Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் தேவி.. ஒரு பாழ் தேவி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Elephant_Pass_rusting_tank.jpg

 

1993....

சிங்களரும் தமிழுரும்

மரமும் கொடியும்

சிந்தனை செய்து

டிங்கிரி பண்டா

தமிழின அழிப்புக்காய்

ஏவி விட்ட

ரஷ்சிய டாங்கிகளின்

அணிவகுப்பாய்

யாழ் தேவி....!

ஆனையிறவு தாண்டி

கிளாலி வெளியில்

புலிப் பாய்ச்சலில்..

தடம்புரண்டு போச்சுது அது..!

 

தோல்விக்கு விலையாக

சங்கத்தானையில் போட்ட

விமானக் குண்டில்

பலியான தமிழினம்

இன்னும் அலறுது

வேதனையில்...!!

 

1234346_222566421242442_1310816827_n.jpg

 

2013...

முள்ளிவாய்க்கால்

இன அழிப்பின் நாயகன்...

"வடக்கின் வசந்தம்"

மகிந்த சிந்தனையின்

பிறப்பிடம்..

மகிந்த பண்டா

ஏவும் இந்த

வெற்றி மமதை யாழ் தேவி

ஹிந்தியத் தடமதில்

சீன உருவமாய்

தடமுருண்டு வந்தாலும்

தமிழர் நிலத்தில் - அது

ஓர் பாழ் தேவி..!

 

இதன் வரவில்

பாழாகப் போகுது

எம் தமிழ் தேசம்..!

விபத்தில் ..

தமிழர் உயிர் பறித்து

தடத்தில்

தமிழர் நிலம் பறித்து

வழியில்...

தமிழர் பணம் பறித்து

நிலத்தில்..

தமிழர் பண்பாடழித்து

தொடரும் இது

இன்னொரு இன அழிப்பு..!

சிங்களத்தின்

புதிய அத்தியாயத்திற்காய்

புறப்பட்டு விட்டது

ஹிந்திய வழிகாட்டலில்..

இந்தச் சீனத்து டாங்கி ..!

Edited by nedukkalapoovan

வடக்கிற்கு தொடரூந்து மகிந்த போடும் பிச்சை அல்ல அதை வெறுப்பதற்கு. தொடரூந்து என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளினதும்  உள்கட்டமைப்பில்(infrastructure) ஒன்று. ஏற்கனவே இருந்த ஒன்று. மகிந்தவின் காலத்தில் திருத்தியமைக்கபட்டது ஒரு தற்செயல் நிகழ்வு.  ஒரு நாட்டின் அரசு இவ்வாறான கட்டமைப்புகளை செய்வது சாதாணர நிகழ்வு. எல்லா நாடுகளிலும் உள்ளதுதான். மகிந்த அடிப்படை வசதிகளைக்கூட தனது விளம்பரத்திற்கு பாவிப்பது மகிந்தவினதும் அவரின் அடியாட்களினதும் அறியாமை. அதற்காக எமது மக்களும் எதிர்காலத்தில் பயன்படுத்தும் அவர்களுக்கு நன்மை பயக்கவிருக்கும் தொடரூந்தை வெறுக்கவேண்டிய அளவிற்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் இல்லை.  தமிழ் சொல்லாடலில் அழகான, ஆனால் அரத்தமற்ற கவிதை. எனினும் எனினும் அழகான கவிதையை இயற்றிய நெடுக்ஸ் இற்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவி ஓடத் தொடங்கியதால்.... டக்ளஸ் தேவானந்தாவின் "கொழும்பு - யாழ்ப்பாணம்" பஸ் கொம்பனி தான்... அதிகம் பாதிக்கப் படப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு கிடைப்பனவற்றை எமக்கு சாதகமாக பயன்படுத்துவது தான் கெட்டித்தனம்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான சொகுசு பஸ் கட்டணம் அங்கு ஒருவரின் மாதாந்த சம்பளம்.எனவே சாமானிய மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி தான் வாழ்க்கையை கொண்டு போக வேண்டும். மகிந்த இதனால் அரசியல் லாபம் தேடுகிறார் என்றால் அவரிடம் சேலையை வாங்கி விட்டு கூட்டமைப்புக்கு வாக்களிக்கலாம்.இதனை கெட்டிக்கார மக்கள் கடந்த தேர்த்தலில் செய்து காட்டினார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கு தொடரூந்து மகிந்த போடும் பிச்சை அல்ல அதை வெறுப்பதற்கு. தொடரூந்து என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளினதும்  உள்கட்டமைப்பில்(infrastructure) ஒன்று. ஏற்கனவே இருந்த ஒன்று. மகிந்தவின் காலத்தில் திருத்தியமைக்கபட்டது ஒரு தற்செயல் நிகழ்வு.  ஒரு நாட்டின் அரசு இவ்வாறான கட்டமைப்புகளை செய்வது சாதாணர நிகழ்வு. எல்லா நாடுகளிலும் உள்ளதுதான். மகிந்த அடிப்படை வசதிகளைக்கூட தனது விளம்பரத்திற்கு பாவிப்பது மகிந்தவினதும் அவரின் அடியாட்களினதும் அறியாமை. அதற்காக எமது மக்களும் எதிர்காலத்தில் பயன்படுத்தும் அவர்களுக்கு நன்மை பயக்கவிருக்கும் தொடரூந்தை வெறுக்கவேண்டிய அளவிற்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் இல்லை.  தமிழ் சொல்லாடலில் அழகான, ஆனால் அரத்தமற்ற கவிதை. எனினும் எனினும் அழகான கவிதையை இயற்றிய நெடுக்ஸ் இற்கு வாழ்த்துக்கள்.

 

உங்களைப் பொறுத்த வரை அர்த்தமற்ற கவிதை.

 

என்னைப் பொறுத்தவரை "யாழ் தேவி" எமன்.

