Jump to content

உங்களது கருத்து என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நானும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் ஒரு நிகழ்ச்சியிலே ஒரு வாலிபனை அவனது பெற்றோர் அவனை Gay என்ற ஒரே காரணத்துக்காக அவனது 18வது பிறந்தநாள் அன்று வீட்டை விட்டு திரத்தி  விட்டார்கள் விட்டார்கள் எற்ற ரீதியில் போய்க்கொண்டிருந்தது. நான் திரும்பி மனிசியிடம் எங்களுக்கு ஒரு மகனோ மகளோ பிறந்து நான் gay எனச் சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டேன். அவள் கூறின பதில் "அது ஒரு பிறப்பு சம்பந்தமான விடயம். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, அவர்களுக்கானத்தை அவர்களே தெரிவு செய்வார்கள்" என. நானும் இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன். அதாவது எனது பிள்ளைகளின் பாலியல் தெரிவு அவர்களின் சுய விருப்பம் என. தமிழ் சமூகத்திலே, குறிப்பாக பலவருடங்களாக புலம்பெயர்ந்து வாழும் சமூகத்திலே இருக்கும் உங்களது கருத்துக்களை இந்த விடயம் சம்பந்தமாக அறிய விரும்புகிறேன்.  

Posted

உங்கள் மனைவி சொன்ன அதே பதிலைத் தான் நானும் சொல்வேன்.  பாலியல் தெரிவு என்பது அவரவர் பிறப்புரிமை. என் இரண்டு பிள்ளைகளில் எவர் எதனை தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பது அவர்களது உரிமை. இதில் தலையிட மட்டுமல்ல, கருத்து சொல்லக் கூட எனக்கு உரிமை இல்லை.

 

அண்மையில் என் மனைவியின் அக்காவின் மகனுடன் கதைத்துக் கொண்டு இருந்தேன். அவனுக்கு 14 வயது ஆகின்றது. பாடசாலையில் bullying பற்றிக் கதைக்கும் போது, Gay / Lesbian பற்றியும் கதைக்க தேவையாக இருந்தது. அது பற்றி சொல்லும் போது அவன்  ஒரு வரியில் சொன்ன தெளிவான  கருத்து "It is their rights".  அவனது அப்பாவிடம் இதைக் கூறும் போது அவர் சொன்னதும் அதைத்தான்.

 

(தலைப்பை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் இன்னும் நல்லா இருக்குமே தும்ஸ்)

Posted

அலுவலகத்தில் வேலை செய்யும் இரண்டு வெள்ளையினத்தவரிடம் கேட்டேன். இருவருமே இது பிறப்பு சம்பந்தமான விடயம் என்பதை உறுதியாகச் சொல்லவில்லை..

அவர்களில் ஒருவர் விவரித்த சம்பவம். யாரோ ஒரு சாதாரண குடும்பத்தவர் ஒருவருக்கு மாரடைப்பு ஒருடவை ஏற்பட்டதாம்.. அதன்பிறகு அவர் கேயாக மாறிவிட்டாராம்..

இருபால் திருமணத்தில் இருந்து ஒருபாலுக்கும், ஒன்றிலிருந்து இரண்டுக்கு மாறியவர்களும் உள்ளார்கள்..!

Posted
பிள்ளையின் பாலியல் மட்டுமல்ல படிப்புத் தொடங்கி அனைத்திலும் பெற்றோர்கள் செய்யக்கூடியது பெறுமதி விதைப்பு மட்டும் தான். பெறுமதி விதைப்பது பெற்றோரின் உரிமை. விதைத்ததில் எது முளைக்கிறது என்பதில் பெற்றோர்களின் பங்கு ஒரு பங்கு மட்டுமே. முளைப்பவற்றின் முளைப்பில் ஏகப்பட்ட காரணிகள் செல்வாக்குச் செலுத்தும் (பௌதீக, உயிரியல்.சமூகவியல் எனப் பல). எனவே பெற்றோர்களிற்கு இருக்கும் ஒரே தெரிவு 'spray and pray' என்பது மட்டும் தான்.
 
இரண்டு விடயங்களைக் கூறலாம் என்று நினைக்கிறேன். 
 
ஒன்று, வெற்றி தோல்வி சார்ந்து மிகப்பெரும்பான்மையான பெற்றோர்கள் முடிந்தமுடிபான மனநிலையில் இருக்கிறார்கள். எது வெற்றி எது தோல்வி என்பதை, தாம் வைத்திருக்கும் அட்டவணையினை மட்டும் பார்த்து முடிவெடுத்துக்கொள்கிறார்கள். கடிவாளம் கட்டிக்கொண்டு ஓடுகிற எந்த மிருகமும் தான் ஓடும் பாதையினைத் தான் தீர்மானிக்கும் உரிமையினைத் தாரைவார்த்துவிடுகிறது!
 
இரண்டாவது, எமது பெற்றோர்கள் சோஷல் கன்சர்வேட்டிவாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். என்ன படித்தார்; எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதற்கு அப்பால், எமது மக்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் சோஷல் கன்சர்வேட்டிவ். இதற்கு மிகப்பெரும் காரணம் எம்மவர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் பயததில் வாழ்கிறார்கள். அண்மையில் 'ஆதலால் காதல் செய்வீர்' படம் பார்த்தபோது எனது சமூகத்தையும் நினைத்துக் கொண்டேன் (இந்தப் படம் சார்ந்து ஏகப்பட்ட விவாதங்கள் சாத்தியம்,அதை இங்கு தவிர்த்துக் கொள்கிறேன்);. பதின்மவயதுக் கர்ப்பம் எமது சமூகத்திலும் இருக்கிறது. அண்மையில் கேள்விப்பட்ட ஒரு விடயம் உலுக்கியது. ரொறன்ரோவின் சில பகுதிகளில் கருவுறும் தமிழ் குழந்தைகளை பள்ளிக்கூடம், பள்ளிக் கூட நேரத்தில் மட்டும் ஆசிரியர் மற்றும் ஊளியர்கள் உதவியோடு கருக்கலைப்பிற்கு அழைத்துச் செல்கிறார்களாம். ஏனெனில் வீட்டில் பெற்றோரிற்குத் தெரிந்தால்...என்ற விடயத்தைப் பல குழந்தைகளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நிலை தானாம் இன்னமும் இருக்கிறது.  அப்பன் ஆத்தாளைப் பார்த்து எந்தக் குழந்தை உணர்வு ஸ்தம்பிக்கும் அளவிற்குப் பயப்படுகிறதோ என்னைப் பொறுத்தவரை அந்தப் பெற்றோர்கள் தோற்றுப்போன பெற்றோர்கள். 
 
