Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் குருவி அண்ணா முடியாது எண்டு சொல்லுறீங்க :roll:

சிங்கள தேசத்து பொருட்களை நாங்க வாங்குறதால அவைக்கு லாபம் கிடைக்குதல்லோ அந்த லாபம் தானே மேலும் மேலும் குண்டுகளாக எமது மக்கள் தலையில விழுகுது :evil:

சிங்கள தேச பொருட்களை நாங்க வாங்காமல் விட இதை விட வேற காரணம் தேவையா என்ன :?: :?: :roll: :roll:

you said simply.just stop buying sri lankan products.SLG SPEND 19 mill ruppies for military budget and 10 millions from what we buy their stuffs and that 10 million ruppies drpped bomb on our people.so folks think and act immidiatly.sorry {i cannot get tamil fonts yet} use indian products temperarly.we make the laws for us because we are the one affected.

  • Replies 121
  • Views 40.9k
  • Created
  • Last Reply

எல்லாரும் நிரு தயாரிப்புகளை வாங்குங்கோ - அது கனடிய தயாரிப்பாம் (நிரு ஒரு தொகையை வெட்டிறாதா சொல்லியிருக்கினம்)

எனவே இன்று முதல் நீங்கள் நிருவை நாடுங்கள் . நிரு நிரு நிரு (இது விளம்பர முடிவிலை வாற எக்கோ)

எனக்கு ஒரு சந்தேகம். நிரு பிராண்ட் கனடிய தயாரிப்பாக இருந்தாலும். அதை தயாரிப்பதற்கு வாற மூலப்பொருள் எங்கு இருந்து வருகின்றது???? இலங்கைல இருந்துதானே வருது????? <_<:lol:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
youbuywedieli4.jpg

எனக்கு ஒரு சந்தேகம். நிரு பிராண்ட் கனடிய தயாரிப்பாக இருந்தாலும். அதை தயாரிப்பதற்கு வாற மூலப்பொருள் எங்கு இருந்து வருகின்றது???? இலங்கைல இருந்துதானே வருது????? :D:icon_idea:

இந்தியாவில் இருந்து வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னரை விடவும் இப்போ அதிகம் பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகள் சிறீலங்காவில் இருந்து தருவிக்கப்பட்டு விற்கப்படுகின்றன..!

இந்த பனர்கள் ஏதாவது கண்காட்சிக்கு வைக்கவா செய்யுறீங்கள்..யாழ் களத்தின் பனர் கண்காட்சி என்று ஒன்று வைச்சு அதில இதை வைச்சால் கூட பிரயோசனமா இருக்கும்..!

இந்த பனர்களை..உந்த பத்துப் பேர் பாக்கிற தளங்களில வைக்கிறதிலும்..போஸ்ரரா அடிச்சு தமிழ் கடைகளில ஒட்டக் கொடுக்கலாமே..சாறி..அவங்க ஒட்டுறாங்களோ கிழிச்சுக் குப்பைல போடுறாங்களோ என்பதற்கு....நடைமுறை உலகம் தான் பதில் சொல்ல வேணும்..! :D:icon_idea:

அது சரி..இந்த பனர் போராட்டம் செயல்வடிவமாகி..அதில வாற பொருளாதார இழப்பால் சிறீலங்கா அதலபாதளத்தில விழுந்து அப்புறம் போர் புரிய ஆயுதம் இல்லாமல் புலிகளிடம் சரணடைய எவ்வளவு காலம் எடுக்கும் என்று ஒரு குத்துமதிப்பா பனரில போட்டியள் என்றால் மக்கள் விரைந்து செயற்படுவார்கள் எல்லோ. அடுத்த பிறவி எடுத்தாலும் புகலிடத்தில பிறந்து இதை பின்பற்றுவினம் எல்லோ...!!! :unsure::unsure:

நாம் புறக்கணிக்கவேண்டிய சிறீலங்கா இறக்குமதிகள் சில:-

லீலா தூள் -- அடியேன் சூரியா

லீலா கட்டாச்சம்பல்-- மனுசன் சாப்பிடுவானா ?? சாப்பிட்டா 2 நாள் ரண்ணிங்

லீலா சோயாமீற்-- பாவிப்பதில்லை

லீலா மோர்மிளகாய்-- பாவிப்பதில்லை

லீலா சீனிச்சம்பல்--- பாவிப்பதில்லை

ஒரேஞ் பார்லி--நோ

இஞ்சி சோடா-- நோ

லீலா அப்பளம்-- பாவிப்பது இந்திய தயாரிப்பு

நெஸ்டமோல்ட்-- இது வரை சுவையே தெரியாது

ராணி சோப்-- சுவிசில ஓரே விலையில நல்லது இருக்கு

பிஸ்கற் வகைகள்-- சுவிசு பிசுக்கோத்தை அடிக்க வேற தயாரிப்பு நோ

வடகம்-- கடவுளே .....

