Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபை தேர்தல் ; கூட்டமைப்பு வேட்பாளரில் யாரை ஆதரிப்பது.

Featured Replies

மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் தேர்தல் பிரச்சார ரதம் புறப்படத் தொடங்கிவிட்டது. தமிழர் பிரச்சனைகளுக்கு மாகாண சபைகள் தீர்வல்ல என்ற கூட்டமைப்பு அணியினரும் ரத பவனியில் தங்களை இணைத்து மக்கள் முன்னால் வரத்தொடங்கி விட்டனர். முதன்மை வேட்பாளர் பிரச்சனைகளும், அவரின் முன், பின்புலங்கள் தொடர்பான அலசல்களும் ஓரளவு குறைவடைந்து, மக்கள் மத்தியில் இருந்த எதிர்வினை அதிர்வுகள் மெல்ல மெல்ல அகன்று வருகின்றன. எப்படியும் தேர்தல் தினத்துக்கிடையில் அந்த அதிர்வுகள் இல்லாமல் போய்விடும். அவ்வளவு உக்கிரமான வகையில் பிரச்சாரங்கள் இனி அமையும்.

 

    இதற்குக் கட்டியம் கூறும் வகையில் சம்மந்தரும் சுமந்திரனும் இணைந்து மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தில் சில அறிக்கைளை மென்மையாக கசிய விட்டுள்ளனர். அதில் புலம்பெயர் தமிழர்கள் தமது வெற்றிக்கு பல வழிகளிலும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், தேசியம் சார்ந்து, மக்களுடன் மக்களாக நின்று இயங்கும் பாராளுமன்ற உறுப்பினரையும் பாராட்டிப் பேசியுள்ளனர். இதன் மூலம் புலம்பெயர் மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர் எனலாம்.

 

  முன்னர் பல தடவைகள் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் செயற்பாடுகளை விமர்சித்த சம்மந்தரும் சுமந்திரனும் இந்தமுறை அவர்களின் தயவை நாடி இருப்பதுதான் இவர்களின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகிறது. கிழக்கைப் பொறுத்தவரை வாக்கினை தீர்மானிக்கும் சக்தி பெரிய அளவில் புலம்பெயர்ந்த சமூகத்திடம் இல்லை. ஆனால் வடக்கின் வாக்குகளை நெறிப்படுத்தும் வல்லமை புலம்பெயர் சமூகத்திடம் உண்டு. இதை தெளிவாக உணர்ந்து கொண்டமைதான் இவர்கள் இந்த நாடகத்தை தயாரித்து இருப்பதன் காரணம் எனலாம்..

மாகாண சபை தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பங்கெடுக்க தூண்டியதன் மூலம் மகிந்த அரசானது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை மாகாண சபை என்ற பொறிக்குள் அடக்கி விட்டது. என்று கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமர்ந்து கொண்டதோ அன்றே பதின்மூன்றாம் திருத்த சட்டத்தின் கீழான மாகாணசபையை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த நிலையில் நடைபெறப்போகும் வடமாகாணசபை தேர்தலை மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பதே இன்றைய கேள்வியாகும்.

 

  தமிழர்களின் தேசிய அரசியல்வெளியில் வேறு தெரிவுகள் இல்லாத நிலையிலும், விடுதலைப்புலிகளின் தலைமையால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு என்ற ரீதியிலுமே, இன்றும் கொள்கைகள் மாறுபட்ட நிலையிலும், சம்மந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு உயிர் வாழ முடிகிறது. முதன்மை நகராக விளங்கும் யாழ்ப்பாணத்தில் வைத்து சிங்கக்கொடியை பிடித்த பின்னும், விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் தானும் இருந்தேன் என்று கூறி விடுதலைப்புலிகளுக்கு எதிரானவன் என்ற நிலையை உருவாக்கி காட்டிய நிலையிலும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகங்கள் இல்லை என்று கூறியதன் பின்னாலும், தமிழ் மக்களின் ஒரே தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றதென்றால் அதற்கு காரணம் சம்மந்தருமல்ல, மாவையுமல்ல. 'விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட' என்ற குறியீடே மக்களை இன்னும் கூட்டமைப்பை ஆதரிக்க வைக்கிறது.

 

  அரசியலில் நீண்ட அனுபவமும், தனது பெயரை முன்நிறுத்துவதில் வல்லவருமான ஆனந்தசங்கரியார், இந்த தேர்தலில் முன்னனுபம் எதுவுமற்ற, அரசியல் பின்புலமற்ற ஒரு வேட்பாளரின் கீழ் போட்டியிட முன்வந்துள்ளார். விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவினை மேற்கொள்ளும் போதில் தனக்கான முதன்மை அங்கீகாரம் கிடைக்க கூடும் எனவும், குறைந்த பட்சம் கிளிநொச்சியில் மிகத் தீவிரமாக செய்யற்பட்டு வரும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கனதியினை சிதைக்கும் வகையிலும் ஆனந்தசங்கரியார் வெளிச் சக்திகளால் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன. அதன் காரணங்களை உணர்ந்துதான் பிரச்சாரத்தில் விருப்பு வாக்கினை முதன்மை வேட்பாளருக்கு அளிக்கும்படி கோரிக்கை விடப்படுகிறது.