மொத்தத்தில் எமது சமூகத்தில் பல இடங்களில் என்ன நடக்கிறது என்றால் பெற்றோர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். காதல் கர்ப்பம் முதற்கொண்டு தமது அட்டவணையில் தோல்வி என்று காட்டப்படும் அத்தனை விடயங்கள் சார்ந்தும் பாரிய அளவில் பயப்பிடுகிறார்கள். (ஓரினச் சேர்க்கையும் அட்டவiணியல் தோல்வி தான்) முன்னொரு காலத்தில் கான்சர் என்று சொன்னால் கான்சர் வந்துவிடும் என்று மக்கள் பயந்ததைப் போல எமது சமூகம் பல விடயங்களைக் காண்பதால் அல்லது பேசுவதால் அவை தமது பிரச்சினையாகிவிடும் என்று பயப்பிடுகின்றது. இந்தப் பயத்தின் காரணமாக, எங்கெல்லாம் அவை தெரிகிறதோ சமூகம் பொங்கி எழுந்து கத்திவிடுகிறது. பேசாப்பொருட்கள் தொடர்ந்து பெருகிக்கொண்டிருக்கின்றன. 
 
பதின்மத்தில் கருத்தரிப்பது பிரச்சினை தான். அந்தப் பிரச்சினை தீரவேண்டும்மாயின் அதன் அடிப்படைகள் தெரியவேண்டும். அடிப்படைகள் சார்ந்து தீர்வுகள் சிந்திக்கப்படவேண்டும். அதைவிட்டு எனது பிள்ளைக்கு கலியாணமான முதல் இரவில் மட்டும் தான் உணர்ச்சிகள் வரும் என்று நம்பிக்கொண்டிருக்கும் பெற்றோர்களாயிருப்பின், சமூகத்தின் கணிசமான பாகம் மலடாகவே தொடரும்.
 
ஓரினச்சேர்க்கை என்பதைப் பொறுத்தவரை, இது இயற்கைக்கு மாறான தேர்வு  என்ற நம்பிக்கை பலமக்கள் மத்தியில் நிலைப்பதில் மதங்களின் பலம் பலத்த செல்வாக்குச் செலுத்துகிறது. விஞ்ஞானம் ஒரு நாள் இன்ன காரணத்தால் இது நிகழ்கிறது என்பதை நிரூபிக்கும் வரை, இது இயற்கையானது இயற்கைக்க்கு மாறானது என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையில் தொடரத்தான் செய்யும். என்னைப் பொறுத்தவரை. இது உயிரியல் ரீதியானது இயற்கையானது என்பதே எனது கருத்துநிலை. 
 
 
மன்னிக்கணும் தும்பளையான், உங்கள் திரியைக் கொஞ்சம் விரித்தமைக்கு. சொல்லவேண்டும் போல் தோன்றியதைச் சொன்னேன். 
Posted

உண்மையை சொன்னால் ஒரு தந்தையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ...  அவர்களின் பாலியல் தெரிவு என்பது இயற்கையான முறை இல்லாமல்  இருப்பது ஒரு காரணம்...  அது அவர்களின் எதிர்காலம் வாழ்கை இன்பம் சம்பந்தமானது...   

 

அவர்களின் பாலியல் தெரிவுக்கு அப்பால்  பாதுகாப்பு, அரவணைப்பு  என்பனவும் இயற்கையான ஆணுக்கான தன்மைகள் அற்று போய் ஒருவர் பெண் போலவும் மற்றவர் ஆண்  போலவும் வேட மிடுதலும்  அவர்களின் உளவுரனை பாதிப்பன...    இன்னும் விரிவாகவும் இதை சொல்ல முடியும்... 

 

நிச்சயமாக எனது பிள்ளைகள் இப்படி சொன்னால் எப்படியாவது போகட்டும் எண்டும் விடமாட்டேன்...   அதோடு வீட்டை விட்டு துரத்தவும் மாட்டேன்...   பக்குவமாக எடுத்து சொல்ல முயற்சிப்பேன்...   

Posted

உங்கள் மனைவியன் கருத்தே சரியானது.

 

இது மன சம்மந்தமானது என்றில்லை இவைகள் பிறப்புச் சம்மந்தமான உடலியல் பிரச்சனை. எமது பழக்கவழக்கம் எப்போதும் எமது மன விருப்புக்களை பிள்ளைகள் மீது திணிப்பது. பக்கத்துவீட்டுக்காரனுக்காக படிப்பது பட்டம் பெறுவது. சமூகம் என்று தன்வாழ்க்கையின் சுதந்திரத்தை தானே அழிப்பது தமது இயல்பான விருப்புக்களை சிதைத்து சின்னபின்னமாக்குவது போன்ற பல்வேறு குணங்கள் எமக்குள் அதிகம். அக்குணங்களோடு இதை அணுகமுடியாது.

 

பிற சமூகங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்ச்சமூகத்தில்  இப்படியான பிறப்பு சம்மந்தமான பிரச்சனை உடையவர்கள் சம அளவில் இருக்கின்றார்கள். ஆனால் கலாச்சார இறுக்கங்களால் வெளியில் இவைகள் தெரிவதில்லை. கால மாற்றத்தில் எதிர்காலத்தில் இது ஒரு சாதாரண பிரச்சனையாக அணுகப்படும்.

Posted

கடவுள் ஆண்மகனை  படைத்தான் அவனுக்காக பெண்மகளை  படைத்தான் ...............ஆணும் ஆணும் ,பெண்ணும் பெண்ணும் , என எல்லாவற்றையும் உருவாக்கினான் ................ஆனால் அந்த விடயத்தில் மட்டும் ஆணும் ,பெண்ணும் என உருவாக்கினான் .........கடவுளை நம்பாதவர்கள் இயற்கையின் நியதி ,உண்மையாக இதை எடுத்துக்கொள்ளனும் ...............ஆகவே இன்றைய கால கட்டத்தில் ஓரின சேர்க்கை சாதாரணமாய் தெரிந்தாலும் அந்த செயல் மிருகங்களுக்கும் ,மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டை மறக்க செய்கின்றது ..............இப்படித்தான் இந்த உலகம் அழியனும் என்றால் ஓரின சேர்க்கையை எர்ருக்கொள்ளுங்கள் ,நீங்களும் முயற்சித்துப்பாருங்கள் .நன்றிகள் . :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஓரினச்சேர்க்கை என்பதைப் பொறுத்தவரை, இது இயற்கைக்கு மாறான தேர்வு  என்ற நம்பிக்கை பலமக்கள் மத்தியில் நிலைப்பதில் மதங்களின் பலம் பலத்த செல்வாக்குச் செலுத்துகிறது. விஞ்ஞானம் ஒரு நாள் இன்ன காரணத்தால் இது நிகழ்கிறது என்பதை நிரூபிக்கும் வரை, இது இயற்கையானது இயற்கைக்க்கு மாறானது என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையில் தொடரத்தான் செய்யும். என்னைப் பொறுத்தவரை. இது உயிரியல் ரீதியானது இயற்கையானது என்பதே எனது கருத்துநிலை.

