Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவநீதம்பிள்ளை -

Featured Replies

சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவநீதம்பிள்ளை -

27 ஆகஸ்ட் 2013
குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்

சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவநீதம்பிள்ளை -

வவுனியா விளக்க மறியல் சிறைச்சாலையில் வைத்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் தாயார் கதறியதைக் கண்ட நவநிதம்பிள்ளை அவரை அரவணைத்து ஆறுதல் படுத்தியுள்ளார்.

புலிச் சந்தேகநபர் என்று கருதப்பட்டு கணேசன் நிமலரூபன் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கைதிகளுக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது திட்டமிட்டு தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

நிமலரூபனின் தாயார் இன்றைய தினம் யாழில் நடந்த காணாமல் பொன உறவுகளின் போராட்டத்தில் பங்கெடுத்தார். அத்துடன் நவநீதம்பிள்ளையை சந்தித்த குறித்த குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.

முள்ளியவாய்க்கால் போரினால் பாதிக்கப்பட்ட எட்டுப் பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். போரில் உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட காயங்களைக் கொண்ட யுவதி ஒரவரும் நவநீதம்பிள்ளையைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தியும் கலந்து கொண்டார். தமது பிரச்சினைகள் குறித்து பேசிய எட்டுப் பேரையும் கலங்கிய முகத்தோடு நவநீதம்பிள்னை பார்த்தார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95817/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நவநீதம் பிள்ளையின் விஜயத்தால் எதுவுமே நடக்க போவதில்லை..... ஒவொருவரின் வருகையும் மீட்பர்களின் வருகையாக பார்க்கும் எமது தமிழர்களை நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது அன்று தொடக்கம் இன்று வரை சிங்கள ராஜதந்திரம் என்பது மிகவும் ஷக்த்தி வாய்ந்ததாக எந்த ஒரு வெளி நாட்டு அழுத்தங்களையும் எதிர்கொண்டு சாதுரியமாக தப்பித்து கொள்ளும் வித்தை தெரிந்ததாகவே இருந்து வருகின்றது..... ஆகவே நவி பிள்ளையின் வருகையாலும் எமக்கு நீதி கிடைக்க போவதில்லை என்பதே கசப்பான உண்மை......

தமிழ் ஊடகங்கள் எதோ நவி பிள்ளையின் வருகை தமிழர் பிரச்சனைகளுக்கு விடிவு தந்து விடும் என்ற ரீதியில் செய்திகளை போட்டு மக்களின் எதிர்பார்ப்பை கூட்டுவது வருந்த தக்கதே....

அண்ணா,

நாமெல்லாம் முன்பு விட்ட பிழை, ஒன்றும் நடக்க போவதில்லை என்று எங்களுக்கு நடந்த அநியாயங்களை உலக அமைப்புகள் ஊடாக ஆவணபடுத்தாதது.

ஈழப்போர் நான்கு அப்படியானதல்ல. முதல் நாள் தொடக்கம் உலக மட்டத்தில் பதியப்பட்டு வரும் ஒரு நிகழ்வு.

நவி பிள்ளை குற்றசாட்டுகளை உறுதி செய்து போகவந்திருக்கிறார்.

வரும் ஒவ்வொரு வெளிநாட்டு முக்கியத்தோருடன் இப்படியான சந்திப்புகள், கூட்டங்கள் நடந்தால் தான் உண்மை வெளிவரும்.

தெளிவான பதிவு! நன்றி!!!

பயம் எல்லோருக்கும் இருக்கும். அதில் எட்டு பெண்கள், சில தலைவிகளும், அற நனைந்தால் குளிர் என்ன கூதல் என்ன என்று முன்னால் வந்து முடிந்தவற்றை சொல்லிவிட்டார்கள்.

இதில் தமிழர் எல்லோரும் தங்கள் கடமை செய்ய முன் வரவேண்டும். 

