Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினக்குரல்வெளிநாடுகளிலிருந்து ஆதரவுக் குரல் கொடுப்போருக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் விடுக்கும் வேண்டுகோள் - தினக்குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cv_wickneswaran-150.jpg

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உடன்பாடில்லாத அரசியல் தீர்வொன்றை அவர்கள் மீது எவ்வாறு திணிக்க முடியாதோ அதேபோன்றே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவேண்டுமென்பதற்காக இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு ஆதரவுக்குரல் கொடுக்கின்ற சக்திகளும் தீர்வு யோசனை எதையும் திணிக்க முயற்சிக்கக் கூடாது என்று வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

  

இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரிகளில் ஒன்றான இந்துஸ்தான் ரைம்ஸுக்கு அண்மையில் பேட்டியொன்றை அளித்திருந்த நீதியரசர் இலங்கைத் தமிழ் மக்கள் தங்களுக்கென்று தீர்வொன்றை வகுத்துக்கொள்வதற்கு தமிழ்நாடு அனுமதிக்க வேண்டுமென்று தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துத் தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பாக தினக்குரல் சார்பில் அவருடன் தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு கூறினார்.

 

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசியல் பிரதிநிதிகளாகவிளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கியப்பட்ட இலங்கையொன்றுக்குள் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராயிருப்பதாகவே அறிவித்து வந்திருக்கிறது.

 

அந்த நிலைப்பாட்டையே நானும் இந்தியப் பத்திரிகையுடனான பேட்டியில் குறிப்பிட்டேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சக்திகளாக இருந்தாலேன்ன, புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் செயற்படுகின்ற அமைப்புகளாக இருந்தாலென்ன, இலங்கையில் தமிழ் மக்களினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட நம்பகத்தன்மையான அரசியல் பிரதிநிதிகள் தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழ்நிலைக்கு பொருத்தமானமுறையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு கடைப்பிடிக்கக்கூடியதாக இருக்கும் அணுகுமுறைக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தரவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

 

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவர்கள் இலங்கையில் சமத்துவமும் கௌரவமும் உடையவர்களாக வாழவேண்டுமென்பதற்காக தமிழகத்தில் இருந்து குரல்கொடுக்கிற, போராட்டங்களை நடத்துகிற அரசியல் தலைவர்களையோ, சக்திகளையோ மலினப்படுத்தும் நோக்கில் எனது கருத்துக்களை அர்த்தப்படுத்த முயற்சிப்பது பொருத்தமற்றது.

குரல் கொடுப்பவர்களினதும் போராடுகின்றவர்களினதும் உணர்வுகளை நான் பெரிதும் மதிக்கிறேன் என்றும் இந்துஸ்தான் ரைம்ஸுக்கு கூறியிருந்தேன். ஆனால், அவர்கள் இதை பிரசுரிக்கத் தவறிவிட்டனர்.

 

வடக்கில் ஒன்றரை இலட்சம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் தங்களுக்கான தீர்வை வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டுமென்று நான் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளருக்கு கூறினேன்.

 

அத்தகைய தீர்வு ஐக்கியப்பட்ட இலங்கையொன்றுக்குள்தானா என்று அவர் என்னிடம் கேட்டபோது, நான் அதற்கு "ஆம்' என்று பதிலளித்தேன். ஆனால், பிரசுரிக்கப்பட்ட பேட்டியில் அந்தப்பகுதிகள் பிரதிபலிக்கவில்லை.

 

நான் அந்தச் செய்தியாளருக்கு அளித்த பதில்களினால் குழப்பமடைந்தவர்களிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். வெளிநாட்டு மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு, உள்நாட்டில் இருந்து நாம் கூறுகின்றவற்றின் மீதும் செய்கின்றவற்றின் மீதும் ஏன் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் பிறந்த மண்ணுக்குத் திரும்பிவந்து ஏன் தீவிர அரசியலில் ஈடுபடக் கூடாது? வெளிநாட்டில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்து கொண்டு கூறுகின்றவற்றை இலங்கைக்குவந்து ஏன் கூறக்கூடாது? அவர்கள் வெளிக்காட்டுகிற உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

அத்தகையவர்கள் இலங்கைக்குத் திரும்பி வந்து தீவிர அரசியலில் ஈடுபட முன்வருவர்களாக இருந்தால், என்னைப் போன்றவர்கள் ஓய்வு காலத்தில் அரசியலுக்குவர வேண்டிய தேவை இருந்திருக்காது என்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

 

நன்றி - தினக்குரல்

 

http://www.seithy.com/breifNews.php?newsID=88530&category=TamilNews&language=tamil

Edited by nunavilan

  • Replies 51
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ஸ் போர்  ஒபாமா விற்க்கு ஒரு பகிரங்க மடல் - இலங்கையில் இருந்து Goshan Che என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டது. தமது குரலுக்கு இடம் வழங்குங்கள் எனக் கேட்கப்பட்டமைக்கு அமைவாக இதனை மீள் எழுத்துருவாக்கலுக்கு உட்படுத்துமாறு கோரி மீண்டும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டுகோளை சில நீக்கங்களுடன் பிரசுரிக்கிறோம். இதற்கு பதிலாகவோ, விமர்சனமாகவோ எழுதுபவர்கள் ஆரோக்கியமாக எழுதினால் மட்டுமே அவற்றை பிரசுரிப்போம். என்பதனை அறியத் தருகிறோம்.

ஆ.ர்

அண்மையில் நீங்கள் வெளிவிட்டிருந்த 'கொழும்பு விக்னேஸ்வரன்' என்ற அறிக்கைக்கான எனது பதில் இதோ.

முதற்கண் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்கும் வகையில் கருத்துக்களை வெளிவிடுவதை தவிருங்கள்.

விக்னேஸ்வரனின் மீதான உங்கள் விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாயிருக்க வேண்டும். அவர் மீது  சேறடிப்பதாக  இருந்தால் அது தமிழர்களின் எதிரிகளுக்கே  நன்மையாய்  அமையும்.

இலங்கையில் இருக்கும் யாரும் தனி நாடு பற்றி அல்லது போர்க்குற்றம் பற்றி பேசினால், என்ன ஆகும் என்பது உங்களுக்கு நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தமிழ் மக்களினது  போராட்டம்  இப்போது  இரண்டு தளங்களில் நகர்த்தப்படுவது  அவசியமாகிறது. ஒன்று இலங்கைக்குள்  மற்றது இலங்கைக்கு  வெளியே.

