Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது- விக்னேஸ்வரனுக்கு நாம் தமிழர் கட்சி பதில்

Featured Replies

இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.


ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்க காலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.



தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள். ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரி்யாதோ? ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல் துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ? அதனால்தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார்.



இலங்கைத் தமிழினத்தின் அரசியல் விடுதலை வரலாறு விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கொழும்புவில் சட்டப் பணியாற்றிக்கொண்டு, பிறகு நீதிபதியாகி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடு்ம்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து வந்தவர். எனவே, ஈழத் தமிழினத்தின் 60 ஆண்டுக்கால துயரம் விக்னேஸ்வரன் அறியாதது. அந்த துயரத்திற்குக் காரணமான சிங்கள பெளத்த இனவாத அரசியல் அவருக்கு புரிந்திருக்கவில்லை. அதனை விக்னேஸ்வரன் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஈழத் தந்தை செல்வா ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்.



இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம் என்று விக்னேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்த எடுத்துக்காட்டை தமிழீழ மக்களிடம் கூறினால் வாயால் சிரிக்க மாட்டார்கள்! சிங்கள பெளத்த இனவாத அரசியலின் அடிப்படையை புரியாத அல்லது இல்லாததுபோல் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார். தமிழருக்கும் சிங்களருக்கும் உள்ள பிரச்சனைதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், பிறகு இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுகிறார்! ஆக, ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு  பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை விளக்க வேண்டும்.



தமிழருக்காக பேசும் சிங்களவர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார். தமிழர்களுக்காக நியாயமாக பேசும் சிங்கள புத்திசீவிகள் அனைவரும் தமிழீழ விடுதலையே தமிழருக்கான ஒரே தீர்வு என்று கூறுகிறார்கள் என்பதை விக்னேஸ்வரனை விட நாங்கள் அதிகம் அறிந்தவர்கள்.


இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வரை யாருக்கும் தெரியாத நபர் விக்னேஸ்வரன். ஆனால், அவரை தமிழ்த் தேச கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறது என்றால், அதன் பின்னணி சதியில் சிங்கள பெளத்த இனவாத அரசும், டெல்லியும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. தமிழனின் அரசியலைக் கொண்டே தமிழினத்தின் விடுதலையை முடக்குவது என்கிற சீறிய சதித் திட்டத்தின் வெளிப்பாடுதானே  விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது? இந்த உண்மையெல்லாம், சிங்கள இனவாத இராணுவத்தின் கொடூரங்களால் தங்களின் கணவரையும், பிள்ளைகளையும் இழந்து தனிமரமாய் நிற்கும் ஈழத் தாய்மார்களுக்குத் தெரியும், விக்னேஸ்வரன்களுக்குத் தெரியாது.

பதவிக்காக தமிழினத்தின் விடுதலைப் போராடத்தை விலை பேசும் இப்படிப்பட்ட கொழும்புக் காக்காய்களுக்கு காயம் பட்டு முணங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் வலி தெரியுமா? இனவெறி அரசியலால் சற்றும் பாதிக்கப்படாத உங்களைப் போன்றவர்களுக்கு தமிழினத்தின் விடுதலை உணர்வு சற்றும் தீண்டாதது எங்களுக்கு எந்த விதத்திலும் வியப்பளிக்கவில்லை. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு எண்ணிலடங்கா துரோகிகளை கண்ணுற்றுள்ளது. அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்கள் என்பது எங்களுக்காக புரியாது?


தமிழிழ மக்களின் உண்மைப் பிரதிநிதிகள் அவர்களின் விடுதலைக்காகவும், மானம் காக்கவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளே. தம் இனம் காக்க களம் புகுந்து உயிர் தியாகம் செய்த மாவீரர்களே ஈழத் தமிழினத்தின் வழிகாட்டிகள். ஈழத் தமிழினத்தின் துயரத்தை துடைக்க முத்துக்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை தீக்கீரையாக்கியுள்ளனர். அவர்களின் தியாகமே, ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தோடு எம் தமிழ்நாட்டையும், அதன் அரசியலையும் இணைத்துவிட்டது. அதன் மீது கேள்வி எழுப்பும் எந்த யோக்கிதையும் விக்னேஸ்வரனுக்குக் கிடையாது. எம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த ஒரு மாவீரராவது இந்த விக்னேஸ்வரன் குடும்பத்தில் உள்ளரா? தமிழீழ விடுதலையின் தியாக ரூபங்களான விடுதலைப் புலிகளே எம்மக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள். அவர்களின் இடத்தில் ஒருபோதும் தமிழ்த் தேச கூட்டமைப்பு வந்துவிட முடியாது. புலிகளின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது. அது நடக்கவும் நடக்காது, உலகத் தமிழினம் அதனை ஒருபோதும் அனுமதிக்காது.


வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பு வெற்றி பெறலாம், விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆகலாம். ஆனால் அதுவே ஈழத் தமிழினத்தின் விடுதலை கோரிக்கையை விட்டுத் தந்துவிடுவதாக ஆகாது. நாங்கள் ஒருபோதும் சிங்களத் தலைமையையோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவே, தமிழீழ மக்கள் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றனரே தவிர, த.தே.கூ.தான் எங்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று சான்றளிக்க அல்ல என்பதை விக்னேஸ்வரனும், அந்த கூட்டமைப்பின் பதவிப் பித்தர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


தமிழீழ விடுதலையே தமிழினத்தின் தாகம்.

 

http://akkinikkunchu.com/new/

  • Replies 66
  • Views 4.4k
  • Created
  • Last Reply

முக புத்தகத்தில் இருத்து 100 வீத உண்மை .

தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் ஈழ பிரச்சினையை தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன் படுத்துகிறார்கள் என்பது முற்றிலும் உண்மையே ....

சில அண்மைய கால நிகழ்வுகளே சான்று !!

1. போர் உச்சத்தில் இருக்கும்போது அனைத்து கட்சி கூட்டத்தை செயாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்று புறக்கணித்த வைகோ ...

2. ஈழ நெருப்பை அணையவைக்க கருணா நடத்திய நாடகங்கள் பல அதில் உன்ன விரதமும் ஒன்று ...

3.போர் என்றால் மக்கள் சாவார்கள் என...்று கூறிய பாட்டி செயா எப்படியாவது வெற்றி பெற இல்லை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று செய்த முயற்சி ..

4 .ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்றால் செயாவின் பார்வை கிடைக்காமல் போகும் என்று உணர்ந்து இலங்கை தமிழர் பாது காப்பு இயக்கம் என்று பெயர் வாய்த்த போராளிகள் ..

5.நாடாளு மன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதத்தை குடியரசு தலைவரிடம் கொடுக்காமல் கருணாவிடம் கொடுத்த கூத்து ..

6. ஆட்சி அதிகாரம் போன பின்பு டெசோ நடத்திய நாடகங்கள் ...

7.ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி விட்டு சோனியாவின் காலை நக்கும் குருமா கும்பல் ...

8. மாணவர் போராட்டமே எனது பேச்சால் தான் உருவானது என்று கூறி அந்த நாட்களில் புலம் பெயர்களிடம் நிதி பெற வெளிநாடு சென்றது .

இப்படி எண்ணற்ற அரசியல் கோமாளித்தனங்கள் கடந்த 4 ஆண்டுகளில் நடந்தன தமிழ்நாட்டில் ஈழ தமிழரை வைத்து ..இன்றும் தொடர்கின்றன என்பதே அவமானம் ..

ஆகவே ஈழ தமிழர் பிரச்சினையை தமிழ் நாட்டு அரசியல் அனைத்தும் தங்கள் அரசியல் முன்னேற்றம் சார்ந்தே அணுகுகின்றன என்பதே உண்மை ...ஏன் என்றால் அது தான் சரி ..

தமிழ் நாட்டு அரசியல் அனைத்தும் தமிழ் நாட்டு மக்களின் பிரச்சினைகளை பற்றி சட்டமன்றத்திலும் நாடாளு மன்றத்திலும் பேச உருவாக்க பட்டவை ...

தமிழ் நாட்டில் எதுவும் விடுதலை இயக்கங்கள் இல்லை ..எல்லாம் வாக்குகளை கவர நடத்தப்படும் கட்சிகள் ..அவர்களிடம் போய் புரட்சி போராட்டம் என்றால் என்ன செய்வார்கள் சொல்லுங்கள் ..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூற்று முற்றிலும் உண்மையே .

