Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி எவனுக்கும் கிடையாது. காசி ஆனந்தன் [video ]

Featured Replies

பாவம் குத்தியர் தான் காணமல் போய்ட்டார் . :lol:

டக்ளஸ் தேர்தலில் தோற்றது உங்களுக்கு தமிழீழம் கிடைப்பதை விட அதிக சந்தோசமான விடயம் என்பதை யாம் அறிவோம். தேர்தல் திரிகளில் உங்கள் துள்ளிக்குதிப்புகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்,

தற்கொலைத் தாக்குதல் உட்பட 12 முறைக்குமேல் முயற்சித்தும் அவர்கள் காணாமல் போகவில்லை

இத்தேர்தலில் அவர்கள் வெல்லவேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் அதை தடுக்கவும் முடியாது

இத்தேர்தலில் தோல்வியே அவர்களுக்கு முக்கியமானது

இவற்றை எல்லாம் புரிந்துகொள்ளக் கூடிய நிலைக்கு நீங்கள் எப்போதும் வரமுடியாது. காணாமல் போனதும் தோற்றதும் அவர்களல்ல நீங்களே! 

  • Replies 111
  • Views 6.8k
  • Created
  • Last Reply

சண்டமாருதன் சொல்வதுபோல "இத் தேர்தலால் தமிழர்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை ஆனால் மகிந்த கூட்டத்தின் மீதிருந்த ஜனநாயக விரோத குற்றச்சாட்டு பலமிழந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. இத்தேர்தல் சிங்களப்பேரினவாதத்திற்கே பெரும்பான்மை வெற்றி அதன் பிறகே தமிழர்களுக்கான வெற்றி". அதாவது இந்தத்தேர்தலில் சிங்களம் வடக்கில் தோற்றாலும் உலகத்தின் பார்வையில் வெற்றி பெற்றுவிட்டது. "வடக்கில் 25 வருடங்களுக்குப்பிறகு எங்களால் சனநாயகமாக தேர்தல் நடாத்தியிருக்கிறது. இனி வடக்கில் அபிவிருத்தியினைச் செய்யப்போகிறோம்." என்று சிங்களம் சொல்லிவருகிறது. நாங்கள் தான் உலகத்துக்கு "இத்தேர்தல் வெற்றியினால் தமிழர்களின் பிரச்சனை தீரப்போவதில்லை" என்று சொல்லவேண்டும்.

வெளிநாடுகள் தேர்தலை நடத்துவித்தது இலங்கையை சுதந்திரமாக போக விட இல்லை. அதுதான் அவர்களுக்கு தேவையானதாக இருந்திருந்த்தால் இலங்கையை தேர்தல் நடத்தாமலே சுதந்திரமாக போகவிட்டிருக்கலாம். 

வெளிநாடுகள் இலங்கையிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதற்கு சரியான பதில் இருந்தால் மட்டும்தான் அவர்கள் இந்த தேர்தலை நடத்தியதால் மட்டும் திருப்தி அடைந்து விடுவார்கள் என்று கூற முடியும். அண்மையில், நவநீதம் பிள்ளை "இலங்கை சர்வாதிகாரத்துக்குள் விழுந்து கொண்டிருக்கிறது "(அது எப்போதோ விழுந்துவிட்டது என்பதே உண்மை.) என்று கொழும்பில் வைத்துக் கூறிய கருத்துக்கு மகிந்தா "சர்வாதிகார நாட்டில் தேர்தல் வைப்பார்களா" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பிருத்தானிய மந்திரி ஒருவர் தேர்தல் நடப்பது சர்வாதிகாரம் இலை என்றதை எடுத்துச் சொல்லாது என்று கூறியிருந்தார். மூன்று நாட்களுக்கு முன்னர்(9/23/2013), மகிந்தாவுக்கு முன்பாக, மகிந்தாவை காப்பாற்றிய பிரதான நண்பர்களில் ஒருவரான பாங்கி மூன் இலங்கையில் ஐ.நா தோல்வி கண்டுவிட்டது என்று கூறியிருந்தார். நடப்பது எல்லோரும் தெரியும். எந்த பக்கம் சரிவார்கள் என்பதை நாம் சொல்வது கஸ்டம். 