ஆனல் அதை மறுவழத்தில் நவநீதம் பிள்ளையை தூக்கிப்பிடிபதாகவோ அல்லது ஒதுக்கி வைக்க வேண்டுமென்றோ நினைக்காமல் கடமையை சரிவர செய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கு இருப்பது போல போக்கிடமோ ,  நம்பிக்கைகளோ  சிங்களவர்களுக்கு இல்லை...   அவர்களின் போக்கிடம் இலங்கை மட்டும் தான்,  நம்பிக்கையும் தாங்கள் மட்டும் தான்...   ஆதலால் எல்லாவற்றியும் திட்டமிட்டு செய்கிறது சிங்களம்...

ஆனால் தமிழர்களுக்கு அடித்தால்  ஓடுவதுக்கு நிறைய இடம்,  அவர்களுக்காக வேலை செய்வதாக காட்டி நம்பிக்கை ஊட்டவும் ( ஏமாற்றவும்) ஆயிரக்கணக்கானவர்கள்...  இந்த நிலை நீடிக்கும் வரைக்கும் தமிழினம் உருப்பட சாத்தியம் இல்லை....

என்னிடன் இளப்பதுக்கு எதுவும் இல்லை ஆகவே துணிவாக போராடுவேன் எண்று எழிலன் மனைவி  அனந்தி அவர்கள் ஒரு பேட்டியில் சொல்ல கேட்டேன்...   அதுதான் தமிழரின் பலம்... 

தமிழரின் ஒட்டு மொத்த இனமும் தங்களிடம் இளக்க ஏதும் இல்லை என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை...  

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் இன்று வரை சிங்கள ராஜதந்திரம் என்பது மிகவும் ஷக்த்தி வாய்ந்ததாக எந்த ஒரு வெளி நாட்டு அழுத்தங்களையும் எதிர்கொண்டு சாதுரியமாக தப்பித்து கொள்ளும் வித்தை தெரிந்ததாகவே இருந்து வருகின்றது..... ஆகவே நவி பிள்ளையின் வருகையாலும் எமக்கு நீதி கிடைக்க போவதில்லை என்பதே கசப்பான உண்மை......

தமிழ் ஊடகங்கள் எதோ நவி பிள்ளையின் வருகை தமிழர் பிரச்சனைகளுக்கு விடிவு தந்து விடும் என்ற ரீதியில் செய்திகளை போட்டு மக்களின் எதிர்பார்ப்பை கூட்டுவது வருந்த தக்கதே....

ஈழத்தமிழர்களை அநீதியாகக் கொடூரமாக உலகநீதிக்குப் புறம்பாக அழித்தது இந்திய அரசுதான். அப்படி அழிப்பதற்கு இந்தியா பாவித்த ஒரு கருவிதான் சிங்களமே தவிர சிங்களத்தின் ராஜதந்திரம் என்பது அவர்களோடு இணைந்திருக்கும் தமிழர்களின் அளவையே கொண்டுள்ளது. ஈழத்தமிழர்களை உலகநீதிக்குப் புறம்பாக, இந்தியா படுகொலை புரிந்தசெயலைப் பலமான ஆதாரத்தோடு நீரூபிக்கும் தகுதி உலகத்தில் சிறீலங்க அரசிடமே உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் குடுமி சிறீலங்க அரசின் பிடியில் பலமாக இறுகியுள்ளது. ஆகவேதான் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியா மேற்கொள்ளும் செயற்பாடுகளாவன, மிகவும் சக்தி வாய்ந்த சிங்கள ராஜதந்திரமாகவும், எந்த ஒரு வெளி நாட்டு அழுத்தங்களையும் எதிர்கொண்டு சாதுரியமாக தப்பித்து கொள்ளும் வித்தையை சிங்களம் கொண்டிருப்பதாகவும் ஒரு மாயத்தோற்றத்தை எங்களுக்கு ஏற்படுத்திவருகின்றது. எய்தவனே குற்றவாளி. அம்பு வெறும் கருவிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கம்கூட இராணுவத்தை சுற்றிவளைத்தால் தப்பி ஓட ஒரு பக்கத்தை திறந்து வைப்பதில்லையா??!! அதுபோல, வௌிநாட்டுக்குப் போகலாம் என்கிற வழியை சிங்களவன் விட்டு வைத்துள்ளான்..

