Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் -

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*இந்த கருத்திற்கு நீங்கள் உரிமை கோருகின்றீர்களா? இதை சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் செய்ததை வைத்து ஏனையவர்களையும் மதிப்பிடும் நீங்கள் அல்லது உங்களைப்போன்றவர்களுக்கு இன்னும் என்ன பிரச்சனை? பேசாமல் சொந்த இடங்களுக்கு செல்லலாமே?

 

கு.சா தாத்தா நீங்கள் அல்லது சோழியான் அண்ணா, அல்லது நெடுக்ஸ் அண்ணா செய்யவில்லை என்பதற்காக இப்படி இல்லை என்று மறுக்க உங்களிடம் ஏதெனும் ஆதாரம் இருக்கா ???? என்னால் வேண்டும் என்றால்  100 பேரிடமாவது இது குறித்த ஒலிக்குறிப்பு பதிவு செய்து தரமுடியும். என்னிடம் வந்து  நீ என்ன கேஸ் குடுத்தனி? என்ன சொல்லலாம் என்றவர்கள் பலர்.  அடுத்து உண்மையில் பாதிகப்பட்டவர்கள் எத்தனை பேர் , பொருளாதார அகதிகள் எத்தனை பேர் என்பது எனக்கும், உங்களுக்கும் நல்லாவே தெரியும். ஏன் இவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பப் போவதில்லை?

இல்லை இப்படியான சமூக விஞ்ஞானத்திற்கு,அல்லது சமூக அரசியலுக்கு என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்?

புனிதம்,தியாகம் என்ற போர்வைக்குள் எனக்கும் ஒழிந்து விளையாடத் தெரியும். ஆனால் இப்படியான பிரச்சனைகளுக்கு உங்களால் ஏதும் தீர்வு முன்வைக்கப்பட்டால் ஒதுங்கி போகவும் தயார்.

 

மற்றும் படிக்கு யோக்கியதை இருக்கு என்று தான் நினைக்கிறேன். நான் ஆமியைச் சாட்டியோ அல்லது,புலியைச் சாட்டியோ அல்லது மாற்றுக் குழுக்களைக் கூட சாட்டி அசைலம் கேட்கவில்லை. வேண்டும் என்றால் அதை உங்களுக்கு தனிமடலிலோ அல்லது பகிரங்கமாகவோ யாழில் பதியவும் தயார். அதே போல எனது அகதி விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவும் இல்லை. நான் வரும் போதே சிங்கபூர்,மலேசியா,கானா,தென்னாபிரிக்காவுக்கு போன விசாவுடன் சொந்த பாஸ்போட்டில் தான் வந்தேன். மனிதாபிமான அடிப்படையில் தங்கும் விசா தான் எனது சொந்த இலங்கை பாஸ்போட்டில் 2வருடம் தந்திருக்கு.  அதே போல நான் பொருளாதார அகதியும் இல்லை. ஆரம்பத்தில் வீட்டில் கஸ்டம் இருந்தாலும்  உழைக்க வேண்டி வரவேண்டிய சூழ்நிலையில்  எங்கள் குடும்பம் இருக்கவில்லை.  நான் வந்த முக்கிய காரணம் தனிப்பட்ட பாதுகாப்பு கருதியே. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இராணுவப்பயிற்சி எடுக்கவில்லையே தவிர விடுதலைப்புலிகளுடன் இயங்கியதற்காக அவர்கள் எனக்கு  வைத்த பெயரே உண்டு. யோக்கியதை குறித்து பேச வேண்டும் என்றால் அதையும் என் சொந்த பெயர்,முகவரியுடன், எனது படத்துடன் இணைக்கவும் தயார். இதை சவாலாகவே சொல்கிறேன். யாரும் அதை மறுத்தால் அல்லது இல்லை என்று ஆதாரத்துடன்  சொன்னால் யாழில் மடுமல்ல எங்கும் எழுதுவதையே நிறுத்துகிறேன். ஏன் மொட்டையே அடிக்கிறேன். :icon_idea:

  • Replies 69
  • Views 10.6k
  • Created
  • Last Reply

அதுதான்.. குமாரசாமி அவர்கள் கூறியவாறு உங்களுக்கு தெரிந்தவர்களை வைத்து எல்லோரையும் ஒரு தராசில் நிறுக்க வேண்டாம்.. எவ்வளவோ உணர்வாளர்கள் புகலிட நாடுகளில் உள்ளார்கள்.. அதேவேளை ஏமாற்றுக்காரர்களும் உள்ளார்கள்தான்.. அதற்காக ஏமாற்றுக்காரர்களும் உண்மையான உணர்வாளர்களும் ஒன்றாகமாட்டார்கள்.