மது பானம் சாராயம்,பியர்---- மலிவானது திறமானதுமான பொருட்க்கள் இங்கு இருக்கு

மாசிக்கருவாடு---காஞ்ச கருவாடு எல்லாம் நான் சாப்பிடுறேல்லை ஏன் எண்டா பல்லு போய்டும்

நல்லெண்ணை-- தாய்லாந்து நல்லெண்ணா மூடியை திறந்தாலே கம கம வாசனை

பேபி சோப் ----உலகத் தரம் வாய்ந்த Penaten

பேபி பவுடர்---உதுவும் Penaten

பேபி ஓடிகலோன் swiss இல முழு apotheke இலயும் நல்லது இருக்கு

சக்கரை --(அடடா சக்கரை பாவிப்பது பொங்கலுக்கு பொங்கல் பானை செட்வாங்கும் போது உதுவும் வரும் இந்தியா )

சிவப்பு பச்சை அரிசி

குத்தரிசி ( ஐ டோன்ட் லைக் ஐ லைக் பசுமதி ஓய் சாத்து பிறகு கேக்கிறேல்லை பசுமதி எப்பிடி பிகர் எண்டு :angry:

தேங்காய்ப்பால்மா - தாய்லாந்து பொருள் மிகவும் நல்லது

நன்றி வணக்கம்

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பூ........பசுமதி,பசுமதி எண்டு சாகாதை கண்டியோ.உந்த பசுமதியாலைதான் உங்க கன பேருக்கு சலரோகவருத்தம் வருகுதாம்.நாட்டுகுத்தருசி இல்லாட்டி நல்ல புளுங்கல் அரிசியாய் வாங்கி சாப்பிடு கண்டியோ.அது சரி நீ என்னராசி கன்னி ராசி தானே?ஏனெண்டால் இந்தவருச ராசிபலன் வந்துட்டுதாம்....................

நாம் புறக்கணிக்கவேண்டிய சிறீலங்கா இறக்குமதிகள் சில:-

லீலா தூள்

லீலா கட்டாச்சம்பல்

லீலா சோயாமீற்

லீலா மோர்மிளகாய்

லீலா சீனிச்சம்பல்

ஒரேஞ் பார்லி

இஞ்சி சோடா

லீலா அப்பளம்

நெஸ்டமோல்ட்

ராணி சோப்

பிஸ்கற் வகைகள்

வடகம்

மது பானம் சாராயம்,பியர்

மாசிக்கருவாடு

நல்லெண்ணை

பேபி சோப்

பேபி பவுடர்

பேபி �“டிகலோன்

சக்கரை

சிவப்பு பச்சை அரிசி

குத்தரிசி

தேங்காய்ப்பால்மா

மேற்குறிப்பிட்டபொருட்களையு

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் ஒன்றுமே செய்ய மடியாது ஈழவன். பெரும்பாலான சரக்குப் பொருட்களை புலம்பெயர் தமிழருக்கு வழங்குவது தமிழ் வணிகர் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்க முடியாது. லீலா நிறுவனம் பாதிக்கப்படுவது உண்மை தான். அதைப் பார்த்ததோம் என்றால் எம் மக்களின் இழப்புக்களுக்கு நாமும் பொறுப்பெடுக்க வேண்டி வரும்.

வர்த்தகர்களைச் சிந்திப்பதை விட, தாயகத்தில் எம் மக்கள் படும் துன்பத்தை சிந்தியுங்கள். இவர்கள் வர்த்தகர்கள்! அவர்களுக்கு வேறு வழியிருக்கின்றது. இவர்களும் சிங்கள தேசத்தில் முதலிட்டிருப்பதையும் மறுக்க முடியாது. ஒரு வகையில் அவர்களும் சிந்திக்க வேண்டும்.

