Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி எவனுக்கும் கிடையாது. காசி ஆனந்தன் [video ]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நானும் சொல்கிறேன் அழுக்கை சுட்டிகாட்டுவதிற்க்கும் இவ்வுலகில் ஒரு தராதரம் வேணும் சும்மா புனைபெயரில் நின்று பல சமூக ஊடகங்களில் ஒருத்தருக்கு எதிராக அவர் நல்லவரோ கெட்டவரோ அவதூறு பரப்புவது அதுவும் ஆதாரம் அற்ற கருத்துகளை விதைப்பது கோழைத்தனமான விடயம் 

எதற்கு கனதூரம்  போவான் பெருமாள்.

ஒருவரியில் எழுதலாம்.

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி எவனுக்கும் கிடையாது. காசி ஆனந்தன் 

தமிழீழத்தை கைவிட்டுவிட்டால்  என்னையும் நீங்கள் சுடலாம்-  தேசியத்தலைவர் பிரபாகரன்

Edited by விசுகு

  • Replies 111
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் இலங்கைத் தீவுக்குள் இருந்துகொண்டு யாரும் பிரிவினை பேச முடியாது. சட்டம் அதைத் தடுக்கிறது. (1977 தேர்தலுக்குப் பின்னர் ஜே.ஆர் கொண்டுவந்தது என நினைக்கிறேன்.)

ஆகவே கூட்டமைப்போ அல்லது வேறு எந்தக் கட்சியோ அவ்வாறு பேச முடியாது. ஆனால் வில்லங்கமான ஊடகங்கள் இதை ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்துவார்கள்..!

"தனி ஈழக் கோரிக்கையை ஆதரிக்கிறீர்களா?"

இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாலே போதும். தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிக்கல் வந்துவிடும். இதன்காரணமாக சமஷ்டியில் நிற்கிறார்கள். முதலுக்கு சேதாரம் இல்லை.

மக்களும் புரிந்துகொண்டு கூட்டமைப்புக்கு வாக்களிக்கிறார்கள். இது இவ்வாறு நடப்பதால், மக்கள் தனி நாட்டுக் கோரிக்கையில் இருந்து சமஷ்டிக்கு இறங்கி வந்துவிட்டார்கள் என்று வாதிட முடியாது. அதைச் செய்வதே சிங்களத்தின் அரசியல்.

மற்றும்படி இலங்கைத் தீவுக்கு வெளியே உள்ளவர்கள் சுதந்திரமான தங்கள் கருத்துக்களை வைக்கிறார்கள்..! அதையும் குறைத்து மதிப்பிடுதல் கூடாது. நீ போவியா.. உன்பிள்ளையை அனுப்புவியா என்றெல்லாம் கேட்க முடியாது. அப்படிப் பார்த்தால் அமெரிக்க அரசியல்வாதிகள் ஈராக்கிலும், ஆப்கானிலும் நின்றிருக்க வேணும்.. :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

காசியானந்தனா விக்னேஸ்வரனா?

kasi.jpg

காசியானந்தன் வடக்கு முதலமைச்சரை வாயை மூடு என்று எகிறியிருக்கிறார். கொழும்பு வாசியான விக்னேஸ்வரன் மிகவும் அவதானமாகத் தெரிவு செய்யப்பட்டு வடக்கு முதலமைச்சராகப்பட்டிருக்கிறார். விக்னேஸ்வரன் தேர்தலில் இறங்குவதற்குச் சற்று முன்பதான காலப்பகுதிகளில் வடக்கில் திட்டமிட்ட நிலப்பறிப்பிற்கு எதிராக மக்கள் போராடினார்கள். சரி தவறு என்பதற்கு அப்பால் தமிழகமெங்கும் எழுச்சிகள் இடம்பெற்றன. இந்திய காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியிலிருந்து அன்னிப்பட்டிருந்ததது. இதுவரை மௌனமாகவிருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவது எழுச்சிகளைத் தோற்றுவித்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு அஞ்சிய இந்திய அரசு இதுவரை தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலில் ஈடுபடாத விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது. ஏதோ மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் போன்று வடக்கில் தேர்தல் நடத்தியே ஆகவேண்டுமென்று இந்திய் அரசு நிர்ப்பந்தித்தது.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாக வடக்குத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றது இந்திய அரசு. இன்று விக்னேஸ்வரனின் கட்சி இந்திய அரசு சொல்வதை மட்டுமே செய்வோம் என்று நேரடியாகவும் மறை முகமாகவும் சொல்லிவருகிறது.

