Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
http://www.onlineuthayan.com/News_More.php?id=866642297215896773 தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள்; கூறவில்லை என்கிறார் சீ.வி விக்கினேஸ்ரன் - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=866642297215896773#sthash.vDYut51x.dpuf
  • Replies 125
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எதிர்வினைகளின் பயன்.. ஹிந்துவின் நாதாரித்தனம் இப்ப பல்லிளிக்குது.. ஆனாலும் ஓரளவுதான் சமாளித்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் தீவிர எதிர்ப்பு காரணமாக விக்கி திடீர் பல்டி :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் தீவிர எதிர்ப்பு காரணமாக விக்கி திடீர் பல்டி :D

இன்னும் எதிர்ப்பை தீவிரப்படுத்துங்கோ சுண்டல்.. :D தமிழ்நாட்டைப்பற்றி தவறாகப் பேசவில்லை என்று சொல்ல வைக்கலாம்.. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தழிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி உறவு போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை.ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகின்றது.

எனினும் த ஹிந்து பத்திரிகையின் செய்தியாளர் என்னிடம் 10 மேற்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார். அத்தனை கேள்விகளுக்கும் கொடுத்த பதில்களில் ஒன்றாவது வரவில்லை.

ஆனால் இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரிவு படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் நான் கூறிய முக்கியமான சில விடயங்களையும் அவர் குறிப்பிடாது விட்டுள்ளார் என்றார்.

அதேவேளை ஹிந்து பத்திரிகை தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள் பற்றிய தகவல் வெளியிட்ட விக்னேஸ்வரன்,

தென்னியந்திய இளைஞர் யுவதிகள் நடாத்திய போராட்டமும் அவர்கள் தமது உணர்வுகளைத் தெரிவித்த விதமும் எமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் அதனால் எமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறியிந்தேன்.

மேலும் அரசியல் கட்சிகள் எமது பிரச்சினைகளை தமது சுயநலனுக்காக பாவிக்ககூடாது என்றும் அப்படி பாவிப்பது ரெனிஸ் பந்தை அடிப்பது போல் இருக்கும்.

அத்துடன் பிரிவினையை ஒரு தீர்வாக வெளிநாட்டில் இருப்பவர்கள் கூறுவது ஒரு கணவன் மனைவி சம்பந்தப்பட்ட விடயத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் திருமண நீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன்.

இதில் கணவன் மனைவி என்று தமிழரையும் சிங்களவரையும் நான் குறிப்பிடவில்லை. அந்த மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

அதன்படி மூன்றாம் நபர்கள் உட்புகுந்து நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறுவது கணவன்- மனைவிக்கு எவ்வாறு இருக்குமோ அதுபோல தான் பிரிவினை ஒன்றே தீர்வு என்று தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் கூறுவதும் எமது நாட்டு அரசுடன் பேசும் போது பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்று கூறினேன்.

எனினும் தென்னிந்திய மக்களுக்கும் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை அங்குள்ளவர்களில் பலர் எனது நண்பர்கள் இருக்கின்றனர்.