எனவே, ஒரு வார்த்தகர்களுக்கு உயர்வு, மற்றவர்களுக்கு தாழ்வு என்று பார்த்தோமானால் அது வெற்றி பெற முடியால் செய்யும். சிங்கள தேசத்தின் அனைத்து பொருட்களையும் புறக்கணிப்பது தான் சரியான வழி.

-------------------------

எம் மக்கள் அந்தப் பொருட்களை வாங்க விரும்பும் பட்சத்தில், உதாரணத்துக்கு மாசிக்கருவாடு மீது சிலருக்கு விருப்பமிருக்கலாம். அதை அவர்கள் பூர்த்தி செய்ய விரும்பின் கட்டாயம் சிறிலங்காவிலிருந்தான ஏற்றுமதியைத் தடுக்க முடியாது. அவ்வகையான பொருட்களை புலத்திலுள்ள வணிக நிறுவனங்களுக்கு கிடைக்க வேறுநாட்டு ஏற்றுமதியாளரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க முயல்வது நல்லது.

முக்கியமாக தமிழ்நாட்டு வர்த்தகர்களோடு புலத்தில் உள்ள வணிகர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி வைப்போமாக இருந்தால், எம் வர்த்தகர்கள் சிறிலங்காவில் இருந்து பெற்றுக் கொள்ளும் தேவை இல்லாமல் போகும்.

இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குவோர் தமிழ் இனத்தின் துரோகிகள்.

இலங்கையில் எந்த ஒரு பொருளாதார தட்டுப்பாடும் ஏற்படாத நிலையில் யாழ் குடாநாட்டுக்கான போக்குவரத்து பாதையான ஏ9 பாதையை மூடியதன் ஊடாக யாழ் குடாநாட்டுக்கு செயற்கை பொருளாதார தட்டுப்பாட்டை உருவாக்கிவிட்டு இலங்கை அரச கைக்கூலிகளாக இருக்கும் சில தனியார் வார்த்தகர்கள் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து யாழ் குடாநாட்டை தமது சந்தையாக மாற்ற முற்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்திற்கும் இலங்கை அரசிற்கும் இலஞ்சம் கொடுத்து அரங்கேற்றும் இத்தகய செயலானது மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படவேண்டியது. நீண்ட அரசியல் உள்நோக்கம் உடைய செயல். 1987ம் ஆண்டு காலப்பகுதியில் உணவுப் பொட்டலங்ககளை கப்பல்களிலும் விமானங்களிலும் உணவுப்பொட்டலங்களை போட்டமையும் பின்னர் அதே கப்பல்களில் குண்டுகளும் ஆயதங்களும் கொண்டு வந்து தமிழ் மக்கள் மீது வீசப்பட்டதும் இங்கு நினைவு கூரத்தக்கது. . மீண்டும் 1987ம் ஆண்டை நினைவு கூரும் இந்த செயலானது 2007ல் அரங்கேறுகின்றமை பாரிய அரசியல் நாசகாரத் திட்டத்தின் முதல் அங்கமே. இந்தியாவில் இருந்து கப்பல்களில் வரும் பொருட்களை கடைகளில் விற்பவர்களுக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்று பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இவற்றுக்கும் அப்பால் இத்தகைய வார்த்தகத்தின் பின்ணணியில் தமிழ் மக்களின் இயல்பு வாழ்கையை தடுத்து மக்களின் சுதந்திர போக்குவரத்தை முடக்கி யுத்த நிறுத்த உடன்படிக்கை விதியினை மீறுவதன் ஊடாக யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு உலைவைக்கும் ஒரு செயலையும் குறித்த வர்த்;தகம் மேற்கொண்டு வருகின்றது.

நன்றி: நிதர்சனம்

ஒரு பக்கம் சிறிலங்காவில் இருந்து பொருட்களை இறக்குபவர்கள் துரோகிகள்.

மறு பக்கம் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குபவர்கள் துரோகிகள்.

மக்கள் குழம்பாமல் இருந்தால் சரி!

மொத்தத்தில் பட்டினியாலை சாகாத எல்லாரும் துரோகிகள்.