 

  இதுவரை தேர்தல் கொள்கை விளக்கம் (விஞ்ஞாபனம்) வெளிவிடப்படாத நிலையில், (எப்படி கொள்கை விளக்கத்தை உருவாக்குவது என்ற சிக்கலில் இருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்) தமது தனிப்பட்ட கொள்கைகளை முன்வைத்து இயங்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், தமிழ் மக்கள் தேசிய அபிலாசைகளை நிராகரித்துவிட்டார்கள் என்ற தோற்றப்பாடு கூட அவர்களால் நாளை உருவாக்கப்படலாம்.

தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி செயற்பட்டு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தலை நிராகரித்துவிட்டனர். 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்று முழக்கமிட்ட கட்சியினரும் மாநில சுயாட்சி கோரிக்கையை மறைத்து ஆளும் அரசின் சின்னத்துக்குள் தங்கள் இருப்பினை நிலைநிறுத்தவேண்டிய கட்டாயத்துக்குள் போயுள்ளனர். தமிழ் மக்களுக்காக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தேர்தலில் போட்டியிடுவதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தங்களுக்குள் இன்னும் தெளிவான கொள்கை உறுதிப்பாட்டுக்கு வரவில்லை. தேர்தலை நிராகரிக்கும்படி அழைப்பு விடும் குழுவினரும் நிராகரிப்பின் பின்னான நிலைகள் பற்றி தெளிவுபடுத்தவில்லை. 

 

  இந்நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் மக்கள் தங்களின் விருப்பு வாக்களிப்பின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும், தேசிய நலன்களை முன்னிறுத்தி செயற்படும் வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டும். மாறாக அறிமுகத்துக்காகவும், பழம்பெருமைக்காகவும், கட்சி சார்ந்தும் தெரிவுகளை மேற்கொள்ளும் பட்சத்தில், எந்த இலக்கினை முன்வைத்து மகிந்த அரசும், இந்திய வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்களும் இந்த தேர்தலை நடத்த துணிந்தார்களோ, அந்த கொள்கைகளுக்கு ஆதரவு அளித்ததாகவே முடியும். இது எமது விரல்களை கொண்டே எமது கண்களை குத்திக்கொள்வது போலாகும்.

நன்றி பொங்குதமிழ் இணையம் 

http://www.ponguthamizh.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=cb1f7cae-6f25-4d22-a33a-bbd1e561ff35

   

 

Edited by நேற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தன்னுடைய சாணக்கியத்தினால்  பொடியப்புவை மகிந்தவிற்காக உள்வாங்கியவர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும். இருந்தும் கடமையைச் செய்வோம் எந்தத் துன்பத்திற்கும் ஒரு முடிவுண்டு.

 

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்தவை தோலுரித்து உலகுக்கு காட்டவேண்டியது தமிழ் மக்களின் கடமை. அதற்கு ஒரே வழி கூட்டமைப்புக்கு வாக்களிப்பது தான்.
 
சம்பந்தர் தொடக்கம் சித்தாத்தன் வரை அனைவரும் அறிந்ததே. ஒரு மாவீரனின் கால் தூசுக்கு கூடி சமனற்றவர்கள்.

மகிந்தவை தோலுரித்து உலகுக்கு காட்டவேண்டியது தமிழ் மக்களின் கடமை. அதற்கு ஒரே வழி கூட்டமைப்புக்கு வாக்களிப்பது தான்.
 
சம்பந்தர் தொடக்கம் சித்தாத்தன் வரை அனைவரும் அறிந்ததே. ஒரு மாவீரனின் கால் தூசுக்கு கூடி சமனற்றவர்கள்.
 
ரொரண்டோவில் சம்பந்தரை புகழ்ந்த ஒரு அறிவிப்பாளர் இராஜதுரைக்கும் சம்பந்தருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதாம். இராஜதுரை ஏற்றுக்கொண்டாராம். சம்பந்தவர் ஏற்கவில்லையாம். சம்பந்தர் அப்போது வானில் பறந்ததை காணக்கூடியதாக இருந்தது. :D
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலக்கட்டத்தில் தோல்வி பேரழிவில் இருந்து நமது மக்கள் உயிர்தெழுதலை ஆதரிப்பது நம்மெல்லோரதும் தர்மீக கடமையாகும். தோற்றுப்போன நமது மீழமைப்பும் விடுதலைப் பயணம் சாத்தியப் படுவதும் சர்வதேச சமூக ஆதரவை மீட்டுக் கொள்வதுமான ஆரம்பப் பணிகளுக்கு சம்பந்தரைவிட பொருத்தமான யாரும் களத்தில் இல்லை என்பதை நமது மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். 

 

சுதந்தரம் சுகங்களோடு வாழும் நாம் நம் மக்களின் கனவுகளை புறந்தள்ளாமல் முன்னெடுத்து செல்ல துணையாக வேண்டும்.