எனது வசிப்பிடத்தில் மிராஜ் மெண்டிஸ் என்றொரு சிங்களவர் உள்ளார். அவரது கணனியில் விடுதலைப்புலிகள் பற்றிய தகவல் ஆண்டு திகதிவாரியாக உள்ளது.. நாட்டு நிகழ்வுகளும்தான்.. பிறேமனில் முன்பு அவரிடம்தான் பல தமிழர்கள் அரசியல் தஞ்ச கோரிக்கைக்கான வாக்குமூலம் தயாரிக்க உதவிகேட்பார்கள். அவள் தயாரிக்கும் வாக்குமூலங்களில் சம்பந்தப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என குறிப்பிடவேமாட்டார்.. சிலபேர் அப்படி குறிப்பிடும்படி கேட்டால் வேறுஇடம் பார்க்கும்படி விரட்டிவிடுவார்.

 

அவர் அப்போது கூறுவார்.. 'புலிகளால் பாதிப்பு என குறிப்பிட்டால் எதிர்காலத்தில் அதுவே இந்த நாடு புலிகளை தடைசெய்ய காரணமாகிவிடும்'  என. அதுவும் ஓரளவு உண்மைதானே?!

 

ஆக அந்த சிங்களவருக்கு உள்ள உணர்வு எங்களில் ஒரு பகுதியினருக்கு இல்லாதது வேதனையே!

Edited by sOliyAn

இது வடமாகாண தேர்தலில் கூட்டமைப்பை மிரட்டி நீங்கள் லைட் பல்ப் கூட மாற்ற அதிகாரமில்லாதவர்கள், நாம் உங்கள் பிரதேசத்தில் எதுவும் செய்வோம் என்று கட்ட முயலும் நடத்தை.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் தலைப்பும் அதன் உற்பகுதியும் மிகவும் தவறானவை. ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதை எழுதியவர்கள் தமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் என்பதும் சரியானதாகப் படவில்லை. வேண்டுமென்றால் அப்படித் தம்மை நினைத்துக்கொள்பவர்கள் என்று சொல்லலாம்.

 

ஆனால், இந்தத் தலைப்பையும், செய்தி விவரிக்கப்பட்ட விதத்தையும் தவிர்த்துப் பார்த்தால் , நடந்த நிகழ்வு எமக்கு ஆரோக்கியமானதல்ல என்றே படுகிறது. தாயகத்தில் தமிழர்கள் நாளாந்த வாழ்விற்கு அவஸ்த்தைப்படுவதும் உண்மை, புலம்பேர் தமிழர்கள் இதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்பதும் ஓரளவிற்கு உண்மைதான்.ளஆனால் இவை ரெண்டையுமே காரணங்களாக வைத்து சிங்களப் பேரின்வாதம் சிறுகச் சிறுக எம்மினத்தை உள்வாங்கி அழிப்பதை சரியென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

 

முதலாவதாக, சில மாதங்களுக்கு முன்னால் சுமார் 100 இளம் தமிழ்ப்பெண்களை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொண்டார்கள். பெற்றோர் விருப்பத்துடந்தான் இது நடைபெற்றது என்று ராணுவமும் அரசும் இதைக் காட்ட முனைந்திருந்தாலும் கூட பல பெண்பிள்ளைகள் முகாமை விட்டு தப்பியோட எத்தனித்ததும், வைத்தியர் ஒருவர் ராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இந்தப் பெண்களின் நிலை பற்றி வெளியே கொணர்ந்ததும், பின்னர் அவர் கொக்காவில் முகாமிற்கு அழைக்கப்பட்டுத் தாக்கப்பட்டதும் நாம் அறிந்ததுதான். ஓரிரு பெண்கள் மனநோய் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பது நாம் அறிந்தது. இன்றுவரை இந்தப் பெண்களுக்கு என்ன நடந்துவருகிறது என்று யாருக்காவது தெரியுமா?? இல்லை, அந்தப் பெண்கள் நலமாகத்தான் இருக்கிறார்கள், எந்தப் பாலியல் தொல்லைகளோ இன ஒடுக்கல் தொல்லைகளோ இல்லாமல் மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை, அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு விட்டது  என்று இங்கு எவரும் நிரூபிக்க முடிந்தால், இப்போது சேரவிருக்கும் இந்த 45 பெண்களையும் சந்தோசமாக இராணுவத்துடன் இணையுங்கள் என்று நாங்களே அனுப்பி வைக்கலாம். 

 

வறுமை என்பது இன்று நேற்று வந்ததல்ல. பலகாலமாய் அது இருக்கிறது. அப்போதெல்லாம் தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் இப்பொது இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகத்தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்று இங்குள்ளவர்கள் நம்பினால் இனிப் பேசுவதற்கு எதுவுமில்லை. 