டக்ளஸ் தேர்தலில் தோற்றது உங்களுக்கு தமிழீழம் கிடைப்பதை விட அதிக சந்தோசமான விடயம் என்பதை யாம் அறிவோம். தேர்தல் திரிகளில் உங்கள் துள்ளிக்குதிப்புகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்,

தற்கொலைத் தாக்குதல் உட்பட 12 முறைக்குமேல் முயற்சித்தும் அவர்கள் காணாமல் போகவில்லை

இத்தேர்தலில் அவர்கள் வெல்லவேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் அதை தடுக்கவும் முடியாது

இத்தேர்தலில் தோல்வியே அவர்களுக்கு முக்கியமானது

இவற்றை எல்லாம் புரிந்துகொள்ளக் கூடிய நிலைக்கு நீங்கள் எப்போதும் வரமுடியாது. காணாமல் போனதும் தோற்றதும் அவர்களல்ல நீங்களே! 

விமல் தேர்தல் நடந்தால் தான் பதவி விலகுவேன் என்று சொன்னதைவிட பெரிய வசனம்.

Edited by மல்லையூரான்

ஆதாரமற்ற கருத்துக்கள் களத்தின் விதிமுறை மீறல்களில் ஒன்று

இது எப்படி ஆதாரமற்றது என்று உங்களால் சொல்லமுடியும் .உங்களுக்கு தொடர்புகளிருந்தால் அறியவேண்டியது உங்களைப்பொறுத்தது .எல்லோரும் எழுதும் கருத்துகளுக்கு ஆதாரம் வைத்துக்கொண்டா கருத்து எழுதுறீங்கள் .

என்ன ஒரு100 பவுன்ஸ் வருமா? புத்தகம் வித்த காசு. 
 
அனுப்பினவர்களிடம் கேட்டுசொல்லுகின்றேன் .

S.K.மகேந்திரன் எழுதிய என்றுமுடியும் எங்கள் போட்டிகள் என்ற புத்தகத்திலும் காசியை ப்பற்றி பலதும் எழுதியுள்ளார் .பலவருடங்களுக்கு முன்பு கனடா ஈழநாடு பத்திரிகையில் தொடராக வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி ஆதாரமற்றது என்று உங்களால் சொல்லமுடியும் .உங்களுக்கு தொடர்புகளிருந்தால் அறியவேண்டியது உங்களைப்பொறுத்தது .எல்லோரும் எழுதும் கருத்துகளுக்கு ஆதாரம் வைத்துக்கொண்டா கருத்து எழுதுறீங்கள் .

அனுப்பினவர்களிடம் கேட்டுசொல்லுகின்றேன் .

அப்ப எனக்கு தெரிந்த நாலுபேர் என்ன சொன்னாலும் உடனே நம்பிடனும் அப்படியா? :icon_mrgreen:

 ஈழவேந்தன் மாதிரி பதவியை விட்டுவிட்டு ஒட எல்லா பா.உ களும் நினைப்பார்களாயின் தேர்தல்களில் நிற்கவேண்டியதில்லை

ஈழவேந்தனின் பதவி போனது அவர் ஒழுங்கான முறையில் விடுமுறைக்குரிய கடிதம் கொடுக்காததால் ,இதுகூட தெரியாமல் சம்பந்தனில் பழியை போட்டவர் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சவாலை ஏன் ஒருத்தரும் எதிர் கொள்கிறார்களில்லை???

என்ன ஒரு100 பவுன்ஸ் வருமா? புத்தகம் வித்த காசு. 

இதுதான் தனிநபர் தாக்குதல் வகையாக்கும் :icon_mrgreen:

அவரும் விக்கினேஸ்வரன் என்கின்ற தனிநபரைத்தான் தாக்குகின்றார் என்பதனை நினைவில் வைத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவேந்தனின் பதவி போனது அவர் ஒழுங்கான முறையில் விடுமுறைக்குரிய கடிதம் கொடுக்காததால் ,இதுகூட தெரியாமல் சம்பந்தனில் பழியை போட்டவர் 

அத்தோடு என்னை கனடாவுக்கு கூப்பிடுங்கோ, கனடாவுக்கு கூப்பிடுங்கோ என்று அங்குள்ள பிரபல எழுத்தாளரை கெஞ்சியும் இருக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவரால் தமக்கு மானம், மரியாதை எல்லாம் போகின்றது என்று தமிழ்சசெல்வனிடம் கஜேந்திரகுமார் கூறிக்கொண்டே இருந்தார். (நாடாளுமன்ற உணவகத்தில் பணம் எல்லாம் செலுத்தாமல் சாப்பிடுவாராம். இப்படி பல உண்டு) வழமை போல புன்னகைத்துக்கொண்டே தமிழ்ச்செல்வன் இருந்தார். பின்னர், நடேசன் வந்தவுடன் முதல் வேலையாக அவரை அப்புறப்படுத்தியதுதான்.