குடிசைக் கைத்தொழில் மாதிரி 100$ ஓட வெப்சைற் நடத்தி வெட்டி ஒட்டிறவை எல்லாம் ஊடகமாக ஏற்றுக் கொண்டால் இதுவல்ல இன்னும் கனக்க நடக்கும். தமிழரின்ரை ஊடகங்கள் என்பது சண்டியர்கள் காவல்துறையாக மாறின கதையாக இருக்கு.

இங்கு விளங்கிக் கொள்ள வேண்டியது உண்மையாக விளக்கம்மில்லாமல் எழுதுப்படுகிதோ திட்டமிட்டுத்தான் எழுதுப்படுகிதோ என்பதே.

சிலருக்கு கறுப்பு சந்தையும், பதுக்கல்களால் ஈட்டப்படும் பெரும்பணம் கொண்டு வரும் அவலத்தையும் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லைபோலும்...

இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குவது குற்றம் இல்லை... பசியால் வாடும் மக்களுக்கு கொள்ளை இலாபம் பார்க்க எண்று ஒரு கிலோ கோதுமையை 250 ரூபாவுக்கும், உறுளைக்கிழங்கை 1000 ரூபாவுக்கு விற்ப்பதுதான் தவறு.. இங்கு நடத்தப்படுவது சொந்த இனத்தின் மீதான சுறண்டல் என்பதை அறிவாளிகளாய் தங்களை எண்றும் நினைத்துக்கொள்பவர்களுக்கு புரிவதில்லை போல... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருப்பியும் களைகட்டப்போது போல கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பியும் களைகட்டப்போது போல கிடக்கு :lol:

சனம் சோத்துக்கே அல்லாடுதுகள் உங்க கொஞ்சம் திண்டது செமிக்க இப்படித்தான் எங்க இருந்தும் இறக்குமதி கூடாது என்று புலம்பிட்டு இருக்கினம். அப்ப என்னதானாம் மக்கள் செய்யுறது.

புலியளும் செய்யாயினம் அரசும் செய்யாது இவையை மீறிச் செய்தா துரோகி மக்கள் அப்ப சோத்துக்கு யாழ் களத்தை பிச்சுப் பிச்சு சாப்பிடுறதே...!

ஐநா சபைக்குள்ள அக்கறை சில தமிழ் ஜென்மங்களுக்கு கிடையாது. 800% விலை உயர்வாம். ஏழை மக்கள் பாடு.. பசி பட்டினி நோய் இறப்பு..!

எங்காவது ஒரு சிங்களவன் இவையின்ர கூத்துக்களால பசி பட்டினி நோய் இறப்புக் கண்டிருக்கிறானோ..??!

பொங்கலும் அதுவுமா.. இப்படி பொன் விளைஞ்ச பூமில சோத்துக்கு அல்லாடுறது பற்றி எழுத வேண்டி வந்திட்டுது. எல்லாம் ஈழம் கேட்கப் போய் வெளிநாட்டுக்கு ஓடி வந்ததுகள் பண்ணுற இம்சையாலதான்..! :lol:

அப்பன் உழைச்ச காசையும் சகோதரர்களின் இரத்தத்தை உறுஞ்சி படிக்க எண்டு வெளிநாடு வந்ததுகளுக்கு ஏதோ புரியுற மாதிரி கதைவிடுகிறதே பிழைப்பாய் போச்சுது...!

எல்லாரும் வாங்கோ புலம்பெயர் நாட்டிலை பணம் மண்ணுக்கை இருந்து கிண்டி எடுக்கலாமாம் எண்டு கதைவிடுகிறது மட்டும் குறைய இல்லை....

நாடு கடந்த புலம்பெயர விமான நிலையங்களிலை கையில பூக்கொத்துக்கள் குடுத்து இலகுவாய் வளி அனுப்பி விடுகிறாங்கள் போல கிடக்கு... ஒருத்தன் எத்தினை பாடு பட்டு வெளிநாடு வாறான்.. வந்து எப்பிடி எல்லாம் கஸ்ரப்படு பணத்தை ஊருக்கு அனுப்புகிறான் ஊரில் உள்ளவர்களை எப்பிடி பராமரிக்கிறான் என்பதை கொஞ்சமும் நினைத்து பாக்காத சில அட்டைகள் இப்பிடித்தான் புலம்பெயர்ந்தவர்களை புரிந்து கொள்ளும்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகலிட வார்த்தக ஸ்தாபனங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு

கனடா ரொரன்ரோவை தளமாக கொண்டியங்கும் ரொரன்ரோவின் பிரமாண்ட வணிப நிறுவனமான "ஏசியன்ஸ்" எதிர்வரும் ஜனவரி 16 ம் திகதி முதல் சிறிலங்கா பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்கின்றது.