சீமான்! நாவடக்கம் தேவை! இன்னும் சில வாரங்களில் அவர் எங்களின் முதலைமச்சர்! எங்களின் பிரதிநிதி! தமிழ்நாட்டில் செய்த பிளவு வேலை ஈழத்தில் வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களுக்கு அவர் எப்படி பிரதிநிதியாவார்..??! ஊரில உள்ள மக்கள் வேறு.. தெரிவு இல்லாத சூழலில்.. பேய்க்கா பிசாசுக்கா வாக்குப்போடுவது நல்லது என்று சிந்தித்து பேய்க்குப் போடுகிறார்களே தவிர... மக்கள் பேயை விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியாது.

 

பேயோ.. பிசாசோ.. அவை மக்களின் கருத்துக்களை செவிமடுக்கச் செய்ய.. இப்படியான காத்திரமான கருத்துக்கள் பேய்களை.. பிசாசுகளை போய் சேர்வதும் நல்லதே..! அந்த வகையில்... நாம் தமிழர் அமைப்பின் துணிகரமான மக்கள் பணிக்கு நன்றி. !!!

 

நாம் தமிழர் கட்சியின் கருத்தே அநேக தமிழ் மக்களின் கருத்துமாகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/09/seemanforweb_130914_seemanvigneswaran_au_bb.mp3  

 

விக்னேஸ்வரனின் உதாரணமும் சீமானின் கண்டனமும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 செப்டம்பர், 2013 - 17:51 ஜிஎம்டி

130715144651_cv_vigneswaran_512x288_dush

சி வி விக்னேஸ்வரன்

இலங்கையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடக்கவிருக்கும் வடமாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தி ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில், இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

 

குறிப்பாக இலங்கை பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று தமிழக அரசியல்வாதிகள் சொல்வதால் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மோசமாக பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிரச்சனை என்பது கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனையைப் போன்றது என்று தெரிவித்திருந்த விக்னேஸ்வரன், சண்டையிட்டுக் கொள்ளும் தம்பதிகள் சிலசமயம் சேர்ந்துகொள்வதைப்போல தாங்கள் இணைந்தும் செயற்படுவோம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் கணவன் மனைவி சண்டையில் அண்டைவீட்டுக்காரர் தலையிட்டு சண்டையிடும் கணவன் மனைவி விவாகரத்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவதைப் போல, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே தீர்வு என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

130518102855_seeman_nam_thamizhar_sri_la

சீமான்

 

விக்னேஸ்வரனின் இந்த கருத்துக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கண்டித்திருந்தார். இது குறித்து சீமான் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில், ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கும் ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தீர்மானத்தவர் ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்களே தவிர தமிழ்நாடோ, தமிழ்நாட்டு அரசியல் வாதிகளோ முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

மேலும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று விக்னேஸ்வரன் கூறுவதும் தவறு என்ற சீமான், தமிழ்நாட்டிலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களும் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே வின்கேஸ்வரன் வேட்பாளராக போட்டியிடும் வடமாகாண தேர்தலையே இலங்கை அரசு நடத்துகிறது என்றும் வாதிட்டார்.

தமிழருக்கும் சிங்களருக்கும் உள்ள பிரச்சனை என்பது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருப்பதைப் போன்றதுதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், அதே பேட்டியில் இந்திய அரசின் தலையீட்டை மட்டும் பாராட்டுவதாக தெரிவித்த சீமான், “ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை அவர் விளக்க வேண்டும்”, என்றும் கேள்வி எழுப்பினார்.

http://www.bbc.co.uk/tamil/india/2013/09/130914_vigneswaranseeman.shtml

Edited by தயா

சீமான்! நாவடக்கம் தேவை! இன்னும் சில வாரங்களில் அவர் எங்களின் முதலைமச்சர்! எங்களின் பிரதிநிதி! தமிழ்நாட்டில் செய்த பிளவு வேலை ஈழத்தில் வேண்டாம்!

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை ஏசுவதுக்கும் விக்கிக்கு எந்த அருகதையும் இல்லை... !

தமிழீழம் தமிழர்களுக்கான தீர்வு எண்று சொன்னது தமிழகத்தார் இல்லை... சொன்னவர் ஈழத்தின் தந்தை செல்வா... தமிழக உறவுகள் தேவை இல்லை எண்றால் இந்திய மத்திய அரசின் உறவுகள் எதற்காக...??