இலங்கைக்குள்ளான  போராட்டம்  தேர்தல் முறைகளின்  படி இலங்கை சட்டத்துக்கமைவாக  முன்னெடுக்கப்பட  வேண்டும்.  இதைத்தான் த தே கூ செய்கிறது.  சி வியும்  இதைத்  தான் செய்வார்.

போர்க்குற்ற  விசாரணை  அழுத்தங்கள்,  தமிழக மாணவர்  போராட்டங்கள் என்பன  அதே சமயத்தில் இலங்கைக்கு வெளியே புலத்தில்  மேற்கொள்ளப் படவேண்டும். தமிழர்களின்  இலக்காகிய  இணைந்த  வடக்கு-கிழக்கு சுய நிர்வாக  அலகை  அடையும்  வரை  த தே கூவும், இபுலம் பெயர் அமைப்புகளும்  ஒரு  கொடியில்  பூத்த இரு மலர்களாக,  இரட்டை குழல் துப்பாக்கிகளாக  செயல்பட வேண்டும்.  இதுதான்  உலகளாவிய  தமிழரின் ஆவல், விருப்பம்.  இதுதான்  இன்றைய  கள யதார்த்தம். 

உங்கள்  அறிக்கையில்  நீங்கள் விக்னேஸ்வரனை கள யதார்த்தம் புரியாதவர் ( அவுட் ஆப் டச்) என்று சொல்கிறீர்கள். 

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள்   தனி நாட்டை  பற்றி கனவில்  யோசிப்பதற்கு கூட அஞ்சுகிறார்கள்.. அவர்கள் தேவை  எல்லாம்  இப்பொது, வகை தொகையின்றி தொடரும் குடியேற்றத்தை எப்படி தடுப்பது, இராணுவமயமாக்கலை எப்படி தடுத்து நிறுத்தவது, போலீஸ் அதிகாரத்தை  எப்படி பெறுவது, காணி அதிகாரத்தை எப்படி தக்க வைப்பது,  தொழில்  வாய்ப்பிலும், கல்வியிலும், அபிவிருத்தியிலும் நியாயமான  பங்கை  எப்படி  பெறுவது, காணாமல் போன தமது உறவுகளை எப்படி மீட்பது, கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்காண தமது உறவுகளை எப்படி சகவாழ்வுக்கு கொண்டு வருவது, கணவர்களை இழந்து பெண் தலைமைத்துவத்தில் வாழும் குடும்பங்களின் அவலங்களை எப்படி போக்குவது, 30 வருட யுத்தத்தில் அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலையில் இருந்து எப்படி மீழுவது   என்பது  போன்ற சிந்தனைகளில் நொந்து நூலாகிப் போய் உள்ளனர்..  அவர்களும்  மனிதர்கள் தானே.  எவ்வளவு  நாட்களுக்குதான்  உலகமே  எதிர்த்து  நிற்க  ஒரு  ஒற்றை இலட்சியத்துக்காக  போராட  முடியும்?  குறைந்தபட்சம் அவர்களுக்கு  தங்கள் பிள்ளைகளும்  நன்றாக  வாழ வேண்டும்  எனும்  ஆர்வமாவது  இல்லாமல் போகாது தானே.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஒரு திடமான முதலமைச்சர் தேவை. மாகாண சபை முறைமையாலோ அல்லது முதலமைச்சராலோ இவற்றை எல்லாம் சாத்திக்க முடியாது என்பதனை இங்குள்ள தமிழர்கள் புரியாமல் அல்ல, அவர்கள் அரசியல் அறிவிலிகளும் அல்ல. ஆனால் இன்று இருக்கின்றவற்றையும் இழக்காமல் இருக்க இதனை ஒரு தற்காலிக ஆறுதலாகவாயினும் மாற்ற வேண்டும் என  ஏங்குகின்றனர்.  அதற்கு சீ.வீக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்க விளைகின்றனர். ஆயர்களும், மக்களும், சமூக ஆர்வலர்களும் அந்த தேர்வை ஆதரிக்கிறார்கள். இதில் ஆக்கபூர்வ விமர்சனம் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால்  விமர்சனம் என்ற பெயரில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கூடி முடிவு செய்த ஒருவரை, ஒரு கனவானை, மிகக் கீழ்தரமாக விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு  இல்லை. யாருக்கும்  இல்லை. உங்கள்  நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்,  தமிழர் ஒற்றுமையில் இப்படி மண்  அள்ளிப்போட உங்களுக்கு எப்படி மனம் வந்தது? யார்  அந்த  உரிமையை  உங்களுக்கு  தந்தது?

உங்கள்  அறிக்கையில்  நீங்கள்  விக்னேஸ்வரனை  கொழும்பான் என்கிறிரீகள்.  முதலாவது  ஒன்றை  புரிந்து கொள்ளுங்கள் . விக்கினேஸ்வரன் எங்கு  பிறந்தாரென்பதல்ல முக்கியம். முன்னர்  தமிழர்களுக்கு  தலைமை தாங்கியவர்கள்  அல்லது  உலகத்  தமிழினத்தின்  தலைவர்கள் என்று தமிழர்களால்  போற்றப்பட்டவர்வர்களை எங்கு  பிறந்தார்  என்ற அடிப்படையிலா  தமிழர்கள் தலைவர்களாக  ஏற்றார்கள்?  அவர்களில்  பலர்  எந்த முறையில்  கிழக்கு  உட்பட்ட  முழு  இலங்கத்  தமிழருக்கும் ஏன்  உலகத்  தமிழர்களுக்கும்  தலைவர்கள் ஆகினார்களோ அதே முறையில்தான் விக்கினேஸ்வரனும்  முதலமைச்சர் வேட்பாளர்  ஆகினார். தமிழர்கள் எப்போதோ  தூக்கி  எறிந்து விட்ட  'பிரதேசவாதத்தை' இநீங்கள்  ஏன்  இப்போது  தூக்கி பிடிக்கிறீகள்?  மலேசியாவில்  பிறந்து  வளர்ந்த  கொழும்பில் வாழ்ந்த  தந்தை  செல்வாவும்  உங்கள்  பார்வையில்  தமிழர் தலைவராக  வரத்  தகுதியற்றவரா?  பல்லயிரம்  உயிர்க்கொடை  கொடுத்து நாம்  வளர்த்தெடுத்த  தமிழர் பிரதேச  ஒற்றுமையை, இப்படி குறுகிய நோக்கில் குலைத்தால்,  உங்களுக்கும்  கருணாவுக்குக்  அல்லது பிள்ளையானுக்கும்  என்ன வித்தியாசம்  இருக்க முடியும்?

