Jump to content

உல்லாசக் கடற்கரை + உதைபந்தாட்ட மைதானம் = உல்லாசபுரி ( BARCELONA ).


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துக்களும் இணைப்புக்களும் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  21ம் திகதி புதன் கிழமை .எமது திட்டப் படி இன்று உலகப் பிரபலமான  camp nou  உதைபந்தாட்ட  மைதானத்துக்குப் போகப் போகிறோம்.

நான் வழக்கம்போல் காலை 6.00 மணிக்கு முன்பே எழுந்து விட்டேன். தோய்ந்து விட்டு பர்சிலிருந்து திருநீறும் எடுத்துப் பூசிக்கொண்டு வெளி விறாந்தையில்  நின்று மனதுக்குள்ளே சாமி கும்பிட்டு விட்டு (நல்லூர்  பத்தாம் திருவிழா, கந்த சஷ்டி கவசமும் சொல்லி) விரதத்துக்கு  மத்தியானச் சாப்பாடும் எனக்குச் சரிவராது ,எதோ சமாளிப்பம் என நினைத்துக் கொண்டு போய் மகனை எழுப்பினேன் . டேய் தம்பி போய் காரை எடுத்து பக்கத்தில விட்டுட்டு  வாடா என்று சொன்னான். அவரும் அப்பா இப்பதான் 7.00  மணி  கொஞ்சநேரம் படுத்துட்டு போய் எடுத்து விடுறன் எண்டான். 

உது சரிவராது எண்டிட்டு  நான்   வெளிக்கிட்டுக் கொண்டு காரின் காட்டையும் (சாவி) எடுத்துக் கொண்டு கீழே வந்தேன்.கீழே ஒரு கோப்பி பார் இருந்தது. நான் காரருக்குக் கிட்டப் போய் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு  இன்னும் எட்டாகவில்லை , ஒரு  கோப்பி குடித்துட்டு வந்து எடுப்பம் என நினைத்துக் கொண்டு பாருக்கு வந்து  ஒரு கபே கிராம் (பால் கோப்பி ) பெரிய கப்பில் ஓடர் பண்ணிவிட்டு ,வீதியில் இருந்த கதிரையில் காரை பார்க்கக் கூடியவாறு வந்தமர்ந்து கொண்டேன். பார் பெண்மணியும் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டு கொஞ்சம் தாமதமாக எனக்குக் கோப்பியும் கொண்டுவந்து தந்தா.எனக்கும் அவசரமில்லை  அதி இருந்த ஒரு புத்தகத்தைப் பிரட்டிக் கொண்டு கோப்பியை இரசிச்சு ஒரு மிடறு குடித்தேன். நிஜமாகவே நுரையுடன் நல்ல சுவையாய் இருந்தது. அப்படியே திரும்பிக் காரைப் பார்த்தேன்.  அதிர்ந்து போனேன்.....  எந்தப் பக்கத்தால் வந்தாங்கள் எண்டு தெரியவில்லை , காரைத் தூக்கிற ஒரு வண்டி எனது காரின் அருகே நிக்க  ஒருத்தர்  காரை இலக்கத் தகட்டுடன் சேர்த்து படம் எடுத்துக் கொண்டிருந்தார். நான் சுதாகரித்துக் கொண்டு பொக்கட்டில்  இருந்து பத்து € வை த்து விட்டு கடைக்குள் இருந்த பெண்ணிடம் கை காட்டிவிட்டு வெளிய  ஓடிக் காருக்குக் கிட்டப் போனேன் . அங்கு அவர்களிடம் அது எனது கார் என்றும் நான் அங்கெ கபே குடித்துக் கொண்டு இருந்தனான் என்று அவர்களிடம் விளக்கி ஆங்கிலமும் , பிறேஞ்சுமாய் கலந்தடித்து முகத்தையும் பரிதாபமாய் வைத்துக் கொண்டு  நிண்டன். பக்கத்தில்  இருந்த பார் பெண்ணும் வேகமாய் வெளியே ஓடிவந்து எட்டிப் பார்க்க ( அவ நினைத்திருப்பா இவன் காசு தராமல் ஓடுறான் எண்டு.)அவங்களும் ஒருமாதிரி  ஏன்ட வழிக்கு வந்து தாங்கள் திரும்பி வரும்போது கார் இந்த இடத்தில இருக்கக் கூடாது எண்டு சொல்லி விட்டுப் போனார்கள். அவர்கள் முகத்தில் முதல் பிடித்த மீன் அல்லாவுக்கு ஏன்டா மாதிரி இருந்தது. (ம் ..யாரிட்ட  லாசப்பலில உப்படி எத்தனை பார்த்தது. உள்ளுக்க உதறல்தான்.)

