Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் நிபந்தனைகள் குறித்து பசில் ராஜபக்ஷ மௌனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நிபந்தனைகள் குறித்து பசில் ராஜபக்ஷ மௌனம்

07 ஜூலை 2013

இந்தியாவின் நிபந்தனைகள் குறித்து பெருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மௌனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்து அந்நாட்டு அரசியல் தலைவர்களையும் ராஜதந்திரிகளையும் அமைச்சர் ராஜபக்ஷ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து அவர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென இந்தியா வலியுறுத்தியதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், இது குறித்து தகவல்களை வெளியிட முடியாது என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில விடயங்கள் பற்றி பகிரங்கமாக பேச முடியும் எனவும், சில விடயங்கள் பற்றி பகிரங்கமாக பேச முடியாது எனவும் இது இராஜதந்திர விவகாரங்களில் முக்கிய அம்சம் எனவும் அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93763/language/ta-IN/article.aspx

கடைசி வரைக்கும் சொல்லவும் மாட்டாங்கள் செய்யவும் மாட்டாங்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்! 

உந்த பதின்மூன்றாவதுக்கு புலிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் போராடினார்கள்.

இப்ப டக்கிளசும் அது தேவை இல்லை என்றுதான் சொல்லுறார்.

மகிந்த மாமாவும் வேண்டாமாம்.

முனாக்களும் வேண்டாமாம் 

பிக்குகளும் வேண்டாமாம் 

ஜேவிபியும் வேண்டாமாம்

சங்கரியும் வேண்டாமாம்

ஒப்பமிட்ட ஜே ஆர் ரம் இல்லை ராஜிவும் இல்லை எதிப்பு தெரிவித்த புலிகளும் இல்லை.

யாருக்குத்தாம்பா இது வேணும்... என்னதாம்ம்பா நடக்குதுங்க? 

தயவுசெய்து தெரிந்தவர்கள் பதில் தரவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியளுக்கு தேவை இல்லாதது தேசியத்தாருக்கு தேவை இல்லை தானே ...

கூட்டமைப்பும் ... டக்கியும் 13 தேவை ...எண்டுதான் சொல்லினம் ... டக்கி ஓப்பனா சொல்லுது ... கூட்டமைப்பார் துரோகி பட்டத்துக்கு பயந்து மறைமுகமா சொல்லினம்.

சரத்து கூட வடமாகாண லெக்சனில நிக்குதாம் ....

நல்லூருக்கு கும்பி போயிருக்குது எண்டவடியா லெக்சன் நடக்கபோகுதுதான் ....

பிரசிடென்சல் லெக்சனில சரத்துக்கு 2 லட்சம் வோட்டு போட்ட வடமாகானத்தார் தங்களுக்கு என்ன தேவை எண்டு தெரிவு செய்வினம் தானே ....  :lol:  :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆம் திருத்தச் சட்டம் தேவையில்லை என்றால் இன்று எம்முன் உள்ள தெரிவுகள் என்ன? தனிநாட்டைத் தவிர வேறு எதுவுமே வேண்டாமென்றால், அப்படியொன்று அடைவதற்கு முன்னர் தமிழர் தாயகம் என்று ஒன்று இருப்பதையே சுவடு தெரியாமல் அழித்துவிடுவார்கள். யதார்த்தம் எதுவோ அதுவே நாம் தெரிவு செய்யவேண்டிய பாதையாகும். ஏனென்றால் இப்போதைக்கு தனிநாட்டை இந்தியாவோ, மேற்குலகோ அல்லது சிங்களவனோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 

1987 இல் ஒத்துக்கொள்ளப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணங்கள் தமிழரின் பூர்வீகம் என்று ஏற்றுக்கொண்டு காணி, காவல்த்துறை அதிகாரங்களைத் தமிழரிடம் தருமிடத்து அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தியா முன்னின்று இதைச் செய்யுமானால், நாம் அந்தப் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடலாம்.

சமபலத்துடன் இருந்த காலத்திலேயே சிங்களவன் தர மறுத்த ஒன்றினை நாம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட நாம் வேண்டாமென்று சொல்வது நல்லதாகப் படவில்லை.

இப்போது நடக்கும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவாவது எமக்கு காணி அதிகாரத்துடனான மாகாணசபை அமைப்பொன்று தேவை. 

இந்தியாவின் ஆசீர்வாதமிருந்தால் செய்வதே நல்லது, எமக்கு இன்னொரு தனிநாட்டிற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரையாவது. 

 என்னதாம்ம்பா நடக்குதுங்க? 

A bird in the hand is worth than the two birds in the bush என்னும் புகழ் மிக்க ஆங்கில பழமொழி இங்கே பொருத்தமானது.
 
'இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஏங்குவது' (முட்டாள்தனம்) என்பது இதன் சமமான தமிழ் பழமொழி.
 
தமிழ்நாட்டின் ஆதரவுடனான இந்திய அரசின் உறுதுணையுடன் கிடைப்பதை வாங்கி அதனை மேலும் உறுதி ஆக்காவிடில், சிங்கள குடியேற்றங்கள் இருப்பதை விழுங்கி ஏப்பம் விடும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆம் திருத்தச் சட்டம் தேவையில்லை என்றால் இன்று எம்முன் உள்ள தெரிவுகள் என்ன? தனிநாட்டைத் தவிர வேறு எதுவுமே வேண்டாமென்றால், அப்படியொன்று அடைவதற்கு முன்னர் தமிழர் தாயகம் என்று ஒன்று இருப்பதையே சுவடு தெரியாமல் அழித்துவிடுவார்கள். யதார்த்தம் எதுவோ அதுவே நாம் தெரிவு செய்யவேண்டிய பாதையாகும். ஏனென்றால் இப்போதைக்கு தனிநாட்டை இந்தியாவோ, மேற்குலகோ அல்லது சிங்களவனோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 

1987 இல் ஒத்துக்கொள்ளப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணங்கள் தமிழரின் பூர்வீகம் என்று ஏற்றுக்கொண்டு காணி, காவல்த்துறை அதிகாரங்களைத் தமிழரிடம் தருமிடத்து அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தியா முன்னின்று இதைச் செய்யுமானால், நாம் அந்தப் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடலாம்.

சமபலத்துடன் இருந்த காலத்திலேயே சிங்களவன் தர மறுத்த ஒன்றினை நாம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட நாம் வேண்டாமென்று சொல்வது நல்லதாகப் படவில்லை.

இப்போது நடக்கும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவாவது எமக்கு காணி அதிகாரத்துடனான மாகாணசபை அமைப்பொன்று தேவை. 

இந்தியாவின் ஆசீர்வாதமிருந்தால் செய்வதே நல்லது, எமக்கு இன்னொரு தனிநாட்டிற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரையாவது. 

வாழ்த்துக்கள் ரகுநந்தன். உங்கள் கருத்துக்கு நன்றி.

விடுதலைக் கோபுர உச்சிதான் எங்கள் இலக்கு. தோல்விக்குப்பின்னர் மீண்டெழுந்து கோபுரம் நோக்கி களத்தில் பயணிப்பவர்களை நாம் ஆதரிக்கவேண்டும்.  அவர்கள் முதல் படியில் கால்வைக்கும்போதே நாம் சேற்றை வாரி இறைக்கலாமா? கோபுரத்தில் மட்டுமே ஏறு, முதல்படியில் ஏறாதே, ஏறினால் துரோகிப் பட்டம் சூட்டிவிடுவோம் என மிரட்டலாமா?  