அடுத்து  மானிப்பாயை  பூர்வீகமாக  கொண்ட  விக்கினேஸ்வரன்  தனது பெற்றார்  வேலை நிமித்தம்  கொழும்பில் இருந்ததால் கொழும்பில் பிறந்தார், வளர்ந்தார். எப்படி உங்கள்  பிள்ளைகள்  இன்று தழி ழே  பேசத் தெரியாது யூஎஸ் சிலும் லண்டனிலும், ஏனைய  ஐரோப்பாவிலும்  இருந்து கொண்டு ஈழப்போராட்டத்திற்கு  ஆதரவு  நல்குவதோடு,  ஈழப் போராட்ட அமைப்புகளுக்கு  தலமை  தாங்குகிறார்கள்.  இலங்கையில்  அல்லாது  இரண்டு 3  தசாப்தங்களுக்கு  மேல் புலம்பெயர்ந்து  வாழ்த்த  பலர் தானே இன்று  புலத்திற்கு  வெளியில்  ஈழப் போராட்டத்தை  நடத்துவதற்கு தலைமை  தாங்குகிறார்கள்.  அவர்களை  அவுட்டொப் ரச் என்று ஏன் நீங்கள் சொல்வதில்லை?   அதற்ககாக அவர்கள் பூர்வீகத் தமிழர்  இல்லை என்றாகி விடுமா?  ஆக  உங்கள்  பிரதே சவாத கருத்து  எல்ல வகையிலும் ஒரு பொருந்தா, காலத்துக்கு ஒவ்வாத,  அவுட் ஆப் டச் கருத்து என்பது தெரிகிறது. 

அடுத்து  இந்திஸ்தான்  பத்திரிக்கை  பேட்டியில் சி வி  இராணுவத்தையும் நேவியையும்  'நமது படைகள்'  என்று அழைத்ததாக  நீங்கள்  சொல்கிறீர்கள். இது  முழுப்பொய்யல்லவா? அந்த  பேட்டியில்  தானே  எமது  மண்ணில் 150000 க்கும் அதிகமான  'ஆக்கிரமிப்பு படைகள்'  நிற்கிறன. அவர்கள் வெளியேறும் வரை , இயல்பு  நிலை திரும்பாது என்கிறார் சி வி. 

இந்த முழுப் பூசணிக்காயை நீங்கள் எந்தச் சோற்றிலும் மறைக்க முடியாதே? இந்தப் பொய் மூலம்,  உங்கள்  அமைப்பு  மீது  தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பகத்தன்மை மிகவும் கேள்விக்கு உள்ளாகிறது என்பதே உண்மை.

அடுத்து சி வி  தமிழ் நாட்டை  விமர்சித்து  விட்டார்  என்று  துள்ளிக் குதிக்கிறீர்கள்.  ஒன்றை  புரிந்து  கொள்ளுங்கள். தமிழக மக்களையோ, எமக்காக  தீக்குளித்த  முத்துகுமார்  போன்ற  தியாகிகளையோ, அல்லது நெடுமாறன்  போன்ற  தலைவர்களையோ  சி வி  ஒருபோதும் விமர்சிக்கவில்லை. அவர்  விமர்சித்தது  'காலை உணவு ஒத்திவைப்பு' போராட்டம் நடத்தியவர்களையும்  அவர் போன்ற அரசியல் வியாதிகளையுமே. இதில் என்ன தப்பிருக்கிறது?

உங்களுக்கு உண்மையிலே தமிழர்  நலனில்  அக்கறை  இருக்குமானால் இனிமேலும் இதுபோல ' சொந்த அழுக்கை நடுவீதியில் வைத்து கழுவும்' செயலில் ஈடுபடதீர்கள். த தே கூவும்,  சி வி யும்  எப்போதும்  விமர்சனங்களை வரவேற்பதாயே  சொல்கிறார்கள். அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை  கூறுங்கள். இல்லாமல்  தொடர்ந்தும்  இப்படி தமிழர் ஒற்றுமை  மீது  சினைப்பர் தாக்குதல் செய்வீர்களாயின், நீங்கள் விலை போய்விட்டீர்கள்  என்றே கருத வேண்டி இருக்கும்.

  Goshan Che

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94490/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

வௌிநாடுகளில்தான் சுதந்திரம் உள்ளது என்று விக்கி சொல்லிவிட்டார்.. இது மகிந்தவுக்கு கடுப்பைக் கிளப்பியிருக்கும்.. :D

Tamil for Obama ஒரு முயற்சியான இயக்கம். புஸ்கால அமெரிக்காவில் சில மறுதல்கள் ஏற்பட காரணமான அமைப்பு. யாழில் பலருக்கு புஸ்கால அமெரிக்காவையும் ஒபாமாகால அமெரிக்கவையும் தரம் பிரித்து காணுவது கடினம். ஆனால் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஒபாமா அரசாங்கத்துடன் இணைந்து செய்லாற்றகூடியவர் என்பதுதான் இங்கே Plus Point.  எனவே Tamils for Obama வுக்கு நீதியரசரை சரியாக அறிமுகம் செய்துவைப்பது மிக மிக அவசியம்.இதில் சவால்கள் விடுவது நோகங்களை பின்னடைய செய்யும்.  நீதியரசர் அமெரிக்கா போய் தமிழரின் கையறு நிலைமளை விளங்க வைக்க இந்த இயக்கம் ஆவன செய்துகொடுக்க முன் வரவேண்டும்.

 

எனவே புலம் பெயர் நாட்டு தமிழரின்கடமை நீதியரசரை தமது நாட்டு அரசாங்கங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே. 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்,
இன்னாள் நகைச்சுவையரசானிகியது.... பரிதாபம்.
***  சம்பந்தன், செய்த வேலை இது.

Edited by இணையவன்

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உடன்பாடில்லாத அரசியல் தீர்வொன்றை அவர்கள் மீது எவ்வாறு திணிக்க முடியாதோ அதேபோன்றே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவேண்டுமென்பதற்காக இலங்கைக்கு 

வடக்கில் ஒன்றரை இலட்சம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் தங்களுக்கான தீர்வை வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டுமென்று நான் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளருக்கு கூறினேன்

 

அடிமை பட்ட இனம் தங்களுக்கான இறைமையை கொண்டுருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கு...  ! 

