Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு சம்பவம்.. இலண்டன் வீதி ஒன்றில்..

article-1307648758646-0019EDD800000258-5

 

 

நம்மவர்கள் செலுத்தும் வெள்ளை விநியோக வான்.. அந்த 30 மைல் உச்ச வேக வீதியால் வந்து கொண்டிருந்தது. திடீர் என்று யாருமே கடக்கக் காத்திருக்காத நிலையில் zebra crossing இல் நின்று கொண்டது. பின்னால் வந்த கார்க்காரர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திடீர் என்று நின்ற வானின் பின்னால் மோதிவிட்டார்.இது நடக்க வேண்டும் என்று தான் வான் காரர்கள் கணக்குப் பார்த்து வானை நிறுத்தியிருந்தனர்.

 

விநியோக வானில் இருந்தவர்கள்.. தமது திட்டம் பலித்துவிட்ட சந்தோசத்தில் துள்ளிக் குதித்து பாய்ந்து.. வந்தும் வராததுமாக.. அந்தக் கார்காரின் நம்பரைப் பதிவு செய்கின்றனர். கார் சத்தமாக மோதியதில் அதிர்ந்து போன சாரதியோ திக்கிமுக்காடிக் கொண்டிருக்கிறார். இவர்களோ அவரைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல்.. தங்கள் காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர்.

 

அதன் பின் சாரதி ஒருவாறு வெளியே வந்து நீங்கள் திடீர் என்று வாகனத்தை நிறுத்திவிட்டதால்.. இது நிகழ்ந்தது என்பதை விளக்க முனைகின்றார். ஆனால் வெள்ளை வான் நம்மவர்கள் அதையெல்லாம் செவிமடுப்பதாக இல்லை.

 

பொலிஸ்கிலிஸ் என்று போகாமல் இருக்க.... கார் சாரதியும் எனியும் விளக்கி பயனில்லை என்ற நிலையில்... தனது விபரங்களை வெள்ளை வான்காரர்களிடம் கொடுக்கிறார். அவர்களும் நடக்க வேண்டியது நல்லாவா நடந்தது என்ற மகிழ்ச்சியோடு வானை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

 

முக்கிய வீதியில் உள்ள zebra crossing இல் ஓய்வெடுப்பதற்காக வானை நிறுத்தும் வாடிக்கை உலகில் நம்மவரிடம் தான் இருக்குமோ..??!

 

இது எல்லாம் திட்டமிட்டு காப்புறுதிப் பணம் பறிக்கும் உக்தி. இன்னொருவரை வேண்டும் என்றே மோத விட்டால் அவரிடம் காப்புறுதிப் பணம் அறவிடலாம் என்ற நிலை இங்கிலாந்தில் உள்ளதை நம்மவர்கள் உழுத்துப் போன டப்பி வான்களை வைத்துச் செய்கின்றனர்.

 

இது நாங்கள் கண்ணால் கண்ட சம்பவம். ஆனால் இது போல பலர் முன்னரும் விபரிக்கக் கேட்டுள்ளோம்.

 

cimg4564.jpg

 

எனவோ வாகனமோட்டிகளே.. இவ்வாறான திட்டமிட்ட திருடர்கள் கையில் சிக்காமல் நிதானமாக வாகனங்களைச் செலுத்துக்கள். குறிப்பாக எம்மவர்கள் அல்லது இந்திய உபகண்டத்தவர்கள் செலுத்தும் வாகனங்கள் மற்றும்.. விநியோக வெள்ளை வான்கள் தொடர்பில் கவனமாக இருங்கள்.

 

இது கண்ணால் கண்ட ஓர் அனுபவத்தின் பகிர்வு.

 

Edited by nedukkalapoovan

இது முன்பு கனடாவில் பரவலாக நடந்ததாகக் கேள்வி. இங்கும் தொழில் முறையில் ஆரம்பித்துள்ளார்கள்.

