Here the Holy One was born," the village of Lummini was released from religious cesses and required to pay [only] one-eighth as land revenue." [This curious record, discovered in 1896 and perfectly pre- served / It will be observed that the record does not claim to have been incised by royal command. Presumably it was drafted and engraved by a local authority to commemorate Asoka's visit and the favours conferred by him on that occasion.]
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 117 தொடரும் / Will follow
துளி/DROP: 2060 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 116
https://www.facebook.com/groups/978753388866632/posts/34016559807992564/?
By
kandiah Thillaivinayagalingam ·