 

எனது நண்பனின் குடும்பம் உறவு தொலைந்த நாள்.. "ஆனையிறவில் இருந்து வந்த யாழ் தேவி" கொண்டு வந்த துயர்.

 

1993 க்கு முன் யாழ் தேவிக்கு ஒரே அர்த்தம். புகையிரதம் என்பது. 1993 க்குப் பின் அதன் அர்த்தம் வேறு..! அதனை உணர்த்தியதும் சிங்கள இனவெறியே..!

 

ஒரு இன அழிப்பு.. ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைக்கு எந்தத் திமிரில் சிங்களவன் யாழ் தேவின்னு பெயர் வைத்து.. தமிழின அழிப்பை செய்தானோ அதே பெயரில் இன்று இந்த இன்னொரு போர் வெறியன் யாழ் தேவி கொண்டு வருகிறான் என்கின்ற போது அதனை வெறும் தொடரூந்தாகப் பார்க்கக் கூடிய மனநிலையில் எங்களைப் போன்ற.. மக்கள் இல்லை.

 

"யாழ் தேவி" இராணுவ நடவடிக்கை 83 வரை.. மாவீரர்களையும் உயிர்ப்பலி எடுத்து.. ஒரே குண்டு வீச்சில்.. 19 வரை.. பொதுமக்களையும் பலியெடுத்தது..!

 

அதனை உங்களைப் போன்றவர்கள் வெகுசுலபமாக மறந்து விடலாம். ஆனால் அந்த உயிர்களைப் பலிக்கொடுத்தவர்கள் பட்ட பாட்டை பார்த்த எமக்கு அவற்றை இலகுவில் மறக்க முடியாது.

 

ஒரு தொடரூந்துச் சேவையின் பெயரால் கூட இராணுவ வெறித்தனத்தை தமிழ் மக்களின் மீது திணித்தவனிடம் இருந்தான.. போக்குவரத்து சாதன வரவென்பது எமது இன அழிப்பின் அத்தியாயத்தின் தொடர்ச்சியாகவே எனக்குப் படுகிறது. அதையே காரணங்களோடு.. பிரதிபலிக்கவும் செய்துள்ளேன்.

 

இதனை பதிவு செய்யத் தவறின்.. அன்று உயிர் நீத்த அந்த மக்களின் போராளிகளின் ஆன்மாவிற்கு செய்த துரோகமாகவே அது இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இல்லை நெடுக்ஸ் யாழ்தேவி என்பது புதிய பெயரல்ல. காலகாலமாக இருந்த பெயரே. அந்த பெயரை இராணுவநடவடிக்கைக்கு வைத்து விட்டார்கள் என்பதற்காக அதை வெறுப்பது சரியல்ல. அதை உணர்ச்சி வசப்பட்டு அணுக வேண்டாம். இதை சாதாரண தொடரூந்தாக பார்போம். முன்பு நாம் அதை எமது தேவைக்கு  பயன்படுத்தினோம் எனபதை மறக்கவேண்டாம்.எதிர் காலத்தல் எமது மக்கள் அனைவரும்  அதை பயன்படுத்தவே உள்ள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுக்ஸ் யாழ்தேவி என்பது புதிய பெயரல்ல. காலகாலமாக இருந்த பெயரே. அந்த பெயரை இராணுவநடவடிக்கைக்கு வைத்து விட்டார்கள் என்பதற்காக அதை வெறுப்பது சரியல்ல. அதை உணர்ச்சி வசப்பட்டு அணுக வேண்டாம். இதை சாதாரண தொடரூந்தாக பார்போம். முன்பு நாம் அதை எமது தேவைக்கு  பயன்படுத்தினோம் எனபதை மறக்கவேண்டாம்.எதிர் காலத்தல் எமது மக்கள் அனைவரும்  அதை பயன்படுத்தவே உள்ள்ளார்கள்.

 

யாழ் தேவியை களங்கப்படுத்தி.. அதனை ஒரு கொலைவெறி ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை வடிவமாக்கியது.. சிங்களவன். அவனே இன்று வடக்கின் வசந்தம் என்பதன் பெயரால்.. வெற்றி மமதையில் இதனை இயக்குகிறான்.

 

விடுதலைப்புலிகள் அமைப்பு.. 2002 இல்.. ஏ9 வீதியை சமாதான காலத்தில் திறந்து விட்டதில் இருந்தே இதனை உண்மையான மக்கள் அக்கறை இருந்திருந்தால் விட்டிருக்கலாம்.

 

ஆனால் சிங்களவன் அப்படி நினைக்கவில்லை. அவனுக்கு தனது அதிகாரத்தின் கீழ் ஆக்கிரமின் கீழ் தான் தமிழர்கள் தான் வழங்கும் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு தனக்கு கீழ்படிந்து.. தனக்கு வாக்குப் போட்டு வாழனும் என்ற அடக்குமுறை.. மேலாதிக்க வெறி உள்ளது.

 

அந்த உணர்வை.. அவனிடம் போய் தகர்த்துவிட்டு வந்து சொல்லுங்கள்.. தமிழ் மக்களே இது தொடரூந்து.. உங்களுக்காக வருகிறது என்று. அப்பதான் மக்கள் நம்புவார்கள்...!

 

இது உணர்வு பூர்வமான விடயம் அல்ல. இந்த தொடரூந்து சேவையின் பின்னால் உள்ள யதார்த்தம்.. அரசியல் இது தான்..!

 

இதனை ஏன் நீங்கள் மறைக்க முனைகிறீர்கள்..???????! :icon_idea:

In 1993, the SLA launched a major offensive, Yarl Devi, against LTTE (கிளாலி மற்றும் யாழ் நகரை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை), under the command of Col. Sarath Fonseka, now a Lt. Gen. and overall commander of the SLA.

LTTE forces, under the command of Balraj, with Theepan as deputy commander, led a counter-offensive against the advancing SLA forces.