தமிழகத்தில் ஆதரவு இல்லாமல் போனதால் தான் கேக்க நாதி இல்லாது அழிந்து போயும் புத்திவராவிட்டால் என்ன சொல்லவது...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்! நாவடக்கம் தேவை! இன்னும் சில வாரங்களில் அவர் எங்களின் முதலைமச்சர்! எங்களின் பிரதிநிதி! தமிழ்நாட்டில் செய்த பிளவு வேலை ஈழத்தில் வேண்டாம்!

 

உங்களின் முதலமைச்சர் என்று சொல்வதன் மூலம் 13 ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொண்டவர் நீங்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டீர்கள். அந்த 13 ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்த இந்தியாவின் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் சீமான். அவருக்கு கருத்துச்சொல்ல அனைத்து உரிமையும் உள்ளது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்! நாவடக்கம் தேவை! இன்னும் சில வாரங்களில் அவர் எங்களின் முதலைமச்சர்! எங்களின் பிரதிநிதி! தமிழ்நாட்டில் செய்த பிளவு வேலை ஈழத்தில் வேண்டாம்!

 

விக்கினேஸ்வரனுக்கு ஏன் தேவை இல்லாத வேலை. இந்திய மத்திய அரசு ( சில வேளை றோ) எழுதிக்கொடுத்த பேச்சை வாசித்து தமிழ் மக்களை பிரிக்க நினைக்கிறார். இது தானே மத்திய அரசுக்கு தேவை.இந்த கோணத்தில் ஏன் அரசியல் ஆய்வாளர் யோசிக்கவில்லை? தமிழ் நாட்டில் சீமான் என்னத்தை பிரிச்சவர்.? ராமதாஸ் மாதிரி பஸ்ஸை எரிச்சவரோ??

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரனுக்கு ஏன் தேவை இல்லாத வேலை. இந்திய மத்திய அரசு ( சில வேளை றோ) எழுதிக்கொடுத்த பேச்சை வாசித்து தமிழ் மக்களை பிரிக்க நினைக்கிறார். இது தானே மத்திய அரசுக்கு தேவை.இந்த கோணத்தில் ஏன் அரசியல் ஆய்வாளர் யோசிக்கவில்லை?தமிழ் நாட்டில் சீமான் என்னத்தை பிரிச்சவர்.? ராமதாஸ் மாதிரி பஸ்ஸை எரிச்சவரோ??

திராவிட அரசியலைப் பிரித்து மேய்ந்துவிட்டார்.. :D அதுதான் கடுப்பு.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் சீமான் சொல்வதே சரி.. பூனையாக நடமாடும் விக்கினேஸ்வரனுக்கு சரியான தீர்ப்பை முதலில் மக்கள் கொடுப்பார்கள். அதன்பின் இருக்கிறது புலிகளின் தீர்ப்பு. 30 நாள் தாங்க மாட்டார் இந்த ஆள்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்! நாவடக்கம் தேவை! இன்னும் சில வாரங்களில் அவர் எங்களின் முதலைமச்சர்! எங்களின் பிரதிநிதி! தமிழ்நாட்டில் செய்த பிளவு வேலை ஈழத்தில் வேண்டாம்!

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக தேசியத் தலைவர் சீமானை விமர்சிக்க இங்கே யாருக்கும் அருகதை கிடையாது. தமிழீழ தேசியத் தலைவரின் நேரடி வழிகாட்டலில் அண்ணன் செயல்பட்டுக் கொண்டுள்ளார். ஈழம் அமையும்போது இந்திய தூதராக தமிழக தேசியத் தலைவர் சீமான் அண்ணன் பதவியேற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. வெற்றி வேல்.. வீர வேல்!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்! நாவடக்கம் தேவை! இன்னும் சில வாரங்களில் அவர் எங்களின் முதலைமச்சர்! எங்களின் பிரதிநிதி! தமிழ்நாட்டில் செய்த பிளவு வேலை ஈழத்தில் வேண்டாம்!

 

 

ஈழத்தில் என உருப்படியாக இருக்கிறது??
எல்லாம் பிஞ்சு எரிஞ்சு கிடக்கு..........
 
எதில் என்னத்தை சீமான் பிளவு படுத்த போகிறார் என்று.
சொல்லி தொலைக்க மாட்டிங்களா??
உங்கள் கருத்தை வாசித்ததில் இருந்தே ஒரே அங்கலாப்பாய் இருக்கிறது......
அப்படி ஈழத்தில் என்ன ஒட்டி இருக்கிறது என்ற கேள்வி ஒரே குடைச்சலாய் இருக்கு.
சொல்லித்தான் தொலையுங்களேன் ..............