விக்னேஸ்வரனைத் விமர்சிப்பதற்குக் கூட யாரும் முன்வரவில்லை. புலம்பெயர் புலி சார் அமைப்புக்கள் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் பின்புலத்திலேயே காசியானந்தன் விக்னேஸ்வரனை வாயை மூடக் கோரியிருக்கின்றார்.

இதே காசியானந்தன் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களின் முன்பதாக ‘நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேற எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?’ என்று தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் வாய் கூசாமல் சொல்லியிருக்கிறார்.

அடிப்படையில் விக்னேஸ்வரனுக்கும் காசியாந்தனுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

இங்கு விக்னேஸ்வரனின் இந்திய அடிமைத் தனத்தை அம்பலப்படுத்துவதில் ஜனநாயக சக்திகள் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய அரசு தனது அடிவருடிகளை களத்தில் இறக்கியுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

 விக்னேஸ்வரனுக்கு எதிரான குரல்களைக் கூட் தன்னால் கட்டுப்படுத்தப்படக் கூடிய அடியாட்களின் ஊடாகவே மேற்கொள்ளும் இந்திய அரசின் நீண்டகால உக்திகளில் இதுவும் ஒன்று.

இங்கு காசியானந்தானா விக்னேஸ்வரனா என்பதல்ல கேள்வி இருவருமே ஒரே நோக்கத்திற்காக மோதிக்கொள்கிறார்கள் என்பதே பதில்.

http://inioru.com/?p=37367

விக்னேஸ்வரனைத் விமர்சிப்பதற்குக் கூட யாரும் முன்வரவில்லை. புலம்பெயர் புலி சார் அமைப்புக்கள் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் பின்புலத்திலேயே காசியானந்தன் விக்னேஸ்வரனை வாயை மூடக் கோரியிருக்கின்றார்.

புலிகள் தேடிவைத்த அரசியல் கட்டமைப்புத்தான் கூட்டமைப்பு.  அப்போது இதுவெல்லாம் யாரின் கட்டுரைகள்?

இங்கு காசியானந்தானா விக்னேஸ்வரனா என்பதல்ல கேள்வி இருவருமே ஒரே நோக்கத்திற்காக மோதிக்கொள்கிறார்கள் என்பதே பதில்.

இப்படியெல்லாம் சிந்திக்க......... நிறையப் படித்தமனிதர்களாக இருப்பார்கள் போலிருக்கு.

விமர்சிப்புக்கள் கட்டாயம் தேவை.. இதை அரசியல் கண்ணோடு நோக்கி அதுக்கு பதிலோ பரிகாரமோ செய்யவேடியது பதவியில் உள்ளவர் கடமை..

( விமர்சிப்பையும் இனத்துரோகத்தையும் போட்டு குழப்பவேண்டாம் )

 "தமிழீழமா சமஸ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா

அப்பொழுது பாருங்கள் மக்கள் உங்கள் முகத்தில் செருப்பால் அடிப்பார்கள்"

காசி ஆனந்தன் தெளிவாகத்தான் இருக்கின்றார்.

சிலர் மட்டும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வலை வீசுகின்றனர்.

காசி ஆனந்தன் அவர்கள் கூறியதுபோல

ஈழமா சமஷ்டியா என ஒரு வாக்கெடுப்பை இந்தக் கருத்துக்களத்திலேயே நடாத்திப்பாருங்கள்

அப்போது எல்லோருக்கும் விளங்கும்

  :icon_mrgreen:   http://tamileelam.the-talk.net/  :icon_mrgreen:  

( விமர்சிப்பையும் இனத்துரோகத்தையும் போட்டு குழப்பவேண்டாம் )

சரியான தெளிவாக தங்களை தாங்கள் பாதுகாத்த்துக்கொள்ளும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. 