 

மீண்டும் கூட்டமைப்பு பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் கட்ச்சி உட்பட எல்லா அரசியல் அமைப்புகளிலும் பெண்களுக்கும் சமூக பொருளாதார அடி நிலை மக்களுக்குமான பங்களிப்பு உறுதிப் படுத்தப் படும் என்பதை சம்பந்தர் இனியேனும் உறுதிப் படுத்த வேண்டும்

 

யாழ்மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே ஒரு பெண்மணியான ஆனந்தி சசீதரன் (எழிலன்) வெற்றிக்கு புலம்பெயர் சமூகம் துணை நிற்க்க வேண்டும் என கோருகிறேன்.  புதுவையாரின் ஆப்த நண்பரும் முன்னணி சூழல் இயல் அறிஞருமான ஐங்கரநேசனும் யாழ் மாவட்டத்தில் போட்டி இடுகிறார். சூழலியல் போராளியான ஐங்கர நேசன் வெற்றிபெறுவதும் காலத்தின் தேவையாகும். 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

காடு வேண்டாம் கடற்கரைக்குப்போங்கள் அமரிக்கக் கப்பல் ஏற்பாடுசெய்துள்ளோம் என்றவர்களுக்கு இது வெற்றிதான். எம் மக்களுக்கல்ல

  • கருத்துக்கள உறவுகள்

காடு வேண்டாம் கடற்கரைக்குப்போங்கள் அமரிக்கக் கப்பல் ஏற்பாடுசெய்துள்ளோம் என்றவர்களுக்கு இது வெற்றிதான். எம் மக்களுக்கல்ல

அண்ணாச்சி அது :)
  • கருத்துக்கள உறவுகள்

காடு வேண்டாம் கடற்கரைக்குப்போங்கள் அமரிக்கக் கப்பல் ஏற்பாடுசெய்துள்ளோம் என்றவர்களுக்கு இது வெற்றிதான். எம் மக்களுக்கல்ல

 

 

வணக்கம  தோழர்

நீங்கள்  தொட்டவிடயம்

மிகவும  பாரதூரமானது

 

இது பற்றிய  உண்மைகள்  தெரிந்தால் 

அவற்றை  பகிரங்கமாக

ஆதாரங்களுடன்

சாட்சிகளுடன்

யார்  யாருக்கு சொன்னார் என

நீங்கள் முன் வைக்கணும்

 

தமிழர்கள்  உண்மையை  அறியணும்

செய்வீர்கள் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்புக்கு வாக்களிப்பது தான் தமிழர் முன்புள்ளே ஒரே தெரிவு. விருப்புவாக்கை பொறுத்தவரை, மூன்றில் ஒரு வாக்கை முதன்மை வேட்பாளருக்கு போடுவதன் மூலம் முதலமைச்சர் எமது ஆணை உடைய ஒருவரே என்று உலகுக்கு உரத்து சொல்ல வேண்டும்.
 
மக்களோடு இன்றுவரை நின்று மாதம் மாதம் 4ம் மாடிக்கு போய் வரும் சிறீதரன் எம் பி விக்கினேஸ்வரனுக்கு விருப்பு வாக்கை போடுவது எமது வரலாற்றுக்கடமை என்கிறார்.
  • கருத்துக்கள உறவுகள்

 

கூட்டமைப்புக்கு வாக்களிப்பது தான் தமிழர் முன்புள்ளே ஒரே தெரிவு. விருப்புவாக்கை பொறுத்தவரை, மூன்றில் ஒரு வாக்கை முதன்மை வேட்பாளருக்கு போடுவதன் மூலம் முதலமைச்சர் எமது ஆணை உடைய ஒருவரே என்று உலகுக்கு உரத்து சொல்ல வேண்டும்.
 
மக்களோடு இன்றுவரை நின்று மாதம் மாதம் 4ம் மாடிக்கு போய் வரும் சிறீதரன் எம் பி விக்கினேஸ்வரனுக்கு விருப்பு வாக்கை போடுவது எமது வரலாற்றுக்கடமை என்கிறார்.

 

 

பயனுள்ள

தேவையான கருத்து

நன்றி

தொடர்ந்து எழுதுங்கள்

 

அசத்தல்  கருத்துக்களில்  பதிந்துள்ளேன்

சென்று  பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122378&page=7#entry926974

Edited by விசுகு

யாழ் ஏன் கூட்டமைப்பு விக்கினேஸ்வரனை முதல் அமைச்சராக தெரிந்தார்கள்  என்றதை பற்றி நான் எழுதிய கருத்தை ஒரு நியாமுமின்றி நீக்கி கூட்டமைப்பை சின்னபின்னப்படுத்த முயல்கிறது.  யாழ் ஆனந்திக்கும் வின்னினேஸ்வரனுக்கும் இடையில் ஆப்பிறுக்க முயல்பவர்களுக்கு தரகுறைவாக பாய் விரிக்கிறது. நான் எழுதிய கருத்தில் ஒரு சின்ன பிழையும் இல்லாமால் யாழ் அதை நீக்கியிருக்கு. யாழ் பொய் பிரிவினைவாதங்களை கண்டுபிடித்து முன்னேற்றும் தனி நபர்களுக்கு பிரத்தியேக சலுகை அளித்து  கூட்டமைப்பை குலைக்க விரும்புகிறது.

 

நான் எழுதிய கருத்து பிழையாக இருந்திருருந்தால் அதை யாழ் திரும்ப விவாதத்திற்கு வைத்து மற்றய உறவுகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். 