 

பின் நான் காரை எடுத்து கொஞ்சம் தள்ளி ஒரு நீலக் கோட்டு தரிப்பிடத்தில் நிறுத்தி ரசீதும் எடுத்து வைத்து விட்டு திரும்பி பாருக்கு வந்தேன்.மீண்டும் ஒரு கோப்பி வாங்கிக் குடித்தேன். அப்பெண்ணும் ஒரு கோப்பிக்கு மட்டும் பணம் எடுத்துக் கொண்டு மிச்சத்தத்  தந்தா. பிறகு பிள்ளைகளும் வெளிக்கிட்டுக் கொண்டு கீழே வந்தார்கள். நாங்கள் உதைபந்தாட்ட மைதானத்துக்குக் கிளம்பினோம்.

 

555809_640114699340922_1943435807_n.jpg

 

 

1150870_640116559340736_1002322820_n.jpg

 

 

 

1146495_640116536007405_432488142_n.jpg

 

 

மீண்டும் வருவேன்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் காலை பத்து மணியளவில் Camp nou மைதானத்துக்கு சென்று விட்டோம்.தூரத்தில் அந்த மைதான கட்டிடத்தைப் கண்ட போதே காருக்குள் இருந்து பிள்ளைகள் எல்லாம் கிரீச்சிட்டுக் கத்தத்  தொடங்கீட்டினம். அரோகரா சொல்லாததுதான் குறை. (நான் கொஞ்சம் கூட மிகைப்படுத்திச் சொல்லவில்லை.) நாம் ஊரிலே  தூரத்தில் கோவில் கோபுரத்தையோ அல்லது தேரில் சுவாமியையோ பார்த்ததும் எப்படிப் பரவசப் படுவோமோ அவ்வளவு உணர்வுடன் கண்கள் விரிய முகமெல்லாம் சிரிப்பாகப்  பார்த்தார்கள். பின் வாகனத்தை ஒரு தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு இது காசு இல்லாத தரிப்பிடம். முன்வாசல் வழியாக உள்ளே போனோம். அந்த மைதானத்துக்கு பல வாசல் உண்டு. (ஒராள் தாண்டக் கூடிய மாதிரி சுத்திவர மதிலோடு இருக்கும் நம்ம இந்துக் கல்லூரி மைதானம் மாதிரி வராது.) :rolleyes:  அங்கெ பார்த்தால் இவர்களைப் போன்ற இளம்  பொடி, பொட்டையல்  எல்லாம் விழுந்து உருளாத குறையாக ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் ....! இவர்கள் பரவாயில்லை என நினைத்துக் கொண்டேன். இத்தனைக்கும் அன்று ஒரு சாதாரண நாள். எந்த விளையாட்டும் நடைபெற வில்லை. இதுக்கே இப்படியெனில்  விளையாட்டு நடைபெறும் நாளில் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்....!

 

அங்கு  உள்ளே செல்ல ரசீது வாங்க வேண்டும்.பெரியவர்களுக்கு  இருபத்தி மூன்று ஈரோவும் , மாணவர்களுக்கு பதினேழு ஈரோவும். மாணவர்கள் அத்தாட்சிப் பத்திரம் காண்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கும்  இருபத்தி மூன்றுதான். என்னிடத்திலும் ஒரு பிள்ளை அது கொண்டுவராத படியால்  இருபத்தி மூண்டு ஈரோவுக்கு ரசீது எடுத்தோம். சும்மா தூறல் மாதிரிச் சனம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.  

 

முன்னுக்கே ஒரு விளையாட்டுப் பொருட்களின் கடை வைத்திருக்கிறார்கள். அங்கு ஒரிஜினலான  முத்திரையுடன் கூடிய விளையாட்டு உடுப்புகள், பந்துகள் இன்னும், இன்னும் ஏராளமான சாமான்கள் எல்லாம் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் . எல்லாம் சரியான விலை. ஒரு ரி . சேட்  100 € விலிருந்து  மேலே .... .அந்தக் கடையை  கடந்து போய் ரசீதைக் காட்டிவிட்டு உள்ளே போகின்றோம். நடைபாதை  நடுவில் விளையாட்டு வீரர்களின் அசைந்து கொண்டிருக்கும்  விளம்பரங்கள்.அதனூடாகப் போனால் ஒரு பெரிய மியூசியம் இருக்கு .அதை மியூசியம் என்பதைவிட  பார்சிலோனா விளையாட்டு வீரர்கள் கடந்த காலங்களில் எல்லாம் பெற்ற வெற்றிக் கிண்ணங்கள், தங்கப் பந்து,தங்கச் சப்பாத்துக்கள், சான்றிதழ்கள், பிற நாட்டுத் தலைவர்கள் ,முக்கிய பிரமுகர்கள் போன்றோரின் வருகைக்கான அத்தாட்சிப் பொருட்கள் , திரு . ஒபாமா அவர்கள் உட்பட சிலர் பார்சிலோனா விளையாட்டு ஆடைகள் அணிந்து விளையாடியது, கௌரவிக்கப் பட்டது என ஏராளமான விடயங்கள் மிக,மிக அழகாக  காட்சிப் படுத்தப் பட்டிருந்தன. பார்க்கும் இடமெல்லாம் மேசைகள் ,சுவர்கள் என்று எல்லா இடமும்  தொடு திரையில் இயங்கக் கூடிய தொலைக் காட்சிகள். மிகப் பெரிய நீளமான மேசைகளில் சி.டி.க்களை பரப்பிவைத்தமாதிரி  இருக்குது! அதில் பல்வேறு விளையாட்டுக்களில்  நடைபெற்ற விளையாட்டின் முக்கியமான தருணங்கள் பதியப் பட்டிருக்கு. நீங்கள் மெர்சியின் காலில் பந்து போன்ற சி .டியைத் தொட்டால் ஒரு கலண்டர் அளவுக்குத் திரை விரிந்து மெர்சி வேகமாய்க்  கோல் அடிப்பதும் எதிரணிக் காப்பாளர்  ஞே  என்று முழிக்கிரதையும்  பார்த்து ரசிக்க முடியுது.