டக்ளஸ் தேர்தலில் தோற்றது உங்களுக்கு தமிழீழம் கிடைப்பதை விட அதிக சந்தோசமான விடயம் என்பதை யாம் அறிவோம். தேர்தல் திரிகளில் உங்கள் துள்ளிக்குதிப்புகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்,

தற்கொலைத் தாக்குதல் உட்பட 12 முறைக்குமேல் முயற்சித்தும் அவர்கள் காணாமல் போகவில்லை

இத்தேர்தலில் அவர்கள் வெல்லவேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் அதை தடுக்கவும் முடியாது

இத்தேர்தலில் தோல்வியே அவர்களுக்கு முக்கியமானது

இவற்றை எல்லாம் புரிந்துகொள்ளக் கூடிய நிலைக்கு நீங்கள் எப்போதும் வரமுடியாது. காணாமல் போனதும் தோற்றதும் அவர்களல்ல நீங்களே! 

உங்களின் கருத்தோடு 100%  உடன் படுகிறேன்... !   அதுதான் சோகமான உண்மை...   இருப்பை தக்க வைக்கை இவ்வளவு காலமும் போராடிய இனம்  இனி அடையாளத்தை தக்க வைக்கவே  போராட வேண்டி இருக்கும்... 

ஆக குறைந்த பட்சமாக  நடந்த படுகொலை சாட்ச்சியங்கள் , இவை  போர் ஆரம்பிக்க காரணமான ஆரம்பிக்க வேண்டி வந்த காரணிகள்,  என்பனவாவது இந்தக்காலங்களில் தோண்டி எடுத்து உறுதி செய்யப்பட வேண்டும்...  

அதற்கான ஆதரவு கூட்டமைப்பிடம் இருந்து கிடைக்குமா எண்றும் நாம் அறியோம்...  

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இத் தேர்தலலால் தமிழர்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை ஆனால் மகிந்த கூட்டத்தின் மீதிருந்த ஜனநாயக விரோத குற்றச்சாட்டு பலமிழந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. இத்தேர்தல் சிங்களப்பேரினவாதத்திற்கே பெரும்பான்மை வெற்றி அதன் பிறகே தமிழர்களுக்கான வெற்றி.

சிங்களப்பேரினவாதத்தின் கொடுமைக்குட்பட்ட தமிழர்கள் பிரதேசத்தில் தமிழர்கள் போட்டியிட்டு அதிகம் வாக்குகளை பெற்றிருக்கின்றனர். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முக்கியமான விடயம் சிங்களப்பேரினவாத அரசு நடத்திய தேர்தல் போன்ற ஜனநாயகச் செயற்பாடு மட்டும்தான்.

இந்தக்கருத்தோடு உடன்படமுடியவில்லை.

நீங்கள்  சிலவற்றை மறைக்க முயல்கிறீர்கள்

இது எதற்காக எனில்

ஒன்று தோற்றவர்களைக்காக்கணும்

மற்றது

வென்றவர்களுக்கு சூடுவைக்கணும்.

நேரடியாக எழுதவிரும்பாது

மறைமுக  பொருள் இது தான்.

இதை எத்தனை பேர் புரிந்து கொண்டார்களோ தெரியாது.

நீங்கள் கூறும் கருத்தை ஆதரிப்பவர்களிடமும்  உங்களிடமும் ஒருசில கேள்விகள்

1- சிங்களம் நிறைந்த திறந்த மனத்துடன்  இந்த தேர்தலை நடாத்தியதா???

பதில் இல்லை என்றால் ஏன்??

2- தோற்றவர்கள் தோற்கணும் என்றே  வேலை செய்தார்களா??? எங்கு ? எப்பொழுது???

3-  இந்தியா 13 ம் திருத்தத்தை நிறைவேற்றுக என அறிக்கை விடுகுதே.  இதுவும் மகிந்தவின் வெற்றியோ???