Edited by மல்லையூரான்

காடு வேண்டாம் கடற்கரைக்குப்போங்கள் அமரிக்கக் கப்பல் ஏற்பாடுசெய்துள்ளோம் என்றவர்களுக்கு இது வெற்றிதான். எம் மக்களுக்கல்ல

அவர்கள் தோற்கவும் இல்லை. அவர்களை விட்டு ஆனந்தி பிரியவும் இல்லை. ஆனந்தி அவர்களின் இலட்சியத்தை விக்கினேஸ்வரனின் மூன்றாம்கட்ட போர்மூலம் முன்னெடுக்கிறா.

இதற்குள் ஆனந்திக்கு வேறு சதங்கை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

 

அமெரிக்க கப்பல் ஏற்பாடு செய்ததாக புலிகள் எந்த காலத்திலும் சொல்லவில்லை. இது இட்டுக்கட்டு பரப்புரை கதை.

Edited by மல்லையூரான்

தோற்றுப்போன சமூகம் நாம் இல்லை : அனந்தி எழிலன்
60(1870).jpg
-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா

யுத்தக்காலத்தில் சரணடைந்து காணாமல் போன உறவுகளின் நலனிற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன் என்று நடைபெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எழிலனின் மனைவி அனந்தி தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்த காலத்தில் பலர் காணமல் போயியுள்ளனர். அவர்களுக்காகவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையையும் கருத்திக்கொண்டே நான் போட்டியிடுகி;றேன். பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் எனற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார்.

கடந்த காலத்தில் காணாமல் போனவர்களிற்காக நாம் குரல்கொடுத்து வந்துள்ளளோம் இதற்கு எமக்கு ஒரு பலம் தேவைப்பட்டது நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் காணாமல் போனவர்களின் பிரச்சினையை சர்வதேச மட்டத்திற்குகொண்டு செல்லமுடியும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் மத்தியில் நான் போட்டியிடுகின்றேன்.  தோற்றுப்போன சமூகம் நாம் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. இதுவரை காலமும் எங்கள் செய்த தியாகங்களும் சிந்திய குருதிகளும் வீண் போகாது எந்த என்பதை இந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம் என்றார்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

இன்றைய காலக்கட்டத்தில் தோல்வி பேரழிவில் இருந்து நமது மக்கள் உயிர்தெழுதலை ஆதரிப்பது நம்மெல்லோரதும் தர்மீக கடமையாகும். தோற்றுப்போன நமது மீழமைப்பும் விடுதலைப் பயணம் சாத்தியப் படுவதும் சர்வதேச சமூக ஆதரவை மீட்டுக் கொள்வதுமான ஆரம்பப் பணிகளுக்கு சம்பந்தரைவிட பொருத்தமான யாரும் களத்தில் இல்லை என்பதை நமது மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். 

 

சுதந்தரம் சுகங்களோடு வாழும் நாம் நம் மக்களின் கனவுகளை புறந்தள்ளாமல் முன்னெடுத்து செல்ல துணையாக வேண்டும்.

 

மீண்டும் கூட்டமைப்பு பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் கட்ச்சி உட்பட எல்லா அரசியல் அமைப்புகளிலும் பெண்களுக்கும் சமூக பொருளாதார அடி நிலை மக்களுக்குமான பங்களிப்பு உறுதிப் படுத்தப் படும் என்பதை சம்பந்தர் இனியேனும் உறுதிப் படுத்த வேண்டும்

 

யாழ்மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே ஒரு பெண்மணியான ஆனந்தி சசீதரன் (எழிலன்) வெற்றிக்கு புலம்பெயர் சமூகம் துணை நிற்க்க வேண்டும் என கோருகிறேன்.  புதுவையாரின் ஆப்த நண்பரும் முன்னணி சூழல் இயல் அறிஞருமான ஐங்கரநேசனும் யாழ் மாவட்டத்தில் போட்டி இடுகிறார். சூழலியல் போராளியான ஐங்கர நேசன் வெற்றிபெறுவதும் காலத்தின் தேவையாகும். 

வணக்கம் மதிப்புக்குரிய poet ஐயா. 

சர்வதேச சமூக ஆதரவை மீட்டுக் கொள்வதுமான ஆரம்பப் பணிகளுக்கு சம்பந்தரைவிட பொருத்தமான யாரும் களத்தில் இல்லை ////////// 

சம்மந்தரின் அரசியல் காலங்களை பார்க்கும் போதில் 2002 தொடக்கம் 2009 வரையான காலம் தவிர எந்த காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு இருக்கிறார். கொடிஎந்திவிட்டு அது சிங்க கோடி அம்மனின் வாகனம் என்றவரும்,இல்லை நான் முழு மனதுடன் தான் தாங்கினேன் எனவும், பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சுயநிர்ணைரிமையோடு கூடிய தேசியம் பற்றி வாதிட, இவர் மட்டும் நாங்கள் ஈழம் கேட்கவில்லை என்றும், விடுதலைபுலிகளின் வெற்றிடத்தில் நின்றுகொண்டு அவர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தியவர். இப்படி நிறைய,இருக்க இவையெல்லாம் இலங்கைக்குள் நிகழ்ந்தவை. ஐநா வின் கூட்டத்தொடர் நடைபெற்ற காலங்களில் அமர்வுகளை புறக்கணித்து,சிங்கள அரசின் நலன்களை காப்பாற்றியது யார்? குறைந்த பட்ச விளக்கங்களை கூட அந்த அவைக்கு அளிக்க  முன்வரவில்லையே.........இன்றும் புலம் பெயர் தமிழர் அமைப்புகளின் செயற்பாடுகளை காட்டமாக விமர்சிக்கும் நிலையில் தானே இருக்கிறார். அடுத்து இலங்கைக்கு வரும் நவநீதம்பிள்ளை அமையாரை சந்திப்பாரா ?பாதிக்கப்படவர்களை சந்திக்க வைப்பாரா ?