Taking up entrenched positions in unfavourable, open terrain at Puloappa'lai, the LTTE forces launched a surprise attack on the SLA, inflicting heavy casualties and destroying tanks and armoured vehicles.

The SLA offensive was routed in six days. Col. Fonseka was amongst the wounded. Balraj was also badly wounded in his leg.

Adele Balasingham, wife of the LTTE’s late theoretician, Anton Balasingham, recalls Balraj’s injuries in her book, ‘Will to Freedom’, based on her several years of experiences living with the LTTE.

"A measure of Balraj’s courage revealed itself to us when shrapnel smashed his right leg in the Yarl Devi battle of 1993. A decision not to amputate the limb was made and Balraj suffered excruciating pain of limb repair. Compounding his healing problems was unstable diabetes. After many months in bed and a great deal of pain, Balraj eventually walked again on his leg, but the injury left him with a permanent limp and a recurrent wound infection."

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=1736

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ் தேவி.. இராணுவ நடவடிக்கையில்.. 84 போராளிகளும் 100 வரை பொதுமக்களும் பலி என்று அன்றைய காலத்தில்.. கொழும்பில் இருந்து இயங்கிய ஈபிடிபி.. ஒட்டுக்குழு நாளேடான.. தினமுரசே செய்தி வெளியிட்டுள்ளது. பலியான பொதுமக்களையும் சிங்களம் புலியாக கணக்குக்காட்டுவதாகவும் அது கூறி உள்ளது. .

 

http://noolaham.net/project/64/6310/6310.pdf

 

yarldevi.jpg

Edited by nedukkalapoovan

இதன் வரவில்

பாழாகப் போகுது

எம் தமிழ் தேசம்..!

விபத்தில் ..

தமிழர் உயிர் பறித்து

தடத்தில்

தமிழர் நிலம் பறித்து

வழியில்...

தமிழர் பணம் பறித்து

நிலத்தில்..

தமிழர் பண்பாடழித்து

தொடரும் இது

இன்னொரு இன அழிப்பு..!

யாழ்தேவி தமிழ் மக்களுக்காக வருகிறது என்று நான் கூறவில்லை. எல்லா நாட்டிலும் தொடரூந்து கட்டமைப்பு என்பது சாதாரணம். யாழ்தேவி தொடரூந்தை இன மத பேதமின்றி எல்லா மக்களும் பயன்படுத்துவர் என்பது யதாரத்தம். நீங்கள் ஆயிரம் தான் கூறினாலும் யாழ்தேவி புகையிரத்தைஎதிர் காலத்தில் நீங்களும் பயன்படுத்தலாம். நானும் பயன்படுத்தலாம். யாழ்தேவி என்றால் எல்லோருக்கும் முதலில்  நினைவிற்கு வருவது  யாழ்பாணம் செல்லும் கடுகதி தொடரூந்து என்பதேயாகும். நீங்கள் கூறும் இராணுவ நடவடிக்கை என்பது ஒரு சிறு பங்குதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 யாழ்தேவி என்றால் எல்லோருக்கும் முதலில்  நினைவிற்கு வருவது  யாழ்பாணம் செல்லும் கடுகதி தொடரூந்து என்பதேயாகும். நீங்கள் கூறும் இராணுவ நடவடிக்கை என்பது ஒரு சிறு பங்குதான்.

 

தமிழர்களின் இந்த நிலையை நம்பித்தான் சிங்களவன் வெட்டிச் சாய்ச்சுக் கிட்டு திரியுறான். மீண்டும் யாழ் தேவிக்கு கல்லெறி விழேக்க... தெரியும்.. சிறு பங்கோ பெரும் பங்கோன்பது..!

 

ஆனால்.. யாழ்தேவி எனி வெறும் தொடரூந்தின் பெயர் அல்ல. சிங்கள இனவெறியின் போர்வெறியின் தமிழின அழிப்பின்.. அடையாளம். அதற்கான வரலாற்றை சிங்களவன் எழுதிவிட்டான்.. 1993 இல்.

 

அது உங்கள் போன்ற சிலருக்கு.. சிறு சம்பவம். தாயக நினைவுள்ள... பெரும்பாலான மக்களுக்கு செப் 11 இரட்டைக்கோபுரத் தாக்குதல் போன்றது..! செப் 11 இரட்டைக்கோபுர இடத்தில் என்ன தான் பெரிய கோபுரத்தை எனி கட்டி எழுப்பினாலும்..அமெரிக்க மக்களின் மனதில்.. அந்த அழிவின் தன்மை மறந்து போகாது. ஆனால் எம்மவர்களுக்கு.. சிங்களவன் செய்யும் இன அழிப்பை.. உடனடியாக மறக்கச் செய்யும் அறிவுரை சொல்ல ஆக்களுக்கு குறைவில்லை. இதனாலும் தான் எம்மினம் உலக ஆதரவைப் பெறமால்..தொடர்... அழிவை சந்தித்துக் கொண்டுள்ளது. :icon_idea:

அப்ப தமிழீழம் கிடைக்கும் வரை தொடரூந்தே வேண்டாம் என்று கூறுகின்றீர்களா? நாட்டின் தொடரூந்தை அந் நாட்டின் அரசுதான் இயக்க முடியும். அது மகிந்த என்றாலும் சரி ரணில் என்றாலும் சரி எந்த நாயக்க என்றாலும் சரி. . தற்போதை நிலையில் அதுதான் சாத்தியம். தற்போது நாங்கள் நிற்கும் யதார்த்ததை புரிந்து கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கிடைக்கும் வரை தொடரூந்து அவசியம் இல்லை.. என்பதல்ல நிலைப்பாடு. தொடரூந்து சேவைகள் உட்பட மக்களின் அத்தியாவசிய சேவைகளை..  அரசியல் மயமாக்குவதை இராணுவ மயமாக்குவதை கைவிடுதல் வேண்டும். இச்சேவைகளை அனுபவிக்க உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் சம உரிமை உண்டு. அது தமிழ் மக்களுக்கும் கிடைக்க உலகம் உதவ வேண்டும். தொழில்நுட்ப ரீதியில் நிதி ரீதியில் முகாமைத்துவ ரீதியில் மக்களின் பாதுகாப்பு ரீதியில் உலக தரம் பேணப்படுதல் வேண்டும். அங்கு வேலைவாய்ப்புக்கள் தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இத்துறைகளில்.. தமிழர்களுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்படுதல் வேண்டும்.