 

 தமிழ்ப்பெண்கள் என்றாலே சிங்களம் தனது ஆண்களின்  காம இச்சைகளைத்  தீர்த்துக்கொள்ளும் ஜடங்களாகவும், தமிழினத்தை வெற்றிகொள்ளும் ஒரு அடையாளமாக அவர்கள் மேலான பாலியல் வன்புணர்வுகளையும் நடத்தி வந்தது. இந்த நிலமை மாறிவிட்டது என்று இங்கே வாதாட வருபவர்கள் முதலில் நிரூபியுங்கள், பின்னர் இந்த இணைதல் என்பது சரியா பிழையா என்று பார்க்கலாம்.  

 

இங்கே பலர் கூறியதுபோல உதவமுடியாத புலம்பேர் தமிழர்கள் தாயகத்தில் அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று சொல்லும் யோக்கியதை அற்றவர்களாகவே இருக்கட்டும். ஆனால் இப்படி நியாயம் பேசுபவர்கள் நடக்கும் நிகழ்வின் உள்ளர்த்தம் புரியாமல் சிங்களம் ஆடும் கபட நாடகத்திற்கு ஒத்தூதாமல் இருந்தால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை யாரும் ஆதரிக்கவில்லை. அதே போல சிங்கள ஆமியின் பாலியல் தேவைகளுக்குத் தான் இணைக்கப்படுகிறார்கள் என்பதும் வெளிப்படை. ஆனால் என்னுடைய கோவம் இந்த நிலைக்குச்  செல்ல ஒட்டுமொத்த தமிழரும் தான் காரணம் என்பது தான்.

ஏன் யாழிலிருந்தோ அல்லது கிழக்கு மாகாணத்தில் இருந்தோ ஆமிக்கு ஆட்களைச் சேர்க்கவில்லை? அவர்கள் போகவில்லை???

அவகள் வறுமையில் இருந்தாலும் மாற்றுத் தெரிவு ஏதாவது ஒன்று உண்டு, ஆனால் வன்னிச் சனத்தைப் பொறுத்தவரை சொந்த இனத்தாலே ஒதுக்கப்பட்டவர்கள் அவர்கள். குடும்பத்தினரே ஏற்றுக்கொள்ளாமல் சமூகத்துடன் மீழிணைய முடியாமல் தற்கொலை செய்து கொண்ட போராளிகளின் இழபுக்கு யார் காரணம்??

 

நேசக்கரம் மூலமோ அல்லது வேறு உதவி அமைப்புக்கள் மூலமாகவோ 50-100€  குடுத்து விட்டால் அவர்கள் எல்லாரையும் முன்னேற்றி விடலாம் என்றால் அது எவ்வளவு மடமைத்தனம் என்பதும் எல்லாருக்கும் தெரியும். இன்னும் எத்தனை காலம் தான் அவர்களை புலம்பெயர்ந்தோரில் தங்கி இருக்க வைப்பதாக உத்தேசம்? போராட்டத்திற்கு என்று அள்ளீக் குடுத்தவர்கள் போராட்டத்தின் பின்னரான வாழ்விற்கு பெருமளவில் புலம்பெயர் சமூகமும், அவர்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களும் உதவவில்லை என்பதைத் தான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 

ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் கனவை இறுதிவரை சுமந்த வன்னிப்பிரதேச மக்களையும், முன்னாள் போராளிகளை ஒதுக்கி வைத்து

பெரிய வேலைகள் அல்ல சாதாரண வேலைகள் கூட செய்ய அனுமதிக்காமல் விட்டு., முன்னாள் போராளி யாழ் பேருந்து நிலையத்தில் விபச்சாரம் என்று கொட்டை எழுத்தில் பத்திரிகைகளிலும், இணையங்களிலும் செய்தியாக்கி அங்கும் வந்து நானும் நீங்களும் பேசுவோம்.

புலிகள், தேசியம் என்று நிறுவி கடமை முடித்த சந்தோசத்தில் ஸ்காச்சுடனும், தலைவா படமும் பார்த்து பிறவிப்பயனை அடைவோம். வெறி முறிந்து வந்து மறுபடியும் வகுப்பெடுப்பு தொடரும்..... :wub:

 

அவர்களுடைய வாழ்வாதரத்தை மேம்படுத்த நாம் போர்க்கால நடவடிக்கைகள் போல உதவி செய்து அவர்களை ஒரு நிலைக்கு கொண்டு

வரும் வரைக்கும் இது தொடரத்தான் செய்யும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஜீவா. தனிமனிதனாக என்னால் அவர்களுக்கு எதுவுமே செய்ய முடியாததை நினைத்து வெட்கப்படுகிறேன். இதை தவிர என்னால் இப்போதைக்கு எதையுமே சொல்லத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மட்டுமல்ல.. காலப்போக்கில் இன்னும் பல இளைஞர்களும் வெறுப்புடன் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஜீவா. தனிமனிதனாக என்னால் அவர்களுக்கு எதுவுமே செய்ய முடியாததை நினைத்து வெட்கப்படுகிறேன். இதை தவிர என்னால் இப்போதைக்கு எதையுமே சொல்லத் தெரியவில்லை.