அவர்களது அனுசனையும் உதவிகளும் எமக்கு வருங்காலத்தில் வடமாகாண சபையிலோ அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேவையானது. எனவே அவற்றை மறந்து அவர்களை நான் கொச்சைப்படுத்தியதாக குறித்த பத்திரிகை பிரசுரித்துள்ளமை எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தழிழரும் சிங்களவரும் கணவன்- மனைவி உறவு போன்றவர்கள் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. த ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவு படுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு தமிழரசுக் கட்சியின் மாட்டின் வீதியில் உள்ள யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகின்றது. எனினும் த ஹிந்து பத்திரிகையின் நிருபர் என்னிடம் 10 மேற்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார். அத்தனை கேள்விகளுக்கும் கொடுத்த பதில்களில் ஒன்றாவது வரவில்லை. ஆனால் இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரிவு படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் நான் கூறிய முக்கியமான சில விடயங்களையும் அவர் குறிப்பிடாது விட்டுள்ளார். நான் அந்த செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தென்னியந்திய இளைஞர் யுவதிகள் நடாத்திய போராட்டமும் அவர்கள் தமது உணர்வுகளைத் தெரிவித்த விதமும் எமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் அதனால் எமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறியிருந்தேன். மேலும் அரசியல் கட்சிகள் எமது பிரச்சினைகளை தமது சுயநலனுக்காக பாவிக்ககூடாது என்றும் அப்படி பாவிப்பது ரெனிஸ் பந்தை அடிப்பது போல் இருக்கும். அத்துடன் பிரிவினையை ஒரு தீர்வாக வெளிநாட்டில் இருப்பவர்கள் கூறுவது ஒரு கணவன் மனைவி சம்பந்தப்பட்ட விடயத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் திருமண நீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன். இதில் கணவன் மனைவி என்று தழிழரையும் சிங்களவரையும் நான் குறிப்பிடவில்லை. அந்த மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தான் அவ்வாறு குறிப்பிட்டேன். அதன்படி மூன்றாம் நபர்கள் உட்புகுந்து நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறுவது கணவன்- மனைவிக்கு எவ்வாறு இருக்குமோ அதுபோல தான் பிரிவினை ஒன்றே தீர்வு என்று தென்னிந்தியாவில் உள்ள கட்சிகள் கூறுவதும் எமது நாட்டு அரசுடன் பேசும் போது பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்று கூறினேன். எனினும் தென்னிந்திய மக்களுக்கும் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை அங்குள்ளவர்களில் பலர் எனது நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களது அனுசனையும் உதவிகளும் எமக்கு வருங்காலத்தில் வடமாகாண சபையிலோ அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேவையானது. எனவே அவற்றை மறந்து அவர்களை நான் கொச்சைப்படுத்தியதாக குறித்த பத்திரிகை பிரசுரித்துள்ளமை எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=866642297215896773#sthash.vDYut51x.zZp6kcrD.dpuf

எப்படித் திரித்துள்ளான் ஹிந்து ராம். மகிந்த கொடுக்கும் எலும்புதுண்டுக்கும் சிங்க-ரத்னா விருதுக்கும் இதையும் செய்யாவிடின் எப்படி?

இப்போது தெரிகிறதா விக்னேஸ்வரனை கண்டு மகிந்த கும்பல் எப்படி பயப்படுகிறது என்பது.

விக்னேஸ்வரனும் இந்து போன்றவர்களை இனம்கண்டு ஒதுக்க அல்லது லாவகமாக கையாளப் பழகவேண்டும்.

சீமான் இந்துவை நம்பி விக்னேஸ்வரன் மீது பாய்ந்திருக்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கலகம் நன்மையிலேயே முடிந்தது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்... "இந்து" போன்ற ஹிந்திய வல்லாதிக்கத்தை நிலைநாட்ட பாடுபடும்.. ஜனநாயக விரோத ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதை தமிழின விடுதலையை.. விடிவை  விரும்பும்.. தமிழீழ அரசியல் சக்திகளும்.. தமிழகத் தலைவர்களும்.. புலம்பெயர் மக்களும் முற்றாக புறக்கணிக்க வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

சுண்டலின் தீவிர எதிர்ப்பு காரணமாக விக்கி திடீர் பல்டி :D

கிந்துவை தமிழகத்தில் பிரதிநிதிப்படுத்தும் சுதர்சன நாச்சியப்பன் இலங்கையை, ஒட்டு மொத்தமாக  சிங்களவருடன் சேர்த்து இந்தியா பிடித்தால்தான் சரி என்று கிந்திய ஏகாதிபத்திய வேணவாவை கூச்ச நாச்சமின்றி திறந்த வெளி அரங்குகளில் வெளிக்காட்டும் போது ஈழத்தமிழ்ரை சிங்களத்தின் கைகளில் இருந்து விடுவித்தால் போதும் என்று கேட்ட தமிழ் கட்சிகள், திராவிட கட்சிகள் புண்படத்ததாக வகையில், இந்துவின் வாய்க்குள் சுவிங்கம் ஒன்றை போட்டது விக்கினேஸ்வரனின் சந்தர்ப்ப சூழ்நிலையால் வந்த தவறுதான். எதற்கும் சுண்டல் அவரை இப்படி ஈவு,இரக்கமில்லாமல் தாக்கியிருந்திருக்கப்படாது. :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தமிழர் இயக்கம் பொங்கியதால்தான் ஈழத்தமிழர் பிரச்னையை உலகம் திரும்பி பார்த்தது. தமிழகத்தில் இருந்து புத்த பிக்குவை ஓடஓட அடித்து விரட்டிய வீரவேங்கைகளுக்கு நன்றி தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, விமர்சிக்காதீர்கள்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் இயக்கம் பொங்கியதால்தான் ஈழத்தமிழர் பிரச்னையை உலகம் திரும்பி பார்த்தது. தமிழகத்தில் இருந்து புத்த பிக்குவை ஓடஓட அடித்து விரட்டிய வீரவேங்கைகளுக்கு நன்றி தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, விமர்சிக்காதீர்கள்.