விமர்சனம் என்றால் என்ன?, இனத்துரோகம் என்றால்?, அவை எப்படி ஒருவரால் ஒரே நேரத்தில் செய்யத்தகக்தாக இல்லாமல் இருக்க mutually exclusive இல்லாமல் இருக்கின்றன என்றதை கொஞ்சம் விரிவாக ஆராந்தால் நல்லது.

சிலர் களத்துக்கு வருவதே விமர்சனம் என்ற போர்வையில் செய்யத்தக்க இனத்துரோகங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு போகத்தான் என்பது யாழில் பலரின் அனுமானிப்பு. இப்போது இந்த புதிய விளக்கம் அந்த விமர்சனத்தை எப்படி காப்பாற்றப் போகிறது என்றதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் Panangkai யாழில் நடைபெறும் விடயங்கள் யாழை விட்டு தனி லின்ங் குடுத்து வேறு ஒரு தளத்திற்க்கு கொண்டு போகாமல் நிர்வாகத்துடன் கதைத்து யாழுக்குள்ளேயே கொண்டு போவது யாழுக்கு நல்லது. 

விமர்சிப்புக்கள் கட்டாயம் தேவை.. இதை அரசியல் கண்ணோடு நோக்கி அதுக்கு பதிலோ பரிகாரமோ செய்யவேடியது பதவியில் உள்ளவர் கடமை..

( விமர்சிப்பையும் இனத்துரோகத்தையும் போட்டு குழப்பவேண்டாம் )

விமர்சனம் எண்டதுக்கும் குழப்ப வாதத்துக்கும் கூட அதிகமான வித்தியாசம் கிடையாது கண்டியளோ...?? 

சரி விமர்சனம் செய்து என்னத்தை புதுசா புடுங்க போறியள்...??  எங்கையாவது  பாட்டிக்கும் கோயிலுக்கும் போனால் அன்ரிமாருக்கும் அங்கிள் மாருக்கும் படம் காட்டத்தானே....?? 

Edited by தயா

சரி இனி எல்லாத்திற்கும் ஆமா போடுவோம் மாடு மாதிரி.

சரி இனி எல்லாத்திற்கும் ஆமா போடுவோம் மாடு மாதிரி.

உண்மையை ஒத்து கொள்ளும் பெரிய மனப்பான்மை சார் உங்களுக்கு  :D  :D

மேட்டுகுடி மகன் ஜாதி அரசியல் எதிர்பார்க்கிறார் போல

40வருடம் மேல் கொழும்பில் இருக்குறார் இதை சொல்லும் காசி ஐயா 30வருடம் மேல் தமிழ்நாட்டில் இருக்குறார்

தெற்கில் முளைவிட்டு வடக்கில் துளிர்க்கிறார் காசிஐயா ஈழத்தில் முளைவிட்டு தமிழ்நாட்டில் மரமா இருக்குறார்

எல்லாவற்றுக்கும் பேசமுதல் தங்களை சுயபரிசோதனை செய்ய வேணும் உணர்ச்சி வரியில் வேணும் பேச்சில் கிழதரம் :(

சி்ங்கள அரசு நடத்திய உச்சக்கட்ட ஒடுக்குமுறைக் காலம் முழுக்க சிங்கள அரச இயந்திரத்தின் ஒரு அங்கமாக இருந்த விக்கினேஸ்வரனை காலம் முழுக்க ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்கும் ஒருவன் விமர்சிக்கவோ அல்லது சந்தேகமெழுப்பவோ அனைத்து உரிமையும் உண்டு.

எம்போல் புலம்பெயர்ந்த ஒவ்வொருவரைப்போலவே காசியரும் தாயகத்தை விட்டு என்னுமொரு இடத்தில் இருக்கின்றார். புலப்பெயர்வு என்பதை விட சிங்கள அரச இயந்திரத்துடன் இணைந்திருப்பது என்பது வேறுவிதமாக அணுகப்படவேண்டிய விசயம். நேற்றுவரை விக்கினேஸ்வரனை தமிழர்களுக்கு என்னவாகத்தெரியும்? விக்கினேஸ்வரன் சிங்களம் தமிழர்களை ஒடுக்கும்போது சிங்கள அரச இயந்திரத்தில் ஒரு அங்கமாக இருந்ததிற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை காரணம் என்றால் அதைவிட பலபத்துமடங்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளை புலப்பெயர்வுக்கு காரணமாக்கமுடியும்.