கருணா, டக்கி , இப்ப  விக்கி  அவ்ளோதான் .

ஆயிரம் கருத்து வேறுபாடுகள், அதிருப்திகளுக்கு மத்தியிலும் ஈழத்தில் தமிழ்மக்கள் கூட்டமைப்போடு நிற்கின்றார்கள். அதுவும் விக்னேஸ்வரன் வந்ததன் பின்பு ஒதுங்கி நின்ற பலரும் முன்வந்து வேலை செய்கிறார்கள்.

"தமிழின விடுதலை" என்னும் பாதையில் விக்னேஸ்வரன் எங்களை ஒரு குறிப்பிட்ட தூரம் முன்னோக்கி அழைத்துச் செல்கின்ற ஒரு தலைவராக விளங்குகின்றார்.

நம்பினால் நம்புங்கள்! விக்னேஸ்வரனை நாம் தேர்வு செய்ததன் பிற்பாடு எமது சோர்வு நீக்கி நாம் சற்றுத் தலைநிமிர்ந்திருக்கிறோம். முள்ளிவாய்க்கால் தோல்விக்கு பின்பு மெதுவாகத் எழத் தொடங்கியிருக்கிறோம். சிங்களம் சினந்து போய் கையை பிசைகின்ற நிலையை உருவாக்கியருக்கிறோம்.

வெளித்தோற்றத்திற்கு ஒரு அரசியல் வலுச்சமநிலையை உருவாக்கும் நிலையை அண்மித்துக் கொண்டிருக்கிறோம்.

இதை எல்லாம் குழப்புவதற்கு சில தீயசக்திகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. விக்னேஸ்வரனின் மதிப்பை கெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதற்கு நாம் இடம் கொடுக்க முடியாது.

திருமா, வைகோ போன்றவர்கள் அமைதியாக இருக்க சீமானுக்கு என்ன வந்தது? எங்களின் முதலமைச்சரை "பூனை" என்றும் "காக்காய்" என்றும் சொல்ல நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

எங்களின் முதலமைச்சரை "பூனை" என்றும் "காக்காய்" என்றும் சொல்ல நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

 

சொல்லவே  இல்லை , இது  எப்ப  நடந்தது !! :o  :icon_mrgreen:

சீமானின் அறிக்கையை சரியாக வாசியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லவே  இல்லை , இது  எப்ப  நடந்தது !! :o  :icon_mrgreen:

 

03_07_10_varathar_02_88414_445.jpg

 

ம்.. இந்த முதல் மரியாதை சிலகாலம் முன் நடந்தது!

இந்தியாவில் ஒருவிதமான அரசியில் செல்வாக்கும் இல்லாத ஒரு சினிமா கூத்தடிக்கு இவ்வளவு ஆதரவு ஈழ தமிழர் நாம் கொடுப்பது கண்டு வியக்கிறேன் என்ன அவர் அப்படி பெரிதா செய்து விட்டார் என்றுதான் விளங்க வில்லை என் சீமானை விட ரஜனிகாந்த்துகு ரசிகர் கூட அவரை ரைபன்னிங்க ஈழம் பிடிக்க சீமானை விட நீயா நானா கோபிநாத் நல்ல கதைப்பார் அவரை கேட்டு பாருங்க அல்லது நித்தியானத்தக்கு பவர் இருக்கு உலகம் பூரா கிளை இருக்கு அவரையும் சேருங்கோ எண்ணி ஒருகிழமையில் நமக்கு ஈழம் கிடைக்கும் என்ன அறிவாளித்தனம் உங்களுக்கு எல்லாம் ஒரு விதமான அரசியல் பின்னணி அரசியல் செல்வாக்கு அற்ற மனிதன் இன்னும் ஒரு தேர்தலையும் சந்திக்காத மனிதனை ஒரு லட்சியத்துக்கு போராடிய தலைவர் இடத்தி வைத்து நோகாமல் வாய் வீரம் பேசியவனை பார்க்குரியல் .