 

மேலும்.. யாழ்தேவி ஒரு இன அழிப்பின் அடையாளம் என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு சிங்களவர்கள் வர வேண்டும். அதனை வெளிப்படுத்தும் வகையில் யாழ்தேவி என்ற பெயரை மாற்றி அமைக்கலாம். அது மட்டுமன்றி.... தொடரூந்து வரவை கொண்டாட வேண்டிய அவசியமும் தமிழர்களுக்கு இல்லை. சிங்கள ஜனாதிபதிக்கும் இல்லை. யாழ்தேவி என்று ஒட்டி ஓடினால் தான் தொடரூந்து தடத்தில் உருளுமோ..????! பெயரின்றி வெறும் இலக்கத்தோடு ஓடினால் ஓடாதோ..??????! மக்கள் பயணிக்க மாட்டினமோ..????! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ போக்குவரத்துச் சேவை மக்களுக்கு சேவை வழங்கியது. தேசிய தலைவரா வந்து இயக்கி வைச்சார். இல்லையே. அது அதன் பாட்டுக்கு ஓடிச்சு. மக்கள் சேவையை பெற்றாங்க..! ஏன் அப்படி இவை செய்யப்பட முடியாது..?????????! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்திலிருந்தே தமிழினம், கொழும்பு, காலி, பேராதனை,மலையகம் போன்ற பகுதிகள் எங்கும் பரந்து, தமிழனின் அந்தக்காலத்துப் பொருளாதாரத்திற்கும், கல்விக்குமான அடித்தளத்தை இட்டதில், யாழ் தேவியின் பங்கு குறைத்து மதிப்பிட முடியாதது!

 

எந்த விதமான வாழ்வாதாரம் அளிக்க வல்ல நதிகளோ, வளம் கொழிக்கும் நிலங்களோ இல்லாத யாழ்ப்பாணப் பிரதேசம், ( தீவகம் உட்பட), தனது மூளை வளத்தை மட்டுமே உபயோகித்துச், சிங்களவன் பொறாமைப் படும் அளவுக்கு வளர்ந்திருந்தது! இன்றும் தமிழனது, சர்வதேசப்பரம்பலானது ( என்ன காரணத்தினால் என்பதை ஒரு பக்கம் ஒதுக்குவோம்) அவனது, பொருளாதாரம் தேடும், குணாதிசயத்துக்கு, இன்னுமொரு சான்றாகும்! இதில் யாழ்தேவியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்!

 

யாழ்ப்பாணத்தின் பலம், ஓரளவுக்கு கிழக்கு மாகாணத்தின் பலமும் கூட, பசுமைப் புரட்சியிலும் பார்க்க, நீலப்புரட்சியிலேயே அதிகம் தங்கியுள்ளது என எண்ணுகின்றேன்!

 

எமது கேடு கேட்ட சாதியமைப்பானது எம்மைக் கடலுக்குள் இறங்க விடுவதில்லை. இந் நிலை மாறவேண்டும்! தமிழன் மீண்டும் தனது பொருளாதாரத் தேடலைத் தொடர வேண்டும்!

 

அண்மையில், பேராசிரியர் குணசிங்கம் அவர்கள், முப்பது ஆண்டுகளாக, உலகம் முழுவதும் தேடி எடுத்த, வரலாற்று ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது, யாழ் பல்கலைக்கழக, கலைப்பீடப் பீடாதிபதியும், கிளிநொச்சியில் இயங்கும் 'லிபரா' நூலகப் பொறுப்பாளரும் ஆற்றிய உரைகள், எமது இளைய தலைமுறை, என்ன முறையில் வளர்கின்றது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டின! எது நல்லது, எது கேட்டது என்று தெரிவு செய்யும் நிலையில் அவர்கள் இன்று இல்லை. கையில் கிடைக்கும் எதனையும் தூக்கியெறியும் நிலையிலும் அவர்கள் இல்லை!

 

எம்மை, நாமாக இன்று இருக்கும் நிலைக்கு வளர்த்துவிட்ட, அந்தச் சூழல் இப்போது இல்லை!

 

எனவே நாம் செய்ய வேண்டியது, அங்குள்ள இளைய தலைமுறை ( சுபேஸ் சொன்னது போல, வெறும் 'நுகர்வுக் கலாச்சாரத்தில்' சீரழிந்து கொண்டு, கனவுலகில் வாழும் தலைமுறை) யைக் கை கொடுத்துத் தூக்கிவிடுவது தான்! அதற்கான சூழ்நிலையை, வடமாகாணத் தேர்தல், அல்லது யாழ்தேவி தருமானால், அதைப் பற்றிப்பிடிப்பது தான் இப்போது எமக்குள்ள வழியாகும்!

எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டு போவது, எம்மையும், எமது இனத்தையும் சிங்களமும், அதன் அடிவருடிகளும் மேலும் மேலும் சுரண்டுவதற்கே இடம் கொடுக்கும்!

 

இறுதியில் எமக்கென ஒரு நாடு மட்டுமல்ல, எமக்கென ஒரு தனித்துவமான கலாச்சாரம் கூட இருக்காது! 