அப்ப எனக்கு தெரிந்த நாலுபேர் என்ன சொன்னாலும் உடனே நம்பிடனும் அப்படியா? :icon_mrgreen:

அது உங்கள் புத்திசாலித்தனத்தை பொறுத்தது  :D

முதலாவது ஆபிசலான அறிவிப்பாக, இலங்கை மீது ஜனநாயக விரோத குற்றச்சாட்டு நவநீதம் பிள்ளையால் தனது அண்மைய இலங்கை விஜயத்தின் போது முன் வைக்கப்பட்டது. இது நடந்தது இலங்கை அரசு தேர்தலை அறிவித்த பின்னரே. அது எடுத்துக்காட்டுவது இலங்கை அரசு தேர்த்லை அறிவித்ததை அவர்கள் கண்துடைப்பாக பார்த்தமையாலேயேதான். 

இலங்கை அரசு தேர்தலை நடத்திய விதத்தை அவனித்தவர்கள், இலங்கை அரசு ஜனநாயகத்தில் சறுக்கிக்கொண்டு போவது மட்டும் அல்ல அதை பலமாக மறைக்கவும் முயல்கிறது என்பதை விளங்கிக்கொண்டார்கள். தேர்தலுக்கு முதல்நாள் இராணுவம் அனந்தியை கொலை செய்ய முயன்றதும், தேர்தலன்று அவவின் பெயரை இழுத்து உதயன் பத்திரிகை வெளிவிட்டதையும் பார்த்து, தமிழ் மக்களை இலங்கை அரசு புலிகளாக மட்டும் தான் இருக்கச் சொல்கிறதே அல்லாமல் கூட்டமைப்பாக மாற வேண்டாம் என்று வற்புறுத்துகின்றது என்பதை உலக நாடுகள் உணர்ந்துகொண்டிருக்கும். தமிழர்கள் கூட்டமைப்பாக மாறுவது அரசை ஜனநாயக பாதைக்கு இழுத்து அதை பாரிய சிக்கலுக்குள் மாட்டுகிறது என்பதாக அரசு கண்டுகொள்வதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.  

உண்மையில் சிறிமா 1970ல் வந்த போதே இலங்கை சர்வாதிகாரம் நோக்கி காட்டாற்று வேகத்தில் சரிவதை விளங்கிக்கொள்ளப்பட்டது. அத்ற்கு முதல் தேர்தலில், சிறிமா என்ற பெண் தேர்தலில் இறங்க எந்த தேவையும் சிங்களவர்களுக்கு அந்த நேரம் இருக்கவில்லை. அது வெறுமனே சிங்கள் மக்கள் ஜனநாயகத்தை பாதுகாகக தவறிய சந்தர்ப்பம். இதைத்தான் சேர் பொன் இராமாநாதன் டொனமூரின் அரசியல் அமைப்பை எதிர்க்கும் போது கூறிய விளக்கமும். ஜனநாயத்தை பாதுக்காக்கும் பொறுப்பை மக்கள் உணராதவரைக்கும், பிருத்தானிய முறையில் இலங்கைக்கு அரசு ஏற்படுத்த முயல்வதை தடுக்க முயன்றார். இதை வடிவாக விளங்கி தனது வளர்ச்சிக்கு பாவித்த மகிந்தாவே, ஐ.நா வின் 68 கூட்டத் தொடரில் நிகழ்த்திய உரையில், இலங்கையில் இருப்பதும் ஜனநாயகம்தான் என்றும், அது இலங்கை மக்களுக்கானது என்றும், அதை உலகநாடுகள் தங்களினதுடன் ஒப்பிடக் கூடாது என்றும் கூறியிருந்தார். இதையேதான் தான் இலங்கைக்கு மன்னர் ஆட்சிதான் பொருத்தமானது என்று கோபத்தயா முன்னர் ஒரு தடவை கொடுத்த போட்டியில் கூறியதும்.  

இதைதான் 1970களில்  பிரபலமான சிங்கள மருத்துவ கலாநிதி ஒருவர் ஏரிக்கரை பத்திரிகையில் கொடுத்த "ஜநாயகத்தின் சாவு" என்ற மரண அறிவித்தல் கூறியிருந்தது. ஓரளவுக்கு JVP சிங்கள இளைஞர்களிடம் எடுபட்டதற்கான காரணமும் 1970 களுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசுகள் மீதான ஜனநாயகத்தின் மீதான சந்தேகமே. பண்டாரநாயக்கா கொலை, சிறிமா கொலை முயற்சி என்பன ஆட்சியில் இருப்போரை ஜனநாயக பண்புகளால் மாற்ற முடியாது என்று  சில குறிச்சிகளில்,  சிலரால் விளங்கிக் கொள்ளப்படமையாலேயே.  இப்படி பல வருடங்கள் எடுத்து உருவானது எதுவும் ஒரு நாளில் அடிபட்டுப் போவது கிடையாது.