 

 

ஓரினச் சேர்க்கை என்பது இயற்கையில் உள்ள ஒன்று. பிறப்புரிமையில் சார்ந்துள்ளது. ஆனால் அது இயற்கையில் இன விருத்திக்கு உபயோகமற்ற ஒன்று என்ற வகையில்.. அதனை இயற்கைக்கு மாறான உறவு நிலை என்று வரையறுக்கிறார்கள்..! இயற்கையில் பல உயிரினங்களில்.. பல மாறல்கள்..பிறழல்கள் உள்ளன. பல இயற்கையின்.. தெரிவுகள் உள்ளன. எல்லாம் இயற்கையின் இன்றைய சூழலில்.. வெற்றி பெற்றவை அல்ல. அந்த வகையில் இந்த மாறல்கள்.. பிறழ்வுகள்.. இயற்கையில் இருந்தாலும்.. இயற்கையில் வெற்றி பெறப் போவதில்லை. அந்த வகையில் தான்.. இதன் உயிரியல் அறிவியல் உள்ளதே அன்றி.. அறிவியல்.. உயிரியல்.. ஓரினச் சேர்க்கை என்பதை ஒன்றும் விசித்திரமாகப் பார்க்கவில்லை..! ஒதுக்கவில்லை..! ஆனால் அது இயற்கையில் ஒரு இனத்தின் (உயிரியல் சார்ந்த பதம்) விருத்திக்கு உதவப் போவதில்லை.

 

கோவேறு கழுதைகள்.. (குதிரைக்கும்.. கழுதைக்கும் பிறப்பவை) இயற்கையில் உள்ளன. அவை இனப்பெருக்கம் செய்ய முடியாது. அப்படியானவை இயற்கையில் பெருக முடியாது. அந்த வகையில் தான் அவற்றை தனி இனம் என்று உயிரியல் கொள்வதில்லை. அந்த வகையான ஒன்றாக இதனையும் வரையறுக்கலாம்..! மற்றும்படி.. இது ஒன்றும் விசித்திரமோ.. புதிதோ அல்ல. பேசாப் பொருளில் இருந்து.. பேசு பொருளாக்க..! பிறப்புரிமையின் பிறழ்வுகளால்.. சாதாரணத்தை இழந்ததுகள்.. இந்த ஓரின்ச் சேர்க்கை உள்ளதுகள். இப்படிப் பல பிறப்புரிமையியல் குறைபாடுகள் மனிதர் மத்தியில் உள்ளன. பிற உயிரினங்களிலும் உள்ளன. அவையும் இந்த இயற்கையில் வாழ்கின்றன தான். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு முளுமையான ஆணோ அல்லது பெண்ணோ
ஓரினச்சேர்க்கையை விரும்புவது அருவருப்பானது.

 

இயற்கையான குறைபாடுகள் உள்ள ஆணோ பெண்ணோ தனது

துணையைத் தான் விரும்பிய வண்ணம் அல்லது தனக்கு ஏற்ற வண்ணம் தேடிக்கொள்ளலாம்.
 

ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் ஏதோ ஒருவகையில் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.
தகுந்த சிகிச்சை மூலம் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
 

மாற்றும்படி குழந்தைகள் வளரும் நிலையில் அவர்களை அவதானிக்கும் பெற்றோருக்கு

அவர்களின் போக்கு கண்டிப்பாகத் தெரியவரும்.
அவர்களுடன் அதிகம் பேசுவதன் மூலம் அவர்களது
பிரச்சனைக்கான தீர்வுகளை ஆராயலாம்.
 

வந்த பின்னர் ஏற்றுக்கொள்ளலாம் என்பதைவிட

வருமுன் காப்போம் என்பது எனக்கு நல்லதாகப்படுகின்றது.
 

இயற்கையாகவே குறைபாடு உள்ளவர்களுக்குப் பெற்றோர் ஆதரவாகவும்

அரவணைப்பாகவும் இருந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப நடப்பது பெற்றோரின் கடமை.

Posted

ஓரினச் சேர்க்கை என்பது இயற்கையில் உள்ள ஒன்று. பிறப்புரிமையில் சார்ந்துள்ளது. ஆனால் அது இயற்கையில் இன விருத்திக்கு உபயோகமற்ற ஒன்று என்ற வகையில்.. அதனை இயற்கைக்கு மாறான உறவு நிலை என்று வரையறுக்கிறார்கள்..! 

 

இரண்டு விடயங்களை ஒன்றாக்குகையில் சில குளப்பங்கள் பிறக்கும். இயற்கையின் தெரிவு (நச்சுறல் செலக்ஷன்) மற்றும் ஜீன் மியூடேஷன்கள் ஒரு புறம். மற்றையது சமூகத்தின் தெரிவுகள் பெறுமதிகள் சார்ந்தது. இரண்டையும் தனித்தனியே தான் பார்க்கமுடியும்.
 
முதலாவது விடயத்தை ஆய்வுகூடங்களிற்கும் விஞ்ஞான சஞ்சிகைகளிற்கும், சுயபெயர் விவாதங்களிற்கும் விட்டுவிடுவோம். முகமூடிச் சமூக தளத்தில் இரண்டாவதை யாரும் கதைக்கலாம் என்ற ரீதியில் எனது பார்வை பின்வருமாறு மட்டுமே இருக்கிறது.
 
இயற்கையில் உள்ள ஒன்றினை, இயற்கை இவ்வாறு தான் இயங்கவேண்டும் என்ற எனது புரிதலின் அடிப்படையில், அது எனது புரிதலோடு முரண்படுகிறது என்ற அடிப்படையில் இயற்கைக்குப் புறம்பானது என்பது ஏற்புடையது அல்ல. இன்று ஆய்வுகூடத்தில் ஸ்ரெம்செல்லில் இருந்து சிறு மூளை அளவிற்குச் சிக்கலான ரிசியூவினை உருவாக்க முடிகிறது. குழந்தைப்பேறு தான் வாழ்வின் குறியெனின், நாளை என்னென்ன புதியபுரிதல்களைக் கட்டவிழ்க்கமுடியுமோ என்ற சாத்தியம் கருத்திலெடுக்கப்படத்தான் வேண்டும். 
 
அடுத்து, பிறப்பு இயற்கையோடு ஒத்திருக்கவேண்டுமாயின் அனைத்துப் பிறப்பும் இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்று ஏற்றுக்கொள்ளவேண்டுமாயின், பாலியல் உறவைத் தவிர்ப்பவர்கள், கலியாணம் கட்டமாட்டோம் என்பவர்கள், குழந்தை பொறுப்பு மிக்கது எமது வாழ்வு எமக்கானது எனவே குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டோம் என்பவர்கள், உலகில் எத்தனையோ அநாதைப் பிள்ளைகள் மற்றும் வாழவழியற்ற பிள்ளைகள் இருக்கையில் நாம் எமது குழந்தையினைக் கொண்டுவருவது அடாத்து என்று முடிவெடுத்துக் குழந்தை பெற மறுப்பவர்கள், விந்தெண்ணிக்கை குறைந்தவர்கள், கர்ப்பப்பை அற்றவர்கள் என ஏகப்பட்ட மனிதர்களை இயற்கைக்கு மாறான வாழ்வு நிலை என்று வரையறுப்பது அவசியப்படும். மேலும் விலங்கு இராச்சியத்தில் மனிதன் உட்பட்ட மிகச்சில உயிரனங்கள் தான் உடலுறவை மகப்பேறு என்ற இலக்கி;ற்கு அப்பால் மகிழ்விற்காகச் செய்கின்றன. மகிழ்விற்காக உடலுறவில் ஈடுபடும் அனைவரும் குழந்தை பெறுவதும் இல்லை, உடலுறவுகள் கருக்களாவதும் இல்லை. முட்டையினை இருபது வயதில் எடுத்து உறையப்பண்ணி விட்டு, நாற்பதுகளில் உத்தியோகத்தில் உயர்ந்தபின் குழந்தை பெற்றுக்கொள்ளுகிறார்கள். குழந்தைப் பேற்றிற்கு முந்திய இருபது வருடத்தை மகிழ்விற்கான உடலுறவுக்கானதாக மட்டும் வகுத்துக்கொள்ளுகிறார்கள். எனவே மனிதனை இயற்கைக்குட்பட்டவன் இயற்கைக்கு அப்பாற்பட்டவன் என்று வரையறுப்பது அத்தனை இலுகவானதல்ல.
 