 

சம்மந்தரை விட பொருத்தமான அறிவுஜீவிகள் இருக்கின்றனர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூட்டமைப்பின் தவறுகளால் தோற்றம் பெற்ற சிவில் சமூகம்.  

 

இன்று கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் எவ்வளவு தூரம் ஜனநாயகத்தன்மை பேணப்படுகிறது?

குறைந்த பட்ச கேள்வி கேட்கும்  அதிகாரமாவது மக்களிடம் அல்லது உறுப்பினர்களிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா ?

 இவைக்கெல்லாம் யார் காரணம் என்று கூட்டமைபின் உறுப்பினர்களை கேளுங்கள் விரல் எங்கே நீழ்கிறது  என்று  தெரியும். 

 

ஐயா, உங்களின் அனுபவம் எனது வாழ்க்கை காலம். தவறுகள் இருந்தால் என்னை நெறிப்படுத்துங்கள். 

 

என்றும் அன்புடன். 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு தெளிவான பார்வையும் ஆய்வும் நேற்கொழு அண்ணா... கட்டுரையின் இறுதியில் நீங்கள் சொல்லிய செய்தி முக்கியமானது யதார்த்தமானதும்கூட...

  • கருத்துக்கள உறவுகள்

 

நேற்கொழு தாசனுக்கு வணக்கம். உங்கள் அரசியல் ஆய்வுகளை  அதிக ஈடுபாட்டுடன் தேடி வாசிப்பவன் நான். நீண்டகால அடிப்படையில் தங்கள் கருத்துக்கள் முக்கியமானவை. தாங்கள் காட்டும் மூலோபாய Strategic  இலக்குகளையா நானும் மூலோபாய இலக்குகளாக கொண்டிருக்கிறேன். நமக்குள் எழுகிற இந்த சினேக முரண்பாடு இலக்கை நோக்கிய பயணத்தை க்காலக்கட்டங்களாக பிரித்து அடைகிற அடிப்படையிலான வேலை பகுப்பு division of labor  மற்றும் தந்திரோபாயம் Tactics தொடர்பானது மட்டுமே.
 
செல்வநாயகம் காலத்தில் இருந்தே நமது போராட்டங்கள் மூல உபாய அடிப்படையில்  strategically  சரியாகவே அமைந்தது. தந்திரோபாய அடிப்படையில்தான் வெற்றிடன் அமைந்த்து. ஆரம்பத்திலிருந்தே தந்திரோபாய Tactical அடிப்படைகள்தான் பெலகீனமாக அமைந்ததுt தோல்விக்கு இட்டுச்சென்றன. தந்திரோபாயத்தை வழி தவறல், இடை தங்கல், அடிப்படை நோக்கத்துக்கு விரோதமாகவே பார்க்கப் பட்டது. என் அனுபவத்தில் இருந்து எதனையாவது நான் மதிக்கிற ஆய்வாளர்களுக்கு இதனைத்தான் சொல்ல முடியும்.
 
இன்றைய காலக் கட்ட பணிகள் விடுதலையை நோக்கிய நகர்வை சாத்தியமாக்கும் படி முறை தந்திரோபாயத்தின் முதற்கட்ட நடவடிக்கை பற்றியதே. இந்த பணியை முஸ்லிம்களும் ஓரளவுக்கு ஏற்க்கக்கூடிய வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதிநிதிகள் இன்று  தேவை.அத்தகைய ஒரு தலைவர் மேற்க்கு நாடுகளுடனும் இந்தியாவுடனும் பேசக்கூடியவராக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த ஆரம்பகால பணியை முன்னெடுக்க சம்பந்தர் முக்கியம் என்கிறேன்
 
அடுத்த அடுத்த காலகட்டங்களில் இணைந்த வடகிழக்கு சிவில் சமூகம் மேம்படும்போது உங்கள் கருத்துக்கலின் அடிப்படையில் நாம் செயல்படக்கூடும் 
 
தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் ஆய்வுகளின் பிரதிகளை எனக்கும் அனுப்பி வையுங்கள்.
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கூட்டமைப்பை ஆதரிப்பதா இல்லையா என்ற கேள்வி கேட்கப்படவில்லை
கூட்டமைப்பில் உள்ள வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பதுதான் கேள்வி.
 

தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்களை ஆதரிக்க வேண்டும் அவர்களை விருப்ப வாக்குகள் மூலம்
வெற்றியடையச்செய்ய வேண்டும்
 

கூட்டமைப்பின் தெரிவுகள் எல்லாம் மக்களுடைய தெரிவுகள் அல்ல சிலவேட்பாளர்கள் அதன் தலைமைகளினால் உட்புகுத்தப்பட்டுள்ளார்கள் அவர்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

 

கூட்டமைப்பின் பா உ களே கேள்விகள் கேட்க முடியாத நிலை கூட்டமைப்பில் இருக்கும் போது மக்கள் எப்படிக் கேள்விகளைக் கேட்க முடியும்.