 

ஜயோ கையோ உங்களை நினைக்க சிப்பு வருது சிப்பு வருது :D நீங்கள் என்ன தான் கொக்கரிச்சாலும் மக்கள் நல்ல தெளிவாய் தான் இருக்கினம்.....மீதீ இருக்கிற எலும்பு துன்டை நக்குங்கோ......பூனைப் பயரில் வந்து கொக்கரிக்கும் கூட்டம் தானே நீங்கள்..யாழிழ் உங்களுக்கு இது எத்தினையாவது ஜடி ஹா ஹா

https://www.youtube.com/watch?v=9By8LuvRxdQ

Edited by VENDAN

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் இயக்கம் பொங்கியதால்தான் ஈழத்தமிழர் பிரச்னையை உலகம் திரும்பி பார்த்தது. தமிழகத்தில் இருந்து புத்த பிக்குவை ஓடஓட அடித்து விரட்டிய வீரவேங்கைகளுக்கு நன்றி தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, விமர்சிக்காதீர்கள்.

 

நன்றி வீரவேங்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சீமான் ஈழத்தை பற்றி போசாமல் இருந்தால் ஒன்று ஈழம் பிறந்திருக்க வேண்டும் இல்லையேல் சீமான் இறந்திருக்க வேண்டும் என்ற அன்று அவர் சொன்னதை இன்று வரை கடைபிடித்து வருபவர் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதையே தன் கொள்கையென கட்சி நடத்துபவர்கள் மத்தியில் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார் எங்கள் அண்ணன் சீமான்

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிய பேசாமல் அரசியலுக்குள்ள கொண்டு வந்தத விட கோயில் குளம் எண்டு அவர் சுத்தி கொண்டு இருந்த வேலையையே செய்திருக்கலாம் என்று தமிழரசு கட்சி தொண்டர்கள் தங்களுக்குள் பேசுகின்றார்களாம்

இந்து பத்திரிகைக்கு அண்ணாச்சி குடுத்த பேட்டியில் off the record உம் நிறைய விடையங்களை சொல்லி இருக்கின்றாராம்

தமிழ் மக்கள் மத்தியில் எழுந்து பலத்த எதிர்ப்பை அடுத்து தானாம் சம்மந்தர் அவசர அவசரமா பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பூசி மெழுகின்ற வேளையில் ஈடுபடுகின்றார்கலாம்........

இதெல்லாம் ஜஸ்ட் வெறும் சாம்பிள் தானாம் முதலமைச்சர் ஆனவுடன் இன்னும் நிறைய வெடிகளை கொழுத்தி போடுவாராம்......

தங்கள் தலைவிதியை நொந்து தமிழன் அலுத்து கொண்டு இருக்க

விக்கியின் பல்டி அடிப்புகளை பாத்து சிங்களம் ஒரே சிரிப்பாம்

 

சீமான் பற்றிய பல கருத்துக்களில் இருந்தே பலர் அவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது புரிகிறது.

சீமான்..

  • 2009 இலும் தொண்டை கிழியக் கத்தினார். பலர் திரும்பிப் பார்க்கவில்லை. சிறைச்சாலைக்குப் போனார். திரும்பிப் பார்க்கவில்லை. மன அழுத்தத்தில் கிடந்தார்கள்.
  • 2010 இலும் கத்தினார்.. சிறைக்குப் போனார். யாரோ கத்திறான்பா என்று மீண்டும் மன அழுத்தத்துக்குள் போனார்கள்.
  • 2010 இல் கட்சி ஆரம்பித்தார். இதுவும் பத்தோடு பதினொன்று என்று விட்டுவிட்டார்கள்.
  • 2011 இலும் கத்தினார். சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.
  • 2012 இலும் கத்தினார்.
  • 2013 இலும் குரல் கொடுக்கிறார். ஆனால் மன அழுத்தத்தில் கிடந்தவர்கள் வீரிட்டு எழுந்துவிட்டார்கள். அடடா.. இவர் யாரய்யா புதிதாக முளைத்த தலைவர் என்று. ஆனால் பல வருடங்களாக முளைத்துவந்த செடிதான் இன்று இளமரமானது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

 

ம்ம்.கத்திக் கத்தி முத்தி ஒண்டுக்கும் உதவா முருக்கம் மரம் ஆகி இருக்கு இசைக்கலைஞன்.