 

வார்த்தைகளினால் நான் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் அண்ணா. யார் மனதையும் புண்படுத்துவதல்ல என் நோக்கம். சிலவற்றைக் கடுமையாகச் சொல்ல வேண்டியிருக்குது.

நீங்கள் மட்டுமல்ல நானும் எதுவும் செய்து விடவில்லை, அந்த உறுத்தல் தான் என்னையும்,உங்களையும் இந்த நேர்கோட்டில் இணைத்து வைத்திருக்கிறதோ தெரியவிலலை.

 

தனிநபர்களாக இதில் பெரிதளவாக சாதித்து விட முடியும் என்று நான் நம்பவில்லை. குழுக்களாக சிதறிக்கிடக்கும் எம் இனத்தை ஒரு பொதுமை நோக்கி குவியப்படுத்தாமல் இனப்பிரச்சனை குறித்தும் பேசிவிடமுடியாது.

நான்கு வ்ருடத்திற்கு முன்னர் தமிழீழம்,புலிகள் என்பது பொதுமையாக இருந்தது. அந்த குவியத்தில்  எல்லாரும் ஒன்றிணைந்தார்கள் இன்று ஆளாளுக்கு ஒரு தீர்வுத்திட்டதுடன் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து இவர்களை எல்லாம் பொதுமைப்படுத்தக் கூடிய இடமாகத்தான் போருக்குப் பின்னரான ஈழத்து அவலத்தை பார்க்கிறேன். அவர்களது வாழ்வாதாரத்தை மீழக்கட்டியெழுப்புவதில் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் மாற்றுக்கருத்து இருக்காது எனறு நினைக்கிறேன். அதனால் தான் சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு பேசிக்கொண்டு இருப்பதால் எந்த பலனும் இல்லை. கையை மீறிப்போன  பின்னர் "சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால்" எனற ஆதங்கமே.

விடுதலை புலிகள் இருந்த காலம் வரைக்கும் இராணுவத்தில் இணைய முன்வராத அல்லது இராணுவத்தால் உள்வாங்க படாத தமிழர்கள் இண்டைக்கு பெண்களை மட்டும் உள்வாங்குகிறது... 

 

இது எதனால் என்பதை உணர முற்படாத வரைக்கும்  பலவகையான கருத்துக்கள் தவிர்க்க முடியாதவை... 

 

இராணுவம்  ஏன் தமிழ் பெண்களை இராணுவத்துக்கு சேர்க்கிறது என்பதுக்கு பல காரணங்கள்...  !

 

ஆனால் சிங்கள இராணுவத்தை பற்றி நன்கு அறிந்த தமிழ் பெண்கள் ஏன்  இராணுவத்தில் இணைகிறார்கள்...??  பதில் தமிழர்கள் எல்லாருக்கும் தெரியும் அவர்கள் தங்களின் வளியை தாங்களே முடிவு செய்து கொள்கிறார்கள்...  இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை...   இதிலை கருத்து சொல்ல வேறு ஏதும் இல்லை.... 

 

அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு இராணுவ இயந்திரத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த பெண்களும் பங்காளிகள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்...   இராணுவத்தோடு இயங்கும்(இயங்கிய)  ஒட்டுக்குழுக்களுக்கு  வழங்கப்படும் தமிழ் தேசியத்துடன் இணைப்பு  கூட சாத்தியம் இல்லாது போகலாம்... 

 

 

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இந்த பெண்களை இராணுவத்தினர் நிரந்தரமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக இராணுவத்தில் இணைத்துள்ளனர்.

சம்பளம் கொடுக்காமல், ஏமாளி காடை குண்டர்களை தெற்கில் இருந்து பிடித்து வந்து வடக்குக், கிழக்கில் பலவந்தமாக சீராளிக்கப்படும் பெண்களை தானம் கொடுத்து நடத்தும் ஆமிச் சேவை, பாலியல் சட்டங்களை நாளுக்கு நாள் இலகுவாக்கி, தமிழ் பெண்கள் தமக்கு நடக்கும் துன்பங்களை குற்றமாக வழக்கு பதிய முடியாமல் செய்த பின்னர், நடந்த வற்றை மூடி மறைக்க ஆமிக்குள் உள் வாங்குகிறார்கள். இந்த மறைப்பு வெளியே புட்டுக்காட்டப்பட போகிறதே என்ற்த்தால் சிலர் கவலை அடைகிறார்கள்.