கூட்டமைப்புத் தான் அறுதிப் பெரும்பான்மையுடன் வெல்ல வேண்டும்
 

அதற்காக அதன் தலைமை இந்த வெற்றியை தன்னுடையதாக்க முடியாது.

சம்பந்தர் இல்லாத கூட்டமைப்பை மட்டுமே மக்கள் விரும்பினாலும்
நாங்கள் அதற்காகச் சில காலங்கள் பொறுத்திருக்க வேண்டும். தேச நலன் விரும்பிகள் சிதைந்திருப்பது சம்பந்தருக்கு அனுகூலமாக இருக்கலாம்

ஈழ மக்களுக்கு அதனால் மிகப் பெரிய பாரிய பின்னடைவை ஏற்படும் 

கருத்து கூட்டமைப்பில் சம்பதரின் இடத்தை ஏற்றுகொள்வது மாதிரி ஆரம்பித்தாலும் கருத்தின் பிரதான தலைப்பு(Main Topic) சம்பந்தரின் தலைமை மீது கேள்வி எழுப்பியிருக்கிறது. சம்பந்தர் நடுவு நிலையை இனித்தானும் கைக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறது.

 

மீண்டும் கூட்டமைப்பு பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் கட்ச்சி உட்பட எல்லா அரசியல் அமைப்புகளிலும் பெண்களுக்கும் சமூக பொருளாதார அடி நிலை மக்களுக்குமான பங்களிப்பு உறுதிப் படுத்தப் படும் என்பதை சம்பந்தர் இனியேனும் உறுதிப் படுத்த வேண்டும்.  

 கருத்தின் பிரதான அம்சம் இதுதான்.

 

1. இதில் சம்பந்தரின் நடுவு நிலையை கேள்விக்குறியாக்குவது. 

   a).பெண்களில் பிரதிநிதித்துவம். மூவரை உள்வாங்கியும் ஆனந்தி மட்டுமே சுட்டிக்காட்டப்பட்ருக்கிறா.

   b). பொறுளாதார கீழமட்ட மக்களின் பிரதிநிதித்துவம் இதில் சம்பந்தர் குற்றம் சட்டப்பட்டிருந்தாலும், போட்டியிடும்  மற்ற வேட்பாளர்களின் பொருளாதார நிலைமைகள் பற்றி ஆராயப்படவில்லை. இது வேண்டுமென்றே தவிர்க்கபட்டு சம்பந்தரிடம் உறிதி மொழி கேட்க்கப்பட்டதா  அல்லது, அதை ஆராய, வேட்பாளர்கள் பற்றிய போதிய அறிவு இருக்கவில்லையா தெரியவில்லை.

 

இந்த தேர்தலில் கூட்டமைப்பின் மீது இதுவரையில் எய்யப்படும் பிரதான பாணம் மேட்டுக்குடி வேட்பாளரை தெரிந்தமை என்பதாகும்.  இந்த பாணம் எதிராளர்களின் இரண்டு நோக்கங்களை பிரதி பலிப்பது.  இன்று கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவை சிக்கலாகுவது. மற்றயது வாக்காளர்களை குழப்புவது.

 

1.விக்கினேஸ்வரன் மேட்டுக்குடி என்பதால் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல என்று நிரூபிக்கும் முயற்சி. இது கூட்டமைப்பின் பிரதான நோக்கமான சட்டப்பாண்டியத்தியம் கொண்ட வேட்பாளர் என்ற அடைப்படையை உடைக்க முயல்வது. கேட்டுக்கேள்வி இல்லாமல் சட்டத்தில் நல்ல பாண்டித்தியம் உள்ள்வர்கள் எல்லோரும் வாழ்க்கையில் நல்லாக மட்டும்தான் இருக்க முடியும். என்வே கூட்டமைப்பு, மேட்டுக்குடிவேட்பாளர்களுக்கு போகிறதென்ற கூச்சல் உண்மையாக பிழையான பிரதிநிதுவம் கூட்டமைப்பில் ஏற்பட்டத்தாக  இருக்க வேண்டும்மென்பதல்ல. அது ஒரு கூட்டமைப்பின் மீது வைக்கப்படும் எதிர் பிரச்சார உத்தி மட்டுமே.  தமிழரசுக்கட்சியோ, தமிழ் காங்கிரசோ, கூட்டமைபஸ்தங்கள் காலத்திய பிரபல்யங்களை சேர்த்து மட்டும்தான் அரசியல் செய்து வருகிறது. அவர்களை மட்டும்தான் சாதியில் தாழ்ப்பட்டோரும், பொருளாதார கிழ்நிலை மக்களும் ஆதரித்து வந்துளார்கள். V. பொன்னம்பலம், காராளசிங்கம், சண்முகநாதன், வலகம்பாகு, இவர்கள் தாங்கள் பொருளாதார கீழ்மட்ட, தாழ்த்தபட்ட சமூக பிரதிகளாக  காட்டிக்கொள்ள நடித்தும் மக்களால் ஏற்றுகொள்ளப்படவில்லை. கூட்டமைப்பு 2/3 பிரத்திநிதுவம் தேடும் போது இப்படியான வேட்பாளர்கள் தேவை என்பது எத்தகைய அரசியல் ஆய்வு என்பது விளங்கவில்லை. ஆனால் இது கூட்டமைப்புக்கு ஆபத்தான பாதை என்பது தெரிகிறது. யதார்த்தம் என்னவென்றால் மக்கள் தம்முள் இருக்கும் பிரிவினைகளை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய முயன்றால் அந்த கட்சியை நிராகரிக்கிறார்கள். "உரிமை பற்றி உங்கள் கொள்கை" என்ன என்பது அவர்களின் தெளிவான கேள்வி. இதை சட்டிக்குள் போட்டு மூடி பிரிவினைப் பிரதிநிதித்துவங்களை முன்னெடுப்பது ஆபத்தானது என்பது வடக்கு கிழக்கு அரசியல் விளங்கியவர்களுக்கு விளங்கும். மேட்டுக்குடித் தவிர்ப்பு என்ற போர்வையில் விமல் வீரவன்சா, தேவானந்தாவோ, பிள்ளையானோ போன்ற வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் எடுபட மாட்டார்கள்.

