Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

               Image associée

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

8-BC98-D97-0691-45-A1-A7-DD-6210-ECF0-C8

நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால்..?

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • 3 weeks later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே மொழிகென்று கடவுள் வைத்தவன் தமிழன்...

Bild

  • Like 1
Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎1‎/‎2019 at 9:52 PM, nunavilan said:

 

76778261_2569398893176876_92177209722897

இவர்கள்  யார் நுணா ?

 

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

இவர்கள்  யார் நுணா ?

 

பெண் மிக பிரபலமான தொலைக்காட்சி அறிவிப்பாளர்.அண்மையில் சீமானுக்கு எதிராக கருத்து தெரிவித்து விமர்சிக்கப்பட்டவர். ஆண் பேரறிவாளன் அண்மையில் சிறையில் இருந்து சில கிழமைகளுக்கு தனது தந்தையாரை  பார்க்க அனுமதிக்கப்பட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

பெண் மிக பிரபலமான தொலைக்காட்சி அறிவிப்பாளர்.அண்மையில் சீமானுக்கு எதிராக கருத்து தெரிவித்து விமர்சிக்கப்பட்டவர். ஆண் பேரறிவாளன் அண்மையில் சிறையில் இருந்து சில கிழமைகளுக்கு தனது தந்தையாரை  பார்க்க அனுமதிக்கப்பட்டவர்.

ஓ ...நன்றி ...அவரை அடையாளமே தெரியவில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஓ ...நன்றி ...அவரை அடையாளமே தெரியவில்லை 
 

உந்த நக்கல் தானே வேண்டாம் எண்டுறது :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உந்த நக்கல் தானே வேண்டாம் எண்டுறது :cool:

உண்மையில் அவரை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது . ஆனால் யார்  என்று நினைவுக்கு வரவில்லை 

Link to comment
Share on other sites

 