சீமான் செம்புகளா.வீட்டுக்குள்ள படுத்து கிடந்து கணணியில நாடு பிடிக்கலாம் சுகமா உங்கதலைவரு மேடையில மைக் உடைய முழங்கி தனக்கு பதிவி புடிப்பாரு, உங்கட பூசாரித்தனமும் உங்கட பொங்கச்சோறும். அங்க உள்ள முன்னாள் போராளிகளின் நிலமைய கருத்தில் கொண்டு உங்க சினிமாவை நிறுத்துங்க வடக்கில் கிழக்கில் விழும் ஓவரு மரணமும் உங்களை மாதிரி அரை குறைகளால் என்பதை புரியுங்க அற்ப விளம்பரத்துக்கு கதை அளந்துவிடாமல். நாலு தமிழ்நாடு இளையர்களின் ஓட்டும் கைதட்டும் உங்க அரசியல் தலைவருக்கு சோறு போடும் ஆனால் ஈழத்தில் உள்ளவனுக்கு வாய்க்கரிசிதான் போடும் நினைவில் கொள்ளுங்க. :wub:  :wub:  :wub:
 

Edited by கதாநாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

 

சீமான் செம்புகளா.வீட்டுக்குள்ள படுத்து கிடந்து கணணியில நாடு பிடிக்கலாம் சுகமா உங்கதலைவரு மேடையில மைக் உடைய முழங்கி தனக்கு பதிவி புடிப்பாரு, உங்கட பூசாரித்தனமும் உங்கட பொங்கச்சோறும். அங்க உள்ள முன்னாள் போராளிகளின் நிலமைய கருத்தில் கொண்டு உங்க சினிமாவை நிறுத்துங்க வடக்கில் கிழக்கில் விழும் ஓவரு மரணமும் உங்களை மாதிரி அரை குறைகளால் என்பதை புரியுங்க அற்ப விளம்பரத்துக்கு கதை அளந்துவிடாமல். நாலு தமிழ்நாடு இளையர்களின் ஓட்டும் கைதட்டும் உங்க அரசியல் தலைவருக்கு சோறு போடும் ஆனால் ஈழத்தில் உள்ளவனுக்கு வாய்க்கரிசிதான் போடும் நினைவில் கொள்ளுங்க. :wub:  :wub:  :wub:

 

உலக மாற்றத்தை பற்றி தெரியாத நீங்கள் எல்லாம் பழைய ஓட்டை சட்டியை பற்றியே கதைத்து கொண்டு ஆக்களை குழப்பிட்டு இருங்கோ அது தானே உங்க வேலை.... :wub:  :wub:  :wub:  :wub:  :wub:  :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சீமான் செம்புகளா.வீட்டுக்குள்ள படுத்து கிடந்து கணணியில நாடு பிடிக்கலாம் சுகமா உங்கதலைவரு மேடையில மைக் உடைய முழங்கி தனக்கு பதிவி புடிப்பாரு, உங்கட பூசாரித்தனமும் உங்கட பொங்கச்சோறும். அங்க உள்ள முன்னாள் போராளிகளின் நிலமைய கருத்தில் கொண்டு உங்க சினிமாவை நிறுத்துங்க வடக்கில் கிழக்கில் விழும் ஓவரு மரணமும் உங்களை மாதிரி அரை குறைகளால் என்பதை புரியுங்க அற்ப விளம்பரத்துக்கு கதை அளந்துவிடாமல். நாலு தமிழ்நாடு இளையர்களின் ஓட்டும் கைதட்டும் உங்க அரசியல் தலைவருக்கு சோறு போடும் ஆனால் ஈழத்தில் உள்ளவனுக்கு வாய்க்கரிசிதான் போடும் நினைவில் கொள்ளுங்க. :wub:  :wub:  :wub:

 

இன்றைய திகதியில் அண்ணன் சீமானுக்கு உள்ள மரியாதையும், செல்வாக்கும் வேறு யாருக்கும் கிடையாது. அண்ணன் வாயசைந்தால், அகிலமே அசையும் என்பது மற்றையவர்களுக்கு எரிச்சல்! தமிழகத்தில் அண்ணன் அடித்த ஒவ்வொரு அடியும், சிங்களவனுக்கு இடி!