  • கருத்துக்கள உறவுகள்

குளத்தோட கோவிச்சுக்கொண்டு கு... கழுவாமல் இருந்த கதை தான் இது. இந்த மார்கழி ஊருக்குப் போகும்போது வவுனியாவில ஏறி, கிளிநொச்சியில இறங்கிற முடிவில இருக்கிறன். ஒரு பிரதேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் தொடரூந்தின் பங்கு தெரியாவிட்டால் என்ன செய்வது.

தேவாந்தா கொழும்பு-யாப்பாண தனியார் பஸ் சேவையில் இருந்து தன் கையை எடுக்க வேண்டும். அது போட்டி சந்தையாக மாற இடம் கொடுக்க வேண்டும் அங்கு பயண வண்டிகள் விடுவோருக்கு அனுமதி மறுக்க காரணம்கள் காட்ட வேண்டும். இவ்வளவும் நடந்தால் யாழ்தேவியை மூன்றாம் நாள் வீட்டுக்குள் வைத்து பூட்ட செய்ய தமிழருக்கு தெரியும். இன்று யாழ்ப்பாணத்திற்கு கட்டுமான வேலைகளுக்கு வந்து போகும் ஒரு சிங்களவர் கூட யாழ்தேவியில் ஏறமாட்டார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குளத்தோட கோவிச்சுக்கொண்டு கு... கழுவாமல் இருந்த கதை தான் இது. இந்த மார்கழி ஊருக்குப் போகும்போது வவுனியாவில ஏறி, கிளிநொச்சியில இறங்கிற முடிவில இருக்கிறன். ஒரு பிரதேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் தொடரூந்தின் பங்கு தெரியாவிட்டால் என்ன செய்வது.

 

நீங்கள் ஒருவர் அவுஸில் இருந்து.. யாழ்தேவி.. தொடரூந்தில் பயணித்து பல மில்லியன் முதலீடுகளை தானே செய்யப் போகிறீர்கள்..??!

 

அடிப்படையில் நீங்கள் ஆக்கத்தையும் புரிஞ்சுக்கல்ல.. பின்னால எழுதினதை வாசிக்கவும் இல்லை..!

 

இத்தலைப்பு.. 1993 இன் பின்னால் உருவான சூழல்.... யாழ் தேவியினை.. சிங்கள இன அழிப்பு வடிவமாகவே இனங்காட்டுகிறது.

 

ஒரு தொடரூந்தின் தடத்தை மக்களுக்காக திறந்து விட சிங்கள ஜனாதிபதியும் பரிவாரங்களும் அவசியம் இல்லை. சாதாரண.. தொடரூந்து.. உத்தியோகத்தர்கள் போதும். யாழ்தேவி 1993 இல் இராணுவ வடிவமாகி இன்று.. 2013 ஆக்கிரமிப்பு இன அழிப்பு வடிவமாக வருவது தான் இங்குள்ள கருத்தாக்கமாகும்.

 

மேலும்.. தொடரூந்துப் பொருண்மியம்.. பற்றிய சில மிகையான பார்வைகளையும் நீங்கள் மக்கள் முன் வைத்து பூச்சாண்டி காட்ட முனைகிறீர்கள். சிறீலங்காவில் ஏதோ மேற்கு நாடுகளில் உள்ள அளவுக்கு அதிவேகத் தொடரூந்துகளின் சேவை தொழில்துறையை பெருக்கும் என்பது போல.. ஒரு தோற்றத்தைக் காட்ட விரும்புகிறீர்கள். ஆனால்..வடக்கு கிழக்கை பொறுத்தவரை.. சிறீலங்கா அரசு பெரிய தொழில்துறை முதலீடுகளை செய்வதாகத் தெரியவில்லை. மாறாக.. அடிப்படை வசதிகளை அரசியலாக்கி வழங்கி அதன் மூலம் வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ளவே நினைக்கிறது.

 

கிழக்கில் தொடரூந்துச் சேவைகள் உள்ளன. அதனால் கிழக்கு செல்வச் செழிப்பில் மிதப்பதாக நினைக்க வேண்டாம். மலையகத்திலும் உள்ளது.. அதனால் மலையகம் பல மில்லியன் டொலர்களிற்கான முதலீட்டை கவர்கிறது என்று கதைவிட வேண்டாம்..!!

 

இந்த தொடரூந்துச் சேவை உங்களைப் போன்ற புலம்பெயர்ந்தவர்கள் நாலு நாள் விடுமுறையில் ஊர்சுற்ற வசதியாக இருக்கும். அதன் வருவாய் எங்கோ தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும்..??! ஆனால்... இன்று... எம்மவர்களுக்கு.. இத்துறையில் பயிற்சி அளிக்கப்படுவதும் இல்லை.. அவர்கள்.. வேலைக்கு அமர்த்தப்படுவதும் குறைவு.

 

1988 இல் இந்தியப் படைகள் இதே தொடரூந்துச் சேவைகளை ஆரம்பித்தன. அப்போது வேலை பெற்ற தமிழர்களைக் காட்டிலும் இன்று வேலையில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் இது தென்னிலங்கையில் இருந்து கூலிகளையும்.. தொழிலாளர்களையும்.. குடியேற்றக்காரர்களையும்.. இராணுவத்தையும்.. அதன் தளபாடங்களையும் பெருமளவில் வடக்கு நோக்கி நகர்த்தும் ஒரு மார்க்கமாகவே இருக்கப் போகிறது. மொத்தத்தில் தமிழரின் காசில் மீண்டும் சிங்களச் செழிப்புக்கு சிங்கள இராணுவ அரசியல்.. ஆதிக்கத்திற்கு... வழி பார்க்கப்படுகிறது.