தமிழ் பகுதிகளில் நகை நாட்டு திருவதற்கும் இலவச சேவைக்கும்மக்கத்தான் தெற்கின் குண்டர்கள் ஆமியில் இணைவது. வடமாகாண சபை தேர்தல் இதில் பாரிய பிரச்சனையை கொண்டுவர போகிறது. நீதிதுறை கையில் கிடைத்தால், நகை நட்டுக்கள் முடிந்த பின்னர், ஆமி வீடு வீடாக சென்று செய்யும் ஆமிச்சேவையை பற்றி மக்கள் கோடுகளில் வழக்கு எடுக்கத்தக்கத்தாக முடிய போகிறது. இதை தடுக்க பல முனையில் அரசு தாயார் செய்கிறது. அப்படியான பெண்கள் போடத்தக்க வழக்குக்களை தவிடு பொடியாக்காததான் இந்த அவரச பலத்கார ஆள் சேர்ப்பு. ஆமியில் உறவுகள் இருப்பதால் ஆமிக்கு எதிராக பாலத்காரக வழக்குகள் தாக்கல் செய்து தமக்கான நட்ட ஈட்டை பெறும் தகமையை இந்த பெண்களை நிரத்தரமாக இழக்க வைக்கவே இந்த முயற்சிகள்.

த்வறு செய்வோரை மந்திரியாக்கி அடிமையாக்குவதும், குற்றம் செய்யும் ஆமி அதிகாரிகளை பதவி உயர்த்துவதும் இலங்கை அரசு ஒளிவு மறைவில்லாமல் செய்யும் கேவலங்களை. தமிழ் சமூதாதை சீராளிப்பதும், பின்னர் அவர்களின் வாயைப் பொத்த வேலை கொடுப்பதையும் நிறுத்திவிட்டு ஆமி வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும். ஆமி வடக்கு கிழக்கில் ஆட்கள் தெரிவு செய்ய எந்த அதிகார்முக் இல்லாதது. வடக்கு கிழக்கு சுய நிர்ணய உரிமை உள்ள இடங்கள் என்றும், தமிழரின் பூர்வீக பூமிகள் என்றும் 2006 லேயே பிளேக்கால் ஒத்துக்கொள்ளப்பட்டது.

ஆமி வடக்கு கிழக்கில் தனது இலங்கை ஆமிச் சேவையை நடத்தவோ, பாதுகாப்பு அளிக்கவோ, காணிகள் சுவீகரிக்கவோ, தமிழ் மக்களின் காணிகளில் விவசாயம் செய்யவோ, தேனீர்கடைகள், விடுதிகள், விபச்சார விடுதிகள் நடத்தவோ, தமிழ் பெண்களை வேலைக்கு அமர்த்தவோ செய்யும் அதிகாரம் இல்லாதது. உலகின் மிக கேவலகெட்ட ஆமிக்கு, உண்மையாக தெரிவு நடந்தால் கூட நாம் அல்ல ஆளணி கொடுத்து இந்த ஆமியை பலமாக்கி, அதைக் கட்டி வளக்க வேண்டியவர்கள். எம்மை எல்லா வழிகளிலும் ஒத்துக்கி நமது பெண்களை ஆமியில் சேர்ப்பதால் மட்டும்தான் இனி வாழ்க்கை போகலாம் என்ற நிலைக்கு தள்ளி வைத்ஹ்டிருக்கும் ஆமி தொடர்ந்தும் வடக்கு க்ழைக்கில் வேலையை கொடுக்காமல் வெளியேற வேண்டும். ஆமி இந்த பெண்களை உடனே விடுவித்து இந்த பெண்கள் குடும்பங்களுக்கு இந்தியாவால் கட்டிக்கொடுக்கப்படும் வீடுகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

தொழில் இல்லா பெண்களை வைத்திருக்கும் தாய் தந்தையருக்கு கூட்டமைப்பு காணிகள் பங்கிட்டு கொடுத்து விவசாயம் செய்யவும், இந்த பெண்கள் தங்கள் படிப்பை பார்த்துக்கொண்டு தாய் தந்தையருக்கு அந்த விவசாயத்தில் உதவ தேவையன வெளிநாட்டு உதவைகளை கூட்டமைப்பு பெற்றுகொடுப்பத்தற்காக இராணும் வடக்கு, கிழக்கு பகுதி காணிகளை கூட்டமைப்பிடம் கையளித்துவிட்டு தமிழரை பலாத்கார சேவையில் இறக்காமல் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

தேவையாக இருந்தால் தான் கொலை செய்த புலனாய்வு அதிகாரி ஜெயரத்தினத்தின் மனைவிக்கு நட்ட ஈடுகொடுக்கட்டும். நமது மாகாணங்களில் இருந்து தொடர்ந்து வேலையை கொடுத்துக்கொண்டிருக்காமல் வெளியேற வேண்டும்.