மறுவளமாக சிங்களவரும் இப்போது புலம் பெயர்கிறார்கள்.. நிம்மதியாக கால்நீட்டி படுக்க முடியவில்லை என்கிற துட்டகைமுனு சித்தாந்தம் சிறிது தண்மை அடைந்துள்ளது..

1998 - 1999 களில் யாழ்ப்பாணத்தில்  இறுக்கமான நிலை கொழும்பு போறது எண்டாலே நிறைய கெடு பிடிகள் பொருளாதார தடைகள் , கல்வி பரீட்ச்சைகளுக்கு எல்லாம் சிக்கல்கள்...   

அதேகாலத்தில் யாழ்பல்கலைக்களக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கு தமிழுக்கு  ஒரு லட்ச்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்தனர்...   வந்த  மக்களின் சைக்கிள்களுக்கு காத்து திறந்து விட்ட இராணுவத்தோடு கைகலப்பு காவலரன் எரிப்பு எண்று ஒரு கொதி நிலை... 

இதை மக்கள் இப்ப் செய்ய வேணும் எண்டு சொல்ல வரேல்லை... !  ஆனால் ஒடுக்கப்படும் மக்கள் இப்படித்தான் கிளர்ந்து எழுவார்கள் என்பதுக்காக சொல்கிறேன்... 

இதை வெளியில் இருக்கும் எங்களாலை செய்ய முடியாது செய்ய கூடியது மிக வேகமாக அவர்களை கைதூக்கி விடுவது...  தங்களின் தேவையை தாங்கள் பூர்த்தி செய்யும் நிலையை... 

நிழலி எழுதியிருப்பது உள்ளடக்கம் இல்லாத வெறும் சோடனை வசனங்கள். அதை எதிர்த்து ஆழமாக விவாதம் வைத்தால் தூக்கிவிடுவார்.  நிழலி இலங்கை ஆமியை காப்பாற்ற தமிழ் ஊடகங்களை தாக்குகிறார். சிங்கள் ஆமி இலங்கையில் செய்தது தமிழ் மக்கள் மீது பாலியல் வன்முறைகளும் கொலைகளும்தான். இலங்கை ஆமி போரில் வெல்லவில்லை.போரில் வென்றது சர்வதேச ஆய்தம் என்பது மறைக்க முடியாது. இதில் ஆமி தமிழ் பெண்களை சென்ற தடவை மாதிரியே துன்புறுத்தி சித்த பிரமை பிடிக்க வைக்க மட்டும்தான் தெரிகிறது. மற்றும் படி இலங்கையில் பாலியல் சமநிலைக்கவோ அல்லது போரிட தேவைக்காகவோ தமிழ் பெண்கள் ஆமியில் சேர்க்கப்படவில்லை. 

இந்தியா சர்வதேச உடன் படிக்கையை இலங்கை மீறுகிறது என்ற கரையில் இறங்க ஆயத்தம் செய்கிறது. யுத்தம் அந்த கரைக்குப் போவத்தால் இதில் ஆமி தமிழ் பெண்களை இன்பத்துக்காக மட்டுமே தெரிய முனைகிறது. ஆனால் தேவையானது கதிர்காமர் மாதரி திறமை வாய்ந்த தமிழ் ராஜதந்திரி. இல்லையேல் 78% நாட்டு மக்களின் ஆதரவை தாங்கள் செய்யும் பயங்கரவாத்திற்கு வைத்திருந்தும்  சர்வதேசம் நாட்டுக்குள் உள்ளடுவதை தடுக்க முடியாது. அதன் பின்னர் தங்களின் ராஜதந்திரத்தை பற்றி புயத்த அதை பிரசுரித்து பணம் வாங்கும் தமிழ் பத்திரிகைகள் தங்களைத் தாங்கள் நிறம் மாற்றுவார்கள்.  