 

 

 

அத்தகைய தீர்வு ஐக்கியப்பட்ட இலங்கையொன்றுக்குள்தானா என்று அவர் என்னிடம் கேட்டபோது, நான் அதற்கு "ஆம்' என்று பதிலளித்தேன். ஆனால், பிரசுரிக்கப்பட்ட பேட்டியில் அந்தப்பகுதிகள் பிரதிபலிக்கவில்லை.

 

இதை தலைவரே நீங்கள் தேர்தலின் பிரச்சாரத்தின் போது மக்களிடம் தெரிவித்து வாக்கு கேக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்கிண்றேன்... 

 

 

நான் அந்தச் செய்தியாளருக்கு அளித்த பதில்களினால் குழப்பமடைந்தவர்களிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். வெளிநாட்டு மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு, உள்நாட்டில் இருந்து நாம் கூறுகின்றவற்றின் மீதும் செய்கின்றவற்றின் மீதும் ஏன் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் பிறந்த மண்ணுக்குத் திரும்பிவந்து ஏன் தீவிர அரசியலில் ஈடுபடக் கூடாது? வெளிநாட்டில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்து கொண்டு கூறுகின்றவற்றை இலங்கைக்குவந்து ஏன் கூறக்கூடாது? அவர்கள் வெளிக்காட்டுகிற உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

 

ஒரு உண்மையை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு விட வில்லை...    கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நீங்கள் அந்த மக்களுக்காக எதையும் இன்னும் இளக்கவில்லை...  இளக்க தயாரானவராக கொள்கைகளை காட்டிக்கொள்ளவும் இல்லை...   

 

தமிழர்களுக்காக தங்கள் உயிர்களை இளந்த புலிகளை நீங்கள் இராஜதந்திரம் எனுக் காரணத்தை காட்டி விமர்ச்சிக்க  முடியுமாக இருக்கும் போது  உங்களை விமர்ச்சிக்க முடியாதா என்ன...?? 

 

அதற்கு உங்களின் தகுதி நிலைகள் வளர்த்து கொள்ள வேண்டுமே ஒளிய வாய்ச்சவடால்கள் அல்ல... 

 

 

அத்தகையவர்கள் இலங்கைக்குத் திரும்பி வந்து தீவிர அரசியலில் ஈடுபட முன்வருவர்களாக இருந்தால், என்னைப் போன்றவர்கள் ஓய்வு காலத்தில் அரசியலுக்குவர வேண்டிய தேவை இருந்திருக்காது என்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

ஒண்டரை லட்சம் இராணுவத்துக்கு கீழ் நிண்று தீவிர அரசியலா தலிவரே...?? நல்லது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நீதியரசர் அப்பாவிபோல் தெரிகிறார்.. கொழும்பில் சொத்துக்கள் இருந்தால் கையை முறுக்கி தலையாட்ட வைப்பார்கள் என நினைக்கிறேன்..!

வடக்கு கிழக்கிலை இருக்கும் தமிழருக்கு  கொழும்பிலை இருந்து ஊருக்கு போகாமலே அரசியல் செய்யலாமாம் ஆனால்  வெளிநாட்டிலை இருக்கிறவை கூடாதாம்... 

மன்னிக்க வேணும் சம்மந்தர் இப்படிபேசுற நீங்க அவரை கூட்டமைப்புக்கு தலைவர் ஆகியவறை பேச முடியுமா தமிழ் சிறிஅண்ணே

 

எஸ்கேப் <_<

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேணும் சம்மந்தர் இப்படிபேசுற நீங்க அவரை கூட்டமைப்புக்கு தலைவர் ஆகியவறை பேச முடியுமா தமிழ் சிறிஅண்ணே

 

எஸ்கேப் <_<

 

http://www.youtube.com/watch?v=1TZewYFQL-0

அகிம்சைப் போர் முடிவடைந்த போது ஆயுதப்போர் ஆரம்பிக்க வேண்டிய நியதி இருந்தது. இதில் பழைய அகிம்சைவாதிகளுக்கும் புதிய ஆயுதவாளிகளுக்கு சில முறுகல் நிலைமைகள் இருந்தது. ஆனாலும் ஆயுத போர் முன்னால் சென்றது.

 

ஆயுதங்கள் மௌனித்த பின்னர் ராஜதந்திர போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது இதில் பழைய புதிய செயல்பாட்டளர்களுக்கிடையில் முறுகல்கள் தென்படலாம். ஆனால் ராஜதந்திர போர் முன்னால் போக வேண்டும். போகும்.

 

போராட்டம் தனது வடிவத்தை எடுத்துவிட்டது. புதிய வடிவம் போராளிகளின் அனுசரனையுடன் தான் எடுக்கப்பட்டது.  இதில் முறுகல் தோன்றுவது போராளிகள் ஆயுதங்களை மௌனித்தமையை ஏற்றுகொள்ளாமையால். 

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் ஐயா சிங்களச் சிறீலங்காவின் முன்னாள் நீதியரசர் என்பதை நாங்கள் மறந்திட்டம். ஆனால் அவர் மறக்கல்ல..!

 

அடிப்படையில் அவர் எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்ற நிலையெடுத்த ஒரு அரசின் சட்டவாளர். அந்த வகையில் அவருக்கு என்ன போதிக்கப்பட்டதோ அதுதான் அவரில் வெளிப்படும்.

 

மேலும்.. தமிழ் மக்களின் போராட்டத் தார்ப்பரியம் என்பது.. நீண்ட அரசியல் வரலாற்றுப் பின்னணி கொண்டது. அவை எல்லாம் சிறீலங்காவின் நீதித்துறை சட்டப்புத்தகங்களில் இல்லை. ஆனால் தமிழர்களின் வரலாற்றில் மட்டுமே பதியப்பட்டுள்ளன.

 

அவை குறித்த சரியான அறிவு இவருக்கு இருக்குமோ என்ற சந்தேகம் இவரின் பேச்சுக்களை கவனிக்கின்ற போது எழுகிறது.

 

வந்ததும்.. தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவை ஒரு வாங்கு வாங்கினார்.

 

இப்போ புலம்பெயர் மக்களின் ஆதரவை ஒரு வாங்கு வாங்கிறார்.

 

ஈழத்தில் தமிழர்கள் போராட்ட வரலாற்றில் அது தந்தை செல்வா காலமாக இருக்கட்டும்.. பிரபாகரன் காலமாக இருக்கட்டும்.. முள்ளிவாய்க்கால் பின்னான காலமாக இருக்கட்டும்.. தமிழகம் பலமான செல்வாக்கைச் செலுத்தி உள்ளது. வருகிறது. இந்த அடிப்படை நியாயத்துக்கு அப்பால் நின்று சிங்கள அரசோடு அரசியல் செய்வது ஆபத்தானது தமிழ் மக்களைப் பொறுத்தவரை..!