ஆமி உடம்பால் வடக்கு கிழக்கில் செய்யும் வக்கிரங்களை வெளிக்கொண்டு வர முடியாமல் உள்நாட்டு பத்திரிகைகள் தடுக்க பட்டிருக்கின்றன. இதற்கு எதிராகத்தான் நமது கோசம் இருக்க வேண்டும். அங்கே பத்திரிகை சுதந்திரத்திற்க்காக எழுவது நமது கடமையாக இருக்க வேண்டும். எந்த புலம் பெயர் ஊடகத்திலும் சேவையாற்றும் தொழிலாளர்கள் தொழில் துறைக் கல்வி இல்லாதவர்கள். இவர்கள நாளடைவில் ஊடக சுதந்திர தன்மையால் மட்டுப்படுத்தப்படுவார்கள். இவர்களை பற்றி அல்ல நமது கவனம் இருக்க வேண்டும். இதில் எழுதும் ஒருவர் கூட அண்மையில் உதையன், வலம்புரி போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து அரசால் தாக்கப்படுவதாக செய்திகள் வநத போது அதை பற்றி எந்த கருத்தும் வைக்காதவர்கள். இங்கே கருத்துவைத்த பலர் அடிப்படையில் சுதந்திர ஊடகங்கள் எப்படி கட்டுப்பாட்டுக்குள் நடக்கின்றன என்ற் அடிப்படை தொழில்த் துறை தத்துவத்தை விளங்காதவர்கள் . மற்றவர்கள் அரச அதிகார திமிர் ஏறியவர்கள். எதோ புலம் பெயர் பத்திரிகை பாலியல் வக்கிரங்களை கற்பனை செய்து விலைப்படுத்த முயல்வதாக காட்டுவது அனாவசியமற்றது. இது கொம்பை பிடி என்று சொல்ல சங்கை பிடிக்கும் மூடத்தனம். புலம் பெயர் பத்திரிகைகள் வாசிகர்கள் விருப்புவதை பிரசுரிக்கும்.ளிங்கே கருத்து வைத்த பலர் அதைத்தான் தேடி வாசித்திருக்க கூடியவர்களும். இவர்களில் ஒருவர் கூட இன்னமும் மேர்வின் சில்வாவின் பேச்சை பிரசுரித்த பத்திரிகையைப்பற்றி கருத்து எழுதவில்லை. அதுதான் இவர்களின் நடு நிலைமை கூட.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில்  எள்ளளவும்  விருப்பமில்லை

அங்குள்ள தமிழருக்கான    எமது பங்களிப்பு  எவ்வளவு தூரம் எட்ட நிற்கின்றது  என்பது புரிந்து கொள்ளக்கூடியதே:

அது அதிகரிக்கப்படணும்

அதுவே எமது இனம் மீள்வதற்கான ஒரே வழி

 

அதே நேரம் இந்த திரிக்கு ஈடாக புலம் பெயர் தேசத்தவர் பற்றி  எழுதப்படும் விமர்சனங்கள்

இதைவிட விபச்சாரத்தனமானவை

செய்பவர்களையும் ஓரம் கட்டும் இந்த நாசகாரவேலை

இந்த திரியின் நாயகர்களுக்கு சற்றும் சழைத்தது அல்ல

 

தமிழர்களுக்குள்  இருந்து கொண்டு

அதுவும் புலம் பெயர் தேசத்துக்குள்  இருந்து கொண்டு 

நான் வேறு

நான் சுத்தம்

மற்ற   அனைத்தும்  அபத்தம்  என்பவர்கள்

தங்களை மக்களில் இருந்து பிரித்தெடுத்து

கொம்பு வைத்து

வேசமிடுகிறார்கள்

இவர்கள் ஒருபோதும்  மக்கள் மனங்களை அறிந்திருக்க முடியாது

மக்களுக்காக உழைத்திருக்க முடியாது

என்பதே எனது கருத்து,

நன்றி, 

Edited by விசுகு

அரசாங்கம் ஆமியில் மட்டும் அல்ல எந்த வைகயான வேலைகளும் தமிழருக்கு கொடுக்க வேண்டியத்தில்லை. கல்வித்துறை இராமநாதன் அங்கஜன், டகிளஸ் தேவானந்தா போன்றவர்கள் கனவிலும் நினைக்க முடியாதபடி சிதைக்கப்பட்டுவிட்டது. ஆமித் தொழில் அல்ல பெண்கள் விரும்பும் ஆரியர் தொழில் கூட அரசிடம் இருந்து தமிழர்களுக்கு வேண்டாம்.

 

தமிழர் சிங்கள ஆமிக்கு ஆளணி கொடுக்க முடியாது.

 

ஆமி வெளியேற வேண்டும். 

அப்போ எல்லாருமே முடிவு செய்தாகி விட்‌டதா அந்த 45 பெண்களும் விபசாரத்துக்கு தான் இராணுவத்தில் இணைத்தார்கள் என்று...

நன்று....

 

 

ஆக அந்த சிங்களவருக்கு உள்ள உணர்வு எங்களில் ஒரு பகுதியினருக்கு இல்லாதது வேதனையே!

விருப்பு புள்ளிகள் போட முடியவில்லை ..................
 
மாபெரும் உண்மையை எழுதியுள்ளீர்கள் அண்ணா 
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ எல்லாருமே முடிவு செய்தாகி விட்‌டதா அந்த 45 பெண்களும் விபசாரத்துக்கு தான் இராணுவத்தில் இணைத்தார்கள் என்று...

