Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவகாமி ஐ.ஏ.எஸ்., உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

Featured Replies

சிவகாமி ஐ.ஏ.எஸ்., உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெண் புலிகளை இழிவுபடுத்திய சிவகாமி ஐ.ஏ.எஸ்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரான சிவகாமி 13.09.2013 அன்று இரவு 9 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரன் ஆதாரமற்ற தகவல்களை இதுபோன்ற நேரலை நிகழ்ச்சிகளில் சொல்லக் கூடாது என்கிறார். உடன் விவாதத்தில் பங்கு கொண்ட வழக்குரைஞர் அருள்மொழி, திலகவதி ஐ.பி.எஸ், ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள். இது பத்திரிகை செய்திகளில் வந்துள்ளது. பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னிடம் கூறிய ஒளிப்பட பதிவு இருக்கிறது என்றெல்லாம் கூறியுள்ளார் திரு.சிவகாமி ஐ.ஏ.எஸ்.
”நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், ஞான நல்லறம் பேணு நற்குடி பெண்களின் குணங்களாம்" என்பதை அர்த்தமுள்ளதாக்கியது புலிப்படை.
சமையல்காரியாகவும், துணி துவைப்போராகவும், ஆண்கள் கிண்டல் செய்கையில் தலை குனிந்தவளாகவும், பிள்ளை பெறும் மெசினாகவும், கணவன் விரும்பிய போது சுகமளிக்கும் பாலியல் இயந்திரமாகவும் இருந்த பெண்களின் வரலாற்றில் புரட்சியினை உண்டாக்கிய பெருமை புலிபடைக்கே உரியது.
ஈழத்தில் மாலையானதும் பெண்கள் வீட்டிற்கு வெளியே போக கூடாது என்றும், "வீட்டிற்கு விலக்கு" எனும் அடை மொழியால் பெண்களை மாதவிடாய் காலத்தில் வீட்டின் ஓரத்தில் விலக்கி வைத்திருந்த சமூகத்தில், பெண்களும் துப்பாக்கி ஏந்திக் களமாடும் வல்லமையை உருவாக்கியது புலிப்படை.
இலங்கையின் மணலாறு இராணுவ முகாம் மீது 1995ம் ஆண்டு ஜூலை மாதம் பெண் புலிகளால் தனித்து நின்று நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி உங்களுக்கு தெரியாதா..?
மன்னகுளம் முகாம் மீதான தாக்குதல், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் பற்றி அறியாதவரா..?
ஒரு பெண் காவல் அதிகாரிக்கு துணையாக ஐந்து ஆண் காவலர்கள் காவல் காக்கின்ற இந்திய நாட்டின் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்தானே நீங்கள்..?
எப்படி அறிய முடியும் ஈழவிடுதலைக்காக கடலுக்கடியில், பறக்கும் வானில், அடர் வனத்தில் களமாடிய பெண் போராளிகளைப் பற்றி….
உலகத்திலேயே பெண்களை மதிக்கின்ற, மரியாதை செலுத்துக்கின்ற ஒரே ராணுவம் புலிகளின் ராணுவம்.
பல அப்பாவி தமிழ் பெண்களும், பெண் புலிகளும் பாலியல் வன் பு/னர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்டது உலகம் அறிந்த செய்தி.
இதுவரை சிங்களவர்கள் கூட சொல்லத் துணியாத, சொல்ல முடியாத ஒரு அவதூறை பரப்புகின்ற சிவகாமி ஐ.ஏ.எஸ்., உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நன்றி

முகநூல்

Edited by thanga

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் அப்பாவி இளைஞர்கள் 4 பேர் தான் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் அல்ல குற்றவாளிகள். உண்மையான ரவுடிகள்.. இந்திய ஆளும் பீடங்களில் உள்ளனர். இந்த சிவசங்கரி ஐ ஏ எஸ்ஸும் அந்த ரவுடிகளில் ஒருவர். இந்திய ஆளும் பீடங்களில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் (பெண் அதிகாரிகள் உட்பட) பெண்களை கிள்ளுக்கீரைகளாகத்தான் நினைக்கிறார்கள்.

அவர்களின் பார்வையில் ஈழத்தில் நடந்த விடுதலைப் போராட்டம்.. புலிகள் இயக்கம் எல்லாம் அநியாயமாகத் தான் தெரியும். அது ஒன்றும் புதிதும் அல்ல. நீதியான நேர்மையான அரசியல் தலைமைத்துவம் மூலம்.. இந்த ஆட்சி... அதிகார முதலைகளை கூண்டோடு.. அழிக்காதவரை இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது வரவே வராது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசின் சிவகாமி கம்யூட்டரே, சரக்கு அடிச்சுட்டு இப்படி பேசாதிங்க... ஆதாரத்துடன் பேசுங்க... uxlm.jpg fc

>பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னிடம் கூறிய ஒளிப்பட பதிவு இருக்கிறது

ஓஹோ, இந்தப் பாரிஸ் பாலியல் எழுத்தாளரைச் சந்தித்திருப்பாரோ?

குடி, கூத்து, கும்மாளம் போட்டுவிட்டு, இந்தக் கதையையும் பேசியிருப்பார்கள்.