எவரும் எதையும் எப்படி வேண்டுமாயினும் வரையறுக்கலாம். அதில் தப்பில்லை. எங்கு சிக்கல் ஏற்படுகிறது என்றால், வரையறுத்துவிட்டோம் என்பதால், எமது வரையறைக்கு அப்பாற்பட்டவை சார்ந்து நாம் திணிப்பாகக் கருத்துக் கூறுகையில் தான் பிரச்சினை எழுகிறது.
 
எல்லாவற்றிற்கும் மேலாக, இங்கு கேள்வி மிகத்தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உங்களிற்கு ஒரு குழந்தை பிறந்து அது தான் கே என்று வெளிப்படுத்துப் பட்சத்தில் ஏற்றுக்கொள்வீர்களா என்பது தான் கேள்வி. அந்தவகையில், கே என்பது இயற்கையின் விடயம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்தப் புரிதல் ஏற்படும் பட்சத்தில் இது கேள்வி அற்றதாகிப்போகும். நாம் அன்பு வைத்திருக்கும் அனைவரும் மகிழ்வாக இருக்கவேண்டும் என்பதே எமது எண்ணமாக இருக்கமுடியும் என்கையில், அதுவுமு; பெற்றோர் அளவிற்குக் ஒரு குழந்தையில் அன்புசெலுத்த வேறொருவர் இல்லை என்கையில், கே குழந்தை கே உறவில் இருப்பதை ஏற்றுக்கொள்வோமா என்பது எப்டிக் கேள்வியாக முடியும்? ஆட்டிசத்தோடு குழந்தைகள் பிறக்கிறார்கள், குறித்த சூழ்நிலையில் தான் அவர்களால் மகிழ்வாக இருக்கமுடியும், உடல் உறுப்புக்களில் ஊனங்களோடு பிள்ளைகள் பிறக்கிறார்கள், அவர்களிற்கான ஏதநிலை ஏற்படுத்திக்கொடுக்கப்படுகையில் மட்டும் தான் அவர்களால் மகிழ்வாக இருக்கமுடியும். அப்படி இருக்கையில் கே என்பது இயற்கை ஆனால் குழந்தை வராது என்பதால் இயற்கைக்கு மறுப்பானது என்று வரையறுக்கிறோம் என்று எவ்வாறு சொல்லமுடியும்? அதுவும் பெற்றோர்? கே என்பது கண்டதையும் பாத்துக் குழந்தை கெட்டுப்போறது என்று நினைக்கும் பெற்றோர்கள் வேண்டுமாயின் நல்வழியில் புத்திசொல்லிக் குழந்தையினை மாத்துவோம் என்று கூறலாம். ஆனால் அது இயற்கை என்ற புரிதல் உள்ளவர்களிற்கு ஏது இரண்டாம் பேச்சு?
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதற்கு இந்தளவு பெரிய விளக்கம் அவசியமில்லை.

 

உங்களுக்கு ஒரு பிள்ளை.. கருவில்.. சில பிறப்புரிமையியல் குறைபாடுகளூடு.. (இயற்கையாகத்தான் அந்தக் குறைபாடும் தோன்றுது. இன்னும் ஆழமாக சொன்னால் மாறல் தோன்றுது... அதனை இன்றைய உலகம் குறைபாடுன்னு சொல்லுது என்றே வைச்சுக்குவம்..!) அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருப்பின்.. கே யை யும் ஏற்றுக் கொள்ளலாம்.

 

ஏனெனில்.. இரண்டும் பிறப்புரிமையியல் பிறழ்வுகளின் நிலையே.

 

எமது சமூகத்தில்..டவுன்சின்ரோம்.. ஏன் திருநங்கைகள்.. என்று பல பிரச்சனைகளோடு பிள்ளைகள் பிறக்கின்றன. அவற்றை ஏற்று வாழ வைக்கும் பெற்றோரும் உளர். அதேபோல் தான் இதுவும். இதனை ஏன் வித்தியாசமா கொண்டு வருகினம் என்றது தான் கேள்வியே. இது ஒன்றும் இயற்கையில் இல்லாத குறைபாடு அல்ல.

 

சுகதேகியான ஒருவர் திருமணத்தை நிராகரிப்பதும்.. பிறப்புரிமையியல் பிறழ்வுள்ள ஒருவர் எதிர்ப்பால் திருமணத்தை நிராகரிப்பதும் ஒன்றல்ல..! இரண்டிற்கும் வேறுபாடுள்ளது. ஒன்று கொள்கை ரீதியானது. மற்றது அவருக்கு இயற்கை தந்த பிறழ்வால் வந்தது.

 

இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்... இன்றைய நவீன மருத்துவ உலகில் கிட்டத்தட்ட எல்லா வகையான பிறப்புரிமையியல் குறைகளையும் கருவில் கண்டுபிடிக்க வழி உள்ளது. அந்த வகையில்.. பல எம்மவர்கள் டவுன்சின்ரோம் பிள்ளைகளை கருச்சிதைவு செய்துள்ளனர். இப்படி கே க்கும் செய்ய வழி இருந்தால்.. நிச்சயமாகப் பலர் செய்வார்கள்..! அது அந்தந்த பெற்றோரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைச் சார்ந்தது. அதனை நாம் திணிக்க முடியாது..! சாதாரணமற்ற ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது அந்தப் பெற்றோரின் தனிமுடிவு. அதற்கு இயற்கையை காவலோ.. சாட்சியோ வைக்க முடியாது என்பதே நிஜ வாழ்வியல் யதார்த்தம். :icon_idea::)

Posted

விலங்குகளின் வாழ்வியலை நாம் கூர்ந்து கவனித்தல் வேண்டும். ஏனெனில் அதுவே எமக்கானதாகவும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. நாகரிக வளர்ச்சியால் நாம் எம்மை மாற்றிக்கொண்டிருக்கிறோம்.. அவ்வளவே..

அவ்வகையில், விலங்குகளில் ஓரினச் சேர்க்கை இல்லை என்றே நினைக்கிறேன். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தும்பளையானுக்கும், அவரது துணைக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

 

வயதால் மட்டுமல்ல, தலைமுறையாலும் நீங்கள் இளையவர்கள் தான் என்பதைச் செயலில் காட்டியுள்ளீர்கள்!

 

வெறும் மதத் தத்துவங்களின் அடிப்படையில் தான் எமது வாழ்க்கை வடிவமைக்கப் பட்டிருக்கின்றது!

 

நெடுக்கு கூறுவது போன்று, இந்தப் பாலியல் தெரிவென்பது 'பிறழ்வு' என நான் நம்பவில்லை!