தமிழர்களின் அரசியல்போராட்டத்தில் பங்களித்த விதத்தில் விக்கினேஸ்வரனை நம்புவதற்கு ஆகக்குறைந்தது ஒரு அடிப்படைக்காரணம் கூட கிடையாது. அப்படி இருந்தும் விக்கினேஸ்வரனுக்காக வக்காலத்து வாங்க முடியும் என்றால் காசியரின் கருத்துக்காகவும் வக்காலத்து வாங்க முடியும்.

தாயகத்துக்கு அப்பால் வசிப்பவர்களின் இப்படியான வக்காலத்துக்கள் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. அவை தாயகத்தில் கணிசமான அளவேனும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தவல்லதல்ல. ஐந்துபேர் காசியர் பக்கம் ஐந்துபேர் விக்கினேஸ்வரன் பக்கம் நின்றால்தான் அதில் ஒரு சுவார்சியம் இருக்கும்.

புலப்பெயர்வு என்பதை விட சிங்கள அரச இயந்திரத்துடன் இணைந்திருப்பது என்பது வேறுவிதமாக அணுகப்படவேண்டிய விசயம். நேற்றுவரை விக்கினேஸ்வரனை தமிழர்களுக்கு என்னவாகத்தெரியும்

இங்கேதான் அரசியல் அனுபவம் மிளிர்கிறது.

தனக்கு தெரியாவிட்டால் எ"னக்குத் தெரியாது" என்று என்று எழுதிவிடுவதுதானே. அதில் ஏன் தமிழர்களை இழுப்பான். இது வரை யாழில் போன வடமாகாண தேர்தல் திரிகளைப்படிக்காமல், இந்த மாதிரி உலகம் அதிசயிக்கும் படி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு, விக்கினேஸ்வரனை தெரியாது, ஆனந்தசங்கரியை தெரியாது, அனந்தியை தெரியாது என்றெல்லாம் ஏன் பாடம் எடுப்பான்?. சிங்கள் மோடையாக்கள் சந்திர மண்டலத்திலிருந்து அரிசி கொண்டு வருவதாக கூரிய சிறிமாவை அதிகப்படியான வாக்குக்களால் தெரிந்தெடுதுததால் இலங்கையின் பிருத்தானிய வடிவைப்பில் இருந்த அரசியல் அமைப்புசட்டம் தூக்கி எறியப்பட்டது.  ஆனால் நிஜமாகவே ரோட்டுப்போட்டு யாழ்தேவி ஓட்டிக்காட்டிய பின்னர் செயலாளர் நாயகத்தை ஒரு தூக்காக தூக்கி எறிந்தவர்கள் தமிழர்கள். இவர்கள் இனியும் தமிழருக்கு விக்கினேஸ்வரனை தெரியாது என்று பாடம் சொல்லிக்கொடுக்க முடியும் என்றா நப்பாசை வைத்து எழுதிகிறார்கள்?

ஐந்துபேர் காசியர் பக்கம் ஐந்துபேர் விக்கினேஸ்வரன் பக்கம் நின்றால்தான் அதில் ஒரு சுவார்சியம் இருக்கும்.

நியாயமாகத்தான் படுகிறது. 

இல்லையேல் கட்டுக்காசும் இல்லாமல் தோற்றவர்களை பற்றி இனியும் எழுத ஏதாவது இருக்கா?

ஆமியை பழைய படி கூட்டில் அடைக்க இந்தியான் ஆமி வரபோகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது.

அதற்கு பதில் எழுதினால் அரசியல் உள்விவாகரங்களை தெரியும். இல்லையேல் தனக்கு தெரியாத விக்கினேஸ்வரனை யாரென்று தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுக்க முயலவேண்டியதுதான்.

சரி இனி எல்லாத்திற்கும் ஆமா போடுவோம் மாடு மாதிரி.

இவ்வளவுகாலமும் என்னவாக இருந்தீர்கள் என்பது கூட தங்களுக்கு தான் வெளிச்சம்...   