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

செல்லங்கள் சீமான் அண்ணாவை பற்றி இப்படி எழுதுவது ஒன்றுக்கு நல்லம்...   அவர்  மேலும் மேலும் வளர்வார்  :D 
 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர்களிடம் போது வாக்கு எடுப்பு நடத்தினால் நீங்கள் சீமானை ஆதரிக்கிறீர்களா என்று...89 விழுக்காடு ஆம் என்று தான் பதில் அளிப்பினம்.... :D 

 

மீதி இருக்கிற 11 ஒரு விழுக்காடு இல்லை என்று தான் வாக்களிப்பினம்

 
முதலாவது நம்ம கதாநாயகன் இரண்டாவது 61 கருத்து எழுதி திமிரா கதைக்கிற சவிஷன் 36 சீமான் என்ன செய்து கிழிச்சார் என்று பல திரிகளில் கேட்டுத் திரியும் ஆக்களும் தான்  :wub:  :)

 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26 ரொம்ப தீவிர சீமான் ஆதரவாளர் போல் தெரியுது... :rolleyes:

 

நம்பிக்கை வையுங்கள், ஆனால் அதே நேரம் வலுகவனமும், நிதானமும் தேவை. தீவிரமும், நிதானமும் சூழ்நிலைக்கு தக்கவாறு சமயோசிதமாக பயன்படுத்தலே நலம்.

 

பன்முகத்தன்மை அரசியலில் வேண்டும். தீவிர சீமானும் வேண்டும், அதே சமயம் பக்குவப்பட்ட நிதான வைகோவும் வேண்டும். :)

Edited by ராசவன்னியன்

பையன்26 ரொம்ப தீவிர சீமான் ஆதரவாளர் போல் தெரியுது... :rolleyes:

 

நம்பிக்கை வையுங்கள், ஆனால் அதே நேரம் வலுகவனமும், நிதானமும் தேவை. தீவிரமும், நிதானமும் சூழ்நிலைக்கு தக்கவாறு சமயோசிதமாக பயன்படுத்தலே நலம்.

 

பன்முகத்தன்மை அரசியலில் வேண்டும். தீவிர சீமானும் வேண்டும், அதே சமயம் பக்குவப்பட்ட நிதான வைகோவும் வேண்டும். :)

 

உண்மையான  வார்த்தைகள்  ராசவன்னியன்.

 

இருவரது  வழிமுறைகள்  வேறுவேறாக  இருப்பினும்  இலக்கு  ஒன்றுதான் . 

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26 ரொம்ப தீவிர சீமான் ஆதரவாளர் போல் தெரியுது... :rolleyes:

 

நம்பிக்கை வையுங்கள், ஆனால் அதே நேரம் வலுகவனமும், நிதானமும் தேவை. தீவிரமும், நிதானமும் சூழ்நிலைக்கு தக்கவாறு சமயோசிதமாக பயன்படுத்தலே நலம்.

 

பன்முகத்தன்மை அரசியலில் வேண்டும். தீவிர சீமானும் வேண்டும், அதே சமயம் பக்குவப்பட்ட நிதான வைகோவும் வேண்டும். :)

வணக்கம் உறவே..
சீமான் அண்ணாவை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் தான் பார்க்கிறேன்...எனது நண்பர்களும் அப்படி தான் பார்க்கிறார்கள் அவர.. உள்ளதை சொல்லப் போனால் 2008ம் ஆண்டு வரைக்கும் சீமான் அண்ணா என்றால் எனக்கு யார் என்று கூடத் தெரியாது...பிறக்கு தான் அவரின் மேடை பேச்சை கேட்டு தான் இன்னார் என்று அடையாலம் கண்டேன் தெரிந்து கொண்டேன்.....நான் பார்த்த ஆட்களில் இவர் ரொம்ப வித்தியாசமான‌ ஆள்...அது தான் நான் அவர‌ ஆதரிக்கிறேன்....தமிழ் நாடு சென்று அவர‌ பார்க்கப் போன இடத்தில் கூட‌ அவரின் கதையை கேட்டு  வியந்து போனேன்........நம்பிக்கை தானே அண்ணா வாழ்க்கை....நல்லதையே எதிர் பாப்போம் நல்லதே நடக்கும்....ஒருசிலர் அவர பற்றி தூற்றி எழுதுவது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாது..அது தான் ஒரு சில திரியில்  கருத்தாடலில் ஆரம்பிச்ச்சு சண்டையில் போய் முடியிறது...... :rolleyes:
:rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரனும் இந்துப்பத்திரிகையில் வந்த திரிக்கப்பட்ட செய்தி என்று சொல்லிவிட்டு அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விட்டார். இந்தத்தலைப்பினை மூடுங்கள். கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.