ஓரிரு இடங்களைத் தவிர மற்ற எந்த இடத்திலும் நீங்கள் உங்களது புகைப்படக் கருவியைக் கொண்டு படங்களோ வீடியோவோ எடுக்கலாம்.  எல்லா இடத்திலும்  விளையாடு நடைபெறும் போது  மைதானத்தில் இருக்கும் பெரும் கூச்சலும்,விசிறிகளின் விசில் சத்தங்களும் மிகவும் சன்னமாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. அது... விளையாட்டு நடைபெறும் போது நீங்களும் அங்கெ இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றது. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் மனம் இலேசாகவும், உடல் முழுதும் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிற மாதிரியும் இருக்கின்றது. 

 

1234454_640114682674257_1914313868_n.jpg

 

 

536964_640114722674253_648080168_n.jpg

 

 

1231541_640114739340918_1490283109_n.jpg

 

 

1002625_640115366007522_452843796_n.jpg

 

 

1229857_640115512674174_480659995_n.jpg

 

மீண்டும்  இரு வாரங்களின் பின் வருவேன்:

 

 பி.கு:  அநேகமாய்  நாளை  பெர்லினுக்கு போக இருக்கின்றேன் . பிறகு வந்து உங்களுக்கு இம்சை தாரன். :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுவரை நாங்களும் காத்திருப்போம்
சும்மா சொல்லக்கூடாது சுவி அண்ணாவின் வருணிப்பு
அந்த மாதிரி  இருக்கின்றது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிக்கிடமுன்  ஒரு பிட்டைப் போட்டுட்டுப் போவம் என்று...

 

1157723_640115772674148_1774470019_n.jpg

 

lional merssy  2009 ல் இருந்து  2012 வரை தொடர்சியாக நான்கு தங்கப் பந்துகள் இந்தமாதிரிப்  பெற்றிருந்தார்.இவைகளுடன் நின்று படமெடுக்க ,வீடியோ எடுக்க முடியும்.

 

1174961_640115242674201_898575427_n.jpg

 

 

548361_640115306007528_1024253080_n.jpg

 

1184785_640115456007513_1761685833_n.jpg

 

 

995468_640115712674154_1603442358_n.jpg

 

 

 

மீண்டும்  வருவேன்:

 

 

 

 

Link to comment
Share on other sites

அதுவரை நாங்களும் காத்திருப்போம்

சும்மா சொல்லக்கூடாது சுவி அண்ணாவின் வருணிப்பு

அந்த மாதிரி இருக்கின்றது

Link to comment
Share on other sites

சுவி அண்ணா வர்ணனை அருமையாக உள்ளது. மீண்டும் சந்திக்கலாம்.பேர்லின் பற்றியும் எழுதுவீர்கள் தானே??

Link to comment
Share on other sites

வாழ்த்துகள், குருஜி. நீங்கள் திறமையானவர், பண்பானவர், இனிமையானவர். இவைபோலவே உங்கள் வாழ்க்கையும் உள்ளது மகிழ்ச்சி. உங்களிற்கு மகள்/கள் உள்ளவிடயம் அறிந்தது. ஆனால், மகன்/கள் அதுவும் திருமணம் செய்து உள்ளார்/கள் எனும் செய்தி புதிதாக உள்ளது. உங்கள் பதிவுகளில் ஏதாவதில் இதுபற்றி இதுவரை காலமும் குறிப்பிடாதது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் இளமைக்காலத்தில் உதைபந்து ஆடியுள்ளீர்களா? ஏதாவது தருணம் வரும்போது உங்கள் இளமைக்கால வாழ்வு பற்றியும் எழுதுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள், குருஜி. நீங்கள் திறமையானவர், பண்பானவர், இனிமையானவர். இவைபோலவே உங்கள் வாழ்க்கையும் உள்ளது மகிழ்ச்சி. உங்களிற்கு மகள்/கள் உள்ளவிடயம் அறிந்தது. ஆனால், மகன்/கள் அதுவும் திருமணம் செய்து உள்ளார்/கள் எனும் செய்தி புதிதாக உள்ளது. உங்கள் பதிவுகளில் ஏதாவதில் இதுபற்றி இதுவரை காலமும் குறிப்பிடாதது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் இளமைக்காலத்தில் உதைபந்து ஆடியுள்ளீர்களா? ஏதாவது தருணம் வரும்போது உங்கள் இளமைக்கால வாழ்வு பற்றியும் எழுதுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளேன். 