 

இதனை எல்லாம் கணக்கில் எடுக்கின்ற நிலையில் நீங்களும் இல்லை. உங்கள் பார்வைகளும் இல்லை. இன்னும் பழைய கால நினைப்பில் வாழ்கிறீர்கள். அல்லது.. புலிகள் ரயில் விடல்லையே என்ற ஒரு போலித் தோற்றத்தைக் கொண்டிருந்தோரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். புலிகள் எல்லாவற்றையும் மக்களுக்கு தர தயாராகவே இருந்தார்கள். அதனை தடுத்ததும் தடை போட்டு நிறுத்தியதும் அதன் மூலம்.. தனது மேலாதிக்கத்தை தமிழர்கள் மீது திணிக்க விரும்பியதும்... சிங்களவர்களே.

 

யாழ்ப்பாண தொடரூந்து நிலையம் மீது சகடையால் குண்டு போட்டதும் இதே சிங்களவன் தான். புகையிரத இயந்திரங்கள் மீது குண்டு போட்டதும் இதே சிங்களம் தான். கொக்குவிலில் இருந்த தொலைத்தொடர்பு நிலையம்.. யாழ் தொலைத்தொடர்பு கோபுரம் மீதும் குண்டு போட்டதும் இதே சிங்களம் தான். அல்லைப்பிட்டி அலுமினியத் தொழிற்சாலை மீது குண்டு போட்டதும் இதே சிங்களம் தான். . சுன்னாகத்தில் இருந்த அனல் மின் உற்பத்தி நிலையம் மீது குண்டு போட்டதும் இதே சிங்களவன் தான். பரந்தன் இரசாயன தொழிற்சாலையை இழுத்து மூடி இராணுவ நிலையமாக்கியதும்.. காங்கேசந்துறை சீமேந்து தொழிற்சாலையை கடற்படை வலையமாக்கியதும் இதே சிங்களம் தான். யாழ் தேவியின் பெயரால்.. இராணுவ நடவடிக்கை எடுத்து தமிழின அழிப்பை செய்தவனும் இதே சிங்களவன் தான்.

 

புலிகள்.. தொலைத்தொடர்பு கோபுரங்களின் உதவியோடு தொலைக்காட்சி சேவை வழங்கினர். சுன்னாகத்தில் இருந்து சுழற்சிமுறையில் மக்களுக்கு மின்விநியோகம் செய்தனர். உள்ளக ரயில்களை இயக்கும் திட்டத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் அதனை சிங்களம் தன் கையில் இருக்கும் தமிழர்களின் சேவைகள்.. தேவைகள் என்ன என்பதை தீர்மானிக்கும் ஆதிக்கம் புலிகள் கைக்குப் போவதா என்ற தோறணையில்..திட்டமிட்ட விமானத்தாக்குதல்கள் மூலம் இல்லாமல் செய்தது. ரயிலே இல்லாத ஊருக்கு தண்டவாளம் எதற்கு என்று தண்டவாளங்களை சிங்களக் குண்டுகளில் இருந்து பாதுகாப்புத் தேட உருவும் நிலையை சிங்களமே ஏற்படுத்தியது.

 

இத்தனைய ஒரு பின்னனியில்.. இன்று.. இத்தகைய ஒரு அடையாளத்தோடு.. யாழ்தேவி.. வடக்கிற்கு அதுவும் ஒரு போர்க்குற்றவாளியால் எடுத்து வரப்படுவது தான் அவலம் என்கிறோம். அதனை மக்கள் உணர வேண்டும் என்கிறோம். மாறாக.. தொடரூந்துச் சேவைகள் மக்களுக்கு முற்றாக அவசியம் இல்லை என்பதல்ல இங்குள்ள கருத்து.

 

மேலும்..

 

வடக்குகிழக்கு அபிவிருத்திக்கு தொடரூந்துச் சேவைகள் பயனளிக்கனுன்னா.. வடக்குகிழக்குக்கு சரியான அரசியல் அமுலாக்கம் தேவை. ஒரு சீரற்ற அரசியல் சூழ்நிலையில்.. எந்த தனியார் முதலீட்டாளனும்.. மில்லியன் கணக்கில் முதலீடு செய்ய முன்வர மாட்டான். இது அடிப்படை வியாபார அறிவுள்ள எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சிங்கள அரசும் அதனை சார்ந்தவர்களுமே இன்று அதிகம் முதலீடுகளைச் செய்கின்றனர். அதிக தனியார் முதலீடுகள் வந்தாலும்.. அதற்குரிய மனித வலுவை.. தொழில்நுட்ப மற்றும் சேவைகள் அறிவு கொண்ட ஒரு சமூகத்தை தமிழர்களிடம் சிங்களம் கட்டி வளர்க்கவில்லை. அது சிங்கள தேசத்தில் தான் குவிந்து கிடக்கிறது.  ஆக.. இந்தத் தொடரூந்து.. புலம்பெயர் தமிழர்களின் சுற்றுலாக் கொண்டாட்டத்திற்கும்.. தென்னிலங்கைச் சிங்களவர்களின் தொழில்வாய்ப்புக்கும்.. சிங்களக் குடியேற்றக்காரர்களின்.. இராணுவத்தின் இயக்கத்திற்கும் வசதியாகவே இருக்கப் போகிறது. தமிழர்களின் கருவாட்டையும் புகையிலை சிற்பங்களையும் வைச்சுக் கொண்டு.. இந்த ரயில் இயக்கப்படப் போறதில்லை..! அதற்கு வேறு பல மலிவான.. வசதியான.. மார்க்கங்கள் உள்ளன..! இன்றைய களத்தின்.. இந்த அடிப்படை உண்மையையும்.. விளங்கிக் கொள்வது அவசியம்..!