நவநீதம் பிள்ளை போன பின்னர், சற்று தூக்கம் கலைந்த அரசர், தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டியதாக ஒரு புதிய புரளியை கிளறினார். அதன் பின்னர் அவரின் சில பிரச்சாரிகளை அந்த புரளியை தூக்கி நிறுத்தி பாவாடை சேலைகட்டி புது மணப்பெண் போல காட்ட முயல்கிறார்கள். ஆனால் இதில் எதுவும் புதியது இல்லை. அதாவது, மகிந்தாவுக்கு முன்னரும் இலங்கையில் ஜனநாயகம் இருக்க இல்லை; அது இனியும் திரும்ப வரப்போவதும் இல்லை என்பது எல்லோருக்கும் புரிந்த ஒன்று.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு என்னை கனடாவுக்கு கூப்பிடுங்கோ, கனடாவுக்கு கூப்பிடுங்கோ என்று அங்குள்ள பிரபல எழுத்தாளரை கெஞ்சியும் இருக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவரால் தமக்கு மானம், மரியாதை எல்லாம் போகின்றது என்று தமிழ்சசெல்வனிடம் கஜேந்திரகுமார் கூறிக்கொண்டே இருந்தார். (நாடாளுமன்ற உணவகத்தில் பணம் எல்லாம் செலுத்தாமல் சாப்பிடுவாராம். இப்படி பல உண்டு) வழமை போல புன்னகைத்துக்கொண்டே தமிழ்ச்செல்வன் இருந்தார். பின்னர், நடேசன் வந்தவுடன் முதல் வேலையாக அவரை அப்புறப்படுத்தியதுதான்.

இதெப்படி எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி கூறுகின்றீர்கள் அதுவும் தமிழ்ஈழத்தில் மிகமுக்கிய பொறுப்பில் இருந்த தமிழ்செல்வன் மீது இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டு இன்னும் வேறு யார் ???

அத்தோடு என்னை கனடாவுக்கு கூப்பிடுங்கோ, கனடாவுக்கு கூப்பிடுங்கோ என்று அங்குள்ள பிரபல எழுத்தாளரை கெஞ்சியும் இருக்கின்றார்.

இது உண்மை .அந்த எழுத்தாளர் முலமாக அறிந்தனான் .இவர் அமேரிக்கா விசா வைத்திருந்தவர் .அங்கு வந்து கனடாவுக்கு வந்தவர் .

  • கருத்துக்கள உறவுகள்

nirmalan, on 26 Sept 2013 - 08:10 AM, said:snapback.png

அத்தோடு என்னை கனடாவுக்கு கூப்பிடுங்கோ, கனடாவுக்கு கூப்பிடுங்கோ என்று அங்குள்ள பிரபல எழுத்தாளரை கெஞ்சியும் இருக்கின்றார்.

இது உண்மை .அந்த எழுத்தாளர் முலமாக அறிந்தனான் .இவர் அமேரிக்கா விசா வைத்திருந்தவர் .அங்கு வந்து கனடாவுக்கு வந்தவர் .

நாங்க மாத்திரம் தான் ஜரோப்பா கனடா பார்க்கலாம் சொகுஷாய் வீடு வேண்டி நல்ல வாழ்க்கை வாழவேணும் இங்கு வந்து நல்ல உடுப்பும் நேரத்திற்க்கு நல்ல உணவும் உண்ணும் அதிஸ்டசாலிகள்.மற்றவன் எவானாயிருந்தாலும் கெஞ்சுவதையும் ஒரு வகை சைக்கோதணத்துடண் அதுவும் புணை பெயரில் குறிப்பிட்ட நபரின் மரியாதையை சீரளிப்பம் நல்லா இருக்கையா கதை நடத்துங்கோ சாமிகளா மனச்சாட்ச்சியை தொட்டு சொல்லுங்கள் அவரின் இடத்தில் நம்மை நிறுத்தி எமது குடும்பம் இப்படியாண கருத்தாடலை கண்ணுற்றால் அவர்களுக்கு எவ்வாறு இருக்கும்???