Edited by poet

துரோகி பட்டத்தை கண்டுகொள்ளாமல் நடக்கவேண்டியதை கவனிக்கவேண்டியது உண்மையான மனிதாபிமான போராளியின் கடமை.....உதாரணம் ....கலம் மக்ரே......

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் பலம் அவருடைய வெற்றிகளுக்கு காரணமே அவருக்கு கிடைத்திருக்கும் மிக சிறந்த சகோதர்கள் தான்... பசில் ராஜதந்திரத்தில் வல்லவர் மெதுமையானவர்.... கோத்தா அடிதடியில் பெயர் போனவர் மகிந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப சகோதரர்களை பயன்படுத்த வேண்டியைடங்களில் பயன்படுத்தி வெற்றி பெறுகின்றார்.....

  • கருத்துக்கள உறவுகள்

தல,

இந்த முறை அடி கொஞ்சம் கூடவோ?

கைப்புள்ளயின் செயலாளர்

வருத்தப் படாத வாலிபர் சங்கம்

13 ஆம் திருத்தச் சட்டம் தேவையில்லை என்றால் இன்று எம்முன் உள்ள தெரிவுகள் என்ன? தனிநாட்டைத் தவிர வேறு எதுவுமே வேண்டாமென்றால், அப்படியொன்று அடைவதற்கு முன்னர் தமிழர் தாயகம் என்று ஒன்று இருப்பதையே சுவடு தெரியாமல் அழித்துவிடுவார்கள். யதார்த்தம் எதுவோ அதுவே நாம் தெரிவு செய்யவேண்டிய பாதையாகும். ஏனென்றால் இப்போதைக்கு தனிநாட்டை இந்தியாவோ, மேற்குலகோ அல்லது சிங்களவனோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 

1987 இல் ஒத்துக்கொள்ளப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணங்கள் தமிழரின் பூர்வீகம் என்று ஏற்றுக்கொண்டு காணி, காவல்த்துறை அதிகாரங்களைத் தமிழரிடம் தருமிடத்து அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தியா முன்னின்று இதைச் செய்யுமானால், நாம் அந்தப் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடலாம்.

சமபலத்துடன் இருந்த காலத்திலேயே சிங்களவன் தர மறுத்த ஒன்றினை நாம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட நாம் வேண்டாமென்று சொல்வது நல்லதாகப் படவில்லை.

இப்போது நடக்கும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவாவது எமக்கு காணி அதிகாரத்துடனான மாகாணசபை அமைப்பொன்று தேவை. 

இந்தியாவின் ஆசீர்வாதமிருந்தால் செய்வதே நல்லது, எமக்கு இன்னொரு தனிநாட்டிற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரையாவது. 

உண்மையான 13ம் திருத்தம் என்று ஒன்று பூ உலகில் எப்போதும் இருக்கவில்லை. மகிந்த தெளிவாகவே அது வெள்ளையானை மட்டுமே என்றுதான் சொல்லியிருக்கிறார். (அது தான் அவர் அதில் இருக்கும் வெள்ளையானை  சரத்துக்களை நீக்கி உண்மையான சரத்துக்கள் போட்டு திருத்த என்று தெரிவு குழு அமைத்திருக்கிறார். தெரிவு குழு 13ம் திருத்தால் கொடுக்க முடியாமல் போன தீர்வை தமிழருக்கு கொடுக்க என்பதாகும்.) அதனால் தான் இருக்காத ஒன்றை காப்பாற்ற கூட்டமை தெரிவு குழுவுக்கு போகவில்லை.

13 என்றால் என்ன என்பதை யாரும் எப்போதும் சரியாக தெரிந்திருக்கவில்லை.  95% மக்களுக்கும் வடக்கு கிழக்கு இணைவும், காணி பொலிஸ் அதிகாரமும் ஏற்கனவே இருக்கு என்பதும், அதை நடை முறை படுத்த முடியாது என்பதும் விளங்குவத்தில்லை.  இன்று சல்மான் குர்திஸ் சொல்லியிருப்பது அந்த சரத்துக்களை நீக்க முடியாது என்பதே. புதிதாக எதையும் கொடுக்க சொல்ல இல்லை. (13+ இல் புதியது எதுவுமே இல்லை.) ஆனால் அவர் 26 வருடம் அந்த உரிமைகள் இருந்தும் நடை முறை படுத்தாமல் இருக்கும் அரசை நடைமுறைப்படுத்த வைக்க ஒரு புதிய பாதையை முன் வைக்கவில்லை.(அவர் காணி பொலிஸ் அதிகாரம் நீக்கப்பட கூடாது என்கிறார் (கொடுக்கச் சொல்ல இல்லை) என்பதை விளங்க வேண்டும்.அப்போது தான் அது ஏற்கனவே தமிழருக்கு இருக்கு எனபதை நம்ப முடியும். அப்போதுதான் அடுத்த படியான அதை நடைமுறை படுத்த முடியாது என்பது விளங்கும்) 

 வடக்கில் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கலாம். ஆனால் அரசு சொல்வதை மட்டும்தான் செய்ய வேண்டும். இதில் காணி பொலிஸ் அதிகாரம் இருந்தாலும் அப்படித்தான். இல்லாவிட்டாலும் அப்படித்தான். அதாவது கல்வி, பொருளாதார, நீதி, காணி, என்று இன்று 13ம் திருத்ததின் கீழ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் துறை எல்லாவறுக்கும் அதே நிலைதான்.   இதை முதல் அமைச்சராக இருந்த பள்ளிக்கு போகாத  பிள்ளையான் தெளிவாக சொல்லியிருக்கிறார். அது ஒரு சின்ன பியோனை தன்னும் தனது விருப்பத்திற்கு அமைய நியமிக்க முடியாத சபை. 

வடக்கு கிழக்கை இனி இந்தியா ஒரு போதும் இணைக்காது. (தனி கிடைத்தாலும் கூட அது இணைந்து வரும் சாத்தியங்கள் குறைவு) வடக்கு கிழக்கு இணையாத 13ம் திருத்ததின் மற்ற பகுதி கிழக்கில் நடைமுறையில் இருக்கு.  அது ஒருவகை ஆளுனர் ஆட்சி. அதில் காணி உரிமை, காவல் உரிமை, பொருளாதாரம், கல்வி உரிமைகள் இருக்கு. ஆனால் நடை முறைப்படுத்த முடியவில்லை. கக்கீம் அதில் எதையும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதால்தான் மு.க. கிழக்கில் ஆட்சி அமைக்கவில்லை.  அதாவது கக்கீம் தன்னை இந்தியாவால் முன்னேற்ற முயன்று  தோற்ற வரதராஜ பெருமாள் ஆக்க விரும்பவில்லை. அவர் தெளிவாகத்தான்அரசுக்கு ஆட்சி அமைக்க உதவினார்.( ஆனால் தனதுகட்சிக்கும்  இரண்டு முதல் அமைச்சர் பதவி கேட்டுவாங்கி வந்தார். இப்போது உணர்கிறார் அது அரசின் பொய் வக்குறுதி என்றும் இனி மாகாண சபைகள் இருக்கது என்றும்.)