இது இங்கே பதிய பட்டது தவறு இது போய் இருக்க வேண்டிய திரி 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=128156&hl=

தயவு செய்து அந்த திரியுடன் சேர்த்து வாசிக்கவும்.

Edited by மல்லையூரான்

நவி பிள்ளை குற்றசாட்டுகளை உறுதி செய்து போகவந்திருக்கிறார்.

.

உங்களுக்கு வேற வேலையில்லை..

 மனிசி அலுவலக காசில இலவசமா கொலிடேய்க்கு வந்திருக்கு..

:lol:

ஈழத்தமிழர்களை அநீதியாகக் கொடூரமாக உலகநீதிக்குப் புறம்பாக அழித்தது இந்திய அரசுதான். அப்படி அழிப்பதற்கு இந்தியா பாவித்த ஒரு கருவிதான் சிங்களமே தவிர சிங்களத்தின் ராஜதந்திரம் என்பது அவர்களோடு இணைந்திருக்கும் தமிழர்களின் அளவையே கொண்டுள்ளது. ஈழத்தமிழர்களை உலகநீதிக்குப் புறம்பாக, இந்தியா படுகொலை புரிந்தசெயலைப் பலமான ஆதாரத்தோடு நீரூபிக்கும் தகுதி உலகத்தில் சிறீலங்க அரசிடமே உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் குடுமி சிறீலங்க அரசின் பிடியில் பலமாக இறுகியுள்ளது. ஆகவேதான் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியா மேற்கொள்ளும் செயற்பாடுகளாவன, மிகவும் சக்தி வாய்ந்த சிங்கள ராஜதந்திரமாகவும், எந்த ஒரு வெளி நாட்டு அழுத்தங்களையும் எதிர்கொண்டு சாதுரியமாக தப்பித்து கொள்ளும் வித்தையை சிங்களம் கொண்டிருப்பதாகவும் ஒரு மாயத்தோற்றத்தை எங்களுக்கு ஏற்படுத்திவருகின்றது. எய்தவனே குற்றவாளி. அம்பு வெறும் கருவிதான்.

இலங்கையை தாக்குவதை விட, இந்தியாவை... குறிப்பாக தமிழ்நாட்டை... இன்னும் சொல்லப்போனால்... பட்டப்பகலில் ஈரோடு வழியா இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட 140 T72 டாங்கிகளை மற்றும் ஆயிரக்கனக்கான லொறி லொறியா ஆர்ப்பாட்டத்துக்கும் மத்தியிலும்   கொண்டு செல்லப்பட்டசிங்களவனுக்கான ஆயுதங்களை புலிகள் தாக்கியிருந்தால் எமக்கு  சுதந்திரம் கிடைத்திருக்கும்..

captur10.jpg

புலிகள் இதை செய்யவில்லை, என்னெனில் உண்மையான புலிகளின் தலைமை இந்திய உளவு பிரிவாகும்... 

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் இதை செய்யவில்லை, என்னெனில் உண்மையான புலிகளின் தலைமை இந்திய உளவு பிரிவாகும்...

யாரந்த புலிகளின் தலைமை இந்திய உளவுபிரிவுடன் வேலை செய்ததார்கள் என கூற முடியுமா??

யாரந்த புலிகளின் தலைமை இந்திய உளவுபிரிவுடன் வேலை செய்ததார்கள் என கூற முடியுமா??