 

கரும்பு ஏதோ ஒரு திரியில் அவர் தனது மகளுக்கு திருமணம் என எழுதியிருந்தார்.நாங்களும் வாழ்த்தி இருந்தோம்.நீங்கள் யாழுக்கு ஒழுங்காக வாறதில்லை என்ட படியால் உங்கள் கண்ணில் படவில்லை போல :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  மிஷ்சு , ஒரு குடைக்கு  6 ஈரோ , மற்றும் ஒவ்வொரு கதிரைக்கும் ஆறு,ஆறு ஈரோ மொத்தமாய் 24 ஈரோ என்றார்.  , நான் பர்ஸ் எடுப்பதா என்று யோசிக்க ....... , பிள்ளைகள் கொஞ்சமும் யோசிக்காமல்  துவாய்களை   எடுத்து சற்றுத் தள்ளி மணலில் போட்டு விட்டு அமர்ந்து கொண்டனர். ஆகா இவங்கள் எல்லாம் விபரமாத்தான் இருக்கிறாங்கள். 

 

 

 

 

கிகிகி.. :D

 

 

 

இதை எழுதும்போது:

 

கண்கள்: அடியே பேனையே! நான் பர்த்தது  எதுவும் நீ எழுதவே இல்லையே , அப்பா நீ எழுத மாட்டியா!

பேனை:  சீ ... போடி  வெட்கம் கெட்டவளே, அதெல்லாம் நான் எழுத மாட்டேன் போ ..... எனக்கெண்டு ஒரு இது...    ஆங்  ...அதுதான் இமேஜ்  இருக்கு  உனக்குத் தெரியாதா!

கண்கள்:  ம்..... உண்ட இமேஜும்  புண்ணாக்கும். எனக்குத் தெரியாதா உன்னைப் பற்றி!

 

பேனா: இப்ப என்னத்தை எழுதச் சொல்லுறாய், ஆயிரக் கணக்கானவர்கள்  இருந்த இடத்தில ஒரு ஐம்பது , நூறு பேர்  மேலாடையுடன் இருந்தாங்களே அதைச் சொல்லுறியா!

 

கண்கள்: ம்... இவ  பெரிய  இவ்வாட்டம் , இல்லாதத விட்டிட்டு  இருக்கிறத எழுதப் போறாவாம்!

கண்கள் மூடிக் கொள்கின்றன!

 

 

 

கிகிகி.. சுவி அண்ணாக்கு தொண்டை வரை வருது...ஆனால் பிரக்கடிக்குது.. :D

கூச்சப்படாமல் ஜெர்மனியால் வந்ததும் மிச்சத்தை எழுதுங்கள் அண்ணா.. :D

அருமை..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுமார் பதினெட்டு நாட்களின் பின் அன்பு உறவுகளைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனது பெர்லின் பிரயாணம் நன்றாகவே இருந்தது.

பின் அங்கிருந்து பாரிஸ் வந்து தம்பி சுபெசையும் சந்தித்து , மீண்டும் கட்டுக்கு ... சீ  ... வீட்டுக்கு  வந்து  சேர்ந்தாச்சுது. நுனாவின் கருத்தும் கவனத்தில் உள்ளது. எல்லாம் தயார்ப் படுத்திக் கொண்டு பெர்லின் பற்றியும் எழுத விருப்பம்.

 

 

வாழ்த்துகள், குருஜி. நீங்கள் திறமையானவர், பண்பானவர், இனிமையானவர். இவைபோலவே உங்கள் வாழ்க்கையும் உள்ளது மகிழ்ச்சி. உங்களிற்கு மகள்/கள் உள்ளவிடயம் அறிந்தது. ஆனால், மகன்/கள் அதுவும் திருமணம் செய்து உள்ளார்/கள் எனும் செய்தி புதிதாக உள்ளது. உங்கள் பதிவுகளில் ஏதாவதில் இதுபற்றி இதுவரை காலமும் குறிப்பிடாதது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் இளமைக்காலத்தில் உதைபந்து ஆடியுள்ளீர்களா? ஏதாவது தருணம் வரும்போது உங்கள் இளமைக்கால வாழ்வு பற்றியும் எழுதுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளேன். 