 

புலம்பெயர் மக்கள் என்பவர்கள்.. 1983 க்குப் பின் ஈழப்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செய்து வருகின்றனர். இவர்களும் புறக்கணிக்கப்பட முடியாத சக்திகள்.

 

இன்று தாயகத்தில் மக்கள் உயிர் வாழினம் என்றால்.. அது பொருண்மிய ரீதியாக இருக்கட்டும்.. சர்வதேச கண்காணிப்புக்களின் கீழாக இருக்கட்டும்.. சிறீலங்கா அரசின் சலுகைகளின் கீழாக இருக்கட்டும்.. எல்லாவற்றிற்கும் தமிழகம்.. புலம்பெயர் மக்கள் தொடர்ந்து அளித்து வரும் பங்களிப்புக்கள் மற்றும் வெளியார் அழுத்தங்களே முக்கியமானவை.

 

ஈழத்தில் செயற்படும்.. தமிழ் அரசியல்வாதிகள் சுதந்திரத்திற்குப் பின்.. தமிழ் மக்களுக்கு ஈட்டிக்கொடுத்ததை விக்னேஸ்வரன் போன்றவர்கள் முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும்.

 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கருத்துச் சுதந்திரம்.. ஜனநாயகம் கேட்டுப் போராடவில்லை.. என்பதை ஐயா விக்னேஸ்வரன் முதலில் தெரிந்து கொள்வது அவசியம். தமிழ் மக்கள் தாங்கள் மேற்குலக காலணித்துவத்தின் போதும் பின்னும் சிங்களத்திடம் இழந்த உரிமைகளையே கேட்டுப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள்.. சிங்கள படைகளின் பிரச்சன்னங்கள் மத்தியில் தான் நிகழ்ந்தன..!

 

ஆனால் இன்று.. அது சர்வதேச அளவில் நிகழ்கிறது. இதற்கான மாற்றத்தை உண்டு பண்ணியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்..! இதன் பின்னால் பல அளப்பரிய தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

மேலும்.. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டு..  வடக்குத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில்.. அவர்கள் தங்கள் விசனத்தை வெளியிட்டுள்ள நிலையில்.. அவற்றில் எல்லாம் ஒரு கண்ணோட்டத்தைச் செலுத்தாது.. சிறீலங்கா அரசால் பழிவாங்கல் இலக்கு வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் மக்களை நோக்கி களத்துக்கு வந்து அரசியல் செய் என்று சொல்வது என்னவோ சிறீலங்கா ஜனநாயக அரசியலுக்கு உகந்த தளம் என்று பறைசாற்றுவது போலுள்ளது.

 

விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் பதவிக்கு முன் மொழியப்பட்ட பின் கூறிய விடயங்கள்.. சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் பிரச்சனையை முதன்மைப்படுத்தவில்லை. மாறாக சிறீலங்கா சோசலிச ஜனநாயக் குடியரசின் கொடூரங்களை மறைக்கவே பயன்படுகிறது.

 

+தமிழ் மக்கள் தங்களுக்கு உரிமை கிடைப்பெற முடியாது என்ற ஐக்கிய சிறீலங்காவுக்குள் தீர்வை தேடுகிறார் மிஸ்டர் விக்னேஸ்வரன்.

 

+சிங்களவர்கள் சொல்லுமாப் போல்.. தமிழர்கள் விவகாரம் சிறிய உள்நாட்டுப் பிரச்சனை என்று.. தமிழக ஆதரவை புறக்கணிக்கிறார்.

 

+ஏதோ.. இராணுவ இருப்பு தான் தமிழ் மக்களின் பிரச்சனை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிறார்.

 

+மாகாண சபைகளுக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்..!

 

இன்று வரை சிறீலங்காவின் முன்னாள் நீதியரசர் சிறீலங்கா அரசு மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கருத்துச் சொல்லவில்லை.

 

சிறீலங்கா அரசுகள் தமிழர்களை காலம் காலமாக தீர்வு என்று ஏமாற்றி வருவதைச் சொல்லவில்லை.

 

தமிழ் மக்கள் 1977 இலேயே ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு சாத்தியமில்லை என்று ஜனநாயக வழியில் சொல்லிவிட்டத்தை திட்டமிட்டு மறைக்கிறார்.

 

முள்ளிவாய்க்கால் பேரவலம் குறித்து மக்களின் பாதிப்புக்கள் குறித்து எந்தக் கருசணையையும் இதுவரை காட்டியதில்லை.

 

இராணுவ ஆக்கிரமிப்பு வடக்குக் கிழக்கு தமிழர் பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நிகழ்த்திய கொடூரங்கள் பற்றி உலகிற்கு சொல்லுவதாகத் தெரியவில்லை..!

 

களத்தில் உள்ள இளையோருக்கு வழிகாட்டியாக ஆலோசகரகாக இருக்க வாய்ப்பிருந்தும் அதை இவ்வளவு காலமும் செய்ய முன்வரவில்லை. மாறாக சம்பந்தனின் கோரிக்கையின் பேரில்.. முதலமைச்சர் வேட்பாளரான பின்னர் மட்டுமே அதுவும் வெளிநாட்டு மக்களும் தமிழக மக்களும்.. சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பையும்.. போர்க்குற்ற விசாரணைகளையும் நோக்கிய கோரிக்கைகளை மும்மரமாக முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களைப் புறக்கணித்து உள்ளூர் இளைஞர்கள் மீது போலிக் கருசணையைக் காட்டுகிறார் விக்னேஸ்வரன். இது சர்வதேசத்தை குழப்பி விடும் ஒரு நடவடிக்கை போல் உள்ளது.

 

இவை எல்லாம்.. இவர்.. கடந்த சில வாரங்களில் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து வந்துள்ள விடயங்கள் ஆகும்.

 

அந்த வகையில்.. ஐயா விக்னேஸ்வரன்.. நீங்கள் ஓய்வு எடுக்க விரும்பின் அதை தாராளமாகச் செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவோ தயவோ இல்லாமல்.. எத்தனையோ இடர்களை எமது மக்கள் கடந்து வந்துவிட்டார்கள். அந்த வேளைகளில் எல்லாம் மக்களோடு பக்கபலமாக நின்றவர்கள் இன்றும் மக்களோடு உள்ளனர். அவர்கள் மக்களுக்கு அடுத்து என்ன செய்யனுன்னு தீர்மானிக்க இடம்விட்டீர்கள் என்றால் போதும். அதில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் அடங்குகின்றனர்.