 

எமது நம்பிக்கைகளின் தளத்தில் இருந்து பார்கையில் அது பிழையாகத் தோன்றுவதற்கு, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்பல்லவே!

 

எனக்கும் இந்த உறவுகளில், அருவருப்போ, அசிங்கமோ தெரிவதில்லை! மாறாக அதைப்பற்றி மேலும், மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வமே அதிகரிக்கின்றது!

Posted

அவ்வகையில், விலங்குகளில் ஓரினச் சேர்க்கை இல்லை என்றே நினைக்கிறேன். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம்.

 

விலங்குகளில் ஓரினச் சேர்க்கை உள்ளது. இது பற்றி ஜஸ்ரின் விளக்கமாக எழுதக் கூடியவர். ஊரில் நான் வளர்த்த கிடாய் ஆடு இன்னொரு கிடாய் ஆட்டின் மேல் ஏறி ஆராச்சி செய்ததை கண்டு இருக்கின்றேன்.

Posted
என் சிற்றறிவுக்கு எட்டியவரை தன்னினச்சேர்க்கை முற்றிலும் பிறபுரிமையியல் [ Genetic disorder ] சார்ந்தது என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை. சூழ்நிலைக்காரணிகளே [ Environmental factors ] செல்வாக்குச் செலுத்துவதாகச் சொல்லப்படுகின்றது.
 
ஆகவே பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அப்படியான சூழ்நிலைகளைத் தவிர்ப்பது ஒன்றே சிறந்த தெரிவாக இருக்கும்.
 
வெள்ளைகளின் பிள்ளை வளர்ப்பு தெரிந்த விசயம் தானே.
 
வளர்ப்புச் சூழ்நிலை கலாச்சாரம் என்பன‌ மிக முக்கியமானவை. உதாரணமாக ஏன் வெள்ளை இனத்தவரில் எம்மினத்தவரை விட கூடுதலாக போதைப் பொருள் பாவனை உள்ளது ? போன்றன..
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்கு கூறுவது போன்று, இந்தப் பாலியல் தெரிவென்பது 'பிறழ்வு' என நான் நம்பவில்லை!

 

பொதுவாக.. டவுன்சின்ரோம் போல இல்லாவிட்டாலும்.. பிறப்புரிமையின் மறைமுகத் தாக்கம் கே களில் உண்டு.

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி.. கே என்பது.. நேரடியாக பிறப்புரிமையில் விகாரங்களின் தோற்றம் அல்ல. ஆனால் குழந்தை ஒன்று கருப்பையில் வளரும் போது.. ஜீன்கள் அவற்றின் இயல்பினை வெளிப்படுத்துவதில் (gene expression).. நடக்கும் செல்வாக்கின் நிமித்தம் இந்த கே கள் உருவாகின்றனர் என்று சொல்கின்றன. இவை சந்ததிகளுக்கு சந்ததி கடத்தப்படும் இயல்பினைக் கொண்டிருப்பதாகவும் சொல்கின்றன.

 

இது நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக.. பிறப்புரிமையியல் அலகுகள்.. வெளிக்காட்டும்.. இயல்பின்.. பிறழ்வின் நிமித்தம் என்று கொள்ளலாம்..!

 

To be specific, the new theory suggests that homosexuality is caused by epigenetic marks, or “epi-marks,” related to sensitivity to hormones in the womb. These are compounds that sit on DNA and regulate how active, or inactive certain genes are, and also control when during development these genes are most prolific. Gavrilets and his colleagues believe that gene expression may regulate how a fetus responds to testosterone, the all-important male sex hormone. They further argue that epi-marks may help to buffer a female fetus from high levels of testosterone by suppressing receptors that respond to testosterone, for example, (thus ensuring normal fetal development even in the presence of a lot of testosterone) or to buffer a male fetus from low levels of testosterone by upregulating receptors that bind to the hormone (ensuring normal fetal development even in the absence of high levels of testosterone). Normally, these epi-marks are erased after they are activated, but if those marks are passed down to the next generation, the same epi-marks that protected a man in utero may cause oversensitivity to testosterone among his daughters, and the epi-marks that protected a woman in utero may lead to undersensitivity to testosterone among her sons.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சம் விளக்கமான கட்டுரை!

 

நேரம் கிடைக்கும்போது வாசித்துப் பாருங்கள்!

 

http://discovermagazine.com/2007/jun/born-gay#.UkdcZNLPWpg

Posted

இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்... இன்றைய நவீன மருத்துவ உலகில் கிட்டத்தட்ட எல்லா வகையான பிறப்புரிமையியல் குறைகளையும் கருவில் கண்டுபிடிக்க வழி உள்ளது. அந்த வகையில்.. பல எம்மவர்கள் டவுன்சின்ரோம் பிள்ளைகளை கருச்சிதைவு செய்துள்ளனர். இப்படி கே க்கும் செய்ய வழி இருந்தால்.. நிச்சயமாகப் பலர் செய்வார்கள்..! 

 

இந்த ஹைப்பொதெற்றிக்கல் கேள்வியினை வேறு கோணங்களிலும்; கேட்கமுடியும்:
 
ஒருபேச்சிற்கு கருவில் டவுன் சின்றம் உள்ளது அறியப் பட்ட நிலையில் அதற்கு ஒரே ஒரு மருத்துவ சிகிச்சை இருக்கிறது, ஆனால் அந்தச் சிகிச்சையின் பக்கவிளைவு குழந்தை கே ஆகும் என்று மருத்துவர் சொல்லின், கருக்கலைப்பிற்குப் பதில் பக்கவிளைவுடனான சிகிச்சையினை எத்தனை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள்?
 
இந்தக் கேள்வியினை இன்னமும் ஒரு படி மேலே கொண்டுசெல்லலாhம். ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்கு ரேமினல் இல்னஸ் ஒன்று வருகின்றது என்றும், அந்த வருத்தத்திற்கான ஒரே ஒரு மருந்தின் பக்கவிளைவு குழந்தை கே ஆகும் என்றும் இருந்தால் எத்தனை பெற்றோர்கள் மருந்தினை கொடுக்கச் சொல்லுவர்? நிச்சயமாக முதற் கேள்வியினைக் காட்டிலும் மிக அதிகபடியான பெற்றோர் மருந்தெடுக்க முடிவு செய்வர்.
 
கே என்பது முற்றுமுழுதாக பாலியல் இச்சை சார்ந்தது. பெரும்பான்மை தான் வழமை என்று எடுத்துக்கொள்வதால் சிறுபான்மை பிறழவு என்றாக்கப்படுகிறது. புரியாத அல்லது அந்நியமான விடயங்கள் சார்ந்து அருவருப்பும் பயமும் இருப்பது மனிதனிற்கொன்றும் புதிதில்லையே. என்னைப் பொறுத்தவரை அருவருப்பும் அறிவும் inversely proportional. எந்த விடம் சார்ந்தும் அறிவு அருவருப்பை அழிக்க முடியாது போயின் குறைக்கும்.
 