உண்மையை ஒத்து கொள்ளும் பெரிய மனப்பான்மை சார் உங்களுக்கு  :D  :D

உண்மை தான் சார். 2009 வரை 30 வருடங்களாக  எல்லாத்திற்கும் ஒரே ஆமா தான். விளைவு இன்று???????

இவ்வளவுகாலமும் என்னவாக இருந்தீர்கள் என்பது கூட தங்களுக்கு தான் வெளிச்சம்...   

விமர்சனம் என்பது ஒரு விடயத்தை அழிப்பதற்கு அல்ல. அதனை இன்னமும் மேம்பட செய்வதற்கு என்பது கூட அறியாமல் உணர்ச்சிவசபட்டு விமர்சிப்பவர்கள் எல்லோரையும் துரோகிகள் பட்டியலில் போட்டு அப்பட்டியலை நீட்டி பெருப்பித்த சாதனையை புரிந்து  இறுதியில் யார் துரோகி யார் நம்மவர் என்று தெரியாமலே அழிந்ததது தான் மிச்சம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130007

குறிப்பு தமிழீழம் என பேசும் காசி ஆனந்தன் தன் இரு மகள்களையும் இந்தியாவில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பித்து வைத்தியர்களாக்கி உள்ளார். அவரின் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது. அவர்கள் திருமணம் முடித்ததும் தமிழர்கள் அல்ல. அவர்கள் இப்போது மேற்குலக வாசிகள்.)  76 1 0 77 - See more at: http://www.thinakkathir.com/?p=52703#sthash.tdPUj393.dpuf

இந்தக்கருத்தோடு உடன்படமுடியவில்லை.

நீங்கள்  சிலவற்றை மறைக்க முயல்கிறீர்கள்

இது எதற்காக எனில்

ஒன்று தோற்றவர்களைக்காக்கணும்

மற்றது

வென்றவர்களுக்கு சூடுவைக்கணும்.

நேரடியாக எழுதவிரும்பாது

மறைமுக  பொருள் இது தான்.

இதை எத்தனை பேர் புரிந்து கொண்டார்களோ தெரியாது.

நீங்கள் கூறும் கருத்தை ஆதரிப்பவர்களிடமும்  உங்களிடமும் ஒருசில கேள்விகள்

1- சிங்களம் நிறைந்த திறந்த மனத்துடன்  இந்த தேர்தலை நடாத்தியதா???

பதில் இல்லை என்றால் ஏன்??

2- தோற்றவர்கள் தோற்கணும் என்றே  வேலை செய்தார்களா??? எங்கு ? எப்பொழுது???

3-  இந்தியா 13 ம் திருத்தத்தை நிறைவேற்றுக என அறிக்கை விடுகுதே.  இதுவும் மகிந்தவின் வெற்றியோ???

தோற்றுப் போன டக்ளஸ் என்ன மகிந்தவின் மாமனா மச்சானா? அங்கயன் மாதிரி இன்னும் நாலு சொங்கயனை வெல்ல வைத்திரிந்தால் மகிந்தவுக்கு கிடைக்கும் இலாபம் என்ன?

முதலாவது மகிந்தவின் முக்கிய இலக்கு எது?

காலா காலம் இலங்கையை தான் அதற்குப் பின் தன் மக்கள் ஆள வேண்டும். அதற்கு தேவையான வாக்கு வங்கி எது?

இத்தூண்டு இருக்கும் தமிழனா? அல்லது பல்காய் (Bulk) இருக்கும் சிங்களவனா?

ஆக தனக்கு சிதையிறது இந்த கொசுறு வாக்கு வங்கி. மறு வளத்தால் ஆட்சியில் அதிருப்தி என்ற கோட்டை வரைந்த சிங்களவனுக்கு முன்னால் தமிழன் ஈழம் நோக்கி ஒன்று திரண்டு விட்டான் என்ற பென்னாம் பெரிய கோடு வரையப்படுகின்றது. அப்ப சிங்களவனுக்கு இருக்கும் தெரிவு என்ன? விரும்பியோ விரும்பாமலோ இந்த யுத்த கதாநாயகனால் தான் இந்த நாடை காப்பாற்ற முடியும் என்ற நிலை.