 

இன்றேல்.. முதலில் தமிழ் மக்களின் மனங்களைப் படித்துவிட்டு.. பின்னர் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்ல விளைவதே சிறந்தது. தமிழ் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது சிறீலங்காவின் நீதிமன்றங்களிலோ.. சட்டப்புத்தகங்களிலோ.. பதியப்பட்டிருக்கவில்லை. அது மக்களின் இதயங்களில் உள்ளது. மக்களை நெருங்காமல்.. அதனைப் படிக்க முடியாது. இந்த அடிப்படையை ஏற்றுக் கொண்டு.. முதலில் கொழும்பை விட்டு மக்களை நோக்கி வாருங்கள். மக்களோடு பேசுங்கள். மக்கள் பிரதிநிதிகளைச் சந்தியுங்கள். ஆலோசியுங்கள். அதுவே உங்களின் தகுதிக்கும் விரும்பும் பதவிக்கும் ஆரோக்கியமானது.! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து வந்து அரசியல் செய்தவர்களுக்கு நடந்த கதி என்ன என்று சின்னப்புள்ள தனமா விக்கி பேசக்கூடாது....

வெளிநாட்டில் இருந்து வந்து அரசியல் செய்தவர்களுக்கு நடந்த கதி என்ன என்று சின்னப்புள்ள தனமா விக்கி பேசக்கூடாது....

வெளிநாடுகளில் இருந்து வந்து அரசியல் செய்தால் விக்கி சம்மந்தன் கும்பல் பூரண பாதுகாப்புகளை ஏற்பாடு செய்து தருமா?

வெளிநாட்டில் இருந்து வந்து அரசியல் செய்தவர்களுக்கு நடந்த கதி என்ன என்று சின்னப்புள்ள தனமா விக்கி பேசக்கூடாது....

வெளிநாட்டில் இருந்து வந்து அரசியல் செய்தவர்களுக்கு நடந்த கதி என்ன என்று சின்னப்புள்ள தனமா விக்கி பேசக்கூடாது....

வெளிநாடுகளில் இருந்து வந்து அரசியல் செய்தால் விக்கி சம்மந்தன் கும்பல் பூரண பாதுகாப்புகளை ஏற்பாடு செய்து தருமா?

 சம்மந்தன் கும்பல் 

கும்பல் ........தவறு பாஸ் 

 
கம்மல் ........சரியானது பாஸ்  :D
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து வந்து அரசியல் செய்தவர்களுக்கு நடந்த கதி என்ன என்று சின்னப்புள்ள தனமா விக்கி பேசக்கூடாது....

வெளிநாட்டில் இருந்து வந்து அரசியல் செய்தவர்களுக்கு நடந்த கதி என்ன என்று சின்னப்புள்ள தனமா விக்கி பேசக்கூடாது....

வெளிநாடுகளில் இருந்து வந்து அரசியல் செய்தால் விக்கி சம்மந்தன் கும்பல் பூரண பாதுகாப்புகளை ஏற்பாடு செய்து தருமா?

வெளிநாட்டில் இருந்து வந்து அரசியல் செய்தவர்களுக்கு நடந்த கதி என்ன என்று சின்னப்புள்ள தனமா விக்கி பேசக்கூடாது....

வெளிநாட்டில் இருந்து வந்து அரசியல் செய்தவர்களுக்கு நடந்த கதி என்ன என்று சின்னப்புள்ள தனமா விக்கி பேசக்கூடாது....

வெளிநாடுகளில் இருந்து வந்து அரசியல் செய்தால் விக்கி சம்மந்தன் கும்பல் பூரண பாதுகாப்புகளை ஏற்பாடு செய்து தருமா?

இதை எல்லாம் நீங்கள் செய்து தந்தால் முதல் விமானம் அவுசில் இருந்து வரும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேணும் சம்மந்தர் இப்படிபேசுற நீங்க அவரை கூட்டமைப்புக்கு தலைவர் ஆகியவறை பேச முடியுமா தமிழ் சிறிஅண்ணே

 

எஸ்கேப் <_<

 

சம்பந்தன் கூட்டமைப்புக்கு தலைவரான போது.. தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக் கொண்டதால்.. அது நிகழ்ந்தது. ஆனால் இன்று சம்பந்தனின் முதன்மை வேட்பாளர் புலிகளை வன்முறையாளர்கள்.. அடக்குமுறையாளர்கள் என்கிறார். புலிகள் தோன்றக் காரணமான.. சிங்கள அரசை விமர்சிக்காமலே..!

 

புலிகள் ஏக பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். காரணம் அவர்கள் இராணுவச் சம வலுவில் நின்றார்கள். தமிழீழ நிழல் அரசின் அதிகார சக்திகளாக இருந்தார்கள். தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் மக்களோடு நேரடித் தொடர்பில் இருந்தார்கள். பேச்சு மேடைகளில் ஒரு அரசுக்கு நிகராக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய இராணுவ... அரசியல் மக்கள் பலம் புலிகளிடம் இருந்தது. மேலும்.. தலைவர்  மற்றும் போராளிகள் கொழும்பில் நின்று கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் செய்யவில்லை..! மக்களோடு கூட நின்று செய்தார்கள்..!

 

இந்தக் கேள்வி சிறியண்ணாவை நோக்கிக் கேட்கப்பட்டிருந்தாலும்.. இதற்கு விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை அங்கீகரித்து நின்ற மக்கள் எல்லோரும் பதில் அளிக்க முடியும் என்று நினைக்கிறேன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் என்றும்.... சந்தேகத்துகுரியவர்.
இவ்வேளையில்... கதிரைக்குப் பாரமாக, இருக்காமல்... பதவியை விட்டு விலகுவது அவருக்கு, மரியாதையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் இப்ப அதுக்கு என்ன :D

இதை எல்லாம் நீங்கள் செய்து தந்தால் முதல் விமானம் அவுசில் இருந்து வரும் :D

இதை எல்லாம் நீங்கள் செய்து தந்தால் முதல் விமானம் அவுசில் இருந்து வரும் :D

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் கூட்டமைப்புக்கு தலைவரான போது.. தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக் கொண்டதால்.. அது நிகழ்ந்தது. ஆனால் இன்று சம்பந்தனின் முதன்மை வேட்பாளர் புலிகளை வன்முறையாளர்கள்.. அடக்குமுறையாளர்கள் என்கிறார். புலிகள் தோன்றக் காரணமான.. சிங்கள அரசை விமர்சிக்காமலே..!