நன்று....

 

உண்மை தான் இதில் எழுதுபவர்களை பார்க்க கவலையாக இருக்கிறது

எப்படி மூடி மறைச்சாலும் 146,000 தமிழரைக் காப்த்தின ஆமிக்கு 45 காப்பத்திறது கஸ்டமா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக இவர்களால் செய்தி வெளியிட முடிகின்றது என்பது புரியவில்லை. தலைப்பில் இருந்து ஒவ்வொரு வார்த்தைகளிலும் பரவி இருப்பது மிக மோசமான சிந்தனையும், வக்கிரமும் தான்.

 

தமிழ் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான அரசியல், கள நிலவரம், வேலை வாய்ப்பின்மை, அரசியல் வெற்றிடம் போன்ற எத்தனையோ சமூக, அரசியல் மற்றும் உளவியல் காரணங்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில், தமிழ் தேசியத்தின் பெயரால் தம் வக்கிரங்களைக் கொட்டி எழுத எப்படி இவர்களால் முடிகின்றது?

 

எம் சமூகத்தினை பற்றி நினைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெறுப்புத்தான் ஏற்படுகின்றது.

 

ஓம் 'ஓம் ,ஒம்ம்ம்ம்ம்....வக்கிரமாக தெரியுதல்லோ...உங்களுக்கு அதிகாரம் இருக்கல்லோ இதை தூக்க.....நீங்கள் இந்தசெய்தியை அழகான தலையங்கத்தோடு போடலாம்தானே நிழலி...இந்த செய்தியை பார்ப்பவர்கள் சொல்லுவார்கள் யாழ்களத்தில் இப்படி போட்டிருக்கு என்றுதான்.....தினக்கதிரில் இப்படி செய்தி போட்டிருக்கு என சொல்லமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டு தங்களின் வக்கிரபுத்தியைத்தான் வெளிக்காட்டியுள்ளனர். இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைவதை இப்படியான செய்திகளைப் போட்டு உணர்வுகளைத் தூண்டுவதனால் நிறுத்தமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் தமிழ் பெண்கள் மட்டும் இராணுவத்தில் அதிகமாக சேர்க்கப்படுகின்றார்கள் ஆண்களுக்கு என்னாச்சு?

 

இன்றைய காலகட்டத்தில் அரசுக்கு சிறு பான்மையினரும் இராணுவத்தில் இருக்கின்றார்கள் என உலகுக்கு காட்டவேண்டிய இக்கட்டான நிலமை.சிறுபான்மை ஆண்கள் என்று வரும்பொழுது முஸ்லிம் இராணுவ இளைஞர்களை காட்டி தப்பிதுக்கொள்ளலாம்,முஸ்லிம் பெண்கள் இராணுவத்தில் நிச்சம் சேரமாட்டார்கள் ஆகவே தமிழ் பெண்கள் தேவைப்படுகிறது............சிறிலன்காவின் முதல் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் அன்டன் முத்துக்குமார்....... :Dசிங்கள இராணுவத்தின் தமிழ் பெண்கள் -

நீங்கள் சொல்வது புரிகின்றது.

 

தாயகத்தில் உள்ளவர்கள் குறித்து புலம்பெயர்ந்தவர்களின் பார்வையாகவே இது தாயக மக்களை சென்றடைகின்றது.

 

இவ் விடயம் குறித்து விமர்சிப்பதற்கே ஒரு துளி அதிகாரத்தையோ உரிமையையோ கொண்டிராத உண்மையான ஓடுகாலிகளான செய்திவெளியிடும் புலன்பெயர்ந்தவர்கள் எப்படி இவ்வளவு கேவலமாக எழுதமுடியும்? இங்கே ஒன்று ரண்டுபேர் இப்படிச் செய்கின்றார்கள் என்று நாங்கள் எங்களுக்குள் திருப்திப்படலாம் ஆனால் தாயக மக்களை பொறுத்தவரை வெளிநாட்டவன் இப்படி எழுதுகின்றான் என்றுதான் எடுக்கப்படும்.

 

இவ்வாறு பொறுப்பற்றதனமாய் எழுதுபவர்கள் தாங்களே தேசியத்துக்கு சொந்தக்காரர் என்று நடந்துகொள்வதை ஏனையவர்கள் ஆமோதிக்கின்றார்கள். இவ்வாறான செய்திகள் தடுக்கப்படவேண்டியது. இந்த இணையதளங்கள் கண்டனங்கள் அனுப்பவே தகுதியற்றது.

 

இராணுவத்திற்கு முதலே இவர்கள் இப்படியான செய்தியூடாக போரால் பாதிக்கப்பட்ட இவர்கள் மீது தமது வக்கிரத்தை காட்டிவிட்டனர். அந்தவகையில் இவர்கள் இராணுவத்தை விட பன்மடங்கு கேவலமானவர்கள். இதை அந்த மக்களும் புரிந்துகொள்வார்கள்.