ஈராக், ஆப்கானிஸ்த்தான், லிபியா பொன்றவற்றில் இருந்த அரசாங்கங்களை அமெரிக்கா துரத்தினாலும் கடைசியில் வெளியேற வேண்டித்தான் வந்தது. ஆனால் அமெரிக்கா தனக்கு மிக சாதமான அரசுகளை அமைத்தும் அவர்கள் இன்று 100% அமெரிக்காவுக்கு எதிர். பிரச்சனைகள் தீரவில்லை. இலங்கையில் UNP யோ அல்லது SLFP யோ ஒரு போதும் இந்தியா அப்படி 13யை மேற்பார்வை செய்ய அனுமதிக்கப் போவதில்லை. என்றுமே இந்தியாவால் எதுவும் இனி இலங்கையில் செய்ய முடியாது. மேற்குநாடுகளின் உதவியுடன் தான் படையை அனுப்பலாம். அல்லது ஐ.நா. படையை கொண்டுவரலாம்பானால் அதுவும் ஒரு குறிப்பிட்ட கலத்திற்குள் வெளியேற வேண்டும். 78% சிங்கள பெரும்பான்மையை யாரும் எதுவும் புடுங்க முடியாது.  

சல்மான் குர்திஸ் என்ன சொன்னாலும் (எங்குமே என்றுமே இருக்காத) 13ம் இன் முடிவுகாலம் வந்து விட்டது. மனச் சந்தோசத்திற்கு "இந்தியா பொறுப்பு எடுத்தால்" என்று கூறலாம் இலங்கையை இந்தியா ஆள்வதை உலக நாடுகள் எற்றுகொள்ளாது. மற்றும் படி 26 வருடங்கள் பெயரவில் இருந்த 13ல் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இருக்கு. இந்திய இலங்கை உடபடிக்கையில் தமிழர் தாயகம் ஏற்கபட்டிருக்கு.  

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்று ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்தபோது மக்கள் ஒட்டுமொத்த ஈழத்திற்கான கனவில் இருந்தார்கள்.. அவர்களை ஒடுக்கி நந்திக்கடல் ஓரமாக விட்டபோது அடுத்த இலைக்கஞ்சி எப்போது கிடைக்கும் என்று காத்து நின்றார்கள்.. அங்கு அவர்களில் பிழையொன்றுமில்லை.. சூழ்நிலைகளை மாற்றி தேவைகளைக் கட்டுப்படுத்தும் அரசின் செயல் அது..

இப்போது தாயகத்தில் உள்ளவர்கள் 13 ஆம் திருத்தத்திற்குமேல் பேச முடியாது.. அங்கு நிலைமைகள் அப்படி.. அதற்காக முழு உலகத் தமிழினமும் அதையே பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்பதல்ல. பேரம்பேசுதலில் அழுத்தம் பல தரப்புகளில் இருந்து கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

எல்லாரும் நல்ல நடிக்க பழகிட்டாங்கியா பழகிட்டாங்க

இசை தனது வழமையான பொறுமையான பதிலுக்கு போகிறார். ஆனால் அவரும் சில அனுமானங்களை வைக்கிறார். 

1. தாயக மக்கள் 13ம் திருத்தம், அல்லது 13+ (அப்படி ஒன்று இல்லை) க்கு மேலே கேட்க பயப்படுகிறார்கள்.   - இதில் நான் சொல்வதைதான் அவர் அனுமானிக்கிறார் என்றால் தயாக மக்கள் பயப்படுகிறார்கள் 13ம் கேட்பதற்கு கூடத்தான். அவர்கள் எதவும் பேசத் தயார் இல்லை.  ஆனால் மனத்தில் தன்னும்  தீர்வு என்றால் என்ன என்ற ஒரு காட்சி இருக்கா என்றால் நந்திக்கடலில் வைத்து அரசு அப்படி ஒன்றை உங்கள் மனதில் கனவுதன்னும் காணாதீர்கள் என்று நினைக்க செய்துவிட்டது. ஆனால் அவர்கள் இன்னும் எத்தனை முறையும், சாதாரண எதிர்பார்ப்புக்களில்,  கூட்டமைப்புக்கு வாக்களிப்பர்கள்.  நீட்டிகொண்டே போகாமல், கூட்டமைப்பு தீர்வு என்ன என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும். கூட்டமைப்பு, இன்றும் அன்றும் 13ம்திருத்ததை ஏற்கவில்லை. அதனால் கூட்டமைப்பு 13ம் திருத்தத்தில் உள்ள சரத்துக்களை தள்ளிவிட்டு தனி நாடு கேட்கிறதென்றாகாது.

இன்றைய நிலையில் 13ம் திருத்தம் என்பது எதுவுமே நடை முறை படுத்த முடியாத ஒரு திருத்தம். கூட்டமைப்பு கேட்கத்தக்க படிமுறைகளில் மூன்று படிகளை வைக்கலாம்.

1.காணி, பொலிஸ், வடக்கு-கிழக்கு இணைப்பு, கல்வி, பொருளாதாரம் மிக மிக அடிப்படையான  அதிகாரங்களளை நடை முறைப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பு. (கவனிக்கவும் 13ம் திருத்தம் அல்ல).

2. அமெரிக்க மானிலங்கள் மாதிரியான சுயநிர்ணய உரிமை உள்ள இரண்டு மானிலங்கள்.

3. இடைக்கால அரசாங்கமும், அதன் பின் தீர்வும். (13ம் திருத்தம் அல்ல)

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இன்று இருக்கும் நிலைமையில் அரசுடன் இணக அரசியல் பேசலாம். (அது வெல்லும் என்று நான் கூறவில்லை, ஒரு விவாததிற்கு மட்டுமே). அரசுடன் பேசி தனிய மொழி, கல்வி, பொருளாதார அதிகாரங்களை மட்டும் கூட வாங்கலாம்.  ஆனால் 13 அல்ல. இது 13- போல தோன்றினாலும், உண்மை அதுவல்ல.  அது நடைமுறை படுத்த தக்கதொன்றாக இருக்கும். 13ம் திருத்தம் போன்ற வெள்ளையானையாக இருக்காது.

இவற்றில் எவற்றை கேட்டாலும் அது தனி நாடு கேட்கும் பிரிவினைஅல்ல. கூட்டமைப்பு கேட்க முடியும். அரசு 13ம் திருத்தத்தை ஏற்கவில்லை. இதில் 13ம் திருத்தத்தை திரும்ப கொண்டுவருவதின் நோக்கம் அரசுடன் இணக்க அரசியல் பேச அல்ல. எனவே அதை அரசிடம் கேட்பது அரசுடன் இணங்க மறுக்கும் அரசியல் மட்டுமே.  13ம் திருத்ததை இன்று கேட்போர்  செய்ய முயல்வது இந்தியாவை பிளீஸ் பண்ணி தனி நபர் முன்னெடுப்புக்களை நடத்தவே.  ஏன் எனில் 13ம் திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாது ஒன்று.