கே என்பது தொற்றிக்கொள்ளும் வியாதி, மனநிலை சார்ந்தது, அதைப்பற்றிப் பேசின் நாமும் அப்படி ஆகிப்போவோம் போன்ற பயங்கள் இருப்பவர்கள் அது அருவருப்பு என்று ஒதுக்க விட்டுச் சென்றுவிடுவார்கள். அப்படியானவர்களிற்குக் கூட, மேலே கேட்கப்பட்டது போன்ற முடிவெடுத்தல்களிற்கான கட்டாயம் ஏற்படின், அவர்கள் பார்வைகள் கூட மாறும்.
Posted

நான் பார்த்த ஒரு நகைச்சுவையான ஒளிப்படம்...   உகண்டா நாட்டின் பாதிரியார் ஒருவர் ...

 

நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொளுங்கோ..   :lol:  :lol:  :lol:

 

Posted

விலங்குகளின் வாழ்வியலை நாம் கூர்ந்து கவனித்தல் வேண்டும். ஏனெனில் அதுவே எமக்கானதாகவும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. நாகரிக வளர்ச்சியால் நாம் எம்மை மாற்றிக்கொண்டிருக்கிறோம்.. அவ்வளவே..

அவ்வகையில், விலங்குகளில் ஓரினச் சேர்க்கை இல்லை என்றே நினைக்கிறேன். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம்.

 

இது முற்றிலும் ஒரு தவறான எண்ணக்கரு. உண்மையில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் விலங்களில் ஓரின சேர்க்கை இருக்கும் என்பதை ஆராய்வதை ஓரின சேர்க்கை மீது இருக்கும் சமூக எண்ண கரு காரணமாக (bias) தவித்தார்கள் என்பது தான் சரியாக இருக்கும். இந்த விக்கிபீடிய இணைபுக்களில் ஓரின சேர்க்கை நடத்தையில் ஈடுபடும் விலங்குகளின் பட்டியலை காணலாம்.

 

http://en.wikipedia.org/wiki/List_of_animals_displaying_homosexual_behavior

 

http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals

Posted

நானும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் ஒரு நிகழ்ச்சியிலே ஒரு வாலிபனை அவனது பெற்றோர் அவனை Gay என்ற ஒரே காரணத்துக்காக அவனது 18வது பிறந்தநாள் அன்று வீட்டை விட்டு திரத்தி  விட்டார்கள் விட்டார்கள் எற்ற ரீதியில் போய்க்கொண்டிருந்தது. நான் திரும்பி மனிசியிடம் எங்களுக்கு ஒரு மகனோ மகளோ பிறந்து நான் gay எனச் சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டேன். அவள் கூறின பதில் "அது ஒரு பிறப்பு சம்பந்தமான விடயம். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, அவர்களுக்கானத்தை அவர்களே தெரிவு செய்வார்கள்" என. நானும் இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன். அதாவது எனது பிள்ளைகளின் பாலியல் தெரிவு அவர்களின் சுய விருப்பம் என. தமிழ் சமூகத்திலே, குறிப்பாக பலவருடங்களாக புலம்பெயர்ந்து வாழும் சமூகத்திலே இருக்கும் உங்களது கருத்துக்களை இந்த விடயம் சம்பந்தமாக அறிய விரும்புகிறேன்.  

 

உங்கள் கேள்விக்கான எனது ஒரு வரி பதில் என்றால்? நிச்சயமாக எனக்கு பிரச்சனை இல்லை. மேலும் சொல்வதானால், எனக்கு தெரிந்த அளவில் விபரிக்க முற்பட்டால்

 

 

ஒரு வரின் உறவு தேடல்( பாலுறவை மட்டும் கொண்டதல்ல, not just sex) அதாவது பாலுறவு +நட்பு +காதல் +வாழ்கை துணை எல்லாம் இணைந்த ஒரு உறவு, சமூகத்தில் பெரும்பலனர்வர்களில் அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக இருக்கிறது.

 

ஒரு குறிப்பிட்ட தொகுதியினரில்

ஆண்+ ஆண், ஈர்ப்பு

பெண்+பெண், ஈர்ப்பு

ஆண்+பெண்+ ஆண், (bisexual) ஈர்ப்பு

பெண்+ஆண்+பெண் , ........ (bisexual) ஈர்ப்பு

 

அவற்றுடன், transgender/ transsexual

ஆணாக பிறந்தும், தான் பெண் என உணர்வது, பெண்ணாக நடக்க, உடுக்க, மாற முயல்வது (பொதுவாக திருநங்கைகள் என இப்போது சொல்லப்படுபவர்கள்)

 

பெண்ணாக பிறந்து, தான் ஆண் என உணர்வது, ஆணாக நடை உடை பாவனைகளை மாற்ற, ஆணாக மாற சிகிச்சை எடுப்பவர்கள்

 

asexual  (தமிழ் தெரியாது) - எவருடனும் உடலுறவு வைக்க விரும்பாதவர்கள்

Pansexuality (தமிழ் தெரியாது ) - ஆண், பெண் என உயிரியல் பாகுபாடு அற்று, எந்த பாலினத்தவருடனும் காதல் வயப்பட , பாலியல் ரீதியில் ஈர்க்கபட கூடியவர்.

........................... இன்னும் பல வடிவங்கள்.

 

ஆனால் மேலே சொல்லியது போன்று மிக இலகுவாக வரையறுக்க முடியாது என பாலியல் கல்வியில், உள நலனில், உளவியலில் சிறப்பு தேர்ச்சி பெற்றோரிடம் கேட்டல் சொல்வார்கள். களத்தில் இலகுவான அறிமுகத்தை கொடுக்க மட்டுமே நான் மேலே சொல்லிய வகைப்படுத்தலை சொல்லியுள்ளேன் .

 

எனது அறிவுக்கு , வாசித்து, பார்த்து அறிந்த அளவில் இவை இயற்கைக்கு முரண் அல்ல.

 

சமூக , தொலைகாட்சி , நண்பர் வட்டம், பெற்றார் என்பவரின் நடவடிக்கை போன்ற சூழல் காரணிகளால் ஏற்படுகிறது என்று பலரும் எண்ண தலைப்பட்டலும் அவை தாயின் இருந்து பிள்ளை பிறப்பதற்கு முன்பே தீர்மனிக்கப்பட்டு விடுகிறது என இப்போது ஆய்வுகள் சொல்கிறன.

 

சிறு பிள்ளைகள்  3-8 வயதுகுள்ளாகவே அவர்களது பாலியல் தெரிவு (sexual orientation)  க்குரிய அறிகுறிகளை காட்ட முற்படுவார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது.

 

இது அண்மையில் கனடாவில் உள்ள அல்பேட்டா மாநிலத்தில் ஒரு பெண் பிள்ளை மிக சிறுவயதிலேயே தான் ஆண் ஆக உணர்ந்து வந்ததையும் ஆணாக மாற விரும்பியதையும் , இப்போது தான் ஆண் என வெளிப்படையாக 11 வயதில் எல்லோருக்கும் அடையாளபடுத்த தொடங்கியதையும் கனேடிய செய்திகளில் வாசித்தேன்.