இது முதலாவது மாங்காய். இரண்டாவது மாங்காய் எந்தவித அதிகாரமும் இல்லாத ஒரு மாகாண சபை நிர்வாகம் தான் இனி தமிழனின் பிரதிநிதி. அதை வைத்து 13 13+ என்று உலகத்துக்கு காட்டும் இழுத்தடிப்பு அரசியல்.

மகிந்தவா கொக்கா?

போட்டது இறால். பிடிக்கிப போறது சுறா. 

உந்த இலாப நட்ட கணக்குத் தான் அரசியல் இராஜதந்திரம். வெறும் பத்திரிகை மேயும் சாதாரண மக்களால் இவற்றை விளங்கவே இயலாது.

இந்த கருத்துக்குள் அரசியல் ஆய்வு ,கட்டுரை என அலட்டுபவர்களுக்கு மாபெரும் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் பரதேசி ..............[இந்த பெயர் உங்களுக்கு பொருத்தம் இல்லை என நினைக்கிறேன் :icon_idea:  ]

இது முதலாவது மாங்காய். இரண்டாவது மாங்காய் எந்தவித அதிகாரமும் இல்லாத ஒரு மாகாண சபை நிர்வாகம் தான் இனி தமிழனின் பிரதிநிதி. அதை வைத்து 13 13+ என்று உலகத்துக்கு காட்டும் இழுத்தடிப்பு அரசியல்.

அவரவர் நம்புவதை பொறுத்தது.

13ம் திருத்ததை நீக்கவென்று கூட்டப்பட்ட தெரிவுக்கு டகிளஸ் போக மறுதுது அவஸ்தைப்பட்டார். ஆனல் இந்தியா கொடுத்த பிரச்சனையால் நிமால் சிறிபால டி சில்வா அதை அப்படியே விட்டுவிட்டார். டக்கிளஸ் சற்று ஓய்வு எடுக்கிறார். அவரும் தேர்தலில் தோற்றபடியால் இனி மாகாண சபை முதல் அமைச்சர் பதவியை அவர் கனவிலும் நினைக்கமாட்டர். அவரும் இனி 13ம் திருத்தத்தை நீக்கும் தெரிவுக்கு குழுவுக்கு சந்தோசமாக போவார். 

கூட்டமைப்பு 13ம் திருத்தம் என்று கேட்க்கவில்லை. பிரிந்து போகாத சுயநிர்ணய உரிமை என்றுதான் கேட்கிறது(அப்படி என்றால் என்ன என்பதை நான் இன்னும் விளங்கிக்கொள்ள இல்லை :D . அது கட்டயமாக  கிடைக்கப் போகுது என்று வைத்துக்கொண்டால், அதற்கு பிறகும் சிங்களவன் அடிப்பனோ, அல்லது அணைப்பானோ தெரியாது)

13ம் திருத்தம் எங்கிருந்தோ வரப் போகிறதென்று யார் யாரிடம் சொல்லி யாரை ஏமாற்றுகிறார்கள் . அரசைப் பொறுத்தவரையில் பதின்மூன்று என்ற பெயரை உச்சரிப்பதையும் காணக்கிடைக்கவில்லை. 

தோற்றுப் போன டக்ளஸ் என்ன மகிந்தவின் மாமனா மச்சானா? அங்கயன் மாதிரி இன்னும் நாலு சொங்கயனை வெல்ல வைத்திரிந்தால் மகிந்தவுக்கு கிடைக்கும் இலாபம் என்ன?

முதலாவது மகிந்தவின் முக்கிய இலக்கு எது?

காலா காலம் இலங்கையை தான் அதற்குப் பின் தன் மக்கள் ஆள வேண்டும். அதற்கு தேவையான வாக்கு வங்கி எது?

இத்தூண்டு இருக்கும் தமிழனா? அல்லது பல்காய் (Bulk) இருக்கும் சிங்களவனா?