எனவே இசை சொல்வது போன்று பன்முக அழுத்தம்தான் பேரத்தின் நடை முறை. அது இணக்க அரசியல் அல்ல. இன்றை கால கட்டத்தில் அரசு மீது அழுத்தம் போட  ஐ.நா.தான் நல்ல தெரிவு. இதற்கு புலம் பெயர் மக்கள்தான் முக்கிய பங்களிக்க வேண்டும். தமிழக மாணவரின்  போராட்டத்திற்கு பிறகு இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டது மாதிரி சிலர் காண்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியா 13ம் திருத்தத்தை கைவிட்டுவிட்டு அரசுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றுக்கு பேசலாம்.  மாணவர்கள் மத்திய அரசை கேட்டது, பிரணைகளை ஐ.நாவில் கொண்டுவராமல் தீர்வு ஒன்றை கொண்டுவரும்படி. அவர்களின் உழைப்பால் இந்திய அரசில் காணப்படும் மாற்றத்தை திசை திருப்பி நாம் 13ம் திருத்ததிற்கு எடுத்து சென்று அவர்களின் முயற்சியை வீண் அடிக்க கூடாது. இதில் எப்போதுமே கறையான் புற்றேடுக்க நசூக்காகப் போய் குந்திக்கொள்ள இடம் கொடுப்பது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்.

Edited by மல்லையூரான்

துரோகி பட்டத்தை கண்டுகொள்ளாமல் நடக்கவேண்டியதை கவனிக்கவேண்டியது உண்மையான மனிதாபிமான போராளியின் கடமை.....உதாரணம் ....கலம் மக்ரே......

கலம் மக்ரே தன் மீது வரும் துரோகி பட்டத்தை கவனியாமல் செயல்பட்டால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர் நம் எல்லோருக்கும் நல்ல உதாரணம். ஆனால் அவர் மீது பிரித்தானியா துரோகிபட்டம் சுமத்துகிறார்களா? அல்லது ஊடக துறை சொல்கிறதா? அல்லது சனல்-4 அவரை துரோகியாக காண்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லை.. நான் முதலில் எழுதியது ரகுநாதனின் கருத்திற்கான பதில்.. ஆனால் கோட் செய்ய கடினமாக இருந்ததால் (அலைபேசி) பொதுவாக எழுதினேன்.. :D

தாயகத்தில் கூட்டமைப்பு 13 க்கு மேலும் கோரலாம்தான்.. ஆனால் ஆடுகளத்தில் இருப்பவர்கள் யாரென்றும் பார்க்கவேண்டும் அல்லவா?

இப்போதுள்ள சூழலில் 13 இற்கு மிகப்பெரிய பின்புலம் இந்திய அரசு. அதனாலேயே கூட்டமைப்பும் 13 உடன் முடித்துக்கொள்கிறது என நினைக்கிறேன். சமஷ்டி, இடைக்கால அரசு என்று போனால் இந்தியா அதை மறுக்கும். நடைமுறை சாத்தியமான கோரிக்கைக்கு வாருங்கள் என்றே சொல்வார்கள். இந்திய அரசு சொல்வதையே மேற்கும் கேடும் நிலையில் உள்ளது.

மறுவகையில், சிங்களம் 13க்கே அல்லாடுவதுபோல ஒரு காட்சியைப் பகிரங்கப்படுத்துகிறது. அதாவது பேரம் பேசலில் யாரும் இந்த மாகாணசபையைத் தாண்டிவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. ஜனநாயகம், பெரும்பான்மை ஆதரவு போன்ற திரை அவர்களுக்குப் போதுமானது.

கூட்டமைப்போ, சிங்களமோ எந்த ஒரு தீர்வுக்கும் தாமாக வரமுடியாது என்பதே எனது எண்ணம். அப்படி ஒரு நிலையை ஆக்கி வைத்திருக்கிறார்கள். இந்திய அரசு ஒரு பொழுதில் நேரடித் தலையீடு செய்து ஒரு தீர்வைத் திணிக்க முயற்சிக்கும் என நினைக்கிறேன். இது இரு தரப்புக்கும் ஒரு குட்டு வைத்து தீர்ப்பெழுதுவது போன்றது.. அந்தக் காட்சி விரியாத மட்டும் தீர்வு சாத்தியமல்ல. இந்தியா திணித்தாலும் அந்தத் தீர்வும் நிலையாக இருக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை..

எனக்கு தோன்றியதை சும்மா எழுதினேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இசைக்கு ஒரு பசைப்புள்ளி போடுங்ககப்பா நம்மகிட்ட கையிருப்பு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான

தேவையான விவாதம்

தொடருங்கள்

யாராவது இசைக்கு ஒரு பசைப்புள்ளி போடுங்ககப்பா நம்மகிட்ட கையிருப்பு இல்ல

போட்டாச்சு

இப்ப  நானும் போடணும் என்ன  செய்யலாம் ராசா?

மறுவகையில், சிங்களம் 13க்கே அல்லாடுவதுபோல ஒரு காட்சியைப் பகிரங்கப்படுத்துகிறது. அதாவது பேரம் பேசலில் யாரும் இந்த மாகாணசபையைத் தாண்டிவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. ஜனநாயகம், பெரும்பான்மை ஆதரவு போன்ற திரை அவர்களுக்குப் போதுமானது.

கூட்டமைப்போ, சிங்களமோ எந்த ஒரு தீர்வுக்கும் தாமாக வரமுடியாது என்பதே எனது எண்ணம். அப்படி ஒரு நிலையை ஆக்கி வைத்திருக்கிறார்கள். இந்திய அரசு ஒரு பொழுதில் நேரடித் தலையீடு செய்து ஒரு தீர்வைத் திணிக்க முயற்சிக்கும் என நினைக்கிறேன். இது இரு தரப்புக்கும் ஒரு குட்டு வைத்து தீர்ப்பெழுதுவது போன்றது.. அந்தக் காட்சி விரியாத மட்டும் தீர்வு சாத்தியமல்ல. இந்தியா திணித்தாலும் அந்தத் தீர்வும் நிலையாக இருக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை..

எனக்கு தோன்றியதை சும்மா எழுதினேன்.. :D

என்னைப்பொறுத்தவரை

இதுவரை..........

இனி மேலும் ............

பந்து

கூட்டமைப்பு பக்கம் வரவே வராது.......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாலுமிக்காக மாலுமி விரும்பும் திசையில் வீசுவதில்லை. கடல் நீரோட்டமும் மாலுமி விரும்பும் திசையில் ஓடுவதில்லை. என்றாலும் ஒரு ராசதந்திரிபோல சிறந்த மாலுமி எப்போதும் தன் இலக்கை அடைந்துவிடுகிறான். அவன் தனது இலக்கை நோக்கி பணிக்க நேரடி சாதகமில்லாத காற்று நீரின் போக்குகளை பயன்படுதி சரியான கப்பல்சோடும் உத்திகள்மூலம் நேரில்லாத சுற்று  பாதைகளூடாக  தன் இலக்கை நோக்கி பணம் செய்கிறான்.  வலுவிழந்த தேசிய இனத்தின் தலைமையின் கடினமான பணியும் கூட இதுதான். இத்தகைய சூழலில் திசை மாறாதே நேர்பாதையில் இலக்கை நோக்கி செல் என்றால் அதை மாலுமி செவிமடுத்தால் கவிழ்ந்து கொட்ட நேரிடும்.

அரசியலில் கேழ்வி மாலுமி இலக்கை அடைய திசைகளை மாற்றி மாற்றி ஓடுகிறான? அல்லது இலக்கில்லாமல் திசைகளை மாற்றுகிறானா என்பதுதான்.