 

இன்றைய நிலையில்.. இந்த யாழ் தேவி சிங்கள இனவெறி அரசின் அரசியல் ஆதாயம் தேடும்.. மற்றும்.. இராணுவ ஆக்கிரமிப்பினை... இன அழிப்பினை வலுப்படுத்தும் ஒரு இயந்திரமாகவே வடக்கிற்கு நகர்த்தப்படுகிறது. இதுதான் யதார்த்தம்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் : எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையில் பிரசுரமாகிய ஒரு பகுதியை இணைக்கின்றேன் உங்களுக்கு பிக்காவிடில் நீக்கிவிடவும் ................................. வடக்கு நோக்கி மேலே குறிப்பிட்ட ரயில்கள் அனைத்தும் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் அந்த ரயில்கள் பயணிகளை மட்டுமன்றி இராணுவத்தினரையும் ஏற்றி இறக்கிக்கொண்டிருந்தது. பல சந்தர்ப்பங்களில் விடுதலை இயக்கங்களின் தாக்குதல்களுக்கு அஞ்சிய இராணுவம், வடபகுதி பயணிகளை பணயமாக வைத்துக்கொண்டு ஆனையிரவு முகாமுக்கு பயணித்துமிருக்கிறது. வீரகேசரியில் பணிபுரிந்த தற்பொழுது ஜெர்மனியில் வதியும் அலுவலக நிருபர் வீ. ஆர். வரதராஜா ஒருநாள் யாழ்ப்பாணம் சென்று திரும்பியவேளையில் சில செய்திகளுடனும் வந்தார். அதில் ஒன்று: காங்கேசன்துறை நோக்கிச்சென்ற அவர் பயணித்த யாழ்தேவி, தமிழ்ப்பயணிகளை பாதுகாப்பு பணயக்கேடயமாக வைத்துக்கொண்டு, கிளிநொச்சியில் தரித்துநிற்காமல் ஆனையிரவில் தரித்து, அதில் பயணித்த இராணுவத்தினரை அங்கு இறக்கிவிட்டு, மீண்டும் கிளிநொச்சிக்கு திரும்பிவந்து பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் வடக்குநோக்கி புறப்பட்டு அதன்பின்னர் வரும் ரயில் நிலையங்களில் தரித்து காங்கேசன்துறைக்கு மிகவும் தாமதமாகச்சென்றிருக்கிறது. இதனால் கிளிநொச்சிக்கும் அதற்கு அப்பால் இருக்கும் ஊர்களுக்கும் செல்லவிருந்த பயணிகள் எதிர்பாராமல் எதிர்நோக்கிய சிரமங்கள், அவதிகள் குறித்தே வரதராஜா செய்தி எழுதிக்கொடுத்திருந்தார். துணை ஆசிரியராக பணியிலிருந்த என்னிடம், தினமும் காலையில் பணிகள் தொடங்கும்பொழுது பிரதேச நிருபர்கள் தபாலில் அனுப்பிய செய்திகள் மற்றும் அலுவலக நிருபர்கள் தரும் செய்திகளையும் எடிட் செய்து தலையங்கம் இடுவதற்காக செய்தி ஆசிரியராகவிருந்த நடராஜா தருவார். அவ்வாறு ஏனைய துணை ஆசிரியர்களுக்கும் வழங்குவார். நாம் எடிட் செய்து கொடுப்பனவற்றை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு அச்சுக்கோர்ப்பதற்காக அந்தப்பிரிவுக்கு அனுப்புவார். நிருபர் வரதராஜா எழுதியிருந்த வடபகுதி பயணிகள் எதிர்கொண்ட அவதிபற்றிய செய்தி என்னிடம் வந்தது. நானும் வழக்கம்போன்று எடிட்செய்துவிட்டு, வடபகுதி பயணிகள் அவதி, கிளிநொச்சியில் நிற்காமல் சென்று திரும்பிய யாழ்தேவி. என்று தலைப்பிட்டு கொடுத்துவிட்டேன். மறுநாள் வீரகேசரியில் குறிப்பிட்ட செய்தி முதல் பக்கத்தில் இவ்வாறு வருகிறது. யாழ். தேவி நீ யார் தேவி ? நிற்பதும் ஓடுவதும் யாருக்காக? இவ்வாறு அர்த்தம்பொதிந்த தலைப்புகள் இட்டு அசத்தியவர்தான் நாமெல்லோரும் நடா என்று அன்பொழுக அழைக்கும் மூத்த பத்திரிகையாளர் நடராஜா. நன்றி தமிமுரசு அவுஸ்ரேலியாhttp://www.tamilmurasuaustralia.com/2013/09/07.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்து இது கருத்துக்களம் தானே. பல தரப்பட்ட கருத்துக்களும் முன்வைக்கப்பட்டால் தான் அது கருத்துக்களம். அலசி ஆராய ஒரு தீர்வை எட்ட அது தான் உதவும். நன்றி பகிர்விற்கு. :)

 

அப்படியே விறாந்தைப் பேச்சு 7 யும் ஒருக்கா படிச்சுப் பாருங்கோ... :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125834#entry936695

 

இதன் வரவில்

பாழாகப் போகுது

எம் தமிழ் தேசம்..!

விபத்தில் ..

தமிழர் உயிர் பறித்து

தடத்தில்

தமிழர் நிலம் பறித்து

வழியில்...

தமிழர் பணம் பறித்து

நிலத்தில்..

தமிழர் பண்பாடழித்து

தொடரும் இது

இன்னொரு இன அழிப்பு..!

 

உண்மை அருமையா சொன்னிர்கள் வாழ்த்துக்கள் கவிதைக்கு .

--------
நாம் எம்மை வளப்படுத்த சிலவேளைகளில் புத்திசாலிகளாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த நிலத்தில் எல்லாமே பாழாகிவிடும் அழிவைதவிர. ஒரு இனம் வாழ்ந்தாகவேண்டும் அப்படி ஒரு இனம் இருக்கென்ற அடையாளமாவது தெரிவதற்கு உலகுக்கு. தன்னை நிலைப்படுத்திக்கொண்டுதான் போராடவேண்டும். ஆகையால் இவற்றை எல்லாம் பெற்றுக்கொண்டு தந்திரமாக புலம்பெயர்ந்த நான் அங்கு எஞ்சி இருப்பவர்களை தம் இருத்தலுக்கு இவற்றை தந்திரமாக பெற்றுக்கொள்வதை எதிர்ப்பதற்கான என்ன தார்மீக உரிமை இருக்கிறது.?
 