ஆக தனக்கு சிதையிறது இந்த கொசுறு வாக்கு வங்கி. மறு வளத்தால் ஆட்சியில் அதிருப்தி என்ற கோட்டை வரைந்த சிங்களவனுக்கு முன்னால் தமிழன் ஈழம் நோக்கி ஒன்று திரண்டு விட்டான் என்ற பென்னாம் பெரிய கோடு வரையப்படுகின்றது. அப்ப சிங்களவனுக்கு இருக்கும் தெரிவு என்ன? விரும்பியோ விரும்பாமலோ இந்த யுத்த கதாநாயகனால் தான் இந்த நாடை காப்பாற்ற முடியும் என்ற நிலை.

இது முதலாவது மாங்காய். இரண்டாவது மாங்காய் எந்தவித அதிகாரமும் இல்லாத ஒரு மாகாண சபை நிர்வாகம் தான் இனி தமிழனின் பிரதிநிதி. அதை வைத்து 13 13+ என்று உலகத்துக்கு காட்டும் இழுத்தடிப்பு அரசியல்.

மகிந்தவா கொக்கா?

போட்டது இறால். பிடிக்கிப போறது சுறா. 

உந்த இலாப நட்ட கணக்குத் தான் அரசியல் இராஜதந்திரம். வெறும் பத்திரிகை மேயும் சாதாரண மக்களால் இவற்றை விளங்கவே இயலாது.

நல்ல கருத்து. நன்றி

what is the results? மகிந்தரின் இந்தக் கேள்வியே இங்கு பலருக்கு விடையளிக்கின்றது.

http://www.aljazeera.com/programmes/talktojazeera/2013/09/mahinda-rajapaksa-this-all-propaganda-201392716130376448.html

Edited by சண்டமாருதன்

தோற்றுப் போன டக்ளஸ் என்ன மகிந்தவின் மாமனா மச்சானா? அங்கயன் மாதிரி இன்னும் நாலு சொங்கயனை வெல்ல வைத்திரிந்தால் மகிந்தவுக்கு கிடைக்கும் இலாபம் என்ன?

முதலாவது மகிந்தவின் முக்கிய இலக்கு எது?

காலா காலம் இலங்கையை தான் அதற்குப் பின் தன் மக்கள் ஆள வேண்டும். அதற்கு தேவையான வாக்கு வங்கி எது?

இத்தூண்டு இருக்கும் தமிழனா? அல்லது பல்காய் (Bulk) இருக்கும் சிங்களவனா?

ஆக தனக்கு சிதையிறது இந்த கொசுறு வாக்கு வங்கி. மறு வளத்தால் ஆட்சியில் அதிருப்தி என்ற கோட்டை வரைந்த சிங்களவனுக்கு முன்னால் தமிழன் ஈழம் நோக்கி ஒன்று திரண்டு விட்டான் என்ற பென்னாம் பெரிய கோடு வரையப்படுகின்றது. அப்ப சிங்களவனுக்கு இருக்கும் தெரிவு என்ன? விரும்பியோ விரும்பாமலோ இந்த யுத்த கதாநாயகனால் தான் இந்த நாடை காப்பாற்ற முடியும் என்ற நிலை.

இது முதலாவது மாங்காய். இரண்டாவது மாங்காய் எந்தவித அதிகாரமும் இல்லாத ஒரு மாகாண சபை நிர்வாகம் தான் இனி தமிழனின் பிரதிநிதி. அதை வைத்து 13 13+ என்று உலகத்துக்கு காட்டும் இழுத்தடிப்பு அரசியல்.

மகிந்தவா கொக்கா?

போட்டது இறால். பிடிக்கிப போறது சுறா. 

உந்த இலாப நட்ட கணக்குத் தான் அரசியல் இராஜதந்திரம். வெறும் பத்திரிகை மேயும் சாதாரண மக்களால் இவற்றை விளங்கவே இயலாது.

ராசதந்திரி பரதேசி அவர்களே,
 
அதே சிங்களவன்...,
 
எங்கட ஹெல உர்மய தேர்தல் நடத்த வேண்டாம் என்று சொல்லச்சொல்ல தேர்தல் நடத்தினனீ தானே.. நீ எல்லாம் ஒரு ஆம்புளயா ? பொன்னயன் தானே நீ.. என்று மஹிந்தவப் பார்த்துக் கேட்டா.. ??

:D  :D

"People of Sri Lanka think that she [Pillay] has written the report before she came here ...  when she met me she didn't complain about anything .... 