இன்று சர்வதேச சக்திகளின் முன்னம் 1. ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் 2. 13ம் சட்டத்திருத்தம்  என்கிற காற்று சக்திகளுக்கு முன்ம்  நம் படகுடன் நிற்க்கிறோம். எதிரியை இந்த இரு சக்திகளோடும் முரண்படும் நிலைக்கு தள்ளினால் மட்டுமே நமக்கு பாதை திறக்கும். நமக்கு விடிவுவரும்.

இலங்கை அரசியல் சூழலில் என்றும் நமது உடனடிக் கடமை எதிரியை சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்துவதாகும். அல்லது எதிரி நம்மைத் தனிமைப் படுத்திவிடுவான். 2006 ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது நாம் உணரத் தவறியதை இப்போது உணர்தேயாகவேண்டும். ஏனெனில் இன்று நம்மிடம் ஒரு பலமான ஆயுதப் படை இல்லை.  

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாலுமிக்காக மாலுமி விரும்பும் திசையில் வீசுவதில்லை. கடல் நீரோட்டமும் மாலுமி விரும்பும் திசையில் ஓடுவதில்லை. என்றாலும் ஒரு ராசதந்திரிபோல சிறந்த மாலுமியின் தனது இலக்கை நோக்கி பணிக்க நேரடி சாதகமில்லாத காற்று நீரின் போக்குகளை பயன்படுதி சரியான கப்பல்சோடும் உத்திகள்மூலம் நேரில்லாத சுற்று  பாதைகளூடாக  தன் இலக்கை நோக்கி பணம் செய்கிறான். இதுதான் வலுவிழந்த தேசிய இனத்தின் தலைமையின் கடினமான பணியும் கூட இதுதான். இத்தகைய சூழலில் திசை மாறாதே நேர்பாதையில் இலக்கை நோக்கி செல் என்றால் அதை மாலுமி செவிமடுத்தால் கவிழ்ந்து கொட்ட நேரிடும்.

அரசியலில் கேழ்வி மாலுமி இலக்கை அடைய திசைகளை மாற்றி மாற்றி ஓடுகிறான? அல்லது இலக்கில்லாமல் திசைகளை மாற்றுகிறானா என்பதுதான்.

இன்று சர்வதேச சக்திகளின் முன்னம் 1. ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் 2. 13ம் சட்டத்திருத்தம்  என்கிற காற்று சக்திகளுக்கு முன்ம்  நம் படகுடன் நிற்க்கிறோம். எதிரியை இந்த இரு சக்திகளோடும் முரண்படும் நிலைக்கு தள்ளினால் மட்டுமே நமக்கு பாதை திறக்கும். நமக்கு விடிவுவரும். இலங்கை அரசியல் சூழலில் என்றும் நமது உடனடிக் கடமை எதிரியை தனிமைப் படுத்துவதாகும். 2006 ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது நாம் உணரத் தவறியதை இப்போது உணர்தேயாகவேண்டும். ஏனெனில் இன்று நம்மிடம் ஒரு பலமான ஆயுதப் படை இல்லை.  

நன்றி  தோழர்

காத்திரமான வாதம்

தொடருங்கள்

என்னதான் நாம் மோதிக்கொண்டு பிரிந்து நின்றாலும் ஒரு புள்ளியில் எம்மை சந்திக்க வைக்கப்போவது சிங்களத்தின் கொடூரமே.

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாலுமிக்காக மாலுமி விரும்பும் திசையில் வீசுவதில்லை. கடல் நீரோட்டமும் மாலுமி விரும்பும் திசையில் ஓடுவதில்லை. என்றாலும் ஒரு ராசதந்திரிபோல சிறந்த மாலுமி எப்போதும் தன் இலக்கை அடைந்துவிடுகிறான். அவன் தனது இலக்கை நோக்கி பணிக்க நேரடி சாதகமில்லாத காற்று நீரின் போக்குகளை பயன்படுதி சரியான கப்பல்சோடும் உத்திகள்மூலம் நேரில்லாத சுற்று  பாதைகளூடாக  தன் இலக்கை நோக்கி பணம் செய்கிறான்.  வலுவிழந்த தேசிய இனத்தின் தலைமையின் கடினமான பணியும் கூட இதுதான். இத்தகைய சூழலில் திசை மாறாதே நேர்பாதையில் இலக்கை நோக்கி செல் என்றால் அதை மாலுமி செவிமடுத்தால் கவிழ்ந்து கொட்ட நேரிடும்.

அரசியலில் கேழ்வி மாலுமி இலக்கை அடைய திசைகளை மாற்றி மாற்றி ஓடுகிறான? அல்லது இலக்கில்லாமல் திசைகளை மாற்றுகிறானா என்பதுதான்.

இன்று சர்வதேச சக்திகளின் முன்னம் 1. ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் 2. 13ம் சட்டத்திருத்தம்  என்கிற காற்று சக்திகளுக்கு முன்ம்  நம் படகுடன் நிற்க்கிறோம். எதிரியை இந்த இரு சக்திகளோடும் முரண்படும் நிலைக்கு தள்ளினால் மட்டுமே நமக்கு பாதை திறக்கும். நமக்கு விடிவுவரும்.

இலங்கை அரசியல் சூழலில் என்றும் நமது உடனடிக் கடமை எதிரியை சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்துவதாகும். அல்லது எதிரி நம்மைத் தனிமைப் படுத்திவிடுவான். 2006 ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது நாம் உணரத் தவறியதை இப்போது உணர்தேயாகவேண்டும். ஏனெனில் இன்று நம்மிடம் ஒரு பலமான ஆயுதப் படை இல்லை.  

எதிர்க்காற்றிலும் பாய்மரக்கப்பலை முன்னோக்கிச் செலுத்தமுடியும் என்பதைக் கூறியிருக்கிறீர்கள்.. ஆனால் நம்மிடம் இப்போது உள்ளது கட்டுமரம் மட்டுமே.. :rolleyes:

2006 இல் தனிமைப்படுத்தாதது பற்றி எழுதியிருந்தீர்கள்.. ஆனால் அன்றைய சூழலில் தமிழர்தரப்பு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்தான் பேச்சுவார்த்தைக்குப் போயிருந்தது. இராணுவ மேலாண்மைதான் அந்தப் பேச்சுவார்த்தை அழைப்பையே பெற்றுத்தந்தது. அப்போது போய் எதிரியைத் தனிமைப்படுத்துவது என்பது நடைமுறை சாத்தியமா?

இன்று எதிரி ஓரளவு தனிமைப்பட்ட நிலையில் உள்ளான்.. ஆனால் கூடவே எமது பலமும் இல்லாத நிலை ஒன்று உள்ளது. குத்துச்சண்டையில் எதிராளி விழுந்து எழும்ப முயற்சிக்கிறார். ஆனால் அவரது எதிராளி என்று யாரும் மேடையில் இல்லாத நிலை.