 

வாழ்த்துக்கள் குருஜி!  எனக்கு ஒரு மகள் . அவள் ஒரு பொறியியல் பட்டதாரி. திருமணமாகி இப்போ ஒரு குழந்தை (பேரன்) இருக்கின்றான். இரு மகன்கள் அவர்கள் படித்துக் கொண்டு இருக்கினம். இனியொரு  மகனோ,மகளோ அல்லது இரண்டுமோ பிறந்தால் சொல்கிறேன். நான் யாழ் இந்துக்கல்லூரி  அன்மையைச் சேர்ந்தவன் என்பதால் விளையாட்டுக்களில் விருப்பம் உள்ளவன். நான் நிறைய கிரிக்கட், கால்பந்து விளையாடி இருந்தாலும் கல்லூரி டீமில் சேர முடியவில்லை. காரணம் என்னைவிட நன்றாக விளையாடிய  பதினோரு பேரைத்தான் அவர்கள் சேர்த்துக் கொண்டவை. என்ன இருந்தாலும் கல்லூரி மானம் ரொம்ப முக்கியம் இல்லையா !

 

1236925_640115566007502_445979847_n.jpg

 

 

548348_640115579340834_526645247_n.jpg

 

 

64461_640115592674166_532436066_n.jpg

 

 

1098506_640116022674123_457832161_n.jpg

 

998285_640115799340812_1804546164_n.jpg

 

மேர்சியின் தங்கச் சப்பாத்து !

 

மீண்டும் வருவேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இந்தப் பக்கத்தைப் பார்த்து ஆக்கமும், ஊக்கமும் கொடுத்துச் செல்கின்ற அனைத்து உறவுகளுக்கும் உளமார்ந்த நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த விளையாட்டு மைதானத்தின் ஒவ்வொரு நீண்ட அறைகளின் ஊடாக  நாங்கள் நாங்கள் நடந்து போய்க் கொண்டிருக்கின்றோம். எங்கும் விருதுக் கிண்ணங்களின் காடாக , ஆனால் ஒழுங்காக  இருக்கின்றது .

 

558581_640115859340806_1789241104_n.jpg

 

1098401_640115826007476_1680782826_n.jpg

 

1150252_640116139340778_1773383664_n.jpg

 

1173806_640116129340779_291307635_n.jpg

 

இவைகளைத் தாண்டி விளையாட்டு வீரர்கள் ஓய்வெடுக்கும் அறைகளுக்கு சென்றிருந்தோம் .அவர்களுக்கு எவ்வளவோ வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றார்கள். உள்ளே முழு இடமும் குளிரூட்டப் பட்டிருக்கின்றது.அதன் வசதிகளில் சிலவற்றை நீங்களே பாருங்கள். அவர்கள் அமைதியாகப் பிரார்த்தனை செய்ய ஒரு சிறிய தேவாலயமும் இருக்கின்றது . இதில் தேவமாதாவும் , திருக் குமாரனும் அழகிய கதிரையில் இருக்கின்றார்கள்.( dame de dresch ). அவர்களின் திரு வுருவங்கள்  ஓரளவு கருமை நிறத்தில் உள்ளன.

 

1173676_640116289340763_2105220913_n.jpg

 

 

1229889_640116319340760_1345618980_n.jpg

 

 

மீண்டும் வருவேன்: அதுவரை நீங்களும் பிரார்த்தனையில்  ஈடுபடுங்கள்.

 

பிரான்சின் மிகப் பிரபலமான தேவாலயங்களில் ஒன்று சாத் மாதா கோவில். இது பாரிசிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஏராளமான தமிழ் மக்கள் வருடம் தவறாமல்  அங்கு சென்று பிரார்த்தனைகள் நிறைவேற்றுவார்கள். அன்றைய தினம் பிரான்சின் பல பாகங்களில் இருந்தும் யாத்திரீகர்கள் காடுகளினூடாகவும் வயல்கலூடாகவும் நடந்தே வருவார்கள் . இந்த மாதாவும் கருமை நிறம் கொண்டவ.  மிகவும் வரப்பிரசாதி.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தொடருங்கள் சுவியண்ணா :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றுதான் இந்தத் திரியைக் கவனித்தேன் அண்ணா. படங்களைப் பார்க்கும்போது கேன், நீஸ் கடற்கரைகள் தான் நினைவுக்கு வருகின்றன.  தொடருங்கள் அண்ணா. அடுத்த கோடிக்கு கட்டாயம் ஒரு கடற்கரைக்குப் போகத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பின் அங்கிருந்து பாரிஸ் வந்து தம்பி சுபெசையும் சந்தித்து , மீண்டும் கட்டுக்கு ... சீ  ... வீட்டுக்கு  வந்து  சேர்ந்தாச்சுது. நுனாவின் கருத்தும் கவனத்தில் உள்ளது. எல்லாம் தயார்ப் படுத்திக் கொண்டு பெர்லின் பற்றியும் எழுத விருப்பம்.

 

 

 

 

மீண்டும் வருவேன்!

அன்பு அண்ணா... எவ்வளவோ வேலைகளுக்கும் பிரயாணக்களைப்புக்கும் இடையில் இந்த சிறியவனையும் உங்கள் குடும்பத்தில் பிறந்த ஒரு மகன் போல நினைத்து தேடிவந்து சந்தித்த அன்புக்கு எப்பொழுதும் தலைவணங்குகிறேன் அண்ணா...
 