எனெக்கெப்படித்தெரியும்? எதோ சாத்திரக்ககாறனிடம் கைய நீட்டிப்போட்டு கேக்கிறமாதிரி கேக்கிறீங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எனெக்கெப்படித்தெரியும்? எதோ சாத்திரக்ககாறனிடம் கைய நீட்டிப்போட்டு கேக்கிறமாதிரி கேக்கிறீங்கள்..

தெரியாத ஒன்றை எழுந்தமானத்துக்கு எழுதுவதா??

தெரியாத ஒன்றை எழுந்தமானத்துக்கு எழுதுவதா??

தெரியாமல் கேக்கிறேன், எமக்கு வேறு என்ன தெரியும்?

தெரியாமல் கேக்கிறேன், எமக்கு வேறு என்ன தெரியும்?

தற்கொடையாளன் முத்துகுமாருவின் மரணச்சடங்கை சரியாக நடத்தவிடாதவர்கள் தாங்கிகளை தமிழ் நாட்டில் வைத்து அழித்திருக்கலாம் என்றால் அது புத்திசாலித்தனமான ஆலோசனை.

அதே பாதையால் திரும்ப கர கோசங்களுடம் இனி இலங்கைக்கு எதிராக ஆயுதங்கள் உருண்டு வரும். இது கைரேகை அல்ல.  நாம் அறியாததை எழுவதும் அல்ல. இலங்கை என்ற மூடன் அழுக்கு மீது வைத்த கையால் மூன்று இடத்தை சேதபடுத்தும் அனுபவம். 78% மக்களின் ஆதரவை வைத்து செய்த அரசியல் ராஜ தந்திரம்.  ஆயுதம் கொடுத்த இந்தியாவை தாக்கி பால் வார்த்தவனை தாக்கும் பாம்பாகி  பற்றைக்குள் கூட ஒடவிடாமல் இனி அடித்து தாழ்க்கப்பட வேண்டிய காரியத்தை செய்த இலங்கை. 
  • கருத்துக்கள உறவுகள்

இன்று யாழில் இருக்கும் நண்பனுடன் தொடர்பு கொண்டு பேசினேன் ஆளும் கட்சிக்காக தேர்தலில் வேலை செய்து கொண்டு இருகின்றான் கேட்டதற்கு வந்த பதில் மச்சான் ரயில் வே வேலைக்கு 250, 300 பேர எடுக்க போறாங்களாம் அதான் தானும் வேலை எடுக்க தேர்தலில் உதவி செய்கின்றேன் என்று......

அவன் கூறியது.....

மக்கள் ஒரு கொதி நிலையிலையே இருகின்றார்கள்

வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆட்சி அமைக்கும்

இராணுவத்தால் பாரிய கலாச்சார சீரழிவு யாழில் திட்டமிட்ட முறையில் நடந்து கொண்டு இருகின்றது........

யாழில் பிரபல மகளிர் பாடசாலை ஒன்றின் மாணவிகள் 9 பேர் கற்பமாகப்பட்டிருகின்றார்கள்

புலிகளை பற்றி மிக பகிரங்கமாக துணிவாக பேசினான் இப்பிடி எல்லாம் பேசுற பயமா இல்லையா என்றா? வந்த பதில் சாவு விளிம்பு வரை போயிட்டு வந்தாச்சு இனி என்ன பயம்

  • கருத்துக்கள உறவுகள்

எனெக்கெப்படித்தெரியும்? எதோ சாத்திரக்ககாறனிடம் கைய நீட்டிப்போட்டு கேக்கிறமாதிரி கேக்கிறீங்கள்..