எமக்குப் பலம் வரும்வரையில் நாம் நம்பும் இறுதித் தீர்வுக்கான உறுதியைத் தக்கவைப்பதில்தான் மீதம் உள்ளது. அது இல்லாத வரைக்கும் இறுதித்தீர்வு என்பது சாத்தியமே அல்ல.. இதுவும் தனிப்பட்ட அனுமானம்தான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து அவர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிந்தியாவின் அரச உத்தியோகஸ்தர்கள் கொழும்பு வரும் போது 13 வகையான உபசரிப்புகளில் ( மது... மாது.... கையூட்டு.....................) எந்த குறையும் இருக்க கூடாது நிபந்தனை விதித்தை நமக்கு ஏதோ நல்லது நடப்பதாக கள உறவுகள் தவறாக அர்த்தம் கற்பித்து 2 பக்கம் வரை இந்த திரியை நீட்டி முழக்குவது மனதுக்கு கஸ்டமாக உள்ளது

:( :( <_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

நன்றி மல்லை.. நான் முதலில் எழுதியது ரகுநாதனின் கருத்திற்கான பதில்.. ஆனால் கோட் செய்ய கடினமாக இருந்ததால் (அலைபேசி) பொதுவாக எழுதினேன்.. :D

தாயகத்தில் கூட்டமைப்பு 13 க்கு மேலும் கோரலாம்தான்.. ஆனால் ஆடுகளத்தில் இருப்பவர்கள் யாரென்றும் பார்க்கவேண்டும் அல்லவா?

இப்போதுள்ள சூழலில் 13 இற்கு மிகப்பெரிய பின்புலம் இந்திய அரசு. அதனாலேயே கூட்டமைப்பும் 13 உடன் முடித்துக்கொள்கிறது என நினைக்கிறேன். சமஷ்டி, இடைக்கால அரசு என்று போனால் இந்தியா அதை மறுக்கும். நடைமுறை சாத்தியமான கோரிக்கைக்கு வாருங்கள் என்றே சொல்வார்கள். இந்திய அரசு சொல்வதையே மேற்கும் கேடும் நிலையில் உள்ளது.

மறுவகையில், சிங்களம் 13க்கே அல்லாடுவதுபோல ஒரு காட்சியைப் பகிரங்கப்படுத்துகிறது. அதாவது பேரம் பேசலில் யாரும் இந்த மாகாணசபையைத் தாண்டிவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. ஜனநாயகம், பெரும்பான்மை ஆதரவு போன்ற திரை அவர்களுக்குப் போதுமானது.

கூட்டமைப்போ, சிங்களமோ எந்த ஒரு தீர்வுக்கும் தாமாக வரமுடியாது என்பதே எனது எண்ணம். அப்படி ஒரு நிலையை ஆக்கி வைத்திருக்கிறார்கள். இந்திய அரசு ஒரு பொழுதில் நேரடித் தலையீடு செய்து ஒரு தீர்வைத் திணிக்க முயற்சிக்கும் என நினைக்கிறேன். இது இரு தரப்புக்கும் ஒரு குட்டு வைத்து தீர்ப்பெழுதுவது போன்றது.. அந்தக் காட்சி விரியாத மட்டும் தீர்வு சாத்தியமல்ல. இந்தியா திணித்தாலும் அந்தத் தீர்வும் நிலையாக இருக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை..

எனக்கு தோன்றியதை சும்மா எழுதினேன்.. :D

இசை நான் 13ம் திருதத்திற்கு மாற்றீடுகள் பற்றித்தான் குறிப்பிட்டேன். நான் தீர்வை முன் வைக்க வரவிலை. அது தான் இன்றைய கூட்டமைபின் நிலை.

13ம் திருத்தம் புலிகள், விடுதலை கூட்டணி யாரும் இல்லாமல் எழுதப்பட்டது. அது எழுதியதின் நோக்கம் தமிழருக்கு தீர்வுக்கல்ல. மருந்து என்று பொலிடோலை குடிக்க கூடாது. வெள்ளியரின் ஆட்சியால் மீண்டு சிங்களவன் கையில் போய் இனி சிங்களவனை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு கிந்தியனிடம் அடிமையாக கூடாது. இதனால்த்தான் தலைவர் பிராபாகரன் பிரேமதாசாவுடன் இணைந்தவர். ரஜீவ் காந்தியுடன் இணைய மறுத்தவர். சிங்களவனிடம் கழட்டி கிந்தியனிடம் மாட்டுவது மருந்து என்று நினைத்து பொலிடோலை குடிப்பதாகும்.  இந்த நோக்கத்துடன் வந்த 13ம் திருத்தம் தொடக்கம் அல்ல. பயணம் ஆரம்பிப்பதாக நினைத்து அசையத்தொடங்கிய தோணியில் ஏறி கடலில் விழக்கூடாது. 13ம் திருத்தம் இன்று அதன் சாவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது கூட்டமைப்பு அந்த தேர்தலில் வென்றால் அவர்கள் முதல் அமைச்சராக இருக்க போவது திருத்ததின் பின் வரும் மாகாண சபைக்கே. இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கல்ல. இனி மேல் பாராளுமன்றத்தால் ஆக்கிவைக்கப்பட போவதற்கு.

13ம் திருத்தம், தான் கையில் அதிகாரம் எடுக்கும்வரை,  தமிழருக்கு இடைக்கால தீர்வாக கொடுத்து ஆயுத போராட்டத்தை மழுங்கடிய இந்தியா வகுத்த திட்டம். இது தமிழரை அடிமையாக பிட்டிக்க வந்த திட்டம்.  பலதவை இதில் நான் கூறிவிட்டேன். தனிய கல்வி, பொருளாதார அதிகாரங்களை பேசி எடுத்து ஒரு மாகாண சபை அமைத்தால் பரவாயில்லை. ஆனால் 13ம் திருத்தம் மோசமானது. உதாரணத்திற்கு காணி அதிகாரத்தை அதன் கையில் கொடுத்து ஆமிக்கு தேவையான, அல்லது சிங்கள குடியேற்றத்திற்கு தேவையான காணிகளை ஒதுக்க சொன்னால் மாகாணம் ஒதுக்கித்தான் தீரவேண்டும். கல்வியை தனி சிங்கள மயமாக்க முடியும்.  இந்த 13ம் திருத்த மாகாண சபைகளை வைத்துக்கொண்டு, தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில்,  கூட்டமைப்பை உடைத்து, அரசு மாகாணத்தை கைப்பற்ற முடியும். சம்பந்தர் வரைக்கும் தேவானந்தா மாதிரி செயல்ப்படாவிட்டால் மாகாண சட்டதிட்டங்களை அவமதித்ததாக பலநாள் சிறையில் இருக்க வேண்டி வரும்.  கருணாநிதி புலிகளை அழித்த காரணம் தான் செய்த களவுகளும், மத்தியஅரசு மாநிலஅரசின் முதல் அமைச்சர்கள் மீது போடக்கூடிய அழுத்தங்களும். மாகாண அரசை கலைப்பேன் என்றால் கிட்டத்தட்ட எல்லா முதல் அமைச்சர்களும் காட்டயம் மத்திய அரசின் வழிக்கு வருவார்களே அல்லாமல் கலைத்துவிட்டு தேர்தலில் வந்துபார் என்று சவால்விட மாட்டர்கள். இதனால் இன்று அரசை எதிர்க்கும் கூட்டமைப்பு அதன் பின்னர் அடிமையாகத்தான் இருக்கும்.