நவநீதம் பிள்ளை "சுதந்திர சதுக்கத்தில் D.S.செனநாயக்காவின் சிலை இருப்பது தமிழரை புண்படுத்துகிறது" என்று சொன்னதாக சொன்னாரே. இப்போது அதையும் மாற்றிவிட்டாரா? <_<

அல்ஜசீராவை ஏன்தான் தேர்தல் நேரம் தடுத்து வைத்திருந்தார்?

Edited by மல்லையூரான்

என்ன ஒரு100 பவுன்ஸ் வருமா? புத்தகம் வித்த காசு. 

திரு துரைரத்தினம்

வணக்கம். நல்ல கட்டுரை. புலிகளை தலையில் வைத்து சன்னதம் ஆடுகிறவர்களுக்கு நல்ல சவுக்கடி.

வி.புலிகள் கேட்ட அதே உள்ளக சுயாட்சியைத்தான் சம்பந்தரும் கேட்கிறார்.

காசி ஆனந்தனுக்கு அறளை பேர்ந்துவிட்டது.

அவருக்கு சூடாக பதில் கொடுக்க இருக்கிறேன்.

விக்னேஸ்வரன் ஒரு போதும் தமிழீழத்தைக் கைவிட்டதாகப் பேசவில்லை.

அப்படியிருக்க காசி ஆனந்தன் ஏன் அவர் மீது விழுந்து பிராண்டுகிறார்?

அவர் சொந்த வீடு, சொந்த வண்டி, அதை ஓட்ட ஓட்டுநர். பிள்ளைகள் இரண்டும் மருத்துவர். வசதியாக வாழ்கிறார்.

மூத்த மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தினார். நான் கூட எனது பிள்ளைகளுக்கு அப்படி ஆடம்பரத்

திருமணம் செய்து வைக்கவில்லை.

நான் அவரது கவிதைத் தொகுதியை 2002 இல் என் செலவில் வெளியிட்டு அதில் வந்த 10,000 டொலரோடு

மேலதிகமாக 1,000 டொலர் போட்டு மொத்தம் 11,000 டொலர் அனுப்பி வைத்தேன்.

என்னுடைய மகன் “ஏன் அப்பா செலவழித்தது போதாதென்று மேலும் ஏன் பணம் கொடுக்கிறீர்கள்?” எனக் கேட்டான்.

நான் சொன்னேன் “அவன் ஒரு தேசியக் கவி,  நலிந்த நிலையில் உள்ளார். அவனை உயிரோடு இருக்கும் போதே மதிப்பளிக்க வேண்டும். வீட்டில் மனைவி மக்கள் அவனை மதிப்பதில்லை.

எனவே வேதான் இந்த மதிப்பளிப்பு. மேலும்  “எல்லா நாளும் இல்லை ஒரு முறைதானே செய்கிறேன்” என அவனுக்கு சமாதானம் சொன்னேன்.

காசி ஆனந்தனுக்கு  சம்பந்தரையோ விக்னேஸ்வரனையோ பார்த்துக் குரைப்பதற்கு எந்த யோக்கியதையும்  இல்லை. அவர்கள் அந்த மண்ணில்

இருக்கிறார்கள். காசி ஆனந்தன் அங்கே போகாமல் சொகுசாக சென்னையில் இருக்கிறார்.

முடியுமென்றால் அவர் இலங்கை சென்று தமிழீழம் கேட்கட்டும். விக்னேஸ்வரனுக்கு அரசியல் பாடம் எடுக்கட்டும். அதுதான்

யோக்கியனுக்கு அழகு.

வல்லை வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டவர் பெயர் சிவஞானசுந்தரம். அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் முதல் தலைவர். ஒன்பது பேர் கூடி

அந்தச் சங்கத்தை தொடக்கினோம். அதில் நானும் ஒருவன்.

தந்தை செல்வநாயகத்துக்கு தனிச் செயலராகவும் சில ஆண்டு காலம் இருந்தவர். பிடிச்சிராவி. விட்டுக்கொடுக்கமாட்டார்.

நக்கீரன்

எனது Email முலம் கிடைக்கப்பெற்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.