 

ஆகவே பிரபாகரன் ஒரு ஈழ துரோகி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி அதுக்கு ஈழமக்களின் ஆதரவு இருக்க வேணும் என யில் தமிழர்களுக்கு விட்டு போனது பிரபாகரன் என்னும் தலைவன் செய்த பெரும் வரலாற்று துரோகம் கண்டவன் நிண்டவன் எல்லாம் ஈழ தலைமைகளை கேள்வி கேட்க அதுக்கு நாங்களும் சேர்த்து ஜால்ரா ஆகவே வாழ்க தேசிய தலைவர் சீமான் கூட்டமைப்பை உருவாக்கிய பிரபாகரன் துரோகி ஒழிக்க என நீங்கள் எல்லாம் கோஷம் போடும் நாள் வெகு தொலைவில் இல்லை

என்னாமோ இப்படியே அழிச்சு போங்க சினிமாகாரனுக்கு பால் ஊற்றுபவன் சூடம் காட்டுபவன் நிச்சயம் எமக்கு நாடு பிடிச்சு தருவான்

 

எங்கள் தலைவர் சீமான் வாழ்க தேசிய தலைவர் சீமான் வாழ்க களம் பல கண்ட தனித்தலைவன் சீமான் வாழ்க உலக தமிழரின் பெரும் தலைவன் சீமான் வாழ்க .

 

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய புலிகள் ஒழிக்க

அதுக்கு சம்மந்தனை தலைவரா போட்ட பிரபாகரன் ஒழிக்க

விக்கியை ஏற்றுகொண்ட ஈழமக்கள் ஒழிக்க

 

தமிழரின் தாகம் சீமானின் தாயகம் .

  • கருத்துக்கள உறவுகள்

ததேகூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத்போன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்;டிருந்தது. அன்று சரத்பொன்சேகா வென்றிருந்தால் அவர் தமிழ்மக்களின் பிதிநிதியாகவிட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கருத்து வேறுபாடுகள், அதிருப்திகளுக்கு மத்தியிலும் ஈழத்தில் தமிழ்மக்கள் கூட்டமைப்போடு நிற்கின்றார்கள். அதுவும் விக்னேஸ்வரன் வந்ததன் பின்பு ஒதுங்கி நின்ற பலரும் முன்வந்து வேலை செய்கிறார்கள்.

"தமிழின விடுதலை" என்னும் பாதையில் விக்னேஸ்வரன் எங்களை ஒரு குறிப்பிட்ட தூரம் முன்னோக்கி அழைத்துச் செல்கின்ற ஒரு தலைவராக விளங்குகின்றார்.

நம்பினால் நம்புங்கள்! விக்னேஸ்வரனை நாம் தேர்வு செய்ததன் பிற்பாடு எமது சோர்வு நீக்கி நாம் சற்றுத் தலைநிமிர்ந்திருக்கிறோம். முள்ளிவாய்க்கால் தோல்விக்கு பின்பு மெதுவாகத் எழத் தொடங்கியிருக்கிறோம். சிங்களம் சினந்து போய் கையை பிசைகின்ற நிலையை உருவாக்கியருக்கிறோம்.

வெளித்தோற்றத்திற்கு ஒரு அரசியல் வலுச்சமநிலையை உருவாக்கும் நிலையை அண்மித்துக் கொண்டிருக்கிறோம்.

இதை எல்லாம் குழப்புவதற்கு சில தீயசக்திகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. விக்னேஸ்வரனின் மதிப்பை கெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதற்கு நாம் இடம் கொடுக்க முடியாது.

திருமா, வைகோ போன்றவர்கள் அமைதியாக இருக்க சீமானுக்கு என்ன வந்தது? எங்களின் முதலமைச்சரை "பூனை" என்றும் "காக்காய்" என்றும் சொல்ல நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

 

உள்தோற்றத்தில் என நடக்கிறது???
அதை கொஞ்சம் விபரமாக எழுதுவீர்களா............?
 
அதுதான் வலியோடு சம்ம்பந்த பட்டது. 

உள்தோற்றம் இன்னும் இரண்டு மாதத்தில் நவம்பர் 27இல் தெரியும். அதையும் சமாளித்து வெற்றி கண்டால், எமது ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கும்.

உள்தோற்றம் இன்னும் இரண்டு மாதத்தில் நவம்பர் 27இல் தெரியும். அதையும் சமாளித்து வெற்றி கண்டால், எமது ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கும்.