திருகோணமலையில் அமெரிக்க தூவராலயத்துடன் ஒப்பந்ததில் கையெழுத்து போட்டத்தற்கு, ஆளுனர் நகர சபை மேயரை துஷ்ணத்தால் பேசினவர். நஜீப் மயீத் அதை பற்றி ஒரு அறிக்கை விடவில்லை.  ஆளுனரிடம் தான் அதை கையாள வேண்டும் என்று கூறவிலை. ஆனால் அமெரிக்கா போட்ட அழுத்தத்தால் கிழமைகளுக்கு பின்னர் மாகாணசபை அந்த உடன்படிக்கையை அங்கீகரித்தது. ஆனால் இது போன்றவை கண்டியில் நடக்வில்லை.  மாகாணசபை அங்கீகரிகலாமாக இருந்தால் ஆளுனர் ஏன் அதில் மூக்கை நுளைத்தவர்?(உண்மையில் மாகாணசபை என்ற ஒரு முழுமயான சட்ட திட்டம் 13ல் வரயறுக்கப்படவில்லை).

 மகிந்தா பலமுறை சவால் விட்டவர் தமிழரை வைத்து தன்னால் தமிழரை அடிக்க முடியும் என்று. அதைத்தான் 13ம் திருத்த தேர்தல் நடந்தால் அதில் அவர் செய்வார்.  இன்று எதையாவது ஆளுனர் கட்டளை இட்டு செய்வித்தால் அது ஆளுனரின் மீது பழி. ஆனால் தேர்தலின் பின்னர் இடப்படும் கட்டளைகள் நிறை வேற்றப்படும் போது அது தமிழர்கள் தங்களுக்கு செய்வது. மக்கள் பிரதிநிதிகள் சிங்களம் மட்டும்தான்  தான் தங்கள் பாடசாலைகளில் பாட மொழியாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதாக இருக்கும். சம்பந்தரோ அல்லது முதல் அமைச்சரோ ஆளுநரைக் கேட்டு நடக்காவிட்டால் தூஷ்ணத்தால்தான் ஆளுநர் பேசுவார். (இப்போது யாழ் பாடசாலைகளுக்கு கூட்டமைப்பினர் போக கூடாது என்ற மாதிரி ஒருசட்டம் போட்டு நடத்துகிறார். ஆனால் தென் மாகாணங்களில் பிரதேச சபை உறிப்பினர்களே பாடசாலைகளில் அடாவடிகளில் இறங்கிகுகிறார்கள். )

அதைவிட இது இந்தியா தமிழரின் நோய்க்கு கொடுத்த பொலிடோல். இதில் இருக்கும் ஆளுனர், முதல் அமைச்சரை யாழ்பாண யோகேஸ்வரி பற்குணத்தின் கீழ்த்தான் வைத்திருப்பார். இதில் முதல் அமைச்சர் பெரிதாக எதும் புடுங்க முடியாது. இந்த "ஆளுநர் தலைமை" என்ற விளையாட்டு கிந்தியாவின் நரித்தனம்.  கிந்தியாவில் மானிலங்கள் மொழிவாரியானவை. அங்கு இனப்பிரச்சனை அடையாளம் காணப்பட்டு அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டவில்லை. இதனால் மாநில ஆளுனர் நியமிக்கப்படுகிறார். அவருக்கு மேலாக மத்திய அரசு மக்களால் தெரிவு செய்யபட்ட மாநில அரசை தள்ளிவிட முடியும். இது அல்ல அமெரிக்க கனேடிய மாநில அரசியல் அமைப்புக்கள். அதிலும் அமெரிக்க மாநிலங்கள்   தமக்கென்று ஒரு சிறிய தேசிய காவல் படையை கூட வைத்திருக்கும். இந்த "ஆளுனர்" சொருகள் இந்தியா, தான் இலங்கையை பிடித்தால் அதே முயற்சி தொடரவைக்க சிங்களத்துடன் செய்துகொண்ட்ட ஒப்பந்தம். எனவேதான் நாம் கல்வி பொருளாதார அதிகாரத்தை தானும் தனியக் கேட்டு வாங்கினால் தமிழர் என்ற அடையாளத்தை தக்க வைக்க முடியும், ஆனால் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால். நமது கையால் நம் தலையை வெட்டி சிங்களத்திடம் கொடுப்பத்தாகும்.

இது வரையில் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஒற்றை நாட்டுக்கு மேல் போகவில்லை. ஆனால் தாம் கேட்பதை பேச்சுவார்த்தை என்று மட்டும்தான் சொல்கிறார்கள். அவர்கள்  13ம் திருத்த நடை முறை என்று சொல்லவதில்லை. அது இந்தியா தனது நலனுக்காக சொருகிய ஆளுனர்தான் காரணம்.

கூட்டமைப்போ, அரசோ எதிலும் இணங்க முடியாது என்பது உண்மை. ஆனால் அது நம்மிடம் ஒரு தீர்வு ஏற்கனவே இருக்கு என்பதால் அல்ல.  அதாவது 13ம் திருத்தத்தால்அல்ல. அவர்களால் அதில் குறைந்தவற்றிலும் இணங்க முடியாது. ஏன் எனில் தீர்வு ஒன்றில் இணங்க முடியாது என்பதுதான் நிலைப்பாடு.  உதாரணமாக நீங்கள் சீனி வாங்க கடைக்கு போய்விட்டு, இருக்கும் காசில் அங்கு சினி இல்லை, புளிதான் இருக்கு என்று புளியை வாங்கிக்கொண்டு வீடு வர முடியாது. அது காசை விரையாமாக்கி வியாபாரியைத்தான் நலம் அடையச் செய்யும். கிந்தியா என்ற முதலாளியை விட்டுவிட்டு ஐ.நா பக்கம் போக வேண்டியதுதான் வழி.

உண்மையில் 13ம் திருத்தம் இருக்கும் பலமான பின் புலம் அல்ல. அது ஒரு மாயமான் என்றதை முள்ளி வாய்க்கால் மூலம் நிரூபித்திருக்கு. அதாவது 13ம் திருத்தம் இருக்க ஏன் போராடினார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.  அதுவும் ஒரு காரணம் புலிகள் தோற்றர்கள். 13 இல்லாதிருந்தால் புலிகள் போராடுவது உரிமைப் போராட்டமாக இருந்திருக்கும்.

Edited by மல்லையூரான்

காற்று மாலுமிக்காக மாலுமி விரும்பும் திசையில் வீசுவதில்லை. கடல் நீரோட்டமும் மாலுமி விரும்பும் திசையில் ஓடுவதில்லை. என்றாலும் ஒரு ராசதந்திரிபோல சிறந்த மாலுமி எப்போதும் தன் இலக்கை அடைந்துவிடுகிறான். அவன் தனது இலக்கை நோக்கி பணிக்க நேரடி சாதகமில்லாத காற்று நீரின் போக்குகளை பயன்படுதி சரியான கப்பல்சோடும் உத்திகள்மூலம் நேரில்லாத சுற்று  பாதைகளூடாக  தன் இலக்கை நோக்கி பணம் செய்கிறான்.  வலுவிழந்த தேசிய இனத்தின் தலைமையின் கடினமான பணியும் கூட இதுதான். இத்தகைய சூழலில் திசை மாறாதே நேர்பாதையில் இலக்கை நோக்கி செல் என்றால் அதை மாலுமி செவிமடுத்தால் கவிழ்ந்து கொட்ட நேரிடும்.

அரசியலில் கேழ்வி மாலுமி இலக்கை அடைய திசைகளை மாற்றி மாற்றி ஓடுகிறான? அல்லது இலக்கில்லாமல் திசைகளை மாற்றுகிறானா என்பதுதான்.