80772942_494952414766549_522861439068038

இலங்கையில் பிரிட்டிசார் ஆட்சி செய்த போது, இலங்கை , பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து விடுபட முன்பு வெளியிடப்பட்ட நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன ( படத்தை பார்க்க.> தமிழில் :௧௦ சதம்,. ஆனால் சுதந்திரத்தின் (1949), பின்பு தமிழ் எண்கள் நீக்கப்ப்ட்டு தமிழ் எழுத்துக்கள் மட்டும் பொறிக்கப்படுகின்றன. தற்போது மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன. சிறப்பாக மொரீசியசு (Mauritius ) நாட்டின் நாணயங்களில் தமிழ் எழுத்துகள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் இப்பொழுதும் பொறிக்கப்படுகின்றன (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடனை வாங்கி சாப்பிட்டவர்களுக்கே இந்த தினாவெட்டு என்றால் லீ குவான் யூ போன்றவர்களுக்கு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.
    • இவரே வடக்கு காவிகளின் சொற் கேட்டு ஆடுபவர். இதற்குள் மற்றவர்களை பார்த்து கருத்து வேறு.  அம்பி காலம் கெட்டு கிடக்குது.🙂
    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 03 பகுதி 02 இல் நாம் முக்கிய மான, முதுமையில் தனிமையைப் பற்றிய, முதல் ஐந்து தகவல்களை பார்த்தோம். "சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே." என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நற்றிணை 210 ,பிறரைத் துன்புற விடாமையே சான்றோர் மதிக்கும் செல்வம் என்கிறது. அப்படி யென்றால், எமது பெற்றோரை எம் மதிப்புக்குள்ள முதியோரை தனிமை படுத்தி, அதனால் தனிமை அவர்களை துன்புறுத்த நாம் விடலாமா? என்பதை நாம் கட்டாயம் ஒரு தரமாவது  சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனையை தூண்ட நான் மேலும் சில தகவல்களை கீழே தருகிறேன். 6. சமூக தனிமை பொதுவாக நீண்டகால நோய்க்கு வழி வகுக்க லாம். உதாரணமாக, நீடித்த அல்லது  வீரியம் குறைந்த நாள்பட்ட நுரையீரல் நோய் [chronic lung disease],கீல்வாதம் [arthritis], பலவீன மான அசைவுத்தன்மை [impaired mobility], மற்றும்  மன ச்சோர்வு [depression] ஆகும். எனவே சரியான பரா மரிப்பு ஒன்றை அவர்க ளுக்கு உறுதி செய்வதன் மூலம் இவற்றை நாம் குறைக்கலாம். உதாரணமாக, வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு தொலை பேசி யில் கதைப்பதாலும் அவர்களிடம் போய் வருவதா லும் [phone calls and visits] இவற்றின் தாக்கங்களை குறைக்கலாம். அப்படியே மற்றவர்களுக்கும் ஆகும். இது மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு [high blood pressure] கூட வழி வகுக்கிறது.  7. சமூகத்தில் இருந்து  தனிமைப்படுத்தப்பட்ட மூத்த வர்கள் [Socially isolated seniors] அதிகமாக எதிர் கால த்தைப் பற்றிய நம்பிக்கை யற்ற வர்களாக பொது வாக இருக்கிறார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, சமூகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் [community - based programs and services] அங்கு கட்டாயம் தேவைப்படுகிறது. 8. உடல் மற்றும் புவியியல் தனிமை [Physical and geographic isolation] சமூக தனிமைக்கு அநேகமாக வழி வகுக்கிறது. இங்கு உடல் தனிமை என்பது மனித தொடர்புகள் மிக அருகி காணப்படும் ஒரு நிலை அல்லது ஒரு தனிமை சிறையில் இருப்பது போன்ற ஒரு நிலை எனலாம் [limited Human contact or solitary confinement].அதே போல புவியியல் தனிமை என்பது தனது இனத்தில் இருந்து பிரிந்து இருத்தல் எனலாம். உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ஆறுக்கு ஒரு முதியோர் உடல், பண்பாடு மற்றும் புவியியல் தடைகளுக்கு [physical, cultural, and/or geographical barriers] முகம் கொடு த்து, அதனால் அவர்கள் தங்கள் சக உறுப்பினர்கள் மற்றும் சமூக ங்களில் [peers and communities,] இருந்தும் விலக்கப் படுகிறார்கள். சலுகை மற்றும் சேவைகள் [benefits and services] பெற்று தங்கள் பொருளாதார பாது காப்பை [economic security] மேம்படுத்தும் வாய்ப்பை இந்த விலகல் தடைசெய்கிறது. அது மட்டும் அல்ல, ஆரோக்கியமான, சுயாதீன வாழ்க்கையை வாழக்கூடிய திறனை யும் தடை செய்கிறது. முது மையில் தனிமையில் இருப்பவர்களுக்கு பொது வாக நீண்ட கால பராமரிப்பும் தேவைப்படுகிறது. 9. ஒருவர் தனிமையையும் தனிமை படுத்தலையும் எதிர் நோக்க பெரிய ஆபத்து காரணியாக அமை வது,அவர் தனது துணையான கணவனையோ அல்லது மனைவியையோ இழப்பது ஆகும். பொது வாக கையறுநிலை [bereavement] தனிமையை ஏற்படுத்துவதுடன், கூடவே சமூகத்துடனான பரஸ்பரத்தையும் [social interactions] இழக்க வழி கோலுகிறது. மேலும்  இன்று வாகனத்தை பாது காப்பாக ஓட்டும் ஆற்றல் [safe driving expectancy] இருபாலாருக்கும் 70  வயதை தாண்டினாலும், இன்னும் பல முதியோர் தமக்கு போக்கு வரத்து வசதிகள் பற்றாது என உணர்கிறார்கள். ஆகவே இதுவும் தனிமையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது. 10. முதியோரை பராமரிக்கும் குடும்ப உறுப்பினர் [family caregiver] கூட சமூகத்தில் இருந்து தம்மை தனிமைப்படுத்தும் ஒரு ஆபத்தை பொதுவாக எதிர் பார்க்கிறார்கள். குடுப்ப உறுப்பினராக இருந்து, பெற்றோரை, கணவனை அல்லது மனைவியை, அல்லது இன்னும் ஒரு குடும்ப உறுப்பினரை பராமரிப்பது ஒரு மகத்தான பொறுப்பு ஆகும். உதாரணமாக, அந்த உறுப்பினர் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோயில் [Alzheimer’s disease], அல்லது மனச் சோர்வினால் ஏற்படும் பைத்திய மான டிமென்ஷியா நோயில் [dementia], அல்லது ஒரு உடல் வலுக்குறைவில் [a physical impairment] இரு ந்தால், அது பராமரிப்பவருக்கு பெரும் பொறுப்பாக அமைகிறது. இதனால், அந்த குடும்ப பராமரிப்பவர் தனது சமூக தொடர்புகளை குறைக்க வேண்டி அல்லது புறம் தள்ள வேண்டி இருக்கலாம். இது அவர்கள் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்து கிறது. 