முடியல பனங்காய் எப்படி இப்படி எழுத முடியுது :rolleyes:

முடியல பனங்காய் எப்படி இப்படி எழுத முடியுது :rolleyes:

பிறகு அந்தாளுக்கு துரோகிப் பட்டம் கட்டி மட்டம் தட்டவோ? :lol:

தலைப்பு சரியில்லை. ஆமியால் மோட்சம் கொடுக்கப்பட்ட என்று வர வேண்டும். ஆமி வடமாகாணத்து பெண்களின் மீதுள்ள கரிசனையில் மட்டுமா வடமாகாண சேவையில் பணம் செலவிடுகிறது? ஆண்களுக்குமாகத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இருப்பது போல போக்கிடமோ ,  நம்பிக்கைகளோ  சிங்களவர்களுக்கு இல்லை...   அவர்களின் போக்கிடம் இலங்கை மட்டும் தான்,  நம்பிக்கையும் தாங்கள் மட்டும் தான்...   ஆதலால் எல்லாவற்றியும் திட்டமிட்டு செய்கிறது சிங்களம்...

ஆனால் தமிழர்களுக்கு அடித்தால்  ஓடுவதுக்கு நிறைய இடம்,  அவர்களுக்காக வேலை செய்வதாக காட்டி நம்பிக்கை ஊட்டவும் ( ஏமாற்றவும்) ஆயிரக்கணக்கானவர்கள்...  இந்த நிலை நீடிக்கும் வரைக்கும் தமிழினம் உருப்பட சாத்தியம் இல்லை....

என்னிடன் இளப்பதுக்கு எதுவும் இல்லை ஆகவே துணிவாக போராடுவேன் எண்று எழிலன் மனைவி  அனந்தி அவர்கள் ஒரு பேட்டியில் சொல்ல கேட்டேன்...   அதுதான் தமிழரின் பலம்... 

தமிழரின் ஒட்டு மொத்த இனமும் தங்களிடம் இளக்க ஏதும் இல்லை என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை...  

மிகச் சரியான கருத்து தயா.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சரியான கருத்து தயா.

தயாவின்  கருத்தோடு இணைந்து இன்னொன்றையும்   சொல்லலாம்

தமிழரின்  வரலாற்றில்  இன்றுவரை

அதிலும்  முக்கியமாக முள்ளிவாய்க்காலுக்கு பின்

தமிழர் போராட்டத்தை  முன்னோக்கி  நகர்த்தியவன்  சிங்களவன் மட்டுமே

இவனே நகர்த்தியும்  வருகின்றான்

நகர்த்துவான்

இதில்  தமிழர் பங்கு என்பது  மிகமிக குறைவு,,,,,,,

என்னைப்பொருத்தவரையில் அம்மையாருக்கு இன உணர்வு உண்டு.
அது மதிக்கப்படவேண்டியது.

என்னைப்பொருத்தவரையில் அம்மையாருக்கு இன உணர்வு உண்டு.
அது மதிக்கப்படவேண்டியது.

அம்மையார் இன உணர்வை காட்டினால்...சிங்களவனுக்கு தான் நல்லது...

அம்மையார் 2-3 கொலைகளுக்காவது சிங்களவனை பதில் சொல்ல சொல்வதே எல்லாருக்கும் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

தயாவின்  கருத்தோடு இணைந்து இன்னொன்றையும்   சொல்லலாம்

தமிழரின்  வரலாற்றில்  இன்றுவரை

அதிலும்  முக்கியமாக முள்ளிவாய்க்காலுக்கு பின்

தமிழர் போராட்டத்தை  முன்னோக்கி  நகர்த்தியவன்  சிங்களவன் மட்டுமே

இவனே நகர்த்தியும்  வருகின்றான்

நகர்த்துவான்

இதில்  தமிழர் பங்கு என்பது  மிகமிக குறைவு,,,,,,,

உங்கள் பார்வை மிகவும் சரியானதே விசுகு அவர்களே! தமிழனின் பங்கு என்பது இன்று புலம்பெயர்ந்தோரினதும், அவர்களிடம் உதவிபெறக்கூடியோரினதும் சந்தையாக மாறிவிட்டது. சந்தைக் குத்தகையால் வரும் இலாபத்தை எண்ணிச் சிங்களவன் அதனை நகர்த்துகிறான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.