 

வாகனத்திற்கு மாத்திரம் காப்புறுதி பணம் எடுப்பதல்லாமல், பயணிகளுக்கும் மருத்துவக் காப்புறுதிப் பணம் எடுக்கிறார்கள். மற்றைய வாகன ஒட்டி பதட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கையைக் கவனியாது விட்ட சந்தர்ப்பங்களில் வாகனத்தில் பயணிக்காத நண்பர்களின் பெயரைப் போட்டு பணம் எடுத்த நிகழ்வுகளும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கனடா மாதிரி அள்ளி கொடுக்கமாட்டார்கள் பிழைப்பது இடையில் நிற்க்கும் புறோக்கர்மார்தான் அடுத்த காப்புறுதி புதுப்பித்தல் வரும்போது காப்புறுதிகட்டுக்காசு 4ங்கு மடங்கு கூடியிருக்கும் தேவையா நாய்பிழைப்பு என்றமாதிரி கதை போகும் . அடுத்து குதிரை வண்டில் ஓடின வீதிகளை அப்படியே தாரை போட்டு ஒரு சைட் பஸ் லைன் அருகில் சைக்கிள் லைன் நடுவிலை உங்கடை வாகனம் இடி வேண்டாமல் வாகனம் தப்பிவாறது இலகுவானதல்ல.

 

Safe-T-Bar-1.jpg

van safety bar ஐ போட்டு விட்டு இடிப்பவர்களை மன்னித்து  அருள வேண்டியதுதான் . 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்  இப்படி  ஒரு  சம்பவத்தைப்பார்த்தேன்

 

எனக்கு  முன்னாடி  ஒரு வாகனம்  போய்க்கொண்டிருந்தது

அதற்கு வலது பறமாக  இன்னொரு வாகனம  போய்க்கொண்டிருந்தது.

 

வலது புறமாகச்சென்ற  வாகனம் இடது பக்கம்  அதாவது எனது வாகனத்துக்கு  முன்னால் போகும்   வாகனப்பக்கம்  திரும்ப சிக்னல் போட்டு  திரும்பத்தொடங்கியது.  எனக்கு முன்னால்  சென்றவர்  அதற்கு இடம் தரவில்லை(முதலில் கவனிக்கவில்லை  என்று  நினைக்கின்றேன்).

அவரது வாகனத்துடன் முட்டுவதற்கு வந்தபின் தான்  அவர் உசாராகி சத்தத்தையும்  அழுத்தினார்.  ஆனாலும் உள்ளே  நுளையமுனைந்த வாகனம் உள்ளே  நுளைவதை நிறுத்தவில்லை. எனக்கு முன்னால்  சென்றவர் நடைபாதைவரை ஏறி  விபத்தை  தவிர்க முயன்றும் முடியாது இருவரது வாகனங்களும் பெரும்  சத்தத்துடன் மோதின.

(நான்  பின்னால்  நின்றபடியால் முழுவதையும்  பார்த்தேன்.  யாரில்  பிழை  என்பது 30 வருடமாக கார் ஓட்டும்  எனக்கு  தெரிந்தது.)

 

மோதியவுடன்  சாரதிக்கு பக்கத்திலிருந்தவர் சத்தம் போட்டபடி இறங்கினார்.

அப்பொழுது தான்   கவனித்தேன். அவர் ஒரு தமிழர் என.

பின்னால் மோதியவரும் இறங்கினார். அவர்  ஒரு வயது போன கறுப்பு இனத்தவர்.  அவர்களது ஆபிரிக்க  உடையில்  இருந்தார்.

இருவரும்  கதைவழிப்பட சாரதியும் இறங்கினார். அவர்  ஒரு தமிழ்ப்பெண்.  அவரும்  சத்தம் போட்டார்.  சிக்னல் போட்டது  தெரியவில்லையா? காவல்துறைக்கு அழையுங்கள் அது இது என்று............

 

கொஞ்சம் வீதி  பிசியாக  இருந்ததால்  நான் அதில் நிற்கமுடியவில்லை.  தொடர்ந்து  அவர்களைக்கடந்து போகவேண்டியிருந்தது. கடந்து சென்றாலும் இவர்களது பேச்சு எனக்குப்பிடிக்கவில்லை.  குற்றம்  இவர்கள் மீது ஆனால் சத்தம் போட்டு ஒரு அப்பாவியை திட்டுகிறார்களே  என்றிருந்தது.

 

ஒரு அடத்தில்  எனது காரை  நிறுத்திவிட்டு (நிறுத்தக்கூடாத இடம்) 

மனைவியிடமும் பேச்சுவாங்கிக்கொண்டு காரைவிட்டு இறங்கி அவர்கள்  பக்கத்தில்  சென்றபோதும்   சத்தம் போடல் குறையவில்லை.

 

அந்த தமிழரை அழைத்தபோது

இருவரும்  வந்தார்கள்.

காவல்த்துறை  அது இது என்று போகாதீர்கள்.

முழுப்பிழையும்  உங்கள் மீதுதான்.

அவருடன் பேசி அவருக்கு எதுவித   காயமுமில்லை

உங்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு நீங்களே ஏதாவது செய்யுங்கள்.