தமிழர்களை எவ்வளவு தூரம் சிங்களத்தால் பிரிவினைக்கு உள்ளாக்கி இருக்கிறான் என்பதுக்கு இந்த திரி ஒரு சிறந்த உதாரணம்...   

இந்த இடத்திலும் சிங்களம் வெண்று தமிழன் தோற்று இருக்கிறான்...  

என்னைப்போல கணனியின் முன் ஒய்யாரமாய் அமர்ந்து கருத்தெழுதும் அன்பர்களே உங்களுக்கு வணக்கம் .
 
இன்றைய சூழ்நிலையில் காசி ஐயா விட்ட ஓர் அறிக்கையை தவறென சுட்டிக்காட்டி அவர் ஒரு தவறான ஆள் என்பதையும் இங்கு முரசறைந்து மேலும் மேலும் அவர்மேல் காறி துப்பும் பக்தர்களே ....
 
காசி ஐயா இன்றல்ல நேற்றல்ல ,நாம் பிறக்க முன்னே தனது கொள்கையில் உறுதியாக வாழ்ந்துவருவதும் அன்றி அன்று எப்படி உணர்ச்சியாக சூழுரைத்து ஒரு தமிழீழத்தில் பிறந்த கலைஞ்சன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார் ..........தமிழீழத்தில் பிறந்த கலைஞ்சன் நானும் என்ற வகையில் இதை இங்கே நான் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன் .
 
தேர்தல் முடிவுகளின் பின் எமக்கு மட்டுமல்ல அனைத்து தமிழர்களுக்கும் ஓர் பெருமூச்சு ,நிம்மதி ....எனனில் கொலை வாழிணை எடடா கொடியோர் செயல் அறவே புவி  வாழ் ஒரு புலியே உயர் குணம் மேவிய தமிழா என்ற வசனத்திற்கிணங்க நாம் மறவர்கள் என்பதை இந்த தேர்தல் காட்டி நிற்கின்றது ..அதை விட இந்த தேர்தலால் எமக்கு ஒன்றும் கிடைக்காது ............
 
இப்போ இங்கே காசி ஐயாவின் வாழ்வை கேவலமாக எழுதியவர்கள் எமது போராட்டத்தின் நியாயத்தையும் ,போராடிய விடுதலை வீரர்களையும் ,எமக்காக தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்களையும் கூட எமக்கு எம் அன்றாட நாள் வாழ்க்கைக்கு எதிரான சக்திகளா திசை திருப்புவார்கள் .அதற்கு இந்த தேர்தலை [மாயயை] பயன்படுத்துகிறார்கள் ....ஆகவே இருப்பாய் தமிழா நெருப்பாய் இருந்தது போதும் இதுவரை செருப்பாய் ...........நன்றி வணக்கம் 
 
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, காசி விக்னேஸ்வரனை, இதுவரைக்கும் கறைபடியா பொதுவாழ்வு வாழ்ந்த மனிதரை ஒருமையில் திட்டலாம்.
யாழ்ப்பாணத்தில் கொழும்பானுக்கு என்ன வேலை என்று கீழ்த்தரமான பிரதேசவாதம் பேசலாம்,
நேற்று முளைத்த காளான் எனறு சொல்லலாம். அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியாது. காரணம் காசி உங்கள் உணர்ச்சி தெறிக்க சில கவிதகள் எழுதிவிட்டு இந்தியா வில் போய் பதுங்க்கிக் கொண்டார். எம்மை ஒளி வயிறும் வளர்த்தார். எனவே அவர் தேசியவாதி.
ஆனால் காசியப்பற்றிய உண்மைகளை சொன்னால் மட்டும் ஐயோ ஒற்றுமை குலைகிறதே என்று ஒப்பாரி வைப்பீர்கள். நல்லா இருக்கு உங்க நியாயம்.

ராஜதுரை எனும் செயல்திறன் மிக்க, பேச்சாளனை அமிர்த்லிங்கத்துடன் சேர்ந்த்ஹ்து தோர்க்கடிக்க வேலை செய்து ஈற்றில் அந்த் மனுசன் கட்சி மாற காரண்மாயிருந்த கோடாரிக்காம்புதான் இந்த காசி. தமிழரின் ஒருமை வடக்கு-கிழக்கு எனப் பிரிந்ததில் காசி மற்றும் அமிரின் சுயநல அரசியலுக்கு ஒரு பெரிய பங்குண்டு. இவரிடம் யாரும் ஒற்றுமை பற்றி பாடம் படிக்கப் தேவையில்லை. மட்டு மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் இந்த ********* பற்றி.