 
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி உங்களது ஸ்பெயின் பயணக் கட்டுரையை... படங்களுன் பார்க்கும் போது பரவசம் ஏற்படுகின்றது.
நீங்கள் பெற்ற இன்பத்தை... எமக்கும் பகிர்ந்து அளிப்பது, மகிழ்ச்சியான விடயம்.
தொடர்ந்து பல படங்களை... ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்கள் உடலை ஆசுவாசப் படுத்தவும் மசாஜ்சுக்கும் சில கருவிகளும், தரமான வாங்கில்கள்,படுக்கைகளும் இருக்கின்றன.

 

நடுவில் அழகிய வட்டமான நீர்த் தொட்டி இருக்கு.அதில் நான்கைந்துபேர் மேல் கட்டில் இருந்துகொண்டு காலை  முழங்காலளவு  தண்ணீருக்குள்  வைத்துக் கொண்டு ஓய்வாக இருக்கலாம். உள்ளே நீர் மெதுவாய் சுழன்று ஓடி கால்களை மசாஜ் பண்ணிக் கொண்டிருக்கும்.

 

1238168_640116226007436_1714680094_n.jpg

 

526860_640116259340766_1545052457_n.jpg

 

1185244_640116239340768_104015028_n.jpg

 

549008_640116632674062_1352117161_n.jpg

 

1236988_640116322674093_1029777177_n.jpg

 

இப்போது மைதானத்தின் மேல் பகுதிக்கு செல்கின்றோம்.அங்குதான் ஒலிவாங்கிக் கருவிகளும், விளையாட்டு பற்றிய வர்ணனைகள் உடனுக்குடன் வெளியாகும் இடங்கள் எல்லாம் உள்ளது.

 

1173841_640116502674075_1734155274_n.jpg

 

 

1234578_640116446007414_1067212164_n.jpg

 

1240583_640116679340724_1714656671_n.jpg

 

இதுஒரு நவீன கலைச்  சிற்பம்.

 

1233580_640116396007419_410198177_n.jpg

 

 

இந்த வாசலால்தான் வீரர்கள் மைதானத்துக்குள் குதூகலத்துடன்  பிரவேசிப்பது.

 

வென்றால்  கும்மியடித்துக் கொண்டு செல்வதும்,

தோற்றால்  குளறியடித்துக்கொண்டு  செல்வதும் இதே வாசலால்தான்.

 

மீண்டும் வருவேன்:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள் இங்கு இணைக்கப் படுகின்றது.

 

1185870_640115979340794_1449824673_n.jpg

 

 

1238844_640116202674105_1979504879_n.jpg

 

 

1001244_640116459340746_168463331_n.jpg

 

ஒருவேளை  வாழை , தென்னை ஏதாவது வைக்கப் போகினமோ தெரியேல்ல! :lol:

 

 

1187096_640116529340739_422086266_n.jpg

 

மைதானத்துக்கு  தண்ணியடித்து  வெயில் தாக்காமல் பாரிய மின் விசிறிகளைப்  போட்டு இருக்கினம்.

 

1234156_640114779340914_1339899015_n.jpg

 

இந்த இடத்தில் நீங்கள், நீங்கள்  விரும்பிய கால்பந்தாட்ட வீரருடன் நின்று படமெடுத்துக் கொள்ளலாம். அவர்களை அணை த்திருப்பது போல் ,பலப் பல விதங்களில். ஒரு படத்துக்கு பதினைந்து  ஈரோ . என்னுடன்  நின்று படமெடுக்க எந்த வீரரும் முயற்சிக்காததால்  நான் எடுக்கவில்லை. பிள்ளைகள் படங்கள் எடுத்தீச்சினம்.  படத்தைப் பாருங்கள் இருவர் கையை நீட்டி வைத்திருக்க நடுவில் வெற்றிடம் இருக்கும். அவ்விடத்தில்  நீங்கள் விரும்பிய வீரர் உற்சாகமாய் நிப்பார் .

மீண்டும் வருவேன்:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாய் எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு வருகின்றோம். மதியமாய் விட்டது .வெளியே போய் நல்ல இடத்தில் சாப்பிட்டு விட்டு பின் கடைகளுக்குப் போய் சாமான்கள் வாங்குவோம் என்று திட்டம்.  அவர்கள் கே.எப்.சி யில் சாப்பிட முடிவெடுத்தனர். அங்கு நிறைய  கே.எவ்.சி இருக்கின்றது. எனக்கு மரக்கறி சாப்பிட வேணும். சரி அங்கு ஆட்டுப்பாலில் செய்த போர்மாசுடன் ஒரு மெனு இருக்கு , அதை எடுத்துச  சாப்பிடுவம் என்று நினைத்துக் கொண்டேன்.நல்லூர் திருவிழா வேறை. சரியென்று ஒரு கே.எவ்.சீக்குப் போனால் கார் தரிப்பிடம் கிடைக்கவில்லை. கொஞ்சம் தூரத்தில் காரை விட்டுட்டு வரும்போது  மாமா இங்கு ஒரு இந்தியன் ரேஸ்ற்றோரன்ட்  இருக்கு நீங்கள் வேணுமெண்டால் இங்கே சாப்பிடுங்கோ என்றனர்.நான் ஓம் என்றன். அவர்கள் வெளியில் கடையின் மெனுவைப் பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் தனக்கு பிரியாணி வேணும், தனக்கு மசாலை தோசை கடை முதலாளியும் வெளியில் வந்து நான் உங்களுக்கு விரும்பியமாதிரி  செய்துதாரன் எண்டார். பிறகென்ன எல்லோரும் அந்தக் கடைக்குள்ளே போனோம் . அவரும் நன்றாக உபசரித்தார். எதோ எனக்கு மரக்கறி சோறு கிடைத்தது