புலிகள் ஏக பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். காரணம் அவர்கள் இராணுவச் சம வலுவில் நின்றார்கள். தமிழீழ நிழல் அரசின் அதிகார சக்திகளாக இருந்தார்கள். தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் மக்களோடு நேரடித் தொடர்பில் இருந்தார்கள். பேச்சு மேடைகளில் ஒரு அரசுக்கு நிகராக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய இராணுவ... அரசியல் மக்கள் பலம் புலிகளிடம் இருந்தது. மேலும்.. தலைவர் மற்றும் போராளிகள் கொழும்பில் நின்று கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் செய்யவில்லை..! மக்களோடு கூட நின்று செய்தார்கள்..!

இந்தக் கேள்வி சிறியண்ணாவை நோக்கிக் கேட்கப்பட்டிருந்தாலும்.. இதற்கு விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை அங்கீகரித்து நின்ற மக்கள் எல்லோரும் பதில் அளிக்க முடியும் என்று நினைக்கிறேன். :):icon_idea:

விக்கியால் முடிந்தால் நேரடியாக வடக்கு மாவட்டங்களுக்கு சென்று மக்கள் முன்பு புலிகளை நேரடியாக விமர்சித்து வாக்கு வாங்கி காட்டட்டும் பார்க்கலாம்.....

ஆயுதப் போராட்ட நேரம் அரசின் சட்டங்கள் செல்லாதுபரசை கணக்கில் எடுக்க வேண்டிய தேவை இல்லை. மற்ற எல்லாப்போராட்ட நேரங்களிலும் அவை செல்லுபடியாகும். எனவே இன்றைய போராட வடிவம், அரசின் சட்டங்களை விளங்கிக்கொண்டுதான் நடத்தப்படவேண்டும். 

 

ராஜதந்திர போர் வெளிநாடுகளை இலங்கையில் தலையிட வைக்கும் வழி முறை. இதில் அரச சட்டங்களுடன், சர்வதேச சட்டங்களையும், வெளிநாடுகளின் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.  

 

தாயக மக்களின் ராஜாதந்திர போரானது வடக்கு தேர்தல், ராணுவ வெளியேற்றம்,  காணிப் பறிப்பு நிறுத்தல்,  13ம் திருத்தத்தை பாதுகாத்தல். ............ எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும், அவர்கள் ஏற்கனவே இவற்றில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

 

புலம் பெயர் மக்கள் நடத்தும் ராஜதந்திர போர் இன்னமும் கணிசமான வெற்றி எதையும் தரவில்லை. இவற்றில் கூட்டமைப்பு பெரிய பாகம் எதையும் வகிக்க வரவில்லை. காரணம் இவற்றை முன்னெடுப்பது தேச துரோக குற்றமாக இலங்கை அரசு வர்ணிக்கலாம் என்பதே.

 

150,000 மக்கள் இறந்த பின்னர் இறப்புத்தொகையை இன்னமும் புலம் பெயர் மக்கள் ஐ.நாவை ஏற்றுக்கொள்ள செய்ய முடியவில்லை. ஐ.நாவின் உள்ளக விசாரணையின் பின்னரும் பழைய  அதிகாரிகள் முழு அதிகாரத்துடன் இன்னமும் ஐ.நா.வில் இருக்கிறார்கள். சவேந்திர சில்வாவைக்கூட வெளியேற்றுவது பூர்த்தியாகவில்லை. ஐ.நா ஊடாக பிரேரணைகளை முழு வடிவில் செலுத்த முடியவில்லை. பொதுநலவாய மகாநாட்டை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனாலும் புலம் பெயர் போராட்டங்கள் சில மறை முக வெற்றியை தந்தபடியால்தான், ஐ.விசாரணை, ஐ.நா பிரேரணை என்று வந்தது. வெளிப்படையாக தாயக மக்களிடம் தொடரும் படி கையளிக்கத்தக்க வடிவத்துக்கு வரவில்லை.
 
தமிழ் நாட்டு மாணவர், தமிழ் நாட்டு அரசு என்பவை பொது வாக்கெடுப்பை கேட்கிறார்கள். அது வெற்றி அளித்தால் அதை நேராக தயாக மக்களிடம் தொடரும்படி கையளிக்கலாம். புலம் பெயர் மக்கள் ஏதாவது வெற்றியை ஈட்டி அதை தாயக மக்கள்  முன்னெடுக்க கேட்டால் வேறு. ஆனால் தாங்கள் அவர்களின் போராடத்திற்குள் உள்ளட முயல்வதை, வாய் சவ்வாடல்களை தாயக அரசியல் வாதிகளுடன் பரிமாறுவதை குறைக்க வேண்டும்.
 
உதாரணத்திற்கு சம்பந்தரின் பாராளுமன்ற பேச்சை பல தமிழ் ஊடகங்கள் தங்கள் வகையில் வர்ணித்தன.  சட்டம் ஒரு பாகமாக அமைந்த வெளிநாட்டு அரியல் துறையை படித்துவிட்டு ராஜதந்திரி பொறுப்பை ஏற்ற எந்த ராஜாதந்திரியும் தமிழ் பேப்பர்களின் விளக்கங்களை ஏறேடுத்தும் பார்த்திருக்க மாட்டர்கள். அதன் பின்னர் சம்பந்தரின் பேச்சுக்கு இன்னமும் ஏன்தான் தமிழ் பேப்பர் விளக்கத்தை மட்டும் நாம் கொடுப்பான்? வெளிநாட்டு ராஜதந்திரிகள் சட்டத்தை பெரிதாக எடுக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. சிராணியின் பதவி நீக்கம் நேரம் சுமந்திரன் சில சட்ட விளக்கங்கள் கொடுத்து கக்கீம் அதில் இழைத்த தவறுகளுக்கு பதவி விலக வேண்டும் என்று பாரளுமன்றத்தில் வைத்து கூறினார். அதன் பின்னர், கக்கீம் மிசேல் சிசனை சந்தித்த முதல் தடவையில், அவ கக்கீமிடம் சுமந்திரனின் பேச்சுக்கு என்ன விடை என்பதை கேட்டா.  நீதியரசர் சட்ட புள்ளிகளிய எடுத்துக்காட்டும் போது பலர் அதை கேட்க போகிறார்கள் என்பது பல இடங்களில் அசுமாத்தம் காட்டியிருக்கிறது. அதன் பின்னர் அவர் அரசியல் சரியாக  பேசவில்லை என்று ஏன்தான் குறைப்படுவான்?
 