 

2. அரசு சீன, சிங்கள கம்பனிகளைக்கொண்டுவந்து வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற மாயையை கிழப்புகிறது. கூட்டமைப்பு தெளிவாக உரிமை பற்றி இந்த தேர்தலில் பேச வேண்டும். எனவே இதில் தாழ்பட்ட மக்களிடம் சென்று உங்களுக்கு தேவையானது அபிவிருத்தி, அதற்கு முக்கியம் உங்கள் பிரதிநித்துவம் என்பதா, அல்லது தமிழர் எல்லோருக்கும் தேவையானது உரிமை என்றும் அதற்கு தேவையானது படித்த விபரம் அறிந்த பொது வேட்பாளர்கள் என்பதா என்ற கேள்வி ஆராயப்படவேண்டும். 

 

இனி முதலாவதை "இந்த பணியை முஸ்லிம்களும் ஓரளவுக்கு ஏற்க்கக்கூடிய வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதிநிதிகள் இன்று  தேவை.அத்தகைய ஒரு தலைவர் மேற்க்கு நாடுகளுடனும் இந்தியாவுடனும் பேசக்கூடியவராக இருக்க வேண்டும்." என்ற கருத்தின் கீழ் ஆராய்ந்தால் இது யாழ்களத்தில் பல எதிர்ப்புக்களை கிளறத்தக்க உண்மைகள் புதைந்திருக்கின்றன. (மேர்கு நாடுகளும் இந்தியாவும் ஒரே கொட்டில் பயனிக்க வில்லை.மேற்குநாடுகள் ஐ.நா பிரேரணைகளை சுதந்திரமாக விவாதிக்க விரும்புகின்றன. இந்தியா இதை முடக்குகிறது   இந்தியா 13ம் திருத்தத்தை திணிக்கிறது. எனவே இரண்டும் இரே நேரத்தில், இன்றைய சூழ் நிலையில் ஒத்துவராது) 13ம் திருத்ததை ஏற்பது, இந்தியாவின் தீர்பை என்ற கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, பிரதான வேட்பளாராக இருக்கும் விக்கினேஸ்வரனுக்கும், ஆனந்திக்குமிடையில் பக்கம் சார் பண்புகளில் நிறையத்தான் வேற்றுமை இருக்கிறது. ஆனந்தி புலிகளுடன் நேராக தொடர்பு கொண்டிருந்தவ. ஆயுத போராட்டம் தோல்வி அல்ல என்று அறிக்கை விடுபவ. 13ம் திருத்தாம் எதையும் கொண்டுவராது என்று நம்புபவ.  ஆனந்தி சம்பந்தமாக இந்தியா, சரவதேச அங்கீகாரம் என்ன என்பனஆராயப்படாதவை.   விக்கினேஸ்வரனின் நியமனம், கூட்டமைப்பு தனது புதிய 3ம் கட்ட போராட்டத்தில் புலிகளுடன் தொடர்பில்லை என்று சர்வதேசத்துக்கு காட்ட தெரிவு செய்யபட்ட வேட்பாளர். 13ம் திருத்ததை ஆரம்பமாக கொண்டுதான் அரசுடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க இருப்பதாக கூறுபவர்தான் விக்கினேஸ்வரன். அவரின் எதிரிகள் கூட, சட்டத்தில் அவர் நேர்மையான நீதிபதி என்று கூறுவதும், அவரின் கல்வி, உத்தியோக நிலைமையும் அவர் வெளிநாடுகள் ஏற்கத்தயாராக இருக்கின்றன என்பதை பல தடவை வெளிவந்த செய்திகள் காட்டிவிட்டன. 

இந்த உள்ளகங்களை ஆராயமல் எப்படியான பிரதிநிதிகளை சம்பந்தர் நியமிக்க வேண்டும் என்று கருத்து எழுதுவது ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பை நிறவேற்றுவதாகும். ஆனந்தி போன்ற்வர்களைல் ஒரு பங்கையும், விக்கினேஸ்வரன் போன்ற்வர்களில் ஒரு பங்கையும் போட்டு, கூட்டமைப்பு, தாங்கள் எந்த பக்கமும் தீவிரவாதமில்லாதவர்களாகவும், ஒரே நேரத்தில் தமிழரையும் சரவதேசத்தையும் திருப்தி படுத்த முயல்பவர்களாவும் தங்களை காட்டியிருக்கிறார்கள்.