நியானி: பண்பற்ற சொல் தணிக்கை

Edited by நியானி

ஐய்யா goshan_che இங்கு பிரச்சினை காசியாணந்தனுக்கும் விக்கினேஸ்வரனுக்குமே . முதாலமவர் எங்கள் எல்லோருக்கும் தெரியும் அவருக்கு விக்கியுடன் கேள்வி கேட்க்க தாராளமாய் உரிமையுண்டு விக்கி ஐய்யாவும் விளக்கம் கூறுவார் ஏனெனில் அவர் அரசியல்வாதி இதுக்குள்ளை நானோ நீங்களோ ஒரு புனைபெயருக்கு பின்னால் நின்று நீங்கள் காசிக்கோ அல்லது நான் விக்கிஐய்யாவிற்க்கு எதிராகவோ எச்சில் காறி உமிழ்வது ஒருவகை கோழைத்தனம் மேலும் நீங்கள் இந்த பிரச்சினையை ஏன் இவ்வளவு பெரிதாக ஊதி பெரிதாக்குவதில் ஆர்வம் கொள்கிறீர்கள் . இந்த புனை பெயரில் என்ன விஷகருத்துகளை கொட்டியிருக்கிறீர்கள் பின்வரும் முகவரியில் அது நீங்களா அல்லது வேறு யாருமா?
https://www.colombotelegraph.com/index.php/the-meanings-of-wigneswaran/  இதன் கருத்துகளத்தில். மற்றும் இதில் தமிழில்
  • கருத்துக்கள உறவுகள்

அதில் என்ன விஷத்தை கண்டுபிடித்து விட்டீர்கள்? அவை எனது கருத்துக்கள்தான்.

காசி பற்றி யாரும் இங்கு திரி தொடங்கி அவரை ஏசவில்லை. அவர் இன்னொருவரை கீழ்த்தரமாக தாக்கும் போது அவர் முதுகில் உள்ள அழுக்கை மற்றவர்கள் சுட்டிக்காடுவார்கள்.

தனி மனித தாக்குதல் காஸி வகையறாக்களின் கைவந்த கலை. அதற்கான பதிலே இது. அப்புறம் நீங்களும் தான் கருத்து பகிர்கிறீகள், பலரை விமர்சிக்கிறீகள். உங்கள் பாஸ்போட், அடையாள அட்டை எல்லாத்தையும் வெளியிட்டு விட்டா, கருத்து சொல்கிறீகள்?

அதைத்தான் நானும் சொல்கிறேன் அழுக்கை சுட்டிகாட்டுவதிற்க்கும் இவ்வுலகில் ஒரு தராதரம் வேணும் சும்மா புனைபெயரில் நின்று பல சமூக ஊடகங்களில் ஒருத்தருக்கு எதிராக அவர் நல்லவரோ கெட்டவரோ அவதூறு பரப்புவது அதுவும் ஆதாரம் அற்ற கருத்துகளை விதைப்பது கோழைத்தனமான விடயம் 

நாங்க மாத்திரம் தான் ஜரோப்பா கனடா பார்க்கலாம் சொகுஷாய் வீடு வேண்டி நல்ல வாழ்க்கை வாழவேணும் இங்கு வந்து நல்ல உடுப்பும் நேரத்திற்க்கு நல்ல உணவும் உண்ணும் அதிஸ்டசாலிகள்.மற்றவன் எவானாயிருந்தாலும் கெஞ்சுவதையும் ஒரு வகை சைக்கோதணத்துடண் அதுவும் புணை பெயரில் குறிப்பிட்ட நபரின் மரியாதையை சீரளிப்பம் நல்லா இருக்கையா கதை நடத்துங்கோ சாமிகளா மனச்சாட்ச்சியை தொட்டு சொல்லுங்கள் அவரின் இடத்தில் நம்மை நிறுத்தி எமது குடும்பம் இப்படியாண கருத்தாடலை கண்ணுற்றால் அவர்களுக்கு எவ்வாறு இருக்கும்???