நாம் நீதியரசரிடம் கேட்பது இலங்கை பிரச்சனையை எமக்கு எடுத்து கூறும்படியா அல்லது வெளிநாட்டவருக்கு எடுத்து கூறும்படியா?  

Edited by மல்லையூரான்

ஹிந்திய வெறியர்களின் ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஒப் இந்தியா, ஹிந்து போன்றன  தமிழின விரோத செய்திகளை பரப்பிவரும் பத்திரிகைகள்.

இதிலொன்று அரசியல் அனுபவம் இல்லாத விக்கினேஸ்வரனை பிரச்சினையில் மாட்டிவிட்டன.

தனது நேர்காணலை முழுமையாக போடாத ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஐ உடன் கண்டிக்க விக்கினேஸ்வரன் தவறியமை அவரது தவறு, மறுப்பறிக்கை வெளியிட ஹிந்துஸ்தான் டைம்ஸ் மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்க முயலலாம்.

இதை விக்கினேஸ்வரன் செய்யாததால் தான் புலம் பெயர் சமூகம் கண்டிக்க தொடங்கியுள்ளன. இது மிக அவசியமானது.

ஹிந்திய வெறியர்களின் அடிவருடியாக இருக்கும் கம்பன்கழக ஜெயராஜ் கும்பலின் பிடியில் இருந்து கொண்டு தமிழக மக்களின் ஈழ ஆதரவுப் போராட்டத்தையும், புலம்பெயர்  மக்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதை விக்கினேஸ்வரன் முழுமையாக கைவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஹிந்திய வெறியர்களின் அடிவருடியாக இருக்கும் கம்பன்கழக ஜெயராஜ் கும்பலின் பிடியில் இருந்து கொண்டு தமிழக மக்களின் ஈழ ஆதரவுப் போராட்டத்தையும், புலம்பெயர்  மக்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதை விக்கினேஸ்வரன் முழுமையாக கைவிட வேண்டும்.

 

கம்பன் கழக ஜெயராஜும் அரசியலில்... குதித்துள்ளாரா?

"அடியடா.... சக்கை, அம்மன் கோயில் புக்கை" என்ற, மாதிரி நம்ம அரசியல் வந்திட்டுது. <_<

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் கழக ஜெயராஜும் அரசியலில்... குதித்துள்ளாரா?

"அடியடா.... சக்கை, அம்மன் கோயில் புக்கை" என்ற, மாதிரி நம்ம அரசியல் வந்திட்டுது. <_<

 

வெள்ளவத்தை ரொக்சி தியட்டருக்கு பக்கத்தில் அம்மன் கோயில் கட்டுவதாக கேள்விபட்டேன் அரசியல் செய்வதைப்பற்றி அறியல்ல

 

cv_wickneswaran-150.jpg

 

நான் அந்தச் செய்தியாளருக்கு அளித்த பதில்களினால் குழப்பமடைந்தவர்களிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். வெளிநாட்டு மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு, உள்நாட்டில் இருந்து நாம் கூறுகின்றவற்றின் மீதும் செய்கின்றவற்றின் மீதும் ஏன் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் பிறந்த மண்ணுக்குத் திரும்பிவந்து ஏன் தீவிர அரசியலில் ஈடுபடக் கூடாது? வெளிநாட்டில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்து கொண்டு கூறுகின்றவற்றை இலங்கைக்குவந்து ஏன் கூறக்கூடாது? அவர்கள் வெளிக்காட்டுகிற உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

அத்தகையவர்கள் இலங்கைக்குத் திரும்பி வந்து தீவிர அரசியலில் ஈடுபட முன்வருவர்களாக இருந்தால், என்னைப் போன்றவர்கள் ஓய்வு காலத்தில் அரசியலுக்குவர வேண்டிய தேவை இருந்திருக்காது என்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

 

நன்றி - தினக்குரல்

 

http://www.seithy.com/breifNews.php?newsID=88530&category=TamilNews&language=tamil

வெளிநாடுகளில் இருந்து சென்று அங்கே அரசியல் செய்ய அழைக்கும் நீதியரசரின் கருத்து அபத்தமானது, தாயகத்தில் வாழ்பவனே அரசியலை தீர்மானிக்கவும் தலமைதாங்கவும் உரித்தானவன். வெளிநாட்டவர்கள் அதற்கு ஆதரவு கொடுக்கலாம் இல்லை கொடுக்காமல் விடலாம் தவிர தாயகத்து மக்களின் அரசியலில் குறுக்கீடு செய்வதற்கு ஒரு துளி அதிகாரமும் தாயகத்தை துறந்தவர்களுக்கு இல்லை என்பதே அடிப்படை உண்மை.

புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்து மக்கள் அரசியல் உட்பட அனைத்துக்கும் முதலாளி கண்காணி தாங்களே என்ற கனவில் இன்னும் இருக்கின்றார்கள். இதில் ஒரு துளி கூட எக்காலத்திலும் பலிக்கப்போவதில்லை. இதே மனப்பான்மையில் அணுகினால் சிங்களவர் அல்ல தாயகத்தில் வாழும் தமிழ்மக்களே சொல்வர்கள் "எங்கட அரசியல எப்படி செய்வதென்று எங்களுக்கு தெரியும் நீங்கள் பொத்திக்கொண்டு இருங்கள் என்று" இந்த நிலை ஆரம்பித்துவிட்டது. இது வரவேற்கப்படவேண்டியதும் ஆரோக்கியமானதும் ஆகும்.

இங்க இருந்து புலிக்கொடியை தூக்கிக்கொண்டு அங்க இருக்கின்ற மக்களுக்கு தாங்கள்தான் பாஸ் என்ற பழைய மிதப்பில் இனியும் இருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்க இருந்து புலிக்கொடியை தூக்கிக்கொண்டு அங்க இருக்கின்ற மக்களுக்கு தாங்கள்தான் பாஸ் என்ற பழைய மிதப்பில் இனியும் இருக்கமுடியாது.

 

கலம் மக்ரே,மற்றும்சிங்கள ஊடகவியளாலர்கள் அந்த மக்களுக்கு குரல் கொடுக்கலாமென்றால் நாங்களும் குரல் கொடுக்கலாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.