When do I get to be a boy?’: Transgender youth can’t remember a time when he was happy to be a girl

http://news.nationalpost.com/2013/09/03/when-do-i-get-to-be-a-boy-transgender-youth-cant-remember-a-time-when-he-was-happy-to-be-a-girl/

 

 

இதே போல மேலே சொன்ன ஒவ்வொரு பாலியல் பாகுபாட்டு குழுவினரும் தமது பாலியல் தெரிவு பற்றி தாம் சரியாக புரிந்து கொள்ளாத சிறு வயதிலேயே (3-8) அவர்களின் நடத்தைகளில் வேறுபாடுகள் இருப்பதையும்  இவை பற்றி திறந்த மனதுடைய (open minded) பெற்றோர் அவதானித்து வந்ததை செய்திகளில், ஆய்வு கட்டுரைகளில், ஆவண விடியோ தொகுப்புக்களில் காணமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளவரசி டயானாவை கொலைசெய்யுமளவிற்குக் கொண்டுபோனது இவ்விடையமே. இயற்கைக்கு மாறானதாக தங்கள் சூழலை அரச்குடும்பம் திருத்தியமைக்க முயற்சித்ததன் விளைவே, டயானாவின் மரணம். திருத்தயமைக்கப் பாவிக்கப்பட்ட கருவி பமீலா.

Posted

நான் இன்னும் வயதுக்கு வராத காரணத்தால் இவை பற்றி எழுத விரும்பவில்லை :lol:

Posted

அலுவலகத்தில் வேலை செய்யும் இரண்டு வெள்ளையினத்தவரிடம் கேட்டேன். இருவருமே இது பிறப்பு சம்பந்தமான விடயம் என்பதை உறுதியாகச் சொல்லவில்லை..

அவர்களில் ஒருவர் விவரித்த சம்பவம். யாரோ ஒரு சாதாரண குடும்பத்தவர் ஒருவருக்கு மாரடைப்பு ஒருடவை ஏற்பட்டதாம்.. அதன்பிறகு அவர் கேயாக மாறிவிட்டாராம்..

இருபால் திருமணத்தில் இருந்து ஒருபாலுக்கும், ஒன்றிலிருந்து இரண்டுக்கு மாறியவர்களும் உள்ளார்கள்..!

 

நான் புலம் பெயர்ந்தது விரல் விட்டு எண்ண கூடிய ஆண்டுகளுக்கு முன்னர் தான். புலம்பெயர முன்னர் பாலியல் கல்வி, பல்வேறு பட்ட துணை/பாலியல் உறவு தேர்வு பற்றி போதிய அறிவு இருந்தது இல்லை. Gay என்ற சொல்லை புலம்பெயர்ந்த பின் தான் கேள்விப்பட்டேன். ஆனால் ஊரில் இருக்கும் போது ஆணுடன் உறவு கொள்ளும் ஆண்கள் , பெண்களுடன் உறவு கொள்ளும் பெண்கள் பற்றியும் அறிந்திருந்தேன். இங்கு கருத்து எழுதும் பலரும் அறிந்து இருப்பார்கள், அல்லது தெரிந்தும் அதை ஏற்று கொள்ளப் பக்குவம் இல்லாது "பூனை கண்ணை மூடி கொண்டு உலகம் இருண்டு விட்டது" என சொல்வது போன்ற ஆட்கள்க இருப்பார்கள். அப்படி உறவு கொள்பவர்கள் ஊரில் இருக்கிறாக்கள் என்பதற்கு சான்று அவ்வாறு உறவு கொள்பவர்களை அழைக்க பயன்படுத்தும் கொச்சை தமிழ் சொற்கள்.

 

இனி உங்கள் அலுவலக அரட்டைக்கு வந்தால் , அலுவலக அரட்டையில் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் பற்றி கதை வந்திருக்க சந்தர்ப்பம் குறைவு.  

கனடாவில் homosexuality (இதை விபரிக்க தமிழில் பயன்படுத்தும் ஓரின சேர்க்கை எனும் சொல் சரியான விளக்கத்தை தருவதில்லை, அது உடலுறவை மட்டுமே மையப்படுத்தி இருக்கிறது) அறிவுட்டல் பல பத்து வருடங்களாக நடக்கிறது. ஆனால் பலரதும், சமூக, சமய கட்டுமானங்கள் , பெற்றோரது விருப்பு வெறுப்புக்கள, அவர்களது உண்மையான sexual orientation/ பாலியல் தெரிவை வெளியே சொல்ல தயங்க செய்கிறது. இது கடந்த 20 ஆண்டுகளுக்குள் பிறந்த பிள்ளைகளுக்கே சிரமாக இருக்கும் போது, 1970 க்கும் முன் பிறந்த சந்ததிக்கு இன்னும் சிரமம் ஆனது. எனவே சமூக சமய , பெற்றோரது கட்டுமானங்களுக்கு கட்டுப்பட்டு, எதிர் பாலினரை திருமணம் செய்து போலி வாழ்வு வாழ்வார்கள். தமது பாலியல் தெரிவை/ ஈடு கட்ட திருமணதுக்கு புறம்பாக காதலனோ / காதலியோ வைத்திருப்பார்கள்.

 

உங்கள் அலுவலக அரட்டையில் வந்த மனிதர் சமூக அழுத்தத்துக்கு பணிந்து Hetero sexual ஆக நடித்து இருப்பார், அது யாருக்கும் தெரியாது இருக்கலாம். மாரடைப்பு வந்த பின், இன்னும் இருக்கும் கொஞ்ச நாளுக்காவது சந்தோசமாக , தனது உண்மையான sexual orientation/ gay ஆக வாழ முடிவு செய்து இருப்பார்.

 

 

 

உண்மையை சொன்னால் ஒரு தந்தையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ...  

 

1. அவர்களின் பாலியல் தெரிவு என்பது இயற்கையான முறை இல்லாமல்  இருப்பது ஒரு காரணம்...  

 

2. அது அவர்களின் எதிர்காலம் வாழ்கை இன்பம் சம்பந்தமானது...   

 

3. அவர்களின் பாலியல் தெரிவுக்கு அப்பால்  பாதுகாப்பு, அரவணைப்பு  என்பனவும் இயற்கையான ஆணுக்கான தன்மைகள் அற்று போய் ஒருவர் பெண் போலவும் மற்றவர் ஆண்  போலவும் வேட மிடுதலும்  அவர்களின் உளவுரனை பாதிப்பன...    இன்னும் விரிவாகவும் இதை சொல்ல முடியும்... 

 

4. நிச்சயமாக எனது பிள்ளைகள் இப்படி சொன்னால் எப்படியாவது போகட்டும் எண்டும் விடமாட்டேன்...   அதோடு வீட்டை விட்டு துரத்தவும் மாட்டேன்...   பக்குவமாக எடுத்து சொல்ல முயற்சிப்பேன்...   

 

1: இயற்கையானது இல்லை என்பது தவறானது என்பது எனது கருத்து. அது எமது சமயம், சமூக எண்ணகருக்கள் மூலம் எங்கள் மனதில் விதைக்கப்பட்டது. உங்களுக்கு ஆர்வம் இருந்தால், சம்பந்தமான அண்மைய விஞ்ஞான ஆய்வுகளை, ஆவண வீடியோ தொகுப்புகளை தேடி பார்க்கலாம்.