போராளிகளை தனது கட்சியில் மகிந்த தேர்தல் கேட்க விடவில்லை எண்டதில் நீங்களும் மனமுடைஞ்சு போனியள் போல கிடக்கு...? சரி விடுங்கோ தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடந்து விட்டு போகட்டும்...

ஆனால் இந்த 13 வது திருத்த சட்டம் மூலம் வாற உங்களின் முதலைமைச்சர் என்ன நன்மைகளை செய்வார் ( செய்வாரோ இல்லையோ.) எண்டதை பட்டியல் இட்டீங்கள் எண்டால் நாமும் உங்கட வளியை பின் தொடரலாம்...

முக்கியமாய் காணி அதிகாரம் கிடையாது , காவல்துறையை( இராணுவத்தையும்) கட்டுப்படுத்த முடியாது,

முதலமைச்சரை விட அதிக அதிகாரம் ஆழுநரிட்டை இருக்கு... மாகானசபையில் ஆழும் கட்சிக்கு எதிர் கட்சி யான கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதியின் ஒத்துளைப்பு கிடைக்காது, எந்தவேளையும் காரண காரியங்களுக்காக கலைக்கப்படலாம்... ( கலைக்கப்பட்டால் புலிகளால் ஆட்ச்சியை இளந்தோம் எண்டு கருணாநிதி போல சொல்வீர்களோ என்னவோ..)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்
இந்த விடயத்தை ஏன் முதலாவது கருத்தில் மறைத்தீர்கள்?
 
வெளி தோற்றத்தால் ஓடி கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே எழுதினீர்கள்..........
இப்போ உள்தோற்றத்தாலும் அதே வேகத்தில் ஓடுகிறோம் என்கிறீரகள்.
 
அப்போ யாராவது ஓட்டபோட்டியில் ஓடி பரிசு வென்றால்!
தனது வலது காலால் ஓடி பரிசு வாங்கினார் என்றுதான் எழுதுவீர்களா??
 
யாராவது கேள்வி கேட்டால்தான் ................... இடது காலாலும் ஓடிய விடயத்தை கூறுவீர்களா??
 
இப்பதான் 30 மைல் ஒட்டி கொஞ்சம் களைப்பறி கொண்டிருக்கிறோம்...........
அதிகம் வேகத்தை டபக்கென கூட்டுவது அவளவு நன்றாக தெரியவில்லை.
போட்டி என்று வந்துவிட்டால் ஓடுவதை தவிர வேறு வழியில்லை.

புலிகள் கூட ரணிலை புறக்கணித்து மகிந்தக்கு வாக்கு அளிக்க சொல்லித்தான் மக்கள் மகிந்தக்கு வாக்கு போட்டவ ரணிலின் சர்வதேச பொறிமுறையில் இருத்து தப்ப கடைசியா நடந்தது என்ன சொல்லுங்க மகிந்த தமிழன் பிரதிநிதியா அரசியல் ஒரு சிக்கல் நிரந்தர எதிரியும் இல்லை பகைவனும் இல்லை என்பது அரசியல்

 


 

இந்த விடயத்தை ஏன் முதலாவது கருத்தில் மறைத்தீர்கள்?
 
வெளி தோற்றத்தால் ஓடி கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே எழுதினீர்கள்..........
இப்போ உள்தோற்றத்தாலும் அதே வேகத்தில் ஓடுகிறோம் என்கிறீரகள்.
 
அப்போ யாராவது ஓட்டபோட்டியில் ஓடி பரிசு வென்றால்!
தனது வலது காலால் ஓடி பரிசு வாங்கினார் என்றுதான் எழுதுவீர்களா??
 
யாராவது கேள்வி கேட்டால்தான் ................... இடது காலாலும் ஓடிய விடயத்தை கூறுவீர்களா??
 
இப்பதான் 30 மைல் ஒட்டி கொஞ்சம் களைப்பறி கொண்டிருக்கிறோம்...........
அதிகம் வேகத்தை டபக்கென கூட்டுவது அவளவு நன்றாக தெரியவில்லை.
போட்டி என்று வந்துவிட்டால் ஓடுவதை தவிர வேறு வழியில்லை.

 

இங்க பரிசு அல்ல ஓடி வாங்க நாம் ஓடுவது ஒரு இலக்கு நோக்கி மிக அருகில் வந்து விட்டு திரும்பி ஆரம்ப இடத்தில் இருத்து வா என நீங்க சொன்னா ஏற்றக முடியுமா .
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.