இதைத்தானே நாங்களும் சொல்கின்றோம் .தாயகத்தில் இருக்கமுடியாமல் வெளிநாடு வந்தது ,இங்கிருந்து கொண்டு அங்குள்ள மக்களுக்கு வகுப்பெடுக்கிறதும் ,கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும் ,தலைவர்களை விமர்சிக்கின்றவைகளை செய்யாதீர்கள் .அங்குள்ள மக்கள் தங்களுக்கு செய்யக்கூடியவைகளை செய்யட்டும் .நாங்கள் அவர்களுக்கு தார்மீக ஆதரவையும் பொருளாதார உதவிகளையும் செய்யவேண்டும் .நாங்கள் ஆலோசனை சொல்லலாம் ,அனால் வற்புறுத்தமுடியாது .பிழைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாகசொல்லுவதன் மூலம் ,திருத்தமுடியும் .பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம் .

சிலர் கூட்டமைப்பின் மாகாண சபைக்கான வெற்றியை தமிழ் மக்கள் மாகாணசபையை கேட்கின்றனர் என்ற தொனியில் விளக்க முனைகின்றனர். அது முற்றிலும் தவறு. 1988/9 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோஸை ஆதரித்தது வரதராஜப் பெருமாளை தோற்கடித்ததன் மூலம்... தமிழ் மக்கள் அதனை தெளிவாகவும் சொல்லிவிட்டனர்.

தமிழ் மக்கள் கூட்டமைப்பில் சம்பந்தன்.. சுமந்திரனின் குரலுக்கு.. முற்றிலுமாக.. தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொண்டு.. வாக்களிக்கவில்லை. தமிழின அழிவை.. ஏற்படுத்திய.. சிறீலங்கா அரசுக்கும் சிங்கள கட்சிகளுக்கும் அவர்களுக்கு முண்டு கொடுப்போருக்கும் எதிராகவே பாவித்துள்ளனர்.

மேலும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் உட்பட இலங்கைத் தீவில் உள்ள கிட்டத்தட்ட எல்லா தமிழ் பேசும் மக்களும் அங்கீகரித்து நின்ற ஒன்று. அதனை வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம்.. மாற்றி அமைத்து மக்களிடம் திணிக்க முடியாது என்பதை சிலர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழீழம் என்றது எமது பாரம்பரிய நில.. ஆட்சி.. உரிமைக்கான அடையாளம். அதனை விட்டுக் கொடுக்கவோ.. இழக்கவோ.. அதனை தோற்கடிக்கவோ.. எவராலும் முடியாது. அந்த உரிமைக்காக உயிர் கொடுத்தோர் ஆயிரம் ஆயிரமாகும். அதனை கூட்டமைப்பினர் மலினப்படுத்த முனைந்தால்.. கூட்டமைப்புக்கும் சங்கரிக்கு டக்கிளசுக்கு.. கற்றுக்கொடுத்த பாடம் தான் பதிலாகும்..! :icon_idea:

கூட்டமைப்ப்புக்கும் சங்கரிக்கும் டக்லளுக்கும்  மட்டுமல்ல கஜேந்திரன், பதமினி போன்றவர்களுக்கும் மக்கள் ஏற்கனவே பாடம் படிபித்துவிட்டார்கள்.

தமிழீழம் என்பது மக்களின் கனவாக இருந்தது உண்மை. ஆனால் தற்போதைய களநிலையில் அதற்கு சாத்தியமே இல்லை என்பதை மன நலம் படைத்த அனைத்து மக்களுமே  உணர்வார்கள். ஆகவே தான் மக்கள் சமஸ்ஷிக்கு ஆதரவாக வட மாகாணசபைத்தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். அதாவது சுயாட்சி என்பது சாத்தியமானது என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்த சுயாட்சி, சமஷ்டி என்ற இலக்கை அடையவே நாம் இன்னமும் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த் நிலையில் தற்போது தமீழீழம் எமது தாகம் அதற்காக போராடுவோம் என்று கூறுபவர்கள் ஒன்றில் மனநோயாளிகளாக இருக்கவேண்டும் அல்லது தெரிந்தே மக்களை ஏமாற்றும் சுலநலவாதிகளாக இருக்கவேண்டும்.

இந்தியாவில் புலிக்கு சார்பானவர்களை நோண்டி நொங்கு எதுக்கும் போது...காசி மட்டும் எப்படி வீராப்பாக எல்லாம் அறிக்கை விட முடிகிறது..

இந்த அறிக்கையும் Raw இன் ஆழம் பார்க்கும் வேலையோ தெரியாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.