 

போருக்கென்று காசை சேர்த்து ஆட்டையை போட்டவர்களே இப்படியாக வக்கிரமாக எழுதி தாம் இன்னும் தேசீயத்துக்கு விசுவாசிகள் என்று காட்டிக்கொள்கின்றனர். புலம்பெயர்ந்த தனது ஓடுகாலி நிலை மறந்து தாயகத்து மக்களை தேசீயம் என்ற போர்வையூடாக அதிகாரம் செய்யமுடியும் என்று போதையில் மிதக்கின்றார்கள்.

 

அடிப்படையான விசயம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து புலம்பெயர்ந்தவனின் வக்கிரப்பார்வை என்றே முடிகின்றது. ஒரு பயித்தியக்காரனின் எழுத்துக்கு ஏனையவர்கள் பொறுப்பாக முடியாது என்றபோதும் தாயகம் குறித்து புலன்பெயர்ந்தவனின் எழுத்தாக இது இருக்கின்றது.

 

நீங்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்... 

 

ஆனால் இதற்கு முடிவு என்ன...??   தறி கெட்டு ஓடிய சமூகத்துக்கு  கடிவாளம் போட்ட புலிகள் தங்களின் பலத்தை பிரயோகிக்கும் தேவைக்கு உள்ளானார்கள்...   இதே தமிழினம் புலிகளை அடக்குமுறையாளர்கள் எண்று ஒவ்வொன்னுக்கும்  காரணம் கூறியதே...???

 

இப்போது ஒருமித்த பலத்தின் மூலம் கடிவாளம் போட்டு வரைமுறைப்படுத்த யாருமே கிடையாது எனும் போது  முடிவு தான் என்ன...?? 

 

சத்தியமாக எனக்கு விளங்காமல் தான் கேக்கிறேன்... ! 

இவ்வாறு செய்திகளை எழுதினால் பாய்ந்துசென்று வாசிக்க புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரு கூட்டம் உள்ளது என்பதை இந்த இணையத்தள வியாபாரிகள் அறிவார்கள். தவறு நூறு வீதம் இவர்களில் மட்டும் இல்லை.

 

தமிழ்ப் பொது மக்களைக் கேவலப்படுத்தும் இவ்வாறான செயல்களைக் கண்டிக்கவோ எதிர்க்கவோ எம்மிடம் சமுதாய அமைப்புக்கள் இல்லை என்பதும் இன்னொரு குறை.

இவ்வாறு செய்திகளை எழுதினால் பாய்ந்துசென்று வாசிக்க புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரு கூட்டம் உள்ளது என்பதை இந்த இணையத்தள வியாபாரிகள் அறிவார்கள். தவறு நூறு வீதம் இவர்களில் மட்டும் இல்லை.

 

தமிழ்ப் பொது மக்களைக் கேவலப்படுத்தும் இவ்வாறான செயல்களைக் கண்டிக்கவோ எதிர்க்கவோ எம்மிடம் சமுதாய அமைப்புக்கள் இல்லை என்பதும் இன்னொரு குறை.

 

அப்படி  அமைப்புக்கள் வந்தால் அவர்களை அடக்கு முறையாளர் கருத்து  சுதந்திரத்தை மதிக்காதோர்  எண்டு தானே  சொல்லபோகிறார்கள்...??  :rolleyes:  :rolleyes:  :rolleyes:

தயா, தவறான, கேவலப்படுத்தும் வகையில் செய்தியையோ அல்லது கருத்தையோ யாரும் வெளியிட்டால் அதனை ஜனநாயக முறையில் சுட்டிக் காட்டுவது ஐரோப்பிய நாடுகளில் நடப்பதுதானே. இதனை மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களால் சுட்டிக் காட்டப்படுவது மக்கள் குரலாகவே ஒலிக்கும்.

இவ்வாறு செய்திகளை எழுதினால் பாய்ந்துசென்று வாசிக்க புலம்பெயர்ந்த நாடுகளில் ஒரு கூட்டம் உள்ளது என்பதை இந்த இணையத்தள வியாபாரிகள் அறிவார்கள். தவறு நூறு வீதம் இவர்களில் மட்டும் இல்லை.

 

தமிழ்ப் பொது மக்களைக் கேவலப்படுத்தும் இவ்வாறான செயல்களைக் கண்டிக்கவோ எதிர்க்கவோ எம்மிடம் சமுதாய அமைப்புக்கள் இல்லை என்பதும் இன்னொரு குறை.

அம்பலத்தில் இல்லாத கட்டுப்பாடா அடுத்த ஊடகங்களுக்கு வேண்டும்?

அம்பலத்தில் ஒருசாராரை கேவலப்படுத்தி பொய்யாக எழுதியிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.