 

995469_640115492674176_1946753216_n.jpg

 

560515_640115812674144_229134759_n.jpg

.

 

945179_640115076007551_786753852_n.jpg

 

267396_640115082674217_513519623_n.jpg

 

 

மீண்டும் வருவேன்:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கடையில் நன்றாகச் சாப்பிட்டு விட்டு , கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு அப்படியே சாமான்கள் வாங்கக் கடைக்குப் போனோம். கடற்கரைக்கு அன்மையில்லேயே  ஒரு பெரிய வர்த்தக நிலையம் உள்ளது . அதனுள் நுழைந்ததும் ஒரு மிகப் பெரிய மம்மூத் யானை எங்களை வரவேற்றது.நிஜமான யானைத் தோலையும் , அதன் தந்தத்தையும் வைத்து அதை பாடம் பண்ணி இருந்தார்கள் .நிஜ யானை நிற்பது போல் இருந்தது.  அங்கு ஆடைகள் ,விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் மிக மலிவாக இருந்தது.அங்கும் சாமான்களை வாங்கிக் கொண்டு , மாலையாகி விட்டதால் பிள்ளைகளின் விருப்பப்படி  கே.எவ்.சி யில் அவர்கள் விரும்பிய உணவுகளைக் சாப்பிட்டு விட்டு  பிரான்ஸ் நோக்கி பயணப்பட்டோம்.

 

792303_644218822263843_997047658_o.jpg

 

995986_640115136007545_1747233133_n.jpg

 

1175474_640115066007552_752584319_n.jpg

 

என்னால் முடிந்தளவு உங்களுக்கு  "camp-noe" விளையாட்டு மைதானத்தையும், பார்சிலோனாவின்  ஒரு பக்கத்துக் கடற்கரையையும் அறிமுகப் படுத்தியுள்ளேன்.

 