தமது வாடிக்கையாளர்களுக்கு இது பற்றி அறிவித்துள்ள "ஏசியன்ஸ்", இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யக்ட்ட ஆடை, வகைள் எதிர்வரும் தை மாதம் 16ம் திகதி முதல் எங்கள் ஸ்தாபனத்தில் விற்பனை செய்யடமாட்டாது அதற்கான மாற்று ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

முயற்கொம்மாக இருந்த இந்த புறக்கணிப்பு நடவடிக்கைக்குள் துணித்து "ஏசியன்ஸ்" இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கனடாவின் ஏனைய தமிழ் வணிப நிறுவனங்களும், கையிருப்பில் உள்ள சிறிலங்காப்பொருட்கள் தீர்ந்த பின் இத்திட்டத்தில் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்கப்பட்டுள்ளது,

வார்த்தகர்கள் மட்டுமன்றி, தமது வாடிக்கையாளர்களும், இதை உணர்ந்து செயற்ப்பட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை உணர்ந்து செயற்பட்டால் நிச்சயம் பாரிய மாற்றம் ஒன்றை உருவாக்கு முடியும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த உரிமைக்குரல் நிகழ்வின் போது சமாதானத்திற்கான கனடிய தமிழர் என்ற அமைப்பால் இக்கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வாறு நாம் ஒன்று திரண்டால் நிச்சயமாக இதனை வெற்றி அடைய வைக்கலாம்.மற்ற நிறுவனக்களையும் இதனைப் பின் பற்றுமாறு வாடிக்கயாளர்களான நாம் தூண்ட வேண்டும்.எல்லா புல அமைப்புக்களும் இதற்கான வேண்டுகோளை முன் வைக்க வேணும்.இந்த முயற்ச்சி இப்போது பலம் பெற்று வருகிறது.இதனைக் குழப்புபவர்களின் சொற்களைக் காதில் போடாது நாம் எல்லோரும் முயற்ச்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.ஒற்றுமையே எமது பலம்.புல ஊடகங்கலும் இவ்வாறான முயற்ச்சிகளுக்கு ஊக்கமழிக்க வேணும்.தமது செய்தி அறிக்கைகளில் இப்படி முன் வரும் நிறுவஙகளை சுட்டிக்காட்ட வேண்டும்.இதன்மூலம் ஒரு முன் மாதிரியை உருவாக்க முடியும்.

ஜரோப்பாவிலும் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கிறது ஆனால் வியாபார நிறுவனங்கள் எவையும் இன்னமும் முன்மாதிரியாக வெளிவரவில்லை.

இவ்வாறு முன்மாதிரியா நடந்து கொள்ளும் நிறுவனங்களிற்கு தேசிய ஆதரவு ஊடகங்கள் positive coverage குடுத்து ஊக்குவிக்க வேண்டும்.

இந்த முயற்சிகள் ஒருவகையில் நிர்வாக மயப்படுத்தப்பட்டு ஒவ்வொரு நிறுவனங்களும் எந்தளவிற்கு புறக்கணிக்கிறார்கள் எதிர்கால இலக்கு என்ன என்று விகிதத்தில் அளவிடும் நிலைக்கு வரவேண்டும்.

நானும் எனது பங்கிற்கு லெமன் பாப், மற்றும் இதர சில சிறீ லங்காப் பண்டங்களை புறக்கணித்து மாதங்கள் பல ஓடி விட்டது. எமது தாயகத்து உறவுகளிற்கு விடிவு கிடைக்கும் வரை சிறீ லங்காப் பண்டங்களை தொடர்ந்து புறக்கணிப்போம். விரைவில் எமது வீட்டு குசினியை இன்வென்டரி செய்யும் போது தாங்கள் மேலே பட்டியலிட்டுள்ள சகல பொருட்களும் எமது வீட்டு குசினிக்குள் மீண்டும் வராது இருப்பதை உறுதி செய்வேன்! யாராவது தயவு செய்து மேற்கூறிய பொருட்களை அழகாகப் பட்டியல் செய்து, புறக்கணிப்புகான விளக்கங்கங்களையும் சுறுக்கமாக எழுதி, எமது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்க்ளிற்கு ஈ-மெயிலில் அனுப்புவதற்கு வழி செய்ய முடியுமா?