  • தொடங்கியவர்

அன்பர்களே இவளை பற்றி கருத்துகளை புதியதலைமுறை தொலைகாட்சி இனையத்திலும் அதன் முகநூல் பக்கத்திலும் பதிவு செயுங்கள்... முடிந்தால் புதியமுறைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு உஙகள் எதிர்ப்புகளை தெரிவியுங்கள்...தொலைபேசி இல. 00 91 44 45969500 நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

இவளை என்ன செய்யலாம்... இப்படி வாய் கூசாமை பொய் சொல்லுறால்.... https://www.youtube.com/watch?feature=player_embedded&v=lVpSJUF6ixQ#t=149

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ், இதற்கு முற்றிலும் சம்பந்தமே  இல்லாத எமது புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை எந்த வித ஆதாரமுமின்றித் தெரிவித்தது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதை ஒட்டுமொத்த தமிழர்களுக்கெதிரான உளவியல் தாக்குதலாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஈழத்திலும், தமிழகத்திலும் ஏற்பட்டு வரும் தமிழர்களின் ஒற்றுமையை ஒரு தீர்வு நோக்கிக் குவியப்பட்டு வரும் வேளையில் தலித் என்ற போர்வைக்குள் ஒழிவதன் மூலம் சாதீயப்பிரச்சனையைத் தூண்டி விட்டு தமிழரின் ஒற்றுமையை நீர்த்துப் போகச் செய்யவே இவர் விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. இவர்கள் போன்றவர்களை சமுதாயத்திற்கு அடையாளப்படுத்தும் அதே வேளை, தம்மை இலக்கியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு இப்படியானவர்களுக்குச் செம்பு தூக்கும் ஈனப்பிறவிகளையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதே வேளை எம்மினத்தின் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படும் போராளிகளையும், புலிகள் இயக்கத்தையும்

எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவதூறாகப் பேசியதற்காய் சிவகாமி ஐ.ஏ.எஸ் அவர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு. ஈழத்தமிழனாக எனது எதிர்ப்பையும் பதிவு பண்ணுகிறேன்.

அவரையும் சேர்த்து பாரிசில் அவருக்கு புலிகளைப் பற்றி தப்பாக சொல்லிய அந்த புலம் பெயர் தமிழரையும் கண்டிக்கிறேன்.கேடு கெட்ட எண்ணம் கொண்ட ஈனப் பிறவிகள் தான் இப்படி கதைப்பர்

முதலில் இப்படியான ஈன,ஈழத் தமிழர் யார் என அடையாளம் காணப்பட வேண்டும்

சீமான், வைகோ ..யாராவது இந்த பெண் மீது அவதூறு வழக்கு போட்டு..அவரது கூற்றுக்கு மன்னிப்பு கேட்க சொல்லலாம்...இல்லை என்றால்...அவர் கூறியதற்க்கு என்ன அடிப்பதை என்றாவது விளக்க சொல்லி கேட்கலாம்..

அந்த பெண் -- Congress ஆ? அப்படி என்றால்... ராஜீவ்/சோனியாவை ஈழ தமிழர் தாக்குவது போல் அவரும் தாக்குகிறாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருத்தம் தெரிவித்தார் சிவகாமி IAS

------------------------------------------------------------

Sivakami Palanimuthu

Dear All,

Thank you for all the feedback you have given me through facebook for my statement in Pudhiya Thalaimurai T.V. Channel on the 13th September 2013. They were quite educative. In the absence of concrete evidence I sincerely feel that I should not have spoken like that. I have great regards for all those who have struggled for their equal status in Sri Lanka and lost their lives. Even now I regret for my inability to support their cause in Sri Lanka as I am struggling for a similar cause in Tamil Nadu and India. Therefore I apologize from the bottom of my heart for my statement.

இதன் மூலம் எது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் மூலம் எது?

https://www.facebook.com/sivakami.palanimuthu/posts/571910482876363

சரி, இப்பொழுது அவருடைய முகநூலில் பார்த்தேன். மன்னிப்புக் கேட்டிருக்கிறார். விட்டுத் தொலைவோம்

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் காத்திரமான எதிர்வினை ஒன்றுக்குப் பலன் கிட்டியுள்ளது..! அறியாமல் விட்ட வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்ததன்மூலம் மக்கள் மனதில் உயர்ந்துவிட்டார் சிவகாமி அவர்கள்..! ஒட்டுக்குழுக்களுடன் சகவாசம் வைக்கக்கூடாது என்பதை இப்போது உணர்ந்திருப்பார்.. :D

நிச்சயமாக உணந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் பெண்கள் விடயத்தில் மிக கண்ணியமாகவே நடந்து கொண்டனர் என்பதனை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.

மன்னிப்பு கோரினார் சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ! 

போதிய ஆதாரமில்லாமல் நான் அவ்வாறு தொலைக்காட்சியில் பேசி இருக்கக் கூடாது. இலங்கையில் சம உரிமை கோரி பல உயிர்களை இழந்து போராட்டம் செய்த போராளிகளை நான் பெரிதும் மதிக்கிறேன். என்னால் அவர்களின் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியவில்லை என்பதை குறித்து வருந்துகிறேன். காரணம் நானும் அது போன்ற காரணத்திற்கு தான் தமிழகத்திலும் இந்தியாவிலும் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் கூறிய தகவலுக்கு என் ஆழ்மனதில் இருந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 

https://www.facebook...571910482876363

விடுதலைப் புலிகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் பெண்கள் விடயத்தில் மிக கண்ணியமாகவே நடந்து கொண்டனர் என்பதனை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.

இதை நானும் வழிமொழிகிறேன்...1987 இலேயே தங்களது போராளி ஒருவர் காவலுக்கு போன இடத்தில் காதல் லீலை செய்த பொழுது... ஒரு நாள் முழுக்க light-post இல் (உயிருடன் தான்) கட்டி வைத்து தண்டித்தார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.