இன்று சர்வதேச சக்திகளின் முன்னம் 1. ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் 2. 13ம் சட்டத்திருத்தம்  என்கிற காற்று சக்திகளுக்கு முன்ம்  நம் படகுடன் நிற்க்கிறோம். எதிரியை இந்த இரு சக்திகளோடும் முரண்படும் நிலைக்கு தள்ளினால் மட்டுமே நமக்கு பாதை திறக்கும். நமக்கு விடிவுவரும்.

இலங்கை அரசியல் சூழலில் என்றும் நமது உடனடிக் கடமை எதிரியை சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்துவதாகும். அல்லது எதிரி நம்மைத் தனிமைப் படுத்திவிடுவான். 2006 ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது நாம் உணரத் தவறியதை இப்போது உணர்தேயாகவேண்டும். ஏனெனில் இன்று நம்மிடம் ஒரு பலமான ஆயுதப் படை இல்லை.  

காற்றடிக்கிற பக்கம் பாய் வலிக்கும்(இழுக்கும்).  சுங்கான் பிடிக்கிற பக்கம் படகு போகும்.  சந்தர்பம் ஒரு பாதி. தலைமை மறு பாதி. அங்கு தான் பயணம் போகும். 

தலைமைகள் மக்களை இணைக்க வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124785&p=910947

நான் எழுதிய தத்துவம் தான் ஆனால் அது அங்கே பொருத்தமான இடத்தில்.

தோற்றுப்போன 13ம் இலிருந்து மாற மறுப்பதுதான் இவர்கள் விடும் பிழை. காற்றுக்கு எதிராக வலிந்து சுங்கானை பிடித்து பாய் மரத்தை உடைக்கிறார்கள்.  அதை மறந்து நான் எழுதிய தத்துவத்தை பாவித்தது நகைப்பிற்கிடம். 26 வருடம் எதையும் செய்ய முடியாமல் போன 13 அழிக்கப்பட்டிருக்கொண்டிருக்கும் போது இந்தியா தூக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது. அதில் இந்தியாவுக்கு குடை பிடிப்பது தீர்வல்ல. நாம் போக வேண்டிய பாதை 13ம் திருத்தைதை காப்பதல்ல. எமக்கு ஒரு தீர்வு தேடியாகும். நோக்கம் இல்லா விட்டால் 13ம் திருத்தத்தை காக்க சுங்கான் பிடிப்பதாக முடியும்.  

மேலும் புதிய தலை முறை பேட்டியின் கீழ் சொன்ன காரணத்திற்கு இந்த காரணம் தொப்பிரட்டலே. ஒரு நேரம் ஒரு காரணத்தை கண்டு பிடித்து 13ம் திருத்தத்தை  நியாபடுத்துபவர்கள் தமக்கு 13ம் திருத்தம் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்றதைக் காட்டுகிறார்கள். தமது கருத்துக்களை முன்னால் தள்ள பொய் விவாதங்கள் நடத்துகிறார்கள்.

இந்தியா மட்டும்தான் ஒரே ஒரு நாடு ஐ.நா தீர்மானத்தை சிங்களத்திற்கு சாதகமாக திருப்ப முனைந்தது. மற்ற சில நாடுகள் எதிர்த்துமட்டும் வாக்களித்தார்கள்.  இதை மாணவர் போராட்ட நேரம் ஏன் இந்தியாவிடம் சுட்டிக்கட்ட தவறினார்கள்? ஏன் இந்தியாவிடம் ஐ.பிரேரணையை முன்னால் போக விடு என்று கேட்கத்தவறினார்கள்? ஏன் இந்தியாவில் இருந்துகொண்டு  சுப்பிரமணிய சுவாமி அமெரிக்கா போனதை எதிர்க்காமல் விட்டார்கள். வெறும் போலியாக இன்று ஐ.நா.க் கதை வருகிறது. இவர்கள்தான் கூட்டமைப்புக் கூட ஐ.நா போவதை எதிர்த்தவர்கள்.  அதன் பின்னர் சுரேஸ் கூடத்தான் இந்தியாவுக்கு எதிராக ஐ.நா போனார்.

இந்தியா ஒரு நாடுதான் எதிரியை தாங்கிப்பிடிக்கிறது. சீனா கூடத் தங்கிப் பிடிக்கவில்லை. எனவே எதிரியை தனிமைப் படுத்த புதிய உபாயங்கள் தேவை என்பதும் போலி.  எதிரி ஏற்கனே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டான். இனி நாம் இந்தியா என்ற பூட்டில் இருந்து எம்மை விடுவித்தோமாயின், நமக்கு சர்வதேசம் என்ற கோடு சென்று எதிரிமீது வழக்கை தாக்கல் செய்ய முடியும். இந்தியாவின் கைக்குள்ளும் ரோவின் கைக்குளும் இருந்து ஆடும் போது அது நடக்காது.

இலங்கையை இந்தியாவிடமிருந்து தனிமைப்படுத்த 13ம் திருத்தம் ஒரு பொருளாகாது. வடக்கு கிழக்கு துண்டித்த பின்னர் 13ம் திருத்தம் ஒரு பாம்பு கழட்டிவிட்ட செட்டை மட்டுமே. செட்டையைக் கண்டு பாம்பு என்று திகைப்பது பேதமை. மேலும், மத்திய அரசு மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது என்பதை மந்திரி சபை நீக்க  தீர்மானித்த போது இந்தியா ஏதும் செய்யவில்லை. ஈழத்து MGR  கூட அந்த மந்திரி சபை கூட்டத்தை பகிஸ்கரித்தார்.  நஜிப் மஜீத் திவி நெகும்பவாய் அங்கரிக்கும் போது, சட்டத்திற்கு முரணாக சந்திர சிறி அதில் கையெழுத்திட்ட போதும், அதற்காக சிராணியை பதவி நீக்கிய போது உலக நாடுகள் எல்லாம் அதை எதிர்த்த போதும்  இந்தியா அசைந்தும் கொடுக்க இல்லை. எனவே 13ம் திருத்ததை நிறைவேற்றக்கோரி இலங்கையையும், இந்தியாவையும் பிரித்துவிடலாம் என்பது மிகப்பெரிய பகிடி. மிக இலகுவாக இந்தியா ஏன் இப்போது 13ம் திருத்தம் பற்றி கதைக்கிறதென்பதின் அரசியலை இது வரையில் வெளிவந்த செய்திகளை வாசித்து புரிந்து கொள்ளாமையால்த்தான் இந்தியாவையும் இலனகையும் பிரிக்க 13ம் திருத்ததை உபயோகப்படுத்தாலாம் என்று  எழுதுவது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுக்கு,

தோல்வியில் இருந்து மீழமுனையும் ஒரு இனத்தின் அரசியல் விவாதங்கள் வெறும் தர்க்க விழையாட்டல்ல என்பதை அறிந்தவர் நீங்கள். 

நமது மண்ணும் மக்களும் பற்றிய தேடலிலும்  அக்கறையிலும் அறிவிலும் இருந்தும் தொடர்கிற விவாதங்களே நமது காலத்தின் தேவையாக உள்ளது. 

இசைக்கலைஞனுக்கும் புரட்ச்சிகர தமிழ் தேசியனுக்கும் என் வரவேற்ப்புக்கள்.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.