 

2/4: பெற்றோருக்கு பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சந்தோசமாக அமைய வேண்டும் என இருக்கும் ஆர்வம், அவா எதிர்பார்க்க கூடியது. இன்னுமொருவன் இதை பற்றி சொல்லி உள்ளார்.  ஆனால் பிள்ளைகளின் பாலியல் தெரிவு (sexual orientation) என்பது பிள்ளைகள் பிறக்க முன்னரே தீர்மானிக்கப்படு விடுவதாக ஆய்வுகள் சொல்கிறன. இந்த நிலையில் பிள்ளை வளரும் பருவத்தில் gay/lesbian/ transsexual/transgender என அடையாளப்படுத்தும் பிள்ளையை எமது சமூக , சமய கட்டுனத்தின் படி இவை இயற்கை இல்லை, சமயம் ஏற்று கொள்ளது, எனக்கு பேரப்பிள்ளை வேணும் எனும் பேச்சின் மூலம் திருத்தி விடலாம் என்பது நடக்கும் காரியம் அல்ல. இது பிள்ளையின் மகிழ்ச்சியான எதிர்கால வாழ்க்கைக்கு பதில்  பெற்றொரின் மகிழ்ச்சிக்கு தனது மகிழ்ச்சியை தியாகம் செய்து hetero sexual ஆக போலியாக நடிக்க முற்பட்டு, அதன் முலம் வரும் மன அழுத்தம், மன நல பாதிப்பு (depression) , போதை, மது, புகை பழக்கத்துக்கு அடிமையாதல், இன்னும் தீவிரமானால் தனது உயிரை மாய்த்தலில் போய் முடியலாம்.

அத்துடன் homosexuality க்கும் உளவியல் counseling, shock therapy மூலமொ அல்லது சமயத்தின்  பேயோட்டுதல் மூலமோ தீர்க்க முடியாத ஒரு விடயம் என்பது அறிவியல் ரீதியான உண்மை.

prayers for bobby

 

 

(https://www.youtube.com/watch?v=U4f8mqQ844w)

 

 

என்பது அமெரிக்காவில் பெற்றோரின் சமய நம்பிக்கைக்கும் தனது homosexuality க்கும் இடையில் ஆனா போரில், தற்கொலை செய்து கொண்ட ஒரு பதின்ம வயது இளையவரின் உண்மை கதையின் மீள் ஆக்க வீடியோ. மேலும் அறிய வேண்டினால் இணையத்தில் விஞ்ஞான ஆய்வுகள் தாரளமாக கிடைக்கும், ஆனால் எது விஞ்ஞான ஆய்வு எது சமய பிரச்சார பொய்கள் என்பதை பிரித்து அறிய வேண்டும். 

 

3. ஆண் ஆண் தன்மையை இழந்து பெண்ணாக மாறுவார் என்பது நீங்கள் transsexual/transgender ஐயும் gay men ஐயும் போட்டு குழப்புகிறீர்கள் என நினைக்கிறன். மேலே உள்ள பதிவில் சொன்ன sexual orientation தெரிவுகளில் ஒரு ஆண் transsexual (ஆணாக இருந்து பெண்ணாக மாறிய) ஒருவரை விரும்புவதும் நடக்கலாம்.

ஆனால் இரு gay ஆண்கள்  homosexual உறவில் இருப்பதால் மட்டும் ஒருவர் ஆணாகவும், மற்றவர் பெண்ணாக நடை உடை பாவனையை மாற்ற முற்படுவார் என்பது மிக தவறான எண்ணக்கரு. அதை நீங்களே தேடி அறிந்து கொள்லலாம்.

 

சந்தேகம் என்றால் இரு பிரபல உதாரணங்கள் :

 

1. உங்கள் நாட்டில் பிரபல பாடகர் ஆன Sir Elton John உம அவரது ஆண் துணைவர் David Furnish

 
article-2269318-17310D4C000005DC-829_634

 

 

அமெரிக்காவில் பிரபலமான பாடகர் Ricky Martin அவரது ஆண் துணைவர் Carlos Gonzalez Abell

 

rickymartin_people_skiphop_zoopack.jpg

 

http://www.jewelsandpinstripes.com/blog/2012/09/21/ricky-martin-and-twins-valentino-and-matteo-with-skip-hop-zoo-packs-in-people-magazine/

 

பிள்ளை பெற முடியாத பெண்கள், வாடகை தாயை நாடுவது போல் , gay ஆண்கள் விரும்பினால் பிள்ளையை வாடகை தாய் மூலம் பெற முடியும், எனவே இனப்பெருக்கம்  செய்ய முடியாது என்பது இன்றைய விஞ்ஞான உலகில் அடிபட்டு போகிறது.

 

 

 

 

ஒரு முளுமையான ஆணோ அல்லது பெண்ணோ

ஓரினச்சேர்க்கையை விரும்புவது அருவருப்பானது.

 

இயற்கையான குறைபாடுகள் உள்ள ஆணோ பெண்ணோ தனது

துணையைத் தான் விரும்பிய வண்ணம் அல்லது தனக்கு ஏற்ற வண்ணம் தேடிக்கொள்ளலாம்.

 

ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் ஏதோ ஒருவகையில் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

தகுந்த சிகிச்சை மூலம் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.

 

மாற்றும்படி குழந்தைகள் வளரும் நிலையில் அவர்களை அவதானிக்கும் பெற்றோருக்கு

அவர்களின் போக்கு கண்டிப்பாகத் தெரியவரும்.

அவர்களுடன் அதிகம் பேசுவதன் மூலம் அவர்களது

பிரச்சனைக்கான தீர்வுகளை ஆராயலாம்.

 

வந்த பின்னர் ஏற்றுக்கொள்ளலாம் என்பதைவிட

வருமுன் காப்போம் என்பது எனக்கு நல்லதாகப்படுகின்றது.

 

இயற்கையாகவே குறைபாடு உள்ளவர்களுக்குப் பெற்றோர் ஆதரவாகவும்

அரவணைப்பாகவும் இருந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப நடப்பது பெற்றோரின் கடமை.

 

இதுகும் மிக அபத்தமான கருத்து. உலகில் பல மேற்குலக நாட்டு உளவியல், உளநல சிகிச்சைகளை கட்டுபடுத்தும் நிறுவங்கள் homosexuality என்பது உளவியல்ரீதியான பிரச்சனை இல்லை என 1970 ஆம் ஆண்டுகளிலேயே அறிவித்த பின் நீங்கள் இப்போது இது உள நல குறைபாடு என சொல்ல வருவது நீங்கள் கடந்த காலத்தில் தேங்கி நிற்கிறீர்கள் என்பதை தான் கட்டுகிறது.

 

 

"the United States, led the Board of Directors of the American Psychiatric Association to remove homosexuality from the Diagnostic and Statistical Manual of Mental Disorders (DSM). Some psychiatrists who fiercely opposed their action subsequently circulated a petition calling for a vote on the issue by the Association's membership. That vote was held in 1974, and the Board's decision was ratified."

 

"The American Psychological Association (APA) promptly endorsed the psychiatrists' actions, and has since worked intensively to eradicate the stigma historically associated with a homosexual orientation (APA, 1975; 1987)."

 

http://psychology.ucdavis.edu/rainbow/html/facts_mental_health.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.