11. தனிமை தொற்றும் [contagious] தன்மையுடையது. அதாவது ஒருவர் தனிமையில் இருக்கும் பொழுது ,அந்த தனிமை அநேகமாக அவரின் நண்பருக்கோ அல்லது அவர் தொடர்பு கொள்ளும் ஒருவருக்கோ பரவக் கூடிய சந்தர்ப்பம் உண்டு, இதனால் தங்கள் சமூக பிணையலை [social cohesion] பாது காக்கும் பொருட்டு, மக்கள் அவர்களிடம் இருந்து தம்மை மேலும் தனிமைப்படுத்த பார்க்கி றார்கள். இது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அது மட்டும் அல்ல தனிமையான மக்கள் ஆரோக்கிய மற்ற நடத்தைகளில் [unhealthy behavior] தம்மை பொதுவாக ஈடுபடுத்து கிறார்கள். உதாரணமாக, ஆரோக்கியமற்ற உணவு, குறைந்த உடற்பயிற்சி [lack of physical activity], புகை பிடித்தல் [smoking] போன்றவையாகும். எனவே ஒரு சமூக சூழலில் வாழ்வதே இவையே தடுக்கும் ஒரு வழியாகும். மேலும் அவர்கள் தொண்டூழியராக [Volunteering] தொழிற்படுவதன் மூலம் தனிமையையும் தனிமை படுத்தலையும் குறைக்க முடியும். முதியோர்கள் தமது அனுபவங்களை அறிவாற்ற ல்களை பயன் படுத்தி தமது சமூகத்திற்கு பங்களிக்க முடியும். இது அவர்களின் வாழ் நாளை கூட்டுவதுடன் [boost longevity] மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கும் [mental health and well-being] பங்களி க்கிறது. நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள் என்றால், கட்டாயம் சுகாதார தொடர்பான பாடங்கள், கணனி சம்பந்த மான பாடங்கள், அல்லது உடற்பயிற்சி சம்பந்த மான பாடங்கள் போன்றவற்றில் பங்கு பெறுவது நன்மை பயர்க்கலாம்? 12. தொழில் நுட்பம் [Technology] ஓரளவு தனிமையை குறைக்கலாம் என நாம் எதிர் பார்க்கலாம். உதாரணமாக, காது கேட்க்கும் தன்மையை இழந்தவர்களுக்கு  காதொலிக்கருவி [hearing aid ] ஒன்று கொடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணை ப்பதன் மூலம் அவர்களின் தனிமையை குறைக்கலாம். அதே போல உடல் பயிற்சிகள் [Physical activity] தனிமையை குறைக்கி ன்றன. உதாரணமாக,கூட்டு உடற் பயிற்சி [Group exercise programs] இதில் முக்கியமான ஒன்றாகும். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாத ஒன்றா யினும் அதை பற்றிய விபரங்களை, உண்மைகளை அறிவதன் மூலம் நாம் அதை தடுக்க அல்லது குறைக்க முடியும். பொதுவாக நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக பல மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இது கிராமப் பகுதியில் குறைவு. வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடு மையை அனுபவிக்கும் நிலையில் யார் யார் என்று பொதுவாக பார்த்தால், குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், தனிமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனை க்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என நாம் வகைப் படுத்தலாம். இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் கிராமப்புறப் பகுதிகளை விட பொதுவாக, மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். பெற்றெ டுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோ ரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தி யாகப் படிக்கு ம்போதே நமக்கு வலிக்கிறது என்றா ல், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? குறிப்பாக ஒரு வெளி நாட்டிற்கு குடிவரவாளர்களாக தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் அந்த நாட்டின் வாழ்வுச் சூழலு க்குள் பொருத்திக்கொள்வ தற்கு எதிர்கொ ள்ளு ம்தடைகள் ஒரு புறம் இருக்க, புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்த வர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளை களை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளை களால் தனித்துவிடப்படும்போது மிகப்பெ ரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள் என்ப தும் குறிப்பிடத் தக்கது. ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.  ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டி யது. எனவே முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டிய டிக்கும் வகையில் முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொ டுப்ப து, ஃபேஸ்புக்கை [Facebook] இயக்கச் சொல்லி க்கொடு ப்பது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் முதியவர்களை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன். இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டா ட்டங்கள், விடுமுறைகள்... கூட்டுக்குடும்பம் என்றால் வயதான வர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால்   இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையருக்கு ஒரு பாது காப்பாக முதியோர் இல்லம் சேர்ப்பவர்கள் இன்று பலர். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்...  ஒருக்கா எம்மை நினைக்க ... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அது தவிக்கிறது. மேலும்  வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோ ர்களை தனிமை வாட்டுகிறது. மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோ ர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்!    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]  முற்றிற்று       
    • எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு…… முதல் வழி மன்னிப்பு. ———- இனத்தால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டு அரசியலில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிகு பிறந்த நாளில் இயற்பெயரில் சொல்லும் வாழ்த்து மட்டுமே பலிக்கும் என்பது ஐதீகம்🤣.  அண்ணன் கொடுத்த கூமுட்டையை வாங்கி அதை கொண்டே அண்ணனுக்கு கேக் அடிச்சு குடுத்திட்டாப்பல🤣. முன்னர் திக வில் இருந்து திமுக பிரிந்த போது, இப்படித்தானம் பெரியார் கடுமையாக திமுக/அண்ணாவை எதிர்த்தார். ஆனால் அண்ணா எதிர்வினை எதுவும் காட்டாமல், தொடர்ந்தும் பெரியாரை கண்ணியமாக நடத்த, பெரியாரின் எதிர்ப்பு பிசு பிசுத்து போனது என்பார்கள்.
    • அவ்வளவு தான். உணமையான உலகை சந்திக்க கூடிய கல்வி திட்டம் தேவை. பரீட்சை வினாத்தாள்கள் பலவற்றை படித்து பரீட்சை  எழுதும் கல்வி முறை நாட்டுக்கு உதவ போவதில்லை.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.