என்று  சொன்னபோது  அந்த அன்ரி

நான்  சிக்னல் போட்டனான்.  அவன் வேண்டுமென்று விடவில்லை  என்று என்னிடமும்  குரலை  உயர்த்தினார்.

எனக்கு சூடாச்சு

அவரது கணவனிடம் 

நான்  பின்னால்   வந்தனான்.  எல்லவற்றையும்  பார்த்தனான்

சிக்னல் போட்டால் வழி  விடணும்  என்று எந்த  சட்டத்திலும் இல்லை

பாதை மாறுபவரே எல்லாத்துக்கும் 100 வீதபொறுப்பு

முடிந்தால்  சமாளியுங்கள்  என்றுவிட்டு  வந்துவிட்டேன்

அன்ரி  கொஞ்சம் ஆடிப்போனது தெரிந்தது :D  

 

கனடாவில் நம்மவர்களாலும் ஏனை பல நாட்டினர்களாலும் நடத்தப்படும் வழக்கமான நிகழ்வு / பாதக விபத்து இது. இங்கு பொலிஸ் மேற்கொண்ட கடும் இறுக்கமான நடவடிக்கைகளால் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கு; ஆனால் நிறுத்தப்படவில்லை.

 

இதன் பின் விளைவாக இங்கு ஒன்ராரியோவில் வாகனக் காப்புறுதி ஏனைய பல மாகாணங்களை விட பல மடங்கு அதிகமானது. நான் வைத்து இருக்கும் வாகனத்துக்கு கியுபெக்கில் வெறுமனே 65 டொலர் தான் வாகனக் காப்புறுதி, ஆனால் நான் இங்கு 243 டொலர் கட்டுகின்றேன். இதுவரைக்கும் எந்த விதமான வாகன விதி அத்து மீறல்களும் செய்து ஒரு டிக்கெட் கூட வாங்காத நான் ஏனையவர்கள் செய்யும் திருட்டுத் தனங்களால் அதிகமாக கட்டிக் கொண்டு இருக்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நம்மவர்களாலும் ஏனை பல நாட்டினர்களாலும் நடத்தப்படும் வழக்கமான நிகழ்வு / பாதக விபத்து இது. இங்கு பொலிஸ் மேற்கொண்ட கடும் இறுக்கமான நடவடிக்கைகளால் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கு; ஆனால் நிறுத்தப்படவில்லை.

 

இதன் பின் விளைவாக இங்கு ஒன்ராரியோவில் வாகனக் காப்புறுதி ஏனைய பல மாகாணங்களை விட பல மடங்கு அதிகமானது. நான் வைத்து இருக்கும் வாகனத்துக்கு கியுபெக்கில் வெறுமனே 65 டொலர் தான் வாகனக் காப்புறுதி, ஆனால் நான் இங்கு 243 டொலர் கட்டுகின்றேன். இதுவரைக்கும் எந்த விதமான வாகன விதி அத்து மீறல்களும் செய்து ஒரு டிக்கெட் கூட வாங்காத நான் ஏனையவர்கள் செய்யும் திருட்டுத் தனங்களால் அதிகமாக கட்டிக் கொண்டு இருக்கின்றேன்....

 

கனடா, பேய் மலிவு போல கிடக்கு! எங்களுக்கு CTP (Comprehensive Car Insurance- $650) Minimum. நான் இருக்கிற இடத்தில் $1,200. 

 

இது மட்டுமில்லை, இடியப்பத்தையிம் சேர்த்துத் தான் சொல்லுகிறேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றும் எம்மவர் பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்.எப்படித்தான் இப்படி சிந்திக்கிறார்கள் என்று என்னால் நம்பவே முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா, பேய் மலிவு போல கிடக்கு! எங்களுக்கு CTP (Comprehensive Car Insurance- $650) Minimum. நான் இருக்கிற இடத்தில் $1,200.

இது மட்டுமில்லை, இடியப்பத்தையிம் சேர்த்துத் தான் சொல்லுகிறேன்! :D

புங்கை ஐயா.. நிழலியானந்தா குறிப்பிட்ட கணக்கு ஒரு மாதத்துக்கு.. :o

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை ஐயா.. நிழலியானந்தா குறிப்பிட்ட கணக்கு ஒரு மாதத்துக்கு.. :o

நன்றிகள், இசை!

 

இப்ப தான், நிழலியோட பதிவோட ஏறின பிரெஷர் கொஞ்சம் இறங்கிக் கொண்டு வருகுது! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.