 
உயிர்வாழ்தலுக்கான எதையும் பெற்றுக்கொள்ள எமக்கென்று ஒரு அரசாங்கமே இல்லாத நிலையில் அவர்கள் அவற்றை சிங்களவனிடம் இருந்து பெறக்கூடாதென்று சொல்லுவோமானால் நாம் எம்மை அழிக்க சிங்களவனுக்கு முண்டுகொடுத்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வந்திருக்க கூடாது,அவர்களது றெயின்கள்,பஸ்களில் பயணித்திருக்ககூடாது. எனக்கொரு நீதியும் அங்கிருப்பவனுக்கு இன்னொரு நீதியும் சொல்லும் இந்தக்கவிதை முற்றிலும் சுயநலமான ஒன்று.
 
 

இதன் வரவில்
பாழாகப் போகுது
எம் தமிழ் தேசம்..!
விபத்தில் ..
தமிழர் உயிர் பறித்து
தடத்தில்
தமிழர் நிலம் பறித்து
வழியில்...
தமிழர் பணம் பறித்து
நிலத்தில்..
தமிழர் பண்பாடழித்து
தொடரும் இது
இன்னொரு இன அழிப்பு..!

ஆக ஒரு றெயின். அது வந்து இவை எல்லாம்? :D கொஞ்சம் யதார்த்தமாக சிந்தியுங்கள் அண்ணா.


நியானி: சில வரிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன

Edited by நியானி

அந்த றெயின் சிங்களவனோ மகிந்தவோ போட்ட பிச்சை அல்ல. தமிழ் மக்களின் வரிப்பணமும் அதில் உள்ளது. ஆகவே அதை பயன்படுத்தும் முழு உரிமையும் தமி்ழ் மக்களுக்கு உண்டு.

வரியைக் கட்டும் கடமை மட்டும்தான் தமிழருக்கு இருக்கிறது. அதிகாரத்தில் பங்கு கொள்ளும் உரிமை எமக்கில்லை.

 

எனவே யாழ்தேவியை அதிகார பரவலாக பார்க்காமல் அடக்குமுறை மேலாதிக்கமாக பார்ப்பதே சரி.

 

கையில் இருக்கும் பணத்தில், யாழ்தேவி, நெடுஞ் சாலைகளை  வேண்டுமா அல்லது தேவையான 150,000 வீடுகளுக்கு 75,000 மட்டும்தான் திட்டத்தில் இருக்கு மற்றவைகளுக்கு இந்த பணம் ஒதுக்கவா என்று தமிழ் மக்கள் அபிப்பிராயத்தை அறிய அரசு முயன்றிருக்கலாம். 

 

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இந்தத் தலைப்பின் நோக்கம் புரியாமல்.. எழுதி வருகிறார்கள்.

 

இத்தலைப்பின் நோக்கம் தொடரூந்துச் சேவைகள் எமது மக்களை அடைவதை தடுப்பதும் அல்ல... அது அவர்களுக்குத் தேவை அற்ற ஒன்று என்று சொல்வதும் அல்ல. எமது மக்களுக்கும் உலக தரத்துக்கு சமனான சேவைகளை வசதிகளை அனுபவிக்கும் உரிமை உண்டு. அதனை அவர்கள் எந்தத் தடையும் இன்றிப் பெற வேண்டும். அதற்காகவும் தான் எமது மக்கள் போராடினார்கள்.

 

இதில் கூறப்படும் விடயம்.. எமது மக்களை நோக்கி சேவை வழங்குவதைக் கூட.. சிங்களம் தனது சுயலாப அரசியலுக்காகவும்.. தனது மேலாதிக்க வெறித்தனத்தை இன அழிப்பை.. பூரணப்படுத்தவும்.. ஆக்கிரமிப்பை வலுப்படுத்தவும் பாவிக்கின்ற தன்மையை இனங்காட்டுவதும்.. "யாழ்தேவி" எப்படி சிங்கள அரசின் பேரினவாத நிகழ்ச்சி நிரலோடு நகர்ந்து வருகிறது என்பதை மக்களுக்கு இனங்காட்டுவதுமே ஆகும்.

 

இதற்காக ஏதோ தேவை கொண்டாகினும்.. மக்கள் தம்மை தேடி வரும்.. சேவைகளைப் புறக்கணிக்கனும் என்று கோருவது.. தாயகத்தைப் பொறுத்தவரை சாத்தியமற்ற ஒன்று.

 

புலம்பெயர்ந்தவர்களே சிறீலங்கன் எயார்லைன் மற்றும் உற்பத்திகளை புறக்கணிக்க தயங்குகின்ற நிலையில்.. தாயக மக்களைப் பொறுத்த வரை.. எதிரி தானே தடுத்து வைத்திருந்த சேவைகளை மீள தனது தேவைக்காக விடுவிக்கின்ற போது.. அதனை மக்களும் அனுபவிக்கவே செய்வார்கள். அது குற்றமும் அல்ல. ஆனால்.. எதிரியின் நோக்கங்களை மக்கள் அறிந்து கொண்டு அதில் பயணிக்க வேண்டும்.. அறிவூட்டல் பெற வேண்டும்.எதிரி கடந்த காலத்தில் இழைத்த அநீதிகளில் சிலவற்றையாவது  அவன் மனச்சாட்சிக்கு புரிய வைக்க வேண்டும்..! இன்றேல் அவன் தான் எல்லா விதத்திலும் எம் மக்களை வென்று கொண்டிருப்பதாகவே இறுமாப்படைவான். அது எமது மக்களுக்கே ஆபத்துக்களையும் கொண்டு வரும். :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.