 

இதன் பின்னர், பெண்கள் பிரதி நிதித்துவம், தாழ்ந்த மக்கள் பிரதிநிதித்துவதம் போன்றவை சரியாக இல்லை என்றதை சம்பந்தர் மீது சாட்ட முதல் கூட்டமைப்பில் 5 பிரதான கட்சிகள் இருக்கு என்றதை விளங்கிக்கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் தெரிவு அந்த அந்த கட்சியுனுடையது. இதற்கு சம்பந்தரிடம் உத்தரவாதம் கேட்பது பொருள் அற்ற முயற்சி. சம்பந்தர் தனிக்கட்சி கொள்கைகளை தீர்மானிக்க முடியாது. சம்பந்தரே ஒரு மேட்டுக்குடி. அதாவது ராஜவரோதயம் போன்ற புகழ் வாய்ந்த குடும்பத்தவர். இப்போ சுரேஸ் தனது தம்பியை தேர்தலில் இறக்குகிறார். இதை மக்கள் வாக்களிப்பின்போது தீர்மானிக்க வேண்டுமேயல்லாமல் சம்பந்தர் தீர்மானிக்க முடியாது.  என்வே யார் வேட்பளராக வருகிறார் என்பது கூட்டமைப்பின் கட்சிகளின் தெரிவே அல்லாமல் சம்பந்தரின் உத்தரவாத்தால் வரும் என்று கூற முயல்வது அசியல் விளக்கம் குறைவால் வருவது. 

 

எனவே கட்ட்டளை இடுவது போல சிலர் அடிக்கடி கூட்டமைப்பின் தேர்தலை சிதைக்க தக்க வழியில், ஒன்றில் வேணுமென்றோ அல்லது தீர்க்கமான அரசியல் ஆய்வு செய்யாமலோ வந்து, கவிஞகின் பியர்திநித்துவம் வேண்டும், பெண்களின் பிரதிநித்துவம் வேண்டும், தாழ்த்தபட்டவர்களின் பிரதிநித்துவம் வேண்டும் என்னும் போது அது தற்கால அரசியல் சூழ்நிலையை மீறி ஏற்று நடக்கடியதொன்றல்ல. இலட்சிய வேட்பாளர் கலவையின் பிரயோசனம் மாகாண சபைக்கு அதிகாரம் இருந்தால் மட்டுமே பாவிக்கலாம். இன்று அதை கேட்பது 13ம் திருத்தம் வேண்டும் என்று வாதிடுவோரால் மட்டுமே செய்யப்படுகிறது.  இன்று தேவைப்படுவது பன்முக போராளிகள். விக்கினேஸ்வரன்.. ஆனந்தி..

Edited by மல்லையூரான்

 பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சுயநிர்ணைரிமையோடு கூடிய தேசியம் பற்றி வாதிட, இவர் மட்டும் நாங்கள் ஈழம் கேட்கவில்லை என்றும், விடுதலைபுலிகளின் வெற்றிடத்தில் நின்றுகொண்டு அவர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தியவர். இப்படி நிறைய,இருக்க இவையெல்லாம் இலங்கைக்குள் நிகழ்ந்தவை. ஐநா வின் கூட்டத்தொடர் நடைபெற்ற காலங்களில் அமர்வுகளை புறக்கணித்து,சிங்கள அரசின் நலன்களை காப்பாற்றியது யார்? குறைந்த பட்ச விளக்கங்களை கூட அந்த அவைக்கு அளிக்க  முன்வரவில்லையே.......

உங்கள் கேள்வி இரண்டு எதிர் திசை கருத்துக்களை இணைக்கிறது. இதற்கு பதில் அளிக்க வேண்டியவர்கள் தப்புதல் முயற்சிகளில் இறங்குவது அவர்கள் நீங்கள் கேட்க்கும் கேள்வின் எதிர் திசையில் தங்கள் அபிப்பிராயங்களை கொண்டிருந்தார்களா என்று கேள்வி எழுகிறது. 

 

நீங்கள் சம்பந்தர் ஐ.நா பிரேணைகளில் புலிகளில் இருந்து விலத்தினார் என்று குற்றம் சாட்டும் போது இந்த களத்தில் சம்பந்தர் புலிகளாக பார்க்கப்படுவதால் ஐ.நா கூட்டத்தொடர்களிலிருந்து விலத்த வேண்டும், அதில் பங்கு பற்றக்கூடாது என்று வாதிட்டவர்கள் உண்டு. இதனால் சம்பந்தர் கூட்டத்தொடரில் பங்கு மற்றாமல் விட்டிருக்கலாம். சம்ப்ந்தர் 19ம் தொடரில் சறுக்கியதற்கான காரணம் வெளியே வர வேண்டும்.உண்மைகள் வெளிவர வேண்டும். இந்த கேள்வி ஒரு பதில் அளிக்கப்பட வேண்டிய கேள்வி. 

இதில் என்ன ஆச்சரியம் என்றால் அனந்தியை புகழ்ந்து அவரை கூட்டமைப்பிலிருந்து பிரிக்க முயல்வோர் அவரை ஆதாரித்து இப்படித் திரிகளில் எழுதுவதில்லை.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127907&p=928671

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127851&page=2#entry928676

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.