இவற்றைப் பார்த்து ஊக்குவித்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்! :D  :D  :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றாக எழுதியுள்ளீர்கள் அண்ணா. மனதும் கனத்துப்போனது. எம் மனதில் ஆழமாகப் பதிந்த விடயங்கள் எம் மரணம் வரை கூடவே இருக்கும்.
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 33     கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த மூத்த பிளினி இலங்கையில் குறிப்பிட்ட பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon]   மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன.   உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.   "பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு உறைபதி என்னும் உலகு." (குறள்-1015)   எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498   "நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து, பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த"   என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த[சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது , மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது.   ஆனால், மாகாவம்சத்தில், துட்டகாமினியை எடுத்துக் கொண்டால், தனது ஈட்டியில், புத்தரின் உடல் எச்சத்தை [relic] போட்டு சண்டைக்கு போனான் என்கிறது. எப்படி புத்தரின் எச்சத்தை பெற்றான் என்பது இன்னும் ஒரு ஆச்சரியமான கதை. ஆனால், அன்பே உலகம் என அமைதி விரும்பும் புத்தர் , எப்படி துட்டகாமினிக்கு அதன் மூலம் நீதி தவறாத எல்லாளனை கொல்ல உதவினார் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது.   அப்படி என்றால் எப்படியான ஞானம் புத்தருக்கு கிடைத்தது ? அன்பே வடிவான புத்தருக்கு இது அவமதிப்பு இல்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், தமிழ் அரசன் தித்தம்பாவை [Damila Titthamba], நாலு மாதம் ஆகியும் வெல்ல முடியாத சந்தர்ப்பத்தில், தந்திரமான முறையில், தான் தன் தாயை திருமணம் செய்ய தருகிறேன் என தன் தாயை தன்னுடன் யுத்த இடத்தில் வைத்திருந்து ஏமாற்றி அவனை கொல்லுகிறான் என்கிறது.   இது வெளிப்படையாக கூறாவிட்டாலும், துணை விளக்கம் [it is stated so in the Tika, the commentary, as per the foot note in the Geiger’s translation.] கொடுக்கப் பட்டுள்ளது. மகாவம்சம் எழுதியவர் எந்த நிலைக்கும் , உதாரணமாக தாயையே எதிரிக்கு கொடுக்கும் அளவுக்கு தயாராக, தாய் இனத்தையே அவமதிக்கும் அளவுக்கு தள்ள பட்டிருப்பது, பத்தினி தெய்வம் வணக்கும் இலங்கையின் காப்பியம் ஒன்றில் எழுதப்பட்டிருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது?     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 34 தொடரும்     
    • நன்றி ஏராளன். அனேகமாக நான் மற்றைய திரியில் சொல்ல முனைந்த தகவல்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறார். இதை செவி மடுத்து பதில் எழுத வேண்டியது இதற்கான எதிர் நிலையை எடுத்திருக்கும் ஏனைய உறவுகளின் தெரிவு. ஆனால், இங்கே சுருக்கமாகச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது: 1. ஓரினக் கவர்ச்சி என்பது ஒரு நோய் நிலை (pathology) அல்ல. 1970 இற்கு முன்னர், அமெரிக்க மனநல வைத்தியர்களின் அமைப்பு (American Psychiatric Association) இது நோய் நிலை என்ற தவறான புரிதலில் இருந்த போது, ஓரினக்கவர்ச்சி உடையோருக்கு பாலுணர்வை குறைக்கும் மருந்துகள் (chemical castration) மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார்கள். சிகிச்சையின் பின்விளைவாகச் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மறைந்து வாழப் பழகிக் கொண்டனர். 70 களின் பின் நிலைமை மாறியது. வெளிப்படையாக இருக்க ஆரம்பித்தனர். 2. ஆனால் இன்னும் பல நாடுகளில், திருமணம் செய்து வாழ சட்டத்தில் இடம் இல்லை. 2015 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்கா முழுவதும் ஓரினத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கித் தீர்ப்பளித்தது. கொஞ்சம் அமெரிக்காவில் கெடு பிடி குறைந்தது இதன் பின்னர். 3. "LGBTQ இனை சமமாக மதித்து அங்கீகரித்தால், சமூக சீரழிவு, சமநிலை குறைந்து விடும்" என்று வாதிடுவோருக்கு முகத்தில் அறையும் சாட்சிகளாக 80 களிலேயே ஓரினக் கவர்ச்சி, ஓரினச் சேர்க்கை என்பவற்றை சட்டபூர்வமாக்கிய ஸ்கண்டினேவியன் நாடுகள் விளங்குகின்றன. டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய இந்த நாடுகளின் வாழ்க்கைத் தரமும், சமூக சமநிலையும் உலகமறிந்தது. ஒரு ஒப்பீட்டிற்கு, ஓரினச் சேர்க்கையாளர்களை "பின் பக்கத்தில் உதைத்துத் துரத்தும்" 😎ரஷ்யாவில் பிறப்பு வீதமும் குறைவு, வாழ்க்கைத் தரமும் இந்த ஸ்கண்டினேவிய நாடுகளை விட மிகக் குறைவு. 4. "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன். திருமணம் என்றால் என்னவென்று மணம் செய்து கொள்ளும் நபர்கள் தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படை உண்மையான, நீடித்த, பரஸ்பர அர்ப்பணிப்புத் தான் என்றால் அது திருமணம் தான். இதை வேறு பெயர் கொண்டு அழைக்க வேண்டியதில்லை.     
    • Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான்  உள்ள போக முடியும் Mendis~ சுப்பர் 8 உள்ளயா.? Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...?  நாட்டுக்குள்ளடா..... 😂 Vijay Vj
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 32     வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும்.   இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.   உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முன்னைய வரலாற்று துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார்.   உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market].   எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது.   கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக்கொண்டனர்.   அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை [Sandamukha Siva /Chandramukhaseewa / Chandamukha / சந்தமுகன், 44 – 52 AD] அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான் என மகாவம்சத்திலும் கூறப்பட்டு உள்ளது.   அதன் பின் அரசன் ரோம் நாட்டிற்கு தூது குழு ஒன்றை அனுப்பினார். அவர்களின் தலைவரை 'ராசியா' என குறிப்பிடுகிறார் [the king despatched to the court of Claudius Caesar an embassy consisting of four persons, the chief of whom the historian Pliny describes as Rachia —“ Legatos qiiattuor misit principe corum Rachia"]. 'ராசியா' வை , ராஜா என்பதன் திரிபாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் அவர்களும் [Tennent seems to think that “ Rachia” is a Roman corruption of Rajah ], அது 'இரசையா' வாக இருக்கலாம் என்று "Twentieth Century Impressions Of Ceylon" by Arnold Wright யிலும் (perhaps Rasiah) குறிக்கப்பட்டுள்ளது.    அதே நேரத்தில் சைமன் காசிச்செட்டி அதை ஆராச்சி [தலைவர்] என குறிப்பிடுகிறார். [“ Rachia ” is meant “ Arachchi ” (chieftain)] மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார்.[five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன் ?   இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 33 தொடரும்       
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.