  • 3 weeks later...

லண்டனில் தான் சிரிலங்கன் பொருட்களின் பாவனை ,விற்பனை கூடுதலாக உள்ளது. தயவு செய்து அனைவரும் தனித்தனியாக யோசித்து முடிவு எடுங்கள்.

ஒவ்வொருவரும் நான் முடிவு எடுத்துவிட்டேன் சிரிலங்கன் பொருட்களை வாங்குவதில்லை என்று தொடங்கி விட்டால் இலகுவாக இதை வெற்றி ஆக்கலாம்.

best food super market, kanapathy cash and curry, thamilini.

போன்ற பெரிய நிறுவனங்களில் கூடுதலான தேவையற்ற ஸ்ரீலங்கன் சிங்கள உற்பத்தி சாமான்கள் விற்பனையில் விடப்பட்டுள்ளன.

எம் சகோதரனின் மேல் போடும் குண்டுகளுக்காக இப்பொருட்களை வாங்க வேண்டுமா?

இன்றுவரை எந்த அரபு நாட்டவரும் இஸ்ரேலில் பயிரிடப்படும் கரட், தோடம்பழம் போன்ற சிறிய பொருட்களை கூட வாங்குவதில்லை.

காரணம் தங்களது சகோதர பலஸ்தீனர்களிடம் அபகரிக்கப்பட்ட நிலத்தில் இப்பொருட்களை இஸ்ரேலியர்கள் விளைவித்து அதன் மூலம் பொருளாதாரத்தை வளர்க்கிறார்கள் என்பது தான்.

எங்களுக்கும் இது பொருந்தும்

  • 2 weeks later...

மொத்தமாய் இறக்கிறவை எல்லாம் இருக்க சில்லரை வியாபாரிகளை நோகிறார் ஒருத்தர்... எங்கை திருகினால் எங்கை நிக்கும் எண்டு தெரியாதவை எல்லாம் மற்றவைக்கு அறிவுரை சொல்லுற அவல நிலைதான் தமிழனுக்கு...

லண்டனில் தான் சிரிலங்கன் பொருட்களின் பாவனை ,விற்பனை கூடுதலாக உள்ளது. தயவு செய்து அனைவரும் தனித்தனியாக யோசித்து முடிவு எடுங்கள்.

ஒவ்வொருவரும் நான் முடிவு எடுத்துவிட்டேன் சிரிலங்கன் பொருட்களை வாங்குவதில்லை என்று தொடங்கி விட்டால் இலகுவாக இதை வெற்றி ஆக்கலாம்.

சிறீலங்கன் பொருட்களில் பலவற்றுக்கு இங்கிலாந்தின் சுங்க தீர்வை அதிகம் எண்டதாலும், சுகாதார காரணங்களுக்காக தடை இருப்பதாலும், இங்கிலாந்துக்கு நேரடியாக பொருட்கள் இறக்குவது குறைவு....! ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு வந்து அங்கிருந்து தரைமூலம்தான் இங்கு கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்...!

Edited by Thala

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தமாய் இறக்கிறவை எல்லாம் இருக்க சில்லரை வியாபாரிகளை நோகிறார் ஒருத்தர்... எங்கை திருகினால் எங்கை நிக்கும் எண்டு தெரியாதவை எல்லாம் மற்றவைக்கு அறிவுரை சொல்லுற அவல நிலைதான் தமிழனுக்கு...

சிறீலங்கன் பொருட்களில் பலவற்றுக்கு இங்கிலாந்தின் சுங்க தீர்வை அதிகம் எண்டதாலும், சுகாதார காரணங்களுக்காக தடை இருப்பதாலும், இங்கிலாந்துக்கு நேரடியாக பொருட்கள் இறக்குவது குறைவு....! ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு வந்து அங்கிருந்து தரைமூலம்தான் இங்கு கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்...!

இருக்கவே இருக்கின்றன கொலண்ட்,பிரான்ஸ் போன்ற சமதர்ம நாடுகள். B)

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
colourzb3.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.